ஸ்ரீ வராக புராணம்- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

வேதங்கள் அர்த்தம் சொல்ல வந்தவை இதிகாசங்களும் புராணங்களும்-18 புராணங்களில் – /சாத்விக புராணங்கள்   ஆறு-விஷ்ணு- 6000 ச்லோககங்கள் பாகவத-18000 ஸ்லோகங்கள்  வராக புராணங்கள் -..24000 ஸ்லோகங்கள் போல்வன -கிடைப்பது 10000 ஸ்லோகங்களே  //ஸ்ரீ வராகனே பூமி பிராட்டிக்கு அருளியது ..ஈன சொல் ஆயினும் ஆக–ஏனத் உருவாய் இடந்த பிரான் வானத்தவர்க்கும் மற்று எல்லா அவர்க்கும் — ஞான பிரான் அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே -ஆழ்வார்..ஞானம் உபதேசித்தார் என்பதால். ஸ்ரீ பட்டர் அருளுவது மீனே தண்ணீரில் சம்சார கடலில் இருந்து வெளி வர முடியுமா/ கூர்மம் மந்தர மலையால் அழுந்து இருக்கிறார் நாம் சம்சார மலை அவர் பாரமிரக்கி தானே நம் பாரம்/ நரசிங்கர் கழுத்துக்கு கீழ் ஓன்று மேல் ஓன்று/ வாமனன் திரி விக்ரமன்  -வஞ்சகன்-சின்ன காலை காட்டி பெரிய காலால் அளந்தாரே /பரசுராமன் கோக்குல மன்னரை மூ ஏழு கால் போக்கிய /ராமன் சீதை ஒரு சொல் ஒரு மனைவி அவளையே விட்டார் கை பிடித்தவளை விட்டாரே கால் பிடிக்கலாமா /கண்ணன் ஏலா பொய்கள் உரைப்பான் மாலே செய்யும் மணாளன் /பல ராமன் மது அருந்தி யமுனையை கூட இழுத்தாரே ராம் காட்/கல்கி வர வில்லையே பிரளய சமுத்ரத்தில் ரசித்து கொடுத்த வராக பெருமானே தஞ்சம்/ஸ்ரீ முஷ்ணம் பூ வராக பெருமாள் சுயம் வ்யக்த ஷேத்ரம் வான மா மலை /ஸ்ரீ ரெங்கம் திரு வேங்கடம் ஸ்ரீ முஷ்ணம் பத்ரி சாளக்ராமம் புஷ்கரம் நைமிசாரண்யம்  எட்டும் /

குள்ள வடிவுடன் கைகளை இடுப்பில் திடமான திரு மேனி கோல வரகம் ஒன்றாய் /திரு இட எந்தை/திரு கடல் மல்லையில் திரு  வல எந்தை /பாசி தூர்த்து கிடந்த பாற் மகட்கு -நில மகள்-

நிலம் சேறு ஜலம் மூன்றிலும் போக வராகம்–கோர பல்.-பிராட்டியின்  நடுக்கம் தீர எடுத்தார்..ஞானம்  நம் பொருட்டு கேட்டார் –தாயாரை அணைத்து அவள் திருவடிகளை நமக்கு பற்ற காட்டுகிறார் -புருஷா காரத்துக்கு ..கருத யுகத்தில்  முதல் ஐந்து அவதாரங்கள்-த்ரேத யுகத்தில் பரசு  ராம ராம அவதாரங்கள் / –துவாபர யுகம்  பல ராம கிருஷ்ண  அவதாரங்கள் / ஸ்ரீதேவி பட்ட மகிஷி//பூமி பிராட்டியும் நீளா தேவியும் இவள்  அம்சம் /தூ மலர் தூவி தொழுது வாயினால் படி மனத்தினால் சிந்திக்க  சூலி கொடுக்கிறாள் /பாற் என்னும் மடந்தையை  மால் செய்கிறான் கிடந்தது நின்று அமர்ந்து அளந்து /விராதன் ஸ்துதி-அரவாகி சுமத்தி யால்..ஆதி செஷனாய் தாங்குகிறான்/எயிற்றில்  ஏந்துகிறாய்/ வாயில் விழுங்குகிறாய்/ அளந்து அகப் படத்தி கொண்டாய்/ உண்பதும் /அவளை உமிழ்வதும்/ அவளை ஈர் அடியால் ஒளித்தி யால் ..ஊன்றி எடுத்தான்

இருவரும் சிறந்தவர்கள் .. புராணம் பஞ்ச லஷணம் ..சர்கம்- படைப்பு /பிரதி சர்கம்/ வம்சம்/ மன்வந்தர- ஆட்சியில் நடந்தவை /கிளை கதைகள் /நிறைந்தவை..உலகம் சிருஷ்டி பதில் முதலில் கேட்கிறாள் ..நாராயணனையும் நரனையும் வணங்கி ..நமஸ்தஸ்மை வராக -மஹிம் உத்தரதே -என்னை இடந்து எடுத்த -மகா வராக -பெரும் கேழா லார்-வீர கழல் /மேரு மலை கண கண எத -பெறல் போல ..சப்தம் கொடுக்க ..சமுத்ரம் அழுந்காமால் குலுங்காமல் இடர்ந்து எடுத்தான் ..அப்பன்

அஞ்ஞானம் பெரும் இருட்டில் இருக்கும் -ரஷிகிறான் ஹய வதனம் -வேதம் கொண்டு போன குதிரை -மத்ஸ்ய அவதாரம் கூர்ம அவதாரம் மந்தர மலை கடைந்து அமுதம் .. ஹிரண்ய கசிபு அழித்து குழந்தை காத்து நரசிம்கர்/ ஷத்ரியர் துன்பம் பரசுராமர் / ராவனணன் அழித்து ராமன்/ கம்சன் அழித்து கண்ணனாக ரஷிதீர் எதற்கு? -கேட்டாள்-கர்மங்களை தொலைத்து ஏதேனும் யோகம் புரிந்து என் திருவடி பற்றி மோட்ஷம் அடைய பண்ணுகிறேன்..பதில்.. புரிந்து கொண்டார்களா ?-இல்லை பிராட்டி நீ தான் போய் பிறந்து உபதேசம் பண்ணு ..

திரு குறுங்குடி நம்பி ராமானுஜர் இடம் கேட்ட ஐதீகம் ..ஆச்சர்ய பீடம் இன்றும் உண்டு..இவளும் வணங்க ஆரம்பிக்கிறாள் — கமல பத்ரஆஷா சேஷ பர்யங்க மோஷ பிரதானே ..பல்லவ சோபினே -ஸ்தோத்ரம்/தாமரை கண்ணனே திரு பரி விட்டம் /அசுரர்கள் அழித்து/சர்வ தேவஸ்ய –ஸ்ருஷ்ட்டி விளக்குகிறான்..சமஷ்ட்டி ஸ்ருஷ்ட்டி அத்வாரக ஸ்ருஷ்ட்டி-தானே பண்ணுவது  சத்வாரக/ வ்யக்தி ஸ்ருஷ்ட்டி பிரம மூலம் பண்ணுவது .. மயில் தொகை போல விரித்து சுருட்டி /கடல் அலைகள் காற்றால் மேலே போய் மீண்டும்  கடலுக்குள் அடங்குவது போல..தன்னுள்ளே திரைத்து எழும் -திரு மங்கை ஆழ்வார் பாசுரம் /சிலந்தி பூச்சி நூல் விட்டு கட்டி பின்பு மூடி கொள்வது போல /வீட்டை பண்ணி விளை யாடும் விமலன்— மூல பிரகிருதி மகான் அகங்காரம் புலன்கள் மனசு .

ஐவர் திசை திசை வலித்து எத்துவர்-சாத்விக அகங்காரம் பஞ்ச பூதங்கள் /ஆகாசம்-சப்தம்/ வாயு ஸ்பர்சம் தொடு உணர்வு/அக்னி ரூபம் உருவம்/ தண்ணீர் சுவை /பிரதிவி வாசனை /பூநிலாய  பாசுரம்../ராஜச அகங்காரம் மேல் பார்வை பார்க்கும்../கலந்து பஞ்சீகரணம்.. ஈர் ஏழு லோகங்கள் /அண்ட கடாங்கள்…பின்பு பாற் கடலில் போய் பிரம மூலம் ..சுவாயம்பு மனு பிரியம் வரதனும் நாரதரும் பேசி கொள்கிறார் அழுதுண்டே பிரமன் நெற்றி சுளித்தி சாம்பு சிவ எட்டு பெயர் ருத்ரன்.. /நார -தண்ணீர் இருப்பிடம் நாராயணன் .திர்யக் ச்தொதாஸ் -பக்கவாட்டில் இருந்து /மேல் நோக்கி தேவர்கள் / மனிசர்கள் ஒன்பது வித சிருஷ்டி சனகன் நால்வர் படைக்க விருத்தி செய்ய கர்ம பாவனை வேண்டாம்  பிரம  பாவனை /பிரம்மாவுக்கு வுபய பாவனை../ரிஷிகள் படைத்து நாரதர் மரிசி வசிச்டர்போல /நான்கு யுகம் தெரிவிக்கிறார் மேல்..4320,000 வருஷம் சதுர யுகம் /சவேதாஸ் தீபம் போய் இருந்தேன் நாரதர் சொல்கிறார் பிரியம் வரதனுக்கு சாவித்திரி பெயர் -மூவர் உருவாக்கி சாவித்திரி காயத்ரி பெயர் -மூன்றும் வேதம்..நீராடி வேதங்களை திரும்பி பெற்றார் ..வேதம் தரிக்க காயத்ரி மந்த்ரம் ..

ஜீவனம்-இவ் உலக வாழ்வு / உஜ்ஜீவனம்-அவ உலக வாழ்வு../ரிக் மந்த்ரம்/யஜுஸ் மந்த்ரம் வைத்து செய்யும் கிரிசைகள் /இசை கூட்டி சாம வேதம்..மூன்றும் சேர்ந்து அதர்வண வேதம் ..நாரதர் -காயத்ரி பேசி கொள்கிறார்கள்../என் நினைந்து போக்குகிறார்கள் ஆயனே அரங்கா என்று அழைகின்றேன்.. பேயனே  இவர் உலகோர்  என்ன -கைதி சிறை சாலை வெளி போல..நர= மனிதன் நார= தொடர்பு கொண்ட அறிவு தர்= கொடுப்பவர் நாரதர் /பித்ருகளுக்கு பிண்டமும் தண்ணீரும் கொடுத்தவர் ../பிரம பாத ஸ்தோத்ரம் அடுத்த அத்யாயம்-முன் ஜன்மம் நினைவு வந்தது நீராடியதும். அவந்தி -உஜ்ஜைன் -முக்தி தரும் ஷேத்ரம். அயோதியை மாயா புரி பூரி /மதுரா காஞ்சி காசி அவந்திகா உஜ்ஜைன் கண்ணன் சாந்தீபன் இடம் கற்ற இடம் 64 நாளில் 64 கலைகள் கற்றார் /சாரச்வதன் முன் ஜன்மத்தில் பெயர் நாரதர்க்கு..நிறைய கர்மம் தானம் தர்மம் பண்ணி கொண்டு இருந்தார்…ஆதமா சிந்தனை வேணும் வெறுமை தவிர்க்க ..

சாரச்வதி நதிக்கு போனார் ..தானம் தர்மம் பண்ணினார் தேவர்களுக்கு யக்ஜம் பண்ணினார்/பித்ரு கார்யம் பண்ணினார்..பிரம பார  ஸ்தோத்ரம் -பழையவர் புராணம்.. பர — உயர்ந்த, விசாலம் சக்தி ஞானம் கொடுப்பதில் சுத்தத்தில் மங்களம் போல்வன   இல்லை/பிரதானமாக இருக்கிறார் ..மிக பெரியவர் மட்டும் இல்லை வணங்கியவரை தம் போல பெரிவர் ஆக்கு கிறார் ..பரம பதம் மேம்பட்ட இடம் இல்லை..சாம்யா பத்தி மோட்ஷம் / எட்டு கல்யாண குணங்களும் நமக்கும் கொடுக்கிறான்-1அபகத பாப்மா -பாபம் தீண்டாது/2 விஜரக- மூப்பு இல்லை//3-வி மிருத்யு மரணம் இல்லை /4-வி சோக-சோகம் இல்லை  /5வி ஜிகிச்தக -பசி இல்லை  /6அபி பாசக தண்ணீர் தாகம் இல்லை ./.7சத்ய காம விரும்ப தக்க குணங்கள் கொண்டவன் /8- சத்ய சங்கல்ப -/வாழ்வு பந்தயம் இல்லை அவனை அடைய கொடுத்த வாய்ப்பு என்ற எண்ணம் வேணும்..

8 சத்ய சங்கல்ப- எடுத்த செயலை நிறை வேற்றுவோம்../சமமாக ஆக்குவான் தொழுதால் எழலாம் . துயர் அரு .சுடர் அடி தொழுது எழு தொழா விடில் விழுவோம்..முடி சோதியாய் உன் முக சோதியாய் மலர்ந்ததுவோ /முகத்தின் ஒளியால் கிரீடத்துக்கு  ஏற்றம் /அடி சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ -போட்டி சூர்யன் அஸ்தமிக்கும் பொழுது  மூடி கொள்ளுமே .தோற்றவர் தலையால் ஆசன பத்மம் தூக்கி கொண்டே இருக்கிறது /படி சோதி ஆடையோடும் ..கிரமம்  மாரி காட்டி கொடுக்கும் முறையில் பராத் பரன் -முடி தெரிந்ததும் விழுந்தார் அடியை பாட  உடன் அவன் இவரை எடுத்து மடியில் வைத்து கொள்ள இடுப்பை பாடுகிறார் ..முடியில் இருந்து அடியை பேசி இடுப்பை சொல்கிறார் /கவலை படாமல் இவர் அடியில் விழனும் ..பாலை குடிக்க காலை பிடிப்பார் உண்டோ..அமிர்தம் போல திருவடி..தெரிந்ததும் விழுவோம்…ஆலிலை துயின்று அவனே கால் கட்டை விரலை நுனி வாயில் போட்டு கொண்டு –வைஷ்ணவ போகய லிப்சய– இனிகிறதா என்று பார்கிறான்

பாவனத்வம்வெறும் கங்கை நீர் என்பதால் இல்லை ஸ்ரீ பாத தீர்த்தம் என்பதால்..திரு விக்கிரம திரு வடி தீர்த்தம் என்கிற அறிவுடன் நீராடினால் தான் பாவனத்வம் கிட்டும்..திரி /மூன்று கணக்கு சொல்கிறார்..எட்டு மூன்று /மூன்று வேதங்களால் அறியலாம் திரி நவ ௨௮ நிலைகள் மூர்த்திகள் வராக நரசிம்க போல /ஸ்வயம் வ்யக்தம்..தெய்வம்/ மானுஷம்/சுக்லம் /மூன்று  அக்னி ஆராதனம் /மூன்று தத்வம் சத்வம் ரஜஸ் தமஸ் / படைத்தல் அளித்தால் காத்தல்/மூன்று அசித் சித் ஈச்பரன் /பிரம விஷ்ணு ருத்ரன்/ அருள் கண் இரண்டு கண்கள்/காட்ஷி கொடுத்தார் தண்ணீர் கொடுத்தால் நாரதர் பெயர்..உலகமே பகவான் /எல்லாம் பிரமம் / இதம் சர்வம் கல் பிரமம் -உபநிஷத் /அனைவரும் உடலாக இருக்கிறோம்/நினைக்க நினைக்க பிரமம் எங்கும் உள்ளது புரியும்/7

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading