அர்த்தா அநர்த்த நிமித்தம் ஹி யதுக்தம் சசிவைஸ் தவ
தத்ர தோஷம் பிரபச்யாமி க்ரியா ந ஹ்யுபபத் யதே -யுத்த -17-51-
அர்த்தா அநர்த்த நிமித்தம் -லாப நஷ்டங்களை ஹேது வாக யுடைய
ஹி-
யதுக்தம்-யாதொரு வாக்யம் சொல்லப் பட்டதோ
சசிவைஸ் -மந்த்ரியரான அங்கதப் பெருமாளாலே
தவ -தேவரீருடைய
தத்ர -அந்த பஷத்தில்
தோஷம் பிரபச்யாமி-தோஷத்தை நன்றாகப் பார்க்கிறேன்
க்ரியா ந ஹ்யுபபத் யதே –
ஏன் என்றால் பரிஷை செய்வது பொருந்தாதது அன்றோ-
அவதாரிகை –
பிரதம மதமான அங்கதப் பெருமாள் கருத்துக்கு தோஷத்தை சொல்லுகிறான் -அர்த்த அநர்த்த -இத்யாதியாலே-
அர்த்தா அநர்த்த நிமித்தம் ஹி யதுக்தம் –
பிரயோஜன அப்ரயோஜனங்களே இவனுடைய த்யாக ச்வீகாரங்களுக்கு ஹேது என்று யாதொன்று சொல்லப் பட்டது
சசிவைஸ் தவ-
தேவருடைய பிரகிருதி யறியாமல் சாஸ்திரத்தைப் பார்த்து சொன்னார் என்கை
பஹூ வசனத்தாலே அங்கதப் பெருமாள் பஷத்தார் எல்லாருக்கும் அவருடைய வாக்யம் அனுமதம் என்று சொல்லுகிறது
அவர் பக்கல் கௌரவ்யதை யால் -என்றுமாம்
கார்யம் அல்லாமையால் நிஷேதிக்கிறான் இத்தனை
அவர் பக்கல் கௌரவ்யதையில் குறை இல்லை என்கை –
தத்ர தோஷம் பிரபச்யாமி –
அவஹிதமாக சொன்ன மதத்திலே தோஷம் தோற்றா நின்றது
அந்த தோஷம் ஏது என்னசொல்லுகிறார் –
க்ரியா ந ஹ்யுபபத் யதே
க்ரியா -பரீஷாக்ரியா
அந்த பரீஷாக்ரியை அனுப பன்னை -ஒட்டாது -என்கிறது –
—————————————————————————————————————————————————————————–
ருதே நியோகாத் சாமர்த்யமவ போத்தும் ந சக்யதே
சஹஸா விநியோகோ ஹி தோஷவான் பிரதிபாதிமா –யுத்த -17-52-
ருதே நியோகாத் -ஒரு செயலில் ஏவினால் அல்லாமல்
சாமர்த்யம் -இவனுடைய பயனுடைமை
மவ போத்தும் -அறிவதற்கு
ந சக்யதே -முடியாது
சஹஸா-சடக்கென
விநியோகோ ஹி-ஏவுகையோ என்னில்
தோஷவான் பிரதிபாதிமா -தோஷமுடையது என்று எனக்குத் தோற்றுகிறது-
அவதாரிகை –
அநு பபந்னை -ஏன் ஒட்டாது – என்னும் இடத்தை உபபாதிக்கிறது மேல்-
ருதே நியோகாத் சாமர்த்யமவ போத்தும் ந சக்யதே-
சாமர்த்தியம் ஆவது சமயக் பிரயோஜன பாவம் -நல்ல பயனுடைமை என்றபடி
அந்த பிரயோஜன ஜ்ஞான அர்த்தமாக உபயோக்கிக்கத் தட்டு என் என்னில்
சஹஸா விநியோகோ ஹி தோஷவான் பிரதிபாதிமா-
இவனால் பிரயோஜனம் உண்டு என்று அறியாதே சடக்கென ஏவுதோம் ஆகில் கார்யத்துக்கு அனர்த்தமாம் என்று தோற்றா நின்றது –
பிரயோஜனம் யுண்டு என்று அறிந்தால் அல்லது ஏவ ஒண்ணாது
ஏவினால் அல்லது பிரயோஜனம் அறிய ஒண்ணாது
ஆக இததேதரா ஸ்ரயக் ரஸ்தம்-அந்யோந்ய ஆஸ்ரயணம் -என்னும் குற்றம் எற்படுகிறதால் பரீஷாக்ரியை அனுபபனம் -பரிஷை செய்வது ஒட்டாது-
—————————————————————————————————————————————————————————————
சாரப்ரணிஹிதம் யுக்தம் யதுக்தம் சசிவைஸ் தவ
அர்த்தஸ்யா சம்பவாத் தாத்ரா காரணம் நோபாபத்யதே –யுத்த -17-53-
சாரப்ரணிஹிதம்-ஒற்றனை அனுப்புவது
யுக்தம்-தகும் என்று
யதுக்தம் சசிவைஸ் தவ -யாதொன்று உம்முடைய மந்த்ரிகளான சரபராலே
அர்த்தஸ்ய அசம்பவாத் -இவனிடம் ஒற்றன் செய்ய வேண்டியது இல்லை யாகையாலே
தத்ர காரணம் நோபாபத்யதே -அந்த காரணம் பொருந்தாது-
அவதாரிகை –
அநந்தரம் சரபர் மதத்தை தூஷிக்கிறார் –
சாரப்ரணிஹிதம் யுக்தம் யதுக்தம் சசிவைஸ் தவ
ப்ரணி தாநம் -பாவே நிஷ்டா -பாவனா பிரதானாமானபிரயோகம் -ஒற்றனை அனுப்பவது என்னும் பொருளில் –
அர்த்தஸ்யா சம்பவாத்-
இது பிரத்யஷித்து நிற்கையாலே இவன் பக்கல் சாரனுக்கு கர்த்தவ்யம் இல்லாமையாலே
தத்ர காரணம் நோபாபத்யதே –
அந்த மதத்தில் காரணம் உபபன்னம் அன்று
அதவா –
அர்த்தஸ்யா சம்பவாத்-சாரணம் நோபாபத்யதே –
அர்த்த சப்தத்தாலே சாமாந்த அந்தப்புர சமாஜாதிகள் -சிற்றரசர்கள் அந்தப்புரம் -ராஜசபை -முதலானவை சொல்லப் பட்டன –
சாரணம் -சார வியாபார -அதாகிறது வணிக் க்ருஷீவலோ லிங்கீ பிஷூக -இத்யாதிகள் –
வியாபார -விவசாயி சந்நியாசி பிஷூ உபாத்யாயர் போலே வேவு பார்க்க வந்தான் எனபது ஒவ்வாது-
—————————————————————————————————————————————————————————–
அதேசகாலே சம்ப்ராப்த இத்யயம்யத் விபீஷண
விவஷா சாத்ர மேஸ்தீயம் தாம் நிபோத யதாமதி –யுத்த -17-54-
அதேசகாலே சம்ப்ராப்த -தகாத இடத்திலும் தகாத காலத்திலும் வந்தடைந்தான்
இத்யயம்யத் விபீஷண-இந்த விபீஷணன் -என்று யாதொன்று சொல்லப் பட்டதோ
விவஷா சாத்ர மேஸ்தீயம் -அத்ர மே இயம் விவஷா -இந்த மதத்தில் எனக்கு இப்படிச் சொல்ல வேண்டும் என்று விருப்பம்
தாம் நிபோத யதாமதி -தாம் ச யதாமதி நிபோத -அவ்விருப்பத்தை நான் அறிந்தபடி கேட்பீர்-
அவதாரிகை –
ஸ்ரீ ஜாம்பவ மஹா ராஜர் பஷத்தை தூஷிக்கிறான்-
அயம் விபீஷண-
த்வாம் து திக் குலபாம்ஸநம் -யுத்த -16-15-என்றும்
தாசவச் சாவமா நித -17-14- என்றும் ராவணனாலே அவமா நிதனாய்
தஸ்யாஹம் நுஜே ப்ராதா விபீஷண இதி ஸ்ருத -17-10-என்று ஸ்வ நிஷ்கர்ஷத்தை முன்னிட்டுக் கொண்டு
ராகவம் சரணம் கத -17-14-என்று தேவர் திருவடிகளிலே சரணம் புகுந்து நிற்கிற விபீஷணன்
அதேசகாலே சம்ப்ராப்த -இதி தவ சசிவைர் யதுக்தம் அத்ர மே இயம் விவஷா சாஸ்தி யதாமதி தாம் நிபோத –
இப்பஷத்தில் எனக்கு விவஷை உண்டாகா நின்றது
நான் அறிந்தபடி சொல்ல அவற்றை கேட்டருள வேணும்
ச சப்த -து சப்தார்த்தம்
முன்புள்ள பஷத்தில் காட்டில் இப்பஷத்துக்கு யுண்டான தூஷண விசேஷத்தைச் சொல்லுகிறது-
————————————————————————————————————————————————————
ஸ ஏஷ தேச காலஸ்ச பவதீஹ யதா ததா
புருஷாத் புருஷம் ப்ராப்ய ததா தோஷ குணாவபி -யுத்த -17-55-
ஸ தேச காலஸ்ச-இவன் வரத்தக்க அந்த இடமும் -இவன் வரத் தக்க அந்தக் காலமும்
பவதீஹ யதா ததா – ஏஷ யதா பவதி ததா நிபோத -ஆகிறதோ -இதுவேயாக -எப்படி ஆகிறதோ -அப்படி அதைக் கேளும் –
புருஷாத் -அதம புருஷனான ராவணனைக் காட்டிலும்
புருஷம்-உத்தம புருஷனான தேவரீரையும்
ப்ராப்ய ததா தோஷ குணாவபி -ததா -அப்படியே -தோஷ குனௌ அபி -அவனை விடா விடில் தீமையையும் உம்மை அடைவதில் நன்மையையும் -ப்ராப்ய -அறிந்து வருவது தக்கது-
அவதாரிகை –
அந்த விவஷை இன்னது என்கிறது மேல்-
இஹ ஸ ஏஷ தேச காலஸ்ச யதா ததா தாம் நிபோத –
இதி பூர்வேன அன்வய
யாதொரு காலத்தில் யாதொரு தேசத்தில் வந்தான்
இவன் வரவுக்கு இதுவே தேசமும் இதுவே காலமும் யாதொருபடி ஆம்
அப்படிப்பட்ட விவஷை கேட்டு அருள் வேணும்
எங்கனே என்னில்
புருஷாத் புருஷம் ப்ராப்ய ததா தோஷ குணாவபி –
தம பிரகிருதி யாகையாலே ஹிம்சையே யாத்ரையான ராவாணனைக் காட்டில் சத்வோத்தராகையாலே
பர ரஷணமே யாத்ரையாய் இருக்கிற தேவரை ப்ராப்யராக புத்தி பண்ணி ப்ராப்ய புத்த்யா-
ததா தோஷ குணாவபி –
அவனை அவ்வளவிலே விட்டுப் போராது ஒழிந்தால் வரும் தோஷத்தையும்
தேவரீரைப் பற்றினால் வரும் நன்மையையும் புத்தி பண்ணி –
தோஷம் ஆவது -அவனுடைய கருத்துக்கு சஹகாரியாய் அந்த பிரதி கூல்யத்தோடே முடிந்து போகை-
நன்மையாவது -தார்மிகரோடே கூடப் பெறுகையும் -அதின் பலமான தேவர் திருவடிகளில் கைங்கர்யமும்
இந்த வைஷம்ய ஜ்ஞானம் யுடையவனுக்கு வருகை யுக்தம்-
——————————————————————————————————————————————————————
தௌராத்ம்யம் ராவணே த்ருஷ்ட்வா விக்கிரமம் ஸ ததா தவயி
யுக்தமாகமநம் தஸ்ய ஸத்ருஸம் தஸ்ய புத்தித –யுத்த -17-56-
தௌராத்ம்யம் ராவணே-ராவணன் இடத்தில் துஷ்டத் தனத்தையும்
ததா தவயி-அப்படியே உம்மிடத்தில்
விக்கிரமம் ஸ -பராக்ரமத்தையும்
த்ருஷ்ட்வா -பார்த்து
தஸ்ய புத்தித -அந்த விபீஷணனுடைய புத்திக்கு
ஸத்ருஸம் -தகுந்த
ஆகம நம் -வரவு
யுக்தம் -தக்கது-
அவதாரிகை -கிஞ்ச -மேலும் காரணம் கட்டுகிறான்-
ராவணே தௌராத்ம்யம் ததா தவம் விக்கிரமம் ஸ த்ருஷ்ட்வா தஸ்ய யுக்தமாகமநம் யுக்தம் –
தேவர் திரு உள்ளத்திலே புண் படும்படி ராவணன் பண்ணின தண்மையைக் கண்டும் –
துராத்மாக்களை அநாயாசேன கொல்ல வல்ல ஆண் பிள்ளைத் தனத்தை தேவரீர் பக்கலிலே கண்டு வருகை யுக்தம்
தஸ்ய புத்திதஸ் ஸத்ருஸம் –
நியாயத்தில் சஞ்சரிக்கும் அவன் புத்திக்கும் ஸத்ருஸம் ராவணன் தன்னைக் கொல்லப் புக –
தூதவதம் யுக்தம் அல்ல -என்றவன் ஆகையாலே கைக் கொண்டான் இ றே-
—————————————————————————————————————————————————————————–
அஜ்ஞாதரூபை புருஷைஸ் ஸ ராஜன் ப்ருச்ச்யதாமிதி
யதுக்தம் தத்ர மே ப்ரெஷா காசிதஸ்தி சமீஷிதா –யுத்த -17-57-
அஜ்ஞாதரூபை-அறியத் தகாத கருத்தை யுடைய
புருஷைஸ் -புருஷர்களால்
ஸ ராஜன் ப்ருச்ச்யதாமிதி -அரசரே அந்த விபீஷணன் கேட்கப்பட்டும் -என்று
யதுக்தம் தத்ர மே -தம்முடைய மந்த்ரிகளாலே யாதொரு வசனம் சொல்லப் பட்டதோ அந்த பஷத்தில் எனக்கு
சமீஷிதா -நன்றாகப் பரிசீலனம் பண்ணப் பட்ட
காசித் -ஒரு
ப்ரேஷா-உக்தி
அஸ்தி -இருக்கிறது-
அவதாரிகை –
அநந்தரம் மைந்த பஷத்தை தூஷிக்கிறான்-
அஜ்ஞாதரூபை புருஷைஸ்
அஜ்ஞாதாபி ப்ராயை-தந்தாம் நினைவை எதிரிகள் அறியாதபடி மறைத்துச் சொன்ன புருஷர்களால் –
ஸ ப்ருச்ச்யதாமிதி தவ சசிவை யதுக்தம் ராஜன்-
தேவர் ராஜாக்கள் ஆனால்
வக்தாக்கள் ஸூ ஹ்ருத்துக்கள் என்றால்
நியாய பஹிஷ்டமான வார்த்தையைக் கேட்க கடவதோ என்கை-
தத்ர மே ப்ரெஷா காசிதஸ்தி சமீஷிதா –
இம் மதத்திலே நீதி விரோதத்தை பற்றி என்னால் நிரூபிதையாய் இருப்பதொரு புத்தி யுண்டு-
———————————————————————————————————————————————————————–
ப்ருச்சய மாநோ விசங்கேத சஹஸா புத்திமான் வச
தத்ர மித்ரம் ப்ரதூஷ்யேத மித்யா ப்ரஷ்டு ஸூ காகதம் –யுத்த -17-58-
வச ப்ருச்சய மாநோ – வார்த்தை கேட்கப் பட்டவனாய்க் கொண்டு –
விசந்கேத சஹஸா -சடக்கென ஐயம் உறுவான்
புத்திமான் -அறிவாளியான விபீஷணன்
தத்ர -ஐயமுற்றவுடன்
மித்யா ப்ரஷ்டு -பொய்யாகக் கேட்கிறவனுக்கு
மித்ரம் ப்ரதூஷ்யேத-நண்பன் கெட்டு விடுவான்-
அவதாரிகை –
அது என் என்ன இன்னது என்கிறான்-
சஹஸா வச ப்ருச்சய மாநோ ஸ புத்திமான் விசங்கேத –
தன்னை சவீ கரிப்பதற்கு முன்னே ராவணன் வசனத்தை பிரச்னம் பண்ணினால்
இது சவீ காரத்துக்கு பின்பு கார்ய விசார சமயத்திலே கேட்கமது வென்று
அறியும் புத்தியோகத்தை யுடையவன் ஸ்வ நிகர்ஷத்தை முன்னிட்டு சரணம் புக்க நம் பக்கலிலே சத்ரு புத்தியைப் பண்ணினாரோ என்று மிகவும் சங்கிக்கும்
சங்கையில் வரும் அனர்த்தத்தைச் சொல்லுகிறது மேல் அர்த்தத்தாலே –
தத்ர –
சங்கித்த அளவிலே –
மித்யா ப்ரஷ்டு –
ஒன்றை நினைத்து ஒன்றைக் கேட்குமவனுக்கு
ஸூ காகத மித்ரம் ப்ரதூஷ்யேத –
இருகை முடவன் தலையிலே கங்கை உதித்தால் போலே
அநாயாசேன வந்த மித்ரம் இழக்க வரும் –
மித்யா ப்ரஷ்டும் –
என்ற பாடமான போது மித்ர விசேஷணமாய் பொய்யே சிலவற்றைக் கேட்கிற மித்ரம் -என்றுமாம் –
———————————————————————————————————————————————————————————————
அசக்ய சஹஸா ராஜன் பாவோ வேத்தும் பரஸ்ய வை
அந்த ஸ்வ பாவைர் கீதைஸ் தைர் நை புண்யம் பஸ்யதோ ப்ருசம் -யுத்த -17-59-
ராஜன் -அரசே
ப்ருசம் -மிகவும்
நை புண்யம் -குறிக் கொண்டு
பஸ்யதோ -தன் கார்யத்தைப் பார்க்கும்
பரஸ்ய வை -எதிரியினுடைய
அந்த ஸ்வ பாவைர் -உள்ளே மறைந்து இருக்கும் கருத்தை யுடைய
தை -அந்த
கீதைஸ் -பதில் உரைகளாலே
பாவோ வேத்தும்-அவனுடைய கருத்தை அறிவதற்கு
அசக்ய சஹஸா-முடிவது அன்று –
அவதாரிகை –
மித்ரத்தை இழக்கும் அளவன்று
அவன் நினைவு ஆராயவும் ஒண்ணாது -என்கிறான்-
பாவோ வேத்தும் பரஸ்ய வை பாவ சஹஸா வேத்தும் அசக்ய
சிர பரிசயத்தாலே அந்யனுடைய ஹ்ருதயத்தை அறியுமது ஒழிய சடக்கென அறியப் போகாது –
எங்கனே என்னில்
ப்ருசம் நை புண்யம் பஸ்யத பரஸ்ய அந்த ஸ்வ பாவ தைர் கீதை பாவ மேத்தும் அசக்ய –
துஷ்ட ஸ்வ பாவனாய்-ஸ்வ அர்த்தத்தை நிபுணமாகப் பார்க்கிறவனுடைய கூடாபி பிராயமான உத்தர வசனங்களாலே பாவம் அறியப் போகாது –
அந்த ஸ்வ பாவை –
தன்னுடைய பாவம் வசனத்திலே தோற்றாதே நெஞ்சிலே கிடக்கை –
ராஜன் –
நிதிஜ்ஞரான தேவர்க்கு அஜ்ஞாதம் உண்டோ -என்கை-
நீ உன்னுடைய பாவத்தை மறைத்து பிரச்னம் பண்ணினவோ பாதி
அவனும் தன்னுடைய பாவத்தை மறைத்துத் தான் உத்தரம் சொன்னால் அறியப் போமோ அவனுடைய பாவம் -என்கை –
—————————————————————————————————————————————————————————————–
ந த்வஸ்ய ப்ருவதோ ஜாது லஷ்யதே துஷ்டபாவதா
பிரஸன்னம் வதனம் சாபி தஸ்மான்மே நாஸ்தி சம்சய -யுத்த -17-60-
ந த்வஸ்ய ப்ருவத அஸ்ய-வார்த்தை சொல்லும் இவனுக்கு
ஜாது -ஒரு போதும்
லஷ்யதே துஷ்டபாவதா -துஷ்டத் தனம் காணப் படுவது இல்லை
பிரஸன்னம் வதனம் சாபி -முகமும் தெளிந்து இருக்கிறது
தஸ்மான்மே நாஸ்தி சம்சய -ஆகையால் எனக்கு ஐயம் இல்லை-
அவதாரிகை –
இப்படி பரமதத்தை நிரசனம் பண்ணி ஸ்வ சித்தாந்தத்தை உபன்யசிக்கிறான்-
அஸ்ய ப்ருவத துஷ்டபாவதா ஜாது ந லஷ்யதே-
இவன் வார்த்தை சொல்லுகிற இடத்தில் துஷ்ட பாவதை ஒரு காலும் காணப் படுகிறது இல்லை
அநாதரே சஷ்டீ
ஜாது-
துஷ்ட பாவனாகில் தன் தோஷத்தை மறைத்தாலும் ஓர் அளவுகளிலே பிரகாசிக்கும்
இவன் பக்கல் சர்வ காலமும் தோற்றுகிறது இல்லை –
துஷ்ட பாவமாவது துஷ்டனுடைய சேஷ்டை -அதாவது
முக விகாரம் ஸ்வேதகம்பாதி கதி நீரீஷனம் ஆலோகனம் இவை தொடக்கமானவை துஷ்ட சேஷ்டிதங்களாக சாச்த்ரன்களிலே பிரசித்தம்
ததாச யாஜ்ஞவல்க்ய
தேஸாத் தேஸா தரம் யாதி ஸ்ருக்விணீ பரிலேடி ச
லலாடம் ஸ்வித்யதே சாத்ரமுகம் வை வர்ண்ய மேதி ச
பரி ஸூஷ்யத் ஸ் கலத் வாக்யோ விருத்தம் பிரதிபாஷதே
ஸ்வ பாவாத் விக்ருதிம் கச்சேத் மநோ வாக்காய கர்மபி -இத்யாதி
மநு ரபி -பாஹ்யைர் விபால்யதே லிங்கை பாவ மந்தர்க்கதம் நருணாம் ஸ்வ ரவர்ணேங்கிதா காரைர்
சஷூஸா சேஷ்டிதேந ச
ஆகாரை ரிங்கிதைர் கதா சேஷ்ட்யா பாஷிதேந வா
நேத்ர வக்த்ர விகாரைச்ச த்ருச்யதே அந்தர்க்கதம் மன -இத்யாதி –
இவன் பக்கல் துஷ்ட லிங்கங்கள் இல்லாமையே யன்று -சுத்தன் என்னும் இடத்துக்கு லிங்கம் உண்டு என்கிறான் –
பிரஸன்னம் வதனம் சாபி -என்கிற வாக்யத்தாலே
இவனுடைய முகம் பிரசன்னமாயே இரா நின்றது
வழி யடி யுண்டவன் தாய் முகத்திலே விழித்தால் போலே இவன் முகம் குளிர்ந்து அன்றோ இருக்கிறது
முக பிரசாதம் ஸூ த்த லிங்கமாக பிரசித்தம் –
யதா ஸ்ரீ மத் கிஷ்கிந்தா காண்டே –
ந முகே நேத்ரயோர் வாபி லலாடே ச ப்ருவோஸ் ததா
அந்வேஷ்யபி ச சர்வேஷூ தோஷ சம்விதித க்வசித் -3-30- இதி –
தாஸ்மான் மே நாஸ்தி சம்சய –
இவன் பக்கலிலே தோஷ ராஹித்யத்தாலும்
குண சேஷ்டா வை லஷண்யத்தாலும் -சர்வதா சங்க்ய ஏவ ஹி-17-37 என்றும்
சர்வதா சங்க்ய தாமயம் -17-44-என்றும் முதலிகளுக்கு யுண்டான சம்சயம் எனக்கு இல்லை என்கிறான் –
—————————————————————————————————————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply