ஸ்ரீ பாஷ்யம்–4-2— நான்காம் அத்யாயம் -பல அத்யாயம்-இரண்டாம் பாதம் –உத்க்ராந்தி பாதம் —

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூதவ்ராத ரஷைக தீஷை
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாசே
பவது மம பரஸ்மின் சேமூஷீ பக்தி ரூபா

பாராசார்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத்த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூப்ர்வாச்சார்ய ஸூ ரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷா ஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

———————————————————————————————————————————-
முதல் பாதம் -ஆவ்ருத்தி பாதம் -உபாசகனின் கடைசி சரீரத்தில் புண்ய பாபங்கள் ஓட்டுவது இல்லை என்பதும் -பக்தியும் -ஆராயப்படுகின்றன –
இரண்டாம் பாதம் –உத்க்ராந்தி பாதம் -முக்தி பெரும் ஜீவன் சரீரத்தில் இருந்து கிளம்பும் விதம் ஆராயப்படுகிறது
கதி பாதம் -பரமபததுக்கு அழைத்துச் செல்லப்படும் வித்யா பலம் கூறப்படுகிறது
முக்தி பாதம் -ப்ரஹ்மத்தை அடைந்த முக்தன் பெரும் ஐஸ்வர்யம் கூறப் படுகிறது
———————————————————————————————————————————-

நான்காம் அத்யாயம் -பல அத்யாயம்-இரண்டாம் பாதம் –உத்க்ராந்தி பாதம் -முக்தி பெரும் ஜீவன் சரீரத்தில் இருந்து கிளம்பும் விதம் ஆராயப்படுகிறது –
11 அதிகரணங்கள்–20 ஸூத்ரங்கள்–

————————————————————————————————————————

அதிகரணம் -1-வாகாதி கரணம்–2 ஸூத்ரங்கள் -மரணம் அடைகின்றவனின் வாக்கு என்னும் இந்த்ரியம் மனத்துடன் இணைந்து விடுகிறது என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -2- மநோதிகரணம் – 1 ஸூத்ரம்-மனம் பிராணனுடன் சேர்த்தியை அடைகிறது என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -3- அத்யஷாதி கரணம் -1 ஸூத்ரம்–பிராணன் ஜீவனுடன் சேர்க்கிறது என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -4-பூதாதிகரணம் -2 ஸூத்ரங்கள்-ஜீவனுடன் கூடிய பிராணன் மற்ற பூதங்களுடன் சேர்ந்த தேஜஸ் ஸில் சேர்க்கிறது என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -5-ஆஸ் ருத்யுபக்ரமாத் அதிகரணம் -7 ஸூத்ரங்கள்-வெளிக்கிளம்புதல் -உத்க்ராந்தி எனபது மோஷம் பெறுபவன் மற்றவர்கள் இருவருக்கும் மூர்த்தன்ய நாடியில் புகுவதற்கு முன்பே பொதுவானது என்று நிரூபிக்கப் படுகிறது

அதிகரணம் -6-பர சம்பத்த்யதிகரணம் –1 ஸூத்ரம்-தேஜஸ் போன்றவை பரமாத்மாவுடன் இணைகின்றன என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -7-அவிபாகாதி கரணம்–1 ஸூத்ரம் -பரமாத்மாவிடம் சேர்கின்றன ஒழிய லயம் அடைவது இல்லை

அதிகரணம் -8-ததோகோதி கரணம் –1 ஸூத்ரம்-மூர்த்தன்ய நாடியின் மூலமே முக்தி அடைபவன் தன சரீரத்தை விட்டு வெளியே கிளம்புகிறான் என்று நிரூபிக்கப் படுகிறது

அதிகரணம் -9-ரச்ம்யநு சாராதி கரணம் -சூரியனின் கிரணங்கள் மூலமாகவே ப்ரஹ்ம ஞானி மேலே செல்கின்றான் என்று நிரூபிக்கப் படுகிறது-

அதிகரணம் -10-நிசாதிகரணம் -1 ஸூத்ரம் -இரவில் மரணம் அடையும் ப்ரஹ்ம ஞானி பிரமத்தை அடைவான் என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -11-தஷிணாயநாதி கரணம் –ஸூத்ரங்கள்–தஷிணாய நத்தில் மரணம் அடைந்தாலும் ப்ரஹ்ம ப்ராப்தி உண்டு என்று நிரூபிக்கப் படுகிறது
——————————————————————————————————

அதிகரணம் -1-வாகாதி கரணம் -மரணம் அடைகின்றவனின் வாக்கு என்னும் இந்த்ரியம் மனத்துடன் இணைந்து விடுகிறது என்று நிரூபிக்கப் படுகிறது

—————————————————————————————————————–

4-2-1- வாக் மனஸி தர்சநாத் சப்தாத் ச –

காண்கையாலும் வேதத்தில் ஓதப்படுவதாலும் -சாந்தோக்யம் -6-8-6-அஸ்ய சோம்ய புருஷஸ்ய ப்ரயத வாங்மனஸி சம்பத்யதே மன ப்ராணே ப்ராணா தேஜஸி தேஜ ப்ரச்யாம் தேவதாயாம் -என்று
உடலை விட்டுக் கிளம்பும் உபாசகனின் வாக்கு இந்த்ரியம் மனதை அடைகிறது -மனம் பிராணனிலும் -பிராணன் தேஜச்சிலும்-தேஜஸ் உயர்ந்த வஸ்துவிலும் சேர்கின்றன -என்றது
இந்த்ரியமா– செயல்பாடா– சங்கை பூர்வ பஷி செயல்பாடு என்பர் -செயல்பாட்டுக்கு மனம் பிரதான கார்யம் என்பதால் –
அப்படி அல்ல ஸ்வரூபமே இணைகிறது -வாக் செயல்பாட்டை இழந்த பின்னரும் மனம் தொடர்ந்து இயங்குவதைக் காண்கிறோம்
பூர்வ பஷி வாதம் போலே மனம் வாக் இந்த்ரிய காரணம் அல்ல எனவே லயிக்கிறது எனபது பொருந்தாது -சுருதி வாக்யத்தின் படி -சென்று சேருகிறது என்றே கொள்ள வேண்டும் –

————————————————————————————————————————————

4-2-1- அத ஏவ சர்வாணி அநு

ப்ரசன உபநிஷத் -3-9-தஸ்மாத் உபசாந்தா தேஜா புனர்பவம் இந்த்ரியை மனஸி சம்பத்ய மானை–உஷ்ணம் குறைந்து மனதுடன் இந்த்ரியங்கள் இணைந்து மறு பிறவி அடைகிறான் -என்கிறது

—————————————————————————————-

அதிகரணம் -2- மநோதிகரணம் -மனம் பிராணனுடன் சேர்த்தியை அடைகிறது என்று நிரூபிக்கப் படுகிறது –

———————————–

4-2-3-தத் மன பிராணா உத்தராத் —

சாந்தோக்யம் -6-8-6- மன ப்ராணே சம்பத்யதே -என்பதால் முழுமையாக சேர்கின்றன செயல்பாடுகள் மட்டும் அல்ல –
இதற்கு பூர்வ பஷி -மனம் உபாதான காரணமாக உள்ள பிருத்வீ தத்தவத்தின் மூலமாக பிராணனின் உபதானக் காரணமான ஜல தத்துவத்தில் லயிக்கிறது என்று பொருள் கொள்ள வேண்டும் என்பர்
சாந்தோக்யம் -6-5-4-அன்னமயம் ஹி சோம்ய மன -மனம் அன்னத்தால் ஆனது -என்றும்
6-2-4-தா அன்ன ம ஸ்ருஜந்த–அன்னத்தை நீர் உண்டாக்கியது -6-4-4-ஆபோ மய ப்ராணா – ஜல தத்வத்தில் இருந்து பிராணன் உண்டானது என்பர்
சித்தாந்தம் மனம் அன்னத்தால் போஷிக்கப் படுகிறது -பிராணன் ஜலத்தால் போஷிக்கப் படுகிறது என்று
வளர்க்கும் பொருள் அன்றி காரணப் பொருள் அல்ல
மனம் -அஹங்காரத்தின் மாறுபாடு என்றும் பிராணன் ஆகாசத்தின் மாறுபாடு என்றும் சொல்வர்
ஆக மனம் பிராணனுடன் சேர்க்கிறது என்பதே கருத்து –

————————————————————————–

அதிகரணம் -3- அத்யஷாதி கரணம் –பிராணன் ஜீவனுடன் சேர்க்கிறது என்று நிரூபிக்கப் படுகிறது –

————————————————

4-2-4-ஸ அத்யஷே ததுபக மாதிப்ய —

ஜீவனுடன் பிராணன் ஒதுங்குகிறது –சாந்தோக்யம் -6-8-6-பிராணஸ் தேஜஸி-என்பதால் தேஜஸ் ஸில் ஒதுங்கும் என்பர் பூர்வ பஷி -அப்படி அல்ல
ப்ருஹத் -4-3-38-ஏவமேவ இமம் ஆத்மானம் அந்தகாலே சர்வே ப்ராணா அபி சமா யாந்தி -என்று
அரசனை வேலையாட்கள் பின் தொடர்வது போலே அனைத்து பிரானங்களும் ஜீவனை பின் தொடர்கின்றன –
இது போலே ப்ருஹத் -4-4-2-தம் உத்க்ராமந்தம் பிராண அநூதக்ரமாதி -என்று அந்திம காலத்தில் வெளிக் கிளம்பும் ஜீவனைத் தொடர்ந்து பிராணனும் கிளம்புகிறது
பிராணஸ் தேஜஸீ-மூலம் பிராணன் ஜீவன் உடன் சேர்ந்து கொண்டு அதன் பின்னர் தேஜஸ் ஸில் சேர்க்கிறது
யமுனை கங்கையில் சேர்ந்து கடலில் சேர்வது போலே

——————————————————————————————————–

அதிகரணம் -4-பூதாதிகரணம் -ஜீவனுடன் கூடிய பிராணன் மற்ற பூதங்களுடன் சேர்ந்த தேஜஸ் ஸில் சேர்க்கிறது என்று நிரூபிக்கப் படுகிறது –

—————————————————————————————

4-2-5-பூதேஷு தச்ச்ருதே –

அனைத்து பூதங்களிலும் சேர்க்கிறது தேஜஸ் ஸில் மட்டும் இல்லை -ப்ருஹத் -4-4-5-ப்ருதிவீ மய ஆபோ மய தேஜோ மய –
இதன் படி ஜீவனுடன் கூடிய பிராணன் பஞ்ச பூதங்களின் கூட்டத்தில் சென்று சேர்க்கிறது –

————————————————————————-

4-2-6-நைகஸ்மின் தர்சயதோ ஹி —

பூதங்கள் தனித் தனியே தங்கள் செயலைச் செய்யும் வலிமை அற்றவை –
சாந்தோக்யம் -6-3-2-3-அநேந ஜீவே நாத்மநா அநு ப்ரவச்ய நாம ரூபே வ்யாகரவாணி தாஸாம் த்ரிவிருத்தம் த்ரிவிருத்தம் எகைகாம் கரவாணி -என்று
ஜீவ சரீகனான என்னால் உள்ளே புகுந்து பெயர் மற்றும் சரீரம் அளிக்கப் படுகின்றன -அவற்றை மூன்று மூன்று என நான் சேர்க்கிறேன் -என்று
பஞ்சீ கரணம் செய்த பின்னரே இவற்றை அறியலாம் -இது போன்று ஸ்ரீ விஷ்ணு புராணமும்
நா நா வீர்யா ப்ருதக்பூதா தத தே சம்ஹதிம் விநா -நா சக்துவன் பிரஜா ஸ்ரஷ்டும் அசமாகம்ய க்ருத்சனச
சமேத்யே அந்யோந்ய சம்யோகம் பரஸ்பர சமாஸ்ரயா மஹதாத்யா விசேஷாந்தா ஹ்யண்டம் உத்பாதயந்தி தே -என்று
தேஜஸ் எனபது மற்ற பூதங்களுடன் ஒன்றாக உள்ள தேஜஸ் என்பதையே குறிப்பதாகக் கொண்டு பிராணன் அனைத்து பூதங்களுடன் சென்று ஒடுங்குவதாகவே கொள்ள வேண்டும் –
—————————————————————————————————————————————————–

அதிகரணம் -5-ஆஸ் ருத்யுபக்ரமாத் அதிகரணம் -வெளிக்கிளம்புதல் -உத்க்ராந்தி எனபது மோஷம் பெறுபவன் மற்றவர்கள் இருவருக்கும் மூர்த்தன்ய நாடியில் புகுவதற்கு முன்பே பொதுவானது என்று நிரூபிக்கப் படுகிறது –

————————————————————

4-2-7-சமா நா ச ஆஸ் ருத்யுபக்ரமாத் அம்ருதத்வம் ச அநு போஷ்ய —

ப்ரஹ்ம ஞானிக்கு உக்ராந்தி இல்லை என்பர் பூர்வ பஷி -அவன் சரீரத்தில் உள்ள போதே மோஷம் என்பதை கட உபநிஷத் -6-14/ப்ருஹத் -4-4-7-யதா சர்வே பிரமுச்யந்தே காமா யேச்ய ஹ்ருதி ஸ்திதா –அத மர்த்யோ அம்ருதோ பவதி அத்ர ப்ரஹ்ம சமஸ்நுதே-என்று
அனைத்து ஆசைகளும் விலகின உடனே மோஷம் அடைகிறான் -என்பதால் -அப்படி அல்ல -நாடி வழியாகவே சென்று மோஷம் அடைகிறான் என்பதை
கட -6-16/சாந்தோக்யம் -8-6-6-சதம் சைகா ந ஹ்ருதயச்ய நாட்ய தாஸாம் மூர்த்தானம் அபி நி ஸ்ருதைகா தயோர்த்தவமாயன் அம்ருதத்வமேதி விஷ்வக் அந்யா உத்க்ரமேண பவந்தி -என்றும்
ப்ருஹத் உபநிஷத் -நே ந பிரத்யோத நைஷ ஆத்மா நிஷ்காமதி சஷூஷோ வா மூர்த்நோ வான்யேப்யோ வா சரீர தேசேப்ய-என்பதால்
ப்ரஹ்ம ஞாநிக்குமூர்த்த்ன நாடி தலை மூலமும் மற்றவர்களுக்கு கண்கள் மற்ற தவாரங்கள் மூலமோ வெளிக் கிளம்புவதை உணர்த்தும்
அம்ருதோ இஹ பவதி -என்றது இந்த சரீரம் மற்றும் இந்த்ரியங்கள் இவனை விட்டு நீங்காமல் இருந்த போதிலும் புண்ய பாபங்கள் ஒட்டாத தன்மை மற்றும் அவற்றின் அழிவே அம்ருதத்வம் எனப்பட்டது
இத்தைக் கருத்தில் கொண்டே யதா சர்வே பிரமுச்யந்தே -அனைத்தும் நீங்கிய பின் என்றும் அத்ர ப்ரஹ்ம சமச் நுதே -இங்கேயே ப்ரஹ்மத்தை அடைகிறான் என்றது –

—————————————————————————————————–

4-2-8-ததா பீதே சம்சார வ்யபதேசாத் —

சம்சாரத்தில் உள்ள போதே மோஷம் -ப்ரஹ்மத்தை அடையும் வரையில் சம்சாரம் -அர்ச்சிராதி மார்க்கம் வழியாக ஸ்ரீ வைகுண்டத்தை அடைந்த பின்னரே புருஷார்த்தம்
அதுவரை சரீரத்தின் தொடர்புள்ள சம்சாரம் நீடிக்கும்
சாந்தோக்யம் -6-14-2-தஸ்ய தாவதேவ சிரம் யாவந்த விமோஷயே அத சம்பத்ச்யே-என்றும்
8-13-1-அஸ்வ இவ ரோமாணி விதூய பாபம் சந்திர இவ ராஹோர் முகாத் ப்ரமுச்ய தூத்வா சரீரம் அக்ருதம் க்ருதாத்மா ப்ரஹ்ம லோகம் அபி சம்பவாமி -என்றும் சொல்லிற்று –

————————————————————————————

4-2-9-ஸூ ஷ்மம் பிரமாணத ச ததா உபலப்தே –

ஸூ ஷ்ம சரீரம் தொடர்கிறது -அர்ச்சிராதி மார்க்கம் வலி செல்லும் உபாசகன் சந்தரனுடன் பேசுகிறான்
கௌஷீ தகீ -1-6-தம் பிரதிப்ரூயாத் –சத்யம் ப்ரூயாத் –சந்த்ரனிடம் பேச வேண்டும் உண்மையை மட்டும் கூற வேண்டும் என்பதால்
ஸூ ஷ்ம சரீரம் உள்ளது -சம்சார பந்தமும் உள்ளது என்று அறியலாம்

————————————————————————————-

4-2-10-நோப மர்த்தே ந அத

இந்த காரணங்களால் -கட -6-14/ப்ருஹத் -4-4-7-யதா சர்வே பிரமுச்யந்தே காமோ யேச்ய ஹ்ருதி ஸ்திதா அத மர்த்யோ அம்ருதோ பவதி அத்ர ப்ரஹ்ம சமச் நுதே -என்றது
பந்தங்கள் நீங்கி அதன் பின்னர் உண்டாகும் மோஷம் குறித்து ஏதும் கூற வில்லை

——————————————————————–

4-2-11-அஸ்ய ஏவ சோபபத்தே

ப்ரஹ்ம உபாசகனுக்கு ஸூ ஷ்ம உடல் உஷ்ணம் இருப்பதால் ப்ரஹ்ம உபாசகனுக்கும் உக்ராந்தி உண்டு என்கிறது –

————————————————————————–

4-2-12-பிரதிஷேதாத் இதி சேத ந சாரீராத் ஸ்பஷ்டோ ஹி ஏகேஷாம் —

ஞானி அல்லாதவனது உத்க்ராந்தியை ப்ருஹத் -4-4-2-ச ஏதா தேஜோ மாத்ரா சமப்யாததாநோ ஹ்ருதய மேவ அன்வக்ராமதி-என்று வாக்கு ஆத்மாவை அடைந்து ஆத்மா இதயத்தை அடைகிறது -என்றது
முன்னர் -4-4-1-தே ந பிரத்யோ தே ந ஆத்மா நிஷ்க்ராமதி தமுத்க்ராமந்தம் ப்ராணோ நுத்க்ராமதி -என்று
இதயத்தில் உள்ள த்வாரம் பிரகாசிக்கிறது -ப்ரஹ்மத்தால்பிரகாசம் பெற்ற த்வாரத்தைக் கொண்டு ஆத்மா வெளிக் கிளம்பும் போது பிராணனும் வெளிக் கிளம்பும் -என்றும்
இதை முடிக்கும் பொழுது -4-4-4-அந்யத் நவதரம் கல்யாண தரம் ரூபம் குருதே -என்று
பழைய பொன் மூலம் தட்டான் புது ஆபரணம் பண்ணுமா போலே ஆத்மா வேறு சரீரம் எடுக்கிறான் –
4-4-6-ப்ராப்யாந்தம் கர்மண தஸ்ய யத்கிஞ்ச இஹ க்ரோத்யயம் தஸ்மாத் லோகாத் புன -ஏதி அஸ்மை லோகாய கர்மணே இது து காமாய மா ந –ஸ்வர்க்கம் அனுபவித்து திரும்புகிறான் என்றும்
4-4-6-அத ஆகாமயமா ந யோ அகாம நிஷ்காம அப்தகாம ஆத்மகாம ந தஸ்ய பிராண உத்க்ராமந்தி ப்ரஹ்மைவ சந் ப்ரஹ்மாப்யேதி–ப்ரஹ்ம ஞானிக்கி பிராணன் வெளிக் கிளம்புவது இல்லை
இது போன்று ஆத்மபாதர் என்பவர் யாஜ்ஞவல்க்யர் இடம் கேட்டு பெற்ற பதிலிலும் பிராணன்கள் போவது இல்லை இங்கேயே சேர்க்கப் படுகின்றன என்பர்
இது தவறான வாதம் -இங்கு பிராணன் ஜீவன் இடம் இருந்து வெளிக் கிளம்புவது இல்லை என்றே சொல்லப்பட்டது சாரீரத்தில் இருந்து பிராணன் வெளிக் கிளம்புவது பற்றி இங்கும் ஏதும் கூறப்பட வில்லை
ஜீவன் அர்ச்சிராதி மார்க்கத்தில் சென்று பிரமத்தை அடைகிற வரை பிராணன் பிரிவது இல்லை என்பதையே
ந தஸ்ய ப்ராணா உத்க்ராமந்தி என்றது –

———————————————————————————

4-2-13-ச்மர்யதே ச

ச்ம்ருதியிலும் இப்படியே உள்ளது -யாஜ்ஞவல்க்ய ஸ்ம்ருதி -3-167-ஊர்த்வம் ஏக ஸ்திதஸ் தேஷாம் யோ பித்வா ஸூ ர்ய மண்டலம் ப்ரஹ்ம லோகம் அதிக்ரம்யதேந யாதி பராம் கதிம்-என்றது

—————————————————————-

அதிகரணம் -6-பர சம்பத்த்யதிகரணம் -தேஜஸ் போன்றவை பரமாத்மாவுடன் இணைகின்றன என்று நிரூபிக்கப் படுகிறது –

———————————————————————————————————————————–
4-2-14-தாநி பரே ததா ஹ்யாஹ–

பூத ஸூ ஷ்மங்கள் அனைத்தும் பரமாத்மாவுடனே சேருகின்றன – சாந்தோக்யம்-6-8-6-தேஜ பரஸ்யாம் தேவதாயாம்
இன்ப துன்பங்களால் வரும் களைப்பு உறங்கும் பொழுது போவது போலே சிருஷ்டி காலத்தில் அனுபவித்த இன்ப துன்பங்களின் களைப்பால்
இளைப்பாறும் பொருட்டு பிரளய காலத்தில் பரமாத்மாவிடம் சென்று மறைவது போன்று என்று கொள்ள வேண்டும்

———————————————————————————————-

அதிகரணம் -7-அவிபாகாதி கரணம் -பரமாத்மாவிடம் சேர்கின்றன ஒழிய லயம் அடைவது இல்லை

———————————————————————————–

4-2-15-அவிபாகோ வசநாத் —

பிரித்துக் கூற இயலாதபடி சேர்க்கை மட்டுமே -ஈபடியே கூறப்பட்டது -பூர்வ பஷி லயிப்பது போன்றே என்பர் உபாதான காரணமாக பர பிரமம் என்பதால்
இது தவறு லயம் என்றால் அழிவு
சம்பத்யதே -பிரிக்க இயலாதபடி சேர்க்கை என்றே கொள்ள வேண்டும் –

————————————————————————————

அதிகரணம் -8-ததோகோதி கரணம் -மூர்த்தன்ய நாடியின் மூலமே முக்தி அடைபவன் தன சரீரத்தை விட்டு வெளியே கிளம்புகிறான் என்று நிரூபிக்கப் படுகிறது

———————————–

4-2-16-ததோ கோக்ரஜ்வலநம் தத் பிரகாசி தத்வாரோ வித்யா சாமர்த்யாத் தத்தேஷ கஸ்ய நு ஸ்ம்ருதி யோகாச்ச ஹார்த்தா நுக்ருஹீத க்சதாதிகயா

ப்ரஹ்ம வித்யையால் மகிழ்ந்த எம்பெருமான் அருள -அவன் வசிக்கும் இதயம் ஒளி வீச -அந்த ஒளி மூலம் காண்பித்துக் கொடுக்கப்பட்ட நூற்று ஒன்றாவது நாடியான ஸூ ஷூம்நை நாடி மூலம் கிளம்புகிறான்
இந்த சிறப்பான உத்க்ராந்தி கட -6-16/சாந்தோக்யம் -8-6-6-சதம் சைகா ச ஹ்ருதயச்ய நாட்ய –தாஸாநாம் மூர்த்தா நாம் அபி நிஸ் ஸ்ருலதகா தயோர்த்தவாமாயன் அம்ருதத்வமேதி விஸ்வன் அந்யா உத்க்ரமேண பவந்தி -என்றது
மிகவும் நுண்ணியமான நாடி –
சர்வேஸ்வரனின் அனுக்ரஹம் அடியாகவே இவ்விதம் செல்கிறான் என்கிறது-

—————————————————————————————————————–
அதிகரணம் -9-ரச்ம்யநு சாராதி கரணம் -சூரியனின் கிரணங்கள் மூலமாகவே ப்ரஹ்ம ஞானி மேலே செல்கின்றான் என்று நிரூபிக்கப் படுகிறது
——————————————————————————————————————
4-2-17-ரச்ம்ய நு சாரீ-

சாந்தோக்யம் -8-6-5-அத யத்ர தஸ்மாத் சரீராத் உத்க்ராமதி அதி ஏதைரவி ரச்மிபி ஊர்த்வமாக்ரமதே -என்று
ஏவகாரத்தால் சூர்ய கிரணங்கள் வழியாகவே செல்கிறான் -இரவிலும் சூர்ய கிரணங்கள் உண்டே
நாடிகளுக்கும் சூர்ய கிரணங்களுக்கும் தொடர்பு -சாந்தோக்யம் -8-6-2-தத் யதா மஹா பத ஆத்த –உபௌ க்ராமௌ கச்சதி இமம் ச அமும் ச ஏவ மேவைத ஆதித்யச்ய ரச்மய உபௌ லோகு கச்சந்தி
இமம் ச அமும் ச அமுஷ்மாத் ஆதித்யான் ப்ரதா யந்தே தா ஆஸூ நாடீஷூ ஸ்ருப்தா
ஆப்யோ நாடீப்யோ ப்ரதா யந்தே தி அமுஷ்மின் ஆஹித்யே ஸ்ருப்தா -என்று சொல்லிற்று –
———————————————————————————————–
அதிகரணம் -10-நிசாதிகரணம் -இரவில் மரணம் அடையும் ப்ரஹ்ம ஞானி பிரமத்தை அடைவான் என்று நிரூபிக்கப் படுகிறது –
——————————————————————————————————————————————–
4-2-18-நிசி நேதி சேத் ந சம்பந்தச்ய யாவத்தேஹ பாவித்வாத் தர்சயதி ச –

இரவில் மரணம் அடைந்தாள் மோஷம் இல்லை எனபது சரியல்ல -கர்மத்தின் சம்பந்தம் சரீரம் உள்ள வரையிலும் தான்
பூர்வ பஷி திவா ச சுக்ல பஷ ச உத்தராயண மேவ ச முமூர்ஷதாம் பரசஸ்தா நி விபரீதம் து கர்ஹிதம் -என்றதே
அப்படி அல்ல -சாந்தோக்யம் -6-14-2-தஸ்ய தாவதேவ சிரம் யாவந்த விமோஷயே அத சம்பத்ச்யே -என்று
ப்ரஹ்ம ஞானிக்கு சரீரம் விடும் வரை மட்டுமே கால தாமதம் என்றதே-
———————————————————
அதிகரணம் -11-தஷிணாயநாதி கரணம் –தஷிணாய நத்தில் மரணம் அடைந்தாலும் ப்ரஹ்ம ப்ராப்தி உண்டு என்று நிரூபிக்கப் படுகிறது –
———————————————————————————-

4-2-19-அத ச அயநே அபி தஷிணே –

பூர்வ பஷி காட்டும் பிரமாணம் -மஹா நாராயண உபநிஷத் -25-1-அதயோ தஷிணே பிரமீயதே பித்ருணா மேவ மஹிமானம் கத்வா சந்திர மசஸ் சாயுஜ்யம் கச்சதி -என்றும்
ப்ருஹத் -6-2-16-யதா தத்பர்ய வௌதி-அது முடிந்த பின்னர் -5-10-5-அத ஏவமேவ அத்வானம் புநர் நிவர்த்தந்தே – சம்சார மண்டலத்துக்கே திரும்புகின்றனர்
மேலும் பீஷ்மர் போல்வார் உத்தராயண காலத்துக்கு காத்து இருந்தனரே என்பர்
இது தவறு சந்திர மண்டலம் செல்வது ஒய்வு எடுக்கவே -இத்தை மஹா நாராயண உபநிஷத் 24-2/25-1-தஸ்மாத் ப்ராஹ்மணோ மஹிமாநம் ஆப் நோதி-ஆகவே அவன் ப்ரஹ்மத்தை அடைகிறான் என்கிறது –
ஸ்ரீ கீதை -8-23-யத்ர காலே த்வ நாவ்ருத்திம் ஆவ்ருத்திம் சைவ யோகிந ப்ரயாதா யாந்தி தம் காலம் வஷ்யாமி பரதர்ஷப -என்றும்
8-24-அக்னிர் ஜ்யோதி ரஹஸ் சுக்ல ஷண் மாஸா உத்தராயணம் தத்ர ப்ரயாதா கச்சந்தி ப்ரஹ்ம ப்ரஹ்ம விதோ ஜநா
8-25-தூமோ ராத்ரி ததா கிருஷ்ண ஷண் மாஸா தஷிணாயநம் தத்ர சந்த்ரமசம் ஜ்யோதி யோகீ ப்ராப்ய நிவர்த்ததே -என்றும்
8-26-சுக்ல கிருஷ்ணே கதீ ஹ்யதே ஜகதச் சாச்வதே மதே ஏகயா யாத்ய நாவ்ருத்திம் அன்யயா ஆவர்த்ததே புந-என்றும்
தஷிணா யானத்தில் மரணம் அடைந்தால் ப்ரஹ்ம பிராப்தி இல்லை என்பர் பூர்வ பஷி –

——————————————————————————————————-

4-2-20-யோகிந ப்ரதி ச்மர்யேதே ச்மார்த்தே சைதே

இவை யோகிகள் குறித்து தேவயான மற்றும் பித்ருயான மார்க்கங்கள் பற்றி உணர்த்தவே கூறப்பட்டன –
இத்தையே ஸ்ரீ கீதையில் -8-26-நை தே ஸ்ருதீ பார்த்தஜாநத் யோகீ முஹ்யதி கச்சன தஸ்மாத் சர்வேஷூ காலேஷூ யோகயுக்தோ பாவர்ஜுனா-என்று
யோகிகள் மயங்க மாட்டார்கள் நீ அர்ச்சிராதி மார்க்கத்தை எண்ணி இருப்பாயாக என்றான்
8-24-அக்னிர் ஜ்யோதி -25-தூமோ ராத்ரி —என்பவை தேவயானம் பித்ரு யானம் பற்றியே குறிக்கும்
26-யத்ர காலேது -அபிமான தேவதையான ஆதி வாஹிகர்களை கால பதம் குறிக்கும்
ப்ருஹத் -6-2-15-தே அர்ச்சிஷம் அபி சம்பவந்தி -அவர்கள் அர்ச்சையில் செல்கின்றார்கள் என்பதால் அத்தையே எண்ணி இருப்பார்கள் –

———————————————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading