அஜஸ் சர்வேச்வரஸ் சித்தஸ் சித்திஸ் சர்வாதிரச்யுத
வ்ருஷாகபிரமேயாத்மா சர்வயோகவி நிஸ் ஸ்ருத –11
வஸூர் வஸூம நாஸ் சமாதமா சம்மிதஸ் சம
அமோக புண்டரீகாஷோ வ்ருஷகர்மா வ்ருஷாக்ருதி –12
ருத்ரோ பஹூஸிரா பப்ரூர் விஸ்வ யோநிஸ் ஸூ சிஸ் ரவா
அம்ருதஸ் சாஸ்வத ஸ்தாணுர் வரா ரோஹோ மஹாதபா –13
சர்வகஸ் சர்வவித் பாநுர் விஷ்வக்சேநோ ஜனார்த்தன
வேதோ வேதவிதவ்யங்கோ வேதாங்கோ வேதவித் கவி –14
லோகாத்யஷஸ் ஸூ ராத்யஷோ தர்மாத்யஷ க்ருதாக்ருத
சதுராத்மா சதுர்வ்யூஹஸ் சதுர்தம்ஷ்ட்ரஸ் சதுப்புஜ–15
ப்ராஜிஷ்ணுர் போஜனம் போக்தா சாஹிஷ்ணுர் ஜகதாதிஜ
அனகோ விஜயோ ஜேதா விச்வயோனி புனர்வஸூ –16-
—————————————————–
பர வாஸூதேவன் —–1-122——–122 திரு நாமங்கள் –
சங்கர்ஷணன் ——–123-124——–2 திரு நாமங்கள்
பிரத்யும்னன் ———125-126———2 திரு நாமங்கள்
அநிருத்தன் ———-127-146———20 திரு நாமங்கள்
விஷ்ணு ————-147-170——–24 திரு நாமங்கள்
———————————————————————–
101-அச்யுத –
தம்மை அடைந்தவரை விட்டு நீங்காதவர் -ஸ்ரீ பராசர பட்டர்
தம் ஸ்வரூப மகிமை முக்காலத்திலும் நீங்காதவர் -ஸ்ரீ சங்கரர்
தேச கால குணங்களால் வீழ்ச்சி இல்லாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர்
——————————————————————————-
102-வ்ருஷாகபி –
தர்மமே வடிவெடுத்த வராஹாவதாரம் செய்தவர் -ஸ்ரீ பராசர பட்டர்
தர்ம ரூபியாகவும் வராஹ ரூபியாகவும் இருப்பவர் -எல்லா விருப்பங்களையும் வர்ஷிப்பதால் தர்மம் வ்ருஷம் எனப்படும் –
கம் -நீர் -அதில் இருந்த எடுத்தவர் ஆகையால் கபி -வராஹர் -வ்ருஷாகபி -தர்ம ஸ்வரூபரான வராஹர் -ஸ்ரீ சங்கரர்
தர்மத்தால் துன்பங்களைப் போக்குபவர் -அருளை வருஷிப்பவராய் -சுகத்தைப் பருகுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர்
———————————————————————————————-
103-அமேயாத்மா –
அடியவர்களுக்கு அருளும் திறத்தில் இவ்வளவு என்று அளவிட முடியாதவர் -ஸ்ரீ பராசர பட்டர்
இவ்வளவு என்று அளவிடமுடியாத ஸ்வரூபத்தை யுடையவர் -ஸ்ரீ சங்கரர்
முழுமையாக அறிய முடியாத ஸ்வரூபத்தை யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர்
————————————————————————————————–
104-சர்வ யோக விநிஸ்ருத –
எல்லா உபாயங்களிளாலும் எளிதில் அடையத் தக்கவர் -ஸ்ரீ பராசர பட்டர்-
எல்லாப் பற்றுக்களில் இருந்தும் வெளிப்பட்டவர் -சாஸ்த்ரங்களில் சொல்லும் பல யோகங்களால் அறியப் படுபவர் -ஸ்ரீ சங்கரர்-
எல்லா யோகங்களும் வெளிவரக் காரணமாக இருப்பவர் -சாஸ்த்ரங்களில் சொல்லும்-உபாயங்களாலும்-
அவரவர்களுக்கு தோன்றும் உபாயங்களாலும் அறியப் படுபவர் -எளிதில் அடையக் கூடியவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-
———————————————————————————————
105- வஸூ –
அடியவர்களிடம் மிக்க அன்புடன் வசிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்-
எல்லாம் தம்மிடம் வசிக்கும்படி இருப்பவர் -தாமும் அவற்றில் வசிப்பவர் -வசுக்களில் அக்னியாக இருக்கிறேன் -ஸ்ரீ கீதை -ஸ்ரீ சங்கரர்-
எங்கும் வசிப்பவர் -ஞானத்தை வளர்ப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-
——————————————————————————————–
106-வஸூமநா-
அடியவர்களை நிதி போல் நினைப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்-
சிறந்த மனம் உள்ளவர் -விருப்பு வெறுப்பு இன்பம் துன்பம் போன்றவற்றால் கலக்க முடியாதவர் -ஸ்ரீ சங்கரர்-
அடியவர்கள் அளிக்கும் நீரையும் ஸ்ய மந்தக மணியையும் சமமாக கருதுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-
———————————————————————————————
107-சத்ய –
அடியவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுபவர் -ஸ்ரீ பராசர பட்டர்-
அசத்தியத்திற்கு மாறானவர் -உருவத்துடனும் அருவத்துடனும் கூடியவர்
சத் -பிராணம் -தீ -அன்னம் -யம்-சூர்யம் -பிராணன் அன்னம் சூர்யன் ஆகிய ரூபம் உள்ளவர் -சாதுவானவர் -ஸ்ரீ சங்கரர்-
உலகங்களைப் படைப்பவர் -இருப்பை யுண்டாக்குபவர்-ஸ்ரீ சத்ய சந்தர்-
—————————————————————————————————-
108-சமாதமா –
அடியவர்களிடம் ஏற்றத் தாழ்வுகள் பாராமல் அனைவரையும் சமமாகக் கருதுபவர் -ஸ்ரீ பராசர பட்டர்-
விருப்பு வெறுப்பு முதலியவற்றால் மாறாத மனம் உள்ளவர் –
எல்லா பூதங்களிடமும் சமமாக ஒரே ஆத்மாவாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்-
ஞானிகளுக்கு ஆத்மாவாக இருப்பவர் -லஷ்மி பிரம்மா யுடன் கூடியவர்
சாரமாய் லஷ்மியிடம் மனம் வைத்து இருப்பவர் -லஷ்மியின் மனத்தை தம்மிடம் வைத்து இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-
—————————————————————————————
109-சம்மித
அடியவர்களுக்கு அடங்கி இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்-
எல்லாராலும் அளவுபடுத்தப் படுபவர் -அளவிடப் படாதவர் -அசம்மித -என்றும் பாடம் -ஸ்ரீ சங்கரர்-
பிரமாணங்களால் நன்கு அறியப் படுபவர் -மூ உலகங்களையும் அளந்தவர்
அசம்மித -என்ற பாடம் கொண்டு முழுமையாக எவராலும் அளவிட முடியாதவர் என்னவுமாம் -ஸ்ரீ சத்ய சந்தர்-
—————————————————————————————–
110-சம –
அடியவர்களில் பழகினவர் -பழகாதவர் – ஆவல் அதிகம் உள்ளவர் – குறைவாக உள்ளவர்
போன்ற வேறுபாடுகளைப் பாராமல் ஒரே விதமான கௌரவம் வைப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்-
எல்லாக் காலங்களிலும் விகாரமற்று இருப்பவர் -அல்லது லஷ்மியோடே கூடி இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்-
லஷ்மீ வேதங்கள் பிரமாணங்கள் இவைகளுடன் சேர்ந்து இருப்பவர்
அவர்களுக்குத் தகுதியான பலன்களைத் தருபவர் -எல்லா இடங்களிலும் எல்லா உருவங்களிலும் சமமாக இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-
———————————————————————————————-
111-அமோக –
தமது சம்பந்தம் வீண் போகாதவர் -ஸ்ரீ பராசர பட்டர்-
பூசிப்பவர் துதிப்பவர் நினைப்பவர்க்கு வீண் போகாமல் எல்லாப் பலன்களையும் தருபவர் -ஸ்ரீ சங்கரர்-
படைப்பு முதலியவை வீண் போகாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-
———————————————————————————————-
112- புண்டரீகாஷ-
புண்டரீகம் எனப்படும் பரமபதத்தில் உள்ளவர்களுக்குக் கண் போன்றவர் -ஸ்ரீ பராசர பட்டர்-
தாமரை போன்ற இரு கண்களை யுடையவர் -ஹ்ருதய புண்டரீகத்தில் பரவியிருப்பவர் -அல்லது அங்கு பார்க்கப்படுபவர் –ஸ்ரீ சங்கரர்-
நரசிம்ஹ அவதாரத்தில் அக்னியை மூன்றாம் கண்ணாக யுடையவர் -தாமரை போன்ற
இரு கண்களை யுடையவர் -புண்டரீக முனிவருக்கு அருள் புரிந்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-
—————————————————————————————————
113-வ்ருஷகர்மா –
நம் போன்றவர்களுக்கும் பெரும் பேற்றை அளிப்பதால் தர்ம ரூபமான செய்கையை யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர்-
தர்ம ரூபமான செய்கையை யுடையவர் –ஸ்ரீ சங்கரர்-
புண்ய கர்மங்களை யுடையவர் -ஸ்ரீ கிருஷ்ணனாய் எருதுகளை அடக்கியவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-
———————————————————————————————————
114-வ்ருஷாக்ருதி –
தாபத் த்ரயங்களைப் போக்கி அமுதம் பொழிவது போன்ற குளிர்ந்த திவ்ய ரூபம் யுடையவர் –
திரு மேனியும் தர்ம ரூபமாய் இருக்கும் -ஸ்ரீ பராசர பட்டர்-
தர்மத்தை நிலைநாட்ட அவதாரம் செய்து உருவம் யுடையவர் –ஸ்ரீ சங்கரர்-
எருதைப் போலே திடமான உடல் உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-
——————————————————————————-
115-ருத்ர –
இப்படிப்பட்ட திவ்ய ரூபத்தாலும் செயல்களாலும் பக்தர்களை நெஞ்சுருகி ஆனந்தக் கண்ணீர்
பெருக்கி அழச் செய்பவர் –ஸ்ரீ பராசர பட்டர்-
சம்ஹார காலத்தில் பிரஜைகளை அழித்து அழச் செய்பவர் -நன்மையைத் தருபவர் –
துன்பங்களையும் அவற்றின் காரணங்களையும் அழிப்பவர்-ஸ்ரீ சங்கரர்-
நோய் தீர்ப்பவர் -அழ வைப்பவர் -பறை முதலியவற்றிற்கு ஒலியைக் கொடுப்பவர் –
அடியவர்கள் செய்யும் துதிகளால் மகிழ்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-
————————————————————————————–
116-பஹூ ஸிரா-
ஆயிரம் தலையையுடைய ஆதி சேஷனாக இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர்-
பல தலைகளை யுடையவர் -ஸ்ரீ சங்கரர்-
எண்ணற்ற நாடிகளில் வசிப்பவர் -பல தலைகளை யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-
————————————————————————————-
117-பப்ரு
ஆதி சேஷனாக இருந்து கொண்டு உலகத்தை தாங்குபவர் –ஸ்ரீ பராசர பட்டர்-
உலகங்களைத் தாங்குபவர் -ஸ்ரீ சங்கரர்-
உலகங்களைத் தரித்து இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-
——————————————————————————————
118-விச்வ யோநி –
அடைந்தவர்கள் எல்லாரையும் தம்மோடு ஒன்றாகக் கொள்பவர் -திரு வநந்த ஆழ்வான் திரு மேனியோடு சமமாக
பக்தர்களோடு கூடி இருப்பதற்காக எல்லாருக்கும் பொதுவாக இருக்கும் படியைச் சொல்லுகிறது -ஸ்ரீ பராசர பட்டர்-
உலகங்களுக்குக் காரணமாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்-
உலகுக்கு அல்லது வாயு தேவனுக்கு காரணமாக இருப்பவர் – -ஸ்ரீ சத்ய சந்தர்-
——————————————————————————
119-ஸூசி ஸ்ரவா-
அடியார்களின் இன் சொற்களைக் கேட்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்-
பரிசுத்தமான நாமங்களை யுடையவர் –ஸ்ரீ சங்கரர்-
புனிதமான புகழை யுடையவர் -செவிக்கு இனிய சொற்கள் யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-
————————————————————————————–
120-அம்ருத –
எக்காலமும் சேவித்தாலும் ஆராவமுதம் -சம்சாரம் கழைந்து நித்ய அனுபவம் அளிப்பவன் -ஸ்ரீ பராசர பட்டர்-
அழிவில்லாதவர் -ஸ்ரீ சங்கரர்-
அளவற்ற சாஸ்த்ரங்களுக்கு விஷயமாக இருப்பவர் -அனந்த சயனத்தில் இருபபவர்-அழிவில்லாதவர்–ஸ்ரீ சத்ய சந்தர்-
—————————————————————————————-
121-சாச்வதஸ் தாணு –
தேவ அமர்த்தம் போலே அன்றி நித்யமாகவும் அபகரிக்க முடியாதவராகவும் அடியவர்களிடம் நிலையாகவும் இருபபவர் –
இந்த ஆராவமுதம் கொண்டு நீ வேண்டாம் -உப்புச் சாறு அமையும் -ஒரு முறை உண்ணக் கூடியது -அநித்தியம் -ஸ்ரீ பராசர பட்டர்-
அழிவில்லாமல் நிலையாக இருபபவர் -ஸ்ரீ சங்கரர்-
முக்தர்களுக்கு ஸ்வாமியாகவும் சேரும் இடமாகவும் இருபபவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-
——————————————————————————————
122-வராரோஹா –
தன்னை வந்தடைவதே சிறந்த புருஷார்த்தம் -மற்றவை அனைத்தும் தாழ்ந்த புருஷார்த்தங்கள் –
இங்கு தொடர்ந்து பரத்வம் விபவம் வியூஹம் ஆகியவை விரித்துக் கூறப் பட்டுள்ளது -இதுவரை பெரும்பாலும் பரத்வம் கூறப்பட்டது
கிமேகம் தைவதம் லோகே -என்று கேட்க்கப் பட்ட கேள்விகளுக்கும் அவற்றின் பதில்களும் பெரும்பாலும் இதில் முடிகின்றன
இனி ஸ்துவந்த கம் -எனபது முதலாக உபாய விஷயமாக கேட்ட கேள்விகளுக்கும் பதில்களுக்கும் விஷயமாக வ்யூஹம் சொல்லப் படுகிறது –
அதில் வாசுதேவன் என்ற திரு நாமம் பரத்வத்தில் வியாக்யானம் செய்யப்பட்டது -இப்பொழுது சங்கர்ஷணன் விஷயம் சொல்லப் படுகிறது -ஸ்ரீ பராசர பட்டர்-
தம்மிடம் ஏறுவது எல்லாவற்றிலும் சிறந்ததாக இருப்பவர்-அடையும் உயர்ந்த இடம் -அடைந்தவர்களுக்கு மீட்சி இல்லை -ஸ்ரீ சங்கரர்-
சிறந்த வாகனத்தில் ஏறுபவர் -அரங்களை-ஆயுதங்களை உடையவர்களைக் காட்டிலும் உயர்ந்த தீயவர்களை அழிப்பவர்-
——————————————————————————————————
123-மஹா தபா –
சிறந்த ஞானம் உள்ளவர் -ஞானம் பலம் சங்கர்ஷணனுக்கு யுரியவை –
அடியார் பிறவித் துயரை போக்கும் இச்சையே ஞானம் என்ற சொல் -ஸ்ரீ பராசர பட்டர்-
ஸ்ருஷ்டியைப் பற்றிய சிறந்த ஞானம் யுடையவர் -உயர்ந்த ஐஸ்வர்யம் பெருமை யுடையவர்–சங்கரர் –
சிறந்த ஞானம் உள்ளவர் கபிலராக தபச்வியானவர்–ஸ்ரீ சத்ய சந்தர்-
——————————————————————————————–
124-சர்வக –
சம்ஹரிக்கப் பட்டவற்றை எல்லாம் தம் பலத்தினால் அடைந்து தரிப்பவர் –
சங்கர்ஷிப்பத்தால் -அழிப்பதால் சங்கர்ஷணன் –ஸ்ரீ பராசர பட்டர்-
காரணமாக எங்கும் பரவி இருப்பதால் எங்கும் செல்பவர் -சங்கரர் –
எங்கும் செல்பவர் -அல்லது எல்லாம் அறிபவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-
————————————————————————————
125-சர்வவித் –
சம்ஹரிக்கப் பட்டவற்றை மறுபடி படைத்து அடைகிறார் -சிருஷ்டிக்கும் மூர்த்தி பிரத்யும்னன் –
கிரியாசக்தி உடைய விலாசமான ஐஸ்வர்யம் கூறபடுகிறது –ஸ்ரீ பராசர பட்டர்-
எல்லா இடத்திலும் உள்ள எல்லாவற்றையும் அறிந்து பிரகாசிப்பவர் -சர்வவித் பாநு -ஒரே திரு நாமம் -சங்கரர் –
அனைத்தும் அறிபவர் -எல்லாம் அடைந்தார் –ஸ்ரீ சத்ய சந்தர்-
—————————————————————————————
126- பாநு-
எல்லாவற்றையும் படைத்து தாம் விகாரம் இல்லாமல் விளங்குபவர் -அவிகாரம் -என்கிற வீர்யம் -ஸ்ரீ பராசர பட்டர்-
பிரகாசிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-
———————————————————————————————————-
127-விஷ்வக்சேன –
எல்லாரும் தம்மைக் கொண்டு ரஷகராகக் கொண்டு ஜீவிக்கும்படி இருப்பவர் –
ரஷிக்கும் அநிருத்தன் -யுடைய சக்தி -இங்கே கூறப்படுகிறது -ஸ்ரீ பராசர பட்டர்-
போர் செய்யத் தொடங்கிய யுடன் அசுரசேனை சிதறி ஓடும்படி செய்தவர் -சங்கரர் –
பிரமன் முதலிய அனைவரையும் சேனையாக உடையவர்-ஸ்ரீ சத்ய சந்தர்-
——————————————————————————
128-ஜனார்த்தன –
ரஷிப்பதற்குத் தடையாக உள்ளவர்களை உதவி தேடாமல் அழிப்பவர்-அபேஷியாமல் ரஷிக்கும் தேஜஸ் -ஸ்ரீ பராசர பட்டர்-
மக்களால் மோஷம் செல்வம் முதலிய பயன்கள் வேண்டப்படுபவர் -தீயர்களை நரகத்தில் தள்ளுபவர் -சங்கரர் –
அடியவர்களின் பிறப்பை அறுப்பவர் -சமுத்ரத்தில் இருக்கும் ஜன என்னும் அசுரர்களை அழிப்பவர் -சம்சாரத்தை அழிப்பவர் –
ஜனங்களால் யாசிக்கப் படுபவர் -அடையப் படுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-
——————————————————————————-
129-வேத –
தம்மால் உடல்களையும் இந்த்ரியங்களையும் அடைந்து இருப்பவர்கள் -சாஸ்த்ரங்களை தம்மிடம் இருந்தே
அடையும் படி இருப்பவர் -மீண்டும் சங்கர்ஷணன் சாஸ்திரங்கள் அளிப்பதைக் கூறுகிறார் –ஸ்ரீ பராசர பட்டர்-
வேத ரூபி -எல்லாவற்றையும் தெரிவிப்பவர் -சங்கரர் –
எல்லாவற்றையும் தெரிவிப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-
———————————————————————————–
130-வேதவித் –
ஐயம் திரியின்றி வேதார்த்தங்களை அறிபவர் -ஸ்ரீ பராசர பட்டர்-
வேதங்களையும் வேதார்த்தங்களையும் உள்ளபடி அறிபவர் –சங்கரர் –
வேதங்களை அறிந்தவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-
———————————————————————————————-
131-அவ்யங்க-
சந்தஸ் -கல்பம் முதலிய ஆறு அங்கங்களும் தம்மிடம் குறைவின்றி நினைத்து இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்-
ஞானம் முதலிய குணங்கள் நிறைந்தவர் -வ்யக்தமாக இல்லாதவர் -ஸ்ரீ சங்கரர் –
ஆதி சேஷனின் மேல் சயனித்துக் கொண்டு இருப்பவர் -சூர்யனைக் கண்ணாக யுடையவர் –
குறையில்லாத அங்கங்கள் உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-
—————————————————————————————–
132-வேதாங்க –
வேதத்தைத் தமது சரீரமாக உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர்-
வேதங்களை அங்கங்கங்களாக யுடையவர் -ஸ்ரீ சங்கரர் –
வேத அபிமானியான லஷ்மி தேவியை உடையவர் -வேதாங்களான பாரதம் போன்றவற்றை வெளியிட்டவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-
——————————————————————————————
133- வேதவித் –
வேதங்களை விசாரிப்பவர் –
வேதங்களினால் அறியப்படும் தர்மத்தை அனுஷ்டிக்கும்படி செய்து -அதை ஆராதனமாகப் பெறுபவர் -எனவே இவரை தர்மம் என்றும்
பிரகாசப்படுத்துபவன் என்றும் ப்ரவர்த்திப்பவன் என்றும் கூறுகிறது -ஸ்ரீ பராசர பட்டர்-
வேதங்களை விசாரிப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
மத்ச்யாதி ரூபத்துடன் பிரமன் முதலியவர்களுக்கு வேதங்களைக் கிடைக்கச் செய்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-
————————————————————————————
134-கவி –
எல்லாவற்றையும் அறிபவர் –ஸ்ரீ பராசர பட்டர்-
எல்லாவற்றையும் பார்ப்பவர் –ஸ்ரீ சங்கரர் –
புகழப் படுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-
———————————————————————————
135-லோகாத்யஷ-
தர்ம அனுஷ்டானத்துக்கு தகுதி யுள்ளவர்களை ப்ரத்யஷமாக அறிபவர் –ஸ்ரீ பராசர பட்டர்-
உலகங்களை பிரத்யஷமாகக் காண்பவர் –ஸ்ரீ சங்கரர் –
பிரகாசமான ஸ்வரூபம் உடைய லோகாதிபதி -லோகங்களை விட மேன்மையானவர்-அழியாதவர் –
உலகிற்குத் தலைவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-
—————————————————————————–
136- ஸூராத்யஷ-
அவர்களால் ஆராதிக்கப் படும் தேவதைகளைப் பிரத்யஷமாக அறிபவர் –ஸ்ரீ பராசர பட்டர்-
லோகபாலர்களான தேவர்களுக்குத் தலைவர் -ஸ்ரீ சங்கரர் –
தேவேந்த்ரனுடைய கண்களுக்கு விஷயமானவர் -நன்கு ஆராதிக்கப் படுபவராய் எல்லாவற்றுக்கும் ஆதாரமாய் உள்ளவர்-ஸ்ரீ சத்ய சந்தர்-
———————————————————————————-
137-தர்மாத்யஷ-
அந்த தர்மத்திற்கு சாதனமாக விதிக்கப் பட்டவைகளை அறிபவர் -ப்ரத்யஷமாக அறிந்து தர்மம் செய்வாருக்கு பலன் கொடுக்கவும்
செய்யாதாருக்கு பலன் கொடுக்காமல் போகவும் அறிந்து இருப்பவர் அநிருத்தர் -ஆதலால்
தர்மத்தையும் -உபாயத்தையும் அறிந்தவர் -எல்லாவற்றையும் நடத்துபவர் -சொல் தவறாதவர் -ஞானம் அளிப்பவரும் இவரே -ஸ்ரீ பராசர பட்டர்-
தகுந்த பலன்களைக் கொடுப்பதற்காக தர்ம அதர்மங்களை நேராகக் காண்பவர் -ஸ்ரீ சங்கரர் –
தர்மத்தின் அதிபதி -தர்மத்தைப் பார்த்துக் கொண்டு இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-
——————————————————————————–
138-க்ருதாக்ருத –
அநித்திய பலன்களையும் நித்ய பலனையும் கொடுப்பவர் -சம்சாரத்தின் பிரவர்த்தகம் நிவர்த்தகம் ஆகிய
இரண்டு தர்மங்களை யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர்-
கார்யமாகவும் காரணமாகவும் இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
கர்மங்களினால் அடையப் படாதவர் -அக்ருதம் என்னும் மோஷம் தருபவர்-ஸ்ரீ சத்ய சந்தர்-
——————————————————————————————
139-சதுராத்மா –
வாஸூதேவன் -சங்கர்ஷணன் -பிரத்யும்னன் -அநிருத்தன் -என்னும் நான்கு மூர்த்திகளை உடையவர் –ஸ்ரீ பராசர பட்டர்-
சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரங்களில் நான்கு வகை சக்திகளை உடையவர் –ஸ்ரீ சங்கரர் –
பரவும் தன்மை யுடைய சாதுர்யமான ஆத்மாவாக இருப்பவர் -ஞானியான பிரமனைத் தோற்றுவித்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-
——————————————————————————————–
140-சதுர்வ்யூஹ-
மேற்சொன்ன நான்கு மூர்த்திகளில் முறையே ஜாக்ரத் ஸ்வப்ன ஸூ ஷுப்தி துர்ய என்னும் நான்கு நிலைகளை உடையவர் -த்யானிக்க
வேண்டும் ஸ்வரூபம் இன்னது என்று தெரிவிக்க -ஆறு கல்யாண குணங்களைப் பிரித்தும் -அந்தந்த குணங்களுக்கு பிரகாசகமாக ஏற்பட்ட
அவயவம் வர்ணம் ஆபரணம் ஆயுதம் வாஹனம் கொடி முதலானவைகளோடும் கூடிய நான்கு நிலைகளை உடையவர் –ஸ்ரீ பராசர பட்டர்-
வாஸூதேவ சங்கர்ஷண பிரத்யும்ன அநிருத்தர் என்ற நான்கு வியூஹங்களை உடையவர்–ஸ்ரீ சங்கரர் –
வாஸூதேவ சங்கர்ஷண பிரத்யும்ன அநிருத்தர்-என்னும் நான்கு வ்யூஹங்களை-அல்லது நான்கு வித ஆத்மாக்களை உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-
—————————————————————————————————-
141-சதுர தம்ஷ்ட்ர –
வ்யூஹங்களுக்கு மூலமான பர வாஸூ தேவ ரூபத்தில் நான்கு கோரைப் பற்களை உடையவர் —ஸ்ரீ பராசர பட்டர்-
நரசிம்ஹ அவதாரத்தில் நான்கு கோரைப் பற்களை உடையவர் -அல்லது நான்கு கொம்புகளை உடையவர் –ஸ்ரீ சங்கரர் –
நான்கு கோரைப் பற்களை உடையவர்-ஸ்ரீ சத்ய சந்தர்-
——————————————————————————
142-சதுர்ப்புஜ-
பர வாஸூ தேவ ரூபத்தில் நான்கு திருக் கைகள் உடையவர் —ஸ்ரீ பராசர பட்டர்-
நான்கு திருக் கரங்கள் உடையவர் –ஸ்ரீ சங்கரர் –
தர்ம அர்த்த காம மோஷங்களைத் தருபவர் -நான்கு கைகளை உடையவர் -நான்கு வேதங்களினால் உண்டாகும் ஞானத்தால்
தம்மைக் காட்டித் தருபவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-
————————————————————————————
143-ப்ராஜிஷ்ணு –
உபாசிப்பவர்களுக்கு இவ்வடிவைப் புலப்படுத்துபவர் —ஸ்ரீ பராசர பட்டர்-
ஒளி வடிவானவர் –ஸ்ரீ சங்கரர் –
பிரகாசம் உடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-
—————————————————————————-
144-போஜனம் –
பக்தர்களால் உணவு போலே சுகமாக அனுபவிக்கப் படுபவர் —ஸ்ரீ பராசர பட்டர்-
அனுபவிக்கப் படுவதாகிய மாயை என்னும் பிரகிருதி வடிவமாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –
எல்லாரும் பிழைக்கும்படி செய்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-
——————————————————————————-
145-போக்தா –
பக்தர்களால் சமர்ப்பிக்கப் படும் ப்ராபணம் முதலியவற்றை அமுதம் போலே ஏற்றுக் கொள்பவர் —ஸ்ரீ பராசர பட்டர்-
அந்தப் பிரக்ருதியை அனுபவிக்கும் புருஷனாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
அனைத்து சாரங்களையும் அனுபவிப்பவர்-ஸ்ரீ சத்ய சந்தர்-
————————————————————————————-
146-சஹிஷ்ணு –
தம்மிடத்திலும் தம் அடியார்கள் இடத்திலும் செய்யும் அபராதங்கள் அனைத்தையும் பொறுத்துக் கொள்பவர் –
போய பிழைகளையும் புகுதருவான் நின்றனவும் க்ருத அக்ருதங்களையும் அக்ருத க்ருதங்களையும்
அவமானங்கள் நிந்தனைகளையும் பகவத் அபசார பாகவத அபசார அசஹ்யாபசார -எண்ணற்ற
அபராதங்களையும் பொறுப்பவர் —-ஸ்ரீ பராசர பட்டர்-
ஹிரண்யாஷன் முதலிய விரோதிகளை அழிப்பவர்–ஸ்ரீ சங்கரர் —
அடியவர்களின் குற்றங்களைப் பொறுப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-
—————————————————————————————
147-ஜககாதிஜ-
உலகங்களுக்கு முதல் பொருளாகிய மும்மூர்த்திகளுள் ஒருவராக திருவவதரித்தவர் –
விபவங்களில் விஷ்ணு திருவவதாரம் கூறப்படுகிறது —ஸ்ரீ பராசர பட்டர்–
உலகம் உண்டாவதற்கு முன் ஹிரண்ய கர்ப்ப ரூபியாகத் தோன்றியவர் –ஸ்ரீ சங்கரர் —
உலகைப் படைக்கும் பிரமனுக்கு காரணம் ஆனவர் -கதன் என்பவனுக்கு முன் பிறந்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-
——————————————————————————————
148-அநக –
அப்படி திருவவதரித்தும் பாபத்தின் தொடர்பு சிறிதும் இல்லாதவர் -ஸ்ரீ பராசர பட்டர்–
குற்றம் இல்லாதவர் –ஸ்ரீ சங்கரர் —
பாவங்களுக்குக் காரணமான தோஷங்கள் அற்றவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-
————————————————————————————
149-விஜய –
பிரமன் சிவன் இருவரும் சிருஷ்டி சம்ஹாரம் ஆகிய செயல்களை வெற்றி பெறும்படி செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்–
ஞானம் வைராக்யம் ஐஸ்வர்யம் முதலிய குணங்களால் எல்லாவற்றையும் வெல்பவர் –ஸ்ரீ சங்கரர் —
விசேஷமான வெற்றி யுடையவர் -கருடனுக்கு வெற்றியைத் தருபவர்–ஸ்ரீ சத்ய சந்தர்-
———————————————————————————
150-ஜேதா-
அவர்களைத் தம் நினைவின்படி நிற்கும்படி வென்றவர் -ஸ்ரீ பராசர பட்டர்–
எல்லா பிராணிகளையும் வென்றவர் –ஸ்ரீ சங்கரர் —
வெற்றியை யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-
———————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply