ஸூ க்ரீவஸ் த்வத தத் வாக்யம் ஆபாஷ்ய ச விம்ருஸ்ய ச
தத ஸூ பதரம் வாக்யமுவாச ஹரி புங்கவ -யுத்த -18-4-
அத -அதற்குப் பின்
ஹரி புங்கவ -வானரர் தலைவரான
ஸூ க்ரீவஸ்-ஸூ கரீவ மஹா ராஜரோ எனில்
தத் வாக்யம் -அந்த வாக்யத்தை
விம்ருஸ்ய ச -ஆராய்ச்சியும் செய்து
தத-அதைக் காட்டிலும்
ஸூ பதரம் வாக்யமுவாச -மிகவும் அழகியதான வார்த்தையை உரைத்தார்-
அவதாரிகை –
ராம பிரகிருதியைக் கேட்ட மஹா ராஜர் -அதி சாஹசம் என்று மிகவும் பயப்பட்டு -ஒரு வார்த்தை விண்ணப்பம் செய்கிறார்-
ஸூ க்ரீவஸ்து இதி –
கீழில் சர்க்கத்தில் சிந்தயித்வா முஹூர்த்தம் து -17-4-என்கிற
து சப்தத்தால் ராவண பவனத்தில் நின்றும் வந்த இவன் நம்மை நலிகை நிச்சிதம் என்று இவருடைய ஹ்ருதயத்தில் பிறந்த வேறுபாட்டைச் சொல்லிற்று
ஏதத் து வசனம் ஸ்ருத்வா-17-16- என்கிற து சப்தத்தாலே பெருமாள் பிரக்ருதியையும் இக் கோஷ்டியில் விலைச் செல்லும் வார்த்தையும் அறிந்து
ராகவம் சரணம் கத–17-14- எனபது நிவேதயத் -17-15- என்று இங்கனே சிலரைப் புருஷகாரமாகப் பிடிப்பதாக நின்றான்
இது பெருமாள் செவிப்படுமாக்கில் நம் வார்த்தை கொள்ளார் என்று த்வரித்த விசேஷத்தைச் சொல்லிற்று
இந்த து சப்தத்தாலே பெருமாள் நாம் போன வழி வருவர் எதிரிகளை அவரைக் கொண்டு வெல்லலாம் -என்று இருந்தார் –
மித்ர பாவம் யுடையார்
நம்மை நலிய வந்தார்கள் ஆகிலும் அதுக்கு இசைந்தோம் என்று அருளிச் செய்கையாலே இவரும் அவனுக்குக் கூட்டாய் இருந்தார்
இனி இவன் நோக்கலாவது என் செய்தால் என்கிற பய அதிசயத்தாலே வேறுபட்டபடி
அத-ஸ்வாமி வார்த்தை சொன்னால் சேஷ பூதனானவன் கருத்தையும் அறிந்து -தன சேஷத்வத்தையும் பார்த்து விசாரித்து அதுக்குச் சேர வார்த்தை சொல்ல வேண்டி இருக்க
அதி சாஹசம் விளைந்தபடியாலே க்ரமம் பாராதே வார்த்தை முடிவது முன்பே சடக்கென பிரதி வசனம் பண்ணத் தொடங்கின படி –
தத் வாக்யம்-மேல் பற்றில்லாத வார்த்தையை -அதாவது
இவன் துஷ்டன் என்று இ றே சொல்லலாவது –
அத்தையும் இசைந்தோம் என்கையாலே போக்கடி இல்லை என்கை-
ஆபாஷ்ய ச-பதசவும் திரளவும் அநு பாஷித்து
விம்ருஸ்ய ச -வேர்ப் பற்றியான பதத்தை விமர்சிப்பதும் செய்து
அதவா –
வாக்ய அநு பாஷாணமும் அதினுடைய அர்த்த விமர்சமும் என்னவுமாம் –
தத ஸூ பதரம் வாக்யமுவாச -பெருமாள் அருளிச் செய்த வாக்யம் ஸூ பம்
அதில் காட்டில் ஸூப தரமான வாக்யத்தைச் சொன்னார்
அதாவது -என்னைப் பற்றுவார்க்கு மித்ர பாவமே அமையும் -அவர் குற்றம் பார்த்து விடோம் -என்று
தம்மைப் பற்றினார்க்கு இவ்வார்த்தையின் நிழலிலே ஜீவிக்கலாம் வார்த்தை யாகையாலே அது ஸூ பம் –
நீர் போன வழியே போய் உம்முடைய சத்பாவத்தை இழக்க மாட்டேன் -என்ற வார்த்தை யாகையாலே இது ஸூ பகரம்
ஹரி புங்கவ -ராஜவித்யா -ஸ்ரீ கீதை -9-2-என்கிறபடியே தம்முடைய கலக்கத்துக்குப் போரும்படி பெருமாளுக்கு அவ்வருகை விண்ணப்பம் செய்த அளவுடைமை –
————————————————————————————————————————————————————————————–
ஸூ துஷ்டோ வாப்யதுஷ்டோ வா கிமேஷ ரஜ நீசர
ஈத்ருசம் வ்யசனம் ப்ராப்தம் ப்ராதரம் ய பரித்யஜேத்
கோ நாம ஸ பவேத் தஸ்ய யமேஷ ந பரித்யஜேத் -யுத்த -18-5-
ஸூ துஷ்டோ வா-மிகுந்த தோஷத்தை உடையவன் ஆகிலும்
அதுஷ்ட வா -தோஷம் அற்றவனாகிலும்
ய ஏஷ ரஜ நீசர -யாவன் ஒரு இந்த அரக்கன்
ஈத்ருசம் வ்யசனம் ப்ராப்தம் -இப்படிப்பட்ட துன்பத்தை அடைந்த
ப்ராதரம் ய பரித்யஜேத்-சஹோதரனை அடியோடு விட்டு விட்டானோ
தே ந கிம் -அவனால் என்ன பயன்
ஏஷ -அப்படிப்பட்ட இவன்
யம் -எவனை
ந பரித்யஜேத்-கை விட மாட்டானோ
ஸ-அவன்
தஸ்ய -அவ விபீஷணனுக்கு
கோ நாம -என்ன இரவிணன் தான் ஆவான் –
அவதாரிகை-
தூஷணாந்தரம் சொல்லுவாராக சம்ப்ரதிபன்ன தூஷணத்தை அநு வதிக்கிறார்-
ஸூ துஷ்டோ வாப்யதுஷ்டோ வா –
குணங்களிலே இ றே விப்ரதிபத்தி -சர்ப்ப ஜாதிரியம் க்ரூரா -என்னுமா போலே -ராஷசன் என்னும் இடம் சம்ப்ரதிபன்னம் அன்றோ –
கிமேஷ ரஜ நீசர-கிம் ஷேப -இவனால் என்ன பிரயோஜனம் யுண்டு
இவன் ராஷசன் ஆனாலும் கிமேஷ எண்ணக் கடவதோ
ஸ்வ நிகர்ஷ பூர்வகமாக சரணம் புகுந்த நமக்கு சஹகாரியாம் என்னச் சொல்லுகிறது
ஈத்ருசம் -ராஜா வாகையாலே ஆட்யனானவனை
வ்யசனம் ப்ராப்தம் -சத்ருக்களான நம்மாலே தடிகானவனை
வ்யசனம் ஆவது லங்கா த்ஹனம் பந்து வதம் இத்யாதிகள்
ப்ராதரம்-வ்யசனம் இன்றிக்கே ஒழிந்தாலும் விட ஒண்ணாத பந்தம் உடையவனை
ய பரித்யஜேத்-யாவன் ஒருவன் சவாசனமாக விட்டான் -என்று கர்ஹிக்கிறான்
கர்ஹ்யாம் லிங் -கீழ்ச் சொன்ன ஒன்றே விடாமைக்கு ஹேதுவாய் இருக்க
எல்லா வற்றையும்யுடையவனாய் இருக்கிறவனை விட்டான் யாவன் ஒருவன் அந்த இவனால் என்ன பிரயோஜனம் யுண்டு -என்று கீழோடு அந்வயம்-
அதவா -ஈத்ருசம் -என்று வ்யசன விசேஷணம் ஆக வுமாம் –
அதாவது -மாதா பிதாக்களாலும் பரித்யாஜ்யராய் வதார்ஹராய் இருப்பார்க்கு உம்முடைய நிழலிலே ஒதுங்க வேண்டும் படி இருக்கும் தேவர்
புலி சீறினால் போலே சீறி அழியச் செய்வதாக எடுத்து விட்டிருக்கிற இந்த விசனத்தை அன்றோ அவன் ப்ராப்தன் ஆயிற்று
இப்படி அவனோடு தொத்தற விட்டுப் போந்து நம் பக்கலிலே வந்தவன் நமக்கு சஹ காரியாகக் கூடாதோ என்னச் சொல்கிறார் –
கோ நாம இதி தஸ்ய அஸ்ய கோ நாம ச பவேத் யமேஷ விபீஷணே ந பரித்யஜேத்-
கர்ஹா ப்ரவர்த்தகனாக வந்த இந்த விபீஷணனுக்கு அவன் ஆராய்வான்
யாவனொருவனை இந்த விபீஷணன் விடான் -இவன் விடாது ஒழிகைக்கு ஒருத்தன் இல்லை -என்கை-
அதாவது நாட்டில் அபரித்யாஜ்யராவார் சம்பத்தி விபத்தி பந்துத்வங்களை தனித்தனியே உடையராய் இருப்பார் மூவரும்
இவற்றில் இரண்டையும் உடையார் மூவரும் -சமுதிக குணனாய் இருப்பான் ஒருவனும் -ஆக எழுவரும் ஆயிற்று –
இவர்களில் சமுதிக குணனான ராவணனை விட்ட இவனுக்கு அபரித்யாஜ்யனாய் இருப்பான் ஒரு அஷ்டமன் இல்லாமையாலே இவன் விட மாட்டாதான் ஒருவன் முதலிலே இல்லை -என்கை –
—————————————————————————————————————————————————————————————-
வாநராதிபதேர் வாக்யம் ஸ்ருத்வா சர்வாநுதீஷ்ய ச
ஈஷது தஸ்மயமா நஸ்து லஷ்மணம் புண்ய லஷணம்
இதி ஹோவாச காகுத்ஸ்தோ வாக்யம் சத்ய பராக்ரம -யுத்த -18-6/7-
சத்யபராக்ரம -தடையற்ற பராக்ரமத்தை யுடைய
காகுத்ஸ்தோ-ஸ்ரீ ராமபிரான்
வாநராதிபதேர் வாக்யம் ஸ்ருத்வா-சுக்ரீவனுடைய வார்த்தையைக் கேட்டும்
சர்வாநுதீஷ்ய ச -அனைவரையும் பார்த்து
ஈஷது தஸ்மயமா ந-சிறிது புன்சிரிப்பை யுடையவராய்
புண்ய லஷணம்-நல்ல முகக் குறியை யுடையவராய்
லஷ்மணம் -இலக்குவனைக் குறித்து
இதி வாக்யம் உவாச ஹ -இவ்வன்னமாக வார்த்தையை உரைத்தார்-
அவதாரிகை –
மகா ராஜர் வார்த்தையைக் கேட்ட பெருமாள் தாம் நோக்க நினைத்த நன்மையையும் பார்த்து –
இது ஒரு ப்ரேம ஸ்வ பாவம் இருந்தபடி என் என்று முறுவல் செய்து இவருடைய பரிசுரத்தில் நமக்கு ஆளாவார் யுண்டோ என்று பார்த்து
அங்கே ஒருவரைக் காணாமையாலே தம்முடைய கருத்து அறியும் இளைய பெருமாளைக் குறித்து வார்த்தை அருளிச் செய்கிறார் –
வாநராதிபதேர் வாக்யம் ஸ்ருத்வா-
பேரளவு யுடையராகையாலே எட்டா நிலத்திலே வார்த்தை சொன்னவருடைய வார்த்தையைக் கேட்டு தாம் போன வழி
எல்லார்க்கும் சிரஸா வக்கக வேண்டும்படியான நிர்வாஹகத்தை யுடையவர் -என்றுமாம் –
சர்வாநுதீஷ்ய ச –
இவர்கள் நம்மையும் பார்ப்பார்களோ -இவர் போன வழியே போவார்களோ -என்று பார்த்து –
அதவா –
ஆச்சார்ய ப்ராசார்ய சந்நிபாதே ப்ராசார்யாயோப சங்க ருஹ்ய -ஆபஸ்தம்ப தர்மம் -1-8-19/20-என்கிற ந்யாயத்தாலே
நாமும் மகாராஜருமானால் நம்மை அநு விதானம் பண்ணுவார்களோ என்று பார்த்து என்றுமாம் –
ச -சப்தத்தாலே
முகம் பார்த்த அளவிலேயும் அன்றிக்கே
இங்கிதங்களையும் ஹ்ருதயத்திலே ஓடுகிற வார்த்தையைப் பார்த்த படியை சமுச்சயிக்கிறது
ஈஷது தஸ்மயமா நஸ் –
தாம் நோக்கப் புக்க நன்மையையும் பார்த்தபடி ஆந்த்யத்தை பண்ணும் அளவன்றிக்கே நாம் சொன்ன பஷத்து தூஷணம் சொல்லும்படி தெளிவையும் பிறப்பிக்கும் ஆகாதே
இது ஒரு ப்ரேம ஸ்வ பாவம் இருந்தபடி என் என்று ஸ்மிதம் பண்ணினபடி
நலமே வலிது கொல்-மூன்றாம் திருவந்தாதி -என்னக் கடவது இ றே-ஆய்ச்சியின் அன்பின் வலிமை சொல்லும் பாசுரம் இது
து –
மஹா ராஜர் சொன்ன பஷத்தைத் தள்ளி அதுக்கு அவ்வருகே வார்த்தை சொல்ல நினைத்த வேறுபாடு –
அதாகிறது -யமேஷ ந பரித்யஜேத் -என்கிறவரைக் குறித்து
வ்யசநே ஷூ ப்ரஹர்த்தாரஸ் தஸ்மாத யமிஹாகத -18-10-என்று வந்தான் -விட்டுப் போந்தான் என்று சொல்லுகை –
லஷ்மணம் –
மஹாராஜர் பரிகரத்தில் தன் வார்த்தை கேட்பார் இல்லாமையாலே -ப்ராகேவ து மஹா ப்ராஜ்ஞ-சுந்தர-33-28-என்று
தம் நினைவுக்கு முற்படக் கடவரான இளைய பெருமாளைக் குறித்து அருளிச் செய்தார் –
புண்ய லஷணம்-
இவ்வளவு சரணாகதரை விடாத வார்த்தையாலே மஹா ராஜர் பஷத்துக்கு அவ்வருகே வார்த்தை சொல்லக் கடவர் என்று
தச் சரவண கௌதூஹலம் வடிவிலே தோற்றும்படியான நல்குறியை உடையவர்
இதி வாக்யம் உவாச –
மஹா ராஜர் தம்மைக் கொண்டாடும்படி அவர் ப்ரேம அதிசயத்தைக் கொண்டாடின பிரகாரத்தை யும்
அவர்
சொன்ன பஷத்துக்கு அவ்வருகே வார்த்தை சொன்ன பிரகாரத்தையும் சொல்லுகிறது
ஹ –
தம் மேன்மை பாராதே இப்படி கொண்டாடுவதே -இது என்ன நீர்மை -என்றும்
அவர் பஷத்துக்கு அவ்வருகே உத்தரம் காண்பதே -என்றும் ரிஷி கொண்டாடுகிறார்
காகுத்ஸ்தோ வாக்யம் –
இந்த்ராதிகளுக்கும் இக்குடியில் பிறந்தாரைக் கொண்டு தங்கள் வன்னியம் அறுத்துக் கொள்ளும்படியான
குடியில் பிறப்பால் வந்த மேன்மை பாராதே தாழ வார்த்தை சொல்லுவதே -என்கை –
சத்ய பராக்ரம –
அமோக பராக்கிரமம் –
வியாபாரிக்க ஒண்ணாத படி எதிரிகள் முடுக்கினால் பராக்கிரமம் மிக்க வல்லாரைப் போலே பாதகம் முடிந்தாலும் உத்தரம் கண்டு பிரதிவாதிகளை வெல்ல வல்லவர் –
—————————————————————————————————————————————————————————————
அநதீத்ய ச சாஸ்த்ராணி வ்ருத்தான் அநுபசேவ்ய ச
ந சக்யம் ஈத்ருசம் வக்தும் யதுவாச ஹரீஸ்வர–18-8-
ஹரீஸ்வர–வானவர் தலைவரான மஹா ராஜர்
யதுவாச -யாதொரு வார்த்தை சொன்னாரோ
ஈத்ருசம்-இப்படிப்பட்ட வார்த்தையை
சாஸ்த்ராணி-சாஸ்த்ரங்களை
அநதீத்ய-ஓதாமலும்
வ்ருத்தான்-பெரியவர்களை
அநுபசேவ்ய ச -அநு வர்த்தனம் பண்ணிக் கேளாமலும்
வக்தும் -சொல்லுவதற்கு
ந சக்யம் -முடியாது-
அவதாரிகை –
அவர் தாம் சொல்லப் புகுகிற உத்தரத்தின் உடைய ஏற்றம் தோற்றுகைக்காக இவர் சொன்ன வார்த்தையின் கனத்தைக் கொண்டாடுகிறார்-
அநதீத்ய ச சாஸ்த்ராணி வ்ருத்தான் அநுபசேவ்ய ச ந சகயம் வக்தும் யதுவாச
ஒரு சாஸ்திரத்தையும் -ஒரு ஆச்சார்யனையும் -ஒரு அடிப்பாடான புத்தியையும் உடையவனுக்குச் சொல்லலாம் வார்த்தை அன்று –
ஈத்ருசம்-இவ்வார்த்தை ஒரு பிறர்க்குப் போலியாக சொல்ல ஒண்ணாது
ஸ்ரைஷ்ட்யம் சாஸ்திர சமுஹேஷூ ப்ராப்த -அயோத்ய -1-27- என்றும்
வ்ருத்தோபஸே வீ -சுந்தர -38-61-என்றும்
மேலே சொல்லப் படுகிற தம்மாலும் சொல்லப் போகாதுஎன்று கருத்து
யதுவாச –
சாமான்ய நிர்தேசத்தால் இவ்வார்த்தை அநு பாஷிக்கவும் முடியாது என்கை –
ஹரீஸ்வர–
இதுக்கு சத்ருசம் ஏது என்னில் இவர்பெருமைக்கு சத்ருசம் -என்கை –
————————————————————————————————————————————————————————————–
அஸ்தி ஸூஷ்மதரம் கிஞ்சித் யதத்ர ப்ரதிபாதி மே
ப்ரத்யஷம் லௌகிகம் வாபி வித்யதே சர்வ ராஜஸூ -18-9-
அத்ர -இவ்விஷயத்தில்
யத் கிஞ்சித் மே -யாதொன்று எனக்கு
ப்ரதிபாதி -தோன்றுகிறதோ
தத் -அது
ஸூஷ்மதாம் -மிகவும் நுண்ணியதாய்
அஸ்தி-உள்ளதோ
ப்ரத்யஷம் லௌகிகம் வாபி-அனைவருக்கும் நேரில் தெரிவதாயும் உலகத்தோடு ஒட்டி இருப்பதாயும்
சர்வ ராஜஸூ -எல்லா அரசர்களிடமும் காணப் படுவதாயும்
வித்யதே -இருக்கிறது-
அவதாரிகை –
இப்படி இளைய பெருமாளை நோக்கி மஹா ராஜரை பிரசம்சித்து ஸ்ரீ விபீஷண ஆழ்வானை விச்வச நீயன் என்று
தான் சொல்லப் புகுகிற வார்த்தை ராஜாக்கள் எல்லார் பக்கலிலும் உள்ளது என்று மஹா ராஜரைக் குறித்து வார்த்தை சொல்லுகிறார் –
அஸ்தி ஸூஷ்மதரம் –
மஹா ராஜர் கீழ்ச் சொன்ன வார்த்தை ஸூ ஷ்மம்-
இது ஸூ ஷ்ம தரம்
இதுக்கு மேல் ஒரு அர்த்தமில்லாமையாலே –
ஒரு தப்பைப் பொறுப்பது ஓன்று இல்லாமையாலேயும்
எல்லார்க்கும் மேலான வார்த்தை -என்கை –
எங்கனே என்னில் -மஹா ராஜர் பக்கலிலும் உகத அநு பாஷணம் ஒழிய அர்த்தாந்தரம் இல்லை –
பெருமாளும் இவர் ப்ரேமாந்த்யத்தை போக்குகைக்காகத் தம் தோள் வலி யைப் பேசுகிறார் இத்தனை –
ஆகையாலே எல்லா வற்றுக்கும் மேலான வார்த்தை இது
கிஞ்சித் –
மஹா ராஜர் வார்த்தைக்கு அவ்வருகாய் இருக்கச் செய்தே
கிஞ்சித் என்று ஸ்வ உக்தி யாகையாலே இலகுவாகப் பேசுகிறார் –
யதத்ர ப்ரதிபாதி மே-
விபீஷண விஷயீ காரத்தில்
ப்ரத்யஷம் –
சர்வ ப்ரத்யஷ சித்தம்
லௌகிகம் வாபி –
பிரத்யஷமே யாகிலும் ஜ்ஞாதி வதம் தோஷம் அன்றோ என்னில் எல்லார்க்கும் ஏறுவது ஓன்று -எங்கனே என்னில் –
வித்யதே சர்வ ராஜஸூ –
எல்லா ராஜாக்கள் பக்கலிலும் பரிமாறுவது ஓன்று யுண்டு
சர்வ ராஜ ஸூ என்கையாலே மஹா ராஜர் பக்கலிலும் உள்ளதொன்று –
தம் பக்கல் ப்ரேமாந்த்யத்தாலே மறந்தார் இத்தனை –
————————————————————————————————————————————————————————————–
அமித்ராஸ் தத் குலீநாஸ்ச ப்ராதிதேஸ் யாஸ்ச கீர்த்திதா
வ்யச நேஷூ ப்ரஹர்த்தாரஸ் தஸ்மாத யமிஹா கத –18-10-
தத் குலீநாஸ்ச -அரசனுடைய அக்குலத்திலே பிறந்தவர்களும்
ப்ராதிதேஸ் யாஸ்ச -அடுத்த தேசத்தில் இருக்கும் அரசர்களும்
வ்யச நேஷூ -அரசனை-ஆபத்துக் காலங்களில்
ப்ரஹர்த்தாரஸ் அமித்ராஸ்-துன்புறுத்தும் எதிரிகளாக
கீர்த்திதா -ராஜ நீதி சாஸ்த்ரங்களில் -சொல்லப் படுகின்றனர் –
தஸ்மாத் -ஆகையால்
அயம் -இவ்விபீஷணன்
இஹ -இங்கே
ஆகத -வந்தான்-
–
வ்யச நேஷூ ப்ரஹர்த்தாரஸ் -தத் குலீநாஸ்ச ப்ராதிதேஸ் யாஸ்ச-அமித்ராஸ் கீர்த்திதா –
ராஜாக்களுக்கு வ்யசனம் வந்தால் -ப்ரஹர்த்தாக்கள் ஆவார் -இரண்டு கோடி-
தத் குலீ நரான அமித்ரரும் –
ப்ராதிதேச்யரான அமித்ரரும் –
தத் குலீ நராகிறார் -வீர குல சாடர்
ப்ராதி தேச்யராகிறார் -ப்ரதி தேச வர்த்திகள் -அனந்தர தேச வர்த்திகள் -என்றபடி
வ்யசநேஷூ –
அவர்களில் அந்ய தமனை வ்யச நாதிகள் ப்ராப்தங்களாய் உள்ள இடத்தில்
ப்ரஹர்த்தாரஸ்-கீர்த்திதா —
ப்ரஹரிப்பார்கள் என்று நீதி சாஸ்திர வித்துக்களால் சொல்லப் படா நின்றார்கள் -அமித்ரா கீர்த்திதா -என்றுமாம் –
தஸ்மாத யமிஹா கத –
ராவணன் தனக்கு நம்மாலே வ்யசனங்கள் வந்தவாறே -குலீ நனான இவன் நம்மை பரிஹரிக்கும் என்று அவன் நலியக் கூடும் என்று அத்தாலே வந்தான் –
ஜ்ஞாதிகள் எல்லார்க்கும் ஒவ்வாதோ -இவனுக்கு விசேஷம் என்ன -என்ன ஒண்ணாது
அவனுக்கு ஹிதம் சொல்லுகிற இடத்திலே நம்முடைய உத்கர்ஷமும் இவனுடைய அபகர்ஷமும் தோற்றச் சொன்னான்
அத்தாலே இவன் பக்கலிலே சத்ரு புத்தி பண்ணக் கடவன் -அத்தாலே வந்தான் –
அதவா –
அவனுக்குவ்யசனம் வந்த அளவிலே அவனுக்கு இவன் ஜ்ஞாதி யாகையாலே நம்என்று ஒரு வ்யாக்யாதா சொன்னான்
இவை இரண்டிலும் யமேஷ ந பரித்யஜேத் -என்று சொன்ன இவரைக் குறித்து இவருடைய ஸூ த்தியே சாத்திக்கிறார் ஆகையாலும்
மேல் மாநயந்தி ஸ்வகான் ஹிதான் -என்று சொல்லுகையாலே முற்பட்டதே பொருளாகக் கடவது
ஆக -இஸ் ச்லோகத்தாலே -அவனுக்கு அஞ்சி வந்தான் ஆகிலும் சங்க்ராஹ்யன் –
நம்மைக் கொண்டு அவனை நலிய வந்தான் ஆகிலும் சங்க்ராஹ்யன் –
உபய பஷத்தாலும் -யமேஷ ந பரித்யஜேத் -என்னும் அவன் அல்லன் -நம் சஹ காரி -என்றது ஆயிற்று –
——————————————————————————————————————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply