அபாபாஸ் தத் குலீ நாச்ச மாநயந்தி ஸவகான் ஹிதான்
ஏஷ ப்ராயோ நரேந்த்ராணாம் சங்க நீயஸ்து சோபந –யுத்த -18-11-
அபாபாஸ் தத் குலீ நாச்ச-பாபம் அற்றவரான அரசனுடைய குலத்தில் பிறந்தவர்கள்
ஸவகான்-தன்னைச் சேர்ந்த
ஹிதான் -நன்மை விரும்புமவர்களை
மாநயந்தி -கொண்டாடுவார்கள் –
நரேந்த்ராணாம்-ராஜாக்களுக்கு
ஏஷசோபந –இந்த நல்ல ஸ்வ பாவம்
ப்ராயோ -பெரும்பாலும்
சங்க நீயஸ்து -குறைவாகவே உள்ளது-
அவதாரிகை –
ஸ்வ குலஜராய் அபிமதராய் இருப்பாரைக் கொண்டாடுமது ஒழிய நலியக் கூடுமோ -என்னச் சொல்லுகிறார் –
அபாபாஸ் தத் குலீ நாச்ச ஸவகான் ஹிதான் -மாநயந்தி –
ஸ்வ குலஜரானாலும் அபாபராக வேணும் தனக்கு இஷ்ட விநியோக அர்ஹனாம் படி -ஹிதரானார் புத்திகளைக் கொண்டாடும் போது-என்கை-
நரேந்த்ராணாம்-ஏஷ சோபந –ப்ராயோ சங்க நீயஸ்து –
லோகத்தில் பாபிஷ்டர் பெருத்து இருக்கையாலே -ராஜாக்களுக்கு பந்து சம்பாவ நா ரூபமான இந்த சோபன ஸ்வ பாவம் ப்ராயஸ் சங்க நீயம் –
இந்த ஸ்வ பாவம் உடையார்க்குச் சுருக்கம் என்கை –
ராஜாக்களில் வைத்துக் கொண்டு பந்து பந்து சம்பாவனா ரூபமான இந்த சோபன ஸ்வ பாவத்தை யுடையவன் சங்க நீயன் என்று புருஷ பரமாக வுமாம் –
நிர்தாதாரணே சஷ்டி –
து சப்தம் -அவதாரணே-சங்கநீயனே -என்கை-
ஹிதம் வாக்கியம் உகத வந்தம் -16-1-என்றும்
மயா ஹிதைஷிணா-16-26- என்றும் அநு கூலன் ஆகையாலே
இஷ்ட விநியோக அர்ஹனாய் இருந்தானே யாகிலும் விபீஷணன்
பர ஹிம்சா ருசியாய் பாபிஷ்டனாய் போந்த ராவணனைக் கொண்டாட சம்பாவனை இல்லை -ஹிம்சையே சம்பாவிதம் -என்கை –
—————————————————————————————————————————————————————————————-
யஸ்து தோஷஸ் த்வயா ப்ரோக்தோ ஹ்யாதா நே அரிபலஸ்ய ச
தத்ர தே கீர்த்தயிஷ்யாமி யதா சாஸ்த்ரமிதம் ச்ருணு–18-12-
அரிபலஸ்ய-எதிரியின் படையைச் சேர்ந்தவனை
யாதா நே-ஏற்றுக் கொள்வதில்
யா -யாதொரு
தோஷஸ்-தோஷமானது
த்வயா ப்ரோக்தோ-உம்மாலே சொல்லப் பட்டதோ
தத்ர -அது விஷயத்தில்
தே -உமக்கு
யதா சாஸ்த்ரமிதம் -சாஸ்த்ரத்தை ஒட்டி
கீர்த்தயிஷ்யாமி-சொல்லப் போகிறேன்
இதம் -இச் சொல்லை
ச்ருணு—கேளும்-
அவதாரிகை –
வர்ஜயித்வா த்விஷத் பலம் -17-22-என்று சத்ரு பல பரிக்ரஹத்தில் யாதொரு தோஷம் சொல்லப்பட்டது –
அவ்வளவில் ஒரு விசேஷம் யுண்டு -அத்தை நான் சொல்லக் கேளும் -என்கிறார் —
அரிபலஸ்ய ச-யாதா நே -ஹி யோ தோஷஸ் த்வயா ப்ரோக்தோ தத்ர து –
சத்ருபலம் பரிக்ராஹ்யம் என்று தோஷங்களுக்கு எல்லாம் நீர் தலையாகச் சொன்ன அதிலே
சங்க்ராஹ்யனாய் இருக்கைக்கு ஒரு ஹேது யுண்டு –
அந்த விசேஷத்தைக் கேளும் -என்கிறார் –
யதா சாஸ்த்ரம்-
சத்ருபலம் அபரிக்ராஹ்யம் என்று நீர் நீதி சொல்லுகிறீராக உம்முடைய பிரேமத்தை வெளியிட்டீர் அத்தனை –
அப்படி அன்றிக்கே சாஸ்த்ரீயா நதிக்ரமேணசொல்லுகிறோம் -என்கை –
தே கீர்த்தயிஷ்யாமி-
தோஷம் சொன்ன உம்முடைய ஹிருதயம் இசையும்படிக்குச் சொல்லுகிறோம் என்கை –
இதம் ச்ருணு–
நாம் சொன்னதுக்கு விருத்தம் என்றாதல்
ராஜாக்கள் என்றாதல்
நம் பக்கல் சங்கத்தால் என்றாதல்
உபேஷியாதே இத்தைக் கேட்டுத்தாரும் என்கை –
—————————————————————————————————————————————————————————–
ந வயம் தத் குலீ நாஸ்ச ராஜ்ய காங்ஷீ ச ராஷஸ
பண்டிதா ஹி பவிஷ்யந்தி தஸ்மாத் க்ராஹ்யோ விபீஷண–18-13-
ராஷஸ-அரக்கனான விபீஷணன்
ராஜ்ய காங்ஷீ ச -ராஜ்யத்தில் இச்சை யுடையனாயும் இருக்கிறான் –
வயம் ந தத்குலீ நாஸ்ச -நாம் அவனுடைய குலத்தில் பிறந்தவர்களும் அன்று
பண்டிதா -அரக்கர் குலத்திலும் அறிவாளிகள்
ஹி பவிஷ்யந்தி-இருப்பார்கள் அன்றோ
தஸ்மாத் க்ராஹ்யோ விபீஷண–ஆகையால் விபீஷணன் கைக் கொள்ளத் தக்கவன் அன்றோ –
அவதாரிகை –
கீழ் -து சப்தத்தாலே சொன்ன விசேஷம் இன்னது என்கிறார் –
ந வயம் தத் குலீ நாஸ்ச ராஜ்ய காங்ஷீ ச ராஷஸ-
நாட்டிலே ஒரு ராஜாவுக்கு வ்யசனம்வந்த அளவிலே –
தத் குலீ நராய் இருப்பார்க்கும் அந்த ராஜ்ய ஸ்ப்ருஹை யுண்டாகையாலே அவர்கள் தனக்கு சஹகாரிகள் அல்லாமையாலும்
தத் குலீ நனான அவனுடைய ராஜ்யத்தை ஆசைப் படுகையாலும்
தத் குலீ நர் அல்லாமையாலே அந்த ராஜ்யத்தில் ஸ்ப்ருஹையும் இன்றிக்கே பிரபலருமாய் இருப்பாரைப் பற்றி ராஜ்யத்தைப் பெறுகைக்கு யத்னம் பண்ணா நிற்கும் –
ஆகையால் இவனும் ராவணனுக்கு நம்மாலே ஓர் ஆபத்து வந்த அளவிலே ராஷஸ குலீ நத்வேன ராஷஸ ராஜ்ய காங்ஷி யாகையாலும்
கார்யாந்தரத்தைப் பற்றி ராவணனை அழியச் செய்யக் கடவதாக பெரிய சம்ப்ரமத்தோடே கிட்டிதனாக எடுத்து விட்டு இருக்கிற நமக்கு
அந்த குலீந ராஜ்ய ஸ்ப்ருஹை இல்லாமையாலும்
நம்மைப் பெற்றித் தன்னுடைய ராஜ்யம் பெற்றானாகில் தட்டில்லை –
ஒரு ராஷாசனுக்கு இந்த புத்தி எல்லாம் உண்டாகக் கூடுமோ
உம்முடைய பேரளவாலே அருளிச் செய்கிறீர் இத்தனை அன்றோ -என்ன
பண்டிதா ஹி பவிஷ்யந்தி –
ராஷசர் என்கிற ஜாதி மாதரம் கொண்டு எல்லாரையும் கழிக்க ஒண்ணாது
இவ்வளவு எண்ண வல்லாரும் உண்டு காணும் என்கிறார் –
தஸ்மாத் க்ராஹ்யோ விபீஷண–
நம்மைக் கொண்டு தான் ராஜ்யம் பெற வந்தவனை அழியச் செய்வது அப்ராப்தம் –
மேல் ஹிதகாரியாகக் கடவன் ஆகையாலும் நமக்கு க்ராஹ்யன் –
——————————————————————————————————————————————————————————————
அவ்யாக்ராஸச பிரதுஷ்டாஸ்தே ந பவிஷ்யந்தி சங்கதா
ப்ராணா தஸ்ச மஹா நேஷஸ் ததோ அஸ்ய பயமாகதம்
இதி பேதம் கமிஷ்யந்தி தஸ்மாத் க்ராஹ்யோ விபீஷண –18-14/15-
அவ்யாக்ராஸச -பதறாத வர்களாய்
பிரதுஷ்டாஸ்தே -மிகவும் துஷ்டராய் இருக்குமவர்கள்
ந பவிஷ்யந்தி சங்கதா-கூடி இருப்பவர்க்களுமாய் இரார்கள் –
ஏஷ ப்ராணா தஸ்ச -விபீஷணனுடைய இந்த த்வநியானது
மஹா -பெரியதாய் இருக்கிறது
ததோ அஸ்ய பயமாகதம் -ராவணன் இடம் இருந்து இவ் விபீஷணனுக்கு பயம் உண்டாய் இருக்கிறது
இதி பேதம் கமிஷ்யந்தி -ஆகையால் வேறுபாட்டை அடைவர்கள்
தஸ்மாத் க்ராஹ்யோ விபீஷண -ஆகையால் விபீஷணன் கைக் கொள்ளத் தக்கவனே-
அவதாரிகை –
திருவடி இவன் வரவுக்கு ஹேதுவாகப் பிற்படச் சொன்
அத்தை முற்பட உபபாதித்து –
அவனுடைய ஸூ த்தி பிரகர்ஷத்தையே சித்தாந்திக்கிறார் -அவ்யக்ரா -என்று தொடங்கி -மூன்று அர்த்தத்தாலே –
பிரதுஷ்டாஸ்தே –
மிகவும் துஷ்டர் ஆகிறார் -நினைவும் சொலவும் செயலும் பேதித்து இருக்குமவர்கள்
அவ்யாக்ராஸச ந பவிஷ்யந்தி –
பதறாதேயும் இரார்கள் –
இங்குள்ளார் வத்யதாம் –17-27- என்பாரும்
ஆராய வேணும் என்பாருமாகா நின்றால் பதறாது இருப்பார் இல்லை –
இவர்கள் பக்கல் பதற்றம் கண்டிலோம் –
சங்கதாஸ் ச பவிஷ்யந்தி –
ஸூ க்ரீவம் தாம் ஸ் ச சம்ப்ரேஷ்ய-17-9-என்றும்
நிவேதயதமாம் -17-15-என்றும் சொல்லுகிற இடத்தில் எல்லாரும் ஒரு மிடறாய் இருந்தார்கள் –
இவர்கள் தன்னிலே சேர்ந்தார்கள் –
ப்ராணா தஸ்ச –
இவனுடைய த்வனியும் நம்மோடு சம்பந்தம் தோன்றும் படியாய் இருந்தது –
ப்ராணா தஸ்து சப்த ஸ்யாத நு ராகச -இத்யமர-
மஹா நேஷஸ்
த்வனி கேட்டார்க்கும் இவன் அபேஷிதம்பூரணம் பண்ணி அல்லது குடி இருக்க ஒண்ணாத படி ஆர்த்தி தோற்றி அன்றோ இருக்கிறது
ஏஷ –
நான் கேட்டு உபதேசிக்கிறானோ-நாம் இருவரும் கூடக் கேட்டதன்றோ –
ததோ அஸ்ய பயமாகதம் –
வ்யச நேஷூ ப்ரஹர்த்தார-18-10- என்கிறபடியே அவன் நம்மைக் கொல்லும் ராவணனாலே பயப்பட்டு வந்தான் – என்று
இதி பேதம் கமிஷ்யந்தி –
இதிர் ஹேதௌ
சிலராலே சிலர்க்கு பயம் பிறந்தால் அவர்களை அவர்கள் விட்டுப் போவார்கள் –
தஸ்மாத் க்ராஹ்யோ விபீஷண –
—————————————————————————————————————————————————————————–
ந சர்வே பிராதரஸ் தாத பவந்தி பரதோபமா
மத்விதா வா பிது புத்ரா ஸூ ஹ்ருதோ வா பவத்விதா -18-16-
தாத -அப்பா
சர்வே பிராதரஸ் -எல்லா சகோதரர்களும்
பரதோபமா-பரதனை ஒத்தவர்களாயும்
பிது புத்ரா-தந்தைக்கு பிள்ளைகள்
மத்விதா-என்னை ஒத்தவர்களாயும்
ஸூ ஹ்ருதோ வா பவத்விதா -தோழர்கள் உம்மை ஒத்தவர்களாயும்
ந பவந்தி -ஆகார்கள் –
அவதாரிகை –
பரதாதிகளோடு தேவர் பரிமாறிப் போந்தவை தேவர் அருளிச் செய்யக் கேட்டிருந்தோம்
ஜ்யேஷ்டப் ப்ராதா நலியப் புக இவன் அஞ்சிப் போனான் ஆகையாலே இவன் நமக்கு க்ராஹ்யன் என்று
தேவர் அருளிச் செய்கிறது உக்தாமோ -என்னச் சொல்லுகிறார் –
தாத சர்வே பிராதரஸ் பரதோபமா ந பவந்தி –
பிள்ளை பரதனுடைய படி ப்ராத்ருத்வ பிரயுக்தம் அல்ல -பரதத்வ பிரயுக்தம் -என்கை-
படியில் குணத்து பரத நம்பி -பெரியாழ்வார் -3-9-6-என்னக் கடவது இ றே-அதாகிறது
நடுவில் ஆய்ச்சி ராஜ்ய ஸூ ல்கையாலும் -தேவா ஸூ ர சங்க்ராமத்தில் வர பிரதானத்தாலும் –
ஐயர் தமக்கு ராஜ்யம் கொடுக்க -நாமும் அவர்சந்நிதியில் கொடையை அநாதரித்து காட்டிலே போன பின்பு
தாய் வழியே ஒதுங்க பிராப்தமாய் இருக்க அது செய்யாதே காட்டிலே தொடர்ந்து வந்து
உம்முடைய ராஜ்யத்தை நீரே கைக்கொள்ளும் -என்று நிர்ப்பந்திப்பான் ஒரு ப்ராதா உண்டோ –
அதுக்கும் மேலே நமக்கு ப்ரீத்யர்த்தமாக பொருந்தாத ராஜ்யத்தை ஏறிட்டுக் கொண்டு
நான்
காட்டில் பட்ட கலேசத்து அளவன்றிக்கே படைவீட்டிலே இருந்து படுவான் ஒரு ப்ராதா உண்டோ –
இதுவே அன்று -லோக வ்யவஹாரத்துக்கு திருஷ்டாந்தம் –
அன்றிக்கே -உல்லோகமாய் இருப்பது இன்னம் சில வ்யக்திகள் உண்டு என்று ப்ரச்துதஸ் தைர்யார்த்தமாக பிரதிபாதிக்கிறார்
மத்விதா வா பிது புத்ரா –
பித்ருமான்களில் நம்மொடுஒப்பார் இல்லை –
அறுபதினாயிரம் ஆண்டு மலடு நின்று பின்பு மஹதா தபஸா -ஆரண்ய -66-3-என்று கனத்த தபசைப் பண்ணி நம்மைப் பெற்று
நம்மைக் கொண்டு பிராண தாரணம் பண்ணிப் போந்து நம்முடைய வ்யதிரேகத்தில் லோகாந்தரங்க தரான நம்
ஐயரைப் போலே இருக்கும் பிதாக்களை யுடையராய் இருப்பார் நம்மை ஒழிய உண்டோ –
நமக்கே யுள்ளதோர் ஏற்றம் அன்றோ இது
அதவா –
பிது புத்ரர்களில் நம்மோடு ஒப்பார் இல்லை-
ராஜ்யத்துக்கு உரியோமாய் நம்மை யாராலே ஸ்வே ச்சாதத் தமாய் இருக்கிற யௌ வராஜ்யத்துக்கு நடுவில் ஆய்ச்சியாலே விக்நம் பிறக்க
அதில் விவாதம் பண்ணாதே பித்ரு வசனத்தையே ஆதரித்து நெடு நாள் வன் வாசம் பண்ணப் போந்த நம்மைப் போலே இருப்பரும் சில ராஜ புத்ரர் உண்டோ -என்றுமாம் –
வியாச சாது -என்றால் போலே மஹா ராஜர் தெளிவுக்கு உறுப்பாக யதார்த்த உக்தியாகையாலே ஆத்ம பிரசம்சை இல்லை –
ஸூ ஹ்ருதோ வா பவத்விதா –
உம்முடைய சௌ ஹார்த்தமும் ஸூ ஹ்ருத்தவ சாமான்ய பிரயுக்தம் அன்று
நீர் முன் வரக் கடவதாகப் பண்ணின சமயத்தை அல்பம் அதி லங்கிக்க அது பொறாதே
த்வாம் து சத்யாததி க்ராந்தம் ஹ நிஷ்யாமி ச பாந்தவம் -கிஷ்கிந்தா -30-82- என்று
நான் குபிதனாய் பிள்ளையை கொடுவந்து காட்ட அவனும் அதி குபிதனாய்ச் சொல்லக் கடவதல்லாத வார்த்தையைச் சொன்ன இடத்திலும்
பந்தத்தையே பார்த்து பீதராய் நம் பக்கல் பிரேம அதிசயத்தாலே
சரணம் புகுந்தவனையும் சத்ரு என்று அஸ்தானேபயசங்கி களாய் இருப்பார் சில ஸூ ஹ்ருத்துக்கள் புறம்பே உண்டோ –
உமக்கே உள்ளது ஓன்று அன்றோ –
ஆனபின்பு -லோக வ்யவஹாரத்தைப் பார்த்தால் ராவணன் இவனை நலிய நினைக்கையும்
அவனோடு இவன் பின்னனாய்ப் போருகையும் கூடும் -என்கை –
——————————————————————————————————————————————————————————————-
ஏவமுக்தஸ்து ராமேண ஸூ க்ரீவ சஹ லஷ்மண
உத்தாய ஏதம் மஹா ப்ராஜ்ஞ ப்ரணதோ வாக்யம் அப்ரவீத் –18-17-
ஏவமுக்தஸ்து ராமேண -ராமனால் இவ்வண்ணமாக சொல்லப்பட்ட
மஹா ப்ராஜ்ஞ-பேர் அறிவாளரான
ஸூ க்ரீவ சஹ லஷ்மண-ஸூ க்ரீவ மஹா ராஜரும் இளைய பெருமாளோடு கூடினவராய்
உத்தாய -எழுந்து இருந்து
இதம் ப்ரணதோ வாக்யம் அப்ரவீத் -நமஸ்காரம் பண்ணினவராய் இந்த சொல்லை உரைத்தார்-
அவதாரிகை –
இப்படி சரணாகதனான விபீஷணன் பக்கல் பெருமாளுக்கு யுண்டான பஷ பாதாதிசயத்தைக் கண்டு
மஹா ராஜரும் ஸ்வ அபேஷித சித்திக்காக இளைய பெருமாளையும்கூட்டிக் கொண்டு சரணம் புக்கு ஒரு வார்த்தை சொல்லுகிறார்-
-ராமேண ஏவமுக்தஸ் ஸூ க்ரீவஸ்து –
பெருமாள் தம்மை அநு கூலித்துசொன்ன படியாலும்
தமக்குப் பதகம் முட்டின படியாலும்
அவர் வழியே போகப் ப்ராப்தமாய் இருக்க
பின்னையும் அவரோடு வேறு பட்டு அவரைத் தம் வழியிலே போக்க யத்னம் பண்ணின படி
சஹ லஷ்மண –
தம்மிலும் பரிவர் என்று -லஷ்மணஸ் யாக்ரத-17-16-என்று பிரதமத்தில் கூட்டுக் கொண்டால் போலே பிரபத்திக்கும் அவரைக் கூட்டிக் கொள்ளுகிறார்
ப்ரணத –
சத்ருக்கள் பண்ணும் பிரபத்தியே அன்று இ றே பிரபத்தி யாவது
அநு கூலர் பண்ணும் பிரபத்திக்கும் இரங்க வேண்டாவோ -என்று அவனுடைய
ஒரு சரணாகதிக்கு அபவாதமாக இரண்டு சரணாகதியைப் பண்ணுகிறார் என்று கருத்து –
மஹா ப்ராஜ்ஞ-
தமக்குப் பதகம் மூட்டின தசையிலும் சரணாகதி சாத்யர் பெருமாள் என்று அறிகை-
உத்தாய ப்ரணதோ இதம் வாக்யம் அப்ரவீத் –
பெருமாள் தம்மை அள்ளி எடுத்து -நீர் சொன்ன கார்யம் செய்கிறோம் -என்று சொல்லும்படி திருவடிகளிலே விழுந்து இந்த வார்த்தையை விண்ணப்பம் செய்தார்-
—————————————————————————————————————————————————————————————
ராவணேந ப்ரணிஹிதம் தம வேஹி நிசாசரம்
தஸ்யாஹம் நிக்ரஹம் மன்யே ஷமம் ஷமவதாம் வர -18-18-
ராவணேந -ராவணனாலே
ப்ரணிஹிதம் -ஒற்றனாய் அனுப்பட்டவனாய்
அவேஹி தம் நிசாசரம் -அந்த ராஷசனை அறியும்
ஷமவதாம் வர-பொறுமையாளர் களுக்கு தலைவரே
தஸ்யாஹம் நிக்ரஹம் -நான் அவனுடைய கொலையை
மன்யே ஷமம் -தக்கதாக நினைக்கிறேன்-
அவதாரிகை –
இப்படி பிரசன்னராய் பிரபன்ன வாக்யம் கேட்டு அருளுமவர் என்று -ராவணேந ப்ரணிஹித-என்று முற்பட
விண்ணப்பம் செய்தவை தன்னையே விண்ணப்பம் செய்கிறார்
புனர் வசனத்துக்கு பிரயோஜனம் –அவன் சரணம் என்ற வார்த்தையிலே அபஹ்ருத சித்தராய் இருந்த அளவிலே யாயிற்று நாம் அவை சொல்லிற்று –
நாம் சரணம் புக்க பின்பு தெளிந்து நல் வார்த்தை கேட்பர்-என்று முன்பு சொன்னவை தன்னையே திரு உள்ளத்தில் படுத்துகை-
கள்ளரைப் போலே மத்திய ராத்ரியிலே புறப்பட்டு
பர ஹிம்சையைப் பண்ணிக் கொண்டு திரியும் ஜன்மம் என்று
இவன் தண்மை திரு உள்ளத்தில் படாமை இ றே இவன் நமக்கு சஹ காரி என்று அருளிச் செய்தது
ஆகையாலே நிசாசரம் -என்கிறார் –
——————————————————————————————————————————————————————————————–
ராஷஸோ ஜிஹ்மயா புத்த்யா சந்திஷ்டோ அயம் இஹா கத
ப்ரஹர்த்தும் த்வயி விஸ்வஸ்தே ப்ரச்சநநோ மயி சா நக
லஷ்மணே வா மஹா பாஹோ ஸ வத்ய ஸசிவை ஸஹ –18-19-
அ நக -குற்றம் அற்றவரே
அயம் -இந்த
ராஷஸோ-அரக்கன்
ஜிஹ்மயா -வஞ்சகமான
புத்த்யா-புத்தியினாலே
சந்திஷ்டோ -ஏவப்பட்டவனாம்
த்வயி விஸ்வஸ்தே–நீர் நம்பிக்கை யுடையீராய் இருக்கையில்
ப்ரச்சநநோ-மறைந்து நின்று
த்வயி மயி லஷ்மணே ச -உம் விஷயத்திலும் -ஏன் விஷயத்திலும் -இலக்குவன் விஷயத்திலும்
ப்ரஹர்த்தும் -ஹிம்சையைச் செய்வதற்கு
இஹ ஆகாத -இங்கே வந்தான்
மஹா பாஹோ -நீள் கையரே
ஸ -அவன் –
வத்ய ஸசிவை ஸஹ-மந்த்ரிகள் உடன் கூட கொல்லத் தக்கவன் –
ராஷஸோ ஜிஹ்மயா புத்த்யா சந்திஷ்டோ ப்ரச்சநநோ இஹா கத –
நீச ஜாதியான இவன் ஸ்வ ஜாதிக்குக் கார்யம் செய்யும் அத்தனை போக்கி
தார்மிகரான நமக்குக் கார்யம் செய்யான் காணும்
ப்ரஹர்த்தும் த்வயி விஸ்வஸ்தே –
தேவர் விஸ்வசித்த வாறே சஹ காரி யன்றிக்கே ஒழியும் அளவன்றிக்கே உம்மை நலிவதும் செய்யும்
தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத்-என்று அதுக்கு இசைந்தோம் இ றே என்றவருக்குப் பரிஹரிக்கைக்காக -மயி -ச -என்கிறார் –
த்வயி கிஞ்சித் சமாபன்னே கிம் கார்யம் சீதயா மம-என்றும்
ஸூ ஹ்ருதோ வா பவத்விதா -என்றும்
நீர் நினைத்து இருக்கிற என் பக்கலிலும் நலியும் காணும் இவன்
லஷ்மணே வா –
முஹூர்த்தம் அபி ஜீவாவ -என்று அருளினீர் ஆகில் உளராய் இருக்கும் அவரையும் நலியும்
சரணாகத ரஷணம் என்ற ஒரு வாசத்தால் ஒரு ராஷசனுக்காக எங்கள் இருவரையும் நீர் இழக்கக் கிடீர் புகுகிறது
அநக-
இந்த பொல்லாங்குகள் உமக்கு வாராது ஒழிந்திடுக -என்று கருத்து –
மஹா பாஹோ –
உம்முடைய தோளை அண்டை கொண்டு இருக்கும் எங்களை சத்ருவின் கையிலே காட்டிக் கொடுக்கலாமோ
எங்கள் பக்கலிலே தண்ணளி யும் அவன் பக்கலிலே தோள் வலியுமாகை யன்றோ யுக்தம்
ஸ வத்ய ஸசிவை ஸஹ –
ஆகையாலே சபரிகரனாக அவன் வத்யன் –
————————————————————————————————————————————————————————-
ஏவமுக்த்வா ரகு ஸ்ரேஷ்டம் ஸூ க்ரீவோ வாஹிநீபதி
வாக்யஜ்ஞோ வாக்ய குசலம் ததோ மௌநமுபாகமத் –18-20-
ஏ வாக்ய குசலம் ரகு ஸ்ரேஷ்டம் -வாக்யம் உரைப்பதில் தலைவரான ரகு குலத் தலைவரைக் குறித்து
வாஹிநீபதி வா க் யஜ்ஞோ ஸூ க்ரீவோ-சேனாபதியும் வாக்யங்களின் குண தோஷம் அறியுமவரான ஸூ க்ரீவ மஹா ராஜர்
வமுக்த்வா-இவ்வண்ணமாக உரைத்து
ததோ மௌநமுபாகமத் — அதற்குப் பின் பேசாது இருத்தலை மேற்கொண்டார்-
ரகு ஸ்ரேஷ்டம் –
சரணாகதனுக்காகத் தன்னை அழிய மாறின ரகுவினுடைய குலத்தார்க்கு சஸ்யர் என்னும்படி சரணாகத சம் ரஷணத்தில் பிரசச்தராய் யுள்ளவரை –
ஸூ க்ரீவோ வாஹிநீபதி-
தாம் போம் வழியை அநு விதானம் பண்ணும் பரிகரத்தை யுடையவன் –
வாக்யஜ்ஞோ-
சர்வ வசன வ்யக்திகளுடைய குண தோஷம் அறியுமவர் –
வாக்ய குசலம்
எதிரிகளுடைய அபிப்ராய பூர்வகமாக வார்த்தை சொல்ல வல்லவரை
ஏவமுக்த்வா- ததோ மௌநமுபாகமத்-
தம் சீர்மை அறியாதவரோ டு நாம் சொல்லுவது யுண்டோ என்று ப்ரணய ரோஷத்தால் பேசாது இருந்தார்-
———————————————————————————————————————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply