ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் தனியன் –
லோகாசார்யாய குரவே கிருஷ்ண பாதச்ய ஸூ நவே
சம்சார போகி சந்தஷ்ட ஜீவா ஜீவாதவே நம-
வாழி உலகாசிரியன் வாழி யவன் மன்னு குலம்
வாழி முடும்பை என்னும் மா நகரம் -வாழி
மனம் சூழ்ந்த பேரின்ப மல்கு மிகு நல்லார்
இனம் சூழ்ந்து இருக்கும் இருப்பு –
———————————————————————————
சம்சாரியான சேதனனுக்கு தத்வ ஜ்ஞானம் பிறந்து உஜ்ஜீவிக்கும் போது அர்த்த பஞ்சக ஜ்ஞானம் யுண்டாக வேணும் –
அர்த்த பஞ்சக ஜ்ஞானம் ஆவது –1- ஸ்வ ஸ்வரூப /2- பர ஸ்வரூப /3- புருஷார்த்த ஸ்வரூப /
4- உபாய ஸ்வரூப /5- விரோதி ஸ்வரூபங்களை -உள்ளபடி அறிக்கை –
இவற்றில் ஒரொரு விஷயம் தான் அஞ்சு படிப் பட்டு இருக்கும் –
1- ஸ்வ ஸ்வரூபம் -என்கிறது -ஆத்ம ஸ்வரூபத்தை –ஆத்ம ஸ்வரூபம் தான் நித்யர் -முக்தர் -பத்தர் -கேவலர் – -முமுஷூக்கள் -என்று ஐந்து
2-பர ஸ்வரூபம் -என்கிறது ஈஸ்வர ஸ்வரூபத்தை -ஈஸ்வர ஸ்வரூபம் தான் -பரத்வம் வ்யூஹம் விபவம் அந்தர்யாமித்வம் அர்ச்சாவதாரம் என்று ஐந்து –
3- புருஷார்த்த ஸ்வரூபம் -என்கிறது புருஷனாலே அர்த்திக்கிப்படுமது புருஷார்த்தம் –
அந்தப் புருஷார்த்தம் தான் -தர்ம -அர்த்த -காம -ஆத்மானுபவம் -பகவத் அனுபவம் -என்று ஐந்து
4- உபாய ஸ்வரூபம் என்கிறது கர்ம ஜ்ஞான பக்தி பிரபத்தி ஆச்சார்யா அபிமானம் என்று ஐந்து –
5-விரோதி ஸ்வரூபம் என்கிறது -ஸ்வரூப விரோதி பரதவ விரோதி -புருஷார்த்த விரோதி -உபாய விரோதி -ப்ராப்தி விரோதி என்று ஐந்து –
—————————————————————————————
1-இவற்றில் நித்யராவார் -ஒரு நாளும் சம்சார சம்பந்தம் ஆகிற அவத்யம் இன்றிக்கே நிரவத்யராய் -பகவத் அனுபவ -அனுகூல்யைக போகராய்
வானிளவரசு வைகுந்தக் குட்டன் வாசுதேவன் -பெரியாழ்வார் -3-6-3-என்கிற ஸ்ரீ வைகுண்ட நாதனுக்கு
விண்ணாட்டவர் மூதுவர் -திரு விருத்தம் -2-என்கிறபடி பட்டம் கட்டுகைக்கு உரியராம்படி மூப்பரான மந்த்ரி களாய்
ஈஸ்வர நியோகாத் சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரங்களைப் பண்ணவும் சக்தராய்
பர வ்யூஹாதி சர்வ அவச்தைகளிலும் தொடர்ந்து அடிமை செய்யக் கடவராய்
கோயில் கொண்டான் தன் திருக் கடித்தானத்தை கோயில் கொண்டான் அதனோடு என்நெஞ்சகம்
கோயில் கொள் தெய்வம் எல்லாம் தொழ வைகுந்தம் கோயில் கொண்ட குடக் கூத்த வம்மானே -திருவாய் -8-6-5-என்றபடி
கோயில் கொள் தெய்வங்களான -சேனை முதலியார் தொடக்கமான அமரர்கள்-
2-முக்தராவார் -பகவத் பிரசாதத்தாலே பிரகிருதி சம்பந்தத்தால் வந்த க்லேசங்கள் எல்லாம் கழிந்து
பகவத் ஸ்வரூப ரூப குண விபவங்களை அனுபவித்து அவ் வநுபவ ஜனித ப்ரீதி உள்ளடங்காமையாலே வாயாரப் புகழ்ந்து
மீட்சியின்றி வைகுண்ட மா நகரத்திலே -திருவாய் -4-10-11-களித்து ஆனந்திக்கிற முனிவர்கள் –
3-பத்தராவார் -பாஞ்ச பௌதிகமாய்-அநித்யமாய்-ஸூக துக்க அநுபவ பரிகரமாய் -ஆத்ம விச்லேஷத்தில் தர்சன ஸ்பர்சன யோக்யம் அல்லாதபடி
அஸூத்தாஸ்பதமாய்- அஜ்ஞான அந்யதா ஜ்ஞான விபரீத ஜ்ஞான ஜநகமான ஸ்வ தேஹமே ஆத்மாவாகவும் -சப்தாதி விஷய அநுபவ ஜனிதமான
ஸ்வ தேக போஷணமே புருஷார்த்தமாகவும்-சப்தாதி விஷய அனுபவத்துக்கு உறுப்பாக வர்ணாஸ்ரம தர்மங்களை அழிய மாறியும்
-அசேவ்ய சேவை பண்ணியும் -பூத ஹிம்சை பண்ணியும் -பர தார பர த்ரவ்ய அபஹாரம் பண்ணியும் -சம்சார வர்த்தகராய்-பகவத் விமுகரான சேதனர்-
4-கேவலன் ஆவான் -தனியிடத்திலே மிகவும் ஷூத்பிபாசைகளால் நலிவு பட்டவன் –
பஷ்ய அபஷ்ய விவேகம் பண்ண மாட்டாதே தன்னுடம்பைத் தானே ஜீவித்து பிரசன்னனாமா போலே சம்சார தாப அக்நியாலே தப்தனானவன்
சம்சார துக்க நிவ்ருத்திக்கு உறுப்பாக சாஸ்திர ஜன்ய ஜ்ஞானத்தாலே பிரக்ருதியாத்ம விவேகம் பண்ணி
பிரகிருதி -துக்காஸ்ரயமாய் -ஹேய பதார்த்த சமுதமாய் இருக்கிற ஆகாரத்தையும்
ஆத்மா ப்ரக்ருதே பரனாய் -பஞ்ச விம்சகனாய் -ஸ்வயம் பிரகாசனாய் -ஸ்வதஸ் ஸூகியாய்-நித்யனாய் அப்ராக்ருதனாய் இருக்கிற ஆகாரத்தையும் அனுசந்தித்து
முன்பு தான் பட்ட துக்கத்தின் கனத்தாலே இவ்வல்ப ரசத்திலே கால் தாழ்ந்து
உணர் முழு நலமான-திருவாய் -1-1-2-பரமாத்மா விவேகம் பண்ண மாட்டாதே அமுத வெள்ளத்தானாம்-திருவாசிரியம் -2- சிறப்பு விட்டு
அவ்வாதம பிராப்திக்கு சாதனமான ஜ்ஞான யோகத்திலே நிஷ்டனாய் -யோக பலமான ஆத்ம அநுபவ மாத்ரத்தையே புருஷார்த்தமாக அனுபவித்து
பின்பு சம்சார சம்பந்தமும் பகவத் பிராப்தியும் அற்று யாவதாத்மபாவி அசரீரியாகக் கொண்டு திரிவான் ஒருவன் –
5-மோஷத்தில் இச்சை யுடையவர்களுக்கு முமுஷூக்கள் என்று பேராகக் கடவது –
இது தான் முமுஷூக்களாய்-உபாசகராயிருப்பாரும் -முமுஷூக்களாய் பிரபன்னராய் இருப்பாருமாய்-இரண்டு படியாய் இருக்கும்-
———————————————————————————-
1-ஈஸ்வர விஷயத்தில் பரத்வமாவது -பரம பதத்திலே -அவாக்ய அநாதர-என்று எழுந்தி அருளி இருக்கிற
ஆதி யஞ்சோதி யுருவான-திருவாய் -3-5-5-பர வாஸூ தேவர் –
2-வியூகம் ஆவது -சிருஷ்டி ஸ்திதி சம்ஹார கர்த்தாக்களான சங்கர்ஷண பிரத்யும்ன அநிருத்தர்கள் –
3- விபவமாவது -ராம க்ருஷ்ணாத் யவதாரங்கள்
4- அந்தர்யாமித்வம் இரண்டு படிப்பட்டு இருக்கும் -அதாவது –
4-1–அடியேன் உள்ளான் -திருவாய் -8-8-2–என்றும்
எனதாவி -திருவாய் -2-3-4- என்றும் -என்னுயிர் -திருவாய் -9-5-1-என்றும் -சொல்லுகிறபடியே ஆத்மாவுக்கும் உள்ளும்
4-2–போதில் கமல் வன்னெஞ்சம் புகுந்து -பெரியாழ்வார் -5-2-8-என்றும் -அரவிந்தப் பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து -பெரியாள் -5-2-10- என்றும்
உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி -திரு மாலை -16- என்றும் சொல்லுகிறபடியே
லஷ்மீ சஹிதனாய்-விலஷண விக்ரஹ யுக்தனாய்க் கொண்டு ஹ்ருதயக் கமலத்துக்கு உள்ளே சகல பிரவ்ருத்தி நிவ்ருத்திகளையும்
சதா அவலோகனம் பண்ணிக் கொண்டு எழுந்து அருளி இருக்கும் இருப்பு
5- அர்ச்சாவதாரமாவது தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே தமருகந்ததெப்பேர் மற்றப்பேர் -முதல் திரு -44-என்கிறபடியே
தனக்கு என ஒரு உருவும் ஓர் பெயரும் இன்றிக்கே ஆஸ்ரிதர் உகந்த வடிவே வடிவாகவும் -அவர்கள் இட்ட பெயரே பெயராகவும்
சர்வஜ்ஞனாய் இருக்கச் செய்தேயும் அஜ்ஞனைப் போலேயும் -சர்வ சக்தனாய் இருக்கச் செய்தேயும் அசக்தனைப் போலேயும்
அவாப்த சமஸ்த காமனாய் இருக்கச் செய்தேயும் சாபேஷனைப் போலேயும் -ரஷகனாய் இருக்கச் செய்தேயும் ரஷ்யம் போலேயும்
ஸ்வ ஸ்வாமி பாவத்தை மாறாடிக் கொண்டு கண்ணுக்கு விஷயமாம்படி சர்வ ஸூ லபனாய்க் கொண்டு கோயில்களிலும் கிருஹங்களிலும்
தேச கால அவதி இன்றிக்கே எழுந்து அருளி இருக்கும் நிலை –
————————————————————————————–
1-புருஷார்த்தங்களில் தர்மம் ஆவது -பிராணி ரஷணத்துக்கு உறுப்பாகப் பண்ணும் வ்ருத்தி விசேஷங்கள் –
2- அர்த்தம் ஆவது -வர்ணாஸ்ரம அநுரூபமாக தந தாஞாதிகளை சங்க்ரஹித்து -தேவதா விஷயங்களிலும் -பைத்ருகமான கர்மங்களிலும்
பிராணிகள் விஷயமாகவும் உத்க்ருஷ்டமான தேச கால பாத்ரங்களை யறிந்து தர்ம புத்த்யா வ்யயிக்கை –
3- காமமாவது -ஐஹ லௌகிகமாயும்-பார லௌகிகமாயும் த்விவிதமாய் இருக்கும்
3-A-இஹ லோகத்தில் காமமாவது -பித்ரு மாத்ரு ரத்ன தந தான்யா வஸ்த்ர அன்ன பான புத்திர மித்ர களத்ர பஸூ
க்ருஹ ஷேத்ர சந்தன குஸூம தாம்பூலாதி பதார்த்தங்களில் சப்தாதி விஷய அனுபவத்தால் வந்த ஸூக விஷயங்கள் –
3-B -பர லோகத்தில் காமமாவது -இதில் விலஷணமாய் தேஜோ ரூபமான ஸ்வர்க்காதி லோகங்களிலே சென்று
பசி தாக சோக மோஹ ஜரா மரணாதிகள் இன்றிக்கே ஆர்ஜித்த புண்யத்துக்கு ஈடாக அம்ருத பானம் பண்ணி
அப்சரஸ் ஸூக்களோடு சப்தாதி விஷய அனுபவம் பண்ணுகை-
4-ஆத்ம அனுபவம் ஆவது துக்க நிவ்ருத்தி மாத்ரமான கேவல ஆத்ம அநு பவ மாத்ரத்தையும் மோஷம் என்று சொல்லுவர்கள்-
5-இனி பகவத் அநு பவ ரூபமான பரம புருஷார்த்த லஷண மோஷமாவது-பிராரப்த கர்ம சேஷமாய் அவஸ்யம் அநு பாவ்யமான புண்ய பாபங்கள் நசித்து –
அஸ்தி -ஜாயதே -பரிணமதே-விவர்த்ததே -அபஷீயதே -விநச்யதி-என்கிறபடியே ஷட்பாவ விகாராஸ்பதமாய்-தாபத்ராஸ்ரயமாய் –
பகவத் ஸ்வரூபத்தை மறைப்பித்து விபரீத ஜ்ஞானத்தை ஜநிப்பிக்கக் கடவதாய் -சம்சார வர்த்தகமான ஸ்தூல சரீரத்தை உபேஷையோடே பொகட்டு
ஸூஷூம்நா நாடியாலே சிரகபாலத்தைப் பேதித்துப் புறப்பட்டு ஸூஷ்ம சரீரத்தோடு வானேற வழி பெற்று
மன்னும் கடும் கதிரோன் மண்டலத்தின் நன்னடுவுள் அன்னதோர் இல்லியினூடு போய்-பெரிய திருமடல் -ஸூஷ்ம சரீரத்தையும் -வாஸநா ரேணுவையும் விரஜா ஸ்நானத்தாலே கழித்து
சகல தாபங்களும் ஆறும்படி அமாநவ கர ஸ்பர்சமும் பெற்று
ஸூத்த சத்வாத்மகமாய் பஞ்ச உபநிஷண்மயமாய் -ஜ்ஞானானந்த ஜனகமாய் -பகவத அநு பவைக பரிகரமாய்
ஒளிக் கொண்ட சோதியுமாய் -திருவாய் -2-3-10-இருக்கிற அப்ராக்ருத விக்ரஹத்தைப் பெற்று
முடியுடை வானவர் முறை முறை எதிர் கொள்ள -திருவாய் -10-9-8- நிரதிசய ஆனந்த மயமான திரு மா மணி மண்டபத்தை ப்ராபித்து
லஷ்மீ சஹிதனாய் பூமி நீளா நாயகனாய் -விலஷண விக்ரஹ உக்தனாய் -குழுமித் தேவர் குழாங்கள் கை தொழச் சோதி வெள்ளத்தின் உள்ளே
-எழுவதோர் உருவான ஸ்ரீ வைகுண்ட நாதனை திருவாய் -5-5-10- -நித்ய அநு பவம் பண்ணி -நித்ய கிங்கரர் ஸ்வபாவனாகை-
————————————————————————-
1-உபாயங்களில் கர்ம யோகமாவது -யஜ்ஞ தான தபோ சந்த்யாவந்தன பஞ்ச மகா யஜ்ஞ அக்னி ஹோத்ர தீர்த்த யாத்ரா புண்ய ஷேத்ர வாஸ
க்ருச்சர சாந்த்ராயண புண்ய நாத ஸ்நான வ்ரத சாதுர்மாஸ்ய ஜப தர்ப்பணாதி தர்ம அனுஷ்டா நத்தாலே வந்த காயஸோ ஷணத்தாலே பாப நாசம் பிறந்து –
அத்தாலே இந்த்ரியத்வாரா பிரசரிக்கிற தர்மபூத ஜ்ஞானத்துக்கு சப்தாதிகள் விஷயம் அல்லாமையாலே விஷய சாபேஷை பிறந்து
யம நியம ஆசன ப்ராணாயாம ப்ரத்யாஹார தான தாரண சமாதி ரூபமான அஷ்டாங்க யோக க்ரமத்தாலே
யோக அப்யாச காலத்தளவும் ஜ்ஞானத்துக்கு ஆத்மாவை விஷயம் ஆக்குகை-இது தான் ஜ்ஞான யோகத்துக்கு சஹகாரியுமாய்
ஐஸ்வர்யத்துக்கு பிரதான சாதனமுமாய் இருக்கும் –
2- ஜ்ஞான யோகமாவது இப்படி யோக ஜன்யமான ஜ்ஞானத்துக்கு -ஹ்ருதய கமலம் -ஆதித்ய மண்டலம் தொடக்கமான ஸ்தல விசேஷங்களில்
எழுந்து அருளி இருக்கிற சர்வேஸ்வரனை விஷயமாக்கி
அவ்விஷயம் தன்னை சங்க சக்ர கதா தரமாய் -பீதாம்பர யுக்தமாய் -க்ரீடாதி நூபுராந்த திவ்ய பூஷண அலங்க்ருதமாய்
லஷ்மீ சஹிதமாகவும் அனுசந்தித்து யோகாப்யாச க்ரமத்தாலே அனுபவ காலத்தைப் பெருக்கி அநவரத பாவநா ரூபமாக்குகை –
இது தான் பக்தி யோகத்துக்கு சஹகாரியமாய் கைவல்ய மோஷத்துக்கும் பிரதான சாதனமுமாய் இருக்கும் –
3- பக்தி யோகமாவது -இப்படி தைலதாராவாத விச்சின்ன ஸ்ம்ருதி சந்தான ரூபமான அனுபவம் ப்ரீதி ரூபா பன்னமாகையும்
அது தன்னை அறியப் பார்த்தால் பிராரப்த கர்மம் கழிகையும் சாதன சாத்யங்களை அனுசந்தித்து அதினுடைய சங்கோச விகாசமாமாம்படி பரிணமிப்பைக்கையும்-
4-பிரபத்த்யுபாயம் ஆவது -இப்படி கர்ம ஜ்ஞான சஹாக்ருதையான பக்தி யோகத்தில் அசக்தர்க்கும் அப்ராப்தர்க்கும் ஸூ கரமுமாய்
சீகர பலப்ரதமுமாய் -உபாயம் சக்ருத்தாகையாலே உபாய அனுஷ்டான சமநந்தரம் யுண்டாகக் கடவதான பகவத் விஷய அனுபவங்கள்
எல்லாம் ப்ராப்ய கோடி கடிதங்கள் ஆகையாலே ஸ்வரூப அனுரூபமாய் இருக்கும் –
இது தான் 4-A -ஆர்த்த ரூப பிரபத்தி என்றும் -4-B -த்ருப்த ரூப பிரபத்தி என்றும் இரண்டு படிப் பட்டு இருக்கும் –
4-A -ஆர்த்த ரூப் பிரபத்தி யாவது -நிர்ஹேதுக பகவத் கடாஷம் அடியாக சாஸ்திர அப்யாசத்தாலும் சதாசார்யா உபதேசத்தாலும்
யதாஜ்ஞானம் பிறந்தவாறே பகவத் அனுபவத்துக்கு விபரீதமான தேக சம்பந்தமும் -தேச சம்பந்தமும் -தேசிகருடைய சஹவாசமும் -துஸ் சஹமாய்
பகவத் அனுபவத்துக்கு ஏகாந்த மாம்படி விலஷணமான தேஹத்தையும் தேசத்தையும் தேசிகரையும் ப்ராபிக்கையில் த்வரை விஞ்சி
ஓயும் மூப்புப் பிறப்பு இறப்புப் பிணி வீயுமாறு செய்வான் திரு வேங்கடத்தாயன் -திருவாய் மொழி -3-3-9-என்றும்
திருவேங்கடத்தானே புகலொன்றில்லா அடியேன்-திருவாய் -6-10-10-என்றும்
வேங்கடதுறைவார்க்கு நம-திருவாய் -3-3-6-என்று பூர்ண பிரபத்தி பண்ணி
பல நீ காட்டிப் படுப்பாயோ -திருவாய் -6-9-9-என்றும் -இன்னம் கெடுப்பாயோ -6-9-8- என்றும் –
இக்கரை ஏறி இளைத்து இருந்தேன் -பெரியாழ்வார் -5-3-7-என்றும் -அடைய -பெரிய திருமொழி -11-8-6- என்றும்
திருவாணை நின்னாணை கண்டாய் -திருவாய் -10-10-2-என்றும் -இனி நான் போகல ஒட்டேன் -திருவாய் -10-10-1- என்று தடுத்தும் வளைத்தும் பெறுகை-
4-B -த்ருப்த ரூப பிரபத்தியாவது-சரீராந்தர ப்ராப்தியிலும் ஸ்வர்க்க நரக அனுபவங்களிலும் விரக்தியும் பீதியும் பிறந்து
அதினுடைய நிவ்ருத்திக்கும் பகவத் ப்ராப்திக்கும் உறுப்பாக சதாசார்யா உபதேச க்ரமத்தாலே உபாய ச்வீகாரம் பண்ணி –
-விபரீத ப்ரவ்ருத்தி நிவ்ருத்தராய் வேத விஹிதமான வர்ணாஸ்ரம அனுஷ்டானமும் -பகவத் பாகவத கைங்கர்யமும் –
மானஸ வாசிக காயிகங்களாலே யதா பலம் அனுஷ்டித்து -ஈஸ்வரன் -சேஷியாய்-நியந்தாவாய் -ஸ்வாமியாய் -சரீரியாய் -வ்யாபகனாய்
தாரகனாய் -ரஷகனாய் -போக்தாவாய் -சர்வஜ்ஞனாய் சர்வ சக்தியாய் -சர்வ சம்பூர்ணனாய் -அவாப்த சமஸ்த காமனாய் -இருக்கிற ஆகாரத்தையும்
தான் அவனுக்கு -சேஷமாய் -நியாம்யமாய் -ஸ்வம்மாய் -சரீரமாய்-வ்யாப்யமாய் -தார்யமாய் -ரஷ்யமாய் -போக்யமாய் -அஜ்ஞனாய் –
அசக்தனாய் -அபூர்ணனாய் -சாபேஷனாய்-இருக்கிற ஆகாரத்தையும்
அனுசந்தித்திக் கொண்டு -களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்றிலேன் -திருவாய் -5-8-8-என்று
உபாயத்தில் சர்வ பாரங்களையும் அவன் பக்கலிலே பொகட்டு நிர்பரனாய் இருக்கை –
5-ஆச்சார்ய அபிமானம் ஆவது -இவை ஒன்றுக்கும் சக்தன் இன்றிக்கே ஒருவனைக் குறித்து -இவனுடைய இழவையும் -இவனைப் பெற்றால்
ஈஸ்வரனுக்கு யுண்டான ப்ரீதியையும் அனுசந்தித்து
ஸ்த நந்த்ய பிரஜைக்கு வியாதி யுண்டானால் அது தன் குறையாக நினைத்து ஔஷத சேவை பண்ணும் மாதாவைப் போலே இவனுக்காகத் தான்
உபாய அனுஷ்டானம் பண்ணி ரஷிக்க வல்ல பரம தயாளுவான மஹா பாகவதன் அபிமானத்திலே ஒதுங்கி
வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டும் -நாச்சியார் -10-10-என்று சொல்லுகிறபடியே -சகல ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளையும் அவனிட்ட வழக்காக்குகை –
எம்பெருமான் தனித்து நித்ய சித்த ப்ராப்யனாகா நிற்கச் செய்தே சகல தேவதாந்த்ர்யாமியாயாய்க் கொண்டு ப்ராப்யன் ஆகிறாப்
இவ்வாச்சார்ய அபிமானமும் தனியே உபாயமாகா நிற்கச் செய்தேயும் எல்லா உபாயங்களுக்கும் சஹ காரியுமாய் ஸ்வ தந்த்ரமுமாய் இருக்கும் –
—————————————————————————–
1-விரோதி வர்க்கத்தில் ஸ்வரூப விரோதி யாவது -தேஹாத்மா அபிமானமும் -அந்ய சேஷத்வமும் -ஸ்வ ஸ்வாதந்த்ர்யமும் –
2-பரத்வ விரோதியாவது -தேவதாந்திர பரத்வ பிரதிபத்தியும் -சமத்வ பிரதிபத்தியும் -ஷூதர தேவதா விஷயத்தில் சக்தி யோக பிரதிபத்தியும்
அவதார விஷயத்தில் மானுஷ பிரதிபத்தியும்-அர்ச்சாவதார விஷயத்தில் அசக்தியோக பிரதிபத்தியும்
3- புருஷார்த்த விரோதியாவது -புருஷார்த் தாந்த்ரங்களில் இச்சையும் தானுகந்த பகவத் கைங்கர்யங்களில் இச்சையும் –
4-உபாய விரோதியாவது -உபாயாந்தர வைலஷண்ய பிரதிபத்தியும் உபாய லாகவமும் உபேய கௌரவமும் விரோதி பாஹூ ள்யமும்-
5-ப்ராப்தி விரோதியாவது -பிராரப்த சரீர சம்பந்தமும் -அனுதாப ஸூநயமாய் குருவாய் ஸ்திரமாய் இருந்துள்ள பகவத பாகவத அபசார அசஹ்ய அபசாரங்களும் –
இவை எல்லாவற்றுக்கும் விரோதி என்று பேராகக் கடவது –
அன்ன தோஷம் -ஜ்ஞான விரோதியாகக் கடவது
சஹவாச தோஷம் போக விரோதியாகக் கடவது
அபிமானம் -ஸ்வரூப விரோதியாகக் கடவது –
—————————————————————————
இப்படி அர்த்த பஞ்சக ஜ்ஞானம் பிறந்து முமுஷூவாய் சம்சாரத்திலே வர்த்திக்கிற சேதனனுக்கு மோஷ சித்தி அளவும்
சம்சாரம் மேலிடாத படி கால ஷேபம் பண்ணும் க்ரமம்-வர்ணாஸ்ரம அனுரூபமாகவும் -வைஷ்ணத்வ அனுரூபமாகவும் –
அசநாச்சாதநங்களை சம்பாதித்து -யதன்ன புருஷோ பவதி ததான் நாஸ் தஸ்ய தேவதா -என்கிறபடியே சகல பதார்த்தங்களையும் பகவத் விஷயத்திலே
நிவேதித்து யதாபலம் பாகவத கிஞ்சித் காரம் பண்ணி தேக தாரண மாத்ரத்தை பிரசாத பிரதிபத்தியோடே ஜீவிக்கையும் –
வருந்தியும் தத்வ ஜ்ஞானம் பிறப்பித்த ஆச்சார்யன் சந்நிதியிலே கிஞ்சித் காரத்தோடு அவனுக்கு அபிமதமாக வர்த்திக்கையும்
ஈஸ்வரன் சந்நிதியிலே தன்னுடைய நீசத்வத்தை அனுசந்திக்கையும் –
ஆச்சார்யன் சந்நிதியில் தன்னுடைய அஜ்ஞதையை அனுசந்திக்கையும் –
ஸ்ரீ வைஷ்ணவ சந்நிதியிலே தன்னுடைய பாரதந்த்ர்யத்தை அனுசந்திக்கையும் –
சம்சாரிகள் முன்னில் தன்னுடைய வ்யாவ்ருத்தியை அனுசந்திக்கையும்
ப்ராப்யத்தில் த்வரையும்-
பிராபகத்தில் அத்யவசாயமும் –
விரோதியில் பயமும் –
தேஹத்தில் அருசியும் -ஆர்த்தியும்
ஸ்வரூபத்தில் உணர்த்தியும்
ஸ்வ ரஷணத்தில் அசக்தியும் –
உத்தேச விஷயத்தில் கௌரவமும் –
உபகார விஷயத்தில் க்ருதஜ்ஞதையும் -உத்தாரகப் பிரதிபத்தியும்
அனுவர்த்திக்கையும் வேணும் –
இப்படி ஜ்ஞான அனுஷ்டானங்களோடு கூடி வர்த்திக்குமவன் -ஈஸ்வரனுக்கு பிராட்டிமாரிலும் -நித்ய முக்தரிலும் -அத்யந்த அபிமத விஷயமாகக் கடவன் –
———————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்
Leave a Reply