உருகுமால் நெஞ்சம் உயிரின் பரம் அன்றி
பெருமாள் வேட்கையும் என் செய்கேன் தொண்டனேன் ?
தெரு வெல்லாம் காவி கமல் திரு காட் கரை
மருவிய மாயன் தன மாயம் நினைதொறே–9-6-1
அவன் ஆழ்வார் இடம் கலந்த விதம் ஆனந்தமாக அருளுகிறார் இதில்
கீத கோவிந்தம்-அஷ்ட பதி ராதை சங்கோசம் இன்றி அருளுகிறாள் தன சகிக்கு .
வேட்கை-தனிய சம்பந்தம்
ஆனால் அதுவே பெருக வழி வகுக்க
செம் கழுநீர்-சொவ்கந்திக புஷ்பம் பூத்து கமழும் திவ்ய தேசம்
நினை தோறும் சொல்லும் தோறும் நெஞ்சு இடிந்து உகும்
வினை கொள் சீர் பாடிலும் வேம் எனது ஆர் உயிர்
சுனை கொள் பூம் சோலை தென் காட்கரை என்னப்பா !
நினைகிலேன் நான் உனக்கு ஆள் செய்யும் சீர்மையே–9-6-2
உன் கலவி நினைக்கசொல்ல -ஆசை பெருக
சீலம்-தாபம்நீக்கும் ஆனால் எனக்கு தாபம் கொடுத்து
பூம் சோலை சூழ்ந்த
கைங்கர்யம் செய்யும் பிரகாரம் அறிய முடியவில்லை
ஆத்மா வஸ்துவையும் தகியா நின்றது
ஆத்ம தர்மம் பிரேமை -கிருஷ்ணா விரகம்
பனி தாமரை ஒன்றையும் கருக பண்ணுவது போல்
உதடு வெடித்து பனி பண்ணுவது போல் கிருஷ்ண பக்தி
நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்து புகுந்து என்னை
ஈர்மை செய்து என் உயிராயஎன் உயிர் உண்டான்
சீர் மல்கு சோலை தென் காட்கரை என்னப்பன்
கார் முகில் வண்ணன் தன கள்வம் அறிகிலேன் –9-6-3
ஈர்மை-கவர்ந்து
எனக்கு உயிர் நினைத்தேன் என் உயிர் உண்டான்
தன்னை தானே உண்டான்
இருவரும் கூட புஜிக்க புகுந்து தானே புஜித்தான்
கபடக் காரன்
அறிகிலேன் தன்னுள் அனைத்து உலகும் நிற்க
நெறிமையால் தானும் அவற்றுள் நிற்கும் பிரான்
வெறி கமழ சோலை தென் காட் கரை என்னப்பன்
சிறிய வென் ஆர் உயிர் உண்ட திரு வருளே 9-6-4
அகண்ட பொருள் அவன்
அனைத்தும் அவன் உள் இருப்பவன்
அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன்
விராட் புருஷன் மயிர் கால் தூசி போல் அண்டம்
விபூத்வம் புரிவது கஷ்டம்
அணுவுக்கு அணுவாகா மகத்துக்கு மகமாய உள்ளும் புகுந்து வேற இருக்கிறான்
சிறிய என் உயிர் -உன் பிரபுத்வம் என் சிறுமை
சொரூப ஞானம் -பிரேமை பெரிதா சொரூபம் பெரிதா
பிரேமையில் விபு நான் சொரூபில் நீ விபு
இருவருக்கும் போட்டி
திரு வருள் செய்பவன் போல் என்னுள் புகுந்து
உருவமும் ஆர் உயிரும் உடனே உண்டான்
திரு வளர் சோலை தென் காட்கரை என்னப்பன்
கரு வளர் மேனி நம் கண்ணன் கள்வன்களே –9-6-5
நான் மட்டும் அவனுக்கு பலி
வந்த அன்றே கடாஷம் செய்து
கூசி கொண்டு வர -பெருமாள் அழுக்கு உடம்பு
விரும்பா நின்றான் -பரம பாகவதன்
இவர் த்யாஜ்யம் என்பதை உத்தேசயம்
அவன் பிரியமே லஷ்யம் ஆன பின்பு பிரேம தசையில் சரீரம் அவனுக்கு போக்கியம்
இவன் அபிமானம் பட்டு அழுக்கு நீங்கி
இவருக்கு அவர் உடன் சகவாசம் சொரூப ஞானத்துக்கு உடல் ஆனது
அவனுக்கு இவரோடு சக வாசம் தேக ஆத்மா அபிமானத்துக்கு உடல் ஆனது
ஆழ்வார் சறேரத்தில் ஆசை
ஞானி பக்தன் சரீரம் ஆசை கொண்டான்
நாய் பாண்டு ரெங்கன்-நாம தேவன்-உட்காரும் இடம் கண்டு தவித்தான்
பிரேமையால் அவனுக்கு அஞாக்னம் வந்தது
குரு பிரீதியால் உமக்கு
என் கண்ணன் கள்வம் எனக்கு செம்மாய் நிற்கும்
அம கண்ணன் உண்ட என் ஆர் உயிர் க்கோ திது
புன் கண்மை எய்திப் புலம்பி இராப் பகல்
என் கண்ணன் என்று அவன் காட்கரை யேத்துமே –9-6-6
கள்வன் சொல்ல சொல்ல -பிடிக்கும்
கிருஷ்ணா பரமாத்மா சொல்வது -விட
யோகிகளுக்கு பரமாத்மா -கோபிகளுக்கு சார சோர சிகாமணி
செம்மை ருசிகரம் கண்ணன் கள்வன் சொல்வது
கண்ணன் கட்டி கொண்ட சரீரம் என்றதால் ஆழ்வாருக்கும் உடம்பில் ஆசை வந்ததாம்
பக்தி சிங்காரம்-நானேகண்ணனின் எச்சில்- முழுங்கி துப்பின கோது !
காட்கரை ஏத்தும் அதனுள் கண்ணா ! என்னும்
வேட்கை நோய் கூர நினைந்து கரைந்து உகும்
ஆள் கொள் வான் ஒத்து என் உயிர் உண்ட மாயனால்
கோள் குறை பட்டது என் ஆர் உயிர் கோள் உண்டே–9-6-7
திவ்ய தேசம் பெயரை சொல்லி
அதுவே உத்தேசம்
விரக நோய் தாளாமல் உருகி
கட்டி கொண்டு பருகினான்-
திருப்தி கொள்ளாமல் மீண்டும் வருவான்
நிசேதமாக– உண்டும் சாபெஷமாக் போவதால்
இத் தலைக்கு –இன்னும் வருவான்-என்பதால் ஜீவித்து இருக்கிறார்
கோள் உண்டான் அன்றி வந்து என் உயிர் தான் உண்டான்
நாளு நாள் வந்து என்னை முற்றவும் தான் உண்டான்
காள நீர் மேகத் தென் காட்கரை என் அப்பற்கு
ஆள் என்றே பட்டது என் ஆர் உயிர் பட்டதே –9-6-8
பூரணமாக அனுபவம் இன்றி சாத்மிக சாத்மிக
கொஞ்சம்கொஞ்சமாக அனுபவித்து
வெண்ணெய் தொட்டு உண்ட பழக்கம்
வகுளா பரண நாயகியை தொட்டு நாளும் நாளும் வந்து
ஒரு நாள் போதும் என்று கை வாங்கி இருக்காமல்
நாள் தோறும் நாள் தோறும் ஆழ்வார் இவனுக்கு ஆரா அமுதம் போல் அனுபவிக்கிறான்
ஆர் உயிர் பட்டது எனது உயிர் பட்டது ?
பேர் இதழ் தாமரை கண் கனி வாயது ஓர்
கார் எழில் மேகத்து என் காட்கரை கோயில் கோள்
சீர் எழில் நால் தடம் தோள் தெய்வ வாரிக்கே –9-6-9
அவன் அனுபவிக்கும் பொழுது நான் பட்டபாடு யாரும் பட வில்லை
நித்ய விபூதியில் உள்ளவர் கூட பட வில்லை
அங்கு ஆர் உயிர் பட்டது இவர் போல் -எம்பெருமானார் நிர்வாகம் –
வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று
ஆர்வுற்ற என்னை யொழிய என்னின் முன்னம்
பாரித்து தான் என்னை முற்ற பருகினான்
கார் ஒக்கும் காட்கரை யப்பன் கடியனே –9-6-10
வாரிக் கொண்டு–இன்று அவன் வந்தால் முழுங்க நினைத்த ஆழ்வாரை
தான் விழுங்கி விட்டான்
முற்ற பருகினான்
நானும் அவனுமாக விளையாட -முடியாமல்-
எதிர் தலைக்கு இடம் இன்றி போக தசையில் அனுபவம் அவனுக்கே
கடியனே கஞ்சனை கொன்ற பிரான் தன்னை
கொடி மதிள் தென் குருகூர் சடகோபன் சொல்
வடிவமை யாயிரத்து இப் பத்தினால் சன்மம்
முடி வெய்தி நாசம் கண்டீர்கள் எம் கானலே –9-6-11
கடியன்-சீக்கிரமாக
அழகான பாசுரம்-ஒன்றை சேவித்தாலும் பிறவி அரும்
சம்சாரம் ஆகிய வெப்பம் நாசம் அடையும்
அனுபவித்து பார்த்து உணரலாம்
உருகுமால் என் நெஞ்சம் உன் செயல்கள் எண்ணி
பெருகுமால் வேட்கை என பேசி மருவுகின்ற
இன்னாப்புடன் அவன் சீர் ஏய்ந்து உரைத்த மாறன் சொல்
உள்ளினருக்கு தீங்கை அறுக்கும் –திரு வாய் மொழி நூற்று அந்தாதி –86
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்
Leave a Reply