சூரணை -125-
இப்படி பிரதான மகிஷி களோடும் மற்றும் பகவத் பரிக்ரஹம் உடையாரோடும் இவருக்கு சாம்யம் உண்டே ஆகிலும் –
அல்லாதார் எல்லாம் இவர் ஒருவருக்கு ஒப்பாம் இத்தனை ஆகையாலே
சர்வதா சாம்யம் ஜனக குல சுந்தரியான பிராட்டி யோடு என்கிறார் அடுத்து —
இரான் எனில் நசவாகக் குழைத்தவன்
பின் தொடர விருந்த வன் சிறையிலும்
விதி தன் புணைவன் என்று
ஜீவிதாதிகளால் குறைவின்றி
மாயும் வகை விஷ சஸ்த்ரங்கள் தேடி
வில் வலவா ஹா என்று
இரக்க மொழாக் கொடுமைகள் சங்கித்து
என்னையும் ஜீவந்தீம் என்று ஆள்விட்டுச்
சுடரை அடைந்து
அகலகில்லா முற்றுவமை பெருமகளோடே.–
(1–இரான் எனில் நசவாகக் குழைத்தவன் பின் தொடர விருந்த வன் சிறையிலும்–சிறை வாசம் –
அங்கு இவளே சிறையில் -இங்கு அவன் வைக்க
2–விதி தன் புணைவன் என்று–சிறை வாசத்திலும் பர உபதேசம்
ராவணன் திருந்தவில்லை – இங்கு ஊரும் நாடும் தன்னைப் போலே ஆக்கி
3–ஜீவிதாதிகளால் குறைவின்றி-அத் தலைக்கு உருப்பில்லாத ஆத்மாத்மீயங்களை உபேஷிக்கையாலும்-
மால் விரும்பாத அங்கு -திருமால் விரும்பாத இவர்
4 -மாயும் வகை விஷ சஸ்த்ரங்கள் தேடி –முடியும் வகை தேடுகையாலும்
5–வில் வலவா ஹா என்று-அவன் வீரப்பாட்டைச் சொல்லிக் கூப்பிடுகையாலும்-
6 -இரக்க மொழாக் கொடுமைகள் சங்கித்து -என்கிற படி நைர்குண்ய சங்கை பண்ணுகையாலும்
7–என்னையும் ஜீவந்தீம் என்று ஆள்விட்டு -ஆற்றாமை தோற்றதூது விடுகையாலும்-
8 -சுடரை அடைந்து-அநாதியான பிரகாரதயா சேஷத்வத்தாலே – அவனோடு தாம் நித்ய சம்யுக்தராய் பேசுகையாலும்–
பிரபாவை அடைந்து என்று இருந்தால் பிராட்டி ஆழ்வார் இருவர் வார்த்தைகளும் இருக்கும் –
இங்கு முற்று உவமை என்பதால் ஒன்றையும் மட்டும் தானே சொல்ல வேண்டும்
அகலகில்லா முற்றுவமை பெருமகளோடே.–அகலகில்லேன் சீதா வாக்கியம் தானே –
இப்படிகளால் பிரிவில் தரியாமை இறே இச் சூர்ணையில் ப்ராசுர்யேன பிரதி பாதிக்கப் பட்டது -)
இரான் எனில் நசவாகக் குழைத்தவன் பின் தொடர விருந்த வன் சிறையிலும்-
அதாவது-
இரான் எனில் நசவாக-
அதாவது-
நச சீதா த்வயா ஹீநா நஸா அஹம் அபி ராகவா முஹூர்த்தம் அபி ஜீவாவோ
ஜலான் மத்ஸ்யா விவோத் த்ருத்வ –அயோத்யா -53-31– -இத்யாதி ஸ்லோகத்தின் படி
ஜலாதுத்ருமான மத்ஸ்யம் போலே விஸ்லேஷத்தில் சத்தா ஹானி பிறக்கும்படி –
மனச்வீ தத்கதஸ் தத்ய–பால –77-25- -என்று
ஜாதி குணங்கள் த்ர்வ்யத்துக்கு பிரகாரமாய் பிரிக்க ஒண்ணாதபடி இருக்குமா போலே
பிரிக்க ஒண்ணாதபடி ஒரு நீராக கலந்த சக்கரவர்த்தி திருமகன் –
உண்ணாது உறங்காது ஒலி கடலை ஊடருத்து –நாச்சியார் -11-7–
லங்கத்வாரத் அளவும் பின் தொடர்ந்து வரும் படியாக –
தனி சிறையில் விளப்புற்ற–திருவாய் -4-8-5- -என்கிறபடி-
ஒருத்தி சிறை இருந்து ரஷிக்கும் படியே -என்று லோஹம் அடையக் கொண்டாடும் படி
தேவ ஸ்திரிகள் சிறையை விடுவிக்கைக்காக பிராட்டி தனிப் பட்டு சிறை இருந்தாப் போலே –
இரான் எனில் நச ஆக
அதாவது
மராமரம் எய்த மாயன் என்னுள் இரான் எனில் -பின்னை யான் ஒட்டுவேனோ –திருவாய் -1-7-6-
என்று சக்கரவர்த்தி திருமகன் என் பக்கல் இரேன் என்று அகலுமாகில் பின்னை நான் தொங்குவேனோ என்று
விரஹத்தில் சத்தா ஹானி பிறக்கும் படியாக –
குழைத்தவன்
அதாவது
இலங்கை செற்றாய்—- உன்னை என்னுள்ளே குழைத்த எம் மைந்தா –திருவாய் -2-6-9-என்கிறபடி ,
ஏக தத்வம் என்னலாம் படி சம்ஸ்லேஷித்தவன்
பின் தொடர இருந்த வன் சிறையிலும்-
அதாவது
பிரிவில் தம் ஆற்றாமை குளப்படியாம் படி கடல் போன்ற ஆற்றாமையோடே விண்ணுலகம் தர விரைந்து –
தாம் இருந்த இடத்து ஏற வரும்படி –
வன் சிறையில் அவன் வைக்கில் -திருவாய் -1-4-1-என்கிறபடியே –
சம்சாரிகள் சிறையை விடுகிக்கைக்காக அவன் சம்சாரத்தில் இருக்க இருந்த வன் சிறையிலும் –
விதிதன் புணைவன் என்று
அதாவது —
அச் சிறை இருப்பிலும் அவள் -விமுகனான ராவணனுக்கு –
விதிதஸ் சஹ தர்மஞ்ச்ஞஸ் சரணாகத வத்சலா
தேன மைத்ரீ பவது தே யது ஜீவிதுமிச்சசி ஸூந்தர -21–20–என்று
நீ பிராணனோடு இருக்க வேண்டி இருந்தாய் ஆகில் -சரணாகத தர்மஜ்ஞருமாய் -சரணாகத வத்சலருமாய் –
பிரசித்தராய் இருக்கும் பெருமாளோடே உறவு பண் என்று ஹிதோ உபதேசம் பண்ணினாப் போலே ,
புணைவன் என்று
அதாவது –
இவரும் விமுகரான சம்சாரிகளுக்கு -புணைவன் பிறவி கடல் நீந்துவார்க்கே –திருவாய் -2-8-1-
என்று சம்சார சமுத்திர திதீஷர்களுக்கு தன் நிஸ்தரண உபாயம் அவன் என்று
ஹித உபதேசம் பண்ணுகையாலும்
ஜீவிதாதிகளால் குறைவின்றி –
அதாவது
அவள்-நஹிமே ஜீவிதே நார்த்தோ நைவார்த்தைர் நச பூஷணை
வசந்த்யா ராஷசீ மத்யே விநா ராமம் மஹாரதம் –ஸூ ந்தர –26-5- என்று
பெருமாளைப் பிரிந்து ராஷசிகள் நடுவில் இருக்கிற எனக்கு பிராணாதிகளால் என்ன பிரயோஜனம் என்று
தத் விநியோகத்துக்கு புறம்பானவற்றை உபேஷித்தாப் போலே இவரும் –
மாறாளன் கவராத மணிமாமை குறைவிலம்-4-8-1–என்று தொடங்கி அத் தலைக்கு
உருப்பில்லாத ஆத்மாத்மீயங்களை உபேஷிக்கையாலும்-
மாயும் வகை விஷ சஸ்த்ரங்களை தேடி-
அதாவது – ,
அவள் ஆற்றாமையின் அதிசயத்தாலே –
விஷஸ்ய தாதா நஹி மேஸ்தி கச்சித் சஸ்த்ரஸ்ய வா வேஸ்மநி ராஷசஸ்ய -ஸூ ந்தர –28-16-என்று
உயிர்க் கொலையாக்கி வைத்தவனுடைய க்ருஹத்தில் நற் கொலை ஆக்குவது இத்தனை விஷம் தருவார் இல்லையோ ?-
விஷம் போலே சிறிது போது நின்று கொல்லுகை அன்றிக்கே , அப்போதே முடிப்பதொரு சஸ்த்ரம் தருவார் இல்லையோ ?-என்று
முடியும் வகை தேடினாப் போலே
இவரும் -மாயும் வகை அறியேன்–திருவாய் -5-4-3-என்று முடியும் வகை தேடுகையாலும் —
ஹா வில்வலவா என்று –
அதாவது
அவள் அதிமாத்ர துக்கிதையாய் ரஷகரான பெருமாள் உடைய சௌ ர்யாதிகளை நினைத்து –
ஹா ராமா–ஸூ ந்தர -28-8- -என்று கூப்பிட்டாப் போலே -இவரும் –
புணரா நின்ற மரம் எழ அன்று எய்த ஒரு வில் வல வா வோ-6-10-5- -என்று
அவன் வீரப்பாட்டைச் சொல்லிக் கூப்பிடுகையாலும்-
இரக்கம் எழா கொடுமைகள் சங்கித்து –
அதாவது
அவள் தன் ஆற்றாமைக்கு உதவ வந்து முகம் காட்டாமையாலே ,
க்யாத ப்ராஞ்ச க்ருதஞ்சச் சசா னுக்ரோசச ராகவ ஸத் வ்ருத்தோ நிரநுக்ரோசாஸ்
சங்கே மத் பாக்ய ஸங்க்ஷ்யாத் ஸூந்தர –26-13- -என்று
பெருமாளை நிர்க் குணராக சங்கித்தாப் போலே -இவரும்
இரக்கம் எழீர் இதற்கு என் செய்கேன் அரக்கன் இலங்கை செற்றீர்க்கே –திருவாய் -2-4-3–
வாழா நெடும் துன்பத்தள் என்று இரங்கார் அம்மனே !
இலங்கை குழா நெடும் மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே –திருவிருத்தம் –36-என்று
இத் தசையில் கிருபை பண்ணாமல் இருக்கிற கொடுமையாலே –
அறிவொன்றும் சங்கிப்பன்–திருவாய் -8-1-7–என்கிற படி நைர்குண்ய சங்கை பண்ணுகையாலும் ..
என்னையும் ஜீவந்தீம் என்று ஆள் விட்டு –
அதாவது –
அவள்– ஜீவந்தீம் மாம் எதா ராமஸ் சம்பாவயதி கீர்த்திமான்
தத்த்வயா ஹனுமன் வாச்யோ வாசா தர்ம மவாப்நுஹி—ஸூ ந்தர -39-10-என்று
சத்தையோடு கிடக்கிற என்னை இச்சத்தை போவதற்கு முன்னே யாதொருபடி பெருமாள் வந்து
நோக்கிக் கொள்வார் அப்படி அவருக்கு விண்ணப்பம் செய் என்று தூது விட்டாப் போலே -இவரும் –
ஏறு சேவகனாருக்கு என்னையும் உளள் என்மின்களே -6-1-10-என்று
என் சத்தை கிடந்தமையை அவனுக்கு அறிவியுங்கோள் -என்று ஆற்றாமை தோற்ற
தூது விடுகையாலும்-
சுடரை அடைந்து –
அதாவது –
அவள்- அநந்ய ராகவேணாஹம் பாஸ்கரேண ப்ராயாத –ஸூ ந்தர -21-15-என்று
ஆதித்யனோடு பிரபை போலே நான் பெருமாளோடு அனந்யையாய் இருப்பன் என்றார் போலே –இவரும் –
அரக்கியை மூக்கு ஈர்ந்தாயை –சுடரை–அடியேன் அடைந்தேன் முதல் முன்னமே -திருவாய் -2-3-6–என்று
அநாதியான பிரகாரதயா சேஷத்வத்தாலே – அவனோடு தாம் நித்ய சம்யுக்தராய் பேசுகையாலும்–
அகலகில்லா-
அதாவது –
அவள்-அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா -திருவாய் -6-10-10-என்கிறபடியே
உன்னை ஷண காலமும் அகல சக்தை அல்லேன் என்னுமா போலே -இவரும் –
அடியேன் உனது பாத கமலம் அகலகில்லேன் இறையும் -6-10-9-என்று
உன்னை ஷண காலமும் பிரிய சக்தன் அல்லேன் என்கையாலும் —
முற்றுவமை பெருமகளோடே –
அதாவது –
இவருக்கு சர்வதா சாதுர்சயம்-பெருமைகள் பேதை மங்கை–பெரிய திருமொழி -6-5-5–என்கிற
பெரிய பிராட்டியாரோடே– என்ற படி —
இரான் எனில் நசவாக -தொடங்கி-அகலகில்லா -என்று தலைக் கட்டுகையாலும் –
ஜீவிதாதிகளால் குறைவருதி முதலாக ஆள்விடுகை ஈறாக நடுச் சொன்னவையும்
விரஹ துக்க அசஹத்வ கார்யங்கள் ஆகையாலும் ,
பிரிவில் தரியாமை இறே இச் சூர்ணையில் ப்ராசுர்யேன பிரதி பாதிக்கப் பட்டது —
—————————————–
சூரணை -126-
இப்படி பிராட்டியோபாதி பிரியில் தரியாமைக்கு இவர் ஒருவருமேயோ ?
பின்னையும் உண்டோ என்னும் ஆகாங்ஷையில் அருளிச் செய்கிறார் மேல் —
பிரியில் இலேனுக்கு
இளம் கோவும்
அக்குளத்தில்
மீன் இறே–
அதாவது
நிருபாதிக சேஷியானவனை பிரியில் -நின்னால் இலேன் காண்–2-3-7- என்று இலர் ஆகைக்கு –
நேர் இழையும் இளம் கோவும் பின்பு போக -பெருமாள் -9-2–என்ற படி
பிராட்டியோபாதி பின் தொடர்ந்து போன இளைய பெருமாளும் -நிறுத்தி போவதாகப் பெருமாள் அருளிச் செய்த போது –
நச சீதா த்வயா ஹீநா நஸா அஹம் அபி ராகவா முஹூர்த்தம் அபி ஜீவாவோ
ஜலான் மத்ஸ்யா விவோத் த்ருத்வ –அயோத்யா -53-31- -என்கையாலே
அந்த ஜலத்தில் மத்ஸ்யம் இறே என்கை–
இத்தால் பிராட்டியை போலே -பிரியில் முடிகைக்கு இளைய பெருமாளும்
இவரும் ஒக்கும் என்றது ஆய்த்து–
(ப்ராசங்கிகமான சூர்ணிகை இது -அதனால் இவரும் இளைய பெருமாளும் என்று வியாக்யானம் –
மேலே பலருடன்–தம்பிகள் மூவர் -நெருங்கிய பக்தர் ஆறு பெயர் – இவர்களுடன்
சாம்யமும் உத்கர்ஷமும் அருளிச் செய்யப் போகிறார்
பக்தியின் தன்மைகளை சொல்லி இவருடைய சஹஜ பக்திக்கு மெருகூட்டுகிறார் இவற்றால் )
—————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply