திருப்பாவை பிரவேசம் — வியாக்யானம் ..

திரு ஆடி பூரத்து ஜகத்து உதித்தாள் வாழியே
ஐஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய்-
பிஞ்சாய்ப் பழுத்தாள்-
எம்பெருமான் -ஆழ்வார்களுக்கு -மயர்வற மதி நலம் அருள –
சம்சாரத்தில் உறங்குகிறவர்களை எழுப்பி -எம்பெருமான் தானே தன்னை காட்ட கண்டார்கள் ஆழ்வார்கள்
ஆண்டாளோ -அவனுக்கும் மயர்வற அருளுகிறாள் –
பள்ளி உணர்த்தி -அநாதி மாயையில் இருந்து -சம்சாரிகளை விடுவிக்க –
இவள் அருளுகையாவது -எம்பெருமானை எழுப்பி -குறையை விண்ணப்பம் செய்வதே –
ஜீவாத்மாக்கள் -தேக ஆத்ம அபிமானம் -அணு போல்
ஆத்ம ஸ்வாபம் கை வந்த -ருஷிகள்பர்வதம் போல் -அவர்களில் மேம்பட்டு -பர்வதம் போல் –
ஆழ்வார்களோ இவர்களை அணு போலே தாங்கள் பர்வதம் –இளைய பெருமாள் நிலை
பெரிய ஆழ்வாரோ -பொங்கும் பரிவால் -இவர்களை மேம்பட்டு இருக்க -பரத ஆழ்வான் நிலை
ஆண்டாளோ-அவரிலும் மேம்பட்டு-பாகவத சேஷத்தின் எல்லையில்-சத்ருக்ன ஆழ்வான் நிலை –
திருப்பாவை ஜீயர் -இதில் ஆழம் கால் பட்டு -எம்பெருமானார் –
– வியாக்யானம் அருளி செய்ய -திருப் பல்லாண்டுக்கு ஆள் கிடைக்கினும்
 திருப்பாவைக்கு ஆள் கிடையாது
மோவாய் எழுந்த முரடர் கேட்க்கைக்கு அதிகாரி அல்லர் –முலை எழுந்தார் கேட்க வேணும் ..
அவர்களிலும் பரி வாணிச்சிகளான பிராட்டி மார்க்கும் கேட்க நிலம் இல்லை
 -பல சொல்லி என் -பத்து ஆழ்வார்கள் உடைய சார பூதையான -தானே
சொல்லி தானே கேட்கும் இத்தனை -என்பாராம்
நாய்ச்சியார் பெரிய ஆழ்வாரையே உபாயமாக விச்வசித்து இருப்பர்–
பால்யாத்- திரு துழாய் போலே பிறக்கும் பொழுதே பக்தி மனம் கமழ்ந்து இருப்பள் –
நோன்பு-மார்கழி நீராட -வியாஜ்யமாக கொண்டு -எம்பெருமான் இடம் –
உனக்கு சேஷமாய் இருக்கிற இவ் ஆத்மா அநர்த்த படாதபடி பண்ணி -இதற்க்கு
ஸ்வரூப அனுகுணமான கைங்கர்யத்தையும் கொடுத்து -அது தான் யாவதாத்மபாவியம் படி
பண்ணி அருள வேண்டும் -என்று பிரார்த்திக்கிறாள் ..
மார்கழி திங்கள்- நன்னாள்
பகவத் ஆபிமுக்யம் பிறக்க-அவன் நிர்கேதுக கடாஷத்தால் -காலத்தை கொண்டாடுகிறாள்
அக்ரூரர் கண்ணனால் கடாஷிக்க படும் நாளை குறித்து பாரித்தது போல் —
சித்தரை -மாசம் சக்ரவர்த்தி திரு மகன்-ஆவிர்பூதம்-திரு பட்டாபிஷேகம்-
புஷ்பங்கள்-அலங்கார வஸ்துகள் -கூட கைங்கர்யத்துக்கு ஆசை கொண்டனவாம் அப் பொழுது –
மாசானாம் மார்க்க சீர்சா -அதிகாலை பொழுது
ஒழிவில் காலம்-மீண்டும் மீண்டும் அரையர் அருள -எம்பெருமானார் கண்ணீர் வடித்த ஐதீகம் –
சைத்ர ஸ்ரீ மா நயம் மாச –சைத்ர -அல்லாதார் காட்டில் பெருமாளுக்கு உள்ள பிரதான்யம் போலே
மாசங்களுக்கு எல்லாம் முதலான மாசம் –ஸ்ரீ மான் -அவன் -ராஜா -பிராப்தன் போலே
அனைவருக்கும்  சுகரமான மார்கழியும் மாசங்களில் ராஜா –
நாராயணனே நமக்கே பறை தருவான் –
உபாயம்-உபேயம் -நாராயணனே -மந்த்ரம்-
பெரிய ஆழ்வாரும் -நன்மை தீமைகள் ஒன்றும் அறியேன் நாராயணா என்னும் இத்தனை அல்லால் –
ஆகிஞ்சன்யம்-அநந்ய கதித்வம் –
அத்தலையில் நிறைவாலும் அவனே உபாயம்-இத்தலையில் குறைவாலும் அவனே உபாயம்-
அத்தலை-காகாசுரன் /இத்தலை-சிசுபாலன்
போக்கு அற்றவனுக்கு திறந்து கிடந்த வாசலிலே புக வேணும்
வைகிறவனுக்கும்பேர் சொல்லி தானே வைய வேணும் –
இத்தனை இறே காகாசுரனும் சிசுபாலனும் செய்தது -பட்டர்
வாயால் சொல்ல ஒண்ணாத குற்றத்தை செய்த காகாசுரன் இடத்திலும்
சிசுபாலன் இடத்திலும் -சிறிது குணமும் இருந்ததால் சங்கோசம் உடையதான
உன் பொறுமை குணம் நல் குணத்துக்கும் லவ லேசமும்  இடமே இல்லாத அடியேன்
திறத்தில் எப்பொழுதும் செங்கோல் செலுத்தி விளையாடட்டும் .-பட்டர்
மதி நிறைந்த -பீஷக்குகள் ஆர்த்தர் கட்டணமாய் கிடைக்குமா போலே –
நந்த கோபன் வாசல் கிருஷ்ணனால் புண் பட்ட பெண்கள் கட்டணமாய் கிடைக்குமா கொள்ளீர் -பட்டர்
கட்டணம் =நடக்க முடியாமல் தூக்கி வரும் கட்டில் போல்
மதி நிறைந்த –இதற்க்கு முன்பு கண்ணன் உடன் சேர இருளையே எதிர் பார்த்து இருந்தனர்-
நந்த கோபன் கடைத் தலைக்கே நல் இருள் கண் என்னை உய்த்திடுமின் -நாச்சியார் திரு மொழி 12-3-
நீராட -எம்பெருமான் சம்ச்லேஷத்தை-
பறை-பிராப்யம்
தருவான்-பிராபகம்
நமக்கே -அதிகாரிகள் நாம் என்று தெரிவிக்கிறார் -சம்பந்த ஞானம் உடைய நமக்கே –
/ஸ்வ ரஷணத்தில் அன்வயம் இல்லாத நமக்கு
வடிவழகை கண்டு -வேறு ஒரு விஷயத்தை பற்றிற்றாக வேண்டாதே -பிராப்ய விஷயமாய் இருக்கை —
உகந்த விஷயமே வகுத்த விஷயமாகை.
அவனாலும் தன்னைய அனுபவிக்க தாரேன்  என்ன ஒண்ணாது காணோம்
இத்தலை வைமுக்யம்  பண்ணினவன்றும் -தான் ஆபிமுக்யம் பண்ணிப் போருமவன்
நாராயணா னுவாக சித்தமான வஸ்து –
இடைச்சிகளுக்கும் சுலபனான படி –
நாராயண சப்த மாதரம் -என்றும்
நாராயண பர பரமம் -என்றும் மந்த்ரம் –
–

காலத்தை கொண்டாடி
பலத்தை சொல்லி
அதிகாரிகளை சொல்லி
உபாய நைரபேகஷ்யம் சொல்லி
ஆகிஞ்சன்யத்தை நைரபேகஷ்யம் சொல்லி
உகவாதாரும் உகந்து கொண்டாடும் படி சொல்லி தலைக் கட்டுகிறார் .
——————————————————————————

ஆண்டாள் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading