ஜ்ஞான வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத் ஸூந்தர தேசிகம் |
த்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத குரும் பஜே ||
முன்னிலும் பின் அழகிய பெருமாள் நம் பெருமாள் திரு நாமம் இவருக்கு சாத்தப்பட்டது –
வடதிசை முரட்டு சமஸ்க்ருதம் ஆர்யா பூமி -ஆகவே பின் அழகைக் காட்டி எழுந்து அருளி உள்ளார் -ஆறாயிரப்படி குரு பரம்பரையா பிரபாவம் -அருளியவர் உடையவர் பிரபாவம் பூர்ணமாகவும் —நம்பிள்ளை சரித்திரம் வரை – அதில் உண்டு-நம்பிள்ளையை விட மூத்தவர்
எம்பெருமானார் காலத்திலேயே இருந்து இருக்கலாம் -நேரே சாஷாத்காரித்தும்
இருந்தவர்கள் இடம் கேட்டும் அருளிச் செய்தவை –
கலி த்வம்ஸி தயா பாத்ரம் பஸ்ஸாத் ஸூந்தர ஸம்ஜ்ஜிகம்
அஞ்ஞாத ஞாபகம் பும்ஸாம் அஸ்மத் தேஸிகம் ஆஸ்ரயே
திருக்கலிகன்றி தாஸராம் நம்பிள்ளையின் கருணைக்குப் பாத்திரமாய் இருப்பவராய்
மனிதர்களுக்கு அறியாதன அறிவிப்பவராய்
எம் ஆச்சார்யரான-பஸ்ஸாத் ஸூந்தர –பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன்
ஸடாரி முக நிஸ் ஸ்ருத த்ரவிட வேத நிர்வாஹகம்
ஸ்வ பக்த ஜன ரக்ஷண க்ஷண க்ருபாத்த ஸத் வீக்ஷணம்
ஸ்வ ஸூக்தி ரஸந உஜ்ஜ்வலத் குரு பரம்பரா வைபவம்
யதீந்த்ர பத சேகரம் தம் அபாரங்க ரம்யம் பஜே–(க்ருபாலஸத் வீக்ஷணம் -பாட பேதம்)
நம்மாழ்வாரின் திருவாலி இருந்து தோன்றிய தமிழ் வேதத்துக்கு நிர்வாஹகராய்
தம் பக்தி ஜனங்களை ரக்ஷிக்கும் வல்லமையுள்ள கருணா கடாக்ஷம் உள்ளவராய்
தம் திருவாக்காலே விளங்கா நிற்கும் குரு பரம்பரா வைபவத்தை யுடையவராய்
யதிராஜரின் திருவடிகளைத் தலையிலே சூடியவரான
அபாரங்க ரம்யம் பஜே-பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன் –
துலா சதபிஷக் ஜாதம் ஸ்ரீ லோகார்ய பத ஆஸ்ரிதம்
ஞானாதி பூஷணம் வந்தே பஸ்ஸாத் ஸூந்தர தேசிகம்
பஸ்ஸாத் ஸூந்தர தேசிகர் -பின்பு அழகராம் பெருமாள் ஜீயர்
துலா -ஐப்பசி சதயம் நக்ஷத்ரம் திரு அவதாரம்-(பேயாழ்வார் திருவவதார திரு நக்ஷத்ரம்)
நம்பிள்ளை -லோகாச்சார்யார் திருவடி பற்றி -பதாஸ்ரியம்
ஞானாதி பூஷணம் வந்தே
பாவோ நான்யாத்ர கச்சதி -கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே போல் நிஷ்டை இவருக்கும்-நம்பிள்ளை திருமேனியில் ஒன்றிலே ஆழ்ந்து பரிவுடன் இருந்தவர் )
——
வார்த்தை -397-
நம்பிள்ளை ஸ்ரீ பாதத்திலே சேவித்து இருப்பார் இரண்டு ஸ்ரீ வைஷ்ணவர்கள்
அந்யோந்யம் பிணங்கி ஒருவரை ஒருவர் மடி பிடித்துக் கொண்டு செல்ல –
அதுக்கடி என்ன -என்று பிள்ளை கேட்டருள (பெரியவாச்சான் பிள்ளை )
இத்தனை நாளாக சேவித்து நின்றதில் தேங்கின அர்த்தம் இது என்று காட்ட வந்தார்கள் -என்ன(பரிஹாஸமாக உரைத்து சிஷிக்க அதற்கு நம்பிள்ளை) –கோ மூத்தவன் (நியாய அரசன்)பாடே போகாதே நம் பாடே வந்தார்கள் – என்று அருளினார் –
————————————————————
வார்த்தை -398-
சர்ப்பாஸ் யகதமான மண்டூகத்தினுடைய ஆர்த்த நாதத்தைக் கேட்டு ஆழ்வான் மோஹித்தார் என்று நம் பிள்ளை அருளிச் செய்தார் -இத்தால்
பர துக்க அஸ ஹிஷ்ணுத்வமும் —பர ஸம்ருத்த்யேக ப்ரயோஜனத்வமும் வைஷ்ணவனுக்கு ஸ்வபாவம் -என்றபடி –
——————————————————————-
வார்த்தை -399-
பிள்ளை திருவழுதி நாட்டு அரையருக்கு அந்திம தசையிலே ஒரு சோகம் உண்டாயிற்று –
சுற்றில் இருந்த முதலிகள் அந்யோந்யம் முகம் பார்த்தார்கள் –
இவர் அத்தை திரு உள்ளத்திலே கோலி -வாரி கோள் முதலிகாள் -சம்சாரிகள் இழவுக்கு நொந்தோம் காணும் கோள் –அவர்களில் நமக்கு அல்பம் ஆய்த்து வாசி -எங்கனே என்னில் –
நாம் இடுவது ஒரு தண்டன் – பண்ணுவது ஒரு பிரபத்தி (அத்ர த்வயம் ஸக்ருத் உச்சாரம்)-
இழப்பது சம்சாரம் -பெறுவது பரமபதம் –
இத்தை அறியாதே அத பதிக்கிறார்களே என்று கிலேசம் ஆயிற்று காணும் கோள்–என்ன –
இவர்களும் க்ருதார்தர் ஆனார்கள்
——————————————————————-
வார்த்தை –400-
வீர சுந்தர ப்ரஹ்ம ராயன் காலத்திலே பட்டர் திருக்கோட்டியூரிலே எழுந்து
அருளி இருக்கச் செய்தே –
வீர சுந்தர பட்டான் என்று பிள்ளை பிள்ளை யாழ்வான்-ஆண்டாளுக்கு விண்ணப்பம் செய்ய -போர க்லேசித்தார் –
பட்டரை கோயிலில் இருக்கவும் கூட ஒண்ணாதபடி பண்ணின இவன் பட்டான் என்றதுக்கு இது வென் -என்ன –
பிள்ளையோடு உண்டான விரோதத்தாலே அத்ருஷ்டத்தை இழந்தான் –
சில நாள் இருந்து த்ருஷ்ட சுகமாகிலும் அனுபவிக்கிறானோ என்று இருந்தோம் –
அதுவும் கூட இழந்தான் ஆகாதே -என்று க்லேசமாயிற்று -என்று அருளிச் செய்தார் –
(ஆழ்வான் திருவடிகளிலே ஸம்பந்தமுடைய ஒரு ஆத்மா இப்படித் தட்டுப் பட்டுப் போவதே -என்று இத்தை நினைத்து என் வயிறு எரிகிறபடி உங்கள் ஒருவருக்கும் தெரிகிறதில்லை என்று ஆண்டாள் அறியச் செய்தாள் –குற்றம் செய்தவர்கள் பக்கலிலும் அகப்பட ஹித பரராய் தயா -ஆர்த்த்ர-சித்தராய் போருவது ஆழ்வான் சம்பந்தமுடையவர்களுக்கே உள்ளதொன்று இறே)
—————————————————————
வார்த்தை -401-
நம்பிள்ளை திரு உள்ளத்திலே அபேஷை நடக்கும்படியையும் –
அநபேஷை நடக்கும்படியையும் –
வடக்குத் திருவீதிப் பிள்ளை அருளிச் செய்யும் படி –
அபேஷை நடப்பது -அஹங்கார நிரசநத்திலும் -அவிவேக நிரசநத்திலும் –
அநபேஷை நடப்பது -ஆத்ம ஜ்ஞானத்திலும் -ஆத்ம லாபத்திலும் -பகவல் லாபத்திலும் –
ஆத்ம ஜ்ஞானம் ஆவது -ஜ்ஞாநானந்த சாஷாத்காரம் –
ஆத்ம லாபம் ஆவது -தத் பிரதிபந்தக நிவ்ருத்தி –
பகவல் லாபமாவது -ஸ்வ யத்ன சாத்யமுமாய் -ஸ்வ கதமுமான பகவத் அநுபவத்தை –
(இவற்றை வேண்டாமே என்பது -ஞான ஆனந்தம் மட்டுமே இல்லாமல் சேஷத்வ பாரதந்தர்ய ஞானம் வேண்டுமே -இவை அந்தரங்க நிரூபணம்-அடியேன் உள்ளான் -கூரத்தாழ்வான் திருக்கோட்டியூர் நம்பி இடம் சென்று பெற்ற நிதி -கைவல்யத்தில் பிடித்தல் கூடாதே -ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் -பெரியாழ்வார் -பகவல் லாபம் ஸ்வார்த்த அனுபவ ஸூப்ரயோஜனத்துக்காகக் கூடாதே -)
———————————————————————
வார்த்தை -402-
எம்பெருமானார் எம்பாரை நோக்கி -ஸ்ரீ கோவிந்த பெருமாளே –
எம்பெருமான் எளியன் என்று பலபடியாலும் சொன்னோமே என்ன –
இப்படி எளியனாகில் நமக்கு என் -என்று எல்லோரும் உபேஷிகைக்கு உடலாம் இத்தனை யன்றோ -என்ன –
இப்படி இருக்கிற அவனைக் காண வேண்டும் என்னும் ஆசை உள்ளது
உமக்கு ஒருவருக்கும் அன்றோ -என்று அருளினார் –
——————————————————————-
வார்த்தை -403-
எளிவரும் இயல்வினன் நிலை வரம்பில பல பிறப்பாய் ஒளி வரும் -திருவாய்மொழி -1-3-2- என்கிற இடம் அருளிச் செய்யா நிற்க –
இப்படி குணவானாய் இருக்கிற அவனை சாஷாத்கரிக்க விரகு இல்லையோ என்று
மணக்கால் நம்பியை ஆளவந்தார் கேட்டருள –
எனக்கு சேஷத்வ அனுசந்தானமே அமையும் நீர் குருகை காவல் அப்பன் பாடே செல்லும் என்ன –
இவரும் அங்கே செல்ல –
அவரும் காலம் குறித்து விட -இவரும் திருவனந்த புரத்துக்கு எழுந்து அருளி –
அங்கே அக்காலத்தை நினைத்து -அப்பன் பக்கல் ஏறப் போக ஒரு புஷ்பகம் பெற்றிலோமே – என்று க்லேசிக்க –
பெருமாளும் -நாம் செய்தபடி காணும் இது -சேஷத்வ ஜ்ஞானமே அமையும் என்று அருளினார் –
(சேஷத்வ பரதந்த்ர ஞானமே அங்கு பரார்த்த கைங்கர்யம் பெற்றுத் தரும் -யோகத்தால் பெறுவது ஸ்வார்த்த கைங்கர்யமாகவே இருக்கும்)
—————————————————————-
வார்த்தை -404-
நம்பிள்ளையை ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் –
தஞ்சமாய் இருப்பதொரு வார்த்தை அருளிச் செய்ய வேணும் -என்ன –
முமுஷுவான அதிகாரிக்கு அனுசந்தேயம் -ஸ்வரூபம் -(அசித்வத்)பரதந்த்ரம் –
விரோதி -பிரபலம் (கர்மா வாசனா ப்ரக்ருதி சம்சாரம்)– புருஷார்த்தம்(பரார்த்த அனுபவ பரார்த்த கைங்கர்யம்) -அந்ய சாத்தியமன்று –
பரிஹார்யம் தேவதாந்திர பஜனமும் -பாகவத அபசாரமும் ஆகிற படு குழிகள் -என்று அருளினார் –
———————————————————————
வார்த்தை -405-
துறை அறிந்து இழிந்து
முகம் அறிந்து கோத்து
விலை அறிந்து பரிமாறி
நினைவு அறிந்து
அடிமை செய்ய வேண்டும் –
(அநந்த வேதங்கள் -அசாரம் –அல்ப சாரம் -சாரம் -சாரதரம் -சாரதமம் -தத்வ ரஹஸ்ய பத த்ரவ்யம் -அர்த்த பஞ்சகம் -நவவித சம்பந்தம் -முத்தான அர்த்தங்களை முகம் அறிந்து கோத்து- -பகவல் முக விலாஸமே பரம பிரயோஜனம்-பகவத் அனுபவ ப்ரீதிகாரித கைங்கர்யம் -ஸ்வார்த்தம் இல்லாமல் ஸூவ பிரயோஜனம் இல்லாமல் -பரார்த்த -பர பிரயோஜன-ததீய நிஷ்டை -)
—————————————————————
வார்த்தை -406-
ஜ்ஞானத்துக்கு இலக்கு -ஆச்சார்ய குணம் –
அஜ்ஞானத்துக்கு இலக்கு ஆச்சார்ய தோஷம் –
சக்திக்கு இலக்கு ஆச்சார்ய கைங்கர்யம் –
அசக்திக்கு இலக்கு -நிஷித்த அனுஷ்டானம் –
(ஞானமும் அஞ்ஞானமும் சக்தியும் அசக்தியும் -குண சதுஷ்டயம்-அவனுக்கும்-ஈஸ்வரனுக்கும்- உண்டு -சூரணை -297-அவனுடைய ஞானத்துக்கு இலக்கு இவனுடைய குணம் –-அஞ்ஞானத்துக்கு இலக்கு இவனுடைய தோஷம் –-சக்திக்கு இலக்கு இவனுடைய ரஷணம் –அசக்திக்கு இலக்கு பரித்யாகம் –சூரணை -298-இவனுடைய ஞானத்துக்கு இலக்கு ஆசார்ய குணம் –அஞ்ஞானத்துக்கு இலக்கு ஆச்சார்ய தோஷம் –சக்திக்கு இலக்கு ஆச்சர்ய கைங்கர்யம் –அசக்திக்கு இலக்கு நிஷித்த அனுஷ்டானம் —சூரணை -299-)
———————————————————
வார்த்தை -407-
நம்பிள்ளை திருவெள்ளறை தேன் கொள் சோலை தாஸர் மாளிகையிலே எழுந்தருளி –
அவருடைய திருமாளிகையிலேயே ஐஸ்வர்யத்தைக் கண்டு ப்ரீதராய் இருக்க –
இதுக்கடி என் என்று எதிராஜ தாசர் பிள்ளையைக் கேட்க –
நம்பிள்ளை –
இஸ் சம்ஸார ஸுகம் தான் மூன்று படியாய் இருக்கும் –
இஸ் ஸுகத்தை தனக்கு என்றும் –
தனக்கும் எம்பெருமானுக்கும் என்றும் –
எம்பெருமானுக்கே என்றும் -நினைக்கை காண் –
தனக்கு என்கை -நரக அநுபவ சத்ருசம் –
தனக்கும் எம்பெருமானுக்கும் என்கை -ஸ்வர்க்க அநுபவ சத்ருசம் –
எம்பெருமானுக்கே என்கை -பரமபத அநுபவ சத்ருசம் –
————————————————
வார்த்தை -408-
ஸ்வா பாவிகமான சேஷத்வத்தை விட்டு –
ஔ பாதிகமான பௌ ருஷத்தை ஏறிட்டுக் கொள்ளுகிற இத்தனை இறே
என்று பெரியவாச்சான் பிள்ளை –
(கர்மத்தினால் ஆணாகப் பிறந்து இருக்க இயற்கையான ஸ்த்ரீத்வத்தை -மணி வல்லிப்பேச்சு வந்தேறி இல்லையே -ஆழ்வார் 73 பதிகம் ஆண் தன்மை ஏறிட்டுக் கொண்டார்)
—————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply