ஜ்ஞான வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத் ஸூந்தர தேசிகம் |
த்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத குரும் பஜே ||
முன்னிலும் பின் அழகிய பெருமாள் நம் பெருமாள் திரு நாமம் இவருக்கு சாத்தப்பட்டது –
வடதிசை முரட்டு சமஸ்க்ருதம் ஆர்யா பூமி -ஆகவே பின் அழகைக் காட்டி எழுந்து அருளி உள்ளார் -ஆறாயிரப்படி குரு பரம்பரையா பிரபாவம் -அருளியவர் உடையவர் பிரபாவம் பூர்ணமாகவும் —நம்பிள்ளை சரித்திரம் வரை – அதில் உண்டு-நம்பிள்ளையை விட மூத்தவர்
எம்பெருமானார் காலத்திலேயே இருந்து இருக்கலாம் -நேரே சாஷாத்காரித்தும்
இருந்தவர்கள் இடம் கேட்டும் அருளிச் செய்தவை –
கலி த்வம்ஸி தயா பாத்ரம் பஸ்ஸாத் ஸூந்தர ஸம்ஜ்ஜிகம்
அஞ்ஞாத ஞாபகம் பும்ஸாம் அஸ்மத் தேஸிகம் ஆஸ்ரயே
திருக்கலிகன்றி தாஸராம் நம்பிள்ளையின் கருணைக்குப் பாத்திரமாய் இருப்பவராய்
மனிதர்களுக்கு அறியாதன அறிவிப்பவராய்
எம் ஆச்சார்யரான-பஸ்ஸாத் ஸூந்தர –பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன்
ஸடாரி முக நிஸ் ஸ்ருத த்ரவிட வேத நிர்வாஹகம்
ஸ்வ பக்த ஜன ரக்ஷண க்ஷண க்ருபாத்த ஸத் வீக்ஷணம்
ஸ்வ ஸூக்தி ரஸந உஜ்ஜ்வலத் குரு பரம்பரா வைபவம்
யதீந்த்ர பத சேகரம் தம் அபாரங்க ரம்யம் பஜே–(க்ருபாலஸத் வீக்ஷணம் -பாட பேதம்)
நம்மாழ்வாரின் திருவாலி இருந்து தோன்றிய தமிழ் வேதத்துக்கு நிர்வாஹகராய்
தம் பக்தி ஜனங்களை ரக்ஷிக்கும் வல்லமையுள்ள கருணா கடாக்ஷம் உள்ளவராய்
தம் திருவாக்காலே விளங்கா நிற்கும் குரு பரம்பரா வைபவத்தை யுடையவராய்
யதிராஜரின் திருவடிகளைத் தலையிலே சூடியவரான
அபாரங்க ரம்யம் பஜே-பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன் –
துலா சதபிஷக் ஜாதம் ஸ்ரீ லோகார்ய பத ஆஸ்ரிதம்
ஞானாதி பூஷணம் வந்தே பஸ்ஸாத் ஸூந்தர தேசிகம்
பஸ்ஸாத் ஸூந்தர தேசிகர் -பின்பு அழகராம் பெருமாள் ஜீயர்
துலா -ஐப்பசி சதயம் நக்ஷத்ரம் திரு அவதாரம்-(பேயாழ்வார் திருவவதார திரு நக்ஷத்ரம்)
நம்பிள்ளை -லோகாச்சார்யார் திருவடி பற்றி -பதாஸ்ரியம்
ஞானாதி பூஷணம் வந்தே
பாவோ நான்யாத்ர கச்சதி -கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே போல் நிஷ்டை இவருக்கும்-நம்பிள்ளை திருமேனியில் ஒன்றிலே ஆழ்ந்து பரிவுடன் இருந்தவர் )
——
வார்த்தை -385-
அனந்தாழ்வான் மூன்று சம்வத்சரமாக வாதமாய்க் (முட்டு வலியாய்)கிடக்க –
ஸ்ரீ பாதத்துக்கு பரிவராய் இருப்பவர் சிலர் –
திருவேங்கடமுடையான் செய்து அருளுகிறது என் – என்று வெறுக்க –
திருவேங்கடமுடையான் ஹிதம் அல்லது செய்யான் -என்று அருளிச் செய்தார் –
(சீறி அருளாய் -சீற்றமும் அருளின் கார்யமே)
——————————————————
வார்த்தை -386-
அனந்தாழ்வான் திரு நந்தவனத்துக்கு மண் சுமவா நிற்க –
பிள்ளைகளிலே ஒருவன் சென்று -கூடையை வாங்க –
நான் இத்தை விடில் இளைப்பன் -நீ இத்தைத் தொடில் இளைப்புதி -என்ற அளவிலே –
இளைப்பாகாது -என்று பின்னையும் வாங்க –
ஆனால் நான் ஜீவிக்கிற ஜீவனத்தை வாங்க வேணுமோ –
நீயும் வேணுமாகில் ஒரு கூடையை வாங்கி சுமக்க மாட்டாயோ -என்று அருளிச் செய்தார் –
—————————————————————
வார்த்தை -387-
அனந்தாழ்வான் திரு நந்தவனத்திலே திருமண்டபத்திலே இருந்து திருமாலை கட்டா நிற்க –
திருவேங்கடமுடையான் அருள் பாடிட –
இவரும் பேசாதே இருந்து திருமாலையும் கட்டிக் கொண்டு பின்பு கோயிலுக்குள் புக்கவாறே நான் அழைக்க வராவிட்டது என் -என்று திரு உள்ளமாக –
தேவரீரைக் கொண்டு கார்யம் என் கருமுகை மொட்டு வெடியா நிற்க -என்ன –
ஆனால் -நாம் உம்மை இங்கே நின்று போகச் சொன்னோமாகில் செய்வது என் -என்ன –
பரன் சென்று சேர் திருவேம்கடமாமலை அன்றோ –
தேவரீர் அன்றோ வந்தேறிகள் -இவ்விடம் தேவரீரை ஆஸ்ரயித்தவர்களது அன்றோ -என்றார் –
(அடியார் நிலாகின்ற வைகுந்தம் அன்றோ திருமலை)
—————————————————————————————–
வார்த்தை -388-
அனந்தாழ்வான் திருபடலிகை யிலே திருமாலையைச் சேர்த்துக் கொண்டு உள்ளே புக்கு –
கைப் புடையிலே நின்று(த்வார பாலகர்கள் இருக்குமிடம்) அருளப்பாடு என்றவாறே
திருத் திரையை நீக்கித் திருமாலையை நீட்டி கையை மறித்துப் போருவர் –
(நைந்து சோர்ந்து கை மறித்து நின்றனரே -பெரியாழ்வார் திருமொழி -3-6-6-
தனது கையில் சக்தி இல்லை -மாலை கட்டும் கைங்கர்யம் தானே செய்வித்துக் கொண்டான் என்றபடி)
—————————————————————-
வார்த்தை -389-
பீஷ்மர் ஞாநாதிகராய் யிருக்க –
பகவத் பரிக்ருஹீத பஷ பிரதிபஷத்தில் நின்று கிருஷ்ணன் திருமேனியில் அகப்பட அம்பு படும்படியான செயல் கூடிற்று –
ராஜக்களை பணிக்கன் சிரமம் செய்விக்கும் போது நினைத்த இடத்திலே தட்டுகை ப்ராப்தமாம் போலே –ஏவம் விதரும் சர்வேஸ்வரனுடைய லீலா ரஸாதீந சங்கல்ப அந்தர்கதர் –
——————————————————————–
வார்த்தை -390-
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் -ஐஸ்வர்யார்த்தியோ -அநந்ய பிரயோஜநனோ -என்னில்
அஸ்மாதாதிகள் பிரபன்னராய் வைத்தே சரீர அவசாநத்தளவும்
ஸ்த்ரி அன்ன பாநாதிகளோடே இருக்கிறாப் போலே –
அநந்ய ப்ரயோஜநனாயே அதிகார அவசாநத்தளவும் ஐஸ்வர்ய அனுபவம் பண்ணுகிறான்
(செல்வ விபீடணன் -அவனுக்காகவே தென் திசை நோக்கிப் பள்ளி கொண்டருளுகிறான்)
————————————————————-
வார்த்தை -391–
முதலியாண்டான் திருக் குமாரர் கந்தாடை யாண்டான் பட்டருக்கு அருளிச் செய்த வார்த்தை எம்பெருமான் சிலரைப் போம் என்னும் –
சிலரை வா வென்னும் –
சிலரைப் போது என்னும் –
பிரயோஜனந்தர நிஷ்டரை பலத்தைக் கொடுத்து போ என்னும் –
கர்ம ஜ்ஞான நிஷ்டரை கர்மம் கழிந்தவாறே வா வென்னும் —
அநந்ய பிரயோஜனரை போது என்னும் -(போதுவீர் போதுமினோ -உடனே வாருங்கோள் என்று கை நீட்டி வரவேற்ப்பான்)
(எழுவார் விடை கொள்வார் ஈன் துழாயானை
வழுவா வகை நினைந்து வைகல் -தொழுவார்
வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே வானோர்
மனச் சுடரை தூண்டும் மலை–26-)
இந்த தேசத்தில் ஒரு அநந்ய பிரயோஜனரை உண்டு என்று இருந்தோமோ –
உண்டாகில் அங்கே கண்டு கொள்கிறோம் -எங்கனே என்னில் –
பிராப்ய பிராபகங்கள் இரண்டும் எம்பெருமான் என்றால் விஸ்வசிப்பார் இல்லை –
விஸ்வசித்தால் க்ருதஞ்ஜராய் இருப்பார் இல்லை –
க்ருதஞ்ஜராய் பெற்றதாகில் பகவத் கைங்கர்யம் விரசமாய் இருக்கும் –
இவை மூன்றும் (விஸ்வாசம் -க்ருதஞ்ஜை -ருசி)கூடிற்று ஆகிலும் -ராக த்வேஷ உபஹதர் ஆகையாலே பாகவத கைங்கர்யத்துக்கு இசையார் –
அதுவும் கூடிற்றாகில் ஆசார்ய உடைய தேக யாத்ரையைக் கண்டு நெகிழ நினைப்பர்கள் –
இதுவும் கூடிற்றாகில் (பகவத் ப்ரஸாதத்தாலே பெற்றோம் என்றும் நினையாமல்)தங்களை ஸூத்தராக நினைப்பர்கள் –
ஆகையால் பகவத் குணம் சொல்லுகைக்கும் கேட்கைக்கும் இவ்விடத்தில் ஆள் இல்லை காணும் –
சரஸ்வதி பண்டாரத்தில் எழுந்து அருளி இருந்து பணித்த வார்த்தை –
——————————————————
வார்த்தை -392-
திருமாலை யாண்டான் அருளிச் செய்யும்படி –
நாம் பகவத் விஷயம் சொல்லுகிறோம் என்றால் சம்சாரத்தில் ஆள் இல்லை -அது எங்கனே என்னில் –
ஒரு பாக்கைப் புதைத்து அது உருவாந்தனையும் செல்லத் -தலையாலே எரு சுமந்து ரஷித்து
-அதினருகே கூரை கட்டி -பதினாறாட்டைக் காலம் காத்துக் கிடந்தால்-கடைவழி ஒரு கொட்டைப் பாக்காயிற்று கிடைப்பது –
அது போல் அன்றிக்கே இழக்கிறது ஹேயமான சம்சாரத்தை –
பெறுகிறது விலஷணமான பரம பதத்தை –
இதுக்கு உடலாக ஒரு வார்த்தை அருளிச் செய்த ஆசார்யன் திருவடிகளிலே ஒருகாலும்
க்ருதஞ்ஜர் ஆகாத சம்சாரிகளுக்கு நாம் எத்தைச் சொல்வது -என்று வெறுத்தார் –
—————————————————————–
வார்த்தை -393-
அவதாரம் இருக்கும்படி என் -என்று நம்பிள்ளையை முதலிகள் கேட்க –
மெய் வெளுத்து நாக்கு வற்றி இருக்கும் -என்ன –
அது என் என்ன –
அதிகாரி பெறாமையாலே மெய் வெளுத்து இருக்கும்
பெற்றால் பிரயோஜனாந்த பரர் ஆகையாலே மயிர் பட்ட சோறு என்று நாக்கு
வற்றி இருக்கும் -என்று அருளிச் செய்தார் –
(வாஸூ தேவம் ஸர்வம் இதி ச மஹாத்மா ஸூ துர்லபம்-அர்ஜுனனும் ப்ரயோஜனாந்த பரனாகவே இருந்து போந்தான்)
(சூழ்ந்து அடியார் வேண்டினக்கால் தோன்றாது விட்டாலும்
வாழ்ந்திடுவர் பின்னும் தாம் வாய் திறவாதார் -சூழ்ந்து எங்கும்
வாள் வரைகள் போலரக்கன் வன் தலைகள் தாமிடிய
தாள் வரை வில்லேந்தினார் தாம்–பெரிய திருவந்தாதி-17-எதிர் சூழல் புக்கு (2-7) என்னும்படியே இவர்களை சூழ்ந்து-அடியார் வேணும் என்று அபேக்ஷித்தால் இவர்கள் தோன்றா விட்டாலும் இவர்களுக்கு உறுப்பாகப் பெற்றோம் இறே என்று வாழ்ந்து இருப்பதும் செய்வர் –)
(அங்கு மிங்கும் வானவர் தானவர் யாவரும்,
எங்கும் இனையையென் றுன்னை அறியகிலா தலற்றி,
அங்கம் சேரும் பூமகள் மண்மகள் ஆய்மகள்,
சங்கு சக்கரக் கையவ னென்பர் சரணமே-8-3-1-.)
————————————————————-
வார்த்தை -394-
ஆளவந்தார் ஒரு நாள் பெருமாளைத் திருவடி தொழ வென்று உள்ளே புகுரா நிற்க
ஒருத்தி அநந்ய பிரயோஜனரைப் போலே கண்ணும் கண்ண நீருமாய் -கழுத்தும் கப்படுமுமாய் -(சேலை யுமாய்) –பிரதஷணம் பண்ணா நிற்க -உள்ளுப் புகுராதே புறம்பே நின்றருளி –பிரயோஜனாந்த பரை யானவள் புறப்பட்டாளோ -என்று கேட்டருள –
இதுக்கு நிதானம் என் -என்று விண்ணப்பம் செய்ய –
பெருமாள் சன்னதியே யாகிலும்-பிரயோஜனந்த பரரோட்டை சேர்த்திக்கு -அதிகாரி விரோதம் பிறந்து -பல விரோதமும் பிறக்கும் காண் -என்று அருளிச் செய்தார் –
———————————————————
வார்த்தை -395-
1-தேஹாத்ம விவேகம் -2-பரமாத்ம விவேகம் -3-த்ரி மூர்த்தி சாம்ய விவேகம் –
4-புருஷார்த்த அபுருஷார்த்த விவேகம் -5-விரோதி அவிரோதி விவேகம் –
6-உபாய அநுபாய விவேகம் -7-வைஷ்ணவ அவைஷ்ணவ விவேகம் -8-துஷ்கர ஸூகர விவேகம் -9-ஆசார அநாசார விவேகம் -10-சிஷ்ய ஆச்சார்ய விவேகம் –இவைகள் ஒருவனுக்கு அவஸ்யம் ஜ்ஞாதவ்யங்கள் –
(ஸூகரம் அருளிச் செய்த ஸூகர உபாயம் -வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்து தூ மலர் தூவித் தொழுது)
———————————————————-
வார்த்தை -396-
முமுஷுவாய் பிரபன்னனான அதிகாரிக்கு ஜ்ஞாதவ்யமான அர்த்தம் -நாலு –
1-ப்ராப்ய விஷயமும் -2-பிராபக விஷயமும் -3-ஆச்சார்ய விஷயமும் -4-போஜன விஷயமும்
ப்ராப்ய விஷயம் ஆவது -சரீர சம்பந்தம் அற்று அர்ச்சிராதி மார்க்கத்திலே போய்
பரம பதத்திலே சென்று -அங்குண்டான பகவத் அனுபவ ப்ரீதியாலே பிறக்கும் கைங்கர்யம் –
இதில் அத்யாவச்யம் (யதாத்ம்யம்)ஆவது -கைங்கர்யத்தை ஒழிந்த தர்மார்த்த காமங்களிலும் –மோஷத்தில் கைவல்யம் முதலாக (பகவல் லாபார்த்தத்திலும் ஸ்வார்த்த ஸூ அனுபவ கைங்கர்யங்களும் த்யாஜ்யம்)உள்ள புருஷார்தங்களிலும் கால் தாழாதே இக் கைங்கர்யமே பரம ப்ராப்யம் என்று இருக்கை –
பிராபக விஷயமாவது -சௌலப்யாதி குண விசிஷ்டனாய் -விக்ரஹ விசிஷ்டனமுமாய் உள்ள ஈஸ்வரன் –
(திருக்கையில் பிடித்த திவ்ய ஆயுதங்களும் வைத்து அஞ்சேல் என்ற கையும் கவித்த முடியும் முகமும் முறுவலும் ஆசன பத்மத்திலே அழுத்தின திருவடிகளுமாய் நிற்கிற நிலையே நமக்கு தஞ்சம்.-நம்பெருமாளின் நான்கு குணங்கள்-குற்றம் கண்டு வெருவாமைக்கு வாத்சல்யம்.-கார்யம் செய்யும் என்று துணிகைக்கு ஸ்வாமித்வம்.-ஸ்வாமித்வம் கண்டு அகலாமைக்கு சௌசீல்யம்.-கண்டு பற்றுகைக்கு சௌலப்யம்.-இவை எல்லாம் நமக்கு நம்பெருமாள் பக்கலிலே காணலாம்)
இதில் அத்யாவசியம் (யதாத்ம்யம்)ஆவது -பிராட்டி புருஷகாரமாக அவனே
உபாயம் என்று அறுதி இட்டு -உபாயாந்தரங்களான கர்ம ஜ்ஞான பக்திகளில் கால் தாழாமல் இருக்கை –
ஆசார்ய விஷயமாவது -இவ் வுபாய ஸ்வீகாரம் பண்ணினவன் சரீர அவசாநத்து அளவும் –
மநோ வாக் காயங்களினால் அநுகூலித்து வர்த்திக்கை –
அதாவது –
உகந்து அருளின நிலங்களிலும் -அர்ச்சாவதார ப்ரேமம் உடைய
ஸ்ரீ வைஷ்ணவர்கள் பக்கலிலும் -த்ரிவித கரணத்தாலும் ப்ராதிகூல்யம் தவிருகை –
இதில் அத்யாவச்யம் (யதாத்ம்யம்)ஆவது -இப்படி வர்த்திக்கும் இடத்தில் -க்யாதி லாப பூஜைகளைப் பற்றவாதல் -பகவத் ப்ராப்திக்கு சாதனம் என்றாதல் -செய்யாதே ஸ்வயம் பிரயோஜனம் –என்று இருக்கை –
போஜன விஷயம் ஆவது -ந்யாய ஆர்ஜித த்ரவ்யத்தாலே தாஹம் போம் அளவே
என்று ஜீவிக்கை -(வாழ்வதற்காகவே நியாயமாக சம்பாதித்த செல்வம் கொண்டே உண்ணுதல் -உண்ணுவதற்காக வாழக்கூடாதே)
இதில் அத்யாவச்யம் (யதாத்ம்யம்)ஆவது -அநுகூலரை நெருக்கி யாதல் -பிரதிகூலரை
அபேஷித்தது ஆதல் -அமுதுபடி த்ரவ்யத்தை யாதல் ஜீவனம் ஆக்காதே
உடம்பை வருத்தி யாதல் -அயாசிதமாக வாதல் வந்த த்ரவ்யதைக் கொண்டு
தேக யாத்ரை நடத்துகை –
——————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply