ஸ்ரீ அபீதி ஸ்தவம் -ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமி–

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேசரீ
வேதாந்தாசார்ய வர்யோமே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

சீரொன்று தூப்புல் திருவேங்கடமுடையான்
பாரொன்றச் சொன்ன பழ மொழியில் ஓரொன்று
தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வானேறப் போமளவும் வாழ்வு –
———————————————————————————————————————

1–அபிதி இஹ யத் ஜுஷாம் யத் அவதீரிதா நாம் பயம்
பயம் அபய விதாயின ஜகத் யத் நிதேச ஸ்த்திதா
தத் ஏதத் அதி லங்கித த்ருஹிண சம்பு சக்ர ஆதிகம்
ரமா சகம் அதீமஹே கிம் அபி ரங்க தூர்யம் மஹ-

ஸ்ரீ ரெங்க நாச்சியாரின் நாயகனான ஜ்யோதி ஸ்வரூபமான ஸ்ரீ ரெங்க நாதனை அண்டி திருவடிகளில் தஞ்சம் அடைந்து பயம் நீங்கப் பெறுவோம்-

இந்த உலகில் உள்ளவர்கள்
எந்த ஒரு வஸ்துவை தஞ்சம் அடைந்தால் பயம் இல்லாமை என்ற நிலையை அனுபவிக்க இயலுமோ
எந்த வஸ்துவால் நிராகரிக்கப் பட்டால் பயம் உண்டாகுமோ
எந்த வஸ்துவின் கட்டளைக்கு அடி பணிந்து பயம் உண்டாக்குபவர்களும் பயம் நீக்குபவர்களும் உள்ளனரோ
எந்த மேன்மையான வஸ்து பிரமன் இந்திரன் சிவன் ஆகியவர்களைக் காட்டிலும் மேலானதோ
எந்த வஸ்து எப்போதும் ஸ்ரீ ரெங்க நாச்சியாரின் நாயகனாக உள்ளதோ
அப்படிப்பட்ட அது அற்புதமான ஜ்யோதி ரூபமான ஸ்ரீ ரெங்கநாதனை அண்டி ஸ்துதிக்கிறோம் –

“கிமாபி” மஹ: – முதல் ஸ்லோகத்தில் “வரையறுக்க முடியாத” பிரகாசம்.
அவர் ஒரு விவரிக்க முடியாத பிரகாசமாக இருப்பதற்குக் காரணம், இந்தப் பெரிய பிரகாசம் தான்.-சூரியன், நெருப்பு போன்றவற்றின் குறைந்த பிரகாசங்களைப் போலல்லாமல், இது ஆறுதலளிக்கிறது, இது எரித்து காயப்படுத்தும் அல்லது கொல்லும். “கிமாபி” என்ற அதே வார்த்தையை ஸ்ரீ பயன்படுத்துகிறார்.
பகவத்-தியான சோபானத்தின் முதல் ஸ்லோகத்திலும் தேசிகர், மீண்டும் இங்கே
அவர் இறைவனை “ஜ்யோதி” – அந்தர்ஜ்யோதி கிமாபி…” என்று விவரிக்கிறார்.

———————————————

2–தயா சிசிரத ஆசயா மனஸி மே சதா ஜாக்ருயு
ஸ்ரியா அத்யுஷித வஷச ஸ்ரித ம்ருத்வ்ருதா சைகைதா
ஜகத் துரித கஸ்மரா ஜலதி டிம்ப ஸ்ப்ருஸ
சக்ருத் ப்ரணத ரஷண ப்ரதித சம்வித சம்வித –

உள்புறம் ஸ்ரீ தயா தேவியும் திரு மார்பில் பெரிய பிராட்டியாரும் இருந்து கருணைக் கடலாக -கண்ணாலே காண முடியும்படி ஆக்கிக் கொண்ட படியால்
சிறிய கடலாக -தனது சரணாகத வத்சலத்தை கடல்கரையிலே காட்டி அருளி வ்ரதம் கொண்டமையும் திருவாய் சோதி திறந்து அருளி
நித்ய சந்நிதி பண்ணி அருளி இருக்கும் பெரிய பெருமாள் திருமேனி மனசில் அகலாமல் உறைந்து இருக்க வேண்டும் –

கருணையால் எப்போதும் குளிர்வாகவே உள்ளது
ஸ்ரீ பெரிய பிராட்டியார் எப்போதும் அகலாமல் வீற்று இருக்கும் திரு மார்பை யுடையது
ஆக உட்ப்புறம் தயா தேவியும் வெளிப்புறத்தில் பெரிய பிராட்டியாரும் இருந்து கொண்டு நம் மீது கருணையைப் பொழிய வைத்து அருளுகின்றனர்
காவேரி மணல்திட்டில் சயனித்து உள்ளது
உலகில் உள்ள ஸமஸ்த பிராணிகளின் ஸமஸ்த பாபங்களையும் போக்குவதற்காகவே உள்ளது
சிறிய கடலோ என நினைக்கத் தோன்றுகிறது -இந்தக்கருணைக் கடலை முழுவதும் கண்ணால் காணும் படி காட்டிக்கொண்டு அருளுவதால் சிறிய கடல் என்கிறார்
ஸக்ருத் சரணம் புக போதுமானது
அவர்களைக் காத்தே தீருவோம் என்று அனைவரும் அறிய சபதம் செய்தது
அபயப்ரத ஸார வ்ருத்தாந்தம் ப்ரஸித்தம்
அந்த ஸ்ரீ ஸீதா ராமனே நம்பெருமாள் –
இப்படியாக யுள்ள பெரிய பெருமாளின் திருமேனி எனது மனதில் எப்போதும் அகலாது உறைந்து நித்ய வாஸம் செய்து அருள வேண்டும்

———————————————————————————————————–

3- ய அத்ய மித புத்தி நா பஹூள மோஹா பாஜா மயா
குண க்ரதித காய வாக் மனஸ வருத்தி வைசித்ர்யத
அதர்க்கித ஹித அஹித க்ரம விசேஷம் ஆரப்யதே
தத் அபி உசிதம் அர்ச்சனம் பரிக்ருஹாண ரங்கேஸ்வர

நைச்யானுசந்தானம் -ஆளவந்தார் ஸ்தோத்ர ரத்னம் -59-ரஜோ தமஸ் குணங்களால் மறைக்கப் பட்ட சொற்களை திருத்தி கொண்டு அருள பிரார்த்தது போலே இங்கும் –

நான் மிகவும் அற்ப அறிவுடையவன் -அறியாமையால் சூழப்பட்டே உள்ளேன்
எனது சரீரம் வாக்கு மனம் மூன்றுமே ஸத்யம் ரஜஸ் தமஸ் ஆகிய முக் குணங்களால் நன்றாக பிணைக்கப் பட்டுள்ளன
இவற்றை ஆராயாமல் உன்னை ஸ்துதிக்க முற்படுகிறேன்
இதனை முறைப்படியான ஆராதனையாக நீ ஏற்றுக் கொண்டு அருள வேணும்

அநிச்சந்நப்யேவம் யதி புநரிதீச்சந்நிவ ரஜஸ்-
தமஶ் சன்னஶ்சத்மஸ்துதி வசன பங்கீமரசயம் |
ததா’பீத்தம் ரூபம் வசனம் அவலம்ப்யா’பி க்ருபயா
த்வமேவைவம் பூதம் தரணிதர! மே ஶிக்ஷய மந: ||-59

பூமியை எடுத்த எம்பெருமானே! இந்த அடியவன் ரஜோ மற்றும் தமோ குணங்களால் மூடப்பட்டிருந்தாலும், என்னிடத்தில் உண்மையான ஆசை இல்லாமல் இருந்தாலும், உண்மையான ஆசை உடையவர்களைப் போலே உன்னை மயக்கும் வார்த்தைகளை நான் சொன்னாலும், அதையே காரணமாகக் கொண்டு, உன்னுடைய கருணையால் என்னுடைய மனதைத் திருத்தி யருள வேண்டும்.

————————————————————————————————————-

4-மருத் தரணி பாவக த்ரிதச நாத கால ஆதய
ஸ்வ க்ருத்யம் அதி குர்வதே த்வத் அபராதத பிப்யத்
மஹத் கிம் அபி வஜ்ரம் உதயதம் இதி இவ யத் ஸ்ரூயதே
தரதி அனக தத் பயம் இஹ தாவாக ஸ்தாவக

உனது கட்டளையை மீறி விடுவோம் என்ற பயம் நிமித்தமாகவே செயல்படும் வாயு சூரியன் அக்னி இந்த்ரன் யமன் -போன்றார்களுக்கு இடியைப் போன்ற வஜ்ர ஆயுதமாக உன்னிடம் அச்சம் உள்ளது –ஆனால் உன்னைத் ஸ்துதிப்போர்க்கு அச்சம் இல்லை –

———————————————————————-

5-பவந்தம் இஹ ய ஸ்வதீ நியத சேதன அசேதனம்
பநாயதி நமாஸ்யதி ஸ்மரதி வக்தி பர்யேதி வா
குணம் கமபி வேத்தி வா தவ குணேச கோபாயிது
கதாசன குதச்சன க்வசன தஸ்ய ந ஸ்யாத் பயம்

உன்னுடைய திருக் கல்யாண குணக் கடலில் ஒரு துளி அறிந்து ஸ்துதித்து வணங்கி த்யானித்து வலம் வந்து திரு நாமங்களை சொல்வாருக்கு பயமே இல்லை-

குணங்களின் இருப்பிடமாக உள்ள அழகிய மணவாளா ஸமஸ்த சேதன அசேதன மயமான அனைத்து ப்ரபஞ்சங்களையும் உனது ஸங்கல்ப லேசத்தாலேயே கட்டுப்படுத்தி செயல் படச்செய்து அருளுகிறாய்
இப்படிப்பட்ட உன்னை யார் ஒருவன் ஸ்துதிக்கிறானோ
வணங்குகிறானோ
த்யானிக்கிறானோ
திரு நாம சங்கீர்த்தனம் பண்ணுகிறானோ
ப்ரதக்ஷிணம் செய்கிறானோ
அல்லது ஸர்வ ரக்ஷகனான உனது கல்யாண குண கணங்களில் ஏதேனும் ஒரு கல்யாண குணத்தை அறிகிறானோ
அவனுக்கு எந்த நேரத்திலும்
எந்த திசையிலிருந்து
எந்த இடத்திலிருந்தும்
யாராலேயும்
பயமே நேராது –

—————————————————————————————————

6-ஸ்த்திதே மனஸி விக்ரஹே குணிநி தாது சாம்யே சதி
ஸ்மரேத் அகில தேகிநம் ய இஹ ஜாதுசித் த்வாம் அஜம்
தயைவ கலு சந்த்யா தம் அத தீர்க்க நித்ரா வசம்
ஸ்வயம் விஹித சம்ஸ்ருதி நயசி தாம நைஸ்ரேயசம்

சரணாகதன் அப்பொழுதைக்காக இப்பொழுதுதே சொல்லி வைத்ததை நினைவு கொண்டு உனது நினைவை அந்திம காலத்தில் ஏற்படுத்தி மோஷம் அளிப்பதால் பயம் வேண்டாமே-

பெரிய பெருமாளே அனைவருக்கும் அந்தராமியாகவும் -பிறப்பற்றவனாகவும் -உள்ள உன்னை
இவ்வுலகில் வாழும் ஒருவன் அவன் மனம் தெளிவாக உள்ள போதும் உடல் சீராக உள்ள போதும் -உடலில் உள்ள வேதிப்பொருட்கள் சீராக உள்ள போதும் பிரபத்தி செய்தானாகில்
அவன் மரணத்தின் பிடியில் இருக்கும் போது முன்னர் செய்த பிரபத்தி காரணமாகவே அவனுக்கு உன்னைப் பற்றிய நினைவை நீயே ஏற்படுத்தி அவனை மோக்ஷமாகிய பெரும் பேற்றைப் பெறும்படி அருளிச் செய்கிறாய் –

——————————————————————————————-

7-ரமா தயித ரங்க பூ ரமண கிருஷ்ண விஷ்ணோ ஹரே
த்ரிவிக்ரம ஜனார்த்தன த்ரியுக நாத நாராயண
இதி இவ சுப தாநி ய படதி நாமதே யாநி தே
ந தஸ்ய யம வஸ்யதா நரக பாத பீதி குத

திருவரங்கத்தை உகந்து நித்ய சந்நிதி பண்ணி அருளும் உன்னை திரு நாம சங்கீர்த்தனம் செய்து யம-நரக – பயம் நீங்குவோம்-

ஸ்ரீ பெரிய பிராட்டியாரின் நாயகனே
திருவரங்கத்தை உகந்து அருளி நித்ய வாஸம் செய்து அருளுகிறவனே
கிருஷ்ணா
விஷ்ணு
ஸர்வ பாப நிவர்த்தகனே
மூன்று அடிகள் கொன்டு ஓங்கி உலகளந்த உத்தமனே
ஜநார்த்தனா
ஞான பல ஐஸ்வர்ய வீர சக்தி தேஜஸ் -மேன்மை, அறம், புகழ், செல்வம், அறிவு (ஞானம்) மற்றும் வைராக்யம் ஆகிய ஆறு குணங்களும் குறைவின்றி நிரம்பப் பெற்று இருக்கும் பகவானே
சர்வாதிகனே
நாராயணா
இவை போன்ற நன்மை அளிக்கும் உனது திரு நாம ஸங்கீர்த்தனம் செய்பவன்
யம கிங்கர்கள் வசப்படுவதில்லை
ஆகையால் நரகத்தில் விழுந்து விடுவோமோ என்கிற அச்சம் இல்லை –

ஒரு “தச-நாம அர்ச்சனை” இயற்றினார் –

——————————————————————————————————————

8-கதாசித் அபி ரங்கபூ ரசிக யத்ர தேசே வசீ
த்வத் ஏக நியத ஆசய த்ரிதச வந்தித வர்த்ததே
தத் அஷத தப வனம் தவ ச ராஜதாநீ ஸ்திதா
ஸூகஸ்ய ஸூகம் ஆஸ்பதம் ஸீசரிதஸ்ய துர்க்கம் மஹத்

புலன்களை அடக்கி உன்னிடம் மனம் வைத்தவனை தேவர்களும் வணங்க -அவன் இருந்த இடமே தவம் செய்யும் இடமாகவும்-நீயும் உகந்து நித்ய வாசம் செய்யும் ஸ்தலமாகவும் ஆகும் -நிரதிசய வான் போகமும் அங்கே உண்டு -புண்ணியங்களும் அங்கே தங்கும் –

————————————————————–

9-த்ரிவர்க்க பத வர்த்தி நாம் த்ரிகுண சங்கந உத்யோகி நாம்
த்விஷத் ப்ரமதந அறத்திநாம் அபி ச ரெங்க த்ருஸ்ய உதயா
ஸ்க்கலத் சமய காதரீ ஹரண ஜாகரூகா பிரபோ
கர க்ரஹண தீஷிதா க இவ தே ந திவ்ய குணா

உனது ஒவ் ஒரு திருக் கல்யாண குணங்களும் தர்மம் அர்த்தம் காமம் இவற்றை விட்டு பாஹ்ய விரோதிகளையும் போக்கி எக் காலத்திலும் ரஷிக்க வல்லதால் அச்சம் இல்லை –

——————————————————————————————————————-

10-பிபேதி பவப்ருத் பிரபோ தவத் உபதேச தீவ்ர ஔஷதாத்
கதத்வ ரச துர்விஷே பளிச பஷவத் ப்ரீயதே
அபத்த்ய பரிகாரதி விமுகம் இத்தம் ஆகஸ்மிகீ
தம அபி அவசரே க்ரமா தவதி வத்சலா த்வத் தயா

சம்சாரத்தில் உழன்று விஷயாந்தரங்களில் சிக்கி உள்ள அனைவரையும் உனது தயை குணம் நிர்ஹேதுகமாக ரஷித்து அருளுகிறது –

தூண்டிலுள்ள உணவைக் கண்டு மகிழும் மீன் போல் -விஷம் போன்ற விஷயாந்தர ஸூகங்களிலே சிக்கி ஸம்ஸாரத்தில் உழலும் மனிதர்கள் உமது உபதேசமாக கசப்பு மருந்தைக் கண்டு அச்சம் கொள்கிறான் -தீய செயல்களில் இருந்து விலகாமல் இருந்தாலும் நிர்ஹேதுகமாக உனது தயா குணம் சரியான நேரத்தில் தோன்றி ரக்ஷித்து அருளுகிறதே –

———————————————————————–

11-அபார்த்த இதி நிச்சித ப்ரஹரணாதி யோக தவ
ஸ்வயம் வஹசி நிர்பய தத் அபி ரங்க ப்ருத்த்வீ தர
ஸ்வ ரஷணம் இவ அபவத் ப்ரணத ரஷணம் தாவகம்
யத் ஆத்த பரமார்த்த வித் நியதம் அந்தராத்மா இதி தே

அடியார்களுக்காக திருவாயுதங்களை -திரு ஆபரணமாகவும் அவர்கள் விரோதி நிரசனத்துக்காகவும் எப்பொழுதுமே தரித்து உள்ளாய்-

அச்சமே இல்லாத நீ திவ்ய ஆயுதங்களைத் தாங்கி உள்ளாய்
ஞானிகளை ரக்ஷிக்கவே திவ்ய ஆயுதங்கள் என்று பக்தாநாம் என்று அருளிச் செய்தாலும் ஞானிகளையே ஆத்மாவாகக் கொண்ட நீ உன்னையே ரஷித்துக் கொள்ளவே அன்றோ

———————————————————————————-

12-லகிஷ்ட ஸூக சங்கதை ஸ்வ க்ருத கர்ம நிவர்த்திதை
களத்ர ஸூத சோதர அனுசர பந்து சம்பந்திபி
தன ப்ரபருதிகை அபி பிரசுர பீத பேத உத்தரை
ந பிப்ரதி த்ருதம் பிரபோ த்வத் அநுபூதி போக அர்த்திந

கர்ம வசத்தால் வரும் அளவில்லா சிற்றின்பம் புத்ராதி மக்கள் இவற்றை விரும்பாமல் உன்னையே அடைந்து நித்ய கைங்கர்யம் செய்து உன்னை உகப்பித்து அதனால் நிரதிசய போகம் அனுபவிப்பதையே விரும்புவார்கள் அநந்ய பிரயோஜனர் –

—————————————————————————————

13-ந வக்தும் அபி சக்யதே நரகே கர்ப்ப வாச அதிகம்
வபு ச பஹூ தாதுகம் நிபுண சிந்தநே தாத்ருசம்
த்ரிவிஷ்டப முகம் ததா தவ பதஸ்ய தேதீ பத
கிம் அத்ர ந பய ஆஸ்பதம் பவதி ரெங்க ப்ருத்த்வீ பதே –

நரக வாசம் கர்ப்ப வாசம் ஸ்வர்க்க வாசம் அனைத்தும் எண்ணும் போதே பயம் விளைப்பதாக உள்ளதே-பலவித தாதுக்கள் சேர்ந்த இவ் வுடலும் அச்சத்துக்கு இடமாகவே உள்ளது- -இவ்வுலகில் அச்சம் விளைப்பது எது தான் இல்லை

——————————————————————

14-பவந்தி முக பேதத பய நிதானம் ஏவ பிரபோ
சுப அசுப விகல்பிதா ஜகதி தேச காலாத்ய
இதி பிரசுர சாத்வசே மயி தயிஷ்யசே த்வம் ந சேத்
க இத்தம் அனுகம்பிதா த்வத் அனுகம்பநீய ச க

இவ் வுலகில் நல்லவை தீயவை என்றும் முன்னோர்களால் காலம் தேசம் போன்றவை பிரிக்கப்பட்டு இவை ஒவ்வொன்றும் தங்கள் தங்கள் வழியில் அச்சமூட்டுபவையாய் உள்ளன- அனைத்தும் பயாவஹமாய் இருக்க நீ கருணை காட்டி அருள வேணும் -யான் நின்னை அன்றி இலேன் நீயும் என்னை அன்றி இல்லை –

————————————————————————————————————-

15-ஸக்ருத் பிரபதன ஸ்ப்ருசாம் அபய தான நித்ய வ்ரதீ
ந ச த்வி அபி பாஷசே த்வம் இதி விஸ்ருத ஸ்வ உக்தித
யத் உக்த கரணம் விது தவ து யாதுதான ஆதய
கதம் விததம் அஸ்து தத் க்ருபண சார்வ பௌமே மயி

ஸ்ரீ ராமனாக சரணாகத ரஷண வ்ரதம் பூண்டு ஒரே சொல் என்று காட்டி அருளி -சொன்ன வண்ணம் செய்பவன்-அகிஞ்சனனும் அனந்யகதியுமான அடியேன் விஷயத்தில் எவ்விதம் பயன் அற்றுப் போகக் கூடும் –

——————————————————————————–

16-அனுஷண சமுத்திதே துரித வாரிதௌ துஸ்தரே
யதி க்வசன நிஷ்க்ருதி பவதி சா அபி தோஷ ஆவிலா
தத் இத்தம் அகதௌ மயி பிரதி விதாநம் ஆதீயதாம்
ஸ்வ புத்தி பரிகல்பிதம் கிம் அபி ரங்க துர்ய த்வயா

நொடிக்கு நொடி பெருகும் பாபக் கூட்டங்களை உனது சங்கல்பத்தாலே பரிகாரம் காட்டி அருள வேணும் –

——————————————————————————————————————————————————

17-விஷாத பஹூ ளாத் அஹம் விஷய வர்க்கத துர்ஜயாத்
பிபேமி வ்ருஜிந உத்தர த்வத் அநுபூதி விச்சேதத
மயா நியத நாதவான் அயம் இதி த்வம் அர்த்தா பயன்
தயா தன ஜகத்பதே தயித ரங்க சம் ரஷமாம்

பொய் நின்ற ஞானம் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் கொண்ட என்னை நிரந்தரம் உன்னையே நான் நினைக்க நீ எண்ண வேணும்

—————————————————————————-

18-நிசர்க்க நிரதிஷ்டதா தவ நிரம்ஹச ஸ்ரூயதே
தத் த்ரியுக ஸ்ருஷ்டிவத் பவதி சம்ஹ்ருதி க்ரீடிதம்
ததா அபி சரணா கத ப்ரணய பங்க பீத பவான்
மத் இஷ்டம் இஹ யத் பவேத் கிம் அபி மாஸ்ம தத் ஜீஹபத்

அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணைக குண சாலி -லீலா நிமித்தமாக ஸ்ருஷட்யாதிகளை பண்ணி அருள -சாஸ்திர ருசி விளைவிக்க ஐஸ்வர் யாதிகளை வழங்கி படிப்படியாக ப்ரீதி காரித நித்ய கைங்கர்யமும் கொடுத்து அருளுகிறான் –

——————————————————————————————————————————-

19-கயாது ஸூத வாயஸ த்விரத புங்கவ த்ரௌபதீ
விபீஷண புஜங்கம வ்ரஜ கண அம்பரீஷ ஆதய
பவத் பத சமாஸ்ரிதா பய விமுக்தம் ஆபு யதா
லபே மஹி ததா வயம் சபதி ரங்க நாத த்வயா –

கயாது ஸூ தா -ப்ரஹ்லாதன் -போன்றவர்கள் போலே உன்னைச் சரண் அடைந்த நொடியிலியே பயம் நீங்கப் பெற்றோம்

————————————————————————————————————————-

20-பயம் சமய ரங்க தாம்நி அநிதர அபிலாஷா ஸ்ப்ருசாம்
ஸ்ரியம் பஹூ ளய பிரபோ ஸ்ரித விபுஷம் உன்மூல்ய
ஸ்வயம் சமுதிதம் வபு தவ நிசா மயந்த சதா
வயம் த்ரிதச நிர்வ்ருதிம் புவி முகுந்த விந்தேமஹி –

உனது அநந்ய பிரயோஜனராக உள்ள அடியவர் பயம் நீங்கும் படி ஸ்ரீ ரெங்கத்தை காத்து அருள வேணும் -ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யை மேன்மேலும் வளர்க்க அருள் புரிய வேணும் -உடையவர் மீண்டும் ஸ்ரீ ரெங்க தாம்னிக்கு வந்து நிர்வகிக்க அருள வேணும்
எதிரிகளை வேருடன் அழித்து தேவரீருடைய ஸ்வயம் திரு மேனியை நித்ய சூரிகள் அங்கே அனுபவிப்பதை போலே நாங்கள் அவர்களுடன் இங்கேயே அனுபவிக்க அருள் புரிய வேணும் –

———————————————————————————————————-

21-ஸ்ரிய பரிப்ருடே த்வயி சரித ஜனச்ய சம்ரஷகே
சத் அத்புத குண உததௌ இதி சமர்ப்பித அயம் பர
பிரதிஷணம் அத பரம் பிரதய ரங்க தாம திஷூ
பிரபுத்வம் அநு பாதிகம் ப்ரதித ஹேதிபி ஹே திபி

திருவரங்கம் மட்டும் இன்றி அனைத்து தேசங்களையும் ரஷித்து அருள வேணும்

——————————————————————————————-

22-கலி பிரணித லஷணை கலித சாக்ய லோகாயதை
துருஷ்க யவன ஆதிபி ஜகதி ஜ்ரும்ப மாணம் பயம்
ப்ரக்ருஷ்ட நிஜ சக்திபி பிரசபம் ஆயுதை பஞ்சபி
ஷிதி த்ரிதச ரஷகை ஷபய ரங்க நாத ஷணாத்

கலி நண்பர்களான பௌத்தர் சாருவாகர் துருக்கர் யவனர் போன்றாரால் வரும் பயத்தை ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு உனது திவ்ய பஞ்சாயுதங்களால் போக்கி அருள வேணும்

————————————————————————————-

23-திதி பிரபவ தேஹ பித் தஹன சோம ஸூ ர்ய ஆத்மகம்
தம பிரமதனம் பிரபோ சமுதித அஸ்த்ர ப்ருந்தம் ஸ்வத
ஸ்வ வ்ருத்தி வச வர்த்தித த்ரிதச வ்ருத்தி சக்ரம் புன
ப்ரவர்த்தயது தாம் நி தே மஹதி தர்ம சக்ரம் ஸ்த்திதம்

திதியின் புதல்வர்களான அசுரர்களை அழிக்க வல்லதும் -ஒளி விஞ்சி உள்ளதும் -அனைத்து திவ்ய ஆயுதங்களும் இதம் அம்சம் என்றும்
சொல்லும்படியான சக்கரத் தாழ்வார் தேவர்களின் செயலை அடக்கிக் கொண்டு தர்ம சக்கரம் திருவரங்கத்தில் சுழலும் படி ரஷித்து அருளுகிறார் –

——————————————————————————-

24-மனு ப்ரப்ருதி மாநிதே மஹதி ரங்க தாமாதிகே
தனு பிரபவ தாருணை தரம் உதீர்ய மாணம்
ப்ரக்ருஷ்ட குணக ஸ்ரியா வ ஸூ தயா ச சந்துஷித
ப்ரயுக்த கருணா உததி ப்ரசம்ய ஸ்வ சக்த்யா ஸ்வயம்

மனு போல்வார் ஆராதித்த ஸ்ரீ ரங்க விமானம் -இங்கு அசுரர்களை விட கொடிய தீயவர்களால் பயம் சூழ்ந்து இருக்க உனது கடல் போன்ற கருணையை முன்னே நிறுத்தி உன்னுடைய சக்தியால் அச்சத்தை நீக்க வேண்டும் –

———————————————————————————————————————————————

25-புஜங்கம விஹங்கம ப்ரவர சைன்ய நாதா பிரபோ
தத ஏவ குமுதாதய நகர கோபுர த்வாரபா
அசிந்த்ய பல விக்ரமா தவம் இவ ரங்க சம்ரஷகா
ஜிதம் தே இதி வாதின ஜகத் அனுக்ரஹே ஜாக்ரது

ஆதிசேஷன் கருடன் விஷ்வக் சேனர் குமுதன் -போன்ற தலைவர்களும் கோயில் வாசல் காப்பவர்களும் திருவரங்கத்தை ரஷிப்பதையே சிந்தனை கொண்டு உன்னுடைய வெற்றியைக் கொண்டாடி நித்யமாக இருக்க வேண்டும்

————————————————————————————————————————

26-விதி திரிபுர மர்த்தன த்ரிதச புங்கவ பாவக
யம ப்ரப்ருதய அபி யத் விமத ரஷணே ந ஷமா
ரிரஷிஷதி யத்ர ச பிரதிபயம் ந கிஞ்சித் க்வசித்
ச ந பிரதிபடான் பிரபோ சமய ரங்க தாமா திஷூ —

பிரமன் சிவன் இந்த்ரன் அக்னி யமன் பலரும் சேர்ந்து வந்து உனது அடியார் விரோதியைக் காக்க வந்தாலும் இயலாதே நீ ரஷிக்க விரும்பியவனுக்கும் பயம் விளைவிக்க முடியாதே
திருவரங்கம் போன்ற திவ்ய தேசங்களை சூழ்ந்த எதிரிகளை அழித்து அருளுவாயாக –

—————————————————————————————–

27-ச கைடப தமோ ரவி மது பராக ஜஞ்ஜ்ஜா மருத்
ஹிரண்ய கிரி தாரண த்ருடித கால நேமி த்ரும
கிம் அத்ர பஹூ நா பஜத் பவ பயோதி முஷ்டிந்த்ய
த்ரிவிக்ரம பவத்க்ரம ஷிபது மங்ஷூ ரங்கத்விஷ

ஓங்கி உலகு அளத்த உத்தமனே -மது கைடபன் ஹிரண்யன் கால நேமி போன்றோரை அழித்து உன் சேஷ்டிதங்களால் சம்சார கடலை வற்ற வைத்து அருளுகிறாய்
உன்னை அனுபவிக்க விரோதிகளாக வந்தோரையும் அழித்து எங்களை வாழ்விக்க வேண்டும் –

———————————————————————

28-யதி ப்ரவர பாரதீ ரச பரேண நீதம் வய
ப்ரபுல்ல பலிதம் சிர பரம் இஹ ஷமம் பரார்த்தயே
நிரஸ்த ரிபு சம்பவே க்வசன ரங்க முக்க்யே விபோ
பரஸ்பர ஹிதைஷினாம் பரி சரேஷூ மாம் வர்த்தயே

எம்பெருமானார் உடைய இனிய ஸ்ரீ ஸூ க்திகளை அனுபவித்தே வாழ்ந்தேன் -மூப்பும் தட்டி விட்டது-விரோதிகள் இல்லாத திருவரங்கத்தில் ஏதாவது ஓர் இடத்தில் பரஸ்பரம் நன்மையே விரும்பும் அடியவர் குழாங்களுடன் வாழ வைத்து அருள வேணும் –

———————————————————————————————————

29-பிரபுத்த குரு வீஷண ப்ரதித வேங்கடேச உத்பவாம்
இமாம் அபய சித்தயே படத ரங்க பர்த்து ஸ்துதிம்
பயம் த்யஜத பத்ரம் இதி அபிததத் ச வ கேசவ
ஸ்வயம் வத க்ருணா நிதி குண கணேன கோபாயதி

ஆசார்ய கடாஷம் பெற்றதால் திருவரங்கனை பற்றிய இந்த அபீதி ஸ்தவம் அடியேன் இயற்ற முடிந்தது-இத்தை பாராயணம் செய்து கருணைக் கடலான ஸ்ரீ ரெங்க நாச்சியார் சமேத ஸ்ரீ ரெங்க நாதன் பயம் இன்றி திருவடிகளிலே சேர்ப்பிப்பேன் என்று அருளுவான்
அவனது திருக் கல்யாண குணங்களே அனைத்து உலகுக்கும் ரஷை யாகும் –

இந்த  அபீதிஸ்தவ ஒவ்வொரு ஸ்தோத்ர‌த்தின் முடிவிலும் “ तस्य न स्याद्भयम्   ‘இதைப் ப‌டிப்போர் பயமே இல்லாமல்  பலம் பெறுவார்கள்’   என்று ப‌ல‌ ச்ருதியைக் கூறியிருக்கிறார்.

இந்த‌ ஸ்தோத்ர‌த்தின் ப‌ய‌னாக‌ கொப்ப‌ணார்ய‌ன் என்னும் செஞ்சிக் கோட்டையின் த‌லைவ‌னான‌ ப‌ர‌ம‌ ப‌க்த‌ன் இஸ்லாமிய வெறியர்களை ஸ்ரீர‌ங்க‌த்திலிருந்து விர‌ட்டி விட்டு ஸ்ரீர‌ங்க‌த்தை நிர்ப்ப‌ய‌மாக்கி ஸ்ரீர‌ங்க‌த்தை விட்ட‌துமுத‌ல் சுற்றித் திரிந்து க‌டைசியில் திருப்ப‌தியில் எழுந்த‌ருளியிருந்த‌ ஸ்ரீர‌ங்க‌நாத‌னையும் உப‌ய‌ நாச்சிமார்க‌ளையும் த‌ன் ஊரான‌ செஞ்சியில் கொஞ்ச‌ நாள் எழுந்த‌ருளுவித்து ஆராதித்து ம‌றுப‌டியும் ஸ்ரீர‌ங்க‌த்தில் தானே பிர‌திஷ்டை செய்வித்தான்.மனிதர்களை க‌வி பாடாத‌ ஸ்வாமி தேசிக‌ன் இப்படிப்பட்ட பெரிய‌ கைங்க‌ர்ய‌ம் செய்த கொப்ப‌ணார்ய‌னைக் கொண்டாடி எழுதின‌ ஸ்லோக‌ங்க‌ள் இர‌ண்டும் ஸ்ரீர‌ங்க‌த்தில் விஷ்வ‌க்ஸேன‌ர் ஸ‌ந்நிதிக்கு முன்பு பெரிய‌ பெருமாள் ஸ‌ந்நிதியின் கீழ்ப்புற‌த்துச் சுவ‌ரில் க‌ல்லில் வெட்ட‌ப்ப‌ட்டு இன்னும் காண‌ப்ப‌டுகின்ற‌ன‌. கல்வெட்டின் காலம் ச‌காப்த‌ வருஷம் 1293 (கி.பி. 1371.) . கல்வெட்டு என்ன சொல்கிறது:

—————————————————————————————————————–

ஜயதி யதிராஜ ஸூ க்தி ஜெயந்தி முகுந்தச்ய பாதுகா யுகளீ
ததுபயதன த்ரிவேதீம் அவத்யயந்த ஜெயந்தி புவி சந்த –

————-

ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading