ஸ்ரீ திரு விருத்தம் -23-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் -வியாக்யானம் –

(விண்ணுளாரிலும் சீரியர்கள் நீங்கள்
தலைமகன் வார்த்தை -கிளைவித் தலைமகன் வார்த்தை
அந்தாமத்து அன்பை அனைத்தும் ஆழ்வார் பக்கலிலே வைக்குமவன் அன்றோ
நாடு -பரம பதம்
வான் -போக்யம்
ஒருவகையில் தான் நித்ய ஸூரிகள் இவர்களுக்கு ஒப்பு
தோட்டம் உங்கள் காவலா -என்னுடைய மனம் உங்கள் காவலா
ஆழ்வார் அளவும் வந்த மனத்தை அரு வினையேன்
விட முடியாதே -நித்ய அனுபவமும் கிட்டாத வினை
புனமா மனமா கேள்விக்கு பதில் வரவில்லை
சொல்லீர் என்கிறார்
பல சரீரம் எடுத்து உம்மை அனுபவிக்க நான் வர
எனது மனத்தையும் காவலாக வைத்தீர்களே
இதுவா உங்கள் ஸ்வ பாவம் என்று குறை உற செய்தல்
யுக்தியும் பிரதி யுக்தியும் இதில் உண்டே
எல்லே இளங்கிளி போல்
22-பாசுர உக்திக்கு இது பிரதி யுக்தி
கடல் ஞாலம் -அநுகாரம் இதுக்கு விவரணம்

கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும்
கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னும்
கடல் ஞாலம் கொண்டேனும் யானே என்னும்
கடல் ஞாலம் கீண்டேனும் யானே என்னும்
கடல் ஞாலம் உண்டேனும் யானே என்னும்
கடல் ஞாலத் தீசன் வந்து ஏறக் கொலோ?
கடல் ஞாலத் தீர்க்கிவை என் சொல்லுகேன்?
கடல் ஞாலத்து என்மகள் கற்கின்றவே.–5-6-1- )

இவனை நோக்கி இவர்கள் சில வசோக்தி –
நெஞ்சம் நிறைய அன்பை வைத்து கொண்டு தேவை அற்ற வினாக்களை எழுப்புதல்–சொல்ல ,
இவன் தானும் ,இவர்களை சில வசோக்திகள் சொல்கிறான்

(வாஸ யுக்தி
வாயாலே பேச்சு -வாய் வார்த்தை -உள்ளத்திலே இல்லையே –
உள்ளம் முழுவதும் ப்ரேமம் தானே
திருமால் இரும் சோலை மலை என்னேன் என்ன -நாமும் நாவினால் நவிற்றுகிறோம் )

புனமோ புனத் தயலே வழி போகும் அரு வினையேன்
மனமோ மகளிர் நும் காவல் சொல்லீர் புண்டரீகத்து அம் கேழ்
வனமோர் அனைய கண்ணான் கண்ணன் வானாடு அமரும் தெய்வத்
தினம் ஓர் அனையீர் களாய், இவையோ நும் இயல்வுகளே –23-

பாசுரம் -23-புனமோ புனத்து அயலே –
தலைவன் குறை யுற உரைத்தல் –
கடல் ஞாலம் செய்தேனும் -5-6-

பதவுரை

மகளிர்–பெண்களே!
நும் காவல்–உங்கள் காவலுக்கு உரிய பொருள்
புனமோ–இந்தத் தினைப்புனமோ? (அல்லது)
புனத்து அயலே வழி போகும் அருவினையேன் மனமோ–இப்புணத்தினருகிலே வழிச் செல்லுகிற பாவியேனான என்னுடைய நெஞ்சமோ?
சொல்லீர்–சொல்லுங்கள்;
புண்டரீகத்து அம்கேழ் வனம் ஓர் அனைய கண்ணான்–செந்தாமரை மலரின் அழகிய ஒளியை யுடைய காட்டை
ஒரு புடை யொத்திருக்கின்ற திருக் கண்களை யுடையவனாகிய
கண்ணன்–கண்ணபிரானது
வான் நாடு–பரமபதத்திலே
அமரும்–வாஸம் பண்ணுகிற
தெய்வத்து இனம்–நித்யஸூரி வர்க்கத்தினர்
ஓர் அனையீர்கள் ஆய்–ஒருபுடை ஒத்தவர்களாய்
நும் இயல்புகள்–நீங்கள் கொண்டிருக்கின்ற தன்மைகள்
இவையோ–அயலார் மனத்தைக் கொள்ளை கொள்ளுதல் முதலிய இச்செய்கைகளாகத் தகுமோ?

புனமோ –
பாவியேன் சேதனனாய் கெட்டேன்-என்கிறான்
இதற்குள் நின்றோம் ஆகில் முழு நோக்கு பெறல் ஆயிற்று இறே
இங்குற்றை அபாங்க  வீஷணம் தானும் ஒன்றுக்கு ஆக இறே

(உன் தாமரைக் கண்களால் நோக்காய் -சேவித்த உடனே -கர்மங்கள் தொலையுமே
லௌகீகரை கடைக்கண்ணால் -ஈடுபடுத்த மாத்திரமே -முழு அனுபவத்துக்கு அல்லவே
புனமாய் இருந்தால் பூர்ணமான கடாக்ஷம் பெற்று இருப்போமே
ஸூகாச்சார்யார் உத்தவர் பிரார்த்தித்தார்
கோகுலத்தில் செடியாகவோ திருவடி பட்ட மண் துகளாகவோ ஆசைப்படுவார்கள் அன்றோ
அணைய ஊர புனைய –ஸ்தாவர ஜென்மங்களை
பெருமக்கள் ஆதரிப்பார்கள் அன்றோ
பெரிய பிராட்டியார் முழு நோக்கு பெற்றால் பர ப்ரஹ்மம் ஆகிறான் -பட்டர் )

புனத்தயலே வழி போகும் —
புனத்துக்கு உள்ளே புகுந்தோமோ?
உங்கள் புனத்துக்கு வேலி இல்லையா ?
சம்பந்த சம்பந்தத்தை இட்டு தொடருகிறீரே  —
எங்கேனும் போகிலும் புனத்து அருகு அல்லது வழி இல்லை இறே இவனுக்கு

(நீங்கள் புனம் விட்டு நீங்காதது போல் எனது மனம் விட்டு நீங்காமல் உள்ளீர்கள்
புனம் போல் மனமும் உங்கள் இடம்
கேசவன் தமர் -அடியார்க்கு அடியார் -சம்பந்த சம்பந்தம் அடியாக -பிடித்தார் பிடித்தார்
புனம் -புனத்து அயல்
ஸ்வ அபிமானத்தாலே ஈஸ்வர அபிமானத்தைக் குலைத்துக் கொண்ட இவனுக்கு ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் )

வழி போகும் –
நாங்கள் வழி அன்றோ போகிறது ?
வழி போகுவார்க்கு காட்டிலும் முள்ளிலும் புகலாமோ ?
இவர்கள் ஒழிந்த  இடம் காடும் முள்ளுமாய் இருக்கிற படி

(வழி பாதை உபாயம்
போகும் -போய் சேரும் இடம் ப்ராப்யம்
தூது மடல் அனைத்தும் ப்ராப்ய அந்தர்கதமே
கடாக்ஷம் ப்ராப்யம்
அர்ச்சிராதி கதியே உபாயம் இல்லையே -ப்ராப்யத்திலே சேரும் –
சிந்தனையே வேண்டும்
காடு முள் -உபாயாந்தரங்கள் கர்ம யோகாதிகள் )

அருவினையேன் மனமோ–
எங்கேனும் போகிலும்  புனத்தயலே வழி போக வேண்டும்
பாபத்தை பண்ணினேன் —
(பாகவதர்களை அடைந்த பின்பு மீளவே உடையாதே )

பிள்ளை திரு நறையூர் அரையர் -உகந்து அருளின தேசம் எல்லாம் கிடக்க-
திரு நகரி அருகே போக வேண்டும் பாபம் உண்டாவதே –
இது பாவம் ஆனால் இதற்க்கு எதிர் தட்டான பகவத் விஷயம் புண்ணியம்-

(தென் ஆனாய்
நாலு பக்கமும் யானையைத் தேடிப் போவார் தப்பலாம்
பாகவதர்கள் இடம் சேர்ந்து விலகாமல் -ஆழ்வார் திருவடிகளில் ஈடுபட்டு மீள முடியாமல் சிக்குண்டதுக்கு ஐதிக்யம்
சீரார் வேங்கடமே –ஆராமம் சூழ்ந்த அரங்கம் -மண்டின இடங்களில் புகுந்தவர்
வேலிக்கு வெளியில் திருக்குருகூரில் அகப்பட்டதுக்கு –
பிள்ளை உறங்கா வல்லி தாசர் உடையவர் பாதமே என்று இருந்ததுக்கு)

(நம்பிள்ளை ஈட்டில்
ஆப்பான் திருவழுந்தூர் அரையர்
மச்சிலே
பிள்ளை திரு நறையூர் அரையர் இப்பாட்டை அநுஸந்தியா நிற்க
ஸீ ல குணம் காட்டும் எம்பெருமான் எங்கும் உண்டாகா நிற்க
திருப்புளிக் கீழ் -அடைந்தேன் -சிக்கினேன்
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே
சீலாதி குணம் அளவு இல்லையே
குண வித்தர் படி )

பகவத் விஷயத்தை சமாஸ்ரயித்து கொண்டை மேலே காற்று அடிக்க திரிய பெறாதே
மீள ஒண்ணாத பாகவத சம்ச்லேஷத்தில் இழிவதே-என்று-
கொண்டை மேல் காற்று அடிக்க -என்றது
தலைக்கு மேல் காற்று அடிக்க -அதாவது கவலை இன்றி இருத்தல்-
(கொண்டை மேல் காற்று அடிக்க -என்றது
அதிகமாக ஸூகப்படுவதுக்கு இந்த வார்த்தை )

நும் காவல்-புனமோ
மனமோ உங்களுக்கு காவல்

மகளிர்-
ஒருவனை பாதிக்கைக்கு உங்களுக்கு கிடக்கிற ஐக கண்ட்யம்

சொல்வீர் –
சிறை இட்டவர் ஜீவனம் இடாரோ ?
தன்னை அநாதரியா நிற்கச் செய்தேயும்  “சொல்லீர் “என்கிறான்-
ஆசாதி சயம் இருந்த படி-

(வாசலை திறவாதீராகிலும் வாயைத் திறக்கக் கூடாது திருப்பாவை போல் )

புண்டரீகம் -இத்யாதி-
தஸ்ய யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அஷணீ-என்னும் படி –

அம் கேழ் –
அழகிய நிறத்தை உடைய தாமரைக் காடு போலே ஆன கண்-

ஓர் என்றது
ஒரு வகைக்கு ஒப்பு என்ற படி –
அத்வீதியமான தாமரை காடு போல் என்றும்
ஆம் ஓர் என்றது அவ்வயவயுமாகவுமாம்

(அதீர்க்கம் அப்ரேமதுகம் க்ஷண உஜ்ஜ்வலம்
ந சோரம் அந்தக்கரணஸ்ய பச்யதாம்
அநுப்ஜமப்ஜம் நு கதம் நிதர்சனம்
வநாத்ரி நாதஸ்ய விசாலயோர் த்ருசோ -ஸ்ரீ ஸூந்தர பாஹு ஸ்தவம் –43-

அதீர்க்கம் –நீண்ட அப்பெரியவாய கண்கள் -என்றும்
இலங்கு ஒளி சேர் அரவிந்தம் போன்று நீண்ட கண்ணானை -என்று பேசும்படி யாகத் திருக்கண்கள்
நீண்டு இருப்பது போலே தாமரை நீண்டு இருக்க வில்லையே -நீட்சிக்குத் தாமரை ஒப்பாக மாட்டாதே
அப்ரேமதுகம் –நீண்ட அப்பெரியவாய கண்கள் பேதைமை செய்தனவே –என்னும் படி பிச்சேற்றும் திறம்
திருக்கண்களுக்கு அல்லது தாமரைக்கு இல்லையே -பிரேம பிரகர்ஷத்தை விலைப்பதில் தாமரை ஒப்பாக மாட்டாதே
க்ஷண உஜ்ஜ்வலம் –எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழி தோறும் அப்பொழுதைக்கு அப் பொழுது
என் ஆராவமுதமே –என்னும் படி நவம் நவமாய் விளங்கா நின்ற திருக்கண்களுக்கு அதி ஸ்வல்ப காலமே
விகாசத்தோடே கூடி விளங்கக் கடவதான தாமரை போய் ஒப்பாக மாட்டாதே
பச்யதாம்-அந்தக்கரணஸ்ய -ந சோரம்–கண்டவர் தம் மனம் வழங்கும் —
பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரிணாம் –
என்னும்படியான கண்டாருடைய மனத்தைக் கொள்ளை கொள்ளும் திருக்கண்களுக்கு தாமரை ஒப்பாக மாட்டாதே
அநுப்ஜம்–உப்ஜ -ஆர்ஜவே -என்ற தாது பாடம்–ஆர்ஜவம் அற்றது என்றபடி –குடிலமாய் இறே தாமரை மலர் இருப்பது –
ஆக ஆர்ஜவமே வடிவெடுத்த திருக்கண்களுக்கு ஒப்பாக மாட்டாதே
அப்ஜம் –ஆக அதீர்க்கத்வாதி விசிஷ்டமான அப்ஜமானது
வநாத்ரி நாதஸ்ய விசாலயோர் த்ருசோ – கதம் –நு-நிதர்சனம் –அழகருடைய கரியவாகிச் செவ்வரி ஓடி புடை பரந்து
நீண்ட அப்பெரியவாய திருக்கண்களுக்கு எங்கனே த்ருஷ்டாந்தம் ஆகவற்று–ஒரு போதும் ஆக மாட்டாதே
இங்கனம் அருளிச் செய்தவர் கீழே அப்ஜ பாதம் அரவிந்த லோசனம் பத்ம பாணி தலம்–என்றது
ஏதேனும் ஒன்றை த்ருஷ்டாந்தீ கரித்து போது போக்கவே
ஆழ்வாரும் -ஒட்டு உரைத்து இவ்வுலகு உன்னைப் புகழ்வு எல்லாம் பெறும் பாலும் பட்டுரையாய்ப் புற்கென்றே
காட்டுமால் பரஞ்சோதி –என்னா நிற்கச் செய்தேயும் ஒட்டு உரைத்து புகழாது ஒழியார் இறே –)

கண்ணன் -நீர்மை
புண்டரீக -இத்யாதியால் வடிவழகு சொல்லிற்று

வானாட மரும்  தெய்வத்தின்  மோரனை யீர்களாய் –
பரமபதத்தை -சதா பச்யந்தி என்னும் படி-
நித்ய வாசம் செய்யும் எல்லாரும் கூடினாலும் ,
இத் தலைக்கு ஒரு வகைக்கு ஒப்பாய் இருந்த படி-

சம்சார போகம் ஒருவருக்கும் போராதே
இங்கு அறாட்டு பறாட்டாய் இருக்கையாலே
இங்கு தனி அல்லது இல்லை

அங்கு எல்லாரும் புஜித்தாலும்
ஆள் தேட்ட மாய் இருக்கையாலே இனமாய் இருக்கும்

இவையோ உங்கள் உடைய ஸ்வாபங்கள்–
என் நெஞ்சை வளைக்கையும்
ஜீவனம் இடாது ஒழிகையும்-

கிட்டினவரை கிழிச்சீரை அறுத்து கொண்டு அவர்களை அநாதாரிக்குமா போலே
நெஞ்சை  அபகரித்து முகம் கொடாதே இருக்கிற படி-

ஸ்வாபதேசம்-
ஆழ்வார் நித்ய விபூதியில் பிரவணராய் இருக்கும் இருப்பைக் கண்டு
இவர் பக்கல் பிரவணராய் இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் வார்த்தை-

(நாயகன் ஏங்குவது இவளின் கடை கண் பார்வைக்கு –
புனம் ஆகவாது இல்லாமல் போனேனே –
பிருந்தாவனம் செடி கொடி-மண் துகள் ஒன்றாக ஆசை பட்டது போல்
இவனும் புவன் ஆக இல்லாமல் போனேனே
பாவி என்கிறான்
இவர்கள் இல்லாத இடம் எல்லாம் முள்ளாக தோற்றுகிறதாம்)

(தாத்பர்யம்
ஆழ்வார் இருப்பில்-நித்ய விபூதியில் பிரவணராய் இருக்கும் இருப்பில் –
ஈடுபட்ட ஸ்ரீ வைஷ்ணவர்கள் பாசுரத்தை
முன் பாசுரத்தில் தன்னைக் குறித்து பரிகாச உக்திகளைப் பேசின வற்றுக்கு
பிரதி நிந்தா ஸ்துதியாக
கிளவித் தலைமகன் வார்த்தை இது
ஓ பெண்களே
புனத்தைக் காக்க அன்றோ உங்களை வைத்தது
உங்கள் புனத்தில் வராமல் அயல் வழியிலே செல்லும் எனது மனத்தை அபஹரித்து
அதி மநோ ஹரமான கண் அழகை யுடைய கண்ணனை நித்தியமாக அனுபவிக்கும் நித்ய ஸூரிகள்
திரள் திரளாக அவர்கள் அனுபவிக்கும்
நிரதிசய ஆனந்த யுக்தராய் இருக்கும் நீங்கள்
தயை இல்லாதாரைப் போலே
மனத்தையும் அபஹரித்ததுக்கு மேலே வார்த்தையும் சொல்ல மாட்டாதே உள்ளீர்கள்
இவையே உங்கள் ஸ்வ பாவங்கள் என்கிறார் )

—————————————————————-—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading