ஸ்ரீ வசன பூஷணம்–134/134/135/136/137/138/139/140/141..

சூரணை -134
பிரபத்தி உபாயத்துக்கு
இக் குற்றங்கள் ஒன்றும் இல்லை –
இப்படி பிராபகாந்தரத்துக்கு அநேகம் குற்றங்கள் பிரதி பாதித்தீர் –
பிரபத்தி உபாயத்துக்கு ஒரு குற்றமும் தானில்லையோ என்ன -அருளி செய்கிறார் –
இக் குற்றங்கள் -என்று -ஸ்வரூப விரோதம் முதலாக துஷ்கரத்வ பர்யந்தமாக –
சொன்னவை எல்லாவற்றையும் பராமர்சிக்கிறது —
ஒன்றும் இல்லை -என்றது -ஒரு தோஷமும் இதன் பக்கல் இல்லை என்றபடி –
இக் குற்றங்கள் ஒன்றும் இல்லை என்கையாலே -மற்று ஒரு குற்றம் உண்டு என்னும் இடம் –
தோற்றுகிறது-அதாவது -வஸ்துத உபாயத்வம் தனக்கு இன்றிக்கே இருக்க செய்தே -ஆபாத ப்ரதீதியிலே
உபாய பிரபத்திய அர்ஹமாம் படி இருக்கை-
சூரணை -135

ஆத்ம யாதாத்ம்ய ஞான கார்யம் ஆகையாலே –
ஸ்வரூபதுக்கு உசிதமாய் –
சிற்ற வேண்டா -என்கிறபடியே –
நிவ்ருத்தி சாத்யம் ஆகையாலே –
சூகரமுமாய் இருக்கும் –
இக் குற்றங்கள் இதுக்கு இல்லை என்னும் அத்தை பிரகாசிபிகைக்காக –
இதனுடைய ஸ்வரூப உசிதத்வ சூகரத்வங்களை-அருளி செய்கிறார் –
இப்பிரபத்தி -ஆத்ம யாதாத்ம்ய ஞான கார்யம் ஆகையாவது -திரு மந்த்ரத்தில் மத்யம பதத்தில் –
சொல்லுகிறபடியே ஆத்மாவினுடைய யதாவஸ்தித வேஷமான பகவத் அத்யந்த பாரதந்த்ர்யத்தை
உணருகையாலே வந்ததே இருக்கை –
ஸ்வரூபதுக்கு உசிதம் ஆகையாவது -அந்த பாரதந்த்ர்யம் ஆகிறது ஸ்வரூபதுக்கு அநு ரூபமாய் இருக்கை –
சிற்ற வேண்டா -என்கிறது -சிற்றுதல்-சிதறுதலாய்-பரக்க வேண்டா என்கை -அதாவது -ஒரு
வியாபாரமும் பண்ண வேண்டா என்றபடி –
நிவ்ருத்தி சாத்யம் ஆகையாலே சூகரமுமாய் இருக்கும் -என்றது -பகவத் பிரவ்ருத்தி
விரோதி ஸ்வ பிரவ்ருத்தி நிவ்ருத்தி பிரபத்தி -என்கிறபடியே -ஸ்வ பிரவ்ருத்தி நிவ்ருத்தியாலே
சாதிக்க படுமது ஆகையாலே எளிதாக செய்யலுமாய் இருக்கும் என்கை —
இவை இரண்டையும் சொல்லவே -கீழ் சொன்ன தோஷங்கள் ஒன்றும்  இதுக்கு இல்லை என்னும் இடம்
சித்தித்த படி என் என்னில்  –
அபாயத்வ
பய ஜனகத்வ
சோக ஜனகத்வ
அஹங்கார மிஸ்ரதையா
நிஷித்தத்வ அவத்யகர்த்வங்கள் –
ஸ்வரூப விரோதி தவத்தை பற்றி வருகிறவை ஆகையாலும் -பலவிசத்ருசத்வம் –
இது பல சாதனம் அன்றிக்கே -சித்த உபாயமே பல சாதனமாய் -இது தத் வர்ண மாத்ரமாய் -அதிகாரி விசெஷணமாய்-
இருப்பது ஓன்று ஆகையாலே -இதின் பக்கல் வருகைக்கு அவகாசம் இல்லாமையாலும் –
இவ்வாறு தோஷமும் இதுக்கு இல்லாமை -ஸ்வரூபதுக்கு உசிதம் -என்றதிலே சித்தமாம்  இறே-
கர்ம சாத்யதையா வரும் துஷ்கரத்வம் இல்லை என்னும் இடம் -நிவ்ருத்தி சாத்யம் ஆகையாலே
சூகரம் -என்றதிலே சூச்பஷ்டம் இறே -ஆகையால் ஸ்வரூப ஒவ்சித்ய சூகரத்வங்கள் ஆகிற இவை இரண்டும்
இதுக்கு உண்டு என்னவே -கீழ் சொன்ன தோஷங்கள் ஒன்றும் இதுக்கு இல்லை என்னும் இடம்
பிரகாசிதம் ஆயத்து –

சூரணை -136
பூர்ண விஷயம் ஆகையாலே –
பெருமைக்கு ஈடாக –
பச்சை இட ஒண்ணாது –
இப்படி உபாயம் அவன் என்று அத்யவசித்து -ஸ்வ பிரவ்ருத்தியில் நிவ்ருத்தனாய்
இருந்து விட அமையுமோ -தத் சந்தோஷம் அர்த்தமாக -இவன் சில பச்சை இட வேண்டாவோ என்ன –
அருளி செய்கிறார் –
அதாவது -லோகத்தில் பச்சை இடுவார் அவ்வோ விஷயங்களின் தரத்துக்கு ஈடாக இறே
இடுவது –இங்கும் பச்சை இட பார்க்கில் இப்படி இட வேணும் இறே -அவன் அவாப்த சமஸ்த காமதயா
பரி பூரண னனாய்  இருக்கும் அவன் ஆகையாலே -அவனுடைய வைபவத்துக்கு அநு குணமாக
இவனால் ஒரு பச்சை இட போகாது என்கை –
சூரணை -137
ஆபிமுக்ய சூசக மாத்ரத்திலே
சந்தோஷம் விளையும் –
ஆனால் அவனுக்கு இவன் அளவில் சந்தோஷம் விளையும் படி என்ன -அருளி செய்கிறார் –
அதாவது –
அநாதி காலம் -யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை -திரு விருத்தம் -96 – ஏறிட்டு கொண்டு
தன பக்கல் விமுகனாய் போந்த  இவன் அந்நினைவு குலைந்து -தன் பக்கல் அபிமுகன்
ஆனமைக்கு சூசுகமான ஒரு வியாபாரம் பெற்ற அளவிலே -இத்தனை காலம் விமுகனாய் போந்த இவன்
இன்று அபிமுகனாக பெறுவதே -என்று அவன் திரு உள்ளம் மிகவும் உகக்கும் என்றபடி –

சூரணை -138
பூர்த்தி கை வாங்காதே
மேல் விழுகைக்கு ஹேது
வித்தனை –
அவன் அப்படி இருந்தாலும் -அவன் பூர்த்தியானது-அகிஞ்சநரான நம்மால் அவனை
உகப்பித்து அவனை அணுக போகாது -என்று இவன் கை வாங்கும் படி பண்ணாதோ -என்ன –
அருளி செய்கிறார் –
அதாவது -அவனுடைய அவாத சமஸ்த காமத்வம் ஆஸ் ரேயன   உன்முகனான இவன் –
நம்மால் அவனை ஒருபடியாலும் சந்தோஷிக்கப் போகாது -என்று தத் ஆஸ்ரயநீயத்தின் இடம்
மீளுகை அன்றிகே நாம் இட்டது கொண்டு த்ருப்தனாக வேண்டாத பரி பூரணன் ஆகையாலே –
நம் பக்கல் பெற்றது கொண்டு சந்தோஷிக்கும் என்று அபிநிவேசித்து பற்றுக்கைக்கு உடலாம் இத்தனை -என்கை
அன்றிக்கே-
அவன் பூர்த்தி அவனை இப்படி சந்தோஷிக்க ஒட்டுமோ -உபேஷித்து கை வாங்க பண்ணாதோ என்ன –
பூர்த்தி -இத்யாதியாலே -அருளி செய்கிறார் ஆகவுமாம்-அதாவது -அவனுடைய பூர்த்தியானது -இவன்
பச்சை இட்டிலன் -என்று அநாதரித்து-அங்கீகாரத்தின் நின்றும் கை வாங்காதே –
ஆபிமுக்ய சூசுக மாதரத்துக்கு மேற்பட நமக்கு இவன் சில செய்ய வேண்டுவது உண்டோ –
என்று விரும்பி கை கொள்ளுகைக்கு உடலாம் இத்தனை -என்கை –
சூரணை -139
பத்ரம் புஷ்பம் –
அன்யாத்  பூர்ணாத் –
புரிவதும் புகை பூவே –
இப்படி அவன் அல்ப சந்துஷ்டன் என்னும் அதுக்கு பிரமாணம் உண்டோ என்ன –
அருளி செய்கிறார் –
பத்ரம்புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி
ததஹம் பக்த்யுப ஹ்ருத் மஸ் நாமி பிரயதாத்மன–கீதை -9 -26 -என்று
பத்ரத்தை ஆகவுமாம் –
பலத்தை ஆகவுமாம் –
ஜலத்தை ஆகவுமாம் –
யாவன் ஒருவன்  எனக்கு பக்தியாலே தருகிறான் -அநந்ய பிரயோஜனதை யாகிற
சுத்தி யோடு கூடின மனசை உடையனான -அப்படிப்பட்ட பக்தி யோடே தரப்பட்ட
அத்தை -அவாப்த சமஸ்த காமனனாய் இருக்கிற   நான் -அவன் பிரேமத்தாலே கலங்கி
தருமா போலே -வ்யாமோகத்தாலே கலங்கி அடைவு கெட விநியோகம் கொள்ளுவான்
என்று தானே அருளி செய்தான் இறே –

அத்யத் பூர்ணா  தபாம் கும்பா தந்யத் பாதாவ நே ஜநாத்
அந்யத் குசல சம்ப்ரச்னான் ந சேச்சதி ஜனார்தனா -அதாவது –
ஸ்ரீ தூது எழுந்து அருளுகிற போது–திருதராஷ்ட்ரன் -பாண்டவ பஷ பாதியாய் இருக்கிற
கிருஷ்ணன் வாரா நின்றான் -அவனுக்கு சில நாட்டையும் கொடுத்து பொன்னையும் கொடுத்து
நமக்கு ஆக்கிக் கொள்கிறோம் -என்றார் போலே சிலவற்றை சொல்ல –
நினைவும் சொல்லும் ஒத்து இராத வஞ்சகனான அவன் கருத்தை அறிந்த சஞ்சயன் –
வருகிறவன் அங்கு ஒத்தவன் அல்ல காண்-அவனுக்கு வேண்டுவது இவ்வளவு -என்றான் –
அதாவது -தான் குடிக்கும் தண்ணீரை ஒரு குடத்திலே நிறைத்து குளிர வைக்க
கடவனே -அத்தை அவன் வருகிற வழியிலே வாசலிலே வைக்க அமையும் –
அதுக்கு மேல் ஒன்றும் வேண்டா –
தன் கிருகத்தில் அதிதி வந்து புகுந்தால் -காலை கழுவதாக சாமான்ய சாஸ்திரம்
விதித்து வைத்தது இறே -அவ்வோபாதி அவன் திருவடிகளை விளக்க அமையும் –
அவனான வாசிக்கு விசேஷித்து ஒன்றும் செய்ய வேண்டா –
நெடும் தூரம் வந்தவனை குசல பிரச்னம் பண்ண கடவது இறே –
அவ்வோபாதி ஓர் இன் சொல் சொல்ல அமையும் -ஏற்றமாக ஒன்றும் வேண்டா –
இவ்வளவுகளை ஒழிய மற்று ஒன்றை இச்சியான்  காண் -என்கை –
இத்தால் நீ கொடுக்க நினைக்கிற நாட்டையும் பொன்னையும்
அவன் ஒரு சரக்காக நினைத்து இருக்குமோ -வல்லையாகில்
உன் ஆபிமுக்ய சூசகமாக இவ்வளவுகளை செய்யப் பார் என்றபடி —
பரிவதில் ஈசனை பாடி -என்று தொடங்கி -புரிவதும் புகை பூவே –திரு வாய் மொழி -1- 6- 1என்று
ஹேய ப்ரத்ய நீகனான சர்வேஸ்வரனை சம்சார அந்முக்தராய் அனுபவித்து –
அவ அனுபவஜனித ப்ரீதியால் -ஏதத் சாமகாயன் நாஸ்தே -என்கிறபடியே
பாடி விஸ்த்ருதர் ஆகியை பெற வேண்டி இருப்பீர் -உப கரணங்களில் குறைவு பார்த்து
அகலுகை தவிர்ந்து -அசம்ச்க்ருதமான ஜலத்தை ஏதேனும் ஒருபடி பிரயோகித்து –
பின்னை அவனுக்கு அருள் கொடையாக கொடுப்பதுவும் ஏதேனும் ஒரு புடையும்
ஏதேனும் ஒரு பூவும் -இவ்வளவும் அமையும் கிடிகோள் அவனுக்கு -என்று அவனுடைய
ஸ்வ ஆராதையை சூச்பஷ்டமாக ஆழ்வார் அருளி செய்தார் இறே –

சூரணை -140
புல்லை காட்டி அழைத்து
புல்லை இடுவாரை போலே
பல
சாதனங்களுக்கு
பேதம் இல்லை —
பூர்ண விஷயம் -சூரணை – 136-என்று தொடங்கி இவ்வளவும் பராசக்த அநு பிரசக்தமாக
வந்த இத்தனை இறே -பிரபத்தி வை லஷண்யம் இறே கீழ் சொல்லப் பட்டது –
ஆகையால் அதுக்கு இன்னம் ஒரு வை லஷண்யம் சொல்லுகைக்காக –
சித்த உபாயத்துக்கும் பல த்துக்கும் உண்டான ஐ கயத்தை   முந்துற அருளி செய்கிறார் –
அதாவது –
கோவை வரவழைத்து பின்னை அதுக்கு தாரகாதிகளை இட்டு நோக்க நினைப்பார் –
தத் போக்யமான புல்லு தன்னையே தத் வசீகார சாதனமாக முன்னிட்டு அழைத்து கொண்டு
அது தன்னையே மேலிடும் அளவில் பல சாதனங்களுக்கு பேதம் இல்லாப் போலே
வி லஷண குண விக்ரக விசிஷ்டனான தானே -முந்துற இவனை சேர்த்து
கொள்ளுகைக்கு உபாயமாய் -பின்னை என்றும் ஒக்க இவனுக்கு உபேயமாய்
இருக்கையாலே -பல சாதனங்கள் இரண்டும் -ஏக வஸ்துவாய் -இருக்கும் என்கை –

சூரணை -141
ஆகையால் சுக ரூபமாய் இருக்கும் –
இத்தால் பிரபத்திக்கு வை லஷண்யம் பலித்த படியே அருளி செய்கிறார் –
அதாவது -சாத்திய வஸ்து தானே சாதனம் ஆகையாலே -தத் வர்ண ரூபமான இது
தேவையாய் இராதே சுக ரூபமாய் இருக்கும் என்ற படி –
அன்றிக்கே –
இன்னமும் பிரபதிக்கு ஒரு வை லஷண்யம் அருளி செய்கிறார் -புல்லை இத்யாதி யாலே –
அதாவது புல்லை காட்டி தேநுவை அழைத்து கொண்டு பின்னை அப்புல்லையே இடுமளவில் –
பல சாதனங்களுக்கு பேதம் இல்லாதாப் போலே –
சக்ருத் க்ருதோஞ்சலி-
நமஸ் சக்ருர் ஜனார்த்தனம் -இத்யாதிகளில் சொல்லுகிறபடியே –
அஞ்சல்யாதி ரூபையான பிரபத்தி யை முன்னிட்டு -ஈஸ்வரனை
வசீகரித்தால் -பின்னை அவனுக்கு உகப்பாக செய்யும் அடிமையும் —
பத்தாஞ்சலி புடா ஹ்ருஷ்டா நம இத்யேவ வாதிந -என்றும் –
கைகளால் ஆரத் தொழுது தொழுது உன்னை -திருவாய் மொழி -3 -8 -4 –
-இத்யாதிகளில் சொல்லுகிற படியே –
தன் ஸ்வரூப அநு ரூபமான -அஞ்சல்யாதி விருத்தி  விசேஷங்கள் ஆகையாலே –
பல சாதனங்களுக்கு பேதம் இல்லை -இப்படி பலமானது தானே சாதனம் ஆகையாலே –
இப்பிரபத்தி தானே தேவையாய் இராதே -இவனுக்கு சுக ரூபமாய் இருக்கும் என்கை –
ஆக -பிரபத்தி உபாயத்துக்கு என்று -சூரணை – 134- தொடங்கி -இவ்வளவாக
பிரபத்தியினுடைய தோஷ ராஹித்யமும் -குண சாஹித்யமும் சொல்லப் பட்டது –
பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading