பெரியாழ்வார் திருமொழி –
1-பதக முதலை வாய்ப்பட்ட களிறு கதறிக் கை கூப்பி என் கண்ணா கண்ணா வென்ன
உதவப் புள்ளூர்ந்து அங்குறு துயர் தீர்த்த அதகன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் -2-1-9-
2-தாழை தண்ணாம்பல் தடம் பெரும் பொய்கை வாய் வாழு முதலை வலைப்பட்டு வாதிப்புண்
வேழம் துயர் கெட விண்ணோர் பெருமானாய் ஆழி கொண்டானால் இன்று முற்றும் அதற்கு அருள் செய்தானால் இன்று முற்றும் -2-10-8-
3-ஒரு வாரணம் பணி கொண்டவன் பொய்கையில் -4-2-5-
4-கைந்நாகத் திடர் கடிந்த கனலஆழிப் படை யுடையான் கருதும் கோயில்
தென்னாடும் வடநாடும் தொழ நின்ற திருவரங்கத் திருப்பதியின் மேல் -4-9-11-
5-துப்புடையாரை அடையவதெல்லாம் சோர்விடத்துத் துணை யாவர் என்றே
ஒப்பிலேன் ஆகிலும் நின்னடைந்தேன் ஆனைக்கு நீ அருள் செய்தமையால் -4-10-1-
6-கண்ணனே கரி கோள் விடுத்தானே காரணா களிறட்ட பிரானே -5-1-8-
7-ஊழியாயினாய் ஆழி முன்னேந்தி கம்ப மா கரி கோள் விடுத்தானே காரணா கடலைக் கடைந்தானே -5-1-9-
——————————————————————————————————————-
நாச்சியார் திரு மொழி
8-குண்டு நீருறை கோளரீ மதயானை கோள் விடுத்தாய் -2-3-
9-பழகு நான் மறையின் பொருளாய் மதம் ஒழுகு வாரணம் உய்ய அளித்த எம் அழகனார் -4-10-
10-பரும் தாள் களிற்றுக்கு அருள் செய்த பரமன் தன்னை பாரின் மேல்
விருந்தா வனத்தே கண்டமை விட்டு வித்தன் கோதை சொல் -14-10
———————————————————————————————————————
திருச் சந்த விருத்தம் –
11-ஆனை காத்து ஓர் ஆனை கொன்று –40
———————————————————————————————————————–
திருமாலை —
12-உம்பரால் அறியலாகா ஒளியுளார் ஆனைக்காகி செம்புளால் உண்டு வாழும் முதலை மேல் சீறி வந்தார் –28-
13-பெண்ணுலாம் சடையினானும் பிரமனும் உன்னைக் காண்பான் எண்ணிலா ஊழி யூழி தவம் செய்தார் வெள்கி நிற்ப
விண்ணுளார் வியப்ப வந்து ஆனைக்கு அன்று அருளை ஈந்த கண்ணரா உன்னை என்கோ களை கணாக் கருதுமாறே –44
———————————————————————————————————————————
பெரிய திருமொழி –
14-மீனமர் பொய்கை நாள் மலர் கொய்வான் வேட்கையினோடு சென்றிழிந்த கானமர் வேழம் கையெடுத்து அலறக் கரா அதன் காலினைக் கதுவ
ஆனையின் துயரம் தீரப் புள்ளூர்ந்து சென்று நின்று ஆழி தொட்டானை தேனமர் சோலை மாட மா மயிலைத் திரு வல்லிக் கேணிக் கண்டேனே –2-3-9-
15-கொழுந்தலரும் மலர்ச் சோலைக் குழாம கொள் பொய்கைக் கோள் முதலை வாள் எயிற்றிக் கொண்டற்கு எள்கி
அழுந்திய மா களிற்றுனுக்கு அன்று ஆழி ஏந்தி அந்தரம்மே வரத் தோன்றி அருள் செய்தானை –2-10-3-
16-வாரணம் கோள் இடர் கடிந்த மாலை நீல மரகதத்தை மழை முகிலே போல்வான் தன்னை –2-10-10-
17-கொலைப் புண் தலைக்குன்றம் ஓன்று உய்ய அன்று கொடு மா முதலைக்கு இடர் செய்து –3-8-3-
18-தூம்புடைப் பனைக்கை வேழம் துயர் கெடுத்து அருளி –4-5-8-
19-பொள்ளைக் கரைத்த போதகத்தின் துன்பம் தவிர்த்த புனிதனிடம் —5-1-2-
20-உலகில் சூழி மால் யானைத் துயர் கெடுத்து இலங்கை மலங்க அன்று அடு சரம் துரந்து-5-7-8-
21- கடி கோல் பூம் பொழில் காமரு பொய்கை வைக்கு தாமரை வாங்கிய வேழம் முடியும் வண்ணம் ஓர் முழு வலி முதலை பற்ற மற்றது நின் சரண் நினைப்ப
கொடியவை விலங்கின்னுயிர் மலங்கக் கொண்ட சீற்றம் ஓன்று உளது அறிந்து உன்
அடியனேனும் வந்து அடியிணை யடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே –5-8-3-
22-குன்றால் மாரி தடுத்தானைக் குல வேழம் அன்று பொன்றாமை அதனுக்கு அருள் செய்த போரேற்றை -7-6-4-
23-குலத் தலைய மத வேழம் பொய்கை புக்குக் கோள் முதலை பிடிக்க அதற்கு அனுங்கி நின்று நிலத் திகழும் மலர்ச் சுடரேய் சோதீ என்ன –7-8-3-
24-இலையார் மலர்ப் பூம் பொய்கை வாய் முதலை தன்னால் அடர்ப்புண்டு கொலையார் வேழம் நடுக்குற்றுக் குலைய அதனுக்கு அருள் புரிந்தான் –8-6-7-
25-கைம்மான மதயானை இடர் தீர்த்த கரு முகிலை மைம்மான மணியை அணி கொள் மரகதத்தை –8-9-1-
26-கவலை மாகதத்த கரி உய்யப் பொய்கைக் கராம் கோலக் கலங்கி உள் நினைந்து துவள மேல் வந்து தோன்றி வன் முதலை துணி படச் சுடு படை துரந்தோன்–9-1-2-
————————————————————————————–
முதல் திருவந்தாதி –
27-இடரார் படுவார் எழு நெஞ்சே வேழம் தொடர்வான் கொடு முதலை சூழ்ந்த படமுடைய
பைந்நாகப் பள்ளியான் பாதமே கை தொழும் கொய்ந்நாகப் பூம் போது கொண்டு –78 –
———————————————————————————
இரண்டாம் திருவந்தாதி –
28– தொடர் எடுத்த மால் யானை சூழ் கயம் புக்கு அஞ்சி படர் எடுத்த பைங்கமலம் கொண்டு அன்று இடர் அடுக்க
ஆழியான் பாதம் பணிந்தது அன்றே வானவர் கோன் பாழி தான் எய்திற்றுப் பண்டு –13 –
29-அரியது எளிதாகும் ஆற்றலால் மாற்றி பெருக முயல்வாரைப் பெற்றால் கரியதோர்
வெண் கோட்டு மால் யானை வென்றி முடித்தன்றே தண் கோட்டு மா மலரால் தாழ்ந்து –22-
—————————————————————————–
மூன்றாம் திருவந்தாதி –
30-சூழ்ந்த துழாய் அலங்கல் சோதி மணி முடி மால் தாழ்ந்த வருவித் தடவரைவாய் ஆழ்ந்த
மணி நீர்ச் சுனை வளர்ந்த மா முதலை கொன்றான் அணி நீல வண்ணத்தவன் –50-
40-தொட்ட படை எட்டும் தோலாத வென்றியான் அட்ட புயகரத்தான் அஞ்ஞான்று குட்டத்துக்
கோள் முதலை துஞ்சக் குறித்து எறிந்த சக்கரத்தான் தாள் முதலே நங்கட்குச் சார்வு –99-
—————————————————————–
நான்முகன் திருவந்தாதி-
41-மதித்தாய் மடுக்கிடந்த மா முதலை கோள் விடுப்பான் ஆழி விடற்கிரண்டும் போயிரண்டின் வீடு –12-
————————————————————————-
திரு வெழு கூற்று இருக்கை –
42-நால் திசை நடுங்க அஞ்சிறைப் பறவை ஏறி நால் வாய் மும்மதத் திருசெவி யொரு தனி வேழத் தரந்தையை ஒரு நாள் இரு நீர் மடுவில் தீர்த்தனை –
—————————————————————————–
சிறிய திருமடல்-
43-போரானை பொய்கை வாய்க் கோட்பட்டு நின்று அலறி நீரார் மலர்க்கமலம் கொண்டு ஓர் நெடும் கையால் நாராயணா ஒ மணி வண்ணா நாகணையாய் வாராய்
என்னாரிடரை நீக்காய் என வெகுண்டு தீராத சீற்றத்தால் சென்று இரண்டு கூறாக ஈரா வதனை இடர் கடிந்தான் எம்பெருமான் பேராயிரமுடையான்–49–51-
44-ஓரானை கொம்பு ஒசித்து ஓரானை கோள் விடுத்த சீரானை செங்கண் நெடியானை –75-
——————————————————————-
திருவாய்மொழி –
45-பூம் தண்யானை இடர் கெடுத்த பூம் தண் துழாய் என் தனி நாயகன் புணர்ப்பே –2-8-2-
46-கைம்மா துன்பம் கடிந்த பிரானே அம்மா வடியேன் வேண்டுவது ஈதே –2-9-1-
47-மழுங்காத வைந்நுதிய சக்கர நல் வலத்தையாய் தொழும் காதல் களிறு அளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே
மழுங்காத ஞானமே படையாக மலருலகில் தொழும் பாயர்க்கு அளித்தால் உன் சுடர்ச் சோதி மறையாதே –3-1-9-
48-மொய்ம்மாம் பூம் பொழில் பொய்கை முதலைச் சிறைப்பட்டு நின்ற கைம்மாவுக்கு அருள் செய்த கார் முகில் போல் வண்ணன் கண்ணன் –3-5-1-
49-அம்மான் ஆழிப் பிரான் அவன் எவ்விடத்தான் யானார் எம்மா பாவியர்க்கும் விதி வாய்க்கின்று வாய்க்கும் கண்டீர்
கைம்மா துன்பு ஒழித்தாய் என்று கை தலை பூசலிட்டே மொய்ம்மாலாய் ஒழிந்தேன் எம்பிரானும் என் மேலானே -5-1-7-
50-பெரும் தாள் களிற்றுக்கு அருள் செய்த பெருமான் தருந்தானருள் தான் இனியான் அறியேனே –8-7-2-
51- நாரணன் எம்மான் பாரணங்கு ஆளன் வாரணம் தொலைத்த காரணன் தானே –
—————————————————————————————————————————
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply