ஏய்ந்த பெரும் கீர்த்தி ராமானுசன் முனிதன்
வாய்ந்த மலர்ப்பாதம் வணங்குகின்றேன் -ஆய்ந்த பெரும்
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதம் தரிக்கும்
பேராத உள்ளம் பெற —அனந்தாழ்வான் பணித்தது
எங்கள் கதியே இராமானுச முனியே
சங்கை கெடுத்தாண்ட தவராசா -பொங்கு புகழ்
மங்கையர் கோன் ஈந்த மறை ஆயிரம் அனைத்தும்
தங்கும் எனம் நீ எனக்குத் தா —-எம்பார் அருளிச் செய்தது
அருளிச் செயல்கள் எல்லாம் எம்பெருமானார் இட்ட வழக்கு
இந்த மகத்தான ப்ரஹ்ம வித்தையை-
கலியும் கெடும் கண்டு கொண்மின் என்று ஆஸாசித்த ஆழ்வார் உடைய பரம கிருபையாலும்
ஆ முதல்வன் -இவன் -என்று அனுக்ரஹித்த ஆளவந்தார் உடைய அத்புத அனுக்ரஹ சக்தியாலும்
அநாயாசமாக கிரஹித்து -சங்கை விஸ்மரணம் இன்றிக்கே தரித்து அருளி இருந்தார் —
வான் திகழும் சோலை மதிள் அரங்கர் வண் புகழ் மேல்
ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் -ஈன்ற
முதல் தாய் சடகோபன் மொய்ம்பால் வளர்த்த
இதத் தாய் இராமானுசன் —-பட்டர் பணித்தது
அந்த ராமானுஜ திவ்ய ஆஞ்ஞை யானது திவ்ய பிரபந்த விஷயமே-
புரா ஸூத்ரைர் வியாச சுருதி சத சிரோர்த்தம் க்ரதிதவான்
விவவ்ரே தத் ச்ராவ்யம்வகுள தரதா மேத்ய ஸ புன
உபா வேதௌ க்ரந்தௌ கடயிது மலம் யுக்தி ப்ரசௌ
புநர் ஜஜ்ஞே ராமாவரஜ இதி ஸ ப்ரஹ்ம முகுர —
இந்த ஸ்லோகம் எம்பார் /முதல் ஆண்டான் அருளிச் செய்ததாக சொல்வர்
ஈடு வியாக்யானம் அடைய வளைந்தான் அரும் பத உரை நூலில் உள்ள ஸ்லோகம்
உபநிஷத்தின் பொருள்களை வியாச பகவான் ப்ரஹ்ம சூத்ரமாக தொகுத்து அருள
அவரே நம் ஆழ்வாராக திருவவதரித்து செவிக்கு இனிய செஞ்சொல் மூலம் விவரித்து அருள
இந்த உபய திவ்ய கிரந்தங்களையும் பொருத்தமாக சமன்வயப் படுத்தி நிர்வஹிக்க-ஸ்ரீ பாஷ்யகாரராக அவரே மீண்டும் திருவதரித்து அருளினார்
பாஷ்ய காரர் இது கொண்டு சூத்திர வாக்யங்களை ஒருங்க விடுவார் -நாயனார்
வேதோத்தம்ச குஹா விஹார படுதா ஸ்ரீ சைல ஸ்ருங்க உல்லசன்
மாயா கேசரி மாநிதேன கஹ நன்யா யாட வீசாரிணா
கம்பீரேண பராத்மா பேதன மஹா நாதேன நாதேன மே
குபதோஹம் யதி சார்வ பௌமஹரிணா வர்த்தே ப்ருசம் நிர்ப்பய -எம்பார் அருளிச் செய்த முகத்த ஸ்லோக ரத்னம்
வலி மிக்க சீயம் -போலே இங்கும் சிம்ஹமாக ஐந்து விஷயத்தில் சாம்யம்
1-வேதோத்தம்ச குஹா விஹார படுதா-
மாரி மலை முழஞ்சில் மன்னிக் கிடந்தது உறங்கும் சீரிய சிங்கம்
வேதங்கள் ஆகிற பர்வதங்களில்
உபநிஷத் பாகம் ஆகிற குகைகளிலே விஹரிக்கும்
தைத்ரிய யஜூர் ப்ராஹ்மண -காடகத்தில்
பரத்வாஜோ ஹ த்ரி பிராயுர்ப்பிர் ப்ரஹ்ம சர்யம் உவாச –
வேதங்களை மலைகளாக தேவேந்தரன் காட்டினது போலே
தர்மஸ்ய தத்தவம் நிஹிதம் குஹாயாம் -மகா பாரதம் தர்ம நுட்பம் பொதிந்து இருக்கும் உபநிஷத் குகை
அதிலே விஹாரம் செய்கிறார் ஸ்வாமி –
க்ரீடார்த்தமபி யத் ப்ரூயுஸ் ஸ தர்ம பரமோ மத –
சொல்லும் விடு ஸ்ருதியாம்
விளையாட்டாகச் சொல்லும் வார்த்தையும் ஸ்ருதியாம் படி சிறப்புற்று இருக்குமே –
2-ஸ்ரீ சைல ஸ்ருங்க உல்லசன் மாயா கேசரி மாநிதேன –
சிம்ஹத்தை கொண்டாட வல்லது சிம்ஹமே யாகும்
அப்படியே இந்த ராஜ சிம்ஹத்தை கொண்டாட வல்ல சிம்ஹம் திரு வேங்கடமுடையான் ஆகிற சிம்ஹம்
திருமங்கை ஆழ்வார் –
தூணாய் அதனூடு அரியாய் வந்து தோன்றி
பேணா வவுணன் விடலாம் பிளந்திட்டாய்
சேணார் திரு வேங்கட மா மலை மேய கோ நாகணையாய் -என்று
திருவேங்கடமுடையானை சிம்ஹமாகவே அனுபவிக்கிறார்
அந்த சிம்ஹம் இந்த சிம்ஹத்தை பஹூ மானித்த விஷயம்
ஸ்ரீ வேங்கடேச இதிஹாச மாலையில் பரக்க காணலாம்-
3-கஹ நன்யா யாட வீசாரிணா –
சிம்ஹம் பெரும் காட்டிலே சஞ்சரிக்குமே ஒழிய நாட்டில் காண கிடையாதே
இந்த யதிராஜ சிம்ஹம் சாஸ்த்ரீய நியாயங்கள் ஆகிற அடவிகளிலே சஞ்சரிக்கும்
3-கம்பீரேண-பராத்மா பேதன மஹா நாதேன-
–கம்பீரேண-சிங்கத்தின் தோற்றம் அதி கம்பீரம்
ஸ்வாமி யுடைய கம்பீரம்
ஸ்ரீ ஸூ க்திகளிலும்
திருமேனியிலும் ஆகுமே –
பராத்மா பேதன மஹா நாதேன-சிலேடை இது
சிம்ஹ பஷத்தில்
பரேஷாம் ஆத்மா நாம் பி நந்தீதி பராத்மா பேதன தா நாவித மகா நாதோ யஸ்ய –
சிம்கத்தின் பெரு முழக்கம் மற்ற ஜந்துக்களை மாய்க்கும் இனி
யதிராஜ சிம்ஹ பஷத்தில்
பரச்ச ஆத்மானச்ச ஸ பராத்மனா தான் பி நந்தீதி பராத்மா பேதன
ததா வயதோ மகா நாதோ யஸ்ய
பரம புருஷனுக்கும் ஜீவாத்மாவுக்கும் ஐக்கியம் சொல்லுகிற விமத வாதிகளைக் கண்டித்து
ஜீவா பர பேதத்தை சாதிக்க வல்ல
திரு மிடற்று ஓசை உடையவர் அன்றோ ஸ்ரீ பாஷ்ய காரர்
உயிர் கள் மெய் விட்டு ஆதிப் பரனொடு ஒன்றாம் என்று சொல்லும் அவ்வல்லல் எல்லாம்
வாதில் வென்றான் எம்மிராமானுசன் மெய்ம்மதிக் கடலே
ஆக ராமானுஜ சிம்ஹத்தின் அபிமானத்தில் ஒதுங்கி உஜ்ஜீவிப்போம்
—————————————————————————————————————————————–
கப்யாச ஸ்ருதி-க்கு ஸ்வாமி ஸ்ரீ ஸூ க்தியாவது –
கம்பீராம் பஸ்ஸமுத் பூத
ஸூம்ருஷ்ட நாள
ரவிகர
விகசித
புண்டரீக தலாமலாய
தேஷண-
ஆழ்ந்த தண்ணீரில் வாழ்வதும்
தாளம் என்கிற தண்டோடு கூடி இருப்பதும்
இரவியின் கதிர்களால் மலரப் பெற்றதுமான
புண்டரீகத்தின் இதழ் போலே
நீண்ட திருக் கண்களை யுடையவன் –
மூன்று விசேஷணங்களையும்-ஆழ்வார்கள் அருளிச் செயலைக் கொண்டே அருளுகிறார்
கம்பீராம் பஸ்ஸமுத் பூத புண்டரீக –
தாமரை -ஜலஜம் -அம்புஜம் -அம்போஜசம் -நீரஜம் –
அம்பஸ் சமுத்பாத -நீரை விட்டுப் பிரியாமல் இருப்பதைச் சொல்லும்
தாமரையை அலர்த்தக் கடவ ஆதித்யன் தானே நீரைப் பிரிந்தால் அத்தை உலர்த்துமா போலே -ஸ்ரீ வசன பூஷண ஸ்ரீ ஸூ க்தி
கமலம் ஜலதாபேதம் சோஷயதி ரவிர் ந தோஷயதி
நீரை விட்டுப் பிரியாமல் இருக்கிற தாமரை போன்ற திருக் கண்கள்
நீரார் கமலம் போல் செங்கண் மால் என்று ஒருவன் -சிறிய திருமடல்
அழறலர் தாமரைக் கண்ணன் -திரு விருத்தம்-
தண் பெரு நீர்த் தடந்தாமரை மலர்ந்தால் ஒக்கும் கண் பெரும் கண்ணன் -திருவாய்மொழி –
அழற்றிலே நின்று அலர்ந்த தாமரைப் பூ போலே
அழறு -என்று அளறு -நீரிலும் சேற்றிலும் நின்று அலர்ந்து
செவ்வி மாறாத ஆமரை போன்ற கண்களை உடையவன் –
ஸூ ம்ருஷ்ட நாள புண்டரீக
நீரையும் நாளையையும் -இரண்டில் ஒன்றை விட்டாலும் சோபை இழக்குமே
எம்பிரான் தடம் கண்கள் –மென்கால் கமலத் தடம் போல் பொலிந்தன-திரு விருத்தம்
மென்கால் -மெல்லிய நாளத்தில் இருக்கின்ற –
நாளம் -தண்டு
கமலத்துக்கு அது கால் போன்று இருப்பதால் மென்கால்
ரவிகர விகசித புண்டரீக –
நீரில் இருந்தாலும்
நாளத்தில் இருந்தாலும்
சூர்ய கிரணங்களாலே அலர்த்தப் படும்
வெஞ்சுடரில் –அஞ்சுடர வெய்யோன் –செஞ்சுடர்த் தாமரைக் கண் செல்வனும் வாரானால் -திருவாய் மொழி -5-4-9-
செந்தண் கமலக் கண் –சிவந்த வாயோர் கரு நாயிறு அந்தமில்லாக் கதிர் பரப்பி அலர்ந்தது ஒக்கும் அம்மானே -திருவாய் மொழி –
செங்கமலம் அந்தரம் சேர் வெங்கதிரோற்கு அல்லால் அலராவால் -பெரிய திருமொழி-
கப்யாசம் சுருதி -மூலத்தில்
புண்டரீகம் ஏவம் அஷிணீ-
இதில் தள -அமல -ஆய்த –சேர்த்து அருளியது
ஆழ்வார்கள்
தாமரைக் கண்ணன்
தாமரைத் தடம் கண்ணன் –
கமலத் தடம் கண்ணன் –
கமலத் தடம் பெரும் கண்ணன் –
தளம் -வடசொல்லே தடம் ஆனது -இதனால் புண்டரீக தளம் -என்று அருளிச் செய்தார்
தடம் -விசாலம் -தடாகம் -வியாக்யானம்
நீலத் தடவரை மேல் புண்டரீக நெடும் தடங்கள் போலே –எம்பிரான் கண்கள் கோலங்களே -திரு விருத்தம் -இங்கு தடம் -தடாகம்-
கமலக் கண்ணன் அமலங்களாக விழிக்கும்-நம் ஆழ்வார் பாசுரம் கொண்டே
புண்டரீக தள அமல ஈஷண-என்றார் ஸ்வாமி
கரியவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்ட அப்பெரியவாய கண்கள்
என்கிற அத்விதீயமான பாசுரம் கொண்டே
புண்டரீக —ஆய தேஷிண-என்று அருளிச் செய்தார்-
—————————————————————————————————————————————–
ஸ்ரீ பாஷ்யத்தின் உபகரமம் –
மங்கள ஸ்லோஹம்
அகில புவன ஜன்ம ச்தேம பங்காதி லீலே –
யதோவா இமானி பூதானி ஜாயந்தே -உபநிஷத் வாக்ய சித்தம்
ஜன்மாத்ய அதிகரண ஸ்ரீ பாஷ்ய பிரபஞ்சிதமாய் உள்ள
ஜஜாஜ் ஜன்ம ஸ்திதி லயங்கள்
ஸ்திதி -ரஷணம்
இத்தை முதல் பாதத்தில் சொல்லி அருளிய பின்பு
விந்த விவித பூத வ்ராத ரஷைக தீஷே –என்ற இரண்டாவது பாதம் அருளிச் செய்தது எதற்கு –
ஆழ்வார் -எளிவரும் இயல்வினன்-1-3-2-
ஒளி வரு முழு நலம் முதலில கேடில -என்று அபரிமித கல்யாண குணங்கள் உடைமையை சொல்லி அருளி
உடனே வீடாத் தெளிதரு நிலைமையது ஒழிவிலன் -என்கிறார்
மோஷ ப்ரதத்வம் தனியே சொல்ல வேண்டியதொரு குணம் ஆகையாலே சொல்லி அருளுகிறார்
இரண்டாம் பத்திலும் அணைவது அரவணை மேல் -மோஷ பிரதத்வத்தை விசேஷேண அருளிச் செய்கிறார்
இதற்க்கு மோஷ பிரதத்வமே அனுபாவ்ய குணம் என்கிறார் திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னா வளியிலும் சாரத்திலும்
ஆழ்வார் திரு உள்ளப்படியே ஸ்வாமி யும்
விந்த விவித பூத வ்ராத ரஷைக தீஷே -என்று அருளிச் செய்கிறார் –
மூன்றாம் பாதத்தில் –ஸ்ரீ நிவாசே -என்று அருளிச் செய்ததும்
திருவில்லாத் தேவரை தேறேல்மின் தேவு -என்கிற உத்கோஷம் கொண்டே இப்படி அருளிச் செய்கிறார்
நான்காம் பாதத்தில் -பக்தி ரூபா சேமுஷீ பவது -என்று அருளிச் செய்து –
மம பக்திர் பவது –மம பக்திரஸ்து– என்னாமல்
மதிநலம் அருளினான் –மதி ஞானம் நலம் பக்தி
இரண்டையும் தந்து அருளினான் -என்பர் சிலர் -அது முக்கிய நிர்வாஹம் அல்ல
நலமான மதியைத் தந்தான் -பக்தி ரூபா பன்ன ஞானம்
முளைக்கும் போதே வயிரம் பற்றி முளைக்கும் பதார்த்தம்போலே
இத்தை திரு உள்ளம் பற்றியே ஸ்ரீ பாஷ்யகாரரும்
பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்தி ரூபா –என்று அருளிச் செய்தார்
புத்திர் மநீஷா தீஷணாதி ப்ராஞ்ஞா சேமுஷீ மதி -அமர கோசம்
மதியும் சேமுஷீயும் பர்யாயம்
பக்தியும் நலமும் பர்யாயம்-
————————————
அதாதோ ப்ரஹ்மஜிஜ்ஞாசா –முதல் ஸூதரம்
ப்ரஹ்ம சப்தம் –
சங்கரர் பாஷ்யம் –ப்ரஹ்ம ச வஷ்யமாண லஷணம் ஜன்மாத் யஸ்ய யதஇதி –என்பதே
ஸ்வாமி பாஷ்யமோ
ப்ரஹ்ம சப்தேன ஸ்வ பாவதோ நிரஸ்த நிகில தோஷ
அநவதிக அதிசய அசங்க்யேய கல்யாண குண கண
புருஷோத்தம அபிதீயதே ––
ஆழ்வார் -தொடங்கும் பொழுதே உயர்வற உயர் நலம் உடையவன் -என்று அருளிச் செய்ததை திரு உள்ளம் கொண்டே
உயர்வற -அநவதிக அதிசய
உயர் -அசங்க்யேய
நலமுடையவன் -கல்யாண குண கண
யவனவன் -புருஷோத்தம
ஆழ்வார் திருவாய் மொழி முழுவதும் பகவத் குணமயமே
அந்த அம்ருத சாகரத்தில் ஊறின ஸ்வாமி
மால் -நெடுமால் -அர்த்தத்தையே ப்ரஹ்ம -சப்த பொருளாக பாஷ்யம் இட்டு அருளிச் செய்கிறார்-
—————————————————————————————————————————————–
ஸ்வாமி
அநந்த குண சாகரம்
அபரிமித உதார குண சாகரம் -என்று பல இடங்களில் விசேஷணம் இடக் காண்கிறோம்
இரண்டாம் அத்யாயம் தொடக்கம் –அபரிமித உதார குண சாகரம் பரம் ப்ரஹ்ம வேதாந்த வேத்ய மித்யுக்தம் –
சாகர சப்தம் நித்யபுலிங்கம் குண சாகரோ ப்ரஹ்ம என்றே கொள்ள வேணும் ஒழிய
குண சாகரம் ப்ரஹ்ம சொல்லத் தகாது
குணங்களை கடலாக சொல்லி
அந்த கடலை எம்பெருமான் உடையவன் -பஹூ வ்ரீஹி சமாசம்
மிகும் திருமால் சீர்க்கடலை யுள் பொதிந்த சிந்தனையேன்-பெரிய திருவந்தாதி -69
குணங்களானவை கடலாக கொள்ளப் பட்டு இருக்கின்றது
பகவத் குணமாகிய அமுதக் கடலை உள் கொள்ளப் பெற்றவர்
ஆச்சார்யா ஹிருதயம் -3-6 மேகாபதேச சூரணை-பூண்ட நாள் சீர்கடலை உட்கொண்டு -என்று அருளிச் செய்கிறார்
மேகம் கடலை க்ரஹிப்பது போலே
மேகமாக சொல்லும் ஆச்சார்யர்களும் எம்பெருமான் உடைய திருக் குணங்கள் ஆகிற
கடலை க்ரஹிப்பவர்கள்-என்றது ஆயிற்று
அதே சாயலிலே பஹூ வ்ரீஹி சமாசத்தை இட்டு நிர்வஹிக்கும்படி அருளிச் செய்கிறார் ஸ்வாமி-
—————————————————————-
அக்தஸ் தத் தரமோ பதேசாத் -1-1-21-
சாது பரித்ராணம் முக்கிய அவதார பிரயோஜனம்
துஷ்ட நிரசனம் சங்கல்பத்தால் ஆகும்
மழுங்காத வை நுதிய சக்கர நல்வலத்தையாய்
தொழும் காதல் களிறு அளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே
மழுங்காத ஞானமே படையாக மலருலகில்
தொழும் பாயார்க்கு அளித்தால் உன் சுடர்ச் சோதி மறையாதே –3-1-9-
மழுங்காத ஞானம் -சங்கல்ப ஞானம்
கஜேந்த்ரோ ரஷிதோ பவது
விடுத்த திசைக் கருமம் திருத்தவல்ல திரு வாழி ஆழ்வான்
கருதுமிடம் பொருது கைந்நின்ற சக்கரத்தன் -இருக்க
கீழ் உலகில் அசுரர்களை கிழங்கிருந்து கிளராமே ஆழி விடுத்து அவருடைய கருவழித்த வழிப்பயன் -பெரியாழ்வார்
பொய்கைக் கரைக்கு வந்து
க்ராஹம் சக்ரேண மாதவ -என்றும்
கைந்நாகத் திடர் கடிந்த கனலாழிப் படையுடையான் -என்றும்
குட்டத்து கோள் முதலை துஞ்சக் குறித்து எறிந்த சக்கரத்தான் -என்றும்
தொழும் காதல் -களிறுக்கு விசேஷணம்
நாஹம் களே பாச்யாச்ய த்ராணார்த்தம் மது சூதன
க்ரச்த கமலான்யேவ பாதயோரர்ப்பிதம் தவ -என்றும்
உள்ளுவார் உள்ளத்தில் எல்லாம் உடன் இருந்து அறுதி நீ
தொழும் காதலை உடையவர்களே சாது சப்த வாசிகள்-
————————————————————————————————
சர்வதா அனுபபத்தேச்ச
சர்வ சூன்ய வாதம்
சர்வ பிரகாரத்தாலும்
ஸ்வ அபிமதமான சூன்ய வாதம் உபபன்னம் ஆகாமையினாலே -என்றபடி
ஸ்திதி பிரதிஞ்ஞாயாம் அஸ்திதி பிரதிஜ்ஞாயாஞ்ச -என்று ஸ்வாமி அருளிச் செய்கிறார்
உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள்
உளன் அலன் எனில் அவன் அருவும் இவ்வருவுகள்
உளன் என இலன் என இவை குணம் உடைமையின்
உளன் இரு தகமையோடு ஒழிவிலன் பரந்தே -1-1-9-
ஆறாயிரப்படி தமிழ் வியாக்யானம் = ஸ்வாமி ஸ்ரீ பாஷ்யம் அர்த்தம் –
உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள் –
கிம் பவான் சர்வம் ஸ்திதி பிரதிஜாதிதே
நதாசதி
தவாபிப்ரேதம் துச்சத்வம் சம்பவதி
உளன் அலன் எனில் அவன் அருவும் இவ்வருவுகள் -இரு தகமையோடு உளன்
கிம் பவாத் அஸ்தி திபிரதிஜாதீதே
ததாபி
துச்சத்வம் ந சம்பவதி சூன்யமிதி பிரதிஜாததா
ஸ்திதி பிரதிஜா நதேவ சர்வச்ய வித்யமா நஸய
அவஸ்தா விசேஷ யோகிதைவ ப்ரதீஜ்ஞாத பவதீதி
துச்சதா ந குதச்சிதபி சித்யதி-
————————————————————————————————————
அவனுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை விசேஷணமாக இட்டே ஸ்ரீ பாஷ்யம் அருளுகிறார் ஸ்வாமி
அநாவ்ருத்திச் சப்தாத் அநாவ்ருத்திச் சப்தாத்
இறுதி சூத்தரம்
இங்கு மூலத்தில் பர ப்ரஹ்ம பிரஸ்தாபமே இல்லை
யதா பரம புருஷ அஸ்தீதி சப்தாத் அவகம்யதே –
பர ப்ரஹ்மம் உள்ளான் என்று சொல்லும் அந்த வேத சாஸ்திரமே திரும்பி வருவது இல்லை -என்று மட்டும் அருளிச் செய்தால் போதுமே
ஸ்வாமி பாஷ்யம்
யதா நிகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணை கதான
ஜகஜ் ஜென்மாதி காரணம் சமஸ்த வஸ்து விலஷண
சர்வஞ்ஞ
சத்ய சங்கல்ப
ஆஸ்ரித வாத்சல்யைக ஜலதி
நிரஸ்த சமாப்யதிக சம்பாவன
பரம காருணிக
பர ப்ரஹ்ம
அபி நாத
பரம புருஷ –இத்யாதி விசேஷணங்களை அருளிச் செய்கிறார்
————————————————————————————————————————-
கீதை ஒன்பதாவது அத்யாய இறுதி ஸ்லோகம்
மன்மநாப மதபக்த –
மன்மநாப-என்னிடத்தில் மனத்தை வை
எளிதாக அறியக் கூடியது என்பதால் மத்வ பாஷ்யகாரர் இதற்க்கு அடியோடு அர்த்தம் செய்ய வில்லை
சங்கரர் -மயி வாசூதேவ மன யஸ்ய ச தவம் மனமா நாபவ-என்று
வாசுதேவனான என்னிடத்தில் என்று உரைத்தார்
நம் ஸ்வாமி யோ
மன்மநாபவ –
சர்வேஸ்வர
நிகில ஹேய ப்ரத்ய நீக
கல்யாணை கதாநே
சர்வஜ்ஞே
சத்ய சங்கல்ப
நிகில ஜகத் ஏக காரண
பரஸ்மின் ப்ரஹ்மணி
புருஷோத்தமே
புண்டரீக தல அமலாய தேஷணே
சவச்ச நீல ஜீமூத சங்காசே யுக பதுதிததி நகர சஹச்ர
சத்ருசா தேஜஸி
லாவண்யா
அம்ருத
மஹோ ததௌ
உதாரபீவர
சதுர பாஹௌ
அத உஜ்ஜ்வல பீதாம்பரே
அமல கிரீட
மகர குண்டல ஹார கேயூர கடக பூஷிதே
அபார காருண்ய சௌசீல்ய சௌந்தர்ய மாதுர்ய காம்பீர ஔதார்ய வாத்சல்ய ஜலதௌ
அனலோசித விசேஷ அசேஷ லோக சரண்யே
சர்வ ஸ்வாமிநி
தைல தாராவத்
அவிச்சேதன
நிவிஷ்ட மனா பவ –
என்று இப்படி அதி கம்பீரமான ஸ்ரீ ஸூ க்தி கல் நெஞ்சாரையும் உருக வைக்குமே-
18 விசேஷணங்கள் எம்பெருமானுக்கு –
ஸ்வரூப வைலஷண்யம்
திவ்ய மங்கள விக்ரஹ சௌந்தர்யத்தையும்
திவ்ய பூஷணாதி வைசிஷ்டதையும்
திருக் கல்யாணகுண பௌஷ்கல்யத்தையும்
பண் தரு மாறன் பசும் தமிழ் ஆனந்தம் பாய்மதமாய் விண்டிட எங்கள் இராமானுச வேழம் –
கலி மிக்க செந்நெல் கழனிக் குறையால் கலைப் பெருமான் ஒலி மிக்க பாடலை உண்டு தன உள்ளம் தடித்து
அதனால் வலி மிக்க சீயம் ராமானுசன் –
செந்தாமரைத் தடங்கண் செங்கனிவாய் செங்கமலம்
செந்தாமரை அடிக்கள் செம்பொன் திருவுடம்பே -என்றும்
கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அக்தே -என்றும்
செக்கமலத்தலர் போலும் கண் கை கால் செங்கனிவாய்
அக்கமலத் திலை போலும் திருமேனி அடிகளுக்கே -என்றும்
வாய் வெருவுகின்ற ஈரச் சொல்களிலே ஆழம் கால் பட்டு
வெளி வரும் ஸ்ரீ சூக்திகள்
————————————————————————————————————————————-
ஸ்ரீ கீதை -3-21-
யத் யதாசரதி ஸ்ரேஷ்டஸ் தத் ததே வேத்ரோ ஜன ச
யத் பிரமாணம் குருதே லோகஸ் தத் அனுவர்த்ததே
சிஷ்டாசாரத்தின் சிறப்பை சொல்ல வந்த ஸ்லோகம்
இதற்கு சங்கரர்
ச ஸ்ரேஷ்ட யத் பிரமாணம் குருதே
லௌகிகம் ஒ லோகே தத் அனுவர்த்ததே
ததேவ பிரமாணீ கரோதி இத்திறத்த -என்று
ஸ்ரேஷ்டராய் இருப்பார் யாது ஒன்றை பிரமாணமாக கொள்கிறாரோ
அத்தையே லோகமும் பிரமாணமாக கொள்கிறது –
மத்வர் ஆனந்த தீர்த்தரும் இப்படியே பொருள் உரைத்தார்
ச யத்வாக்யாதிகம் பிரமாணீ குருகே தத் உகத ப்ரகாரேண திஷ்ட தீத்யர்த்த -எனபது அவர் பாஷ்யம்
யத் பிரமாணம் -யத் -எனபது தனிப்பதம் இவர்களுக்கு
ஸ்வாமி -ஒரே பதமாக கொண்டு பஹூ வ்ரீஹி சமாசம் கொண்டு
ஸ்ரேஷ்ட யத் யத் ஆச்ரதி -எந்த எந்த கருமத்தை அனுஷ்டிக்கிறார்களோ-அதுவே பிரமாணம் நமக்கு -என்றபடி
மாலே மணி வண்ணா –மேலையார் செய்வனகள் -வேண்டுவன கேட்டியேல் -திரு உள்ளம் பற்றி இப்படி அருளிச் செய்கிறார்
அங்கே மேலையார் செய்வனகள் கேட்டியேல் இல்லையே
வேண்டுவன –சப்தம் வேறே உண்டே
இத்தாலே யத்ப்ரமாணம்-சமஸ்த பதமாக கொண்டு பாஷ்யம் செய்து அருளுகிறார் நம் ஸ்வாமி-
———————————————————————————————————————-
ஸ்ரீ கீதை -பவித்ராணாம் சாது நாம் -4-8-
சாதுக்கள் -ஆழ்வார்கள் என்கிறார் –
காண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து
ஒரு பகல் ஆயிரம் ஊழி யாலோ என்று தளர்ந்து
நினைந்து நைந்து உள்ளம் கரைந்து உருகி நிற்கும் ஆழ்வார்களே என்கிறார்
சாத்வ
யுக்த லஷண
தர்மசீலா
வைஷ்ணவ அக்ரேசரா
மத சமாஸ்ரயேண ப்ரவ்ருத்தா
மன நாம கர்ம ஸ்வரூபாணாம்
வாங் மனஸா கோசரதயா
மத தர்சநேன விநா ஸ்வ ஆத்ம தாரண போஷணாதிகள் அலபமாநா
ஷண மாத்ர காலம் கல்ப சஹச்ரம் மன்வானா
பிரசிதில சர்வகாத்ரா பவேயரிதி
மத ஸ்வரூப சேஷ்டித அவலோகன
ஆலாபாதிதா நேன
தேஷாம் பரித்ராணாய-
வைஷ்ணவ அக்ரேசர்-ஆழ்வார்கள்
அவர்களே யுக்த லஷண தர்ம சீலர்
கீழ் ஸ்லோகத்தில் –
யதா யதாஹி தர்மஸ்ய –வேதோதி தஸ்ய சாதுர் வர்ண்ய
சாதுர் ஆச்ரம்யா வ்யவச்தயா அவஸ்தி தஸ்ய –
ஆழ்வார்கள் வர்ண ஆஸ்ரம தர்மம் எள் அளவும் கடவாமல்
துயரறு சுடர் அடி தொழுது எழு என் மனனே – மத சமாஸ்ரயேண ப்ரவ்ருத்தா -என்றும்
ஆழி வண்ண நின் அடி இணை அடைந்தேன் -என்று ஒருப்பட்டவர்கள் –
மன நாம கர்ம ஸ்வரூபாணாம் வாங் மனஸா கோசரதயா-
எம்பெருமான் உடைய திரு நாமங்களையும்
சேஷ்டிதங்களையும்
ச்வரூபங்களையும்
பேசப் புகுந்து
என் சொல்லிச் சொல்லுகேன் -என்றும்
நெஞ்சால் நினைப்பு அரிதால் வெண்ணெய் ஊண் என்னும் ஈனச் சொல்லே -என்றும்
வாக்குக்கும் மனசுக்கும் எட்டாதவை என்பார்கள்
மத் தர்சநேன விநா ஸ்வ ஆத்ம தாரண போஷணாதிகள்
அலபமாநா –
தொல்லை மாலைக் கண்ணாரக் கண்டு கழிவதோர் காதல் உற்றாருக்கும்
உண்டோ கண்கள் துஞ்சுதலே -என்றும்
காண வாராய் என்று என்றே கண்ணும் வாயும் துவர்ந்து –
கண்டால் அல்லது தரிப்பு பெறாதவர்கள் –
ஷண மாத்ர காலம் கல்ப சஹச்ரம் மன்வானா –
ஒரு பகல் ஆயிரம் ஊழி யாலோ -என்றும்
ஊழி யில் பெரிதால் நாழிகை என்னும்
ஓயும் பொழுதின்றி ஊழி யாய் நீண்டதால் -என்றும்
அவனை விட்டு அகன்று உயிர்ஆற்ற கில்லாதார்கள் ஆழ்வார்கள்-
பிரசிதில சர்வகாத்ரா –
கால் ஆழும் நெஞ்சு அழியும் கண் சுழலும் -என்றும்
காலும் எழா கண்ணா நீரும் நில்லா உடல் சோர்ந்து நடுங்கிக்
குரல் மேலும் எழா மயிர் கூச்சம் அறா-என்றும்
உள் எலாம் உருகி குரல் தழுத்து ஒழிந்தேன் உரோம கூடங்களாய்
கண்ணா நீரால் துள்ளம் சோர துயில் அணை கொள்ளேன் -என்றும்
சர்வ அவயவ சைதில்யத்தை காட்டினவர்களும் ஆழ்வார்களே-
————————————————————————————————————————–
சதுர்விதா பஜந்தே மாம்
சங்கரர் ஆர்த்தன் -திருடன் புலி பிணி இவற்றால் துன்பம் அடைத்த வர்கள்
பகவானை அறிய விருமுபவன் ஜிஞ்ஞாசு
தனம் பெற விரும்புவன் அர்த்தாத்தி
விஷ்ணு தத்வம் அறிந்தவன் ஞானி
என்பர்
நம் ஸ்வாமி
ப்ரஷ்டைச்வர்ய காமன் -ஆர்த்தன்
அபூர்வ ஐஸ்வர்யகாமன் அர்த்தார்த்தி
கைவல்ய காமன் ஜ்ஜ்ஞ்ஞாசு
ஸ்வ ஸ்வரூபம் உணர்ந்தவன் ஞானி
திருப்பல்லாண்டு -ஒரு நாயகமாய் வியாக்யானம் இதே ரீதி
————————————————————————————–
ஆத்மாவுக்கு சேஷத்வமே அந்தரங்க நிரூபகம்
அடியேன் உள்ளான் –
மற்ற இடங்களில் அடியேன் -என்பது தேக விசிஷ்ட ஆத்மாவை குறிக்கும்
இத்தை ஸ்ரீ பாஷ்யத்தில்–ஜ்ஞோத ஏவ –சூத்திர விவரணத்தில் தெரிவிக்க வில்லை
ஸ்ரீ கீதா பாஷ்யத்தில் -7-16-சதுர்விதா பஜந்தே மாம் —
சங்கரர் -ஞானி -விஷ்ணோஸ் தத்வவித்
ஸ்வாமி –பகவத் சேஷ தை கரச ஆத்மா ஸ்வரூப வித் ஜ்ஞாநீ
என்றும்
இப்படியே ஜ்ஞாநீ வரும் இடங்கள் எல்லா இடத்திலும் இங்கனே அருளிச் செய்கிறார் –
—————————————————————-
ஸ்ரீ கீதை -7-19-பஹூ நாம் ஜன்ம நாமந்தே ஞானவான் மாம் ப்ரபத்யதே
வாசு தேவஸ் சர்வம் இதி ச மகாத்மா ஸூ துர்லப –
இங்கும் ஞானி –மத சேஷதைகரச ஆத்மா யாதாம்ய ஞானவான் –
வாசு தேவஸ் சர்வம் இதி ச மகாத்மா ஸூ துர்லப –என்பதற்கு
சர்வம் கல்விதம் ப்ரஹ்ம சுருதி ஸ்தலம் போலே அத்வைத பர வியாக்யானம் சங்கரர்
எல்லாம் ப்ரஹ்மம் என்னைப் பணிகின்ற மகாத்மா துர்லபம்
நம் ஸ்வாமி
வாசூதேவ ஏவ மேவ பரம ப்ராப்யம் ப்ரபாகம்ச அத்யதபி
யன்ம நோரதவர்த்தி ச ஏவ மம தத் சர்வம்
உண்ணும் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்
ஜகத் சர்வம் வாசுதேவ -என்று சங்கரர் கொள்ள
மம சர்வம் வாசூதேவ -ஸ்வாமி அருள
திருவாய் மொழிக்கு சேர –
———————————————————————————–
ஸ்ரீ கீதை -10-9-
மச்சித்தா மத்கதப்ராணா போதயந்த பரஸ்பரம்
கதயந்தச்ச மாம் நித்யம் துஷ்யந்திச ரமந்திச
சங்கர பாஷ்யம் -துஷ்யந்தி-பரிதோஷம் உபாயந்தி -ரமந்திச -ரதிம் ப்ராப் நுவந்தி ப்ரிய சங்கத்யா இவ –
பரிதோஷம் யாது – ரதி யாது
நம் ஸ்வாமி பாஷ்யம்
வக்தார தத் வசநேன துஷ்யந்தி
ச்ரோதாரச்ச தத் ச்ரவனேன அநவதிக அதிசய பிரியேண ரமந்தே
மூலத்தில் போதயந்த பரஸ்பரம் -இரண்டு வகுப்புக்கள் உண்டே
ஒரு அதிகாரி ஒரு சமயத்தில் பிரவசனம் செய்து சந்தோஷிப்பதும்
அதே அதிகாரியே மற்று ஒரு சமயத்தில் சரவணம் செய்து சந்தோஷிப்பதும்
இரண்டு வித ஆனந்தம் உண்டே
திருமழிசை பிரான்
தெரித்து எழுதி வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூரித்தும் போக்கினேன் போது
தெரிகை -தெரிவிக்கை பிரவசனம் பண்ணுகை
ஆழ்வார் கால பேதத்தில் இரண்டும் அனுபவித்தார் என்று காட்டி அருளுகிறார்
தரித்து இருந்தேனாகவே –
இவை இல்லையாகில் ஸ்வ ஆத்மா தாரணம் துர்லபம்
இதையே நம் ஸ்வாமி
மயா விநா ஆத்மா தாரணம் அல்ப மான -என்றும்
மத்கதபிராணா -மூலத்துக்கு தரித்து இருந்தேனாகவே -என்கிற
ஆழ்வார் ஸ்ரீ சூக்தி ஊறிக் கிடந்ததாலேயே
—————————————————————————–
ஸ்ரீ கீதை -10-10-
தேஷாம் சத்த யுக்தாநாம் பஜதாம் ப்ரீதி பூர்வகம் ததாமி புத்தியோகம் தம் –
சங்கரர் -ப்ரீதி -சிநேக -தத் பூர்வம் மாம் பஜதாம் இத்யர்த்த
ஆனால் ஸ்வாமி ப்ரீதி பூர்வம் ததாமி -என்றே அந்வயம் –
சேதனம் சேயும் பஜனத்தில் ப்ரீதி பூர்வகம் கூட்டாமல்
எம்பெருமான் செய்யும் அருளிலே அத்தை கூட்டுகிறார்
என்னை ஆளும பிரானார் வெறிதே அருள் செய்வர் உகந்து –
அவன் உகந்தே அருள் செய்வதாக
கீதாச்சார்யன் திரு உள்ளத்தை
ஆழ்வார் அறிந்து அருளிச் செய்த படியே
நம் ஸ்வாமியும் அருளிச் செய்கிறார்
—————————————————————————————————————————————–
ஸ்ரீ ரெங்க கத்யம்
ஸ்வ அதீன த்ரிவித சேதன அசேதன ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்தி பேதம் –
நாம் அவன் இவன் உவன் -1-1-4-எல்லாம் அவன் இட்ட வழக்கு -என்று ஸ்வரூபம் சொல்லி
அவரவர் தமதமது -1-1-5-
நஹி பாவனா சாமர்த்தியம் ருதே சர்வேச்வரிம் ஹரே -என்றும்
ந சம்பதாம் சமாஹரே விபதாம் விதி வர்த்ததே சமர்த்தோத்ருச்யதே கச்சித் தம் விநா புருஷோத்தமம் -என்றும்
பிரமாணங்களை அடி ஒற்றி ஸ்திதி யும் அவன் அதீனம்
அடுத்த நின்றனர் இருந்தனர் -1-1-6-
பிரவ்ருத்தி சீலர்களும்
நிவ்ருத்தி சீலர்களும்
சொல்லி இருந்தாலும்
பிரவர்த்திகளையும் நிவ்ருதிகளையுமே எம்பெருமான் அதீனம்
————————————————————————————————————————————
சரணாகதி கத்யத்தில்
மகா விபூதே ஸ்ரீ மன நாராயண ஸ்ரீ வைகுண்ட நாத —
அபார காருண்ய சௌசீல்ய வாத்சல்ய ஔதார்ய ஐஸ்வர்யா
சௌந்தர்ய மஹோததே –
இங்கு வாத்சல்யம் அருளி இருந்தாலும்
ஆஸ்ரித வாத்சல்யைக ஜலதே -தனித்து எடுத்து அருளி
அகலகில்லேன் —நிகரில் புகழாய் -வாத்சல்யம் அருளியது போலே
————————————————————————————————————————————–
கிரீட மகுட சூடாவதம்ச
திரு அபிஷேகம் கொண்டை தொப்பாரம்
திரு விருத்தம் -பாரளந்த பேரரசே எம் விசும்பரசே எம்மை நீத்து வஞ்சித்த ஓர் அரசே
சௌலப்யம்
பரத்வம்
பிரணயித்வ குணங்கள்
மூன்று முடிக்குரிய இளவரசு குணம்
மூன்று சாம்ராஜ்ய ராஜ்ஜியம்
——————————————————————————————————
நித்ய கிரந்தத்தில் திருவாராதன பிரயோகத்தில்
சுருதி ஸூ கை ச்தோத்ரை ரபிஷ்டூய
செவிக்கு இனிய செஞ்சொல் -என்றே வ்யபதேசம்
கேட்டாரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்-திருவாய்மொழி -10-6-11-
———————————————————————————————————–
யத்பதாம் போரு ஹத்யான விதவஸ்தா சேஷ கல்மஷ
வஸ்துதாம் உபயாதோஹம் யாமுநேயம் நமாமி தம்
யத் பதாம் போருஹ -ஆறு எழுத்துகளுக்கு வர்ண க்ரமம்
யகார அகார
தகார
பகார அகார
தகார ஆகார
மகார
பகார ஓகார
ரேப உகார
ஹாகார அகார
பதினான்கு எழுத்துக்களும்
பதினான்கு திருவடிகளை தெரிவிக்கும்
ஆளவந்தார் –2
நம் ஆழ்வார் –2
தமது பஞ்ச ஆச்சார்யர்கள் –10
யஸ்ய பதாம் போருஹ -யத் பதாம் போருஹ -என்று சமாசம்
சம்பந்த சாமான்யே சஷ்டி
ஆளவந்தார் சென்னிக்கு அணியாக -நன் ஆழ்வார் திருவடிகளும் என்பதும் யத் பதாம் போருஹ -சப்தத்தாலே கிடைக்கும்
பத -அம்போருஹ -பிரித்து
தாவி வையம் கொண்ட தாமரைகட்கே -6-9-9-
திருவடிக்கு பர்யாயமாக தாமரை பிரயோகம் போலே
முற்றுவமை
தமது பஞ்ச ஆச்சார்யர்கள் திருவடிகளும் கிட்டுமே –
த்ரோணாச்சார்யாருக்கு ஏகலைவன் போலே ஆளவந்தாருக்கு தான் என்று அருளி
ஆழ்வார் திருவடிகளில் ப்ராவண்யமே வடிவு எடுத்தவரான
ஆளவந்தார் உடைய திருவடிகளை சிந்தித்து
தாம் சத்தை பெற்றதாக சொல்லிக் கொள்ளும்
எம்பெருமானார்
திவ்ய பிரபந்தங்களில் ஆழம் கால் பட்டு
அதிசயமான பிராவண்யம் உடையவர் எனபது தெளிவு-
—————————————————————————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply