ஆச்சார்ய ஹிருதயம்–ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வ்யாக்யானம்- சூர்ணிகை -123/124….

சூரணை -123-

இப்படி ஆறு பிரகாரத்தாலே பரிசுத்த ஆத்ம ஸ்வரூபத்துக்கு தத் சாம்யம் உண்டாகையாலே
பிராட்டி தசை இவருக்கு வந்தேறி அல்லாமையை பிரகாசிப்பித்தாராய் நின்றார் கீழ்–
ஏவம் பூதாகாரத்தாலே பெரிய பிராட்டியாரோடு உள்ள சாம்யமே அன்றிக்கே –
தம்முடைய பாவ விசேஷங்களால் பகவத் அபிமத திவ்ய மகிஷிகளான பிராட்டிமார் மூவரோடும்
இவருக்கு உண்டான சாம்யம் இவர் பாசுரங்களிலே பிரகாசிக்கும் என்கிறார் மேல்–

உண்ணாது கிடந்தோர் மாயையினால் என்னும்
வீறுடைய முடிக்கு உரியரோடு
இத் திரு மண்ணேர் அன்ன ஒண்ணுதல்
பின்னை கொல் என்கிற ஒப்பு
தென்பால் நெடுமாடம்
கடும் சிலை அம்பெரி யூட்டி
நீறு எழ வெரித்த பெரும் தோற்றத்து
ஆர் உயர் காகுத்தன்
ஆதி அம் காலம் மண் புரை
பொன் மாதின் துகளாடி
எருது ஏழ் தழீ இச் சறையினார்
என்னுமவற்றிலே தோன்றும்–

(உண்ணாது என்னும் வீறுடைய முடிக்கு உரியரோடு இத் திரு என்கிற ஒப்பு –
1-தென்பால் 2-நெடுமாடம் 3-கடும் சிலை 4-அம்பெரி 5-யூட்டி 6-நீர் எழ 7-வெரித்த 8-பெரும் தோற்றத்து
9-ஆர் உயர் காகுத்தன்-என்னுமவற்றிலே தோன்றும் –
கிடந்து என்னும் வீறுடைய முடிக்கு உரியரோடு மண்ணோர் அன்ன ஒண்ணுதல் என்கிற ஒப்பு –
1-ஆதி அம் காலம் 2-மண் புரை 3-பொன் மாதின் 4-துகளாடி-என்னுமவற்றிலே தோன்றும்–
ஓர் மாயையினால் என்னும் வீறுடைய முடிக்கு உரியரோடு பின்னை கொல் என்கிற ஒப்பு-
1-எருது ஏழ் தழீ 2-இச் சறையினார் என்னுமவற்றிலே தோன்றும் )-
(பட்ட மஹிஷிகள் மூவரும் என்பதால் மூவரும் முடிக்கு உரியர் )

உண்ணாது என்னும் –
அதாவது –
உண்ணாது உறங்காது ஒலி கடலை ஊடறுத்து
பெண்ணாக்கை யாப்புண்டு தாமுற்ற பேதெல்லாம் –நாச்சியார் -11-7–என்கிறபடி
ஜனக குல சுந்தரியான தன்னைப் பிரிந்த போது -கம்பீர சத்ய சம்பன்ன க்ருபாவான் அவிகத்தன பரகீய
குணக்ராஹீ தீரா தாத்தோ நிகத்யதே-என்கிறபடி -தீரோத்த நாயகன் ஆகையாலே ,
விகார ஹேதுக்கள் உண்டானாலும் தைர்யத்தாலே புறம் தோன்றாது இருக்கும் சக்கரவர்த்தி திரு மகனை –
ந மாம்சம் ராகவோ புங்க்தே -ந மது சேவிதே
அநித்ரஸ் சததம் ராம –நைவ தம்சான் ந மசகான்–ஸூந்தர -36-42-/44 –இத்யாதிப் படியே –
(அநஸ்நன் -உபநிஷத் பரத்வம் உண்ணாமல் இருப்பதே ஸ்வரூபம் –
இங்கு அவதார தசையில் உண்ணுவாரே பிராட்டி உடன் கூட இருந்தால் )
ஊணும் உறக்கமும் அற்று -கடித்ததும் ஊர்ந்ததும் அறியாதபடி பண்ண வல்ல வைலஷண்யத்தால் -வந்த

வீறுடைய முடிக்கு உரியரோடு
அதாவது –
வீறு உடையவளாய் –
சர்வேஸ்வர சாம்ராஜ்யத்தில் அவனோடு ஒக்க முடி சூடுகையாலே -முடிக்கு உரியளான ஸ்ரீ பெரிய பிராட்டியாரோடும் ,–

கிடந்து என்னும் வீறுடைய முடிக்கு உரியரோடு
அதாவது
கிடந்து இருந்து நின்று அளந்து —திருவாய் -2-8-7-என்கிற பாட்டின் படி (விராதன் ஸ்தோத்ரம் -அரவாகி சுமத்தியால் -இத்யாதி )
சர்வஜ்ஞனாய் , அவாப்த சமஸ்த காமனான சர்வேஸ்வரனை -பஹு பிரகாரமாகத் தன்னை அனுபவித்தாலும் –
பர்யாப்த்தன் ஆகாதபடி பிச்சேற்ற வல்ல வைலஷண்ய பிரயுக்தமான வீறு உடையளாய்-
ஸ்ரீ பெரிய பிராட்டியாரோபாதி முடிக்கு உரியளான ஸ்ரீ பூமி பிராட்டியாரோடும் —

ஓர் மாயையினால் என்னும் வீறுடைய முடிக்கு உரியரோடு
அதாவது
ஓர் மாயையினால்- ஈட்டிய வெண்ணெய் திருவிருத்தம் -21-இத்யாதிப் படியே
நித்ய சூரிகள் சமாராதன பரராய் நிற்க -அவர்கள் அறியாதபடி அத்தை உபேஷித்து தாழ்வுக்கு எல்லையான
இடைக் குலத்திலே – ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து பிறந்து தன்னைப் பெறுகைக்கு சுல்கமாக விட்ட
மிருத்யு சமன்களான ருஷபங்களின் கொம்பின் இடையிலே கருமாறி பாய்ந்தார் போல்
தன்னைப் பேணாமல் சென்று விழும் படி பண்ண வல்ல வைலஷண்ய வீறு உடையளாய் –
முற்பட்ட மகிஷிகளோ பாதி முடிக்கு உரியளான ஸ்ரீ நப்பின்னை பிராட்டியாரோடும்-

இத் திரு என்கிற ஒப்பு –
அதாவது –
மாயோன் திறத்தனளே இத் திரு–திருவாய் -4-4-7-என்றும்
அநந்ய ராகவேணாஹம்–ஸூந்தர -21-15-என்கிறபடியே –
சர்வ தசையிலும் ( தேறியும் தேறாமல் இருந்தும்) அவன் திறம் அல்லது அறியாளான
ஸ்ரீ மகா லஷ்மியோடு விகல்பிக்கலாம் ஸ்வபாவையான இவள் என்றும் –
(அத்திரு அவனைப் பற்றும் ஏக சேஷித்வம் -இத்திரு இருவரைப் பற்றும் -மிதுன சேஷித்வம்
அத்திரு மார்பில் ஏறும் -இத்திரு திருவடி விடாமல் இருக்கும் )

மண்ணோர் அன்ன ஒண்ணுதல் என்கிற ஒப்பு
அதாவது
உண்டும் உமிழ்ந்து கடாய மண்ணோர் அன்ன ஒண்ணுதல்—திருவிருத்தம் -49-என்று
ஸ்ரீ பூமி பிராட்டியாரோடு ஒத்த வைலஷண்யத்தை உடையவள் என்றும் ,

பின்னை கொல் என்கிற ஒப்பு-
அதாவது
பின்னை கொல் நில மா மகள் கொல் திரு மகள்கொல் —திருவாய் -6-5-10-என்று
ஸ்ரீ நப்பின்னை பிராட்டியோ ? ஸ்ரீ பூமி பிராட்டியோ ?ஸ்ரீ பெரிய பிராட்டியாரோ ?-என்று
சொல்லும்படி இவர்க்கு உண்டான சாம்யம் –

தென்பால் நெடுமாடம் கடும் சிலை அம்பெரி யூட்டி நீறு எழ வெரித்த பெரும் தோற்றத்து
ஆர் உயர் காகுத்தன்-என்னுமவற்றிலே தோன்றும் –
1-தென்பால் –
அதாவது
தென் பால் இலங்கை வெங்களம் செய்த நம் விண்ணோர் பிரானார் துழாய் துணையா நங்களை
மாமை கொள்வான் வந்து தோன்றி நலிகின்றதே–திருவிருத்தம்-77- -என்று
சக்கரவர்த்தித் திரு மகனைப் பிரிந்து பாதக பதார்தங்களாலே நோவு படுவது-
2-நெடு மாடம் –
அதாவது
வாழா நெடும் துன்பத்தள் என்று இரங்கார் அம்மனோ இலங்கை
குழா நெடு மாட மிடித்த பிரானார் கொடுமைகளே –திருவிருத்தம் -36-–என்று
பிரணயித்வம் இல்லையானால் சாமான்ய கிருபையும் இல்லையோ ? என்று கொடுமை சொல்லுவது —
(வாடை இரவு நான் நான் என்று போட்டி போட்டி கொண்டு நையப்பண்ண இந்த வார்த்தை )
3-கடும் சிலை –
அதாவது –
காயும் கடும் சிலை என் காகுத்தன் வாரானால் ?—திருவாய் -5-4-3-என்று
எதிரிகள் தான் கண் பார்க்கிலும் , கண் பாராத வில்லை உடைய காகுத்தன் -இத் தசையில் வருகிலன் என்று வெறுப்பது —
(இராத்திரி வசனம் -காகுத்தன் -சத்யவாதி வம்சத்தில் பிறந்தும் வரவில்லையே என்று வெறுப்பது )
4-அம்பெரி-
அதாவது –
இலங்கை நகர் அம்பெரி உய்த்தவர் தாளினை மேல் அணி வம்பவிழ் தண் அம் துழாய் மலர்க்கே
இவள் நம்பும் –திருவாய் -4-2-8 –என்று
இலங்கையை சர அக்நியால் தக்தம் ஆக்கினவர் திரு அடிகளில் திரு துழாயை ஆசைப் படுவது –
5-ஊட்டி
அதாவது
தீ முற்ற தென் இலங்கை ஊட்டினான் தாள் நயந்த யாம் உற்றது உற்றாயோ ?-திருவாய் -2-1-3-என்று
இலங்கைக்கு எல்லாம் அக்நிக்கு விருந்து இட்டவன் திரு அடிகளை ஆசைப் பட்ட
நான் பட்டது பட்டாயோ என்று சம துக்கிகளைக் கட்டிக் கொண்டு அழுவது ,
6-நீறு எழ
அதாவது
மாறில் போர் அரக்கன் மதிள் நீறு எழ செற்று உகந்த ஏறு சேவகனார்க்கு என்னையும்
உளன் என்மின்களே-6-1-10-என்று
எதிரில்லாத போரை உடைய ராவணன் தனக்கு அரணாக இட்ட மதிளைத் துகளாக்கி பொகட்ட
பிரசித்தமான சேவகத்தை உடையவருக்கு-ரஷ்ய வர்க்கத்தில் நானும் ஒருத்தி உண்டு என்று சொல்லுங்கோள்
என்று தூது விடுவது –
(கௌசல்யா லோக பார்த்தா -என்ற பிராட்டி வார்த்தை லோகத்தில் நானும் ஓன்று அன்றோ
அங்கு திருவடி -இங்கு மிதுன பறவைகள் -சேர்த்தி இன்பமும் கலவி வியசனமும் அறியும் )

7-எரித்த-
அதாவது –
கிளர் அரக்கன் நகர் எரித்த களி மலர் துழாய் அலங்கல் கமழ் முடியன் கவராத அறிவினால் குறைவிலம்-4-8-5-என்று –
(மதுரா மதுரா லாபம்-வால்மீகி -கிளி மொழியாள் இங்கு )
ஐஸ்வர் யோத்தகனான ராவணனுடைய நகரத்தை தக்தமாக்கி முடி சூடி வளையம் வைத்து இருக்கிறவன்
விரும்பாத அறிவினால் என்ன கார்யம் உண்டு என்று அவனுக்கு உறுப்பு இல்லாதவற்றை உபேஷிப்பது–
8-பெரும் தோற்றத்து
அதாவது –
காண் பெரும் தோற்றத்து என் காகுத்த நம்பிக்கு என் பூண் புனை மென் முலை தோற்றது பொற்பே -6-6-9-–என்று
கண்ணுக்கு இனியதாய் அபரித்சேத்ய போக்யமான சந்நிவேசத்தையும் குண பூர்த்தியையும் உடைய
சக்கரவர்த்தி திரு மகனுக்கு இவள் தன் அழகை இழந்தாள் என்னும்படி அவனை ஆசைப் பட்டு அழகு அழிவது —
9-ஆர் உயிர் காகுத்தன்-
அதாவது –
என் ஆர் உயிர் காகுத்தன் நின் செய்ய வாய் ஒக்கும் வாயன் கண்ணன் கை காலினன்
நின் பசும் சாம நிறத்தன் கூட்டுண்டு நீங்கினான் சிறு கிளி பைதலே இன் குரல் நீ மிழற்றேல் -9-5-6–என்று
விஸ்லேஷத்தில் தரிக்க ஒண்ணாதபடி எனக்கு பிராண பூதனான சக்கரவர்த்தி திருமகன்
என்னோடு கலந்து வைத்து பிரிந்தான் –
இத் தசையில் அவனுக்கு போலியான உன் வடிவாலே
நலிகிறதுக்கு மேல் பேச்சாலும் ( உருவத்தால் நலிவதற்கும் மேலே ) நலியாதே கொள் என்று கிளியைப் பார்த்து
நிஷேதிப்பதாய் கொண்டு பேசின 9-பாசுரங்களிலும் –

ஆதி அம் காலம் மண் புரை பொன் மாதின் துகளாடி-என்னுமவற்றிலே தோன்றும்–
அதாவது
1-ஆதி அம் காலத்து
அதாவது –
ஆதி அம் காலத்து அகல் இடம் கீண்டவர் பாதங்கள் மேல் அணி
பைம் பொன் துழாய் என்றே ஒதுமால் எய்தினாள்-4-2-6-–என்னும்படி
வராஹ கல்பாதியில் மகா பிருதிவியை அண்ட பித்தியில் நின்று ஒட்டு விடுவித்து
எடுத்தவனுடைய திரு அடிகளில் திருத் துழாய் என்றே பலகாலம் ஓதும் படி பிச்சேறுவது–
2-மண் புரை
அதாவது –
மண் புரை வையம் இடந்த வராகற்க்கு –என் கண் புனை கோதை இழந்தது கற்பே -6-6-5–என்னும்படி
அவனை ஆசைப் பட்டு அறிவு இழப்பது —
3-பொன் மாதின்-
அதாவது –
ஞாலப் பொன் மாதின் மணாளன் துழாய் நங்கள் சூழ் குழற்கே
ஏலப் புனைந்து என்னைமார் எம்மை நோக்குவது என்று கொல் -திரு விருத்தம் –40– என்று
ஸ்ரீ பூமிப் பிராட்டி செவ்வி கொள்ள விட்டு பிறந்தவன் சூடின திருத் துழாயை
பந்துக்கள் ஆனவர்கள் ஏற்கவே கொண்டு வந்து நம் குழலிலே சூட்டி
நம்மை ரஷிப்பது என்றோ என்பது —
4-துகளாடி-
அதாவது –
ஏனம் ஒன்றாய் மண் துகளாடி வைகுந்தம் அந்நாள் (அன்ன அவள்) குழல் வாய்
விரைபோல் விண்டு கள்வாரும் மலர் உளவோ நும் வியலிடத்தே—திருவிருத்தம் -55-என்று
(நீர் பூ -அம்பஸ்யா பாரே பரத்வம் -நிலப்பூ புவனஸ்ய மத்யே -வ்யூஹம் மரத்தில் ஒண் பூ நாகஸ்ய ப்ருஷ்டே–
மஹதோ மஹீயான் -நலம் பாராட்டு துறை -ஆழ்வாரை போலே எங்குமே இல்லையே ஸ்வா பதேசம் )
அத்வதீய வராஹமாய் -பிரளயங்கதையான பூமியை எடுத்த போது , வடிவில் பெருமையால் –
திரு வயிற்றில் கிடக்கிற பூமி ஒரு துகள் மாத்ரம் என்னும்படி – நின்றவனுடைய அபதானத்தை
அனுபவித்து இருக்கிற இவள் போக்யதை உபய விபூதியிலும் உண்டோ என்று
விசேஷஜ்ஞர் ஸ்லாக்கிக்கும் படியைப் பிரகாசிப்பதாய்க் கொண்டு பேசின 4-பாசுரங்களிலும் –

எருது ஏழ் தழீ இச் சறையினார் என்னுமவற்றிலே தோன்றும்
அதாவது –
1-எருது எழ தழீ இ
அதாவது –
எருது எழ தழீ இக்கொளியார் கோவலனார் குடக் கூத்தனார்
தாளிணை மேல் அணி தண் அம் துழாய் என்றே நாளு நாள் நைகின்றது-4-2-5–என்னும்படி
ஏறு தழுவுகை முதலான அபதானங்களை உடைய ஸ்ரீ கிருஷ்ணன் திரு அடிகளில்
திருத் துழாயை ஆசைப் பட்டு நாள் தோறும் சைல்யத்தை அடைவது –
2-சறையினார்-
அதாவது –
கறையினார் துவர் உடுக்கை கடையாவின் கழி கோல் கை சறையினார்
கவராத தளிர் நிறத்தால் குறைவிலம்-4-8-4–என்று
கோப வேஷ தரனாய் ரஷ்ய வர்க்கத்தின் உடைய ரஷணத்துக்கு தன் உடம்பு பேணாமல்
திரியும் ஸ்ரீ கிருஷ்ணன் விரும்பாத ஸ்நிக்தமான நிறம் எனக்கு வேண்டாம் என்பதாய்
பேசின-2- பாசுரங்களிலும் தோன்றும் என்றபடி ..

இத்தால் திவ்ய மகிஷிகள் மூவரோடும் இவருக்கு உண்டான சாம்யம் ,
ஸ்ரீ ஜனக குல சுந்தரியான பிராட்டிக்கு அசாதாரணமான ஸ்ரீ ராமாவதார தத் அபாதானங்களிலும் ,
ஸ்ரீ பூமிப்பிராட்டிக்கே அசாதாரணமான ஸ்ரீ வராஹ நாயனார் அபாதானங்களிலும்
ஸ்ரீ நப்பின்னை பிராட்டிக்கு அசாதாரணமான ஸ்ரீ கிருஷ்ண அவதார அபாதானங்களிலும் ,
( ஸ்ரீ ருக்மிணி ஸ்ரீ சத்யபாமை போல்வாரும் இவர்களும் உண்டே என்னில்-
சரணாகதிக்கு ஸ்ரீ நப்பின்னை பிராட்டி உடன் தானே –
உந்து குத்து முப்பத்து மூன்று பாசுரங்களில் கண்டோமே )
அந்த பிராட்டிமார் தங்களைப் போலே அதி மாத்ர பிரவணராய் அருளிச் செய்த
அவ்வவ திவ்ய ஸூக்திகளிலே அபி வ்யக்தம் என்றது ஆயிற்று —

————————————————-

சூரணை-124-

இப்படி பிரதான மகிஷிகளான இவர்களோடு உள்ள சாம்யமே அன்றிக்கே
இவர்களை உபேஷித்தும் தங்களை உகக்கும் படி அவனுக்கு அபிமதைகளான திரு ஆய்ப்பாடியில் பெண்களுடையவும் –
அவர்களையும் தங்கள் பேச்சு அழகாலே அவன் மறக்கும் படி பண்ணும் ஸ்ரீ மதுரையில் பெண்களுடையவும் –
நரக வத அநந்தரம் பரிஹிரகித்த ஸ்ரீ மத் த்வாரகையிலே பதினாறாயிரம் தேவிமாருடையவும் பாவங்கள் ( பக்தி தன்மைகள் )
இவர்க்கு உண்டு என்னும் இடமும் – இவர் தம் பேச்சில் தோன்றும் என்கிறார் —
(கீழே மூவர்-பிரதான முடிக்கு உரியர் இதில் மூ இடங்களிலும் உள்ளோர் உடன் சாம்யம் )

இவர்கள் தேடி நிற்கப் பொய்கை முது மணல்
முல்லைப் பந்தல் முற்றம் மச்சொடு மாளிகை அவ்வவ்விடம் புக்கு
வாரிச் சிதைத்துப் பறித்துக் கிழித்துக்
கோயின்மை குறும்பு செய்து அல்லல் விளைத்துக்
கவரும் உகக்கு நல்லவர்
முழிசி ஆவர் என்னும் தேன் மொழியாலே
கோகுலத்தை மறப்பிக்கும் நகர ஸ்திரீகள்
நரகனைத் தொலைத்துக் கவர்ந்த பதினாறு பல்லாயிரம் எண்ணிறந்தார்
பாவம்
கடல் ஞாலம் மின்னிடை மல்லிகை வேய்மரு பேய் முலை முனிந்து
மற்பொரு விறல் கஞ்சனை
மங்க நூற்ற வாயும் தீர்ப்பார்
என்னுமவற்றிலே தோன்றும்-

(இவர்கள் தேடி நிற்கப் பொய்கை முது மணல் முல்லைப் பந்தல் முற்றம் மச்சொடு மாளிகை அவ்வவ்விடம் புக்கு வாரிச்
சிதைத்துப் பறித்துக் கிழித்துக் கோயின்மை குறும்பு செய்து அல்லல் விளைத்துக் கவரும் உகக்கு நல்லவர் பாவம்
கடல் ஞாலம் மின்னிடை மல்லிகை வேய்மரு பேய் முலை முனிந்து-என்னுமவற்றிலே தோன்றும்-
முழிசி ஆவர் என்னும் தேன் மொழியாலே கோகுலத்தை மறப்பிக்கும் நகர ஸ்திரீகள் பாவம்
மற்பொரு விறல் கஞ்சனை என்னும வற்றிலே தோன்றும்-
நரகனைத் தொலைத்துக் கவர்ந்த பதினாறு பல்லாயிரம் எண்ணிறந்தார் பாவம்
மங்க நூற்ற வாயும் தீர்ப்பார் என்னுமவற்றிலே தோன்றும்–என்றபடி
இவர்கள் -கீழே -தேவிமார் மூவரும் /இங்கு-மூன்று ஸ்தானங்கள் உகக்கும் நல்லவர் -ஆயர் குலத்துக் கோபிமார்கள் / நகர ஸ்த்ரீகள்)

இவர்கள் தேடி நிற்க
அதாவது ஸ்ரீ வடமதுரை பெண்கள்
தேடித் திரு மா மகள் மண் மகள் நிற்க-பெரிய திருமொழி -10-8-9- காதில் கடிப்பிட்டு (பிரணய ரோஷ பதிகம் )என்கிறபடியே
பிரதான மகிஷிகளான இவர்கள் தன்னைத் தேடி நிற்கும் படி இவர்களை உபேஷித்து-

பொய்கை முது மணல் முல்லைப் பந்தல் முற்றம் மச்சொடு மாளிகை அவ்வவ்விடம் புக்கு
அதாவது –
இப் பொய்கைக்கு எவ்வாறு வந்தாய் –நாச்சியார் -3-2-
முது மணல் குன்றேறி –பெரியாழ்வார் -1-10-8-
முல்லையின் பந்தர் நீழல் மன்னியவளை புணரப் புக்கு –பெருமாள் -6-8-
முற்றத் தூடு புகுந்து–நாச்சியார் -2-9-
மச்சொடு மாளிகை ஏறி–பெரியாழ்வார் -2-7-3-
அவ்வவ்விடம் புக்கு அவ்வாயர் பெண்டிர்க்கு அணுக்கனாய்-பெரியாழ்வார் -3-2-5-என்கிறபடியே
இவர்கள் ஜலக்ரீடை பண்ணும் இடம்- விளையாடும் இடம் – மற்றும்
அவர்கள் இச்சா அனுகுணமாக திரளவும் தனியாவும் இருக்கும் இடங்களான –
பொய்கை–மணல் குன்று -முல்லைப் பந்தல்-முற்றம் –
மச்சொடு மாளிகை அவ்வவ ஸ்தலங்களில் சென்று புக்கு –

வாரிச் சிதைத்துப் பறித்துக் கிழித்து
அதாவது
துகில் வாரியும் சிற்றில் சிதைத்தும் –பெரிய திருமொழி -3-8-8-
பந்து பறித்து துகில் பற்றி –பெரிய திருமொழி -10-7-5-
கச்சோடு பட்டை கிழித்து–பெரியாழ்வார் -2-7-3- -என்கிறபடியே
குடைந்து நீராடுவார்கள் கூறைகளை வாரிக் கொள்வது –
இட்டமா விளையாடுவார்கள் இழைத்த சிற்றிலைச் சிதைப்பது –
பந்து கழல் முதலிய லீலா உபகரணங்களை பறிப்பது –
அவர்களோடு இட்டீடு கொண்டு பட்டுகள் கச்சுகள் எட்டினவற்றை பற்றி வலித்து கிழிப்பதாய்-

கோயின்மை குறும்பு செய்து
அதாவது
கோயின்மை செய்து கன்மம் ஒன்றில்லை –திருவாய் -6-2-6-
குறும்பு செய்வானோர் மகனைப் பெற்ற –நாச்சியார் -12-3–என்னும்படி
நியாமகர் அற்ற ஸ்வதந்த்ரன் செய்யும் அத்தையும் –
நியாமகர் கீழ் அடங்காமல் மூலை அடியே நடத்துவார் செய்யும் அத்தையும் செய்து –

அல்லல் விளைத்து-
அதாவது –
அல்லல் விளைத்த பெருமான் -நாச்சியார் -13-10–என்ற படி பேர் ஆரவாரம் விளைத்து –
கவரும் –
அதாவது –
ஆயர் பாடிக் கவர்ந்து உண்ணும் –நாச்சியார் -14-2–என்று திரு ஆய்ப்பாடியிலே –
பெண்களை அடைய முற்றூட்டாக விரும்பிப் புஜிக்கும் என்ற படி

உகக்கு நல்லவர்
அதாவது
அவன் ( அவனால் ) விரும்பப் படுபவர்களாய் அத்தாலே
நீ உகக்கும் நல்லவர்–திருவாய் -10-3-8–என்னும் படி அவன் உகப்புக்கு விஷயமான
வைலஷண்யத்தை உடையவர்கள் என்று நிரூபகமாய் இருக்கிற
திரு ஆய்ப்பாடியில் பெண்களுடைய பாவம் இவருக்கு உண்டு என்னும் இடம் –

கடல் ஞாலம் மின்னிடை மல்லிகை வேய்மரு பேய் முலை முனிந்து-என்னுமவற்றிலே தோன்றும்–
கடல் ஞாலம்
அதாவது –
கிருஷ்ண விரஹம் ஆற்றமாட்டாமல்
துஷ்ட காளிய திஷ்டாத்ரா கிருஷ்ணோ ஹமி திசபரா –ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-3-27–
க்ருஷ்ணோஹம் ஏஷ லலிதம் விரஜாம் யாலோக்ய தாங்தி -இத்யாதிப் படியே –ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-3-27–
அவர்கள் அனுகரித்தாப் போலே இவர் அவனைப் பிரிந்து ஆற்றாமையாலே அனுகரித்த –
கடல் ஞாலத்திலும் -5-8–திருவாய் மொழியிலும்
மின்னிடை-
அதாவது –
அந்ய விஷயத்தில் பரப்பனாகையாலும் அபேஷித சமயத்தில் வாராமல்
அவன் விளம்பித்து வந்தால் ,அவர்கள் ஊடினாப் போலே இவரும் அவனோடு ஊடின-
மின்னிடை மடவாரிலும் -6-2-திருவாய்மொழியிலும்
மல்லிகை –
அதாவது –
பகல் எல்லாம் பசு மேய்க்கப் போய் அவற்றுடன் வரும் கண்ணனை
பசுக்களின் முற் கொழுந்தில் காணாதே பிற் குழையில் வருகிறவன்
வரப் பற்றாமல் ஒரு சந்த்யையிலே பஞ்ச லஷம் குடியில் பெண்களும்
பாதக பதார்த்தங்களுக்கு இடைந்து கூப்பிட்டாப் போலே இவர் கூப்பிட்ட மாலைப் பூசலான –
மல்லிகை கமழ் தென்றலிலும்-9-9-திருவாய் மொழியிலும்
வேய் மரு-
அதாவது –
இரவு எல்லாம் கிருஷ்ண சம்ஸ்லேஷம் பண்ணி இருந்து போது விடிந்தவாறே அவன்
பசு மேய்க்கப் போகும் காலம் என்னும் நினைவாலே அவனை அணைத்துக் கொண்டு இருக்க
செய்தே போனானாகவே கருதி பாதக பதார்த்தங்களும் சம்ஸ்லேஷ தசையில் அவன்
பரிமாற்றங்களும் புறம்பும் உள்ளும் நின்று நலிகிற நலிவை அவர்கள் அவன் தனக்கு
சொல்லிக் கூப்பிட்டாப் போலே இவர் கூப்பிட்ட காலை பூசலான –
வேய் மரு தோளிணை-10-3-திருவாய் மொழியிலும் –
பேய் முலை முனிந்து
அதாவது
தனக்கு பாதங்ககங்களாய் வந்து கிட்டின -பூதனா சகட யமளார்ஜுனாதிகளை
நினைவை அவை தன்னோடு போக்கி – தன்னை நமக்காகா நோக்கித் தந்த உபாகரனை –
நான் கிட்டுவது என்றோ என்னும் –
அப்படி செய்த கிருஷ்ணனான உபகாரனுக்கு என் ஸ்த்ரீத்வம் இழந்தேன் என்றும் சொன்ன
பேய் முலை உண்டு-5-3-8–(மாசறு சோதி மடலூர முயன்ற பதிகம்)
முனிந்து சகடம் உதைத்து-7-3-5-(நிகரில் முகில் வண்ணன் -அவன் முனிவுக்கு அகப்பட்ட நான்
உங்கள் முனிவுக்கு மீழுவேனோ -ஹிதம் பிரியம் அவனது- உங்களது அஹிதம் அபிரியம் )
என்கிற பாட்டுகளிலும் தோன்றும் ..

முழிசி ஆவர் என்னும் தேன் மொழியாலே கோகுலத்தை மறப்பிக்கும் நகர ஸ்திரீகள் பாவம்
அதாவது
ஸ்ரீ மாலாகாரரும் கூனியும் கொடுத்த திரு மாலையையும் சாந்தையும் சாத்திக் கொண்டு –
ராஜ மார்க்கத்தில் எழுந்து அருளி குவலயா பீடம் நிரசனம் பண்ணி நிற்கிற போது –
முழுசி வண்டாடிய –பெரிய திருமொழி -2-8-7-
ஆவர் இவை செய்வது அறிவார் -பெரிய திருமொழி -3-3-7–என்கிற
பாட்டுகளில் சொல்லுகிற படி ஒப்பனை அழகிலும் வடிவு அழகிலும் .குவலயா பீட நிரசின சேஷ்டிதங்களிலும் தோற்று –
சக்க்ய பஸ்யத க்ருஷ்ணஸ்ய முகமத்ய ருணேஷணம்
கஜ யுத்த க்ருதா யாஸஸ் வேதாம்பு கணி காசிதம்–ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-20-53– -இத்யாதிப் படியே
அந்யோன்யம் தங்களில் பேசுகிற
மழறு தேன் மொழி -திருவாய் -6-2-5–என்கிறபடியே
மழலை தேன் போல இனிதான பேச்சுக்களாலே –
மதுரம் பிராப்ய கோவிந்த -கதம் கோகுல மேஷ்யதி நகர ஸ்திரீ கலா லாப
மதுஸ் ரோத்ரண பாஸ்யதி -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-8-13–என்று ,
கோகுலத்தில் பெண்கள் பேசும்படி அவன் கோகுலத்தை மறக்கப் பண்ணும் ஸ்ரீ மதுரையில் உள்ள
பெண்களின் பாவம் இவருக்கு உண்டு என்னும் இடம் —

மற்பொரு விறல் கஞ்சனை என்னும வற்றிலே தோன்றும்
அதாவது
மற்பொரு-
மற்பொரு தோளுடை மாயப் பிரானுக்கு என் கற்புடை யாட்டி இழந்தது கட்டே -திருவாய் -6-6-10-என்று
பிரபலரான மல்லரோடு தோளில் சாந்து அழியாதபடி மல்லை பொருத ஆச்சர்ய பூதனான
உபாகரனுக்கு அறிவுடையாளாய் இருக்கிற என் பெண் தனக்குள் அடங்கலும் இழந்தாள் என்றும் –
விறல் கஞ்சனை
அதாவது
விறல் கஞ்சனை வஞ்சனை செய்தீர் உம்மை தஞ்சம் என்று இவள் பட்டனவே -திருவாய் -2-4-8–என்று
பெரு மிடுக்கனான கம்சனை அவன் வஞ்சனை அவனோடு போம் படி பண்ணினவரே !
உம்மையே தனக்கு தஞ்சம் என்று இவள் பட்ட வெள்ளம் என் தான் என்று தமக்கு
பரிவானவர்கள் சொன்ன பாசுரத்தாலே -மல்லரையும் கம்சனையும் நிரசித்த கண்ணனை
அச் சுவடோடே அனுபவிக்க ஆசைப்பட்டமையை பேசின பாசுரத்தில் தோன்றும் —

நரகனைத் தொலைத்த கரதலத்த– என்றும் ,
நரகன் தன்னை சூழ் போகி வளைத்து எறிந்து கன்னி மகளிர் தம்மைக் கவர்ந்த -என்றும்
சொல்லுகிறபடி நரகாசுரன் கன்னிகைகளாக கொண்டு வந்து திரட்டி வைக்க -அவனை நிரசித்துப் பொகட்டுப்
பரிக்கிரஹித்தவர்களாய்
பதினாறாம் ஆயிரவர் தேவிமார் –
பல்லாயிரம் பெரும் தேவிமார் –
எண்ணிறந்த பெரும் தேவிமார் -என்கிறபடி –
ஆயிரம் இரண்டாயிரம் இல்லாமையாலே பல்லாயிரம் என்றும் ,
எண்ணிறந்த என்றும் சொல்லப் படுபவராய்-ஷோடச ஸ்திரீ சஹச்ராணி- என்று
புராண சித்தரான பதினாறாயிரம் தேவிமார் பாவம் இவர்க்கு உண்டு என்னும் இடம் –

நூற்றுவரை அன்று மங்க நூற்ற நிகரில் முகில் வண்ணன்
நேமியான் என்நெஞ்சம் கவர்ந்து எனை ஊழியான்-என்று துரியோதனாதிகள்
மண் உண்ணும் படி மந்தரித்த கிருஷ்ணனுக்கு நெஞ்சு பறி கொடுத்தமை சொன்னதிலும் –
துரி யோதனாதிகளை நிரசிக்கைக்காக அவன் எழுந்து அருளின போது அவர்கள்
பிரிவாற்றாமையால் -கண்ணாஞ் சுழலை இட்டு -குரரி விலபசி த்வம் வீத நித்ரா
நசேஷ ச்வபதி ஜகதி ராத்ராமீச்வர க்ரச்தபோதே வயமிவி சகி கச்சித் காட நிர்வின்ன சேதா
நளின நயன ஹாசோ தார லீலேஷன ந–இத்யாதிகளாலே ப்ரலாபித்தால் போலே –
நாரை அன்றில் தொடக்கமான வற்றுக்கு வெளுப்பு -விரஹ கூப்பாடு ,முதலானவை
நித்ய ஸ்வாபம் என்று அறியாதே தமக்கு போலே பகவத் விரஹஜமான வைவர்ண்யாதிகளாகக் கருதி ,
அவற்றுக்காக தாம் நோவு பட்டு பிரலாபித்த வாயும் திரை உகளிலும்

தேர்பாகனார்க்கு இவள் சிந்தை துழாய் திசைக்கின்றதே -என்று
ஆஸ்ரிதருக்காக சாரத்தியம் பண்ணினவனை அனுபவிக்கைக்கு இவள் அந்த கரணம் கலங்கி அறிவு கெடுகிறது என்று
ஆஸ்ரிதருக்காக சாரத்தியம் பண்ணினவனை அனுபவிக்கைக்கு இவள்
அந்த கரணம் கலங்கி அறிவு கெடுகிறது என்று தொடங்கி
வண் துவராவதி மன்னனை ஏத்துமின் -ஏத்தலும் தொழுது ஆடுமே என்று
ஸ்ரீமத் த்வாரகைக்கு நிர்வாகனான அவனை மங்களாசாசனம் பண்ண இவள்
நோவு பரிஹ்ருதமாம் என்று தலைக் கட்டின -தீர்ப்பாரை யாம் இனியிலும் தோன்றும் என்றபடி-

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading