ஸ்ரீமத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூ லாப ஸ்ரீ தரஸ் சதா–ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிச் செய்த தனியன்-வியாக்கியான சக்ரவர்த்தி சாம்ராஜ்யம் சூடியவர்
யோ நித்யம் அச்யுத பதாம் புஜ யுக்ம ருக்ம
வ்யாமோஹத ஸ்திதி தராணி த்ருணாய மேன
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக சிந்தோ
ராமானுஜஸ்ய சரனௌ சரணம் ப்ரபத்யே -இதராணி த்ருணாய மேன-புல்லுக்கு சமம்
வந்தே வேதாந்த கர்ப்பூர சாமீ கர கரண்டகம்
ராமாநுஜார்ய மார்யாணம் சூடாமணி மஹர் நிஸம்-ஸ்ரீ திருக் குருகைப் பிரான் அருளிச் செய்த தனியன்
சாமீ கரம் -ஸ்வர்ணம்
கரண்டகம் -பாத்ர விசேஷம்
ஆர்யா தவறான விஷயஙகளில் புத்தி தொலைவில் உள்ளவர்கள் –
வேதாந்த ஸாஸ்த்ரமாகிற பச்சைக் கற்பூரம் ஸூ ரஷிதமாகவும் பரிமளம் குன்றாதபடியாகவும் வைப்பதற்கு ஸ்வர்ண பரணி என்னலாம் படி வேதாந்த மார்க்க ப்ரதிஷ்டபந ஆச்சார்யராய் ஆரியர்களுக்கு எல்லாம் ஸிரோ ரதனமாக தாங்குபவராயும் இருக்கும் எம்பெருமானாரை மஹர் நிஸம்—பகலும் இரவும் -எப்பொழுதும் நமஸ்காரம் செய்கிறேன்- –
கைகளால் ஆரத் தொழுது தொழுது உன்னை வைகலும் -மாத்திரை போதும் வீடின்றி –
ப்ரயோஜனங்களைப் பெற்று அகலுவார் அன்றே
வேதாந்தங்கள் அவனையே வஹித்துக் கொண்டு இருப்பதால் பச்சைக் கற்பூரம் என்றதாயிற்று
எம்பெருமானார் வேதாந்த தயா நிதி என்கிறார்
வேதாந்த கர்ப்பூர -வேத அர்த்தங்கள் கந்தம் மாறாமல் நவ க்ரந்தங்களால் ரக்ஷித்து அருளி –
சரணாகதி மறைத்து முறைகளில் உள்ளதை வெளிப்படுத்திக் காட்டி அருளிய ஸ்வாமி
சூடாமணிம் -சென்னிக்கு அணியாக
அஹர் நிஸம் வந்தே -பகலிலும் இரவிலும் வணங்குவோம்
——–
(பிரஸ்தான த்ரயம் -உபநிஷத் -ப்ரஹ்ம ஸூத்திரம் -கீதை -விளக்கம்
இதற்கு
வேதார்த்த ஸங்க்ரஹம்
வேதாந்த தீபம்
வேதாந்த சாரம்
ஸ்ரீ பாஷ்யம்
ஸ்ரீ கீதா பாஷ்யம்
திருவாராதன க்ரமம் -நித்ய கிரந்தம்
கத்ய த்ரயம்
த்வய விவரணம் சரணா த்தி கத்யம்-ப்ருஹத் கத்யம் இதுவே
-எதிராஜர் ரெங்கராஜா ஸம்வாதம் –சம்வாத ஏஷ த்வய விவரணம் -தேசிகர்
ஸ்ரீ வைகுண்ட கத்யம்
ஸ்ரீ ரெங்க கத்யம்
ஆகிய நவ ரத்தினங்கள்)
ரஹஸ்ய ரஷா -சமக்ருத வியாக்கியானங்கள் மூன்றற்கும் -தேசிகன் சாதித்துள்ளார்
ஸ்ருத பிரகாச பட்டர் -ஸ்ருத பிரகாசர் -வேத வியாச நாட்டாருடைய திருப் பேரனார் -சமஸ்க்ருத வியாக்யானம் சரணாகதி கத்யத்துக்கு மட்டும்-
ரஹஸ்ய ரஷாம்-
ரஹஸ்யங்களை ரக்ஷிக்கும் கிரந்தம்
வெங்கடேச ஸூர்
ப்ரக்யாத ஸ்ருத விபவான் -அசேஷான் –உலகு எங்கும் பரவியுள்ள கீர்த்தி யுடைய அனைத்து ஆச்சார்யர்களையும் வணங்கி —
லஷ்மீ ஈசன் -பிரபதனம் -வைபவம் -சரணாகதர் பெருமை பிரதிஷ்டா -ஆதாரம் இந்த கிரந்தம்
ராக அந்த்ய -காமாதிகள் -குருட்டுத்தனம் -ப்ரயோஜனாந்தரங்கள் குருடனாக்குமே
அசன்னேவ பவதி -சந்தமேனம்
இவற்றைப் போக்கி அருளும் -என்ற ஸ்லோகம்
லஷ்மீ பதி யதிபதி -ஸம்வாதம்
தயைக்கு இருப்பிடம் இருவரும் தயை ஏக ஸிந்துக்கள்
பராசரர் மைத்ரேயர் -கண்ணன் அர்ஜுனன் ஸம்வாதங்கள் போல் அல்லாமல் -அன்றோ இது
சரணாகதி மந்த்ர சாரம்
ஜகத் ஹிதார்த்தம் -நமக்காக அன்றோ எம்பெருமானார் சரணாகதி அனுஷ்ட்டித்து கிரந்தமும் சாதித்து அருளினார்
————————————————————-
ப்ரேவேசம்-
ஸ்ரீ பாஷ்யத்தில்
தத் த்வம் அஸி-இத்யாதி வாக்ய ஜன்ய ஜ்ஞானமே மோஷ சாதனம் என்றும்
கர்ம ஜ்ஞான சமுச்சயமே மோஷ சாதனம் என்றும் சொல்லுகிற
குத்ருஷ்டிகளை நிரசிக்கைக்காக
கர்ம அங்கமாய் வேதன த்யான உபாசன ஆதி சப்த வாச்யமாய்
பக்தி ரூபாபன்னமான உபாசாத்மாக ஜ்ஞானமே
வேதாந்த ப்ரதிபாத்யமான மோஷ சாதனம் என்று இவர் நிச்சயித்து அருளிச் செய்கையாலே
(பக்த்யா பரமயோ -இரண்டு வழிகள்-சரணாகதியை பரம ஸ்ரேஷ்டம்)
(த்ருஷ்ட்டி -பார்வை
கு த்ருஷ்ட்டி -தவறான பார்வை
ஸூ த்ருஷ்ட்டி -யாதாத்ம -உள்ளபடி அறிக்கை
சாங்கர -பாஸ்கர மாதங்கள் இரண்டையும் இங்கு காட்டி அருளுகிறார்
மஹா வாக்யங்கள் -நானே ப்ரஹ்மம் புரிதலே மோக்ஷம் –
கர்மங்களே தேவை இல்லை
பாஸ்கரர் -சற்று வேறுபட்டு கரம ஞான சேர்க்கையே மோக்ஷம் –அவித்யை கர்மம் சேர்ந்த வித்யையால் மோக்ஷம்)
(ப்ரஹ்ம வித் ஆப் நோதி பரம் -தைலதாராவத்-ஸ்ம்ருதிக்கு மேல் த்யானம் -உபாஸீத
காரணந்து த்யேய -நித்யாஸன -வேதாந்த சித்தம் -கர்மங்களை அங்கமாக கொண்டு அன்புடன் பகவானை -நினைத்து -இடைவிடாமல் -ஸ்நேஹ பூர்வ அநு த்யான -பக்தி யோகமே மோக்ஷ சாதனம்)
இவர் மோஷ சாதனமாக அறுதி இட்ட அர்த்தம் இதுவே என்று கொண்டு தம்முடைய
ருசி பரிக்ருஹீதமான (ஆசையுடன் கைக் கொண்ட )அர்த்தத்தையே விஸ்வசித்து இருக்கும் சாத்விகர் இத்தையே
விஸ்வசித்து இருக்கக் கூடும் என்று பார்த்து அருளி
ஆசார்ய ருசி பரிக்ருஹீதமாய்
தமக்குத் தஞ்சமாகத் தாம் அறுதி இட்டு இருக்கும் அர்த்தம் –பிரபத்தி -என்னும் இடத்தை
இக் கத்ய ரூபேண வெளி இட்டு அருளுகிறார் –
ஆனால் இப் பிரபத்தி தன்னையே கொண்டு குத்ருஷ்டி நிரசனம் பண்ணாது ஒழிவான் என் என்னில்
பிராமணன் சண்டாளனுக்கு வேதத்தை உபதேசித்தால் போலே
தூரஸ்தர் ஆனவர்களுக்கு பரம ரகஸ்யமான இவ் வர்த்தத்தை வெளி இட ஒண்ணாது என்று பார்த்து –
அவர்கள் இழிந்த சாஸ்திர முகத்தாலே அவர்களை நிரசித்து
சாஸ்திர தாத்பர்யமான ஸ்வ சித்தாந்தத்தை இம் முகத்தாலே
வெளியிடுகிறார் –
(அசாரம் -அல்ப சாரம் –சாரம் -சார தரம் -சார தமம் -அனைத்தும் வேதங்களிலே உண்டே)
வேதாந்தங்களில் மகா பதமாக சொல்லுகிற (பத்யதே பதம் வழி -32 வித்யா ஸ்தானங்கள் உண்டே )பக்தியைக் காட்டில் இப் பிரபத்திக்கு ஏற்றம் என் என்னில்
அது 1-அதி க்ருதாதிகாரமுமாய்(த்ரை வர்ணிக புருஷர்களுக்கே )
2-துஷ்கரமுமாய்
3-விளம்ப பல பிரதமுமாய்(பஹு நாம் ஜன்மநாம் அந்தே )
4-பிரமாத (கவனக் குறைவு )சம்பாவனை யுள்ளதுமாய்(ஜடபரதர்-வ்ருத்தாந்தம் )
5-சாத்யமுமாய்
6-ஸ்வரூப அநனு ரூபமுமாய்
7-பிராப்யத்துக்கு வி சத்ருசமுமாய் இருக்கும் –
(இளைப்பினை இயக்கம் நீக்கி இருந்து முன் இமையைக் கூட்டி
அளப்பில் ஐம்புலன் அடக்கி அன்பு அவர் கண்ணே வைத்து
துளக்கமில் சிந்தை செய்து தோன்றலும் சுடர் விட்டு ஆங்கே
விளக்கினை விதியில் காண்பர் மெய்ம்மையே காண்கிற் பாரே–18-)
இதுவோ என்றால்
அதுக்கு எதிர்த் தட்டாம்படி 1-சர்வாதிகாரமுமாய்(ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது -கஜேந்த்ரனும் சரணாகதி – )
2-ஸூ கரமுமாய்(நிவ்ருத்தி மார்க்கம் தானே இது -உன் கடைத்தலை வாழும் சோம்பரை யுகத்தி போலும் )
3-அவிளம்ப பல பிரதமுமாய்(சரணமாகும் தன் தாள் அடைந்தார்க்கு எல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் -திருப்த ப்ரபன்னர்கள் -ஆர்த்த -ப்ரபன்னர்கள் )
4-பிரமாத சம்பாவனையும் இன்றிக்கே(அஹம் ஸ்மராமி மத் பக்தம் நயாமி பரமம் பதம் )–5-சித்தமுமாய்(விலக்காமையே வேண்டுவது )
6-ஸ்வரூப அனுரூபமுமாய் (ஸூ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தியே பிரபத்தி )-7-பிராப்யத்துக்கு சத்ருசமுமாய் இருக்கும் (உபாயமும் உபேயமும் அவனே அன்றோ )-
ஆனால் இவ் வுபாயம் வேதாந்த சித்தமோ -அன்றோ -என்னில்
யாஜ்ஞிகீயமான (மஹா நாராயண )உபநிஷத்தில்
1-சத்யம் 2-தபோ 3-தம 4-சமோ 5-தானம் 6-தர்ம 7-ப்ரஜனனம் 8-அக்னய
9-அக்னி ஹோத்ரம் 10-யஜ்ஞோ 11-மானஸம் 12-ந்யாஸோ த்வாதஸ –என்று
ஒன்றுக்கு ஓன்று உத்க்ருஷ்டமாக சொல்லிப் போந்து
எல்லாவற்றுக்கும் மேலாக
தஸ்மாத் ந்யாஸம் ஏஷாம் தபஸாம் அதிரிக்தம் ஆஹூ -என்று
தபஸ்ஸூக்களில் வைத்துக் கொண்டு அதிரிக்தமான தபஸ்ஸூ பிரபத்தி என்று இதினுடைய உத்கர்ஷம் சொல்லிற்று
அதுக்கு மேலே
தர்மஜ்ஞ சமய பிரமாணம் வேதாஸ் ச –ஆபஸ்தம்ப சூத்திரம் என்று பிரபல பிரமாணமான ஆசார்ய ருசி பரிக்ருஹீதத்வம் ஆகிற ஏற்றமும் இதுக்கு உண்டு
வேதாஸ் ச -என்று வேதமும் அப்ரதான பிரமாணமாம்படி இறே-வைதிக பரிக்ருஹீதத்வத்தின் பிரமாண அதிசயம் இருப்பது –
அளவுடையாராய் இருப்பார்க்கு (நம்பிக்கை உள்ளாருக்கு)இதுவே போருமாயிற்று பிராமண்யத்துக்கு-இது தான் அளவில்லாதார்க்கு வேதாந்த சித்தமுமாய் இருக்கும் –
(மேலையார் செய்வனகள் வேண்டியது கேட்டாயாகில் –
செய்யாதன செய்யோம்
முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் பின்னோர்ந்து)
ஆக
1-இப்படி வேதாந்த சித்தமுமாய்
2-ஸ்வரூப ப்ராப்தமுமாய்
3-ஆசார்ய ருசி பரிக்ருஹீதமுமாய்
4-சரண்ய ஹ்ருதய அனுசாரியுமாய் -இருக்கையாலே
அதிலும் இதுவே அனுஷ்டேயம் என்னும் இடத்தை தம்மை விஸ்வசித்து இருக்கும் சாத்விகர்
இழக்க ஒண்ணாது என்று பார்த்து
தாமும் பெரிய பெருமாளும் அறிந்ததாக அனுசந்தித்து விட அமைந்து இருக்க
தம்முடைய பரம கிருபையால் கத்ய முகேன வெளியிடுகிறார்
(அவனுக்கு கிருபை -இவருக்கோ பரம கிருபை
தாய்க்கும் -மகனுக்கும் விபீஷணனுக்கு -இவருக்கும் -இவர் அடி பணிந்த -மாறன் அடி பணிந்து உயந்த இவருக்கும் இது உண்டே)
இது தான் அவதரித்த படி எங்கனே என்னில்
ஒரு திரு வுத்தர திரு நாளிலே(ஒப்பற்ற ஒரு நாளிலே )பெருமாளும் நாச்சியாருமாகப் புறப்பட்டு ஏறி அருளா நிற்கும் அளவிலே(பெரிய பிராட்டியார் அமர்ந்து அருள நம்பெருமாள் அவள் ஆஜ்ஜையை நிறைவேற்ற நின்ற திருக்கோலம் )எம்பெருமானார் எழுந்தருளி திருவடி தொழா நின்றார்
அஸ்யாம் அவஸ்தாயாம்-திரு உள்ளத்திலே சம்சார பீதி நடையாட
திருவடிகளிலே விழுந்து சரணம் புக்கவதுக்குப் பாசுரம் இட்டபடி
(அகலகில்லேன் -நம்மாழ்வார்
தாயே தந்தை என்றும் நோயே பட்டு ஒழிந்தேன் -பயத்தால் கலியன்)
முதலிலே சம்சார பய பீதராய்க் கொண்டு பெரிய நம்பி ஸ்ரீ பாதத்தை ஆஸ்ரயித்த போதே-
பெரிய பெருமாள் திருவடிகளிலே சரணம் புக்கிலரோ -(ஆவணி சுக்ல பக்ஷ பஞ்சமியில் பூர்ணாச்சார்யார் பெரிய நம்பி ஏரி காத்த ராமர் -மதுராந்தகத்திலே -பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து வைத்து அருளினார் அந்தோ ஏரி -காரேய் கருணை -ஆளவந்தார் நதி -ஆழ்வார் மேகம் -நாதமுனிகள்-)
சக்ருதேவ பிரபன்னாய தவாஸ்மீதி ச யாசதே
அபயம் சர்வ பூதேப்யோ ததாம் ஏதத் வ்ரதம் மம -என்று அன்றோ சரண்யன் ஹிருதயம் இருப்பது
ஆன பின்பு
சரைஸ்து சங்குலாம் க்ருத்வா லங்காம் ப்ரபலார்தன
மாம் நயேத் எதி காகுத்சதஸ் தத் தஸ்ய சத்ருசம் பவேத் -(சொல்லினால் சுடுவேன் –அவனுக்கு மாசு என்று விட்டாளே )என்றும்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் -என்றும்
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்றிலேன் -என்றும்
சொல்லுகிறபடியே உடையவன் உடைமையைச் செய்தபடி செய்கிறான் என்று ஆறி இருக்கப் பிராப்தமாய் இருக்க
திரியட்டும் இப்போது சரணம் புக வேண்டுவான் என் என்னில்
அவ்வளவு ஆறி இருக்க மாட்டாதே தம் பிராப்ய த்வரையால் சரணம் புகுகிறார்
இது இறே ஆழ்வார்களுக்கும் ரீதி
அவர்களை அடி ஒற்றுகிற ஆசார்யர்களுக்கும் அதுவே ரீதியாம் அத்தனை அன்றோ –
1-சம்சார பயமும்-2- ப்ராப்ய ருசியும் கனக்கக் கனக்க
ஒரு கால் சரணம் புக்காப் போலே
ஒன்பதின் கால் சரணம் புகும் இத்தனை இறே அவர்கள்
ஆக
சம்சார நிவ்ருத்தி பூர்வமாகக் கைங்கர்ய சித்திக்குப்
பெரிய பெருமாள் திருவடிகளில் சரணம் புகுகிறார் –
பிரவேசம் முற்றிற்று –
(இனி இனி என்று இருபதின் கால் ஆழ்வாரும் கூப்பிட்டாரே
சீதா பிராட்டியும் துடித்து இருந்த இடம் உண்டே
ப்ராப்ய துடிப்பால்-நோற்ற நோன்பிலேன் தொடங்கி -துடிப்பால் சரணாகதி உண்டே
தோழிகளை எழுப்புவதும் -அவர்களும் -மோஹனா அஸ்திரம் -மயங்கி -ஜ்ரும்பணா அஸ்திரம் ஒரு இடம் நிற்கமாட்டாமல் திரிந்து இருப்பார்களே)
——————————-
(முதல் இரண்டு சூர்ணிகைகள் -பெரிய பிராட்டியார் இடம் ஸ்வாமி விண்ணப்பமும்
அடுத்த இரண்டு சூர்ணிகைகைளால் பெரிய பிராட்டியார் உத்தரம் அருளிச் செய்வதும் உண்டே)
முதல் சூரணை
அவதாரிகை –
இதுதான் த்வயத்துக்கு வியாக்யானம் ஆகிறது –
இதில் முதல் சூரணை யிலே
சரணம் புகுவார்க்கு சரணம் புக யோக்யதை யுள்ளது 1-கண் அழிவு அற்ற
உபேய ருசியும் 2-(கண் அழிவு அற்ற) உபாய அத்யாவசாயமும் உண்டானால் ஆகையாலே
தத் சித்தி அர்த்தமாகப் பிராட்டி திருவடிகளில் சரணம் புகுகிறார்
அது என் –
தேவேந்த்ரஸ் த்ரி புவனம் அர்த்தம் ஏகபிங்க
சர்வர்த்திம் த்ரிபுவன காஞ்ச கார்த்த வீர்ய
வைதேஹ பரம பதம் பிரசாதய விஷ்ணும்
சம் ப்ராப்தாஸ் சகல பல பிரதோ ஹி விஷ்ணு -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -என்று(இந்த்ர பதவியும் -குபேர செல்வமும் கார்த்த வீர்ய அர்ஜுனனுக்கு ஐஸ்வர்யமும் ஜனகருக்கு பரமபதமும் விஷ்ணு அளித்தார் அன்றோ )சர்வ அபேஷைகளுக்கும் பல ப்ரதன் அவன் அன்றோ
ஆன பின்பு அந்த யோக்யதா சித்திக்குமாக அவன் திருவடிகளிலே சரணம் புகத் தட்டு என் -என்னில் –
போக்தாரம் யஜ்ஞ்த தபஸாம் சர்வ லோக மகேஸ்வரம்
ஸூ ஹ்ருதம் சர்வ பூதானாம் ஜ்ஞாத்வா மாம் சாந்திம் ருச்சதி-ஸ்ரீ கீதை -5-29-(வ்யூஹ ஸுஹார்த்தம் -உறங்குவான் போல் யோகு செய்து அருளி -ஹ்ருத் -ஸூ ஹ்ருத் -நல்ல திரு உள்ளம்)என்கிறபடியே
சர்வ பூத ஸூஹ்ருத்தாய் இருக்க
ஈஸ்வரனையும் நீரிலே நெருப்பு கிளருமா போலே
தானஹம் த்விஷத க்ரூரான் சம்சாரேஷூ நராதமான் ஷிபாம் யஜஸ்ரம ஸூபாநாஸூ ரீஷ்வேவ யோநிஷூ–ஸ்ரீ கீதை -16-19-என்றும்
மத் பக்தம் ஸ்வ பசம் வாசபி நிந்தாம் குர்வந்தி யே நரா பத்ம கோடி சதே நாபி ந ஷமாமி வஸூ ந்தரே-ஸ்ரீ வராஹ புராணம் -என்றும்
(போக்தாரம் யஜ்ஞ தபஸாம் ஸர்வ லோக மஹேஸ்வரம்—-
ஸுஹ்ருதம் ஸர்வ பூதாநாம் ஜ்ஞாத்வா மாம் ஸாந்திம் ருச்சதி—৷৷5.29৷৷
போக்தாரம் யஜ்ஞ தபஸாம் -யாகங்களையும் தனங்களையும் ஏற்றுக் கொள்பவனும்
ஸர்வ லோக மஹேஸ்வரம்—-எல்லா உலகங்களுக்கும் பெரிய ஈஸ்வரனும்
ஸுஹ்ருதம் ஸர்வ பூதாநாம் -எல்லா உயிர்களுக்கும் நண்பனுமாக-யதிவா ராவண ஸ்வயம் என்பவன் அன்றோ -சரணாகத வத்சலன் –
மாம்-என்னை
ஜ்ஞாத்வா –அறிந்து
ஸாந்திம் ருச்சதி—சாந்தியை அடைகிறான் –
யாகங்களையும் தவங்களையும் ஏற்றுக் கொள்பவனும் எல்லா உலகங்களுக்கும் பெரிய ஈஸ்வரனும்
எல்லா உயிர்களுக்கும் நண்பனுமாக என்னை அறிந்து சாந்தி அடைகிறான்
வ்யூஹ ஸுஹார்த்தம் கோயிலிலே காட்டி அருளுகிறார் அன்றோ-)
( தாநஹம் த்விஷத க்ரூராந் ஸம்ஸாரேஷு நராதமாந்–
க்ஷிபாம் யஜஸ்ரம் அஸுபாந் ஆஸுரீஷ்வேவ யோநிஷு–৷৷16.19৷৷
த்₃விஷத: – (முற் கூறியபடி) என்னை த்வேஷிப்பவர்களாய்
க்ரூராந் – கொடியவர்களாய்
நராத₄மாந் – மனிதரிற் கடையானவர்களாய்
அஶுபா₄ந் – அமங்களமானவர்களான
தாந் – அவர்களை(கீழ் 12 ஸ்லோகங்களால்-அருளிச் செய்த அசுரத்தன்மை–நான்கு விசேஷணங்கள் இவர்களுக்கு )
அஹம் – நான்
அஜஸ்ரம் – இடை விடாமல்
ஸம்ஸாரேஷு – (பிறப்பு இறப்பு மூப்பு முதலா னவை மாறி மாறி வரும்) பிறவிகளில் (அதிலும்)
ஆஸுரீஷு ஏவ யோநிஷு- அதிலும் ஆஸுரப் பிறவிகளிலேயே
க்ஷிபாமி – தள்ளுகிறேன்)
(அமர ஓர் அங்கம் ஆறும் வேதம் ஓர் நான்கும் ஓதித்
தமர்களில் தலைவராய சாதி அந்தணர்கள் ஏலும்
நுமர்களைப் பழிப்பர் ஆகில் நொடிப்பது ஓர் அளவில் ஆங்கே
அவர்கள் தாம் புலையர் போலும் அரங்க மா நகர் உளானே-43-)
1-அபராதங்களைப் பண்ணிப் போந்த நாம் நேர் கொடு நேர் நின்று சரணம் புக்கால்
பூர்வ வ்ருத்தத்துக்கு ச்மாரகமாவுதோம் என்று தம்மை அஞ்சி
தம் திறத்தில் ஈஸ்வரனுக்கு உண்டான சீற்றத்தை ஆற்றுமவளாய்
2-ஸ்த்ரீத்வ பிரயுக்தமான மார்த்த்வத்தை உடையவளுமாய்(இங்கு திரு உள்ளத்தில் உள்ள மென்மை)
3-மாத்ருவ பிரயுக்தமான குடல் துவக்கை உடையளுமாய்
4-இவர்கள் சொல்லும் வார்த்தையை செவி தாழ்த்துக் கேட்க்குமவளாய்(-ஸ்ருணோதி -)
5-அவனைத் தன் போக்யதையால் துவக்கிக் கேட்பிக்குமவளாய்(ஸ்ராவயதி)
அதுக்கு மேலே
6-ஸ்தனந்தய பிரஜைக்கு தாய் கீழே ஒதுங்குகை ப்ராப்தம் ஆனவோபாதி ஸ்வரூப ப்ராப்தையுமாய் இருக்கையாலே
பிராட்டி திருவடிகளிலே சரணம் புகுகிறார்
நெடும் காலம் விஷய பிரவணனாய் போந்த பிரஜை -நிவ்ருதனான வன்று பிதாவின் பக்கல்
நேர் முகம் பார்த்து சொல்லுகை அரிதாய்
மாதாவின் பக்கல் சொல்லுகை எளியதாய் இருக்கும் இறே
பிரதமத்தில் ஆஸ்ரயிக்கைக்கும் கூட இறாய்த்த இவர்
இவளை ஆஸ்ரயித்த அனந்தரம்
பண்ணின அபராதங்களை
ஷமஸ்வ -என்றார் இறே அந்தப்புர பரிகரம் ஆகையாலே –
(1-ஸ்ரீயதே –ஸகல சேதனர்களாலும் புருஷகார தயா ஆஸ்ரயிக்கப்படுபவள்
2-ஸ்ரயதே -சேதனர்களுக்காக அவனை ஆஸ்ரயிக்கிறாள்
3-ஸ்ருணோதி -சேதனர்களின் விண்ணப்பங்களை செவி கொடுத்துக் கேட்க்கிறாள்
4-ஸ்ராவயதி -அவற்றை அவனையும் கேட்ப்பிக்கிறாள்
5-ஸ்ர்ணாதி –ஆஸ்ரிதர் குற்றங்களை ஷமித்து இல்லை செய்பவள்
6-ஸ்ரீணாதி -தனது திருக் கல்யாண குணங்களால் உலகோரை உகப்பிக்கிறாள் –
ஸ்ரீரித் ஏவ ச நாம தே பகவதி ப்ரூம கதம் த்வாம் வயம் -ஆளவந்தார்
ஸ்ரீ ரஸி யத -பட்டர்
கிடந்து –இத்யாதி மால் செய்கின்ற மால்
பார் வண்ண மட மங்கை பத்தர் -பித்தர் பனி மலர் மேல் பாவைக்கு
என் திரு மகள் சேர் மார்பனே என்னும் என்னுடைய ஆவியே என்னும் -அவள் இடம் நேரே தொடர்பு –
அனந்தாழ்வான் திரு மகளாருக்கு என் திரு மகள் என்றே திருநாமம் சாத்தினார் )
————————————————————————————
ஓம் பகவன் நாராயண
அபிமத அநுரூப
ஸ்வரூப ரூப குண விபவ ஐஸ்வர்ய சீலாதி
அநவதிக அதிசய அசங்க்யேய
கல்யாண குண கணாம்
பத்மவ நாலயாம்
பகவதீம் ஸ்ரியம் தேவீம்
நித்ய அநபாயிநீம் நிரவத்யாம்
தேவ தேவ திவ்ய மஹிஷீம்
அகில ஜகன் மாதரம் அஸ்மின் மாதரம்
அசரண்ய சரண்யாம்
அநந்ய சரண்ய சரணம் அஹம் ப்ரபத்யே
————————————————————————————-
(ப⁴க³வந் நாராயண-ஸமஸ்த கல்யாண குண பரி பூர்ணனான நாராயணனுக்கு
அபி⁴மத அநுரூப -உகப்பாயும் -தகுந்தும் இருக்கிற
ஸ்வரூப ரூப கு³ண விப⁴வ -ஸ்வரூபம் என்ன -விக்ரஹம் என்ன -ஸ்வரூப விக்ரஹ குணங்கள் என்ன -விபூதிகள் என்ன -இவைகளையும்
ஐஶ்வர்ய ஶீலாத்³–ஐஸ்வர்யம் ஸுசீல்யம் முதலிய
யநவதி⁴க அதிஶய –எல்லையில்லாத சிறப்புடைய
அஸங்க்²யேய -எண்ண முடியாத
கல்யாண கு³ண க³ணாம் -கல்யாண குண ஸமூஹங்களையும் உடையவளாய்
பத்³மவநாலயாம் –கமல வனத்தை வாஸஸ் ஸ்தானமாக யுடையவளாய்
ப⁴க³வதீம் –பரம பூஜ்யையாய்
ஶ்ரியம் –ஸ்ரீ என்று திரு நாமம் யுடையவளாய்
தே³வீம்-வடிவில் புகர் நிறைந்தவளாய்
நித்யாநபாயிநீம் -எம்பெருமானை ஒரு நாளும் விட்டுப் பிரியாதவளாய்
நிரவத்³யாம் -பரி ஸூத்தியை யுடையவளாய்
தே³வதே³வ தி³வ்ய மஹிஷீம் -தேவாதி தேவண்டைய எம்பெருமானுடைய திவ்ய மஹிஷியாய்
அகி²ல ஜக³ந் மாதரம் -ஸமஸ்த ஜகத்துக்கும் மாதாவாய்
அஸ்மந் மாதரம்–விசேஷித்து அடியோமுக்குத் தாயாய்
அஶரண்ய ஶரண்யாம் -புகல் அற்றவர்களுக்கு புகலாய் இருக்கிற பெரிய பிராட்டியாரை
அநந்ய ஶரண: அஹம் -புகல் ஒன்றும் இல்லா அடியேன்
ஶரணம் ப்ரபத்³யே –சரணம் புகுகின்றேன் –
முந்துற முன்னம் பெரிய பிராட்டியாரை சரணம் புகுகிறார்
மேலே தாம் பெரிய பெருமாள் திருவடி வாரத்திலே சரணாகதி நிஷ்டைக்கு வெளியிடப் போகிற
உபேய ருசியும்
உபாயத்வ அத்யாவசாயமும்
பரி பக்குவமாய் இருக்க வேண்டுகையாலே -அவை குறைவற ஸித்திக்க வேண்டும் என்று பெரிய பிராட்டியார் திருவடிகளிலே சரணம் புகுகிறார்
உலகில் எது ஸித்திக்க வேண்டுமானாலும் பெரிய பிராட்டியார் சீர் அருளாலேயே ஸித்திக்க வேண்டும் என்ற அத்யவசாயம் இருப்பார்க்கு இது ப்ராப்தமே யாகும் –
அங்கயல் பாய் வயல் தென்னரங் கன், அணி ஆகமன்னும்
பங்கய மாமலர்ப் பாவையைப் போற்றுதும் பத்தி யெல்லாம்
தங்கிய தென்னத் தழைத்து நெஞ்சே! நந் தலை மிசையே
பொங்கிய கீர்த்தி இராமா னுசனடிப் பூ மன்னவே.–108-எம்பெருமானாருடைய திருவடித் தாமரைகள் தமது முடியில் பொருந்த பிரார்த்தனை போல்-)
பகவன் நாராயண –
பகவச் சப்தத்தாலே(-ஷாட் குண்யத்தைச் சொல்லுகிறது-ஞானம் பலம் ஐஸ்வர்யம் வீர்யம் ஸக்தி தேஜஸ்-பகவச் சப்த வாச்யானி விநா ஹேயைர் குணாதிபி-அகில ஹேய ப்ரத்யநீகமும் சொல்லும் -இவனுக்கே முக்கியார்த்தம் -மற்றவர்களுக்கு கௌண -இவன் சம்பந்தத்தால் லேசம் இருந்தாலும் பகவத் ஸப்த பிரயோகம் பண்ணுகிறோம்-சினத்தினால் செற்ற –மனதுக்கு இனியான் )
மைத்ரேய பகவச் சப்தஸ் சர்வ காரண காரேண
சம்பர்த்தேதி ததா பர்த்தா பகாரோர்த்த த்வயான் வித
நேதா கமயிதா ஸ்ரஷ்டா ககாரார்த்தஸ் ததா முனே
ஐஸ்வர் யஸ்ய சமக்ரச்ய வீர்யச்ய யசசஸ் ஸ்ரீ ய
ஜ்ஞான வைராக்யயோஸ் சைவ ஷண்ணாம் பக இதீரணா
வஸந்தி தத்ர பூதானி பூதாத்மன் யகிலாத்மனி
ஸ ஸ பூதேஷ்வசே ஷேஷூ வகார்த்தஸ் ததோச்வ்யய
ஜ்ஞான சக்தி பலை ஐஸ்வர்ய வீர்ய தேஜாம் ஸ்ய சேஷத
பகவச் சப்த வாச்யானி விநா ஹேயைர் குணாதிபி
ஏவமேஷ மகா சப்தோ மைத்ரேய பகவா நிதி
பரம ப்ரஹ்ம பூதஸ்ய வாஸூ தேவஸ்ய நான்யக
தத்ர பூஜ்ய பதார்த்தோக்தி பரிபாஷா சமன்வித
சப்தோயம் நோபசாரேன த்வன்யத்ர ஹ்யுவசாரத -என்கிறபடியே
ஹேய சம்பந்த ரஹித பூர்ண ஷாட் குண்யத்தைச் சொல்லுகிறது –
இத்தால் பயிருக்கு நீர் நிலை போலே சர்வ ஆத்மாக்களுக்கும் கூட உஜ்ஜீவன ஹேதுவான குண பூர்ணனுமாய்(ஸமஸ்த கல்யாண குண ஆர்ணவம் -குணக் கடல் )
பிறர் உடைய தோஷம் தட்டாத படியான ஹேய ராஹித்யத்தையும் உடையவன் -என்கிறது-
நாராயண –
பகவச் சப்தத்திலே சர்வமும் இல்லையோ
இனி நாராயண சப்த அபேஷை உண்டோ -என்னில்
அந்யத்ர ஹ்யுபசாரத -என்கிறபடியே
பகவச் சப்தத்துக்கும் ப்ரஹ்ம சப்தத்தோபாதி வ்யக்த் யந்தரங்களிலே ஔ பசாரிகமாக வாகிலும் பிரயோகம் உண்டு(ஸர்வத்ர ப்ருஹத் -இருப்பதிலேயே பெரியதாகியும் -ஆஸ்ரிதரை பெரியவராக்கி -அளவிலும் – குணங்களாலும் -ப்ருஹத்
ப்ரஹ்ம சப்தம் பிரக்ருதிக்கும் -ஆத்மாவுக்கும் பத பிரயோகம்
முடிவில் பெரும் பாழ் -நிர்தோஷ ஆத்மா முக்தனையும் ப்ரஹ்ம ஸப்தம் பிரயோகம் )
அதுவும் இன்றியே அநந்ய பரமான நாராயண அநுவாக சித்தமாய்
யோக ரூடியாலே நாராயண பதம் சர்வேஸ்வரனுக்கே வாசகமாய் இருக்கும்
அத்தாலே விசேஷிக்கிறது-
(காரணப் பெயர் –பாசக -சமையல் காரர் –நாற்காலி போல் –யவ்க்கிகம்
இடுகுறிப் பெயர் -குடம் மாடு -புத்தகம் -பிரித்து அர்த்தம் கொள்ளாமல் இதுக்கு இந்தப் பெயர் -ரூடி -பிரசித்த
யோக ரூடம் -இரண்டும் -பங்கஜம் -சேற்றில் இருந்து தோன்றியவையும் -தாமரை -யோகமும் ரூடியும் உண்டே – நாற்காலி -பூனைக்கும் நான்கு கால்கள் இருந்தாலும் -பிரசித்த அர்த்தம் குறிப்பிட்ட வஸ்துவுக்கே
ஆக மூன்றுமே உண்டு-நாராயணன் யோக ரூடி -உலகில் உள்ள அனைத்துக்கும் இருப்பிடம் -காரணப் பெயர் -குறிப்பிட்ட வ்யக்திக்கே பிரயோகம் -ஆகவே ரூடி -)
(நார -அயன -பதங்கள் சேர்ந்து -நாராயண -ஆனதே
சூரப்ப -நகம் -சூர்ப்பணகை -முரம் போன்ற நகம் கொண்டவள் -இவளுக்கு மட்டுமே இவ்வாறு
தஷிணாயனம்
உத்தராயணம் -இங்கு மட்டும் ண)
ஆக –பகவன் நாராயண -என்று
சமஸ்த கல்யாண குணாத் மகனாய்
உபய விபூதி நாதனான சர்வேஸ்வரனைச் சொல்லிற்று ஆயிற்று –
(பகவான் நாராயண
குண விபூதி புஷ்கல பரம் -ஸ்ருத ப்ரகாசகர்
ஈறில வண் புகழ் நாரணன் என்றும்
நாரணம் முழு ஏழு உலகுக்கும் நாதன் என்றும் சொல்லுமா போல்)
பிராட்டி திருவடிகளிலே சரணம் புகுகிறார் ஆகில்
இவ் விடத்தில் இது சொல்ல வேண்டுவான் என் என்னில் –
ஆற்றுக்கு சஹ்யம் (மலை -மூல காரணம் )போலேயும்
விளை நிலத்துக்கு ஏரிக் கட்டு போலேயும்
இவளுடைய கல்யாண குணங்களுக்கு அடியான (மூலமான அவனது )கல்யாண குண யோகத்தையும்
இவளுடைய விபூதிக்கு அடியான (மூலமான அவனது )உபய விபூதி யோகத்தையும் சொல்லுகிறது –
(ஸமஸ்த ஜீவாத்மாக்களும் அவனது ஸங்கல்பம் அடியாகவே பெரும் உத் கர்ஷம்
நித்யத்வத்வமும் அவனது நித்ய ஸங்கல்பம் அடியாகவே –
அதே போல் பிராட்டிக்கு உண்டே-ஜகன் மாதா -ஈசானம் ஜகத-ஆனதும் அவன் சம்பத்தாலேயே –காந்தஸ் தே புருஷோத்தம –இத்யாதி -)
அவனைச் சொல்லும் போது –
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன
நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்யஹ் யாகதோ மதுராம் புரிம் –ஹரிவம்சம் –என்ன வேண்டினவோபாதி
இவளைச் சொல்லும் போதும் –
அஸ்யேசானா ஜகதோ விஷ்ணு பத்நீ -என்ன வேண்டி இறே இருப்பது
நிரூபகத்தை ஒழிய நிரூப்யத்துக்கு ஸ்திதி இல்லாதவோ பாதி
நிரூப்யத்தை ஒழிய நிரூபகத்துக்கும் ஸ்திதி இல்லையே –
(பூவுக்கு பரிமளம் -ரத்னத்துக்கு ஒளி -விட்டுப் பிரியாத – நிரூப்யமும் நிரூபகமும் புள்ளரையன் கோ -என்பதிலேயே ஆசை அவனுக்கு-வைஷ்ணவன் -விஷ்ணு பக்தன் என்பதே நமக்கும் ஆசை)
(தேசிகன் ரஹஸ்ய ரக்ஷையில் இதே போல்
த்வய விவரணம் இது
பிராட்டியை விட்டுப் பிரியாத நாராயணன் -ஸ்ரீ மன்
இங்கு நாராயணனுக்கு அநுரூபை இவள்
மேல் ஸ்ரீ வல்லப -ஸப்தம் ஸ்ரீ மன் ஸப்தார்த்தம்
ஸூஷ்ம -பரம்பர -அடையாளம் -)
——–
அபிமத
ஏவம் விதனாய் இருந்துள்ள இவனுக்கு அபிமதமாய் இருக்கை-
அநுரூப –
ராஜாக்கள் நீச ஸ்திரீ காற் கடையிலே துவளுமா போலே
அபிமதமே ஆகிலும் அநனுரூபமாய் இருப்பன உண்டு –
அங்கன் அன்றிக்கே
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என் அன்பேயோ-திருவாய்மொழி -10-10-6-யென்னும்படியே
அனுரூபமாய் இருக்கை –
(தேர் அணிந்த அயோத்யார் கோன் பெரும் தேவி கேட்டருளாய் –ஏக பத்னி -இங்கு பெருமாளாது பெருமைக்குத் தக்க தேவி)
(ஆறு விஷயங்கள் அபிதமாயும் அநு ரூபமாயும் இருக்கும் என்கிறது
ஸ்வரூபம்
ரூபம்
குணம்
விபவம் செல்வம்
ஐஸ்வர்யம் -நியமன சாமர்த்தியம்
சீலாதிகள்-ஆக ஒவ்வொன்றும் அபிமதமாயும் அனுரூபமாயும் இருக்கும் என்று 12 விஷயங்கள் )
——-
அவனுக்கு இவள் ஸ்வரூபம் அபிமதமாய் இருக்கை யாவது –
இவள் ஸ்வரூபம் அவன் ஸ்வரூபத்துக்கு தாரகமாய் இருக்கை
ராவணன் மாயா சிரசைக் காட்டின போதும் -இந்த்ரஜித்து மாயா சீதையைக் காட்டின போதும்-இருவருக்கும் மெய் என்று பிரமிக்கச் செய்தே
அந்யோந்யம் தரித்து கிடந்த இடம் ஸ்வரூப சத்தையால் இறே-
அவன் ஸ்வரூபம் இவளுக்கு தாரகம் ஆகிறது ஸ்வரூபத –
இவள் ஸ்வரூபம் அவனுக்கு தாரகம் ஆகிறது அபிமதத்வத்தாலே
(ஸ்வாமி திருநாடு அலங்கரித்த செய்தி கேட்டதும் -வருந்தி உயிர் இழந்தவர் பலர் உண்டே -இதுவே தாரகம் -அபிமதம்)
(ஸ்வரூபத –நான் இல்லாத பொருள் இல்லை -கீதை -படைத்து அந்தர்யாமியாய் இருப்பதால் தான் சத்தை -அதே போல் பிராட்டி அந்தர்யாமியாய் அவனுக்கு இருந்து சத்தை தரவில்லை அபிமதத்வத்தாலே-மிகவும் பிடித்த பிரியமானவள் என்பதால்-இந்த வாஸி அறிய வேண்டும்-ஞானி து ஆத்மைவ மே மதம் ஞானியே தனக்கு ஆத்மா -இவன் மதம் – -)
—-
அனுரூபம் ஆகையாவது -(தகுந்தவளாவது)
நித்யை வைஷா ஜகன் மாதா விஷ்ணோ ஸ்ரீர் அநபாயினி
யதா சர்வ கதோ விஷ்ணுஸ் ததை வேயம் த்விஜோத்தம-ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-8-17-என்றும்(தகுந்த குணம் உடையவளும் என்றும் நீக்கமற நிறைந்து இருப்பது போல் பிராட்டியும் வியாபித்து இருப்பவள்
அணு மாத்ரம் அன்றோ ஜீவாத்மா என்னில் –
குடத்தில் கடத்வம் எங்குமே நிறைந்தால் போல்
பிராட்டி பகவானுக்கு அடையாளம் -நுண்ணியவளாய் இருந்தாலும் -அவனது ஒவ்வொரு இடத்திலும் பிராட்டி உண்டே –
விபுவானவன் அணுவான ஜீவாத்மாக்குள் இருப்பது போல்
அணுவாக இவள் இருந்தாலும் -சேர்ந்தே இருப்பதால் ஸர்வ கதா இவளும் )
த்வம் மாதா சர்வ லோகானாம் தேவ தேவோ ஹரி பிதா
த்வயை தத் விஷ்ணு நா சாம்ப ஜகத் வ்யாப்தம் சராசரம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-126-என்றும்
யுக்தா ராமஸ்ய பவதீ தர்ம பத்நீ யசச்விநீ
பிரதி சந்திச மாம் தேவி கமிஷ்யே யத்ர ராகவ -யுத்த -116-47-என்றும்(யுக்தா-தகுந்தவள் )
ஸ்வ வைஸ்வ ரூப்யேண சதா அநுபூதயா அப்ய பூர்வ வத் விஸ்மயமாத தாநயா
குணேந ரூபேண விலாஸ சேஷ்டி தைஸ் சதா தவை வோசிதயா தவ ஸ்ரீ யா -ஸ்தோத்ர ரத்னம் -38-என்றும்
சொல்லுகிற படியே இவளுடைய ஸ்வரூபம் அவனோடு ஒக்கச் சொல்லலாம் படி இருக்கை
(ஸ்வவைஶ்வ ரூப்யேண ஸதா’நு பூதயா’பி
அபூர்வவத் விஸ்மயமாத தாநயா |
குணேந ரூபேண விலாஸ சேஷ்டிதை:
ஸதா தவைவோசிதயா தவ ஶ்ரியா ||-ஶ்லோகம் 38 –
இதில், ஆளவந்தார் பிராட்டியின் எல்லை இல்லாத இனிமையையும், அவள் எம்பெருமானுக்காகவே இருப்பதையும்,
திருவாய்மொழி 10.10.6இல் “உனக்கேற்கும் கோல மலர்ப் பாவை”
(உனக்குத் தகுந்தவளான, அழகிய தாமரை மலரில் வசிக்கும் ஸ்ரீமஹாலக்ஷ்மி) சொன்னபடி அனுபவிக்கிறார்.-நீ விஶ்வரூபம் எடுத்து முழுவதுமாக அனுபவித்தாலும், பிராட்டி தன்னுடைய குணங்கள், அழகிய திருமேனிகள்
மற்றும் செயல்களால் உன்னை ஆச்சர்யம் அடையும்படிச் செய்து, உன்னுடைய பரம், வ்யூஹம், விபவம் முதலிய
எல்லா நிலைகளிலும் உனக்குப் புதிதாகத் தோன்றி, உனக்குத் தகுந்தவளாக விளங்கி, உன்னுடைய செல்வமாக இருக்கிறாள்.-)
(பண்டு இவரைக் கண்டு அறிவது எவ் ஊரில் -பெரிய திருமொழி -8-1-9- என்றும்
அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதம் -திருவாய் மொழி -2-6-6- என்றும் ஆழ்வார்களும்
சதா பஸ்யந்தி -என்று நித்ய ஸூரிகளும்
நித்ய அபூர்வதையாலே தேவர் திறத்தில் படுமது எல்லாம்
தேவர் படும்படி இறே பிராட்டி போக்யதை இருப்பது –
அவன் ஸ்வரூபத்தாலே அபரிச்சின்னன்
இவள் போக்யதையாலே அபரிச்சின்னை
உனக்கு ஏற்கும் கோல மலர்ப்பாவை -என்றும் சொல்லுகிறபடியே
தேவர் தமக்குத் தகுதியாய் இருக்குமவள் –
தோள்கள் ஆயிரத்தாய் முடிகள் ஆயிரத்தாய் துணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய் தாள்கள் ஆயிரத்தாய் –
கொண்டு அனுபவித்தாலும் -அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதாகும் விலக்ஷண வஸ்து –
தவைவ உசிதயா ஸ்ரீரியா –என்னும் அளவே போதுமாய் இருக்க -தவ ஸ்ரீயா -என்றது
பிராட்டியின் அநந்யார்ஹத்வத்தை நிலை நாட்டி அருளவே –)
—-
ரூப
ரூபம் ஆவது -விக்ரஹம்(வடிவம் ரூபம் இரண்டுக்கும் ரூப பத பிரயோகம் உண்டே -இங்கு திவ்ய மங்கள விக்ரஹம் சொல்லிற்று என்றவாறு )
ஸ்வரூபத்தை சொன்ன அநந்தரம் ஸ்வரூப குணங்களைச் சொல்ல பிராப்தமாய் இருக்க
விக்ரஹத்தைச் சொல்லிற்று –ஸ்வரூபத்துக்கும் ஸ்வரூப ஆஸ்ரிதமான குணங்களுக்கும் பிரகாசமாகையாலே
ஸ்வரூபம் அபிமதம் ஆகா நின்றால்
ரூபம் அபிமதம் என்னும் இடம் சொல்ல வேண்டா விறே
அது தான் ஸ்வரூப ஆஸ்ரிதம் என்று இறே அபிமதம் ஆயிற்று
ரூபம் அபிமதம் ஆகையாவது
அகலகில்லேன் இறையும் -என்று அவள் துணுக் துணுக் என்னும்படியான அவன் தானும் மேல் விழும்படியாய் இருக்கை –
மெல்லியல் தோள் தோய்ந்தாய் –
மா மலர் மங்கை மண நோக்கம் உண்டான் -என்றும் அவனுக்கு
உண்ணும் சோறு பருகு நீரும் இவள் வடிவேயாய் இறே இருப்பது
இது அனுரூபம் ஆகையாவது
சீலத்தாலும் வயசாலும் வ்ருத்தத்தாலும் துல்யமாய் இருக்கை –
குண
ரூபாநந்தர பாவித்வத்தாலே இது தான் சௌந்தர்யாதிகளாகக் கடவது
இவையும் ரூபத்துக்கு நிறம் கொடுத்து போக வர்த்தகங்களுமாய் இருக்கையாலே
அபிமதமாய் இருக்கும்
அத ஏவ அனுரூபமாய் இருக்கும்
விபவ
அர்த்தோ விஷ்ணு ரியம் வாணீ நீதிரேஷா நாயோ ஹரி
போதோ விஷ்ணு ரியம் புத்தி தரமோ சௌ சத்க்ரியா த்வியம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-8-18-என்று
அர்த்தாம்சம் அவனதாய் சப்தாம்சம் இவளதாய் -இருக்கை –
இவள் நியாய சாஸ்திரம் அவன் நியாயம்
அவன் ஜ்ஞானம் இவள் அதற்கு உபகரணமான புத்தி –
அவன் தர்மம் -இவள் அதை சாதிக்கும் நல் கர்மம் –
அணோர் அணீயான் மஹதோ மஹீயான் ஆத்மா குஹாயாம் நிஹி தோசய ஜந்தோ
தமக்ரதும் பஸ்யதி வீத சோகோ தாது ப்ரசாதான் மஹிமான மீசம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-8-35-என்னும்படி
புல்லிங்க பதார்த்தங்கள் அவனதாய்
ஸ்திரீ லிங்க பதார்த்தங்கள் இவளதாய் இருக்கை –
இயம் ஸா தயிதா பார்யா ராஷசீ வசமாகதோ
சர்வான் போகான் பரித்யஜ்ய பர்த்ரு சிநேக பலாத் க்ருதா
அச்சிந்த்தயித்வா துக்காணி பிரவிஷ்டா நிர்ஜனம் வனம் -சுந்தர -16-19
என்று சர்வ போகங்களையும் விட்டு காடு ஏறப் புறப்பட்டாள் என்கையாலே
லீலா உபகரணங்களும் போக உபகரணங்களும் அவன் விபூதியிலும் விஞ்சி இருக்கை –
அவை யாவன-
முற்றிலும் பைம் கிளியும் பந்தும் ஊசலும் பேசுகின்ற சிற்றில் மென் பூவையும் விட்டு அகன்ற செழும் கோதை -பெரிய திருமொழி -3-7-8
பூவை பைம் கிளிகள் பந்து தூதை பூம் புட்டில்கள்-யென்னுமவையும் -திருவாய் மொழி -6-7-3-
ஸ்ரக் சந்தநாதிகளும்
இவை தான் சாமான்யமாயும் அந்தப்புர பரிகரமாயும் இருக்கும்
அங்கன் அன்றியே
யோ யோ ஜகதி பும்பாவ ஸ விஷ்ணுரிதி நிச்சய
யோ யஸ்து நாரீபாவ ஸ்யாத் தத்ர லஷ்மீர் வ்யவஸ்திதா
ப்ரக்ருதே புருஷாச் சாந்யஸ் த்ருதீயோ நைவ வித்யதே
அதகிம் பஹூ நோக்தேன நர நாரீமயோ ஹரி -என்றும்
ஹேலாயா மகிலம் சராசரமிதம் போகே விபூதி பரா
தன்யாச்தே பரிசார கர்மணி சதா பஸ்யந்தி யே ஸூ ரய
ஸ்ரீ ரெங்கே ஸ்வர தேவி கேவல க்ருபா நிர்வாஹ்ய வர்க்கே வயம்
சேஷித்வே பரம புமான் பரிகரா ஹ்யேதே தவ ஸ்பாரனே -ஸ்ரீ குண ரத்ன-22-யென்னும்படியே
ஸ விபூதிகனான ஈஸ்வரன் என்றுமாம்
இது அவனுக்கு அபிமதம் ஆகிறதும் அந்தபுரகரம் ஆகையாலே
ஐஸ்வர்ய-
அதாவது –சகல பதார்த்த நியமன சாமர்த்தியம்
த்ரிவித சேதனரையும் ஸ்வரூபேண நியமிக்கும்
ஈஸ்வரனை பிரணயித்வத்தாலே நியமிக்கும்
நியமிக்கும் பிரகாரம் என் என்னில் –
பத்தரைக் கர்ம அனுகுணமாக நியமிக்கும்
நித்ய முக்தரை ஸ்வரூப அனுரூபமாக நியமிக்கும் –
ஈஸ்வரனை ரஷண அனுகுணமாக நியமிக்கும்
இது தான் அபிமதமாகிறதும் புருஷோத்தமத்வ ஸூசகம் ஆகையாலே
பிரணயினுடைய நியமனம் பிரணயிக்கு பும்ஸ்த்வ அவஹமாய் இருக்கும் இறே
இது ஜ்ஞாநாதி குணங்களுக்கும் உப லஷணம்-
சீல-
சீலம் ராஷசிகள் பக்கல் பிரசித்தம்
ராவணனைக் குறித்து –
மித்ர மௌ பயிகம் கர்த்தும் ராம ஸ்தானம் பரீப் சதா
வதம் சாநிச்சதா கோரம் த்வயா சசௌ புருஷர்ஷப -சுந்தர -21-19-என்றும்
விதிதஸ் ஸ ஹி தர்மஜ்ஞஸ் சரணாக தவத்சல
தேன மைத்ரீ பவது தே யதி ஜீவது மிச்சசி-சுந்தர -21-20-என்றும்
ராஷசிகளைக் குறித்து
ததஸ் ஸா ஹ்ரீமதீ பாலா பர்த்துர் விஜய ஹர்ஷிதா
அவோசத் யதி தத் தத்யம் பவேயம் சரணம் ஹி வ -சுந்தர -58-90-
ராஜ சம்ஸ்ரய வச்யாநாம் குர்வந்தீநாம் பராஜ்ஞயா
விதேயா நாஞ்ச தாசீநாம் கே குப்யேத் வானரோத்தம-யுத்த 116-38
பாபாநாம் வா ஸூ பாநாம் வா வதார்ஹாணாம் ப்லவங்கம்
கார்யம் கருணா மார்யேண நகஸசின் நாபராத் யதி -யுத்தம் -116-44-என்றும்
திருவடியோடே மறுதலித்து ரஷித்தாள் இறே
இக் குணம் அபிமதம் ஆகிறது
தனக்கு ஸ்வரூபமான ரஷணத்துக்கு உபயோகி யாகையாலே
ஆதி -சப்தத்தாலே அனுக்தமான குண விசேஷங்களை நினைக்கிறது
சமஸ்த கல்யாண குணாத்மகனைப் பேசிலும் இவளைப் பேசி முடியாது -என்கை
அநவதிக அதிசய
இவை தான் ஓர் ஒன்றே அபரிச் சேத்யமாய் இருக்கும்
அசங்யேய-
எண்ணிறந்து இருக்கை
கல்யாண
சதஹ்ரதாநாம் லோலத்வம் சஸ்த்ராணாம் தீஷ்ணதாம் ததா
கருடா நிலயோ சைக்ர்யம் அனுகச்சந்தி யோஷித
இயம் து பவதோ பார்யா தோஷை ரேதைர் விவர்ஜிதா
ஸ்லாக்யா ச வ்யபதேச்யா ச யதா தேவீ ஹ்யருந்ததீ –ஆரண்ய -13-7-என்கிறபடியே
உள்ளது எல்லாம் அழகியதாய் இருக்கை
இவள் குணங்களுக்கு வ்யாவர்த்தம் அவன் குணங்கள் –
அவன் குணங்களுக்கு தோஷம் எது என்னில்
அவனுக்கு ஸ்வரூப அனுபந்தியான நிரங்குச ஸ்வா தந்த்ர்யம் உண்டு –
க்ரோத மாஹாரயத் தீவரம் வதார்த்தம் சர்வ ரஷஸாம்
துஷ்ப்ரேஷ சோபவத் க்ருத்தோ யுகாந்தாக்னி ரிவ ஜவலன்-ஆரண்ய -24-34-என்று
கோபத்தை அருளப் பாடிட்டுக் கார்யம் கொள்ள வேண்டும் என்கிறவனுக்கும் பூஜ்யையாய் இருக்கை –
அதுதானும் இவளுக்கு இன்றிக்கே இருக்கை
குண கணாம்-
இவை தான் திரள் திரளாய் இருக்கை
பத்மவ நாலயாம்
பத்ம சப்தம் -மங்களங்களுக்கு உப லஷணமாய் –சர்வ மங்கள நிவாஸிநீ -என்கை
அங்கன் இன்றியே –சர்வ கந்த சர்வ ரச -என்கிற வஸ்துவையும் ஸ்வ சம்பந்தத் தாலே பரிமளிதமாக்குகை -என்றுமாம்
பத்ம சப்தத்தாலே போக்யதையைச் சொல்லிற்றாய்-அத்தாலே
நிரதிசய போக்ய பூதை -என்றுமாம்
பரிமளம் இறே இவள் வடிவுக்கு உபாதானம்
சர்வ கந்தஸ் சர்வ ரச -என்னும் இவை இரண்டும் இத் தலையிலே கிடந்தபடி –
பகவதீம்
பகவத் சப்தம் பூஜ்ய வாசி-தத்ர பூஜ்ய பதார்த்தோக்தி பரிபாஷா சமன்வித
சப்தோயம் நோபசாரேன –அவனுக்கும் பூஜ்யை
ஆக -பத்மவ நாலயாம் பகவதீம் -என்கிற இத்தால்
தன் வழியாக அவனைப் பற்றினால் குற்றம் பாராதபடி அவனைத் தன் போக்யதையால்-துவக்கிப் பொறுப்பிக்குமவள்-என்கை
ஸ்ரியம்-
தன்னைப் பற்றி சர்வமும் உண்டாம்படியாய்
தான் அவனைப் பற்றி உளளுமாய் இருக்கை –
இதிலே நிருக்தி பிரக்ரியையும் நடக்கக் கடவது –
தேவீம்
வடிவிலே புகர் இருக்கிறபடி
அவனோட்டைச் சேர்த்தியாலே த்யோதமானையாய் இருக்கிறவளை-
நித்ய அநபாயிநீம்
விஷ்ணோ ஸ்ரீர் அநபாயிநீம் -என்கிறபடியே அவனோடு உண்டான நித்ய சம்ச்லேஷத்தாலே-அபாயம் இன்றியே இருக்கை –அபாய -விஸ்லேஷ
நிரவத்யாம் –
கீழ்ச் சொன்ன ஏற்றம் எல்லாம் ஸ்வார்த்தமாய் இராதே
அத்தலைக்கேயாம்படி இருக்கை –
ஏதேனும் ஓன்று எனக்கு என்கை அவத்யம்
பிறர்க்கு என்கை நிரவத்யம்
இனி விஷய விபாகமே யுள்ளது
அது வகுத்த விஷயமாம் இத்தனையே வேண்டுவது
அவன் தானும் தன்னையும் தன் உடைமையையும்
ந தே ரூபம் ந ச ஆகாரோ நாயுதானி நசாஸ்பதம்
ததாபி புருஷாகாரோ பக்தாநாம் த்வம் பிரகாசசே-ஜிதந்தே -1-5-என்று இறே இருப்பது
தேவ தேவ திவ்ய மஹிஷீம்
சர்வேஸ்வர சாம்ராஜ்யத்திலே -தேவர்க்கும் தேவனானவனோடு ஒக்க அபிஷிக்தை யானவள் –
க்ருதாபிஷேகா மஹிஷீ போகி அந்யோன்யா ந்ருபச்த்ரிய
அகில ஜகன் மாதரம் –
இப் பெரிய மேன்மையைக் கண்டு இறாய்க்க வேண்டாதபடி சகல சேதனரோடு உண்டான
அவிநாபூதமான குடல் துடக்கைச் சொல்லுகிறது –
சார்வ பௌமன் மஹிஷி தன் பிரஜை சேற்றை யளைந்து மடியிலே ஏறப் புக்கால் அணைத்து உச்சி முகக்கும் இத்தனை இறே –
பிரஜையின் பக்கல் ப்ராப்தி இறே ஜீவிப்பது –
அகில சப்தத்தில் தாமும் அந்தர்பூதர் ஆகையால் தம்மையும் கூட்டிக் கொள்கிறார் –
தம் பக்கலில் வாத்சல்யாதிசயம் கண்டார் ஆகையாலே விசேஷித்து அருளிச் செய்கிறார் –அஸ்மன் மாதரம் -என்று
அசரண்ய சரண்யாம் –
1-குண லேச மாத்ரத்தாலே குற்றங்களை அடையப் பொறுத்து உகக்குமவள் –
அங்கன் அன்றிக்கே -தேன மைத்ரீ பவது -என்று குற்றத்தோடே உகக்குமவள்
2-புறம்பு புகல் அற்றார்க்கு பகவத் விஷயம் புகலாய் இருக்கும்
பகவத் விஷயத்துக்கும் புறம்பாய் இருப்பார்க்கும் புகலாய் இருக்கும் இவள் –
3-செய்தாரேல் நன்று செய்தார் -பெரியாழ்வார் திரு மொழி -4-9-2-என்னுமவர் சீறிக் கையும் வில்லுமான அன்றும்
இவள் திருவடிகளே புகலாய் இருக்கும்
4-சர்வ லோக சரண்யர்-என்று காளமூதித் திரிகிறவர் அசரண்யர் ஆனவன்றும்
இவள் சரண்யையாய் இருக்கும்
5-சரணம் என்கிற உக்தியைப் பற்றி சரண்யர் அவர் –
சம்பந்தமே ஹேதுவாக சரண்யையாய் இருக்கும் இவள் –
ஸ பித்ரா ஸ பரி த்யக்தஸ் ஸூ ரைச்ச சமஹர்ஷிபி
தரீன் லோகன் சம் பரிக்ரம்ய தமேவ சரணம் கத
ஸ் தம் நிபதிதம் பூ மௌ சரண்ய சரணாகதம்
வதார்ஹமபி காகுத்ச்த க்ருபயா பர்யபாலயத் -சுந்தர -38-34/35–
மித்ர மௌ பயிகம் கர்த்தும் –
விதி தாச ஹி தர்மஜஞ
ராஜ சம்ஸ்ரயவச்யானாம்-
பாபாநாம் வா ஸூ பானாம் வா
அநாலோசித விசேஷ அசேஷ லோக சரண்ய –என்கிறபடியே
சர்வ சமாஸ்ரயநீயமான பகவத் விஷயத்துக்கு புறம்பாய் இருப்பாரும் உண்டோ என்னில்
அநந்ய சரணோஹம்-
அந்த அநந்ய சரணன் ஆகிறான் நான் என்கிறார்
சரணம் பிரபத்யே
அசரண்யர்க்கும் சரண்யரான தேவர் திருவடிகளையே உபாயமாக அத்யவசிக்கிறேன்
அசரண்யர்க்கும் சரணை யாவது என் என்னில்
அகில ஜகன் மாதா வாகையாலே அபேஷா நிரபேஷமாகப் பரிக்ரஹிக்கும் தேவர்க்கும்-பரிக்ரஹித்து அல்லது நிற்க ஒண்ணாத படியான அபேஷையையும் பண்ணினேன் –
சந்த்ராம் ப்ரபாஸாம் யசஸா ஜ்வலந்தீம்
ஸ்ரீ யம் லோகே தேவ ஜூஷ்டா முதாராம்
தாம் பத்ம நேமிம் சரணம் அஹம் ப்ரபத்யே
அலஷ்மீர் மே நச்யதாம் த்வாம் வ்ருனே—-ஸ்ரீ ஸூ க்தம் -5
————————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply