மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -40-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

இப்படி சர்வாதிகனான சர்வேஸ்வரன்
என் பக்கலிலே வந்து புகுந்த பின்பு
நெஞ்சே
இனி நமக்கு ஒரு குறைகளும் இல்லை கிடாய்
என்கிறார் –

—————————————————————————–

உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
விண் ஒடுங்கக் கோடு உயரும் வீங்கருவி வேங்கடத்தான்
மண்  ஒடுங்கத் தான் அளந்த மன் ——-40-

பதவுரை

நல் நெஞ்சே–எனக்குப் பாங்கான மனமே!
விண் ஒடுங்க–மேலுலகங்களெல்லாம் ஒரு முலையில் ஒதங்கும்படி
கோடு–சிகரங்கள்
உயரும்–உயர்ந்தோங்கி யிருக்கப் பெற்றதும்
வீங்கு அருவி–நிறைந்த அருவிகளை யுடையதுமான
வேங்கடத்தான்–திருமலையில் எழுந்தருளி யிருப்பவனும்
மண்–பூமிப் பரப்பெல்லாம்
ஒடுங்க–(திருவடியின் ஒரு பாகத்திலே) ஒருங்கிப் போம்படி
தான் அளந்த–தான் அளந்து கொண்டவனுமான
மன்–ஸ்வாமி யானவன்
உளன் கண்டாய்–(நம்மை ரக்ஷிப்பதனாலே) ஸத்தை பெற்றிருப்பவன் காண்,
உத்தமன்–புருஷோத்தமனான அப்பெருமான்
என்றும் உளன் கண்டாய்–எக் காலத்திலும் (நம்மை ரக்ஷிப்பதிலே தீக்ஷை கொண்டு) இருக்கிறான் காண்,
உள்ளுவார் உள்ளத்து–ஆஸ்திகர்களுடைய மனத்திலே
உளன் கண்டாய்–நித்ய வாஸம் பண்ணுமவன் காண்–

———————————————————————————

வியாக்யானம் –

உளன் கண்டாய் –
பண்டு உளன் அன்றிக்கே
இன்று உளன் ஆனான் என்கிறார் -தம்மைப் பெற்றவாறே –

அசந்நேவ ஸ பவதி -யாய் இருந்தான் –
நாம் நமக்கு இல்லை என்று அஞ்ச வேண்டாம்
அவன் நமக்கு உண்டு கிடாய் -என்கிறார்

நாம் நம்முடைய விநாசத்தைச் சூழ்த்துக் கொள்ளுகைக்கு உளோம்  ஆனாப் போலே யாய்த்து –
அவன் நம்மை உஜ்ஜீவிப்பிக்கைக்கு உளன் ஆனபடி –
அவனுடைய ஜீவனம் நம்முடைய சத்தா ஹேது

இச்சாத ஏவ தவ விஸ்வ பதார்த்த சத்தா -ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -36-
நம்மை உள்ளவர்களாக ஆக்கிக் கொண்டு தான் உளனாக இருக்கின்றான் –

நன்னெஞ்சே-
எம்பெருமான் நம்முடைய சத்தா ஹேது -என்று சொல்லுகைக்கு பாங்கான நெஞ்சே –
அவனுடைய உண்மையைப் பலமாக்கு –

நன்னெஞ்சே –
அத்வேஷம் உண்டான பின்பு இறே-அவன் உண்டாய்த்து –
அத்வேஷமும் உண்டாய் நீயும் உளாயானாய்-
இப்போது இறே சந்தமேனம் ஆய்த்தது  –

உத்தமன்-
நம் பேறு தன் பேறாகக் கொண்டு உளன் கிடாய் –
நம்முடைய ரஷணம் பிரயோஜனமாய்க் கிடாய் அவன் இருப்பது –
அல்லாதார்க்கு அழியச் செய்து கொள்ளுகை ஸ்வ பாவம் ஆனால் போலே
அவனுக்கு ஆக்கிக் கொள்ளுகை ஸ்வ பாவம்   –

என்றும் உளன் கண்டாய் –
நாம் வேண்டாத காலமும்
நம்மை வேண்டி இருக்குமவன் –
சத்தா ஹேது அவன் என்று நினைத்து இரா அன்றும் –

உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்-
செய்ய வேண்டுவது இவ்வளவே கிடாய் –
ஓர் அனுசந்தானமே கிடாய் வேண்டுவது –
புகுரப் புக்கால் விலக்காதார் ஹிருதயத்திலே உளன் –
அன்றிக்கே
அறிந்த அம்சம் அமையும் -என்னுமாம் –

விண் ஒடுங்கக் கோடு உயரும் –
உத்தமன் என்றும் உளன் கண்டாய் -என்கிறத்தை யுபபாதிக்கிறது –

விண் ஒடுங்கக் கோடு உயரும் –
ஆகாசமானது சுருங்கும் படி ஓங்கா நின்றுள்ள
சிகரங்களை யுடைத்தாய் –
உபரிதன லோகங்களும் சில எல்லைகளும்  உண்டு என்று இராதே
இவை வேண்டா வென்று கொண்டு –
ஆகாசாதி லோகங்கள் எல்லாம் ஒடுங்கும் படி –
அன்றியே
த்ரிபாத் விபூதி சங்குசிதமாம்படி-என்றுமாம் –

வீங்கருவி வேங்கடத்தான்-
மிக்க ஜலத்தை உடைத்தாய் உள்ள திரு மலையை
இருப்பிடமாக உடையனானவன் –

மண்  ஒடுங்கத் தான் அளந்த மன் —-
பூமிப் பரப்பு அடங்கலும்
திருவடிகளுக்கு உள்ளே அடங்கும்படி
தான் அளந்து கொண்ட ராஜா –

மண் ஒடுங்க –
திருவடிகளிலே பூமி ஒடுங்க
பரப்பின  திருவடிகளே தோற்றி
பூமி தோற்றாதபடி யளந்து கொண்டான் –

மன் –
ஈரரசு தவிர்த்த படி –

மன்-
உடையவன் –

இந்த்ரன் இழந்தது பெறுகையாலும்
மகாபலியைப் பறித்து வாங்குகையாலும்
இவனே உடையவன் -என்று தோற்றா நின்றது   –

தன்னுடைய சத்தா ஜ்ஞானம் இவனுக்கு பயத்தோடு வ்யாப்தம்
அவனுடைய சத்தா ஜ்ஞானம் இவனுக்கு அபயத்தோடே வ்யாப்தம்
சாஹம் கேசக்ரஹம் ப்ராப்தா த்வயி ஜீவத்யபி பிரபோ
எனக்கு ஒருவரும் இல்லை
நீயும் இல்லை
உன் சத்தைக்கும் என் பரிபவத்துக்கும் என்ன சேர்த்தி உண்டு –

பிரபோ –
என்னையும் என் பர்த்தாக்களையும் போலே
கழுத்துக் கட்டியாய்
ஒட்டை ஓடத்தோடு ஒழுகல் ஓடமாய் இருந்தாய் ஆகில்
எனக்கு கண்ண நீர் பாயுமோ –

ந தே ரூபம் –பக்தா நாம் -ஜிதந்தே
என்ற அவன்
உதவா விடில் அன்றோ வெருப்பாவது-

———————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading