அப்ரமேயோ ஹ்ருஷீகேச பத்ம நாபோ அமரப்ரபு
விஸ்வகர்மா மநு ஸ்த்வஷ்டா ச்தவிஷ்டச் ச்தவிரோத்ருவ –6
அக்ராஹ்யச் சாஸ்வத க்ருஷ்னோ லோஹிதாஷா பிரதர்தன
ப்ரபூதஸ் த்ரிக்கு(ப்)த்தாமா பவித்ரம் மங்களம் பரம் –7
ஈசான பிராணத ப்ராணோ ஜ்யேஷ்டஸ் ஸ்ரேஷ்ட பிரஜாபதி
ஹிரண்ய கர்ப்போ பூ கர்ப்போ மாதவோ மது ஸூ தன–8
ஈஸ்வரோ விக்ரமீ தன்வீ மேதாவீ விக்ரம க்ரம
அனுத்தமோ துராதர்சா க்ருதஜ்ஞ க்ருதிராத்மவான் –9
ஸூ ரேசஸ் சரணம் சர்மா விஸ்வரேதா ப்ரஜாபவ
அஹஸ் சம்வத்சரோ வ்யாள பிரத்யயஸ் சர்வ தர்சன –10-
அஜஸ் சர்வேச்வரஸ் சித்தஸ் சித்திஸ் சர்வாதிரச்யுத
வ்ருஷாகபிரமேயாத்மா சர்வயோகவி நிஸ் ஸ்ருத –11
——————————————————–
பர வாஸூ தேவன் -1-122—122 திருநாமங்கள் –
————————————————————–
51-மநு –
உலக வியாபாரங்களையும் தம் சங்கல்ப லேசத்தினாலே செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
எல்லாவற்றையும் நினைப்பவர் -மந்திர ரூபி -மனு என்னும் சிருஷ்டிகர்த்தா -ஸ்ரீ சங்கரர் –
ஞான ஸ்வரூபியானவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-
—————————————————————
52-த்வஷ்டா –
உலகங்களை தேவர் மனிதர் முதலிய பெயர் உருவங்கள் உள்ளவைகளாக வகுப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
சம்ஹார காலத்தில் எல்லாவற்றையும் அழிப்பவர்-ஸ்ரீ சங்கரர் –
ஒளியுடையவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–
————————————————————————-
53- ஸ்தவிஷ்டா-
மிக்க ஸ்தூலமாக இருப்பவர் -ஸ்தூல ரூபமாகக் காணும் பொருள்கள் எல்லாம் தாமாயிருப்பவர் –
பஹூச்யாம்-சங்கல்ப்பித்துக் கொண்டு -ஸூ ஷ்மமானஅவயகதம் முதலிய க்ரமத்தாலே தேவாதி யோனிகள் ஸ்பர்சாதி குணங்கள்
ஈரேழு லோகங்கள் உட்கொண்ட பிரம்மாண்டம் அதற்கு ஆவரனமான ஸ்தூல வ்யக்தமான
வியஷ்டி கார்யம் என்று விஸ்தாரமாகப் பரந்தவன்-ஸ்ரீ பராசர பட்டர் –
மிகப் பருத்தவர் -ஸ்ரீ சங்கரர் –
மிகவும் பருத்தவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–
—————————————————————————
54-ஸ்தவிர-
காலத்தை எதிர்பார்ப்பதை லீலையாக மட்டும் கொண்டு நினைத்த போது படைக்கும் ஸ்வ தந்த்ரர் –
சங்கல்ப மூலமாக காரணம் என்றாலும் விலஷணன் -காலமும் இவனுக்கு வசப்பட்டதே -ஸ்ரீ பராசர பட்டர் –
தொன்மையானவர் -நிலையானவர் – த்ருவ-தொன்மையான நிலையானவர் -என்று ஒரே திரு நாமம் -ஸ்ரீ சங்கரர் –
முதியவர்–ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–
———————————————————————————
55-த்ருவ
இப்படிப் பலவகை உலகங்களாக மாறியும் ஸ்வரூபம் மாறாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
நிலையானவர்—ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–
——————————————————————————–
56-அக்ராஹ்ய –
மண் நூல் போன்ற காரணங்கள் குயவன் சேணியன் போன்றோரால் கையாளப் படுவது போலே
மற்று ஒருவரால் கையாளப் படாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
கர்ம இந்த்ரியங்களால் அறிய முடியாதவர் -ஸ்ரீ சங்கரர் –
முழுவதுமாக எவராலும் அறியப்பட முடியாதவர் -அவாப்த சமஸ்த காமர் -எவராலும் எளிதில் அடைய முடியாதவர் –
குணங்களால் வியாபித்து இருப்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–
———————————————————————————
57-சாஸ்வத –
படைத்தல் -காத்தல் -அழித்தல்-இடையறாமல் செய்து ஒய்வில்லாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
எல்லாக் காலங்களிலும் இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
எப்போதும் மாறாத ரூபத்தை உடையவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–
—————————————————————————–
58-கிருஷ்ண –
இந்த ஸ்ருஷ்டி முதலிய லீலைகளின் ரசத்தினால் எப்போதும் மகிழ்ந்து இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
சச்சிதானந்த ரூபமாக இருப்பவர் -கருமை நிறம் உள்ளவர் -ஸ்ரீ சங்கரர் –
தனது கட்டளையிடும் சாமர்த்தியத்தினால் உலகை ஈர்ப்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–
————————————————————————————-
59-லோஹிதாஷா –
இந்த மகிழ்ச்சிக்கு அடையாளமாக சிவந்த தாமரைக் கண்களை யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
சிவந்த கண்களை யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –
விரோதிகளிடத்தில் கோபத்தினால் சிவந்த கண்களை யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–
—————————————————————————————–
60-ப்ரதர்தந-
பிரளய காலத்தில் எல்லாவற்றையும் அழிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
பிரளய காலத்தில் பூதங்களை அழிப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
சத்ருக்களைத் துன்புறுத்துவர் – ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–
———————————————————————–
61-ப்ரபூத –
அழியாதவையும் அளவற்றவையுமான போக சாதனங்கள் நிரம்பிய பரமபதத்தை யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
ஞானம் ஐஸ்வர்யாதி குணங்களால் நிறைந்தவர் -ஸ்ரீ சங்கரர் –
மேலான ஆகாசாதி பூதங்களைப் படைத்தவர் -உயர்ந்தவன் -குணங்களால் பரவியிருப்பவன்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-
———————————————————————————–
62-த்ரிககுத்தாமா –
த்ரிபாத் விபூதி என்னும் பரம பதத்தை உடையவர் -த்ரிககுத் -மூன்று கொண்டைகளுடன் கூடிய வராகமாக அவதரித்தவர்-
–தாம -ஒளியுள்ளவர்-என்று இரண்டு திரு நாமம் ஆகவுமாம் –
இப்படி ஸ்ருஷ்டி ஸ்திதி சம்ஹாரம் எல்லாம் அவனுடைய விபூதியிலே அணு அளவேயான லீலா விபூதியை அன்றோ –
த்ரிககுத்தாமா என்றும் த்ரிககுப்தாமா என்றும் சொல்வர் -இரண்டாலும் அவயவங்கள் குறிக்கப் படுகின்றன –
அன்றிக்கே -த்ரிககுப் -எனபது ஞானம் பலம் -ஐஸ்வர்யம் வீர்யம் சக்தி தேஜஸ் -என்று மூவிரண்டுகளாய்-அதற்குத் தர்மியானவன் –
ஆறு குணங்களால் பூரணமானவன் -அதனாகே த்ரி யுகம் என்று கூறப்படுகிறான் -ஸ்ரீ பராசர பட்டர் –
மேல் கீழ் நடு ஆகிய மூவுலகங்களுக்கும் இருப்பிடமானவர் த்ரிககுப்த்தாம -என்று பாடம் -ஸ்ரீ சங்கரர் —
த்ரிககுப்தாம -மூன்று உலகங்களை உடையவர் -த்ரி க்குத் தாம -க்குத் -திமில் –இரு தோள்கள் ஆகியவற்றுடன் கூடிய
வராஹமாக அவதரித்தவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-
———————————————————————————————
63-பவித்ரம் –
குணங்கள் -மகிமைகள் -ரூபம் இவைகளைப் படிகளாகக் கொண்ட பரிசுத்த ஸ்வரூபத்தை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
பரிசுத்தப் படுத்துபவர் -பரிசுத்தப் படுத்தும் ரிஷி -தேவதை -வஜ்ராயுதத்திலிருந்து-இடியில் இருந்து – காப்பவர் -ஸ்ரீ சங்கரர் —
புனிதமாக்குபவர் -வஜ்ராயுதத்தைப் போலே காப்பவர் -சக்ராயுதத்தை யுடையவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-
—————————————————————————————-
64-மங்களம் பரம் –
தோஷம் அனைத்திற்கும் எதிர்தட்டாய் எல்லையற்ற கல்யாண குணங்களை யுடையவர் –
அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணை கத -அவாப்த சமஸ்த காமன் -பர அவஸ்தை -நித்ய த்ருப்தன்-
ஞான மாத்ர ரசம் வாதம் கண்டனம் –
ஞான ஸ்வரூபம் ஆனந்த ஸ்வரூபம் -ஞானத்தாலும் குணத்தாலும் பிரத்யஷமாகப் பார்க்கிறான் -அபேஷிக்காமல் பிரகாசிக்கிறான் –
அதனால் ஞானம் என்றும் ஞானம் உடையவன் என்றும் சொல்லுகிறது –
அவனது கல்யாண குணங்களில் ஞானம் சாரம் என்பதால் ஞான ஸ்வரூபம் என்னவுமாம் –ஸ்ரீ பராசர பட்டர் —
எல்லா பூதங்களைக் காட்டிலும் உயர்ந்த மங்கள ரூபமானவர் -ஸ்ரீ சங்கரர் —
மங்களம் -கல்யாண ரூபம் உடையவர் -பரம் -அனைத்திலும் சிறந்தவர் -என்று இரண்டு திரு நாமங்கள்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-
—————————————————————————————————
65-ஈஸாந –
எல்லாவற்றையும் நிர்வகிப்பதற்குரிய சக்தி ஒரு போதும் குறையாதவர் –
இந்த ஸ்வ பாவம் ஒரு சமயம் பிரகாசிப்பத்தும் மறைந்தும் ஜீவர்களுக்கு இருக்கும்
இவனுக்கு வ்யாவருத்தம் சொல்கிறது –
ஐஸ்வர்யம் சர்வஜ்ஞத்வம் கற்பனையாலோ உபாதியாலோ பரிணாமத்தாலோ என்பார்களைக் கண்டிக்கிறார் –ஸ்ரீ பராசர பட்டர் —
எல்லா பூதங்களையும் நியமிப்பவர் -ஸ்ரீ சங்கரர் —
ருத்ரன் முதலியவர்களை இயக்குபவர் -லஷ்மி தேவிக்கு சுகத்தை தருபவர் -முக்ய பிராணனுக்குத் தலைவர் –
முக்தர்களை நடத்துபவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-
—————————————————————————–
66-பிராணத-
எக்காலமும் தர்சித்து மகிழ்வுடன் நித்ய கைங்கர்யம் செய்யும் சக்தியை நித்ய ஸூ ரிகளுக்கு அளிப்பவர்-
இவனுடைய ஐஸ்வர்யங்களில் முதன்மையானது இது –ஸ்ரீ பராசர பட்டர் —
உயிர்களை நடத்துபவர் -கால ரூபியாக உயிர்களைக் கண்டிப்பவர் -அழிப்பவர்-பிராணன்களை சோதிப்பவர் -கண்டிப்பவர் –ஸ்ரீ சங்கரர் —
பிராணங்களைத் தருபவர் -விசேஷமாக சுகத்திற்கு எதிரான துக்கத்தை அழிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-
———————————————————————————
67-பிராண –
அவர்களுக்கு உயிராக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
உயிராக இருப்பவர் -முக்ய பிராணன் ஆனவர் –ஸ்ரீ சங்கரர் —
செயல்பாடுகளை நன்கு நடத்துபவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-
———————————————————————-
68-ஜ்யேஷ்ட –
தம்மாலும் சூரிகளாலும் எக்காலமும் அனுபவிக்கப் பட்டாலும் கரை காண முடியாத பெரிய ஐஸ்வர்யம் உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
எல்லாவற்றிற்கும் முதன்மையானவர் -எல்லாவற்றுக்கும் காரணம் ஆனவர் -ஸ்ரீ சங்கரர் —
குணங்களாலும் காலத்தாலும் தொன்மையானவர் -மிகச் சிறந்த முறையில் போற்றத தக்கவர் –
ஜ்யேஷ்ட ஸ்ரேஷ்ட -என்று ஒரு திரு நாமம் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-
————————————————————————————-
69-ஸ்ரேஷ்ட
நித்ய சூரிகள் எப்போதும் செய்யும் துதிகளினால் ஆராதிக்கப் படுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
எல்லா வற்றுக்கும் மேம்பட்டவர் -எல்லா வகையாலும் உயர்ந்தவர்–ஸ்ரீ சங்கரர் —
—————————————————————————–
70- பிரஜாபதி –
பக்த முக்தர்களைக் காட்டிலும் உயர்ந்தவர்களான நித்ய சூரிகளுக்குத் தலைவர் –
அவர்கள் யார் என்றும் அவர்களுக்கு உள்ள சம்பந்தமும் சொல்லுகிறது -ஸ்ரீ பராசர பட்டர் —
ஈஸ்வரர் என்பதனால் பிரஜைகளுக்கும் அதிபதி –ஸ்ரீ சங்கரர் —
பிரஜைகளைக் காப்பவர் -தனக்கு மேம்பட்ட பத்தி இல்லாதவராய் உலகை நன்கு படைப்பவர் –ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-
—————————————————————————————-
71-ஹிரண்யகர்ப்ப –
இதமாகவும் மகிழ்ச்சியைத் தருவதாகவும் உள்ளதனால் ஹிரண்யம் எனப்படும் பரம பதத்தில் நித்யமாக வசிப்பவர் –
இப்படி அனுபவிக்கும் தேச விசேஷம் கூறப்படுகிறது –
தோஷம் அற்றதாய் -நித்யமாய் -பரம சத்வ மயமாகத் தங்கம் போலே இருப்பதால் -ஸ்ரீ பராசர பட்டர் —
பொன் மயமான அண்டத்தில் உள்ள பிரமனுக்கு ஆத்மாவானவர் –ஸ்ரீ சங்கரர் —
பொன்னிறம் கொண்ட பிரம்மாண்டத்தை கர்ப்பத்தில் உடையவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-
—————————————————————————-
72-பூ கர்ப்ப –
இனி -அவனுக்கு திவ்ய மகிஷிகள் உள்ளமை கூறப்படுகின்றது –
பூமி தேவியைக் கர்ப்பத்தில் வைப்பது போலே வைத்துக் காப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
பூமியைக் கர்ப்பத்தில் வைத்து இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
தேவர்களை யுண்டாக்குபவர்-பூமியை கர்ப்பத்தில் யுடையவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-
———————————————————————————
73-மாதவ –
மா எனப்படும் திருமகளுக்கு கேள்வன் -இவளுக்கு ஸ்வரூபத்தை போலவே நித்ய நிர்மலமான ரூபம் ஸ்வா பாவிகமான பரம ஐஸ் வர்யம்
உலகு அனைத்துக்கும் தாயாக இருக்கும் தன்மை -எம்பெருமான் யுடன் நித்தியமான ஸ்வா பாவிகமான தொடர்பு ஆகியவை
தத்வ பர சாஸ்திரங்களான ஸ்ரீ ஸூ கதம் -சரத்தா ஸூ க்தம் மேதா ஸூ க்தம்-உத்தர நாராயணம் –
கௌஷீதகீ ப்ராஹ்மணம் முதலியவற்றால் விரிவாகச் சொல்லப் படுகின்றன -ஸ்ரீ பராசர பட்டர் —
மா எனப்படும் திருமகளுக்கு கேள்வன் -மது வித்யையினால் அறியப்படுபவர் -மௌனம் த்யானம் யோகம் இவற்றால்
மாதவனை அறியாவாக -வியாசர் என்பதால் மாதவன் -ஸ்ரீ சங்கரர் –
லஷ்மிக்கு கணவன் -தனக்கு யஜமானன் இல்லாதவன் -மதுவின் வம்சத்தில் உதித்தவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-
———————————————————————————————————–
74-மது ஸூதந-
மது முதலிய அசுரர்களை அழிப்பதனால் லஷ்மியானவள் தம்மிடம் நிலைத்து இருப்பவர் -நித்ய சூரிகளின் இந்த்ரியங்களைத்
தடைகள் இல்லாமல் தம்மிடம் ஈர்ப்பவர் -மது -எனபது இந்திரியங்களைக் குறித்து அவற்றைத் தம்மிடம் ஈர்ப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
மது என்னும் அசுரனை அழித்தவர்-ஸ்ரீ சங்கரர் –
சிறந்த ஞானமுடைய ஜீவர்களை சுகம் மிகுந்த இடத்திற்கு அழைத்துச் செல்பவர் –
மது என்னும் அசுரனைக் கொன்றவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-
——————————————————————————————————-
75-ஈஸ்வர –
அளவில்லாத நித்ய விபூதியிலும் தடையில்லாத சங்கல்பம் உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
எல்லாம் வல்லவர் ஆதலால் ஈஸ்வரர் -ஸ்ரீ சங்கரர் –
ஈச எனப்படும் பிரம்மா முதலியவர்களைக் காட்டிலும் மேம்பட்டவர் –
லஷ்மீ தேவியையும் வாயுவையும் பிரகாசிக்கச் செய்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-
————————————————————————————————-
76-விக்ரமீ-
நினைத்தது தடைபடும் வாய்ப்பே இல்லாமல் நினைத்ததை முடிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
சௌர்யத்தை யுடையவர் -ஸ்ரீ சங்கரர் –
தனது அவதாரங்களில் ஏற்றத் தாழ்வு இல்லாதவர் -பராக்ரமத்தை யுடையவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-
————————————————————————————-
77-தன்வீ-
இப்படிப்பட்ட தமக்குத் தகுந்த உயர்ந்த சார்ங்கம் என்னும் வில்லை யுடையவர் –
எல்லா திவ்ய ஆயுதங்களோடும் கூடியவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
வில்லை யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –
வில்லை யுடையவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-
—————————————————————————————-
78-மேதாவீ-
கால தேச வரையரை யற்ற மகிமைக்கு உதவியாக -ஸ்வா பாவிக சர்வஜ்ஞத்வம் யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
பல கிரந்தங்களை தரிக்கும் திறமை உள்ளவர் -ஸ்ரீ சங்கரர் –
அறிவுடையவள் ஆதலால் மேதாவீ-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-
——————————————————————————————–
79-விக்ரம-
வேத மூர்த்தியான கருடனைக் கொண்டு விரும்பியபடி எழுந்து அருளுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
உலகத்தை அளந்தவர் -கருடனை வாகனமாகக் கொண்டவர் -ஸ்ரீ சங்கரர் –
திரிவிக்கிரம அவதாரத்தில் மென்மையான அடிகளை யுடையவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-
—————————————————————————–
80-க்ரம-
இப்படி அளவற்ற நித்ய ஐஸ்வர் யத்தால் எல்லாவற்றையும் வியாபித்து வளர்ந்து இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
வ்யாபித்தவர் -உலகம் வியாப்பிப்பதற்கு காரணம் ஆனவர் -ஸ்ரீ சங்கரர் –
வேதங்களில் தேவதையாக இருப்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-
—————————————————————————–
81-அநுத்தம-
அதனால் தமக்கு மேம்பட்டவர் இல்லாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
மேம்பட்டார் இல்லாதவர் -ஸ்ரீ சங்கரர் —
மேம்பட்டவர் இல்லாதவர் -தம்மை நியமிப்பவர் இல்லாத மிக உயர்ந்தவர் -நிரந்தரமான செல்வம் ஞானம் யுடையவர் –
துன்பம் அற்ற லஷ்மி தேவியை யுடையவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-
———————————————————————-
82-துராதர்ஷ-
கடல் போலே ஆழ்ந்து இருப்பதால் கலக்க முடியாதவர் -கீழ்ச் சொன்னவைகளில் கோஷிக்கப் பட்டதாய் -காலத்துக்கு அப்பாற்பட்டதாய்
அழியாததாய் -மாறுபாடு இல்லாததாய் -தமஸ்ஸூக்கு அப்பால் பட்டதாய் -நித்தியமாய் -மீண்டு வருதல் இல்லாத ஸ்தானமாய்-
பகவத் ஸ்வரூபம் போலே விளங்கும் பரமபதம் ஓன்று மட்டுமே இரண்டாவது இல்லை –
சத் இல்லை அசத் இல்லை -ஸ்ருதி வாக்யங்களால் ஒன்றே -இரண்டாவது இல்லை என்று கூறப் பட்டதாய் –
நித்தியமான பரம பதத்தில் ஸ்ரீ தேவி பூமி தேவி நீளா தேவி போன்ற மகிஷிமார்களுடன் கூடி
பர்யங்க வித்யையின் படி ரத்ன மயமான திவ்ய ஸ்தானத்திலே திவ்யமான மஞ்சத்தின் மீது எழுந்து அருளி
அநந்தன் விஸ்வக்சேனர் முதலிய நித்ய சூரிகளால் எப்போதும் கைங்கர்யம் செய்யப் பெற்ற
திருவடிகளை யுடையவனாக விளங்கும் சகல வேத ரஹச்யமான சர்வ ஐஸ்வர்யம் விளக்கப்பட்டது-ஸ்ரீ பராசர பட்டர் —
அசுரர் முதலியவர்களால் வெல்ல முடியாதவர் -ஸ்ரீ சங்கரர் —
பிறரால் அவமானப் படுத்த முடியாதவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-
———————————————————————
83-க்ருதஜ்ஞ-
ஆத்மாவிற்கு நிலை நின்ற ஸ்வரூபம் கைங்கர்யம் என்பதையும் தனக்கு என்று ஒன்றும் இல்லை எனபதையும் மறந்து
அவித்யையால் தங்களை ஸ்வதந்த்ரராக நினைத்து பிறப்பு இறப்பு களை யுடைய உலக வாழ்வில் அகப்பட்டு
உழலும் சம்சாரிகள் செய்யும் சிறிய உபசாரங்களையும் மறவாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
இலை பூ போன்ற எளியவற்றை அளிப்பவர்களுக்கும் மோஷம் தருபவர் -பிரஜைகள் செய்யும் புண்ய பாப கர்மங்களை அறிபவர் -ஸ்ரீ சங்கரர் —
தனக்குச் செய்யப்பட்டு வழி பாட்டை நன்றியுடன் நினைப்பவர் -செய்யும் செயல்களை அறிபவர் –
எல்லா பொருள்களையும் அறிந்தவர் -ஜீவர்களை பிறப்பிப்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-
————————————————————————————————————
84-க்ருதி-
அதற்குரிய ஸூஹ்ருதத்தையும் தாமே கொடுப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
எல்லாம் தாமாகவே இருப்பதால் எல்லாச் செய்கைகளுக்கும் ஆதாரமானவர் -புருஷ பிரயத்னமாக -அல்ல செயலாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் —
முயற்சி ரூபம் உள்ளவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-
————————————————————————————————
85-ஆத்மவான் –
அந்த ஆத்மாக்களின் ஸ்வரூபம் செய்கை முதலியவற்றை எல்லாம் தமது அதீனத்தில் யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
தம்முடைய மகிமையே தமக்கு ஆதாரமாக யுள்ளவர் -ஸ்ரீ சங்கரர் —
பிரமனை யுடையவர் -அழியாத திருமேனி உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-
———————————————————————————————–
86- ஸூரேஸ-
பிரம்மா முதலிய தேவர்களையும் அவரவர் அதிகாரங்களில் நியமிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
தேவர்களுக்குத் தலைவர் -நன்மையைக் கொடுப்பவர்களுக்குத் தலைவர் -ஸ்ரீ சங்கரர் —
தேவர்களுக்குத் தலைவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–
—————————————————————-
87-சரணம் –
எல்லோருக்கும் அடையும் சரணமாகவும் -தம்மை அடைவதற்கு உபாயமாகவும் இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
துன்பப் படுபவர்களின் துன்பத்தைப் போக்குபவர் –ஸ்ரீ சங்கரர் –
எல்லோருக்கும் அடைக்கலமாகவும் காப்பாற்றுவராகவும் இருப்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–
——————————————————————————————-
88-ஸர்ம-
ஸூக ரூபமாகவும் பயனாகவும் இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
பரமானந்த ரூபமாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
அசுபங்களைப் போக்குபவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–
—————————————————————–
89-விஸ்வரேத-
உலகங்கட்கு எல்லாம் மூல காரணமாய் இருப்பவர் -அவனே உபாயமாகவும் உபேயமாகவும் இருப்பவர் –
தானே சர்வ காரணம் என்று அறிந்து தனது திருவடிகளிலே கைங்கர்யம் செய்யவே
ஞான கர்ம இந்த்ரியங்களை கொடுத்து அருளினவன் -ஸ்ரீ பராசர பட்டர் —
உலகங்கங்களுக்கு எல்லாம் காரணமாய் இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
உலகுக்குக் காரணமானவர் -வாயுவிற்கு காரணம் ஆனவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–
—————————————————————–
90-பிரஜாபவ –
எல்லா பிரஜைகளும் தாம் கொடுத்த சாதனங்களைக் கொண்டே தம்மைச் சேரும்படி அவைகளுக்கு இடமாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
எல்லா பிரஜைகளின் உற்பத்திக்கும் காரணமாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் —
தம்மை நினைப்பூட்டும் ஞானிகளுக்கு ஸ்ரீ வைகுண்டம் முதலிய வற்றைத் தருபவர் -பிரஜைகளைப் படைப்பவர் –
பிரஜைகளையும் நஷத்ரங்களையும் நடத்துபவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–
————————————————————————————
91-அஹ-
அநாதி மாயையினால் உறங்கி-அவித்யையில் இருந்து – எழுந்தவனுக்கு முதலில் தம் ஸ்வரூபத்தைக் காட்டுவதால்
பகல் போன்றவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
ஒளிமயமாய் இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் —
ஜீவனைக் காட்டிலும் வேறுபட்டவர் -விடத் தகாதவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–
——————————————————————————-
92-சம்வத்சர –
அப்படி எழுந்தவர்களின் அறிவில் சேர்ந்து வசிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
கால ரூபியாய் இருத்தலால் வருடமாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் —
காலத்தை நியமிப்பவராக வருடத்தில் இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–
————————————————————————————
93-வ்யால-
அவர்களை அங்கீ கரித்துத் தமக்கு உட்படுத்துபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
பாம்பைப் போல் யானையைப் போல் எவராலும் பிடிக்க முடியாதவர் -ஸ்ரீ சங்கரர் —
கௌஸ்துபம் முதலிய விசேஷமான அணிகலன்களை யுடையவர் -பக்தர்களுக்காகவே அனைத்தையும் அளிக்க முயல்பவர் –
ஸ்ருஷ்டியாதிகளுக்கு தாம் ஒருவரே -பகைவர்களை அழிப்பவர்-அனைத்து காரணமானவர் –
விசேஷமாக பிரகாசிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–
—————————————————————————–
94-ப்ரத்யய –
அவர்களுக்குத் தம்மிடத்தில் நம்பிக்கை யுண்டாக்குபவர்-ஸ்ரீ பராசர பட்டர் –
ஞானமே வடிவானவர் -ஸ்ரீ சங்கரர் —
அனைத்தையும் அறிந்தவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–
—————————————————————————-
95-சர்வ தர்சன –
அவர்கள் தம்மிடத்தில் உள்ளது எல்லாம் காணும்படி செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
எல்லாவற்றையும் கண்களாக யுடையவர்-எல்லாவற்றையும் அறிபவர் -ஸ்ரீ சங்கரர் —
சம்ஹாரம் செய்யும் ருத்ரனுக்கு ஞானத்தைக் கொடுப்பவர் -அனைத்தையும் பிரத்யஷமாக காண்பவர் –
எல்லா தர்ச புண்ய காலங்களிலும் அமாவாச்யைகளிலும் ஹவிஸ்சை எடுத்துச் செல்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-
——————————————————————————————
96-அஜ –
அவர்கள் தம்மை அடைவதற்கு இடையூறுகளை தாமே விலக்குபவர்–ஸ்ரீ பராசர பட்டர் –
பிறப்பற்றவர்-ஸ்ரீ சங்கரர் —
பிறப்பற்றவர் -செல்பவர் – ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்
——————————————————————–
97-சர்வேஸ்வர –
தன்னைச் சரணம் அடைந்தவர்களைத் தாமே விரைவாக அவர்களிடம் செல்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
ஈஸ்வரர்களுக்கு எல்லாம் ஈஸ்வரர் -ஸ்ரீ சங்கரர் —
எல்லோருக்கும் ஈஸ்வரர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-
—————————————————————————-
98-சித்த –
உபாயாந்தரங்களால் அன்றி தாமே சித்த உபாயமாய் இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
என்றைக்கும் உள்ள தன்மையை யுடைய நித்யர் -ஸ்ரீ சங்கரர் —
அடையப் பெறுபவர் -எப்போதும் ஞான வடிவினர் -அடியவர்களில் காக்க சித்தமாக உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-
——————————————————————————-
99- சித்தி –
உபாயங்களினால் தேடப்படும் பலனுமானவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
எல்லாவற்றிலும் சிறந்த பயனாய் ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-
————————————————————————–
100-சர்வாதி –
உயர்வும் தாழ்வும் ஆகிற எல்லாப் பயங்களுக்கும் தாமே காரணமாய் இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
எல்லா பூதங்களுக்கும் காரணம் ஆனவர் -ஸ்ரீ சங்கரர் —
அனைத்திற்கு காரணம் ஆனவர் -எல்லாராலும் ஏற்கப் பெறுபவர் -எல்லாம் உண்பவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-
—————————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply