சூரணை-57-
அவர்கள் பிரசாதம் ஆர்ஷ மூலம் என்னும் இடம்-மச் சந்தா தேவாதே ப்ரஹ்மன் -என்றும்
புராண சம்ஹிதா -இத்யாதியாலே பிரபன்ன வக்தாக்களானவர்கள் வசன சித்தமாய் இருந்தது …
அப்படியே இவர் பிரபந்தங்களுக்கு ,மூலம் பகவத் பிரசாதம் என்னும் அது இவர் வசன சித்தமோ
என்னும் அபேஷையில் அத்தை மூதலிக்கிறார்-
கருவுள் வேறலாமை அரன் அயன் எனச் செய்யும் அவை போலே
மூவுருவா முதல்வன் துப்பரவாலே பரம கவிகளால் பாடுவியாது
நேர் படச் சொல்லும் நீர்மை இலா என்னை
தன்னாக்கி என் நா முதல் வந்து புகுந்து
தப்புதல் அற தன்னை வைகுந்தனாக
தன் சொல்லால் தானே துதித்து
மலக்கு நாவியல் மொய்ய சொல்லால்
சொல்ல வல்லேன் என்று
நானும் சொல்லி
நாடும் கை எடுக்கும் படி
என் சொல்லால் யான் சொன்ன
இன்கவி என்பித்தான் என்றார் இறே-
அதாவது
ஸ்ருஷ்டும் தத கரிஷ்யாமி த்வாமாவிச்ய பிரஜாபதே —ஸ்ரீ விஷ்ணு தர்மம் –
கல்பாந்தே ருத்ரரூபீ யோ க்ரசதே சகலம் ஜகத் –
விஷ்ணுராத்மா பகவதோ பவஸ்யாமித தேஜச -பாரதம் கர்ணபர்வம் -என்கிற படியே
திசை முகன் கருவுள் வீற்று இருந்து படைத்திட்ட கருமங்களும் –திருவாய்-5-10-8–என்றும்
வெள்ளை நீர் சடையானும் நின்னிடை வேறலாமை விளங்க நின்றதும் திருவாய்-5-10-4–என்றும்
சொல்லும் படி பிரம்மா ருத்ரர்களுக்கு அந்தர்யாமியாய் கொண்டு ஸ்ருஷ்ட்டி
சம்ஹாராதிகளை பண்ணா நிற்க செய்தே
அரன் அயன் என உலகு அழித்து அமைத்து உளனே -திருவாய்-1-1-8–என்று
ஜகத் ஸ்ருஷ்ட்டி வேதோபதேசம் ஜகத் சம்ஹாரம் திரி புர தஹனம்
இவற்றை பிரம்மா ருத்ரர்கள் தாங்களே செய்தார்களாக
லோகத்தார் சொல்லும்படி செய்தாற் போலே
மூவுருவா முதல்வனே-
அதாவது –
என் முன் சொல்லும் மூவுருவாம் முதல்வனே-திருவாய் -7-9-2-
என்று ஸ்வேன ரூபேண நின்று கார்யம் செய்யும் இடத்தில் தனக்கு
தானே அடி ஆனால் போலே பிரம்மா ருத்ரர்களுக்கும் தானே அடியாய்
அவர்களை சரீரமாக கொண்டு நின்று சிருஷ்டி யாதிகளைப் பண்ணி
அவர்கள் செய்தார்கள் என்று பிரசித்தம் ஆக்கும் அவன்-
துப்புரவாம்-
அதாவது –
திறத்துக்கே துப்புரவாம் திருமால்—திருவாய் -7-9-9-என்கிற படி ஏதேனும் ஒரு கார்யத்திலும் வந்தால்
ஒரு த்ருணைத்தை கொண்டு கார்யம் தலை கட்டிக் கொள்ள வல்ல சாமர்த்தியத்தை உடையவன் ஆகையால் –
பரம கவிகளால் பாடுவியாது-
அதாவது –
இன் கவி பாடும் பரம கவிகளால் தன் கவி தான் தன்னை பாடுவியாது –திருவாய்-7-9-6-
என்று சொல்லுகிறபடியே ,தன்னைக் கவி பாடுவிக்க வேண்டினால்,அதுக்கு ஈடான
ஞான சக்தி யாதிகளால் குறை வற்றவர்களாய் , இனிய கவி பாட வல்ல மேலான கவிகளான ,
வியாச பராசர வால்மீகி ப்ரப்ருதிகளும் ,செம்தமிழ் -பாடுவாரான முதல் ஆழ்வார்கள் உண்டாம் இருக்க ,
அவர்களைக் கொண்டு பாடுவித்து கொள்ளாதே ,-
நேர் பட யான் சொல்லும் நீர்மை இலாமையால் ஏர்விலா என்னைத் தன் ஆக்கி —திருவாய்-7-9-5-என்கிற படியே ,
தனக்கு தகுதியாம் படி வாய்க்க சொல்லுகைக்கு அடியான ஞானாதி குணங்கள் எனக்கு இன்றிக்கே இருக்க ,
-என்னை தன்னாக்கி -என்கிற படியே ,என்னை தன்னோடு ஒக்க ஞான சக்திகளை உடையனாம் படி பண்ணி-
ஆ முதல்வன் இவன் என்று தன்தேற்றி என் நா முதல் வந்து புகுந்து-திருவாய் -7-9-3- -என்கிற படியே
என்னுடைய வாக் பிரவர்திக்கு முதாலாய் வந்து புகுந்து
என்னாகியே தப்புதல் இன்றித் தனைக் கவி தான் சொல்லி–திருவாய் -7-9-4 -என்கிறபடியே -என்னை உபகரணமாக கொண்டு
பாடா நிற்க செய்தே ,என்னுடைய ஸ்பர்சத்தால் வந்த தோஷம் தட்டாத படியாகக் கொண்டு ,
என்னால் தன்னை வைகுந்தனாக புகழ -திருவாய் -7-9-7-என்கிற படியே நான் புகழ்ந்த இத்தாலே ,
ஸ்ரீ வைகுண்ட நாதனாய் ,அங்குத்தை ஐஸ்வர்யம் பெற்றானாய் நினைத்து ,
-தன் சொல்லால் தான் தன்னைக் கீர்தித்த மாயன்—திருவாய் -7-9-2-என்றும்
தானே யான் என்பரானாகித் தன்னைத் தானே துதித்து -திருவாய்-10-7-2–என்றும் சொல்லுகிற படி
சொல்லும் தன்னது ,சொன்னானும் தான் ,சொல்லிற்றும் தன்னை-என்னும் படி
எனக்கு அந்தர் ஆத்மாவாய் நின்று ,தன்னைத் தானே ஸ்துதித்து-
வலக்கை ஆழி இடக்கை சங்கம் இவை உடைய மால் வண்ணனை மலக்கு நாவுடையேற்கு –திருவாய்-6-4-9-என்று
ஒன்றுக்கும் விக்ருதன் ஆகாத ,சர்வாதிகனை என் உக்தி மாத்ரத்தாலே விக்ருதனாம் படி
பண்ண வல்ல நா வீறுடைய எனக்கு என்றும் –
நாவியலால் இசை மாலைகள் ஏத்தி நண்ணப் பெற்றேன்–திருவாய்-4-5-4–என்று
நெஞ்சு ஒழிய வாக் பிரவர்த்தி மாத்ரத்தாலே ,இசை மாலைகளைக் கொண்டு ஸ்துதிக்க கிட்டப் பெற்றேன் என்றும்
மொய்ய சொல்லால் இசை மாலைகள் , ஏத்தி உள்ளப் பெற்றேன்–திருவாய்-4-5-2–என்று
செறிந்த சொல்லாலே உண்டாய் ,இசையோடு கூடி இருந்துள்ள தொடைகளால் ஏத்தி அனுசந்திக்கப் பெற்றேன் என்றும்
வானக் கோனை கவி சொல்ல வல்லேற்க்கு–திருவாய்-4-5-9-என்று-
ஸ்ரீ வைகுண்ட நாதனை கவி சொல்ல வல்ல எனக்கு என்றும்
நான் பாடினேனாக நினைத்து நானும் சொல்ல –
சடகோபன் சொல் -திருவாய்-2-2-11–என்றவாறே
நான் இத்தை பாடினேனாக நினைத்து நாடும் அஞ்சலி பண்ணும் படி –
என் சொல்லால் யான் சொன்ன இன் கவி என்பித்து –திருவாய்-7-9-2–என்ற படி
என்னுடைய வசன வ்யக்தியாலே ,நான் கர்த்தாவாக சொன்ன இனிய கவி என்று
நாட்டிலே பிரசித்தம் ஆக்கினான் என்று அருளிச் செயதார் இறே என்கை ..
ஆகையால் இவர் சர்வேஸ்வரன் அருள் அடியாகவே பாடினதாய் நிச்சிதம் என்று கருத்து ..
——————————————————–
சூரணை -58-
இப்படி இப் பிரபந்தங்களுக்கு மூல வைலஷண்யத்தால் வந்த ஏற்றம் உண்டு
என்று அறிவித்த அளவும் அன்றிக்கே, வக்த்ரு வைலஷண்யத்தால் ,வந்த
ஏற்றமும் உண்டு ,என்று அறிவிக்கைகாக ருஷிகளில் காட்டில் ஆழ்வாருக்கு
உண்டான வ்யாவ்ருத்தியை அருளிச் செய்கிறார் ..
(ஆழ்வார் ஏற்றம் ஐந்து சூரணைகளில்-பிரேமம் -வைராக்யம் -தாரக போஷாக போக்யங்களில் வேறுபாடு
பல சாதன தேவதாந்தர-இவற்றை சொல்லும்)
தர்ம வீர்ய ஞானத்தாலே தெளிந்து
ஹ்ருஷ்டராய் மேலே மேலே
தொடுப்பாரைப் போல் அன்றி
அருளின பக்தியாலே
உள் கலங்கி
சோகித்து
மூவாறு மாசம் மோஹித்து
வருந்தி
ஏங்கி
தாழ்ந்த சொற்களாலே
நூற்கிற இவர்-
(பக்தியாலே உள் கலங்கி-தாழ்ந்த சொற்களாலே நூற்கிற இவர்-ஞானத்தாலே மேலே மேலே
தொடுப்பாரைப் போல் அன்றே -)
அதாவது
ஹஷிதம் பாஷிதம் சைவ கதிர்யா யச்ச சேஷ்டிதம்
தத் சர்வம் தர்ம வீர்யேண யதாவத் சம்பிரபச்யதி—ஸ்ரீ பாலகாண்டம் –3-4-
(ஸ்ரீ ராமபிரானுடைய புன்முறுவல் வார்த்தைகள் என்னும் இவற்றையும் -சஞ்சாரத்தையும் -செயல்களையும்
மற்றும் எல்லாவற்றையும் பிரமனுடைய வரபலத்தால் உள்ளபடியே நன்கு அறிகின்றார் )என்கிற படியே
தாம் தாம் அனுஷ்டித்த தபோ ரூபமான தர்மத்தின் உடைய
சக்தியாலே ஜனித்த ஞானத்தாலே –
கண்டும் தெளிந்தும் கற்றார் கண்ணற்க்கு ஆள் அன்றி ஆவரோ –திருவாய் -7-5–7-என்கிற படியே
ஜ்ஞாதவ்யங்களை தெளிய அறிந்து , அது தான் –
ந போதாத் அபரம் சுகம்-(ஞானத்தை தவிர வேறு இன்பம் இல்லை )என்னும் படி
இருக்கையாலே ,ஹர்ஷ யுக்தராய் ,அந்த தெளிவும் ஹர்ஷமும் அடியாக
உத்தரோத்தரம் சப்தங்களை தொடுக்கும் ருஷிகளை போல் அன்றியே
தர்ம வீர்யத்தாலே வந்ததுக்கும் -அது தான் ஞான மாத்ரத்துக்கும் -எதிர் தட்டாம் படி
மயர்வற மதி நலம் அருளினன்–திருவாய் -1-1-1–என்கிற படியே ,
நிர்ஹேதுக பகவத் பிரசாதத்தாலே வந்ததாய்
ஞான விபாக ரூபையான பக்தியாலே
தெளிவுக்கும் ஹர்ஷத்துக்கும் எதிர் தட்டாம் படி
-மதி எல்லாம் உள் கலங்கி–திருவாய் -1-4-3-என்கிற படி விரஹவ்யதையாலே
ஞானம் எல்லாம் அடி மண்டியோடே கலங்கி ,
யதா மனோரதம் பகவத் அனுபவம் பெறாமையாலே-ஆடியாடி அகம் கரைந்து
2-4-பதிகங்கள் படியே சோகித்து —மூவாறு மாசம் மோகித்து
மேலே தொடுக்கும் அதுக்கு எதிர் தட்டாம் படி –
-எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே –திருவாய் -1-3-1- என்றும்
-பிறந்த வாறும் வளர்ந்தவாறும் –5-10-1-திருவாய் — என்றும் –
-கண்கள் சிவந்து பெரியவாய் –திருவாய் -8-6-1-என்றும்
சர்வாதிகனாய் ,அவாப்த சமஸ்த காமனாய் இருக்க செய்தே ,
ஷூத்ரராய் ,சபலராய் இருப்பாரைப் போலே -அவன் செய்த
நவநீத சௌர்ய வ்ருத்தாந்தையும் –
அகர்ம வச்யனாய் இருக்க செய்தேயும் -கர்ம வச்யரை போலே பிறந்த படியையும்
மாயக் கூத்தனில் தான் கண்ணும் வாயும் துவர்ந்தால் போல் தம்மை
பிறிகையாலே ,அவன் கண்ணும் வாயும் துவர்ந்து ,தம்மோடு கலந்த பின்பு அவை
தன்னிறம் பெற்ற படியும் அனுசந்தித்து -ஈது என்ன பிரகாரம் -ஈது என்ன பிரகாரம்-
என்று ஓர் ஒன்றில் அவ்வாறு மாசமாக மூவாறு மாசம் மோஹித்து —
வருந்தி நான் வாசக மாலை கொண்டு–திருவாய் -3-8-10-என்கிற படியே
ஒரு சொல் எடுக்கும் பொது ஒரு மலை எடுக்குமா போலே வருத்தப் பட்டு —
என்று என்று ஏங்கி அழுதக்கால்–திருவாய் -8-5-3-என்கிற படியே அனுபவ அலாப க்லேசத்தால்
அவன் படிகளை பல காலும் சொல்லி பொருமி பொருமி அழுது–
அங்கே தாழ்ந்த சொற்களால்—திருவாய் -8-5-11-என்கிற படியே -எங்கே காண்கேன்-என்ற
மன சைதில்யத்தாலே கத்கத ஸ்வரமான சப்தங்களால் –
வண் தமிழ் நூற்க நோற்றேன் –திருவாய் -4-5-10-என்ற இப் பிரபந்தத்தை நூற்கிறவர் இவர் என்கை .
————————————————————
சூரணை -59-
இப்படி பகவத் பிரேமத்தாலே ருஷிகளில் வ்யாவ்ருத்தரான அளவின்றிக்கே ,
இதர விஷய வைராக்யத்தாலும் ,அவர்களில் இவர் வ்யாவ்ருத்தர் என்கிறார் ..
ஸ்வாத்யாய யோகங்களைக் கற்றும் தெளிந்தும்
கண்டமை மைப்பாலே ஓதி உணர்ந்தவர்
இன்னும் ஆசாபாச பத்தர்
அவன் வழங்கும் திவ்ய சஷுஸ்ஸாலே நேரே கார் செறிந்த நீறாடி
கட்கரிய அரும் பொருளை
கண்ட போதே யாமுறாமை என்னும் படி
இவர்க்கு வன் பாசங்கள் நீங்கிற்று ..
(ஸ்வாத்யாயம் -வேதம் –
ஓதி உணர்ந்தவர் கண்டமை மைப்பாலே –கண்ட காட்சியில் கலக்கத்தாலே -மயக்கத்தால் –
( வானமே நோக்கும் மையாக்கும் –திருவாய் -7-2-3- )இன்னும் ஆசாபாச பத்தர்-
அவன் வழங்கும் திவ்ய சஷுஸ்ஸாலே நேரே கண்ட போதே இவர்க்கு வன் பாசங்கள் நீங்கிற்று .)
அதாவது-
ஸ்வாத்யாயாத் யோகமாசீத யோகாத் ஸ்வாத்யாய மாமேநேத் ,
ஸ்வாத்யாய யோக சம்பத்யா பரமாத்மா பிரகாசதே ,
ததீஷணாய ஸ்வாத்யாயஸ் சஷூர் யோகஸ் ததா பரம் ,
ந மாம்ச சஷுஷா த்ரஷ்டும் ப்ரஹ்ம பூதஸ் ச சக்யதே –-ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-6-2-3- என்கிறபடியே ,
( வேதத்தாலே பொருளை அறிந்து அஷ்டாங்க யோகத்தை அடையக் கடவன் -யோகத்தால் மீண்டும் வேதத்தை சொல்லக் கடவன்
வேதம் யோகம் இவ்விரண்டின் நிறைவினால் பரம்பொருள் பிரகாசிக்கின்றன -அந்தப் பரம்பொருளைப் பார்ப்பதற்கு வேதம் ஒரு கண்
அப்படியே யோகம் சிறந்த கண் -பரம்பொருளாகிய அவன் ஊனக் கண்களால் பார்க்க முடியாதவன் )
ஸ்வாத்யாய யோகங்கள் ஆகிற இரண்டு த்ருஷ்டிகளாலும் ஒழிய
மாம்ச சஷுசால் பரமாத்மாவை காணப் போகாமையாலே ஸ்வாத்யாத்யா சப்த வாசகமான வேதத்தை ஓதியும்-
யம நியமாத் அஷ்டாங்க யோகத்தை அப்யசித்தும் அவ் வழியாலே தத் உபய விஷயமான
பரமாத்மாவை ஏவம் பூதன் என்று தெளிந்தும் ,இம் முகத்தாலே ஸ்வ யத்நேன கண்ட காட்சியில்
அ வைசத்யாலே -ஓதி உணர்ந்தவர் முன்னா -திருவாய் –3-5-5-என்கிறபடியே
வேத சாஸ்த்ரங்களை ஓதி , த்யாஜ்ய உபாதேயங்களை உணர்ந்து இருக்கிற ருஷிகள் இன்று அளவும்
ஆசா பாச சதைர் பத்தா–ஸ்ரீ கீதை -16-12-
(ஆசைகளாகிற பல வகைப்பட்ட தளைகளால் கட்டுண்டு இருப்பார்கள் ) -என்கிற படியே
சாம்சாரிக போக விஷயங்களான ஆசாக்ய பாத சதங்களாலே பந்திக்கப் பட்டு இருப்பார்கள் ..
திவ்யம் ததாமி தே சஷு –ஸ்ரீ கீதை -11-8- -என்கிற படி தன்னைக் காண்கைக்கு சாதனமாக அவன் கொடுத்த
திவ்ய ஞான ரூப சஷுசாலே -நேரே கடிக் கமலத்துள் இருந்தும் காணகிலான் -முதல் திருவந்தாதி -56-என்றும் ,
கார் செறிந்த கண்டத்தான் எண் கண்ணான் காணான்—நான்முகன் –73-என்றும் ,
நீறாடி தான் காண மாட்டாத தாரகல சேவடி –நான்முகன் 27–என்றும்
கட்கரிய பிரமன் சிவன் இந்திரன் இவர்கட்க்கும் கட்கரிய கண்ணன் -திருவாய் –7-7-11-என்றும்
சொல்லுகிற படி இவ் அருகில் உள்ளாரைக் காட்டில் ஞான சக்தி யாதிகளில் அதிகராய் ,
தாமோதரனை ,தனி முதல்வனை ஞாலம் உண்டவனை–திருவாய் -2-7-12-–ஒருவருக்கும் தரம் அறியலாமோ –
என்று தங்களை ஒழிய ஒருவருக்கும் அறியப் போகாது என்று இருக்கும்
பிரம ருத்ராதிகளுக்கும் காண அரியனாய்
அறிந்தன வேத வரும் பொருள் நூல்கள் அறிந்தன கொள்க அரும் பொருள் ஆதல்-திருவாய் -9–3-3-என்கிற படியே
யஸ்ய அமதம் தஸ்ய மதம்—கேனோ உபநிஷத் —
(எவன் பரம்பொருளை அளவிடப் பட்டதாக எண்ண வில்லையோ அவன் பரம்பொருளை அறிகிறான் ) இத்யாதியாலே
வேதங்களும் அறிவரிய வஸ்து என்றே அறியும் படியாய் ,–
கேட்ப்பார்க்கு அரும் பொருளாய் நின்ற –நான்முகன் –60-என்று –
நாயமாத்மா ப்ரவசநேன லப்யா ந மேதையா ந பஹுநா ஸ்ருதேந –கட உபநிஷத் –
( பரம்பொருள் மனத்தாலும் தியானத்தாலும் கேள்வியாலும் -இறைவனாகிய
தன்னுடைய அருளால் ஒழிய – அடையத்தக்கவன் அல்லன் -)என்ற படி
தன் பிரசாதம் ஒழிய ஸ்வ யத்னத்தாலே ஸ்ரவணாதிகள்-கேட்டு -சிந்தித்து -தெளிந்து -இத்யாதிகள் – பண்ணுவாருக்கு
துர் லப வஸ்துவான சர்வேஸ்வரனை-
கண்டேன் கமல மலர்ப் பாதம் – திருவாய் -10-4-9- என்கிற படியே அவன் தானே காட்டுகையாலே ,
விசதமமாக கண்ட போதே ,-பொய் நின்ற ஞானமும் -திருவிருத்தம் -1–என்று தொடங்கி ,
இந் நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று அவித்யாதிகளை விடுவித்து
அருள வேண்டும் என்று அவனைக் கால் கட்டும் படி இவருக்கு
-மற்ற வன் பாசங்கள் –திருவாய் -8-2-11-என்று ஸ்வ யத்ன நிவர்த்யம் அல்லாத படி
பிரபலமான பாஹ்ய சங்கங்கள் –பாசங்கள் நீக்கி என்னை உனக்கே அறக் கொண்டிட்டு -திருவாய் -7–8–5-என்னும் படி ,
தத் ப்ரசாதத்தாலே ஸ்வாசனமாக விட்டு அகன்றது என்கை ..
——————————————
சூரணை -60-
இவ்வளவும் அன்றிக்கே ,தாரகாதி வைலஷண்யத்தாலும்
அவர்களில் இவருக்கு உண்டான வ்யாவ்ருதியை அருளிச் செய்கிறார் .
அவர்களுக்கு
காயோடு என்னும் இவையே
தாரகாதிகள் ..
இவர்க்கு
எல்லாம் கண்ணன் இறே-
அதாவது –
ருஷிகள் ஆனவர்களுக்கு
-காயோடு நீடு கனி உண்டு வீசு கடும்கால் நுகர்ந்து -பெரிய திருமொழி -3–2-2–என்றும் –
வீழ் கனியும் ஊழ் இலையும் என்னும் இவையே நுகர்ந்து–பெரிய திரு மடல் -12- என்றும் சொல்லுகிற படி
பல மூல பத்ர வாயு தோயங்களே-(கனிகள் கிழங்குகள் இலைகள் காற்றுத்தண்ணீர் என்னும் இவைகளே )
தாரக போஷாக போக்யங்கள் ..
ருஷிம் ஜுஷாமஹி–ஸ்ரீ பராங்குச அஷ்டகம் –) ரிஷியாகிற நம்மாழ்வாரை வணங்குகிறேன் )-என்று
இவரையும் ருஷி என்று சொல்லிற்று ஆகிலும் ,
தாரகாதிகள் அவை அன்று –கிருஷ்ண த்ருஷ்ண தத்வமான இவர்க்கு-
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் –திருவாய் -6-7-1-
என்கையாலே ,தாரக போஷாக போக்யங்கள் எல்லாம் கண்ணன் இறே என்கை ..
————————————————————–
சூரணை -61-
இப்படி சர்வ பிரகாரத்தாலும் பிராக்ருத விஷயங்களில் நசை அற்று
பகவத் ஏக பரரான இவர் தத் விரஹத்தில் படும் அது எல்லாம் அவர்கள்
ப்ராக்ருத விஷய சங்கம் அறாமையாலே ,அவ் விஷயங்களுடைய விரஹத்தில்
படுவார்கள் என்கிறார்.-
அழுநீர் துளும்ப கடலும் மலையும்
விசும்பும் துழாய் திரு மால் என்று
எங்கே காண்கேன் என்னும் இவர் அலமாப்பு ,
அவர்களுக்கு புத்ர வ்யோகத்திலே ..
அதாவது –
சேயரி கண் அழுநீர் துளும்ப அலமருகின்றன–திருவிருத்தம் –2-என்றும்
‘கடலும் மலையும் விசும்பும் துழாய் -திருவாய் -2-1-4-என்றும்
சிந்தை கலங்கி திரு மால் என்று அழைப்பன்–திருவாய் -9-8-10–என்றும்
எங்கே காண்கேன் ஈன் துழாய் அம்மான் தன்னை—திருவாய் -8-5–11-என்றும்
உன்னை காண்பான் நான் அலப்பாய் -திருவாய் -5-8-4-என்றும் சொல்லுகிற படி
பகவத் விரஹ விசயனத்தாலே கண்ணும் கண்ணீருமாய் அபரிச்சேத்யமான
கடலோடு,நிர்விவரமான மலையோடு – அச்சமான ஆகாசத்தோடு வாசி அற ,
எங்கும் தேடி ,ஹ்ருதயம் கலங்கி ,ஸ்ரீ ய பதியே -என்று கூப்பிட்டு
எங்கே காணக் கடவேன் என்று இவர் படும் அலமாப்பு –
ஸ்ரீ வசிஷ்ட பகவான் புத்ர வியோக க்லேசத்தாலே ,
ச மேரு கூடாதாத்மானம் முமோச பகவான் ருஷி
சிரஸ் தஸ்ய சிலாயஞ்ச தூலராசா விவாபதத் ,
ந மமார ச பாதேன ததாச முனி சத்தமே
ததாக் நிமித்வா பகவான் ச விவேச மகாவனே
தம் ததா ஸூ சமித் தோபி ந ததாஹா ஹூதாசன
தீப்ய மானோப்ய மித்ரக்னம் சீதோக்நிர்பவத்ததா
ச சமுத்திர மபிப்ரேத்ய சோஹாவிஷ்டோ மகா முனி
கண்டே பத்தவா சிலாம் குர்வீம் நிபபாத ததம்பசி -என்கிற படியே
(அந்த பகவானான வசிஷ்ட முனிவர் மேரு மலையின் சிகரத்தில் இருந்து விழுந்தார் -அவருடைய தலை கல்லில்
பஞ்சுக் குவியலில் விழுவது போலே விழுந்தது -அப்பொழுது அந்த முனிவர் தலைவன் அப்படி விழுந்ததனால் இறந்தார் இலர் –
ஏ முனிவரே அந்த வசிஷ்ட பகவான் அப்படியே நெருப்பினை மூட்டி அதிலே புகுந்தார் -நெருப்பு மிக்க ஆற்றல் வாய்ந்ததாயினும் –
அப்பொழுது அந்த நெருப்பு எரிந்து கொண்டு இருந்தாலும் அவரை எரிக்க வில்லை -சோகத்தினால் பீடிக்கப்பட்டு இருக்கும்
அந்த வசிஷ்ட முனிவர் கடலை அடைந்து பெரிய கல்லினை கழுத்தினில் கட்டிக்க கொண்டு அந்தக் கடலிலே விழுந்தார் ) என்கிறபடி
மலையில் ஏறி விழுவது ,நெருப்பிலே புகுவது ,
கழுத்திலே கல்லைக் கட்டி கடலிலே விழுவது ஆகையாலும் ,
ஸ்ரீ வேத வியாச பகவான் புத்ர விரகம் பொறுக்க மாட்டாமல்
த்வை பாயனோ விரஹ காதர ஆஜுஹாவ புத்ரேதி –ஸ்ரீ பாகவதம் -1-2-2–
( வியாசர் புத்திரனான சுகரைப் பிரிந்த பிரிவுக்கு அஞ்சினவராய் புத்திரனே என்று கூப்பிட்டார் )என்கிற படியே
புத்ரனே என்று வாய் விட்டுக் கூப்பிட்டு அழுது கொண்டு காணப் பெறாமையால் அலமந்து திரிகையாலும் ,
அவர்களுக்கு புத்ர விச்லேஷத்திலே நடக்கும் என்றபடி –
——————————————————–
சூரணை -62-
இம் மாத்ரமே அன்றியே பல சாதனாதிகளில் பிரதிபத்தி விசேஷத்தாலும் ,
இரண்டு தலைக்கும் உண்டான நெடு வாசியை அருளி செய்கிறார் மேல் .
பல சாதன
தேவதாந்தரங்களில்
இவர்கள் நினைவு
பேச்சிலே தோன்றும்-
அதாவது
நிரஸ்தாதிஸயாஹ்லாத ஸூக பாவைக லஷணா
பேஷஜம் பகவத் ப்ராப்தி ரேகாந்தாத் யந்திகீ மதா
தஸ்மாத் தத் ப்ராப்தயே யத்ன கர்தவ்ய பண்டிதைர் நரை
தத் பிராப்தி ஹேதுர் ஜ்ஞானாநஞ்ச கர்ம சோக்தம் மகாமுனே –ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-59-60—
(தனக்கு மேல் ஒன்றும் இல்லாததாக ஆனந்த ரூபமான சுகம் ஒன்றையே வடிவாக யுடையதும்
துக்கம் இல்லாததும் மீண்டு வருதல் இல்லாததுமான பகவானை அடையும் பேறானது சம்சார துக்கத்துக்கு மருந்தாக இருக்கும் –
ஆகையால் பண்டிதர்களான மனிதர்கள் அந்தப் எம் பெருமானை அடைவதற்கு முயற்சி செய்யக் கடவர் –
மைத்ரேய முனிவரே ஞானமும் கர்மமும் அவனை அடைவதற்கு உபாயமாகச் சொல்லப் பட்டன ) இத்யாதிகளாலே
பகவத் ப்ராப்தியே பலமாகவும் ,
கர்ம ஞானாதிகளே உபாயமாகவும் ,
இந்திராதி தேவ அந்தர்யாமியான ஈச்வரனே உத்தேச்யன் ஆகையாலே ,
இந்திராதி தேவதைகள் அனுவர்த்த நீயராகவும் இறே ருஷிகள் சொல்லுவது ..
தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே –திருவாய் -2-9-4-என்றும்
வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம் –திருவாய் -3-3–1-என்றும்
கைங்கர்யமே புருஷார்த்தம் ஆகவும் தத் சாதனமும் ,
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் -திருவாய் -5–10 -11-என்றும்
அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே–திருவாய் -6-10 –10 -என்கிற பிரபத்தி யாகவும் ,
உன்னித்து மற்றோர் தெய்வம் தொழாள்–திருவாய் -4–6–10-என்று
தேவதாந்தரங்கள் அனுவர்த்தநீயர் அல்லராகவும் இறே இவர்கள் அருளிச் செய்தது ..
ஆகையால் பலத்திலும் ,சாதனத்திலும் ,தேவதாந்தரங்களிலும் ,
அவர்கள் பிரதி பத்தியும் இவர் பிரதி பத்தியும் இரண்டு தலையில் பேச்சில் தெரியும் என்கை-
சகல வேத ஸங்க்ரஹமான திரு மந்த்ரத்திலே பிரதம பதத்தால்
சேஷத்வைக நிரூபணியமாக பிரதி பாதிக்க பட்ட ஆத்மாவுககு
ஸ்வரூப அனுரூபமான புருஷார்த்தம் சரமபதத்தில் சதுர்த்தி யால்
சொல்லப் பட்ட கைங்கர்யமே ஆகையாலும் ,
மத்யம பத பிரதிபாதிதமான பகவத் அத் யந்த பாரதந்த்ர்யதுக்கு
தத் ஏக உபாயத்வம் ஒழிய ஸ்வ ரக்ஷண ஸ்வ பிரவ்ருத்தி சேராமையாலும்
மத்யம அஷர பிரதிபாதிதமான ,பகவத் அனந்யார்ஹத்வதுக்கு
தேவதாந்தர அனுவர்தன கந்தமும் சகியாமையாலும் ,
பகவத் ப்ராப்தமே பலமாகவும் ,
ஸ்வ யத்ன ரூப கர்மாதிகள் உபாயமாகவும் ,
அஹங்கார யுக்த தேவதைகள் பகவத் விசேஷண தயா உபாதேயராகவும் கொள்ளுமது
ஸ்வரூப யாதாம்ய தர்சிகளுக்கு பரித்யாஜமாய் இறே இருப்பது ..
ஆன பின்பு பலாதி த்ரயத்தில் , அவர்கள் பிரதி பத்திக்கும் ,இவர் பிரதி பத்திக்கும்
நெடு வாசி உண்டாகையால், இவ் வழியிலும் ,அவர்களில் இவர்
அத்யந்த வ்யாவ்ருத்தர் என்றது ஆயிற்று-
——————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply