ஆச்சார்ய ஹிருதயம்- சூர்ணிகைஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் – -53/

சூரணை -53-

உத்கீத பிரணவத்தை பிரதமத்திலே மாறாடி-என்று கீழ் சொன்னதின்
கருத்தை ஆப்த உபதேச முகேன அறிவிக்கிறார் மேல் ..

புரவி ஏழு ஒரு கால் உடைய தேரிலே
திரு சக்கரம் ஒத்து
கால சக்கரச் செங்கோல் நடாவி
ஜோதிஸ் சக்கர ஒளி சுருக்கி
அக்நீஷோ மீய தேஜோ அம்ருதத்துக்குக் ஊற்றும்
மந்தேஹர்க்கு செம் தீயும்
முக்தி மார்க்கத் தலை வாசலும்
கண்ணாவான் கண்ணில் பிறந்த கண்மணியும்
த்ரயீமயமுமான மண்டலத்திலே
தண் தாமரை சுமக்க
தோள் வளையும் குழையும் திரு செய்ய முடியும் ஆரமும்
படையும் திகழும் பொன் மேனியும்
செஞ்சுடர் தாமரை கண்ணுமாய்
அணி நிற மூர்த்தி ஈது என்னும் படி
இரண்டையும் தன்னிறம் ஆக்குகிற
செய்யாளான வித்தை யோடே
அருக்கன் மேவின சதாத்யேய தேஜஸ்ஸின்
சாம ரச உத்கான நாமம் உள்ளுறையான
ஆத்யந்தங்களாலே ஓர் ஆயிரமாம் அவற்றிலே
ஒன்றை ஆயிரம் முகத்தினால் அருளின தீர்த்தம் போலே
தீர்த்தங்கள் ஆயிரமுமாக விஸ்தரிக்கிறார் என்று
வேத குரு உபதேசம் .

1-புரவி ஏழு ஒரு கால் உடைய தேரிலே –
அதாவது -காரார் புரவி ஏழ் பூண்ட தனி ஆழி -சிறிய திருமடல் –என்றும்
ஒரு கால் உடைய தேர் -பெரிய திருமொழி-5-7-8–என்றும் சொல்லுகிற படியே –
காயத்ரீ /ப்ருஹதீ /உஷ்ணிக் /ஜகதீ/த்ருஷ்டுப் /அனுஷ்டுப் /பங்க்தி -என்கிற
ஏழு சந்தஸ்ஸூக்களும் ஏழு குதிரைகளாக கொண்டு வகிக்கையாலே ,
சப்தாஸ்வ யுக்தமாய் .கால சக்ர மயமான ஏக சக்கரத்தையும் உடையதான ரதத்திலே என்கை-
சப்த யுஜ்ஞஜந்தி ரதமேக சக்ரம் -ஆரணம்–என்றும்
ஹாயாச்ச சப்த சந்தாம்சி தேஷாம் நாமாநி மே ஸ்ருணு காயத்ரீ ச ப்ருஹத் யுஷ்ணிக் ஜகதீ
த்ருஷ்டுபேவச அனுஷ்டுப் பங்க்தி ரித்யுக்தா சந்தாம்சி ஹரயோ ரவ -ஸ்ரீ விஷ்ணு புராணம்-2-8-4-– என்றும் சொல்லக் கடவதிறே
ஏகோ அச்வோ வஹதி சப்தநாமா-ஆரணம்-–என்றதுக்கு ஹிருதயம் ஏதத் அனுகுணமாக
வியாக்யாதமான இடங்களில் கண்டு கொள்வது ..

திரிநாபிமதி பஞ்சாரே ஷண்ணே மின்யஷா ஆத்மகே , சம்வத்சர மயே க்ருத்ஸ்னம்
காலசக்ரேத் மகே பிரதிஷ்டிதம் –ஸ்ரீ விஷ்ணு புராணம்-2-8-3- என்கிற படியே ,
சாதுர் மாஸ்ய த்ரயாத் மகமான நாபியை உடைத்தாய்
சம்வஸ்தரம் பரிவஸ்த்ரம் , இதாவஸ்த்ரம்.அனுவஸ்த்ரம் , இத்வஸ்த்ரம் என்று சொல்லப் பட்ட ஐஞ்சு
வஸ்தரத்தையும் ,அரங்களாக உடைத்தாய்
வசந்த கிரீஷ்ம வர்ஷா சரத்தே மந்த சிசிரங்களாகிற ஆறு ருதுக்களையும் நேமியாக உடைத்தாய் ,
ப்ரவாஹா பரி விருத்தியாலே , அஷய ரூபமாக இருக்கிற கால சக்கரத்திலே ,
சர்வம் பிரதிஷ்டிதம்-என்கையாலே ,
இந்த ஏக சக்கரம் கால சக்கரமாய் இறே இருப்பது .
ஆக இப்படி இருந்துள்ள சப்த அஸ்வங்களையும் ,ஏக சக்கரத்தையும்
உடைத்து ஆகையாலே ,இதர வ்யாவ்ருத்த வைபவமான ரதத்திலே என்ற படி –

இனி மேல் மண்டலத்தை வர்ணிக்கிறது –

2-திரு சக்கரம் ஒத்து -அதாவது —
அம் மேருவில் செஞ்சுடரோன் திரு மால் திருக் கை திருச் சக்கரம் ஒக்கும் -திரு விருத்தம் -88–என்னும் படி
விருத்தாகாரதையாலும் ,தேஜோ விசேஷத்தாலும் ,திரு ஆழியோடு ஒத்து இருக்கை-

3-கால சக்கரம் செம் கோல் நடாவி —- அதாவது –
திரு சக்கரத்தால் அகல் விசும்பும் ,நிலனும்,இருளார் வினை கெட செம் கோல் நடாவுதீர்–திரு விருத்தம் -33 -என்கிற படி
உபய விபூதியிலும் ,ஈஸ்வரன் தன் ஆக்ஜையை நிர்வகிக்கைக்கு உபகரணமான
திரு ஆழியைப் போலே ,-கால சக்கரத்தாய்–-திருவாய்-7-2-7-என்னும் படி
கால சக்கர நிர்வாகனானவனுடைய கால சக்கர விஷயமான ஆக்ஜையை
தனி வளர் செம் கோல் நடாவு தழல் வாய் அரசு -திரு விருத்தம் -13- -என்கிற படியே நடத்துகை ..

4-ஜோதீஸ் சக்கர ஒளி சுருக்கி –அதாவது –
சுடர் ஒளி பரந்தன சூழ் திசை எல்லாம் -திருப்பள்ளி எழுச்சி -7–என்னும் படி ,சர்வதோதிக்கமாக
வ்யாப்தமான ஸ்வ தேஜஸ் பிரகர்ஷத்தாலே -துன்னிய தாரகை மின்னொளி சுருங்கி –திருப்பள்ளி எழுச்சி -3-
இத்யாதிப் படியே ,நஷத்ராதியான ஜ்யோதிர் கணங்களின் தேஜஸ்ஸை சங்கோசைப்பிக்கை –

5-அக்நி ஷோமீய தேஜோ அம்ருதத்து ஊற்றும் -அதாவது –
அக்னிம் வா வாதித்யஸ் சாயம் ப்ரவிசதி தஸ்மாத் அக்னிர் தூராத் நக்தம் தத்ருசே உபேவா தேஜஸீ சம்பத்யேதே–அஷ்டகம் -2- –என்றும்
ப்ரபா விவஸ்வதோ ராத்ரவ் அஸ்தம் கச்சதி பாச்கரே விசத்யக்னி மாதோ ராத்ரவ் வஹ்நிர் தூராத்
பிரகாசதே-ஸ்ரீ விஷ்ணு புராணம்-2-8-20-என்றும் சொல்லுகிற படியே
அஸ்தமய சமயத்திலே தன்னுடைய பிரபையை அக்னியிலே
பிரவேசிப்பித்து ராத்ரியில் அக்னிக்கு தேஜோ வ்ருத்தியை வுண்டாக்குகையாலே
அக்நியுடைய தேஜஸ் ஸூக்கு ஊற்று என்கிறது ..

6-ஷீணம் பீதம் ஸூரைஸ் சோமம் ஆப்யாயயதி தீப்தி மான் ,மைத்ரேயைககலம்
சந்தம் ரச்மினைகேன பாஸ்கர , க்ரமேண ஏன பீதோசவ் தேவைஸ் தேன நிசாகரம்
ஆப்யாயத் யனுதினம் பாஸ்கரோ வாரி தஸ்கர–ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-12-13-–என்கிற படியே
அபார பாசத்தில் ,பிரதமை தொடங்கி சதுர்த்தசி அளவும் நித்யம் ஒரு கலையாக
அமிர்த மயமான பதினாலு கலைகளையும் தேவர்கள் புசித்து பதினைந்தாவது
கலையை பஞ்சதசி அன்று அபராஹனத்திலே , பித்ருக்கள் புசிக்க ,இப்படி ஷீணனான சந்த்ரனுக்கு ,
பூர்வ பஷ பிரதமை தொடங்கி , நித்யம் ஒரு கலையாக பஞ்ச தசி அளவும் பதினஞ்சு கலைகளையும்
தன்னுடைய ரச்மிகளாலே ,வர்திப்பிக்கை யாலே ,சோமனுடைய அமிர்தத்துக்கு ஊற்று என்கிறது ..

ஆக இப்படி அக்னியினுடைய தேஜஸ்ஸூக்கும் ,சோமனுடைய அமிர்ததுக்கும் உத்பத்தி ஸ்தானமாய் இருக்கும் என்கை.

7-மந்தேஹருக்கு செம் தீயும் -அதாவது
மந்தேகர் என்பார் ,சில ராஷசர் சந்த்யா சமயத்தில் ,ஆதித்ய ரதத்தை
பற்றிக் கொண்டு ,போக ஒட்டாதே ஆதித்யனோடே மகா யுத்தம் பண்ணி ,
அவனைக் கொல்லத் தேடுவர்களாய் ,அவ்வளவிலே பிராமணர் காயத்ரி அபி
மந்திரிதைகளான அப்புக்களை அர்க்க்ய ரூபேண ஊர்தவமாக ப்ரேஷேபிக்க
அந்த காயத்ரி பூத அர்க்க்ய சக்தியாலே , ஆதித்ய மண்டலத்தில் ஜொலித்து கொண்டு ,
தோற்றின சிவந்த அக்னியிலே விழுந்து முடிந்து போவார்கள் என்று –
-மீண்டு அவற்றுள் எரி கொள் செம்தீ வீழ் அசுரரை போல் -திருவிருத்தம் -82—என்று ஆழ்வார்
அருளிச் செய்கையாலே ,மந்தேஹருக்கு ஜொலிக்கிற அக்நியாய் இருக்கும் என்கிறது ..

ராஷசரை அசுரர் என்று ஆழ்வார் அருளி செய்தது –
தானவனாகம் தரணியில்-பெரிய திருமொழி-1-4-1-என்றும் –
தானவன் வாள் அரக்கன்-பெரிய திருமொழி-2-2-2–என்றும்
சொன்னவை போலே ஆசூர பிரக்ருதிகளான ஆகாரத்தாலே ..

ததுஹா வா ஏத ப்ரஹ்மவாதின பூர்வாபிமுகா சந்த்யாயம்
காயத்ரி அபிமந்த்ரிதா ஆப ஊர்த்வம் விஷி பந்தி -ஆரணம்–என்றும்
சந்த்யா காலே து சம்ப்ராப்தே ரவ்த்ரே பரம தாருனே
மன்தேஹா ராஷசா கோராஸ் சூர்ய மிச்சந்தி காதிதும்
பிரஜாபதி க்ருதஸ் சாபஸ் தேஷாம் மைத்ரேய ரஷசாம்
அஷயத்வம் சரீரானாம் மரணம் ச தினே தினே
ததஸ் சூர்யஸ்ஸ தேஷாம் வை யுத்த மாஸீத் ஸூதாகுணம்
ததோ திவிஜோத்தமாஸ் தோயம் ப்ரஷிபந்தி மகாமுனே
ஓங்கார ப்ரஹ்ம சம்யுக்தம் காயத்ரியா சாபி மந்த்ரிதம்
தேன தக்யந்தி தே பாபா வஜ்ர பூதேன வாரிணா -என்றும்
பிராமணர் இங்கு பிரேஷேபிக்கிற அர்க்க்ய ஜலம் தானே
வஜ்ரீ பூதமாய் கொண்டு அந்த ராஷசரை நிரசிக்கும் என்று
ஸ்ருதியிலும் புராணங்களிலும் சொல்லுகையாலும் ,
அந்த அர்க்க்ய ஜலம் ஆதித்ய மண்டலத்தையும் ஜொலிப்பித்து
அணுக செல்லில் நசிக்கும் படி ஆக்கும் என்றும் சொல்லலாம் இறே-

8-முக்தி மார்க்கத் தலை வாசலும்-அதாவது
அர்ச்சிராதி கதி என்னும் முக்தி மார்க்கத்தாலே போம் அளவில் –
அர்சிஷா மேவாபி சம்பவந்தி -இத்யாதி படியே-
அர்ச்சி ப்ரப்ருதிகளை சென்று கிட்டிப் போகிற மாத்ரம் அன்றிக்கே ,-
தத் பித்வா சூர்யச மண்டலம்-என்றும் –
தேரோர் நிறை கதிரோன் மண்டலத்தைக் கீண்டு புக்கு -சிறிய திருமடல்-என்றும்
வெம் கதிர் வட்டத்தூடு போய்–பெரிய திருமொழி-4-5-10-என்றும் – சொல்லுகிற படியே ,
இம் மண்டலதூடே போகையாலும்-
அண்ட கடாஹத்தைப் பேதித்து புறப்படும் அதுக்கு முற்பட்டது ஆகையாலும்
இத்தை இம் மார்க்கத்துக்கு தலை வாசல் என்கிறது .

9-கண்ணாவான் கண்ணில் பிறந்த கண் மணியும் -அதாவது
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு –திருவாய்-1-8-3-
சஷூர் தேவநாமுத மர்த்யாநாம்-யஜுர் வேதம் – -என்கிற படியே –
சர்வருக்கும் திருஷ்டி பூதனான சர்வேஸ்வரன் கண்ணிலே –
சஷோஸ் சூர்யோ அஜாயத -புருஷ ஸூக்தம்-என்கிற படியே ஜனிப்பதும் செய்து
ஜகதேக சஷுஷே -என்ற படி ஜகத்துக்கு திருஷ்டி பூதமுமாய் இருக்கும் என்கை ..

10-த்ரயீ மயமுமான மண்டலத்திலே -அதாவது -‘
த்ரயீ மயாய-என்கிற படியே வேத மயமாய் இருக்கிற ஆதித்ய மண்டலத்திலே என்கை ..

இத்தால்-த்யேய சதா சவித்ரு மண்டல மத்திய வர்த்தி நாராயண சரசி ஜாசன சந்நிவிஷ்ட
கேயூரவான் மகர குண்டலவான் கிரீடி ஹாரி ஹிரண்மயவபு த்ருத சங்க சக்கர -என்ற
இதில் அவன் எழுந்து அருளி இருக்கிற சவித்ரு மண்டலத்தை வர்ணித்தார் ஆயிற்று ..
(த்யேயா சதாஸ் தேஜஸ் -ஆரம்பம் சாந்தோக்யம் / நாராயண -அதில் இதில் செய்யாள் உடன் /
ஸ்ரீ தரன் மூர்த்தி ஈது என்று காட்டும் / தன்நிறம் -செய்யாள் -ஹிரண்ய வர்ணாம் -இவள் திரு மேனி சிக்கப்பால்
அவனுக்கும் சூர்யா மண்டலத்துக்கும் -திருக்கண்டேன் -அவள் வர்ணத்தால் பொன் மேனி-காணும்படியும்
அருக்கன் அணி நிறமும் காணும்படியும் அன்றோ ஆழ்வார்கள் அருளிச் செயல்கள் -)

இனி அதில் எழுந்து அருளி இருக்கிற படியை வர்ணிக்கிறார் –

1-தண் தாமரை சுமக்க –அதாவது
தண் தாமரை சுமக்கும் பாத பெருமான் -திருவாய்-4-5-8–என்கிற படியே
சரசி ஜசன சந்நிவிஷ்டனாய் இருக்கை
தோள் வளையும் குழையும் பெரியாழ்வார்-1-5-10–அதாவது
இத்தால் கேயூரவான் மகர குண்டலவான் -என்றதை சொல்லுகிறது .
திரு செய்ய முடியும் ஆரமும் படையும் திகழ-திருவாய்-8-4-7-
இத்தால் கிரீடி ஹாரி த்ருத சங்க சக்கர -என்றதைச் சொல்லுகிறது ..

2-திகழும் பொன் மேனியும்-அதாவது
ஆரமும் படையும் திகழ திருவாய்-8-4-7–என்கிற படியே
கீழ் சொன்ன ஆயுத ஆபரணங்கள் எல்லாம் விளங்கும் படி இருப்பதாய் ,
பொன் மேனி கண்டேன்-மூன்றாம்-1–என்னும் படி ஹிரண்ய மயமான திரு மேனியும்
ச எஷாந்தர் ஆதித்யே ஹிரண்மய புருஷோ த்ருச்யதே ஹிரண்ய ச்மஸ்ரூர்
ஹிரண்ய கேச ஆப்ரணகாத் சர்வ ஏவ ஸூவர்ண -சாந்தோக்யம்-–என்றும்
ஹிரண்மயவபு –என்றும் சொல்லக் கடவதிறே-

3-செஞ்சுடர் தாமரை கண்ணுமாய் -அதாவது
அஞ்சுடர் வெய்யோன் அணி நெடும் தேர் தோன்றாதால்-என்ற அநந்தரம்
செஞ்சுடர் தாமரை கண் செல்வனும் வாரான்-என்றது
அந்த ஆதித்ய மண்டலத்தில் எழுந்து அருளி இருக்கிறவனை இறே ..
ஸ்ருதியும் -தஸ்ய யதா கப்யாசம் புண்டரீக மேவ மஷிணீ-என்றது அவ் இருப்பிலே இறே ..
ஆகையால் ஆதித்ய கிரணங்களால் விகசிதமான போதை சிவந்த ஒளியை உடைய
தாமரை போன்ற திரு கண்களுமாய் என்கை-

4-அணி நிற மூர்த்தி ஈது என்னும் படி இரண்டையும் தன்னிறம் ஆக்குகிற செய்யாளான வித்தையோடே –
அதாவது
திருக் கண்டேன்-என்று முதலில் தன்னை கண்ட அநந்தரம்
ருக்மாபம்-என்னும் படி இருக்கிற அவன் திரு மேனியைக் கண்டு -பொன் மேனி கண்டேன்-என்று இருக்கச் செய்தேயும்
தன் திரு மேனி நிறத்தில் வியாப்தியாலே இள வெய்யில் கலந்தால் போல் விளங்கி ,
தர்சநீயமாய் இருக்கும் அவன் திரு மேனி நிறத்தைக் கண்டு
திகழும் அருக்கன் அணி நிறமும் கண்டேன் -என்னும்படி யாகவும் ..

செய்யதோர் ஞாயிற்றை காட்டி சிரீதரன் மூர்த்தி ஈது என்னும்—திருவாய் –4-4-2-என்று
அந்த மண்டல வாசிநியான தன் விக்ரக தேஜோ வியாப்தி யாலே சிவந்த ஒளியாலே அத்வீதீயமாய் இருக்கும் படியைக் கண்டு
ஸ்ரீ தரன் வடிவு ஈது என்று பிரமித்து சொல்லும் படியாகவும் ,
பகவத் விக்ரகமும் ஆதித்ய மண்டலமும் ஆகிய இரண்டையும் தன்னிறமாகும் படி பண்ணுகிற சிவந்த நிறத்தை உடையவள் ஆகையாலே
ஹிரண்ய வர்ணாம்—ஸ்ரீ ஸூக்தம் – இத்யாதி படியே
கமல மலர் மேல் செய்யாள்–திருவாய்-9-4-1-என்று நிரூபகம் ஆகும் படி இருப்பாளாய்
வித்யா சகாய மாதித்ய சமஸ்தம் வித்யா பிரசாதகம் -என்றும்
வித்யா சகாய வந்தம் மாம் ஆதித்யஸ்தம் சனாதனம்-என்றும் சொல்லுகிற படியே
வித்யா சப்த வாச்யையான பிராட்டி யோடே கூடே-

அருக்கன் மேவின-
அதாவது
வானிடை அருக்கன் மேவி நிற்ப்பார்க்கு -பெரிய திருமொழி-2-1-7-என்கிற படியே சவித்ரு மண்டல மத்ய வர்தியான
-ய ஏஷ அந்தராதித்யே -என்றதை சொல்லுகிறது
சதாத்யேய தேஜஸ்ஸின்-அதாவது
த்யேயஸ் சதா -என்கிற படியே சர்வ காலமும் த்யானம் பண்ணுவாருக்கு விஷயமாய்
ஹிரண்மயஸ் சகுநிர் ப்ரஹ்ம நாம ஏன சூர்யஸ் தபதி தேஜசேத்த–காடகம்–என்றும்
தத் சவிதுர் வரேண்யம் பர்க்க -காயத்ரி –என்றும்
தேஜ பரம் தத் சவிதுர் வரேண்யம் தாம்னா பரேணா பிரணகாத் ஸூவர்ணம்–ஸ்ரீ ரெங்கராஜ ஸ்த்வம் உத்தர -79-என்றும்
சொல்லுகிற படி தேஜோ மயமாய் இருக்கிற வஸ்துவினுடைய-

சாமரே சோத்கானநாமம் உள்ளுறையான ஆத்யந்தங்களாலே –
அதாவது
சாம்ன உத்கீதோ ரச – என்கையாலே சந்தோக சாமத்துக்கு ரசமாய் இருந்துள்ள
உத்கானம் உண்டு–உத்கீதம்-( சாம ரஸம் உத்கீதம் -அதில் நாமம் உத் )
அதில் -உத்-என்று சொல்ல பட்ட -தஸ்ய உதிதி நாம -என்கிற திரு நாமம்
இதுக்கு உள்ளுறை யானமை தோற்றும் படியான ஆத்யந்தங்களை உடைத்தாய் இருக்கையாலே என்கை ..
உயர்வு-என்று எடுத்து உயர்ந்தே -என்று தலைக் கட்டுகையாலே
உ காரம் ஆதியும் த காரம் அந்தமும் ஆய இறே இருக்கிறது
ஆத்யந்தங்களாலே -என்றது மேல் சொல்லுகிறதுக்கு ஹேது இது என்று தோற்றுகைக்காகா-

ஓர் ஆயிரம் அவற்றிலே ஒன்றை-அதாவது
ஓர் ஆயிரமாய் உலகு எழ அளிக்கும் பேர் ஆயிரம்-என்கிற படியே
ஒரு திரு நாமமே ஆயிரம் முகமாக நின்று ஜகத் ரஷணம் பண்ண வல்ல
திரு நாமங்களிலே ஒரு திரு நாமத்தை –
(ஒன்றே ஆயிரமாய் அளிக்கும் என்றால் ஆயிரமும் பத்து லக்ஷமாக அளிக்கும்)

ஆயிரம் முகத்தினால் அருளிய -இத்யாதி-அதாவது –
ஆயிரம் முகத்தினால் அருளி மந்தரத்து இழிந்த கங்கை–பெரிய திருமொழி-1-4-7–என்று
கங்கை தானும் ஒன்றாய் இருக்க ,லோக பாவன அர்த்தமாக சகஸ்ர முகமாக பிரவஹித்தால் போலே
தீர்த்தங்கள்-ஆயிரம் என்ற படியே -லோக பாவனமான ஆயிரம் பாட்டாக
விஸ்தரிக்கிறார் என்று ஸ்ரீ வேதாசார்ய பட்டர் உபதேசித்து அருளும் படி என்கை ..
விஸ்தரிக்கிறார் என்ற கர்த்ருத்வத்தை அபௌருஷேயத்வ விரோதமற கீழ் சொன்ன படி கொள்வது-

ஆக -எவ்வுலகத்து எவ்வகையும் -சூரணை -39- தொடங்கி இவ் ஆழ்வார்
பிரபந்த சதுஷ்டயத்துக்கும்
வேத ரூபவத்வமும்
அங்க உபாங்க சாகித்யமும்
சாஸ்திர வாதி வேத லஷண சாம்யமும்
இதில் இவருக்கு தோற்றுகிற கர்த்ருத்வத்தால் இதின் நித்ய அபௌருஷேயத்வ ஹானி இல்லாமையும்
அதில் சாம வேத ஸ்த்தாநீயமான திரு வாய் மொழி சாம வேத ஸ்ரேஷ்டமான சந்தோக சாம உபநிஷத் சமம் என்னும் அதுவும்
சொல்லிற்று ஆயத்து-

———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading