அவதாரிகை –
ப்ரஸ்துதமான ஸ்ரீ வாமனனோடு
போலியான
வடதள சாயியை அனுபவிக்கிறார் –
எம்பெருமான் படி இதுவான பின்பு
மேல் வீழ்ந்து அனுபவி -என்கிறார் –
துர்க் கடங்களை கடிப்பிக்க வல்லவன்
என்கிறார் –
————————————————————————————
முயன்று தொழு நெஞ்சே மூரி நீர் வேலை
இயன்ற மரத்தாலிலையின் மேலால் -பயின்று அங்கோர்
மண்ணலம் கொள் வெள்ளத்து மாயக் குழவியாய்த்
தண் அலங்கல் மாலையான் தாள் —–53-
பதவுரை
மூரி வேலை–பழையதான நீரை யுடைத்தான ஸமுத்தர்திலே
இயன்ற ஸ்ரீபொருந்தியுள்ள
ஆலமரத்து இலையின் மேலால்–ஆலமரத்தின் இலைமீது
பயின்று–நெடுங்காலம் சாய்ந்திருந்தது
அங்கு–அங்கே
மண்–பூமியினுடைய
நலம்–நன்மையை
கொள்–அபஹரித்த
வெள்ளத்து–பிரளய வெள்ளத்திலே
ஓர் மாயம் குழவி ஆய்–ஆச்சரியமான ஒரு குழந்தையாய்
தண் அலங்கல் மாலையான்–குளிர்ந்து அசைகின்ற மாலையை யுடையவனான எம்பெருமானுடைய
தான்–திருவடிகளை
நெஞ்சே–நெஞ்சமே!
முயன்று தொழு–உத்ஸாஹங்கொண்டு வணங்கு.
————————————————————————————-
வியாக்யானம் –
முயன்று தொழு நெஞ்சே –
வரில் பொகடேன் கெடில் தேடேன் -என்று இராதே நெஞ்சே –
உத்சாஹித்துக் கொண்டு
ஆஸ்ரயிக்கப் பாராய் –
யத்னம் பண்ணி ஆஸ்ரயிக்கப் பாராய் –
ஒரு கை முறிய விழுந்து கொடு நில்லாய் –
மூரி நீர் வேலை –
சஞ்சரியா நின்றுள்ள
நீரை உடைத்தான
சமுத்ரத்திலே –
இயன்ற மரத்தாலிலையின் மேலால் –
அதிலே உண்டான ஆல மரத்தின் உடைய
பவனாய் இருப்பதொரு
ஆலிலையின் மேலே –
பயின்று –
சிரகாலம் சாய்ந்து அருளி —
மார்கண்டே யாதிகள் பயப்படும்படி –
அங்கோர் மண்ணலம் கொள் வெள்ளத்து-
அங்கே-பூமியினுடைய
கார்யாகாரத்தை
அழியா நின்றுள்ள
பிரளயத்திலே –
மண் நலம் கொள் வெள்ளம் –
சேதனர்க்கு
போகோபகரணம்
போக ஸ்தானம்
போக்யமான பூமி
அழிந்து மூச்சடங்குகை-
மாயக் குழவியாய்த் –
ஆச்சர்யமான சேஷ்டிதங்களை யுடைய
முக்த்தனானவன் –
தண் அலங்கல் மாலையான் தாள் –
ஸ்ரமஹரமாய்
அசைந்து வாரா நின்றுள்ள
மாலையை உடையனான்வன்
திருவடிகளை –
முயன்று தொழு நெஞ்சே –
இவற்றை யடைய வயிற்றிலே
வைக்கிற போது ஒப்பனை குறி அழியாமே யாய்த்து வைத்தது –
ஆலிலையின் மேல் கண் வளர்ந்து அருளுகிற போது
இட்ட தோள் மாலையும் தானுமாய்க் கிடந்த படி –
யசோதைப் பிராட்டி உண்டோ ஒப்பிக்க –
எல்லாம் ஆச்சர்யமாய் இருப்பதே –
——————————————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply