மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -83-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

அவன்  ஒருக்காலும்
காணவும்
நினைக்கவும்
ஒண்ணாதான் ஒருவனே ஆகிலும்
அவன் இருந்தபடி இருக்க –
இப்போது முந்துற முன்னம் ஹ்ருதயத்திலே புகுந்து
சந்நிதி பண்ணா நின்றான்
என்கிறார் –

——————————————————————————

இனியவன் மாயன் என வுரைப்பரேலும்
இனியவன் காண்பரியனேலும் -இனியவன்
கள்ளத்தால் மண் கொண்டு விண் கடந்த பைங்கழலான்
உள்ளத்தின் உள்ளே உளன் ———83-

பதவுரை

இனி–இப்போது
அவன்–‘அந்தஸர்வேச்வரன்
மாயன்–மாயக்காரன்‘
என–என்று
உரைப்பர் ஏலும்–சொல்லுவார்களே யாகிலும்,
இனி–இப்போது
அவன்–அப்பெருமான்
காண்பு அரியன் ஏலும்–கண்டு அநுபவிக்கக் கூடாதவனே யாகிலும்
கள்ளத்தால்–க்ருத்ரிம வேஷத்தினால் (மாவலி பக்கலிலே சென்று)
மண் கொண்டு–பூமிதானம் வாங்கி
விண் கடந்த பை கழலான் அவன்–ஆகாசம் முதலிய மேலுலகங்களையும் ஆக்ரமித்துக் கொண்ட
பரந்த திருவடிகளை யுடையனான அப்பெருமான்
இனி–இப்போது
உள்ளத்தின் உள்ளே உள்ள–எனது ஹ்ருதயித்தினுள்ளே (வேறிடமறியாமே) நிலைத்து நிற்கின்றான்
(இந்த பரமலாபமே போது மென்கை)

———————————————————————————

வியாக்யானம் –

இனியவன் மாயன் என வுரைப்பரேலும்-
பிரமாணங்கள் ஸூ லபன் என்று
சொல்லுகிற அவனை
நாட்டார் அரியன் என்று சொன்னார்களே யாகிலும் –
இப்போது அவன் ஆச்சர்ய பூதன் என்று சொல்லுவார்களே யாகிலும் –
வர்த்தமான தசையில் பிரகிருதி சம்பந்தித்து
மம மாயா துரத்யயா-கீதை -7-13-என்னும்படி
காண வரியன் ஆகிலும்  –

இனியவன் காண்பரியனேலும் –
நிரதிசய போக்யனாய் யுள்ளவன்
தான் கிட்டிக் காண அரியனாய் இருந்தானே யாகிலும்
இப்போது அவன் காண முடியாதான் ஒருவன் ஆகிலும்
அன்றிக்கே
சரீர சம நந்தரத்திலும் காண வரியன் யாகலும்-

இனியவன் கள்ளத்தால் மண் கொண்டு-
சர்வேஸ்வரனான தான் செய்தான் என்று
தோன்றாதபடி
பூமியை அபஹரித்து
நெஞ்சுக்கு இனியனாய்
தன்னுடைமையை மகா பலி பக்கலிலே அளந்து கொண்டவன் –

விண் கடந்த பைங்கழலான் –
ஆகாசத்துக்கு அவ்வருகாம்படி வளர்ந்து
சகல லோகங்களையும்
தன் கீழே இட்டுக் கொண்ட
பரந்த திருவடிகளை யுடையவன் –
அன்றிக்கே
அழகிய திருவடிகளை யுடையவன் -என்னவுமாம் –

இனி உள்ளத்தின் உள்ளே உளன் –
இப்போது என் ஹ்ருதயத்தின் உள்ளே சந்நிஹிதன் ஆனான்
புக்க ஆயுச்சுக்கு மரணம் இல்லை இ றே
மேல் செய்த படி செய்கிறான்
பெற்ற வம்சத்தை ஒருவரால் இல்லை செய்ய ஒண்ணாது இ றே
இப்படி
சந்நிஹிதன் என்றதே யாகிலும்
கீழ்ச்   சொன்ன  அபரிச்சேத்யதையே பலித்து விடுகிறது –

————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading