அம்ருத்யுஸ் சர்வத்ருக் சிம்ஹஸ் சந்தாதா சந்திமான் ஸ்திர
அஜோ துர்மர்ஷண்ஸ் சாஸ்தா விஸ்ருதாத்மா ஸூராரிஹா –22
குரூர் குருதாமோ தாம சத்யஸ் சத்ய பராக்ரம
நிமிஷோ அநிமிஷஸ் ஸ்ரக்வீ வாசஸ்பதி ருதாரதீ -23
அக்ரணீர் க்ராமணீஸ் ஸ்ரீ மான் நயாயோ நேதா ச்மரணீ
சஹச்ர மூர்த்தா விச்வாத்மா சஹச்ர ராஷஸ் சஹச்ர பாத் –24
ஆவர்த்தநோ நிவ்ருத்தாத்மா சம்வ்ருதஸ் சம்ப்ரமர்த்தன
அஹஸ் சம்வர்த்தோ வஹ்நி அநிலோ தரணீதர –25
ஸூ ப்ரசாத பிரசன்னாத்மா விஸ்வஸ்ருக் விஸ்வபுக் விபு
சத்கர்த்தா சத்க்ருதஸ் சாத்தூர் ஜஹ்நுர் நாராயணோ நர –26
அசங்க்யேயோ அப்ரமேயாத்மா விசிஷ்ஸ் சிஷ்டக்ருச் சுசி
சித்தார்த்தஸ் சித்த சங்கல்பஸ் சித்திதஸ் சித்தி சாதன –27-
————————————————————————————-
நரசிம்ஹ அவதாரம் ——–200-210——11 திரு நாமங்கள்
மத்ஸ்யாவதாரம் ———–211-225——15 திரு நாமங்கள்
உபநிஷத் திரு நாமங்கள் —226–246—–21 திரு நாமங்கள்
நாராயணன் ————–247–271—–25 திரு நாமங்கள் –
———————————————————————-
201-சர்வத்ருக்-
நண்பர் பகைவர் நடுநிலையாளர் ஆகியோரை அவரவர்க்கு உரிய முறையில் நடத்துதல் பொருட்டு
உள்ளபடி பார்த்து அறிபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
பிராணிகளின் புண்ய பாவங்கள் எல்லாவற்றையும் இயற்கையான அறிவினால் எப்போதும் பார்ப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
எல்லாவற்றையும் உள்ளபடி பார்ப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-
——————————————————————————————
202-சிம்ஹ –
மஹா நரசிம்ஹ ஸ்வரூபி -ஸ்ரீ பராசர பட்டர் –
நினைத்த மாத்திரத்தில் பாவங்களைப் போக்குபவர் -ஸ்ரீ சங்கரர் –
அருளைப் பொழிபவர் -சம்ஹரிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-
——————————————————————————————–
203-சந்தாதா –
பிரகலாதன் முதலிய பக்தர்களைத் தம்மிடம் சேர்த்துக் கொள்பவர் –
ஸ்ரீ ராமாவதாரத்தில் அஹல்யையை கௌதமரோடு சேர்த்து வைத்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
பிராணிகளை வினைப் பயங்களுடன் சேர்ப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
பிரஜைகளை நன்றாகத் தரிப்பவர் -போஷிப்பவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-
————————————————————-
204-சந்திமான் –
அவர்களுக்குத் தமது சேர்க்கை எக்காலமும் நீங்காமல் இருக்கச் செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
வினைப்பயன்களை அனுபவிப்பவரும் தாமாகவே இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –
ஸூக்ரீவன் விபீஷணன் -முதலியவர்களுடன் உடன்பட்டவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-
——————————————————————
205-ஸ்திர-
கூடியிருக்கையில் அபசாரங்கள் செய்தாலும் அன்பு மாறாமல் இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
எப்போதும் ஒரே தன்மையுடன் மாறுபாடு இல்லாமல் இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –
எப்பொழுதும் நிலையாக உள்ளவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-
—————————————————————–
206-அஜ –
தூணில் தோன்றியதால் பிறரைப் போல் பிறவாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
வ்யாபிப்பவர் -நடத்துபவர் –ஸ்ரீ சங்கரர் –
பிறப்பில்லாதவர்– ஸ்ரீ சத்ய சந்தர்-
————————————————————–
207-துர்மர்ஷண-
பகைவர்களால் தாங்க முடியாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
அசுரர்களால் அடக்குவதற்கு முடியாதவர் –ஸ்ரீ சங்கரர் –
எதிர்க்க முடியாதவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-
—————————————————————————–
208-சாஸ்தா –
இப்படி விரோதிகளை நன்கு தண்டித்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
வேதம் முதலியவற்றால் கட்டளையிட்டு நடத்துபவர் –ஸ்ரீ சங்கரர் –
உலகிற்குக் கட்டளை இடுபவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-
———————————————————————————
209- விஸ்ருதாத்மா –
யாவராலும் வியந்து கேட்க்கத் தக்க ஸ்ரீ நரசிம்ஹ திருவவதார சரித்ரத்தை யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
வேதத்தில் விசேஷமாகக் கூறப்பட்ட சத்யம் ஞானம் முதலிய லஷணம் யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –
புகழ் பெற்ற ஸ்வரூபம் யுடையவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-
———————————————————————————–
210-ஸூ ராரிஹா –
தேவர்களுக்கு விரோதியான ஹிரண்யன் மார்பைப் பிளந்து கொன்றவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
தேவர்களுக்கு விரோதிகளை அழிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –
தேவர்களின் பகைவர்களான அசுரர்களை அழிப்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-
————————————————————————–
211-குருர் குருதம-
மத்ச்யாவதாரத்தில் எல்லா வித்யைகளையும் பிரமன் முதலியவர்களுக்கு உபதேசித்தமையால் ஆசார்யர்களுக்கும் ஆசார்யர் -ஸ்ரீ பராசர பட்டர் –
குரு-எல்லோரையும் படைத்தவர் -எல்லா வித்யைகளையும் உபதேசித்தவர் –குருதம -பிரமன் முதலியவர்க்கும்
ப்ரஹ்ம வித்யையைக் கொடுத்தவர் -இரண்டு திரு நாமங்கள் –ஸ்ரீ சங்கரர் –
குரு -கற்பிப்பவர் -குருதம -மேலான ஆசார்யன் -இரண்டு திரு நாமங்கள் -பிரம்மா முதலியவர்களால்
விரும்பப் படுபவர் -பிருஹஸ்பதிக்கு ஞானம் அளித்தவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-
———————————————————————————–
212-தாம –
பிரளயத்தில் அழிந்த சராசரங்களின் வித்துக்களுக்கு ஆதாரமான பூமி என்னும் கப்பலைத் தாங்கி நடத்துபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
ஜ்யோதிஸ் ரூபமானவர் -எல்லா விருப்பங்களுக்கும் இருப்பிடமானவர் –ஸ்ரீ சங்கரர் –
ஒளிவடிவானவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-
——————————————————————————-
213-சத்ய –
பிரளய காலத்தில் தம்மை அடைந்த மனு முதலிய சத்துக்களுக்கு உபகரித்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
சத்திய வசனம் என்னும் தர்ம ஸ்வரூபியாக இருப்பவர் -சத்யத்தின் சத்யமானவர் –ஸ்ரீ சங்கரர் –
உலகைப் படைப்பவர் -நற் கதியைத் தருபவர்– ஸ்ரீ சத்ய சந்தர்-
———————————————————————————-
214-சத்ய பராக்ரம-
மனு முதலியவர்கள் விஷயத்தில் தம் சக்தியை வீண் போகாமல் செய்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
பழுது படாத பராக்ரமத்தை உடையவர் –ஸ்ரீ சங்கரர் –
உண்மையான பராக்கிரமம் உள்ளவர் -சத்தியவசனம் உள்ள பலிச் சக்ரவர்த்தியின் மீது திருவடிகளை
நன்றாக வைத்தவர் –வாயு பிரமன் சூர்யன் ஆகியோருக்கும் பராக்கிரமம் அருள்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-
—————————————————————————–
215-நிமிஷ –
சாதுக்களுக்கு விரோதிகளை கடாஷியாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
யோக நித்ரையினால் மூடிய இரு கண்கள் யுடையவர் -ஸ்ரீ சங்கரர் –
நிமி என்ற அரசனுக்கு பலம் அளித்தவர் -நிமிஷம் என்னும் காலத்தை நியமித்து நடத்துபவர் -அசுரர்களை எதிர்ப்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-
————————————————————————-
216-அநிமிஷ-
சாதுக்களை இடைவிடாமல் கடாஷிப்பவர் -இமை கொட்டாத மீன் உருக் கொண்டவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
எப்போதும் விழித்து இருக்கும் ஆத்ம ஸ்வரூபம் உடையவர் மீன் உருவில் அல்லது ஆத்ம ரூபத்தில் இமையாதவர் -கண் மூடாதவர் -ஸ்ரீ சங்கரர் –
வாயு பக்தர்களுக்கு அருகில் இருப்பவர் -பக்தர்களை எப்போதும் தயையுடன் பார்ப்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-
——————————————————————–
217-ஸ்ரக்வீ-
மீன் வடிவிலும் பரத்வ அடையாளமாக வைஜயந்தி மாலையை யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
பூத தந்மாத்ரா ரூபமான வைஜயந்தி என்னும் மாலையை எப்போதும் தரித்தவர் -ஸ்ரீ சங்கரர் –
மாலை அணிந்தவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-
——————————————————————–
218-வாசஸ்பதி –
மத்ஸ்ய புராணத்தில் வேதார்த்தத்தை வெளியிட்டவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
வேத வாக்யங்களுக்குப் பதியாய் இருப்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-
——————————————————————
219-உதாரதீ –
யாவரும் ஆஸ்ரயிக்கத் தக்க ஞானம் உள்ளவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
வித்யைகளுக்கும் அதிபதி -எல்லாவற்றையும் அறியும் ஞானம் உள்ளவர் -வாசஸ்பதிருதாரதீ-என்று ஒரே திரு நாமம் –ஸ்ரீ சங்கரர் –
உயர்ந்த தேவியான லஷ்மிக்கு ஞானம் அருள்பவர் -உதாரமாய் -தோஷமற்ற ஞானம் உடையவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-
————————————————————————
220-அக்ரணீ-
பக்தர்களை உயர்பதம் ஆகிய மோஷத்திற்கு அழைத்துச் செல்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
முமுஷூக்களை மேலான பதத்துக்கு நடத்துபவர் –ஸ்ரீ சங்கரர் –
முதலில் நடத்துபவர்– ஸ்ரீ சத்ய சந்தர்-
———————————————————————
221- க்ராமணீ-
அந்த பரமபதத்தில் நித்ய ஸூரிகள் கூட்டத்தை நடத்துபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
பிராணிகள் கூட்டத்தை -சமூஹத்தை நடத்துபவர் –ஸ்ரீ சங்கரர் –
உயிரினங்களின் கூட்டத்தை நடத்த்பவர்– ஸ்ரீ சத்ய சந்தர்-
———————————————————————–
222-ஸ்ரீ மான் –
பரத்வ சின்னமான தாமரைக் கண்களை மத்ஸ்ய திருவவதாரத்திலும் உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
எல்லாவற்றிற்கும் மேம்பட்ட ஒளியுள்ளவர்–ஸ்ரீ சங்கரர் –
எப்போதும் ஸ்ரீ லஷ்மியுடன் கூடியிருப்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-
—————————————————————————
223- நியாய –
பக்தர்களுக்குத் தவறு வாராமல் இருக்கும்படி பொருத்தமாக இருப்பதைச் செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
பிரமாணங்களுக்கு உதவியான தர்க்கமாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
நிறைந்த லாபம் உள்ளவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-
————————————————————————————-
224-நேதா –
பக்தர்கள் இட்ட வேலையைச் செய்பவர் -நிர்வகிக்கும் குணமுடையவர் –
கடலில் மூழ்கி மஹாத்மாக்களை மீட்பவர் எனபது பொருத்தமே அன்றோ -ஸ்ரீ பராசர பட்டர் –
உலக யந்திரத்தை நடத்துபவர் -ஸ்ரீ சங்கரர் –
அவரவர்க்கு உரிய பலன்களைத் தருபவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-
——————————————————————————-
225-சமீரண-
பக்தர்கள் விரும்பத்தக்க செயல்களை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
வாயு ரூபியாக அனைத்தையும் அசைவிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –
வாயுவிற்கு ஸூகத்தைத் தருபவர் -ஸ்ரீ லஷ்மி தேவையைப் போற்றும் சப்தத்திற்கு விஷயமாக இருப்பவர் –
அனைத்தையும் நன்றாகத் தூண்டுபவர்- ஸ்ரீ சத்ய சந்தர்-
——————————————————————————————
226-சஹஸ்ரமூர்த்தா –
ஆயிரக் கணக்கான தலைகளை உடையவர் -ஞானத்தின் வடிவமான மத்ஸ்யாவதாரத்தில் வெளிப்படுத்தப் பட்டவையும்
புருஷ ஸூக்தம் முதலிய பர வித்யைகளில் கூறப் பட்டவையுமான சஹஸ்ரமூர்த்தா முதலிய திரு நாமங்கள் கூறப் படுகின்றன –
ஆயிரம் தலைகளை உடையவர் -தலை எனபது கண் பாதம் ஞானம் செயல்கள் உபகரணங்கள் முதலிய வற்றையும் குறிக்கும் –
ஆயிரம் -எண்ணற்றவை என்ற பொருளில் -ஸ்ரீ பராசர பட்டர் –
ஆயிரம் தலைகளை உடையவர் –ஸ்ரீ சங்கரர் –
ஆயிரக் கணக்கான தலைகளை உடையவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-
———————————————————————————————-
227-விச்வாத்மா
ஞான சக்திகளினால் உலகு எங்கும் பரவி இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
உலகிற்கு ஆத்மாவாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –
உலகிற்குக் கட்டளை இடுபவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-
————————————————————————————-
228-சஹஸ்ராஷா-
ஆயிரக் கணக்கான கண்களை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
ஆயிரம் கண்களை உடையவர் –ஸ்ரீ சங்கரர் –
ஆயிரக் கணக்கான கண்கள் உள்ளவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-
————————————————————————————–
229-சஹஸ்ரபாத் –
ஆயிரக் கணக்கான பாதங்களை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
ஆயிரம் கால்களை உடையவர் –ஸ்ரீ சங்கரர் –
ஆயிரக் கணக்கான பாதங்களை உடையவர் –
———————————————————————————–
230-ஆவர்த்தன –
ஏற்றச் சாலைப் போல் சாம்சாரத்தைத் திருப்புவர்-ஸ்ரீ பராசர பட்டர் –
சம்சார சக்ரத்தை திருப்பும் இயல்வுடையவர் –ஸ்ரீ சங்கரர் –
நதிகளில் உள்ள நீரில் சூழல்களை உண்டாக்குபவர் -எல்லா இடத்திலும் இருப்பவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-
——————————————————————————–
231-நிவ்ருத்தாத்மா –
ப்ரக்ருதிக்கு மூன்று மடங்கான நித்ய விபூதியில் இருப்பதாகிய தம் ஸ்வரூபம் பிரவ்ருதியை கடந்ததாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
சம்சார பந்தம் இல்லாத ஸ்வரூபம் உடையவர் –ஸ்ரீ சங்கரர் –
பிரளயத்தில் ஆத்மாக்கள் திரும்பும்படி செய்பவர் -அநிவ்ருத்தாத்மா-அழியாத சரீரம் உடையவர் -என்றுமாம் – ஸ்ரீ சத்ய சந்தர்-
——————————————————————————-
232-சம்வ்ருத –
தாமஸ குணத்தினால் அறிவு மழுங்கிய வர்களுக்கு மறைந்து இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
அவித்யையால் மறைக்கப் பட்டவர் –ஸ்ரீ சங்கரர் –
நற் குணங்களுடன் கூடியவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-
————————————————————————–
233-சம்ப்ரமர்த்த-
தம்மை உபாசிப்பவர்களுக்கு மாயையை அழிப்பவர்-ஸ்ரீ பராசர பட்டர் –
பகலை நன்றாக உண்டாக்கும் சூர்யன் –ஸ்ரீ சங்கரர் –
அசுரர்களை நன்கு அழிப்பவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-
————————————————————————-
234-அஹஸ் சம்வர்த்தக –
பகல் முதலிய கால சக்ரத்தை உருட்டுபவர் -முக் காலமானது லீலைக்கு உபகரணம் -ஷட்பாவ
விகாரம் -பிரகிருதி புருஷன் சேர்ந்து -உழன்று பிரிந்து -இருக்க காரணம் -ஸ்ரீ பராசர பட்டர் –
பகலை நன்றாக உண்டாக்கும் சூர்யன் –ஸ்ரீ சங்கரர் –
நாள்களை நடத்துபவர் -பக்தர்களை கைவிடாதவர் -உலகச் சுழற்சிக்கு முழு ஆதாரமாக இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-
———————————————————————-
235-வஹ்நி-
தேச வடிவில் உலகத் தாங்குபவர் -பரமபதம் -முதன்மை அதில் -லீலா விபூதி -அடுத்து –
இங்கே இது என்கிற ஞானத்திற்கு காரணம் -இவை பத்தர் முக்தர் நித்யர் மூவகைச் சேதனர்க்கும் அவன் தந்ததே -ஸ்ரீ பராசர பட்டர் –
ஹவிஸ் ஸூக்களைத் தாங்கும் அக்னியாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
உலகை நடத்துபவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-
—————————————————————————————-
236-அநில-
இப்படி யாவரையும் உய்விப்பவர் -இதனுடைய காலமாத்ரமே காற்று என்று பிரசித்தமானது -ஸ்ரீ பராசர பட்டர் –
அநாதி யானவர் -ஒன்றையும் ஆதாரமாகக் கொள்ளாதவர் -ஸ்ரீ சங்கரர் –
தனக்கு அடைக்கலம் ஒன்றும் தேவை இல்லாதவர் -தமக்கு பூமி ஆதாரமாக இல்லாமல் தாமே பூமிக்கு ஆதாரமானவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-
——————————————————————————————–
237-தரணீதர-
அனைத்தையும் தாங்கும் பூமியையும் தாங்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
ஆதிசேஷன் வடிவில் பூமியைத் தாங்குபவர் -ஸ்ரீ சங்கரர் –
பூமியைத் தாங்குபவர் -சிறந்த கோவர்த்தன மலையைத் தாங்குபவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-
—————————————————————————-
238-ஸூ ப்ரஸாத-
தம்மை அடைந்தவர்களுக்கு அருள் புரிபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
அபகாரம் செய்த சிசுபாலன் முதலியோர்க்கும் மோஷம் அளிப்பவர் -மங்களகரமான அருளை உடையவர் -ஸ்ரீ சங்கரர்
மங்கள கரமான மோஷத்தை அளிப்பவர் -மங்கள கரமான அருள் புரிவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-
——————————————————————————–
239-பிரசன்நாத்மா-
அவாப்த சமஸ்த காமன் -விருப்பு வெறுப்புக்களால் கலக்கம் அற்ற தெளிந்த மனம் உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
குறைவாளராயும் -கருமி யாவும் இருப்பவன் தானே ஆராதிப்பதற்கு அரியவன் –
ரஜோகுண தமோ குணங்களினால் கலங்காத மனம் உடையவர் -அருளை ஸ்வபாவமாக உடையவர் -அவாப்த சமஸ்த காமன் – ஸ்ரீ சத்ய சங்கரர்-
தெளிந்த மனம் உள்ளவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-
——————————————————————————–
240-விஸ்வஸ்ருக்-
குணம் குற்றம் பாராமல் உயிர்கள் உய்வதைக் கருதி உலகைப் படைப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
உலகத் தாங்குபவர் -விஸ்வத்ருத்-என்ற பாடம் -ஸ்ரீ சங்கரர் –
உலகில் துணிவுள்ளவர் -விஸ்வத்ருத்-என்ற பாடம்- ஸ்ரீ சத்ய சந்தர்-
————————————————————————————–
241-விஸ்வபுக்விபு-
உலகங்களை வியாபித்துக் காப்பவர் -ஒரே திரு நாமம் -ஸ்ரீ பராசர பட்டர் –
உலகை அழிக்கும் போது உண்பவர் -காப்பவர் –
ஹிரண்ய கர்ப்பர்-முதலிய பல உருவங்களாய் இருப்பவர் -இரண்டு திரு நாமங்கள் –ஸ்ரீ சங்கரர் –
உலகை அழிக்கும் போது உண்பவர் -காப்பவர் –
ஹிரண்ய கர்ப்பர்-முதலிய பல உருவங்களைக் கொண்டு -பரவி – இருப்பவர் -இரண்டு திரு நாமங்கள் -ஸ்ரீ சத்ய சந்தர்-
——————————————————————————
242-சத்கர்த்தா –
சத் புருஷர்களைப் பூஜிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
சத்காரம் செய்பவர் -பூஜிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –
உண்மையான உலகுக்குக் கர்த்தா -துன்பம் முதலியன அற்றவன் -அனைத்து செயல்களையும் செய்பவன் –
அழிவில் விருப்பமுள்ள அசுரர்களை அழிப்பவன்-ஸ்ரீ சத்ய சந்தர்-
—————————————————————————–
243-சத்க்ருத –
ஈடுபாட்டுடன் கிஞ்சித் கரித்த சிறிய பொருள்களையும் தம் மகிமைக்குத் தக்கவற்றைப் போலே ஏற்று மகிழ்பவர்–ஸ்ரீ பராசர பட்டர் –
பூஜிக்கப் படுபவர்களாலும் பூஜிக்கப் படுபவர் –ஸ்ரீ சங்கரர் –
உண்மையான செயல்களை உடையவர் -சத்க்ருதி -என்று பாடம் -பிரத்யும்னனாக கருதி என்பவளை மனைவியாக அடைந்தவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-
———————————————————————-
244-சாது –
அடியவர் விரும்பியபடி தூது சென்றும் தேர் ஒட்டியும் போன்ற வற்றைச் செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
நியாமமாக நடப்பவர் -எல்லாவற்றையும் சாதிப்பவர் -சாதனம் எதுவும் இல்லாமல் சாதிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –
மற்றவர்களின் கார்யங்களை சாதித்துக் கொடுப்பவர்-ஸ்ரீ சத்ய சந்தர்-
—————————————————————————–
245-ஜஹ்நு –
அடியவர் அல்லாதவர்க்கு தம் மகிமையை மறைப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
சம்ஹார காலத்தில் எல்லாவற்றையும் மறைப்பவர் -பக்தர் அல்லாதவரைக் கை விடுபவர் –
பக்தர்களை உயர்ந்த கதிக்கு அழைத்துச் செல்பவர் –ஸ்ரீ சங்கரர் –
அயோக்யர்களைக் கைவிடுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-
———————————————————————————
246- நாராயண –
உபநிஷத்துக்களில் சாகைகள் தோறும் ஒதப்படுகிற பரம்பொருளின் தனித் திரு நாமம் –
மிக ரஹசயமாகையால் விரித்துச் சொல்ல வில்லை -ஸ்ரீ பராசர பட்டர் –
நரர் -ஜீவர்களுக்கு பிரளயத்தில் ஆதாரமானவர் -நர -ஆத்மா -அதில் இருந்து உண்டான ஆகாசம் முதலியவை நாரங்கள் -அவற்றில் காரணமாக
வ்யாபிப்பவர் -அதனால் அவற்றைத் தமக்கு இருப்பிடமாக உடையவர் -பிரளய காலத்தில் ஜீவர்கள் சேருமிடமாய் இருப்பவர் -நரன் இடத்தில்
இருந்து யுண்டான தன்னார் -நாரம் -அத்தை இருப்பிடமாகக் கொண்டவர் நாராயணன் -மனு ஸ்ம்ருதி -நாராயணாய நம-
என்ற மந்த்ரமே கோரமான சம்சார விஷத்தை யுடனே போக்க வல்லது -இதை நான் மிக உயர்ந்த குரலில் கையைத் தூக்கிக்
கூறுகிறேன் -முனிவர்களே பணிவுடன் கேளுங்கள் -என்று ஸ்ரீ நரசிம்ஹ புராணத்தில் கூறப் பட்டுள்ளது – -ஸ்ரீ சங்கரர் –
குணங்களுக்கு இருப்பிடமானவர் -தோஷங்களுக்கு இருப்பிடம் அல்லாதவர் -அழிவற்றவர் -அனுபவிக்கத் தக்கவர் -தோஷங்கள் அற்ற
வேதங்களால் அறியப்படுபவர் -ஞானத்திற்குப் புகளிடமானவர் -முக்தர்கள் அடையும் இடமானவர் -நாரங்களின் கூட்டங்களுக்கு
வணங்கத் தக்க புகலிடமானவர் -முக்ய ப்ரானனான வாயு தேவருக்கு புகலிடமானவர்-
நாரம் என்னும் ஜகத்துக்கு ஆச்ரயமாக இருப்பவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-
——————————————————————
247-நர –
சேதன அசேதன விபூதிகள் அழியாமல் இருக்கப் பெற்றவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
எல்லாவற்றையும் நடத்துபவர் -ஸ்ரீ சங்கரர் –
மாறுதல் அற்றவர் -அழிவற்றவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-
——————————————————————-
248-அசங்க்யேய-
எண்ணில் அடங்காத சேதன அசேதனங்களை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
அளவிடக் கூடிய நாம ரூப பேதங்கள் அற்றவர் -ஸ்ரீ சங்கரர் –
எண்ண முடியாத குணங்களை யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-
——————————————————————————
249-அப்ரமேயாத்மா –
எண்ணில் அடங்காப் பொருள்கள் எல்லாவற்றிலும் உள்ளும் புறமும் பரவியவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
அளவிட்டறிய முடியாத ஸ்வரூபம் உடையவர் -ஸ்ரீ சங்கரர் –
அளவிட்டறிய முடியாத ஸ்வரூப தேக ஸ்வ பாவங்களை யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-
—————————————————————————
250-விசிஷ்ட –
அவை எல்லாவற்றையும் விடத் தனிச் சிறப்பு மிக்கவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
எல்லாவற்றிற்கும் மேலானவர் -ஸ்ரீ சங்கரர் –
பிரமன் முதலியவர்களுக்கும் காரணமானவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-
————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply