முமுஷூவாய் பிரபன்னனாய் இருக்குமவனுக்கு இருக்கும் நாள் கால ஷேபம் பண்ணும் பிரகாரம் எங்கனே
என்று உடையவர் திருவடிகளிலே முதலியாண்டான் விண்ணப்பம் பண்ண
ஸ்வாமியும்
1-குரு பரம்பரா பூர்வகமாக த்வ்யத்தை அனுசந்தானம் பண்ணுவான்
உபய விபூதி நாதனாய் ஸ்ரீ யபதியான சர்வேஸ்வரனும் நாய்ச்சிமாரும் நித்ய சூரிகளும் கூட எழுந்து அருளி இருக்கும் பீட கட்டணமாய் -பரம பதத்த்ல் கொலு வீற்று இருக்கும் -த்வய சிம்ஹாசனமாய் -இருக்கும் த்வயம்
2- பெரிய பெருமாள் திருவடிகளை சேவித்தவாறே பொது நின்ற பொன்னம் கழல் –என்கிறபடியே சர்வாத்மாக்களுக்கும் சாதாரணமாய் இருக்கும்
3-அபய ஹஸ்தத்தை சேவித்தால் அநந்ய சரணராய் இருக்கிற ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கே அசாதாராணமாய் இருக்கும்
4- திருமுக மண்டலத்தைக் கண்டால் நித்ய சூரிகளுக்கும் சாதாரணமாய் இருக்கும்
5-பிராப்யமான திரு மந்த்ரத்தைப் பெரிய பெருமாள் திருவடிகளிலே -உனக்கே நாம் ஆட்செய்வோம் -என்று பரம பிராப்யமாக அனுசந்தானம் பண்ணுவான்
6-ப்ராபகமான சரம ஸ்லோஹத்தைப் பெரிய பெருமாள் அபய ஹஸ்தத்தில் அனுசந்தானம் பண்ணுவான்
7- இரண்டும் கூடி போக ரூபமான த்வ்யத்தை பெரிய பெருமாள் திரு முக மண்டலத்திலே அனுசந்தானம் பண்ணுவான்
8- மத்ச்யத்தின் வடிவு எல்லாம் ஜலமயமாய் இருக்கும் போலே பெரிய பிராட்டியார் அவன் ஸ்வரூபாதி களுக்கு
நிரூபக பூ தை யாகையாலே பெருமாள் அவயவம் எல்லாம் ஸ்ரீ மயமாய் இருக்கும்-
9-ஸ்ரிங் சேவாஸாம்-என்ற தாத்வர்த்த பிரகாசகமாய் புருஷகார ஸ்வரூபமான ஸ்ரீ என்கிற திரு நாமத்தைப் பெரிய பெருமாள் திரு மார்பிலே அனுசந்தானம் பண்ணுவான்
10-மன்-என்று இப்புருஷகாரம் நித்யம் என்று அனுசந்தானம் பண்ணுவான்
11-நாராயண -என்று ஆஸ்ரயண சௌகர்ய ஆபாதகங்களான வாத்சல்யாதி குணங்களையும்
ஆஸ்ரித கார்ய ஆபாதகங்களான ஜ்ஞான சக்த்யாதி குணங்களையும்
உடையவன் என்று அனுசந்தானம் பண்ணுவான்
12-சரனௌ-என்று-பெரிய பெருமாள் திருவடிகளை அனுசந்தானம் பண்ணுவான்
13-சரணம் -என்று சரண்யனான பெரிய பெருமாள் அபய ஹஸ்தத்தில் அனுசந்தானம் பண்ணுவான்
14-பிரபத்யே -என்று பிரபத்தாவான தன்னுடைய ஸ்வரூப அநுரூப ச்வீகாரம் என்று அனுசந்தானம் பண்ணுவான்
15-ஸ்ரீ மதே நாராயணாய -என்கிற பதங்களை
ஸ்வாமிநியாய –அவனுக்கு வல்லபையாய் –ப்ராப்யையாய் -கைங்கர்ய வர்த்தகையாய்
பகவத் முக உல்லாச ஜனகையாய்
தத்ப்ரீத்ய அனுபவ ஏக யாத்ரையாய் இருக்கிற
பெரிய பிராட்டியாரோடு சேஷத்வ கார்யமான கைங்கர்ய பிரதி சம்பந்தாய் இருக்கும் அவனுடைய
தாரகத்வ வ்யாபகத்வ நியந்த்ருத்வ ஸ்வரூபம் என்ன
ஸ்வரூப குணங்களான ஜ்ஞான பலாதிகள் என்ன
அதில் நின்றும் எழுந்த வாத்சல்யாதிகள் என்ன
திவ்ய ஆத்ம ஸ்வரூப குண ப்ரகாசகமான பஞ்ச உபநிஷத் மய விக்ரஹங்கள் என்ன
விக்ரஹ குணங்களான சௌந்தர்ய சௌகுமார்யாதிகள் என்ன
ஆஸ்ரித விரோதி நிரசன விஷயமான சௌர்யாதிகள் என்ன
திவ்ய மங்கள விக்ரஹ ப்ரகாசகமான திவ்ய ஆபரணங்கள் என்ன
தத் அனுபவ விரோதி நிவர்த்தகமான திவ்ய ஆயுதங்கள் என்ன
அவற்றுக்கு அங்க ரூபமான ஸ்ரீ வைகுண்ட திவ்ய நகருள் த்வய மண்டபத்திலே திவ்ய மகிஷிகளோடே
திவ்ய பரிச்சதங்கள் சேவிக்க ச்வாமித்வ பிரகாசகமாக எழுந்து அருளி இருக்கிற இருப்பை அனுசந்தானம் பண்ணுவான்
16- ஆய -என்று அவன் அரசன் ஆகையாலும் சேஷியாகையாலும்
பிரபன்னனான இவன் அடி சூடும் அரசன் ஆகையாலும் சேஷம் ஆகையாலும்
சர்வவித சேஷ வ்ருத்திகளையும் பண்ணப் பெறுவேனாக வேணும் என்று அனுசந்தானம் பண்ணுவான்
17-நம-
த்வய ஷரஸ்து பவேன் ம்ருத்யு -என்றும்
மமேதி அஷரோ ம்ருத்யு -என்றும்
யானே என்தனதே என்று இருந்தேன் -என்று சொல்லப் படுகிற ஷஷ்ட்யந்தமான பதத்தை
த்ரயஷரம் ப்ரஹ்மண பதம் என்றும்
ந மமேதி ச சாஸ்வதம் -என்றும்
யானே நீ என்னுடைமையும் நீயே -என்றும் சொல்லுகிற
ந காரார்த்த பலத்தாலே ஷஷ்ட்யந்தமான பதத்தை நிஷேதித்து-
18-தனக்கேயாக என்கிறபடியே அத்தலையில் நினைவே நினைவாம்படி கீழ்ச் சொன்ன சகல சேஷ வ்ருத்திகளையும் கொண்டருள வேணும் என்று
பெரிய பெருமாள் திரு முக மண்டலத்தைப் பார்த்து அனுசந்தானம் பண்ணுவான் –என்று அருளிச் செய்தார் -உடையவர் –
————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகள் சரணம்
ஸ்ரீ முதலியாண்டான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply