அசங்கிதமதி ஸ்வஸ்தோ நஸட பரிஸர்ப்பதி
ந சாஸ்ய துஷ்ட வாகஸ்தி தாஸ்மான் நாஸ் தீஹ சம்சய –யுத்த -17-61-
அசங்கிதமதி -ஐயம் அற்ற மனத்தினனாய்
ஸ்வஸ்தோ -தன் நிலையினின்றும் பிறழாதவனாய்
நஸட -துஷ்டன் அல்லாதவனாய்
பரிஸர்ப்பதி -அருகில் வருகிறான் –
ந சாஸ்ய துஷ்ட வாகஸ்தி-அஸ்ய துஷ்டவாக் ந அஸ்தி-இவனுக்கு தோஷமுள்ள வார்த்தை இல்லை
தாஸ்மான் நாஸ் தீஹ சம்சய -தஸ்மாத் இஹ ந சம்சய -ஆகையால் இவன் விஷயத்தில் எவருக்கும் ஐயம் வேண்டியது இல்லை-
அவதாரிகை –
இவன் வந்தபடியாலும் -வார்த்தை சொன்ன படியாலும் எனக்கே யல்ல –
இவன் அளவில் சர்வர்க்கும் சங்கிக்க இடம் இல்லை-என்கிறான் –
அசங்கிதமதி ஸ்வஸ்தோ –
முதலிகள் -சாலா நுத்யம்ய சைலாம்ச்ச -17-6-என்று தன்னைக் குறித்து கல்லும் தடியும் ஆனவளவிலும் புத்தியில் இவர்கள் பக்கல் பிரதிகூல சங்கை இன்றிக்கே வந்தான் –
நஸட பரிஸர்ப்பதி –
பரி சர்ப்பணம் ஆவது -பரி சமாகமானம்
தனக்கு ஒரு அபாஸ்ரயம் தேடி -வருவாரைக் கிட்ட வந்தான்
ராஷசோ அப்யேதி-17-5-என்று நம்மை மதியாதே மேலிட்டு வந்தான் என்று முதலிகளும் பயப்படும்படி இ ரே கிட்டிக் கொண்டு நின்றது
இப்படியோ துஷ்ட பாவருடைய படி இருப்பது
ந சாஸ்ய துஷ்ட வாகஸ்தி –
இவன் வாக் வியாபாரத்தில் குழப்பம் இல்லை
துஷ்டருடைய வாக் வியாபாரம் ஸ் கல நாதி தூஷிதமாய் இ றே இருப்பது
தாஸ்மான் நாஸ் தீஹ சம்சய –
எனக்கே அல்ல -அஸ்தானே பய சங்கிகளுக்கும் இவன் விஷயத்தில் சங்கை வேண்டா –
——————————————————————————————————————————————————————————————
ஆகாரஸ் சாத்யமாநோ அபி ந சக்யோ விநி கூஹிதும்
பலாத்தி விவ்ருணோத்யேவ பாவ மந்தர்க்கதம் நருணாம் -17-62-
ஆகாரஸ் சாத்யமாநோ அபி -சரீர விகாரம் மறைக்கப் பட்ட போதிலும்
ந சக்யோ விநி கூஹிதும் -மறைப்பதற்குக் கூடாத தாககும்
ஹி -ஏன் என்னில்
நருணாம் அந்தர்க்கதம் -மனிதர்களுடைய உள்ளே இருக்கும்
பாவ – தீய கருத்தை
பலாத் -இவனையும் மீறி பலாத்காரமான
விவ்ருணோத்யேவ-மறைக்க முயலும் சரீர விகாரம் காட்டிக் கொடுத்தே விடும் –
அவதாரிகை –
அவன் விபர லம்பத்தை-வஞ்சக வேஷத்தை -மெய்யாக நினைத்துச் சொல்லுகிறாய் என்று முதலி களுடைய நினைவாகச் சொல்லுகிறான் –
ஆகாரஸ்-
சரீர விகார
சாத்யமாநோ அபி
சாதிக்கக் கடவதாக இவன் பிரவர்த்திதாலும்
ந சக்யோ விநி கூஹிதும்
மனஸ் ஸூ அந்யதா கரித்து இருக்கையாலே இவனால் மறைக்கப் போகாது
மறைக்கப் போகாமைக்கு ஹேது சொல்லுகிறது –
நருணாம் அந்தர்க்கதம் பாவம் பலாத் விவ்ருணோத்யேவ –
இவன் மறையா நிற்கச் செய்தேயும் இந்த விகாரம் ஸ்வ பலத்தாலே புருஷனை அனுபவித்துத் தனக்கடியாய் நமக்குத் தோற்றாதே இருக்கும் பாவ தோஷத்தை பிரகாசிப்பியா நிற்கும்
ஹி
ஹே தௌ-
அவதாரணத்தால் தப்பாது என்கை-வெளிப்படுத்தியே விடும்
அத்ர-ஆகாரை ரிங்கிதைர் கதா இத்யாதி –
——————————————————————————————————————————————————————————————-
தேச காலோபபன்னம் ச கார்யம் கார்யவிதாம் வர
சபலம் குரு தே ஷிப்ரம் பிரயோகேணாபி சம்ஹிதம் -17-63-
கார்யவிதாம் வர -செய்வான அறிவாரில் சிறந்தவரே
தேச காலோபபன்னம் ச கார்யம்-தேச காலங்களோடு பொருந்திய -விபீஷண சவீ காரமாகிற கார்யத்தை –
பிரயோகேணாபி சம்ஹிதம் -அனுஷ்டானத்தோடே கூடியதாகவும்
சபலம் குரு தே ஷிப்ரம்-தே சபலம் ஷிப்ரம் குரு -தேவரீருக்கு பயனுடையகாவும் விரைவில் செய்வீராக-
அவதாரிகை –
இப்படி பரிசுத்தமாய் தைவாதாகமான மித்ரத்தைப் பரிக்ரஹித்து தேவருடைய ரஷகத்வத்தையும்
அவனுடைய வரவையும் சபலமாக்கி யருள வேணும் என்று சித்தாந்தத்தை நிகமிக்கிறார் –
தேச காலோபபன்னம் ச-
தேச காலோ உபபன்னம் ச -யுத்த -17-55-என்று அவன் வரவுக்கு தேச காலங்கள் யோக்யமானால் போலே
தேவருடைய பரிகரகுஅத்துக்கு யோக்யமான தேச காலங்கள் என்கை –
கார்யம் –
கர்த்தவ்யம் -சவீ கார ரூப கர்த்தவ்யத்தை
சபலம் குரு தே ஷிப்ரம் பிரயோகேணாபி சம்ஹிதம் –
ஆஜகாம முஹூர்த்தேந-17-1- என்று அவன் துடித்து வந்த வரவுக்கு சத்ருசமாம் படி சடக்கென வேணும்
கார்யவிதாம் வர
கால அனுகூலமாகவும் கர்த்தவ்யங்களை அறியுமவர்களுக்கு வரணீயர் அன்றோ தேவர் –
அதவா
தேச காலோ உபபன்ன ச கார்யம் ஷிப்ரம் பிரயோகேணாபி சம்ஹிதம் சபலம் குருதே –
கர்த்தவ்ய ஜ்ஞானம் யுடைய புருஷன் தேச காலங்களுக்கு உசிதமான கர்த்தவ்யங்களை பிரயோகேண அபி சம்ஹிதமாக்கி சபலமாகிப் பண்ணா நிற்கும் இ றே என்றுமாம்
கார்யவிதாம் வர –
கர்தவ்ய ஜ்ஞானம் யுடையார் படி இதுவானால் அவர்களுக்கு வரணீயரான தேவர்க்கு அனுஷ்டானம் இன்றிக்கே ஒழியக் கடவதோ –
——————————————————————————————————————————————————————————————
உத்யோகம் தவ சம்ப்ரேஷ்ய மித்யாவ்ருத்தம் ச ராவணம்
வாலி நஞ்ச ஹதம் ச்ருத்வா ஸூ க்ரீவம் சாபி ஷேசிதம் -17-64
ராஜ்யம் ப்ரார்த்தயமா நஸ்து புத்தி பூர்வமிஹா கத
ஏதாவத்து புரஸ் க்ருத்ய வித்யதே த்வச்ய சங்க்ரஹ –17-65-
உத்யோகம் தவ சம்ப்ரேஷ்ய -உம்முடைய முயற்ச்சியைப் பார்த்து
மித்யாவ்ருத்தம் ச ராவணம் -தீய நடத்தை யுடைய ராவணனையும்
வாலி நஞ்ச ஹதம் ச்ருத்வா ஸூ க்ரீவம் சாபி ஷேசிதம் -கொல்லப் பட்ட வாலியையும் அபிஷேகம் செய்விக்கப் பட்ட சுக்ரீவனையும் கேட்டு
ராஜ்யம் ப்ரார்த்தயமா நஸ் து -ராஜ்யத்தை விரும்பியவனாகவே
புத்தி பூர்வமிஹா கத -மனப்பூர்வமாக இங்கே வந்தான்
ஏதாவத்து -இவ்வளவையும்
புரஸ் க்ருத்ய -முன்னிட்டு
வித்யதே த்வச்ய சங்க்ரஹ –இவனை ஏற்றுக் கொள்வது செய்யத் தக்கதாகவே இருக்கிறது –
அவதாரிகை –
பந்துக்களையும் ஐஸ்வர்யத்தையும் விட்டு வெறுமனே நம் பக்கல் மித்ரதையே பிரயோஜனமாக வரக் கூடுமோ -என்னில்
அது கூடாது என்று இருந்தீர் ஆகிலும் -பிராத்ரு நிரசன பூர்வகமாக நம் பக்கல் ராஜ்யத்தை அபெஷித்து வரக் கூடும்
அப்போதும் பரிக்ராஹ்யன் -என்கிறான் இவ்விரண்டு ஸ்லோகத்தாலும்-
அவன் ராஜ்ய ஸ்ரத்தை பண்ணி வருகைக்கு ஹேது சொல்லுகிறது –
உத்யோகம் தவ சம்ப்ரேஷ்ய –
கர தூஷண த்ரிசிராக்கள் முதலான பதினாலாயிரம் ராஷசரையும் மூன்றே முக்கால் நாழிகையிலே தனியே அழியச் செய்த தேவர்
வெளி நிலமான கடல் கரையிலே சபரிகரமாக இட்டுக் கொண்டு இருக்கிற ஒரு பாட்டைக் கண்டு
மித்யாவ்ருத்தம் ச ராவணம் வாலி நஞ்ச ஹதம் ச்ருத்வா ஸூ க்ரீவம் சாபி ஷேசிதம் -ராஜ்யம் ப்ரார்த்தயமா நஸ்து புத்தி பூர்வமிஹா கத-
தேவர்க்கு எதிரியான ராவணனுடைய மாயா வியாபாரத்தையும்
ராவணனிலும் அதி பிரபலனான வாலியை ஓர் அம்பாலே உம்மை ஆஸ்ரயித்த தம்பிக்காக அழியச் செய்த படியாலும்
ராவணனை அழியச் செய்து ராஜ்யத்தைத் தருவார் என்று ராஜ்ய காங்ஷியாய் கொண்டு
வருகையாலே சங்க்யன் அல்லன் -பரிக்ராஹ்யன் –
ஏதாவத்து புரஸ் க்ருத்ய வித்யதே த்வச்ய சங்க்ரஹ –
நமக்கு அப்படியே பந்துவாய் வந்தான் என்னும் இடம் உம்முடைய பரிகரத்துக்கு சங்க நீயமானாலும்
ஏதாவன் மாத்ரத்தை முன்னிட்டாகிலும் இவனுடைய சங்க்ரஹம் கார்ய்மே –
பிரதமத்தில்-ஏதாவத்து -என்றது து சப்தம் சமுச்சயார்த்தம்
சரமத்தில் -வித்யயேது-அவதாராண அர்த்தம் –
———————————————————————————————————————————————————————————–
யதா சக்தி மயோக்தம் து ராஷஸஸ் யார்ஜவம் ப்ரதி
பிரமாணம் த்வம் ஹி சர்வஸ்ய ஸ்ருத்வா புத்தி மதாம் வர 17-66-
ராஷஸஸ் யார்ஜவம் ப்ரதி-ராஷச குலத்தவனான விபீஷணனுடைய நேர்மையைக் குறித்து –
யதா சக்தி மயோக்தம் து -என்னாலே இயன்ற வரையில் சொல்லப்பட்டது
புத்தி மதாம் வர -அறிவாளிகளில் சிறந்தவரே
பிரமாணம் த்வம் ஹி சர்வஸ்ய ஸ்ருத்வா-நீர் கேட்டு அனைத்துக்கும் முடிவு கட்டவேண்டியவர் –
அவதாரிகை –
ஆக இப்படி லோக பிரசித்தியாலும் -இவன் சங்க்ராஹ்யன் என்னும் இடத்தைச் சொல்லி -மேல்
இவனுடைய ஸூ த்த்யதிசயத்தை உபபாதித்துக் கொண்டு உக்தத்தை நிகமிக்கிறான் –
ராஷஸஸ் யார்ஜவம் ப்ரதி-
முதலிகள் ஜாதி மாதரத்தைப் பற்றி சங்கிக்கிற இவனுடைய ஆர்ஜவத்தைக் குறித்து
மயா-
வானர மாத்ரமான என்னாலே
யதா சக்தி உக்தம் து –
யதாமதி சொல்லப் பட்டது –
புத்தி மதாம் வர –
சர்வ தேச சர்வ கால வர்த்தி சகல பதார்த்தங்களையும் ஸ்வத ஏவ அறியும் தேவரீரே இ றே இவனுடைய சுத்தி அறிக்கைக்கு சக்தர்
பிரமாணம் த்வம் ஹி சர்வஸ்ய ஸ்ருத்வா –
இவனுடைய குணாதிக்யம் என்ன -ஸ்வரூபம் என்ன -ச்வீகாரம் என்ன -இவை நான் விண்ணப்பம் செய்யக் கேட்டாலும்
அவை எல்லா வற்றுக்கும் நிர்ணாயகர் தேவரீரே இறே
ஸ்ருதியை ஸ்ம்ருதி பின் செல்லமா போலே அடியோங்கள் தேவரீர் திரு உள்ளத்தைப் பின் செல்லும் அத்தனை என்று கருத்து –
———————————————————————————————————————————————————————-
அத ராம பிரசன்நாத்மா ஸ்ருத்வா வாயு ஸூ தஸ்ய ஹ
ப்ரத்ய பாஷத துர்த்தர்ஷ ஸ்ருதவாநாத்மநி ஸ்திதம் -18-1-
அத ராம பிரசன்நாத்மா-அதற்குப் பின் ஸ்ரீ ராம பிரான் தெளிந்த மனத்தை யுடையராய்
ஸ்ருத்வா வாயு ஸூ தஸ்ய ஹ -வாயுவின் பிள்ளையான அனுமனுடைய சொல்லை -கேட்டார்
ப்ரத்ய பாஷத-பதிலாகச் சொன்னார்
துர்த்தர்ஷ -அசைக்க ஒண்ணாத வராய்
ஸ்ருதவாநாத்மநி ஸ்திதம் -கேள்வி ஜ்ஞானம் யுடையரான ஸ்ரீ ராம பிரான் தன் மனத்தில் இருந்ததை சொன்னார் –
அத ராம –
அநந்தரம் பெருமாள் உளரானார் -அதாகிறது -ரஷகத்வமே ஸ்வரூபம் ஆகையாலே –
சரணம் என்ற போதே ரஷிக்கப் பெறாத ஸ்வரூப ஹாநி போகை-
சம்சாரி சேதனனுக்கு பகவத் ஜ்ஞானங்களாலே சத் பாவங்கள் போலே இ றே ரஷகனுக்கு ரஷகத்வ சித்தியாலே சத்பாவமும் –தத் அபாவத்தாலே அசத் பாவமும் –
சர்வ ஆஸ்ரயணத்துக்கு ஏகாந்தமாகச் சக்கரவர்த்தி திரு மகனாய் வந்து அவதரித்த தாம் ஆஸ்ரயண உன்முகனாய்வந்தவனை விஷயீ கரியாமையாலே இலராய் -திருவடி வார்த்தையாலே உளரானார் என்றுமாம் –
பிரசன்நாத்மா-
பிரசன்ன மன –
தரமி யுன்டானவாறே தர்மம் யுண்டாயிற்று -அதாவது -மஹா ராஜர் வார்த்தை யாலே கலங்கின திரு உள்ளம் பிரசன்னமாய்
நிலைப்பெற்று என்நெஞ்சம் பெற்றது நீடுயிர் -திருவாய் -3-2-10-என்கிறபடியே –
ஸ்வ லாபத்தில் ஆ ஸ்ரீ தரைப் போலே ஆனார் என்கை-
ஸ்வாதமாநி ஸ்திதம் வாயு ஸூ தஸ்ய -ஸ்ருத்வா-
சர்வ பிராணி பிராண ஹேதுவான வாயுவினுடைய தத் குண உபேத ச்நேஹத்தாலே யதா பூதனான புத்ரனுடைய நெஞ்சில் கிடந்ததைக் கேட்டு
ஸ்வாதமநி ஸ்திதம் வாயு ஸூ தஸ்ய ஸ்ருத்வா –
தம்முடைய திரு உள்ளத்தில் கிடந்தபடி திருவடி சொல்லக் கேட்டு என்றுமாம்
ஹ –
ஒருவன் -சர்வ ரஷகனுக்குத் தன வார்த்தையாலே ரஷகனாவதே -என்று ரிஷி கொண்டாடுகிறான் –
துர்த்தர்ஷ-
பூர்வ பஷங்களாலே அப்ரத்ருஷ்யராய் ஸ்வ மத ஸ்தாபன சமர்த்தரானார்
ஸ்ருதவாந-
வசிஷ்டாதிகள் பக்கல் தமக்கு யுண்டான ஸ்ருதங்கள் உதவிற்று
அதாவது கபோத கண்டு பாக்ய நாதிகள்-புறா- கண்டு கதைகள் போல்வன
ப்ரத்ய பாஷத –
முதலிகளைக் குறித்து பிரதி வசன ஷமரானார்
ஆத்மா நி ஸ்திதம் ப்ரத்ய பஷ்த -என்றுமாம் –
தம்முடைய திரு உள்ளத்தில் கிடந்த அர்த்தத்தை முதலிகளுக்கு அருளிச் செய்தார் –
———————————————————————————————————————————————————————————–
மமாபி து விவஷாஸ்தி காசித் பிரதி விபீஷணம்
ஸ்ருத மிச்சாமி தத் சர்வம் பவத்பி ஸ்ரேயசி ஸ்திதை- 18-2-
மமாபி து -எனக்குமே
விவஷாஸ்தி காசித் -சொல்ல வேண்டிய வார்த்தை ஓன்று இருக்கிறது
பிரதி விபீஷணம்-விபீஷணனை குறித்து
ஸ்ருத மிச்சாமி தத் சர்வம் பவத்பி -உங்களாலே அவை எல்லாமே கேட்க்கப் பட வேண்டும் என்று விரும்புகிறேன்
ஸ்ரேயசி ஸ்திதை- நன்மையிலே நிலை நிற்கும்-
அவதாரிகை –
உங்கள் வார்த்தையை நான் கேட்டவோபாதி இவன் விஷயமாக நான் சொல்ல நினைக்கும் வார்த்தையையும்
கேட்டுத் தர வேணும் என்று முதலிகளை இரக்கிறார்-
மமாபி து –
எல்லாரிலும் தம்முடைய மதத்துக்கு யுண்டான விசேஷத்தைச் சொல்லுகிறார்
விவஷாஸ்தி காசித்-
ஒரு விவஷை யுண்டாகா நின்றது
பிரதி விபீஷணம்-
விபீஷணனை குறித்து ஒரு விவஷை யுண்டாகா நின்றது -என்கை
ஸ்ருத மிச்சாமி தத் சர்வம் –
விவேஷாகாத்மாய் -மித்ர பாவேன-18-3-என்று தொடங்கி
கணவ புத்திர பர்யாயமான-கண்டுவின் வார்த்தை ஈறாக -18-32-
அர்த்த ஜாதத்தை இதுவே அர்த்தம் என்று ச்வீகரித்த்லி கோளாகிலும் செவி தாழ்க்க அமையும் என்று இரக்கிறார்
பவத்பி ஸ்ரேயசி ஸ்திதை-
என்னுடைய ஸ்ரேயஸ்ஸிலே நிலை நின்று
அத்தாலே சத்தை யுண்டாக நின்றுள்ள உங்களாலே என்றுமாம்-
———————————————————————————————————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply