ப்ராஜிஷ்ணுர் போஜனம் போக்தா சாஹிஷ்ணுர் ஜகதாதிஜ
அனகோ விஜயோ ஜேதா விச்வயோனி புனர்வஸூ –16
உபேந்த்ரோ வாமன ப்ராம் ஸூ ர மோகஸ் ஸூ சி ரூர்ஜித
அதீந்த்ரஸ் சங்க்ரஹச் சர்கோ த்ருதாத்மா நியமோ யம –17
வேத்யோ வைத்யஸ் சதாயோகீ வீரஹா மாதவோ மது
அதீந்த்ரியோ மஹா மாயோ மஹோத் சாஹோ மஹா பல –18
மஹா புத்திர் மஹா வீர்யோ மஹா சக்திர் மஹாத் யுதி
அநிர்தேச்யவபுஸ் ஸ்ரீ மான் அமேயாத்மா மஹாத்ரித்ருத்–19
மஹேஷ் வாஸோ மஹீ பர்த்தா ஸ்ரீ நிவாசஸ் சதாம்கதி
அநிருத்தஸ் ஸூராநந்தோ கோவிந்தோ கோவிதாம்பதி–20-
மரீசிர் தமநோ ஹம்சஸ் ஸூ பர்ணோ புஜகோத்தம
ஹிரண்ய நாபஸ் ஸூ தபா பத்ம நாப ப்ரஜாபதி–21
அம்ருத்யுஸ் சர்வத்ருக் சிம்ஹஸ் சந்தாதா சந்திமான் ஸ்திர
அஜோ துர்மர்ஷண்ஸ் சாஸ்தா விஸ்ருதாத்மா ஸூராரிஹா –22-
———————————————————————
விஷ்ணு —————-147-170——–24 திரு நாமங்கள்
ஷாட்குண்யம் ———–171-187———17 திரு நாமங்கள்
ஹம்சாவதாரம் ———-188-194———-7 திரு நாமங்கள்
பத்ம நாபன் ————195-199———-5 திரு நாமங்கள் –
நரசிம்ஹ அவதாரம் ——200-210———11 திரு நாமங்கள்
———————————————————————-
151-விஸ்வ யோநி –
அந்த இருவரையும் கொண்டு நடத்தப்படும் காரிய உலகு அனைத்துக்கும் காரணமாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
உலகத்தை ஆதாரமாக உடையவர் -உலக ரூபியாகவும் காரண ரூபியாகவும் இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
கருடன் மீது அமர்ந்து சஞ்சரிப்பவர் -காரணம் அற்றவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –
————————————————————————————-
152-புநர்வஸூ –
அந்த தேவர்கள் இடத்தில் அந்தர்யாமியாக வசிப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
உடல்களில் மாறி மாறி ஜீவாத்மாவாக வசிப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
மீண்டும் மீண்டும் செல்வம் அளிபபவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –
————————————————————————————
153-உபேந்திர –
பன்னிரண்டு ஆத்யர்களில் இந்தரனுக்கு இளையவராக திருவவதரித்தவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
இந்த்ரனுக்குத் தம்பியாக இருந்தவர் -அல்லது -இந்தரனுக்கு மேற்பட்டவர் –ஸ்ரீ சங்கரர் –
இந்த்ரனுக்குத் தம்பியாக அவதரித்தவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –
————————————————————————————-
154-வாமன –
இந்த்ரனைக் காக்க மகாபலியின் யாகத்தில் வாமனனாய்ச் சென்றவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
மகாபலியிடம் யாசகனாய்ச் சென்றவர் -நன்கு துதிக்கத் தக்கவர் –ஸ்ரீ சங்கரர் –
பகைவர்களை நரகத்திற்கு அனுப்புவர் -அழகிய வஸ்துக்களை அருள்பவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –
————————————————————————————–
155-ப்ராம்ஸூ –
திரிவிக்ரம திருவவதாரம் செய்த போது எங்கும் பரந்தவர்–ஸ்ரீ பராசர பட்டர் –
மூ உலகங்களையும் அளந்த பொழுது உயர்ந்தவர் –ஸ்ரீ சங்கரர் –
திருவிக்ரம ரூபத்தில் உயர்ந்தவராக இருப்பவர் -உயர்ந்த பிரகாசம் யுடையவர் – ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –
————————————————————————————–
156-அமோக –
இந்த்ரன் மகாபலி ஆகிய இருவருக்கும் பழுது படாத அனுக்ரஹம் செய்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
வீண் போகாத செய்கைகளை யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –
வீணாகாத சங்கல்பத்தை -அல்லது -வார்த்தையை -யுடையவர் — ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –
—————————————————————————————
157-ஸூசி –
இப்படிப் பட்ட உபகாரங்களுக்கு பிரதி உபகாரம் எதிர்பாராத சுத்தி யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
தம்மை த்யானிப்பவர் -துதிப்பவர் -அர்ச்சிப்பவர்களை பரிசுத்தர் ஆக்குபவர் –ஸ்ரீ சங்கரர் –
பரிசுத்தமானவர் – ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –
————————————————————————————–
158-ஊர்ஜித-
நமுசி முதலிய பகைவர்களை அடக்கத் தக்க வலிமை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
மிக்க வலிமை யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –
ஆஹாரம் கொடுப்பவர்களுக்கு அது வியாபிக்க அருள் புரிபவர் – ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –
————————————————————————————
159-அதீந்திர –
இந்த்ரனுக்குத் தம்பியாக இருந்த போதும் ஆளுமையினாலும் அதற்குரிய செயல்களாலும் அவனுக்கு மேற்பட்டவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
இயற்கையாகவே ஞான பல ஐஸ்வர்யங்களை உடைமையால் இந்தரனுக்கு மேற்பட்டவர் –ஸ்ரீ சங்கரர் –
இந்திரனைக் காட்டிலும் மேம்பட்டவர் — ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –
————————————————————————————
160-சங்க்ரஹ-
பக்தர்களால் எளிதில் அடையப் பெறுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
பிரளய காலத்தில் அனைவரையும் அழிப்பவர்–ஸ்ரீ சங்கரர் –
பக்தர்களை ஏற்றுக் கொள்கிறவர் -சத்பாத்ரங்களை உண்டாக்குபவர் -சிம்சுமார ரூபத்தில் சூரியன் முதலிய கிரஹங்களுக்கு
அடையும் இடமாக இருப்பவர் — ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –
—————————————————————————————-
161-சர்க்க –
திரிவிக்ரமாவதாரத்தில் தம் திருவடித் தாமரைகளை எளிதில் பற்றும்படி தாமே அளிபபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
சிருஷ்டிக்கப் பட்ட பிரபஞ்ச ரூபத்தை உடையவர் -அல்லது சிருஷ்டி கர்த்தா –ஸ்ரீ சங்கரர் –
படைப்பவர் — ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –
——————————————————————–
162-த்ருதாத்மா –
இப்படி தன்னைத் தருவதனால் ஆத்மாக்களை உய்விப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
பிறப்பு முதலிய மாறுபாடு இன்றி இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –
தைர்யமான மனம் உள்ளவர் -ஆத்மாக்களைத் தரிப்பவர் -ரிஷிகளின் மனங்களுக்கு ஆதாரமாக இருப்பவர் — ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –
———————————————————————
163-நியம –
பகைவர்களான பலி முதலியவர்களை அடக்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
அவரவர்க்கு உரிய அதிகாரங்களில் நியமிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –
நியமிப்பவர் — ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –
———————————————————————-
164-யம –
அந்தர்யாமியாக இருந்து எல்லாவற்றையும் நடத்துபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
உள்ளே இருந்து அடக்குபவர் –ஸ்ரீ சங்கரர் –
தனக்குக் கட்டளை இடுபவர் இல்லாதவர் –
அயமா என்று பாடம் கொண்டால் சுபங்களைத் தரும் விதிகளை அறிபவர் — ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –
————————————————————————-
165-வேத்ய –
இப்படி திருவவதரித்து புலன்களுக்கு எட்டாத மகிமைகளை எல்லாரும் எளிதில் அறியும்படி இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
மோஷத்தை விரும்புகிறவர்களால் அறியத் தக்கவர் –ஸ்ரீ சங்கரர் –
அறியப்படுபவர் — ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –
————————————————————————–
166-வைத்ய-
தம்மைச் சிந்திப்பவர்க்கு பிறப்பு இறப்பு முதலியவற்றைப் போக்கும் வகை யறிந்தவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
எல்லா வித்யைகளையும் அறிந்தவர் –ஸ்ரீ சங்கரர் –
உலக வாழ்வு என்னும் நோயைத் தவிர்ப்பவர் –அனைத்து வித்யைகளாலும் அறியப்படுபவர் — ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –
————————————————————————-
167-சதா யோகீ-
இப்படி பக்தர்களுடைய பிறப்பு இறப்பு அறுப்பதில் எப்போதும் ஊக்கம் உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
எப்போதும் பிரகாசிக்கும் ஸ்வரூபம் உடையவர் -ஸ்ரீ சங்கரர் –
கபிலர் முதலிய ரூபங்களினால் எப்போதும் யோகத்தில் இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –
—————————————————————————
168-வீரஹா –
குதர்க்க வாதங்களால் பரமாத்ம ஞானத்தைக் கெடுக்கும் துர்வாதிகளை அழிப்பவர்-ஸ்ரீ பராசர பட்டர் –
தர்மத்தைக் காப்பதற்காக அசுர வீரர்களை அழிப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
கருடனிலும் வாயுவிலும் செல்பவர் -முக்ய பிராணனின் பகைவர்களை அழிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –
—————————————————————————
169-மாதவ –
மா -எனப்படும் பரமாத்ம ஞானத்தைக் கொடுப்பவர் -மா -மௌனம் /த-த்யானம் -வ -யோகம் -இவற்றுடன் கூடினவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
வித்யைக்குத் தலைவர் –ஸ்ரீ சங்கரர் –
அசைவற்றவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –
————————————————————————-
170-மது –
பக்தர்களுக்குத் தேன் போல் இனியவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
தேன் போல் ப்ரீதியை உண்டாக்குபவர் -ஸ்ரீ சங்கரர் –
சுக வடிவாய் இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –
——————————————————————————
171-அதீந்த்ரிய –
புலன்களுக்கு எட்டாதவர் -இனி பரம் வ்யூஹம் விபவம் மூன்று வகை நிலைகளுக்கும் முக்யமான
ஆறு குணங்களைக் கூறுவதற்காக தேன் கடல் போன்ற பரமாத்ம ஸ்வரூபம் தெளிவிக்கப் படுகிறது -ஸ்ரீ பராசர பட்டர் —
சப்தம் முதலிய குணங்கள் இல்லாமையால் புலன்களுக்கு எட்டாதவர் -ஸ்ரீ சங்கரர் –
இந்திரியங்களுக்கு எட்டாதவர் -பல இந்திரியங்களின் சக்தியுடையவர் –ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –
—————————————————————————————-
172- மஹாமாய-
தன்னைச் சரணம் அடையாதவர்களுக்கு திரை போல் ஸ்வரூபத்தை மறைக்கும் மாயையை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
மாயை செய்பவர்களுக்கும் மாயையை உண்டாக்குவதால் யாராலும் கடக்க முடியாத மாயை உடையவர் –ஸ்ரீ சங்கரர் –
உயர்ந்தவளான லஷ்மியின் மணவாளன் -உயர்ந்த ஞானிகளால் பிரார்த்திக்கப் படுபவர் –
கபடம் இல்லாதவர் -உயர்ந்த இச்சை உடையவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –
——————————————————————————————–
173-மஹோத்சாஹ-
எல்லாவற்றையும் படைப்பதாகிய ஈஸ்வர சக்தி மிகப் பெரிதாக இருப்பவர் -ஞான மயமாக இருந்த போதிலும் செயல் படாதவராய்-
சோம்பலினால் உதாசீனராய் இருப்பவர் என்று சாங்க்ய மதத்தில் கூறப்பட்ட ஈஸ்வரனை நிரசித்து ஐஸ்வர்யம் குணம் கூறப்படுகிறது –
ஸ்வா தந்த்ர்ய ரூபமான இந்த செயலால் -ஒருவரால் ஏவுதல் இல்லாமல் -தடையில்லாத சங்கல்ப்பத்தால் –
அதில் ஏக தேசத்தில் போகமாகவும் சாதனமாகவும் பலவித உலகங்களை செய்ய வல்ல சக்தனாக இருந்தாலும்
முன் போலவே ஸ்வ பாவ நியமத்தையே மேற் கொள்கிறான் -அவனது இந்த சக்தியின் சிறிது அளவு மாத்ராமான அணிமை முதலிய
ஐஸ்வர்யமே பிரம்மா முதலியவர்களுக்கு அளவற்ற பெருமையை உண்டாக்கிக் கொண்டு விளங்குகிறது -ஸ்ரீ பராசர பட்டர் —
உலகைப் படைத்தல் -காத்தல் -அழித்தல்-முதலியவற்றில் ஊக்கத்தோடு இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –
யஜ்ஞம் முதலியவைகளில் உத்சாஹம் உள்ளவர் -உலகைப் படைத்தல் முதலிய வற்றில் அதிக மகிழ்ச்சி உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –
———————————————————————————
174-மஹாபல-
வேறோர் உதவியை எதிர்பாராமல் எல்லாவற்றையும் நடத்தும் ஆற்றல் உடையவர் -அநாயாசேன செய்ய முடியாத
செயல்களைச் செய்து எல்லாவற்றையும் உடல் போலே தாங்குகின்றான் –
இந்த பலத்தின் சிறிது அளவே-நீரிலும் காற்றிலும் மலைகளிலும் பூமியிலும் இருக்கின்றது -ஸ்ரீ பராசர பட்டர்
பலமுடையவர்களுக்கும் மிகுந்த பலமுடையவர் -ஸ்ரீ சங்கரர் –
மிகவும் பலமுள்ளவர் -உயர்ந்தவளான லஷ்மியை உடையவர் -பலன் என்ற அசுரனுக்கு விரோதியான இந்த்ரனை –
அபலனைப் படைத்தவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –
————————————————————————————-
175-மஹா புத்தி –
எக்காலமும் எல்லா இடங்களிலும் உள்ள எல்லாப் பொருள்களையும் உள்ளபடி அறியும்படியாக மிகுந்த ஞானம் உள்ளவர் -சர்வஜ்ஞத்வம்
இல்லை என்றும் சொல்லுகிற மதத்தைக் கண்டிக்கிறது -ஸ்வா பாவிக்க நித்தியமான இந்திரியங்களை எதிர்பாராத ஞானம் உள்ளவன்
புண்டரீகாஷன் -சுசிஸ்ரவஸ்-கையிலங்கு நெல்ல்க்கனி போலே தெளிவாகக் காணும் -அமோகமா இருக்கும் ஞானம் அனைத்தையும் நிர்வகிக்கும் –
இந்த ஞானத்தின் அற்ப அம்சம் தான் பத்தர் முக்தர் நித்யர் என்கிறவர்கள் இடத்தில் விளங்கும் –ஸ்ரீ பராசர பட்டர்
ஞானிகள் எல்லோரைக் காட்டிலும் ஞானம் உள்ளவர் -ஸ்ரீ சங்கரர் –
உயர்ந்த ஞானம் உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –
—————————————————————————————-
176-மஹா வீர்ய –
பால் தயிராக மாறுவது போலே விகாரப் படுவதற்குக் காரணங்கள் இருப்பினும் தம் இயற்கை மாறுபடாதவர் –
அகில் கஸ்தூரி புஷ்பம் போன்றவற்றின் வாசனை போலே தம் சந்நிதி மாத்ரத்தால் அளவற்ற செயல்களைச் செய்பவன் –
இந்த வீர்யத்தில் அற்பாம்சமே யோகீச்வரர்கள் போன்றவர்கள் இடம் நிகரற்று விளங்குகிறது -ஸ்ரீ பராசர பட்டர்-
உலகத்தை உண்டாக்கும் காரணமாகிய அவித்யை என்னும் காரணத்தை உடையவர் -ஸ்ரீ சங்கரர் –
மிகுந்த திறமை உடையவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –
——————————————————————————————–
177-மஹா சக்தி –
தமது சரீரத்தின் ஏக தேசம் ஆகிய பிரக்ருதியின் பரிணாமத்தினால் உலகைப் படைக்கும் திறமை யுள்ளவர் -இந்த
சக்தியானது சாதன சமூஹங்களை விநியோகப் படுத்துவதாய் அவனுடைய சரீரத்தில் ஏக தேசமான பிரகிருதியை
பரிணமிப்பித்துக் கொண்டு சாமக்ரி இருந்தாலும் இல்லாவிட்டாலும் எல்லாவற்றையும் சம்பாதிக்கும் படி இருக்கும்
சிலந்திப் பூச்சி வாயில் இருக்கும் பொருளைக் கொண்டே வலை பின்னி நிமித்தமாயும் உபாதானமாகவும் இருக்கின்ற போது
சர்வஜ்ஞனான பகவானுக்கு இது கூடாததாகுமோ -இந்த சக்தியின் சிறிது அளவே பிரதானம் என்கிற பிரக்ருதியிலும்
தயிர் பால் போன்ற விகாரம் அடையும் பொருள்களிலும் காண்கிறது -ஸ்ரீ பராசர பட்டர் –
மிகவும் பெரிய சாமர்த்தியம் உள்ளவர் -ஸ்ரீ சங்கரர் –
மிக்க சக்தி உள்ளவர் -நிக்ரஹத்தையோ அருளையோ பொழியும் சக்தி யுள்ளவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –
————————————————————————————————
178-மஹாத்யுதி-
படைத்தலில் தனக்கு வேறோர் துணை வேண்டாத தேஜஸ்சை உடையவர் –
சூர்யன் போன்றார்க்க்கு அனுகூலமாயும் எதிரிகளுக்கு பயங்கரமாயும் இருக்கும்
இதனுடைய அற்பாம்சமே சூரியன் சந்திரன் மாணிக்கம் முதலியவைகளில் பிரகாசித்து வருகிறது
இந்த ஆறு திரு நாமங்களிலும் மஹத்-விசேஷணம்-சமுத்ரத்தில் பெரு வெள்ளம் போலே அநந்த ரூபமான அவனிடம் நிறைந்த இதுவே
பகவத் சாஸ்த்ரங்களின் விஷயமாகும் -சௌசீல்யம் வாத்சல்யம் என்ற இரண்டு குணங்களும் சில பயன்களுக்காக
இதற்குள்ளே அடங்குகின்றன –ஸ்ரீ பராசர பட்டர் –
உள்ளும் புறமும் ஒளி வடிவானவர் –ஸ்ரீ சங்கரர் –
மிகுந்த ஒளியை சூரியனுக்குத் தருபவர் -மிகுந்த ஒளி யுள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் —
—————————————————————————
179-அநிர்தேச்யவபு-
மேற் சொன்ன ஆறு குணங்களை உடையவர் ஆதலால் தமது திருமேனிக்கு உவமை இல்லாதவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
தனக்குத் தானே பிரகாசிப்பதால் இது இப்படி என்று சுட்டிக் காட்ட முடியாத ஸ்வரூபம் உடையவர் –ஸ்ரீ சங்கரர் –
இப்படிப்பட்டது என்று வர்ணிக்க முடியாத திருமேனி உடையவர் -பூத சம்பந்தம் இல்லாத திரு மேனி -உபமானம் இல்லாதவர் –
மன்மதனை உண்டாக்கியவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் —
———————————————————————————-
180-ஸ்ரீ மான் –
அந்த திரு மேனிக்குத் தகுந்த திவ்ய ஆபரணங்கள் உடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
பரிபூரணமான ஐஸ்வர்யம் ஆகிற ஸ்ரீ யை உடையவர் –ஸ்ரீ சங்கரர் –
ஸ்ரீ லஷ்மீ தேவியோடு கூடி இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் —
———————————————————————————
181-அமேயாத்மா –
இவ்வாறு பல்வகைக் குணங்கள் நிரம்பிக் கடல் போல் இருப்பதால் அளவிட முடியாதவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
எவராலும் அறிய முடியாத ஞானம் உடையவர் -ஸ்ரீ சங்கரர் –
முழுமையாக அறிய முடியாத ஸ்வரூபம் உடையவர் -லஷ்மியால் அளவிடப்படும் ஆத்மாவை உடையவர் -என்பதனால் –
ஸ்ரீ மாநமேயாத்மா -என்று ஒரு திரு நாமமாகவும் கூறுவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –
——————————————————————————–
182-மஹாத்ரித்ருத்-
பாற் கடல் கடைந்த போது மந்தர மலையைத் தாங்கியவர் -அதற்குத் தகுதியாகத் தம் விருப்பப்படி செயல்படுபவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
மந்தர கோவர்த்தன மலைகளைத் தாங்கியவர் -ஸ்ரீ சங்கரர் –
மந்தர கோவர்த்தன மலைகளைத் தாங்கியவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –
—————————————————————————————–
183-மகேஷ்வாச-
சேது பந்தனம் ராவண வதம் போன்றவைகளில் மனம் கவரும் வகையில் பாணங்களை எய்தவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
மிகப் பெரிய வில்லை உடையவர் -ஸ்ரீ சங்கரர் –
மிகப் பெரிய வில்லை உடையவர் -உயர்ந்த இச்சையை உடையவர் -எங்கும் நிறைந்து இருப்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –
————————————————————————————-
184-மஹீ பர்த்தா-
மிகவும் எளிதாக பூமியைத் தாங்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
கடலில் முழுகிய பூமி தேவியைத் தாங்கியவர் -ஸ்ரீ சங்கரர் –
பூமி தேவிக்குக் கணவர் -விழாக்களுக்குத் தலைவர் -ஸ்ரீ லஷ்மி தேவிக்கும் மன்மதனுக்கும் பிரபு-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –
———————————————————————————————
185-ஸ்ரீ நிவாச –
பாற் கடல் கடைந்து பெற்ற ஸ்ரீ லஷ்மியை மார்பில் வைத்துச் சிறப்பித்தார் -ஸ்ரீ பராசர பட்டர் –
திரு மார்பில்,லஷ்மி எப்போதும் பிரியாமல் வசிக்கப் பெற்றவர் -ஸ்ரீ சங்கரர் –
தம்மிடத்தில் ஸ்ரீ லஷ்மி வசிக்கப் பெற்றவர் -லஷ்மியை நடத்துபவர் -எல்லா இடத்திலும் வசிப்பவர் –
அனைத்தையும் மறைப்பவர் -தம் உடையாகக் கொள்பவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –
—————————————————————————————–
186-சதாம் கதி
தமது விளையாட்டுச் செயல்களாலும் பக்தர்க்கு நன்மையே செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
வைதிகர்களான சாதுக்களுக்குப் புருஷார்த்த கிடைக்க சாதனம் ஆனவர் -ஸ்ரீ சங்கரர் –
ஆனந்தத்தோடு கூடிய முக்தர்களுக்கு புகலிடமாக இருப்பவர் -துயரப்படுபவர்களும் ஞானிகளுக்கும் புகலிடம்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –
————————————————————————-
187-அநிருத்த-
அளவற்ற ஜீவ ராசிகளைக் காப்பாற்றுவதில் தடையற்ற திவ்ய சேஷ்டிதமுடையவர்–ஸ்ரீ பராசர பட்டர் –
அவதாரங்களிலும் எவராலும் தடுக்கப் படாதவர் –ஸ்ரீ சங்கரர் –
எவராலும் தடுக்கப்பட முடியாதவர் -ஞானிகளுக்குத் தடையில்லாதவர் -முக்ய பிராணனின் பக்தர்களால் தத்தம் இதயத்தில்
கட்டுப்படுபவர் -வேதத்துக்கு விரோதமான ஆசாரம் உடையவர்களை அழிப்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –
—————————————————————————–
188-ஸூராநந்த –
ஆபத்தில் உதவி செய்து தேவர்களை மகிழ்விப்பவர் -திருவவதாரங்களுக்கு மூலமான அநிருத்தருடைய
ஹம்சாவதாரம் கூறப்படுகிறது –ஸ்ரீ பராசர பட்டர் –
தேவர்களை மகிழ்விப்பவர் –ஸ்ரீ சங்கரர் –
நல்ல ஞானத்தைக் கொடுப்பவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –
———————————————————————–
189-கோவிந்த –
அத் தேவர்களின் துதி ஆகிய வாக்குகளைப் பெறுபவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
மறைந்து போன பூமியை எடுத்தவர் –ஸ்ரீ சங்கரர் –
பூமி வில் பசு ஸ்வர்க்கம் வேதம் ஆகியவற்றை அடைந்தவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –
——————————————————————-
190-கோவிதாம்பதி-
வேதங்களை அறிந்த ஞானிகளால் ஞானம் என்னும் யஜ்ஞத்தினால் ஆராதிக்கப் பெற்று அவர்களைக் காப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
வாக்குகளை அறிந்தவர்களுக்கு விசேஷமாகத் தலைவர் –ஸ்ரீ சங்கரர் –
வேதங்களை அறிந்தவர்களுக்கு பத்தி -நீர் வாழ்வானவற்றுக்குத் தலைவன் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –
—————————————————————————————
191-மரீசி –
மூடர்களுக்கும் தமது மாசற்ற ரூபத்தைக் காட்டுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
ஒளி உள்ளவர்களுக்கும் ஒளியாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –
இருளை அழியச் செய்பவர் -நீருள்ள மேகங்களை அசையச் செய்பவர் –ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –
——————————————————————————————
192-தமந-
திவ்ய தேஹ ஒளியினால் சம்சார தாபத்தை அடக்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
தம் கடைமைகளில் தவறுபவர்களை தண்டிக்கும் மனுவாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –
இந்திரியக் கட்டுப்பாடு உள்ளவர்களை நடத்துபவர் -தமனாசுரனை அழித்தவர்-புலன்களை
அடக்கியவர்களுக்கு இனியவர் -விருப்பத்தை நிறைவேற்றும் மனமுடையவர் –ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –
———————————————————————
193-ஹம்ஸ-
அழகாக நடப்பவர் – அழகிய புன்சிரிப்புள்ளவர்-ஸ்ரீ பராசர பட்டர் –
நானே அவன் என்று பாவிப்பவர்களுக்கு சம்சார பயத்தை அழிப்பவர் -எல்லா உடல்களிலும் செல்பவர் –ஸ்ரீ சங்கரர் –
தோஷங்கள் அற்றவன் -சாரமானவர் –ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –
————————————————————————————–
194-ஸூபர்ண-
ஹம்சாவதாரத்தில் அழகிய சிறகுகளை உடையவர் -சம்சாரக் கடலினின்றும் கரை சேர்ப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
அழகிய சிறகுகளை உடையவர் –ஸ்ரீ சங்கரர் –
உயர்ந்த ஆனந்தத்தை ஸ்வரூபமாக உடையவர் –ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –
—————————————————————————-
195-புஜகோத்தம-
ஆதிசேஷனுக்கும் மேற்பட்ட தலைவராய் அவன் மீது சயனித்து இருப்பவர் -பத்மநாப அமரப்ரபு-என்று வ்யூஹத்தில் கடைசி அனிருத்தனான
பத்ம நாபன் கூறப்பட்டார் -இங்கு அவதாரத்தில் முதல்வரான பத்ம நாபர் கூறப்படுகிறார் புஜகோத்தமர் என்று -ஸ்ரீ பராசர பட்டர் –
பாம்புகளில் சிறந்தவர் -ஸ்ரீ சங்கரர் –
உயர்ந்த பாம்பாகிய ஆதி சேஷனைப் படுக்கையாக உடையவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –
———————————————————————————–
196–ஹிரண்ய நாப –
அவரே அழகான நாபியை யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
தங்கள் போலே அழகிய நாபியை உடையவர் -ஸ்ரீ சங்கரர் –
ஹிரண்யாஸூரனை அழித்தவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –
———————————————————————————
197-ஸூ தபா –
திவ்ய ஞானம் உள்ளவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
நர நாராயண ரூபத்துடன் பத்ரிகாஸ்ரமத்தில் சிறந்த தவம் புரிபவர் -ஸ்ரீ சங்கரர் –
நான்முகனாகிய பிள்ளையைக் காப்பவர் -மங்களகரமான ஞானம் உடையவர் –
விருப்பமான சோம ரசத்தைப் பருகுபவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-
——————————————————————————–
198-பத்ம நாப –
நாபியில் பத்மத்தை யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
தாமரை போல் வட்டமான நாபியை யுடையவர் -ஸ்ரீ சங்கரர் –
பக்தர்களுக்கு நன்கு பிரகாசிப்பவர் -பிரமனைத் தம் நாபியில் உடையவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்
———————————————————————————–
199-பிரஜாபதி –
நாபிக் கமலத்தில் பிறந்த பிரமன் முதலியவர்களுக்குத் தலைவர் –
இதை நைமித்திக சிருஷ்டி நைமித்திக பிரளயம் இவற்றைக் குறித்ததாகக் கொள்க -ஸ்ரீ பராசர பட்டர் –
பிரஜைகளுக்குத் தந்தையானவர் -ஸ்ரீ சங்கரர் –
தன்னைத் துதிப்பவர்களை மகிழ்விப்பவர் -பிரஜைகளுக்குத் தலைவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்
——————————————————————————-
200-அம்ருத்யு-
நரசிம்ஹ அவதாரத்தில் ம்ருத்யுவுக்கும் ம்ருத்யுவானவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
அழிவோ அதற்குக் காரணமோ இல்லாதவர் -ஸ்ரீ சங்கரர்
அழிவில்லாதவர்-அழிவைத் தராதவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-
———————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply