சூரணை -54-
ஆக இப்படி இப் பிரபந்த சதுஷ்டத்யத்துக்கும் வேத சாம்யத்தை சாதித்தார் கீழ் ..
இங்கன் அன்றிக்கே இது தனக்கு வேதோபப்ருஹ்மண சாம்யமும் சொல்லுவார்கள் என்கிறார் மேல் ..
அன்றிக்கே
ஸ்வரூப குண விபூதி சேஷ்டிதங்களை
விசதமாக்குகிற
பஞ்சராத்ர
புராண
இதிகாசங்கள்
போலே
நீலபாரூ போக்தி
தெரியச் சொன்ன
வேத உப ப்ருஹ்மணம்
என்பர்கள்-
அதாவது இப்படி வேத சாம்யம் சொல்லுகை அன்றிக்கே
பகவத் ஸ்வரூப குண விபூதி சேஷ்டிதங்களுக்கு எல்லாம் -பிரதிபாதகமாய் இருந்துள்ள வேதத்தில்
யத்த தத்ரேச மக்ராஹ்ய மகோதர மவர்ண மசஷுஸ் ச்ரோத்ரம் தாதா பாணி பாதம்
நித்யம் விபும் சர்வகதம் ஸூ ஸூஷ்மம் ததவ்யயம்யத் பூதயோநிம் பரிபஸ்யந்தி தீரா -என்றும்
சத்யம் ஞான அநந்தம் ப்ருஹ்ம-என்றும்
நிஷ்கலம் ,நிஷ்க்ரியம் ,சாந்தம் நிரவத்யம் ,நிரஞ்சனம் நிர்குணம் -இத்யாதிகளால்
சொல்லப் படுகிற ஸ்வரூபத்தையும்-
யஸ் சர்வஜ்ஞஸ் சர்வவித்–முண்டோகம்
பராஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே ஸ்வாபாவிகீ ஞான பல க்ரியா ச–ஸ்வேதாஸ்வதரம்
சத்ய காமஸ் சத்ய சங்கல்ப -சாந்தோக்யம் –இத்யாதிகளால் சொல்லப் படுகிற குணங்களும்-
ஸ்ருணு தத் பரமம் ஸூஷ்மம் சர்வஞ்ஜம் சர்வப்ருத் ததா ,ஞான ரூபம்
அநாதி அந்தம் அவிகாரி நிராமயம் அசஷுச் ஸ்ரோத்ரம் அஸ்பர்சம்
அபாணி சரணம் த்ருவம், நாம ஜாத் ஆதி ரஹிதம் அவர்ணம் அ குணம் த்வபி
விச்வஸ்ரவோ ,விச்வ சஷூர் , விச்வ பாணி பதம் பரம் , அ சக்தம் அ சரம்
சாந்தம் ஸ்வயம் ஜோதிரநூபமம் ,தூரஸ்த்தம் அந்திக சரம் ,ஜ்ஞான கம்யம் ,
நிரஞ்சனம் ,பூத பர்த்ரு சமம் ,ஜ்யோதிர் ஜ்யோதிஷாம் தமஸ பரம் அஷரம்
சர்வ பூதஸ்தம் தத் விஷ்ணோ பரமம் பதம்–ஸ்ரீ பாஞ்ச ராத்ரம் -இத்யாதிகளாலும்
அப்ராக்ருத குண ஸ்பர்சாத் நிர்க் குணம் பரிகீயதே ,ஸ்ருணு நாரத
ஷாட் குண்யம் கத்திய மானம் மயானன.அ ஜடம் ஸ்வாத்ம சம்போதி
நித்யம் சர்வ அவகாஹனம் .ஜ்ஞானம் நாம குணம் பிராஹு பிரதமம்
குண சிந்தகா . ஸ்வரூபம் ப்ரஹ்மணஸ் தச்ச குணச்ச பரிகீயதே
ஜகத் பிரக்ருத் பாவோய சா சக்தி பரிகீர்த்திதா கர்த்ருத்வம் நாம
யத் தஸ்ய ஸ்வாதந்த்ர்யம் ,பரிப்ரும்ஹிதம் ஐஸ்வர்யம் நாம தத் ப்ரோக்தம்
குண தத்வார்த்த சிந்தகை ,ச்ரம ஹானிஸ்து யாதஸ்ய சததம் குர்வதோ ஜகத்
பலம் நாம குணஸ் தஸ்ய கதிதோ குண சிந்தகை தஸ்யோபாதான பாவேபி
விகார விரஹோ ஹி யவீர்யம் நாம குணஸ் சோயம் அச்யுதத்வா பராஹ்வய , சக கார்ய நபேஷா
யாதத் தேஜஸ் சமுதாஹ்ருதம்–அஹிர் புத்ன்யா சம்ஹிதை -இத்யாதிகளால் விசதமாக்குகிற பஞ்ச ராத்ரம் போலேயும்-
யாதோ வா இமானி பூதானி ஜாயந்தே ,யேன ஜாதானி ஜீவந்தி
யத் பிரயந்தி அபிசம்விசந்தி–தைத்ரியம்
ப்ராஹ்மணோஸ்ய முகம் ஆசீத் பாஹு ராஜன்ய க்ருத ஊரூ ததஸ்ய யத் வைஸ்ய
பத்ப்யாம் ஸூத்ரோ அஜாயத–புருஷ ஸூக்தம் –
அந்த ப்ரவிஷ்ட சாஸ்தா ஜனானாம் சர்வாத்மா -ஆரணம் –
பாதோஸ்ய விஸ்வா பூதானி –புருஷ ஸூக்தம் –தைத்ரியம் –இத்யாதியாலும்
ச ஹோவாச மஹிமான ஏ வைஷாம் ஏதே த்ரயஸ் த்ரிம் ச தேவ தேவா இதி
கதமேத த்ரயஸ் த்ரிம்சதிதி அஷ்டவ் வஸவ் ஏகாதச ருத்ரா த்வாதச ஆதித்ய
த ஏகரிம்சத் இநதிரஸ் சைவ பிரஜாபதிஸ் ச த்ரயச்த்ரிசம்த்-ப்ருஹதாரண்யம்- -இத்யாதியாலும்
பவ்திமாப்யோ கோபவநாத் கோபவன , கௌசிகாத் கௌசிக ,கௌடிந்ண்யாத் கௌடிண்ந்ய
சாண்டில்யாத் சாண்டில்ய ,கௌசிகாச்ச ,கௌதமாச்ச ,கௌதம ,அக்நிவைச்யா அக்னிவைஸ்ய
சாண்டில்யாத் -ப்ருஹதாரண்யம்-இத்யாதியாலும்
ஜகஜ் ஜென்மாதிகளையும் ப்ராஹ்மணாதி வர்ணங்களையும் தேவ ஜாதியில் வைவித்யத்தையும்
ருஷி வம்சாதிகளையும் பிரதிபாதிக்கிற வாக்யங்களால் சொல்லப் படுகிற விபூதியை
சர்க்கச்ச பிரதி சர்கச்ச வம்சோ மன்வந்த்ராணி ச ,வம்சானுசரிதஞ் சைவ புராணம் பஞ்ச லஷணம்-அமரம்- என்கிறபடியே
சர்க்காதிகளையும் ,வம்சங்களையும் , மன் வந்தரங்களையும் ,வம்சானு சரிதங்களையும் ,
விஸ்தரேண பிரதி பாதிக்கிற முகேன விசதமாக்குகிற புராணம் போலவும்-
உத்ர்ர்தாசி வராஹேண -தைத்ரியம்
இதம் விஷ்ணு விசக்ரமே த்ரேதா நிததே பதம் –ஸ்ரீ விஷ்ணு ஸூக்தம் -இத்யாதிகளாலே சொல்லப் படுகிற
அவதார சேஷ்டிதங்களை- ஸ்ரீ ராமாயணம் நாராயண கதாம் -என்னும் படி
ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ணா அவதார சேஷ்டிதங்களை விஸ்தரேண பிரதி பாதிக்கையாலும்-
அத விஷ்ணுர் மகா தேஜ அதித்யாம் சமஜாயதே ,வமானம் ரூபமாஸ்த்தாய,வைரோசநிமுபாகமத் ,த்ரீன் க்ரமாநத பிஷித்வ
பிரதி க்ருஹ்ய ச மாதவ ஆக்ரம்யலோகன் லோகாத்மா சர்வ லோகே ஹிதே ரத
மஹேந்த்ராய புன பிரதாந் நியம்ய பலிமோஜசா––பால காண்டம் -29-19-இத்யாதிகளாலே
ப்ராசங்கிகமாக அவதாராந்தர சேஷ்டிதங்களையும் ஸ்ரீ ராமாயணத்தில் சொல்லுகையாலும் ,
மோஷ தர்மத்திலே ஸ்ரீ ஜன்ம ரகஸ்யத்திலே-அவதார ரஹஸ்யத்திலே –நார தேனைவ முக்தச்து பிரத்யுவாச ஜனார்தனா -என்று தொடங்கி
பூர்வம் மஸ்த்யோ பவிஷ்யாமி ஸத்தா பயிஷ்யாமி மேதிநீம் வேதாம்ஸ்வை உத்தரிஷ்யாமி மஜ்ஜமானான்
மகார்ணவே,த்வதீயம் கூர்ம ரூபேண ஹேம கூட சமப்ரபம் ,மந்தரம் தாரைஷ்யாமி
அமிர்தார்த்தே த்விஜோத்தம –சாந்தி பர்வம் –348-3-4-இத்யாதியாலே
தசாவதார சேஷ்டிதங்களையும் விசதமாக்கும் இதிகாசம் போலவும்-
நீல தோயாத மத்யஸ்தா வித்யுத்லேகேவ பாஸ்வர –நாராயண அநுவாகம்
மனோமய பிராண சரீரோ பாருப -முண்டகம்-இத்யாதிகளாலே விக்ரஹத்தை சொன்ன இத்தை
ஆதி மத் யந்தம்–விக்ரஹத்தை பல இடங்களிலும் வர்ணித்து கொண்டு பேசுகையாலே-
தெரியச் சொன்ன-திருவாய் -6-9-11–என்கிற படியே விசதமாக்கி சொன்ன
வேத உப ப்ரஹ்மணம் என்று இத்தை சொல்லுவார்கள் என்கை-
இப் பிரபந்த சதுஷ்டயமும்
முழு நீர் முகில் வண்ணன்-திருவிருத்தம் -2–என்றும்
மைப்படி மேனி-திருவிருத்தம் -94-
பச்சை மேனி–திருவாசிரியம்-1-
தாமரைக் காடு–திருவாசிரியம்-5-
நற் பூவை பூவீன்ற–பெரிய திருவந்தாதி –1-
கார் கலந்த மேனி–பெரிய திருவந்தாதி –86-
துயர் அறு சுடர் அடி–திருவாய்-1-1-1-
புனக் காயா நிறத்த–திருவாய்-10-10-6-
என்று உபக்கிரமம் பிடித்து உபசம்ஹாரம் பரியந்தம்
விக்ரஹத்தை வர்ணித்து கொண்டு செல்லா நிற்கும் இறே ..
தெரியச் சொன்ன–திருவாய்-6-9-11- -என்கிற இது திருவாய்மொழி சந்தையே ஆகிலும்
உப ப்ரஹ்மணத்வம் பிரபந்தாந்தரங்களுக்கு ஒக்கும் என்றே கொள்ள வேணும்
வேதத்வம் சொன்ன போது சாதாரணமாக சொன்னது இங்கும் ஒக்கும் இறே
பஞ்ச ராத்ர புராண இதிகாசங்களிலும் இப் பிரபந்தத்திலும் ஸ்வரூபாதி சம்ஸ்தார்தங்களும் சொல்லப் பட்டதே ஆகிலும்
இவ்வோ அர்த்தங்களில் இவற்றுக்கு நோக்கு ஆகையாலே- இப்படி வகை இட்டு சொல்லக் குறை இல்லை-
———————————————————–
சூரணை -55-
உப ப்ருஹ்மணத்வ சாம்யம் உண்டானாலும் ,இவ் ஆழ்வார் பிரபந்தங்களுக்கு உள்ள ஏற்றம்
ஆர்ஷமான புராணாதிகளுக்கு இல்லை என்னும் இடத்தை அறிவிக்கைக்காக ,
உபயத்தின் உடையவவும் உத்பத்தி மூலங்களை அருளி செய்ய கோலி ,பிரதமம்
ஆர்ஷோ பிரபந்த உத்பத்தி மூலத்தை அருளி செய்கிறார்-
கல்பாதியில் தோற்றிற்று வர்ணிக்கும்
சதுர் முகன் சந்தஸூம்
மோஹ சாஸ்திர பிரவர்தகன்
பிண சுடலை வெந்தார் அக்கும் ஆறும் அணிந்து
ஏறி ஏறி சுழன்று ஆடும் ஆலமமர் பிச்சுத் தெளிந்து
தான் வணங்குமாறு உரைக்க கேட்ட
சஜாதீயர் பிரசாதமும் ஆர்ஷ மூலம்-
அதாவது
யஸ்மின் கல்பேது யத் ப்ரோக்தம் புராணம் ப்ரஹ்மணா புரா தஸ்ய தஸ்யது
மஹாத்மியம் தத் ஸ்வரூபேண வர்ண்யதே –ஸ்ரீ மாத்ஸ்ய புராணம் –என்கிறபடியே
குண த்ரய வஸ்யனான தனக்கு கால பேத குண த்ரயமும் சங்கீர்ணமாயும்
அதில் ஒரு குணம் பிரசுரமாய் இருக்கும் விசேஷத்தை இட்டு –
சங்கீர்ணாஸ் சாத்விகாஸ் சைவ ராஜசாஸ் தாமசாஸ் ததா-ஸ்ரீ மாத்ஸ்ய புராணம் – -என்று
சங்கீர்ணங்கள் என்றும் சாத்விகங்கள் என்றும் ,ராஜசங்கள் என்றும் ,தாமசங்கள் என்றும்
சொல்லப் படுகிற அஹஸ் ஸூக்களாகிற கல்பங்களுடைய ஆதிகளிலே உத்ரிக்தமான
குணானுகுனமான பிரதி பந்தம் ஆன படியே , –
அக்னேஸ் சிவஸ்ய மஹாத்மியம் தாமசேஷு பிரகீர்திதம் ராஜசேஷு ச மஹாத்மியம் அதிகம் ப்ரஹ்மணோ விது–
சாத்விகேஷ்வத கல்பேஷு மஹாத்ம்யமதிகம் ஹரே தேஷ்வேவ யோக சம்சித்தா கமிஷ்யந்தி பராம் கதிம் ,
சங்கீர்னேஷூ சரஸ்வத்யா பித்ரூணாம் ச நிகத்யதே –ஸ்ரீ மாத்ஸ்ய புராணம்-என்கிற படி –
தாமச கல்பங்களிலே அக்னி சிவர்களுடைய மகாத்ம்யத்தையும்
ராஜச கல்பங்களில் தன்னுடைய மகாத்ம்யத்தையும்
சாத்விக கல்பங்களில் சர்வேஸ்வரனுடைய மகாத்ம்யங்களையும்
சங்கீர்ண கல்பங்களில் பித்ரு சரஸ்வதியின் மகாத்ம்யத்தையும்
வர்ணியா நிற்கும் சதுர் முகனுடைய –
மச் சந்தா தேவ தே ப்ரஹ்மன் பிரவ்ருதேயம் சரஸ்வதி–பால காண்டம் 2-30- என்கிற படி இவன் வாக்கிலே
இச் சப்தம் பிறக்கைக்கு அடியான அனுக்ரக கார்யமான நினைவும் ..
சந்தஸ் என்கிற இது நினைவு என்றே இவ் இடத்தில் கொள்ள வேண்டும் .
சந்தம் என்றே நினைவுக்கு வாசகம் .
சந்தஸ் என்கிற இதுவும் நினைவுக்கு வாசகமாக வந்த இடங்களிலோ கண்டு கொள்வது .
ஆக இப்படி இருந்துள்ள சதுர் முகன் நினைவும் –
மோஹ சாஸ்திர பிரவர்தகன்
அன்யம் தேஹி வரம் தேவ பிரசித்தம் சர்வ ஜந்துஜூ மர்த்த்யோ பூத்வா பாவனேவ மாமாராதய கேசவ ..
மாம் வ்ருணீஷ் வச தேவேச வரம் மத்தோ க்ருஹாணச, யேநாஹம் சர்வ பூதானாம் பூஜ்யாத் பூஜ்யதரோ பவம்–என்று
வரம் வேண்டின ஸ்வ உத்கர்ஷ காமன் ஆகையாலே —
த்வஞ்ச ருத்ர மஹாபாஹோ மோஹா சாஸ்த்ராணி காரய -என்று பகவான்
நியோகித்தது வியாஜமாக ஆகமாதி மோஹ சாஸ்த்ர பிரவர்தகனான ருத்ரன் ,
பிணங்கள் இடு காடதனுள் ,நடமாடு பிஞ்சகன் -பெரிய திருமொழி-2-6-9–என்றும் ,
சுடலையில் சுடு நீறன்-பெரிய திருமொழி-10-1-5–என்றும்
வெந்தார் என்பும் சுடு நீரும் மெய்யிற் பூசி–பெரிய திருமொழி-1-5-8–என்றும்
அக்கும் புலி இன தளும் உடையார் –பெரிய திருமொழி-9-6-1–என்றும்
ஆறும் பிறையும் அரவமும் உடம்பும் சடை மேல் அணித்து –பெரிய திருமொழி-6-7-9–என்றும்
எரி உருவத்து ஏறேறி –இரண்டாம் திரு வந்தாதி — 63-என்றும் –
சுழன்றாடும் கொன்னவிலும் மூவிலை மேல் கூத்தன்-பெரிய திருமடல்-60- -என்றும்
ஆலமமர் கண்டத்தவன்–முதல் திருவந்தாதி-4- -என்றும் சொல்லுகிற படியே
தம பிரசுரன் ஆகையாலே நிஹீன வ்ருத்தி பரனாய்-
உன்மத்த வத நுன்மத்த .பிரபு ,பிரபவதாமபி ராத்ரவ் ஸ்மசாநேப்யடசிதத் கிமே தத் தவேச்வர – -இத்யாதியாலே
சிம்சான பர்யடனம் தொடக்கமான நிஹீன வ்ருத்திகளை நீ அனுஷ்டிக்கைக்கு ஹேது என் என்று தேவி கேட்க்கும் படி
சம்சானங்களிலே சஞ்சரித்து ,சப பஸ்மத்தை உடம்பு எங்கும் பூசி ,
அத்தி மாலையை பூண்டு ,வயாக்ர சர்மத்தை உடுத்தி ,நதி சந்திர சர்பாதிகளை ஜடையிலே அணிந்து ,
சர்வேஸ்வரன் தன சார்வஜ்ஞ அனுகுணமாக , வேத மயனான விஹஹேச்வரனை மேற் கொண்டு உலவுவா போலே ,
தன் அறிவு கேட்டுக்கு அனுகுணமாக ஞான ஹீனமான ரிஷபத்தை வாகனமாய் உடையனாய் ,மத்தர் களித்து ந்ருத்தம் பண்ணுமா போலே
சக்ர பிரமம் போலே சுழன்று ஆடுவது ,விஷத்தை கண்டத்திலே தரிக்கை ஆகையாலே ,நம்மில் காட்டில் அதிசயித
சக்திகர் இல்லை என்று தன்னை ஈஸ்வரனாக நினைத்து இருப்பதாக பிராந்தி நீங்கி ,சத்வ குணம் தலை எடுத்து ,
சத்வம் விஷ்ணு பிரகாசம் ஆகையாலே –
ஆல் மேல் வளர்ந்தானை தான் வணங்குமாறு -நால்வருக்கு மேலை யுகத்துரைத்தான் –நான்முகன்-17-
என்கிற படியே -அகடிதகடநா சமர்த்தனான சர்வேஸ்வரனை தான் உபாசிக்கும் பிரகாரத்தை உபதேசிக்கக் கேட்டவர்கள் ஆகையாலே ,
சத்வ நிஷ்டராய் ,ருஷித்வத்தால் வந்த சாஜாத்யத்தை யுடையரான
அகஸ்த்ய புலஸ்திய தஷ மார்கண்டேயர்கள் நால்வரில் ஒருவனான புலஸ்த்யன்
புராண சம்ஹிதா கர்த்தா பவான் வத்ஸ பவிஷ்யதி தேவதாபார மார்த்யஞ்ச யதாவத் வேத்ச்யதே பவான் -என்று
ஸ்ரீ பராசர பகவானுக்கு வர பிரதானம் பண்ணுகையாலே சஜாதியரான ருஷிகள் பிரசாதமும்
ருஷி ப்ரோதக்தங்களான பிர பந்தகளுடைய மூலம் என்கை-
ஸ்ரீ வால்மீகி பகவானுக்கு அனுக்ரகரான பிரம்மாவை போலே
விஜாதீயன் அன்றிக்கே ஸ்ரீ பராசர பகவானுக்கு வரபிரதனான புலஸ்தயனும் ருஷி
ஆகையாலே ,இவனுக்கு சஜாதியன் என்னத் தட்டில்லை இறே..
மற்று உண்டான இதிகாச புராண கர்த்தாக்கள் உடைய பிரபந்தங்களுக்கு மூலமும் ஆராய்ந்தால் ,இப்புடையிலே யாயிருக்கும்
அத்தனை அல்லது அத்வாரக பகவத் பிரசாதம் ஒரு விஷயத்திலும் இல்லை என்று நினைத்து இறே
ஆர்ஷ மூலம் என்று திரள அருளி செய்தது—
————————————————————-
இனி இவ் ஆழ்வார் பிரபந்தங்களுக்கு மூலம் இன்னது என்கிறார் —
சூரணை -56-
பரம சத்வத்தோடே
உள்ளி உரைக்கும்
நிறை ஞானத்து
அயனாம் சிவனாம் திருமால்
அருள் கொண்டு
இவர் பாடினார்-
அதாவது –
கல்பாதியில் உத்ரிக்தமான குண அனுகுணமாக தோற்றிற்று வர்ணிக்கும் என்றதுக்கு எதிர் தட்டாம் படி
பரம சத்வத்தோடே -உள்ளி உரைக்கும் -என்று
ரஜஸ் தமஸ் ஸூக்களோடும் தத் சகபடிதமான சத்வதோடும் அந்வயம் இன்றிக்கே ,
பரம சத்வ சமாஸ்ரய ஸ்தோத்ர ரத்னம் -12–என்கிறபடியே –
தனக்கு மேல் எல்லை இல்லை என்னும் படியான சுத்த சத்வ யுக்தனாய் ,தான் சொல்லிற்று அடைய வேதார்தமாய் இருக்கச் செய்தே
சடக்கென சொன்னால்,-வாய் வந்த படி சொன்னான் நிரூபியாதே -என்பார்கள் என்று
சேதனர் பக்கல் வாத்சல்யாதிசயத்தாலே இவர்களுக்கு ஆப்திக்கு உறுப்பாக –
நெறி உள்ளி உரைத்த திருவாய்-1-3-5-–என்கிற படியே வேத மார்க்கத்தை விசாரித்து ,அருளி செய்யுமவனாய்
பிச்சு தெளிந்து சொன்னவன் வார்த்தை கேட்டு உண்டான , ஞான மாத்ரத்தை உடையவர்கள் போல் அன்றிக்கே ,
நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி – திருவாய்-4-8-6–என்கிறபடி
பரி பூர்ண ஞானத்தை நிரூபகமாக உடையவனாய் ,
அயனாம் சிவனாம் திரு மாலால் -என்கிற படி கீழ் சொன்ன பிரம்மா ருத்ரருகளுக்கும் அந்தர்யாமியாய் நின்று ,
அவ்வவ கார்யங்களை நிர்வஹிக்கையாலே ,தத் தத் சப்த வாச்யனாய் , சர்வாதிகனான ஸ்ரீயபதி யினாலே –
அருளப் பட்ட சடகோபன்–திருவாய்-8-8-1- என்கிறபடியே
மயர்வற மதி நலம் அருளப் பெற்றவராய் அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான் -கண்ணி 8–– என்கிற படியே
அந்த அத்வாரக பகவத் பிரசாதத்தை மூலமாக கொண்டு இவர்
இப் பிரபந்தங்கள் பாடி அருளினார் என்கை .
————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply