யஷ பிரசன்னம்-1- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

வேத வியாசர்-பிரம்மா வசிஷ்டர் சக்தி பராசரர் வியாசர் சுகர்-பரம்பரை –

உப பிரமணம்- மகா பாரதம் -பஞ்சமோ வேதம்-அனைவரும் கற்க –அமிர்த கலை
கிருஷ்ண துவைபாயனர்  –கடைந்தார் -உபநிஷத் கடலை-மதி தான் பர்வதம்–ஜகம் ஹிதம் கருதி–
அமிர்த 18 பர்வதம்/18 அத்யாயம் கீதை/ 18 நாள் யுத்தம்/ சுவாமி திரு கோஷ்டியூர் 18 நடை
சபை பாத லஷம் கிரந்தம் ௧௨௫௦௦௦
இதில் இல்லாத விஷயம் எங்கும் இல்லை
அனைத்து முத்துகளும் கொண்டது
ஆதி பர்வம்/சபா பர்வம்/வன பர்வம் மூன்றாவது இதில்
உப பர்வம் ஆரணேய பர்வம் -இதில்- அரணி கட்டை –

துவைத வனம் காட்டில் –12 வருஷம்-இருந்தார்கள்-விராட பர்வம் அடுத்து –அரணி கட்டை -மான் கொம்பு சிக்கி ஓடி போனது
ஷத்ரியர் நீர் -கண்டு பிடித்து கொடுக்க சொல்ல -மான் பின் போக-நகுலன் மாயை-தீர்த்த தாகம்-யுதிஷ்டிரன் -யுத்தத்தில் ஸ்திரம் ஆக இருப்பவன் தர்ம புத்திரன்–தர்மத்திலும் ஸ்திரம் –தீர்த்தம் குடிக்க போக -அசரீரி வாக்கு–நகுலன் சக தேவன் அர்ஜுனன்-மனசு,கை இலக்கை நோக்கி போகும் கண் வேண்டாம் வெளிச்சம் வேண்டாம் என்று சப்தம் வந்த திசை நோக்கி போக-தசரதன் -மான் -பிராமன குமரனை கொன்றதால் வந்த சாபம் போல்-இவன் விட்ட அம்பு அசரீரியை அடிக்க முடிய வில்லை- கேள்வி கணைக்கு பதில் கணை விடு/பீம சேனன்-அடுத்து -அனைவரும் பிராண நாசம்-துரி யோதனன் யக்ஜம் செய்து  கிருதியை வர –இவர்கள் விழுந்து கிடந்ததை பார்த்து திரும்பி போக – -வேள்வி பயன் மீண்டும் பெற முடியாது-  பாண்டவர்களுக்கு தெரியாமலே ரஷித்தான் -அவன் தெரிந்து வந்தால் நம் அகங்காரம் நீ என்ன வருவது என்று தடுக்கும் என்று பல காலும் மறை முகமாக ரஷிகிறான்

மம பிராண பாண்டவ –கண்ணனே ஆஸ்ர்யம் புகல் இடம் ரஷகன்  என்றிருப்பவர்கள்
வெள்ளை கொக்கு வடிவம் வர-நரகம் அனுப்பினேன்-தன ரூபம் மாற்றி-யஷன்-பேசினான்-
பதில் சொன்ன பின்-தர்ம ராஜன் நான் தான் கண்ணன் ஏவி வந்தேன்- தர்ம தேவதையே பேசி —
அசரீரி வாக்கில் பேசி-இப் பொழுது கொக்கு வடிவம்-சத்யவான் ஆக இருந்தவன் இடம் தன்னை மறைக்க முடியாது –
பெருமாள் பார்க்க வந்த திரு அடியும் சந்நியாசி ரூபத்துடன் வந்ததும்-பார்த்ததும் நான் தான் ஹனுமான் சொன்னது போல்-
சட புத்தி தானாகவே போகும்–

வெள்ளை கொக்கு -வடிவம்- உரு மீன் வரும் அளவும் காத்து இருக்கும் நாரை போல்-
தர்ம ராஜா பிரதி நிதி காக்கை–சத்வ குணம் தலை எடுத்த தர்ம ராஜன் என்பதால்-வெளுப்பு-அடுத்து யஷன் 124 கேள்விகள் கேட்டான்-
பிரச்னமும் உத்தரமும் உண்டு -மகிழ்ந்து தர்ம தேவதை இறுதியில்-தம்பியில் ஒருவரை தருவதாக -கேட்டதும்-நகுலனை கேட்டான்-
ஏன் தாயாருக்கு மூத்த பிள்ளை- மாற்றாம் தாய் மாத்ரி புத்திரன் கைங்கர்யம் பண்ண மூத்தவனை –நால்வரையும் எழுப்பி -தர்மோ ரஷதி ரஷாக – தர்மம் உலகம் தாங்கும் தார்மிகர் தர்மம் தாங்குவார்
கேசவ அர்ஜுன சம்வாதம் கீதை
வைசம்பாயனர் ஜனமேதய சம்வாதம் மகா பாரதம்மூடாத்மா இருவர்-சுயோதனன்-வ=கோ கிரகணம்-விராட பர்வதம்-அர்ஜுனன் பிராபவம் கண்டும் அறியாத துரி யோதனன்- தசாநாதன் வன பங்கம் -திரு அடி பண்ணிய வன பங்கம் கண்டதும் பிரபாவம் அறியாத –ஆவல் தூண்ட -அனைத்தையும் கேட்டான்- கேட்டு கொண்டே இருப்பதே பரம புருஷார்த்தன் -ஜனமேயர் /பராசரர் மைத்ரேயர் பேசினது  விஷ்ணு புராணம்–சுகர் பரிஷித் பேசி ஸ்ரீமத் பாகவதம்..–பீஷ்மர்-யுதிஷ்டிரர் விஷ்ணு சகஸ்ர நாமம்/–நம் ஆழ்வார் மதுர கவி ஆழ்வார் -அருளி செயல் பெற்றோம்

அது போல் யஷனும் தர்ம ராஜனும் –முதல் கேள்வி
ஆதித்யனை எது உதிக்க செய்கிறது -உயர செய்கிறது –பிரமம் உதிக்க செய்கிறது பதில்–உள் அர்த்தமும் மேல் ஓட்ட அர்த்தமும் இருக்கும்..
ச்வாபதேசம்-யாதாத்மா -பிரமம் ஆணையின் பேரில்- பீஷா அஸ்மாத் வாயு -உதேது சூர்யா -பிரமம் திரு அடி பற்றினால் நவ கரகம் ஒன்றும் பண்ணாது- அழகிய மணவாளன்-ஜாமாதா பத்தாவது கிரகம்—ராவணன் பயந்து -இயற்க்கை மாற்ற கூடாது என்று ஸ்ரீ ராமன் அவதாரம்
நான்கு கேள்வி ஒரு கருத்து இருக்கும்–ஆதித்யன்-ஆத்மா பிரமம் -வேதம்- ஞானம் வேதம் கொடுகிறது -உதிக்க செய்கிறது உள் பொருள்—ஆததே-உலகத்தில் சரீரம் கொண்டு –ஆத்மா –ஞான விகாசம் சாஸ்திரம் ஒன்றே பிரமாணம் –பிரத் யட்ஷமோ அனுமானமோ பிரமம் அறிய உதவாது –படைக்க பட்ட பொருளை கண்டு படைத்த பிரமம்–நெருப்பு புகை-முன்பு இன்று புகை இல்லையே–சாஸ்திர யோநித்வாத் –சாஸ்திரம் காரணம் கொண்டே பிரம ஞானம்  அடைகிறோம்–வேத அத்யயானம் முக்கியம்
அடுத்த கேள்வி யார் அதற்க்கு அருகில் போகிறார்கள்- ஒரு சக்கரம் ஏழு குதிரைகள்-ஏழு சந்தஸ் –
பதில்- தேவர்கள் அருகில் வருகிறார்கள்- சித்தரை ஒரு தேவதை-துவாதச ஆதித்யர் –தேவ சப்தம் சமமும் தமமும் உள் உறை பொருள்–

வெளி இந்திரியம் அடக்குதல் சமம் –உள் மனம் அடக்குதல் தமம் -பிரம ஞானம் வந்ததும் இவை தானே வரும்..ஷாந்தி சமம் தமம் வேண்டும்–ஆமை தன கை காலை சுருக்கி கொள்வது போல் இந்த்ரியங்களை சுருக்கி கொள்ள வேண்டும்..-சாஸ்திர ஞானம் எவ் வளவு இருந்தாலும் இந்த்ர்யங்கள் வெல்லா விடில் வீழ்ச்சி -மண்டோதரி -ராவணன் இறந்த பின் இதை சொல்லி உன் இந்த்ரியங்களுக்கு தோற்றாய்–உயர்ந்த பிரம விஷயத்தில் இவை திருப்பி –வெல்ல வேண்டும் என் அமுதினை கண்ட கண்கள் மற்று ஒன்றினை காணா –மனசு அடக்குவது சுலபம் இல்லை–தொழுது எழு என் மனனே –மனமே பந்த மோஷ ஹேது-பற்று அற்ற மனசால் உயரலாம் –குந்தி தேவி துக்கம் கொடு உன்னை மறக்காமல் இருக்க-என்றாள்–ஆத்மா குணம் வளர்க்க வேண்டும்
மூன்றாவது யாரால் அஸ்தமிக்க படுகிறார்-தர்மத்தால் பதில்–முக்தி தான் அஸ்தமனம்-ஆத்மா தர்மம் -உபாசன ரூபம் ஆன பக்தியால் முக்தி அடைகிறான் -நதிகள் கடலை நோக்கி ஓடுவது போல் –சேர்ந்த பின் பிரித்து பார்க்க முடியாது–இங்கு பலர் சரீர சம்பந்தத்தால்-முக்தி அடைந்த பின் -முக்தாத்மா —

மன் மனாபவ –மத பராயனாக -ஞாதும் த்ரஷ்டும் பிரவேசும் பக்தி ஒன்றாலே–தர்மம்-பகவானே -என்றும் கொண்டு-அவனே முக்தி கொடுக்கிறான் பிர பக்தி–மகா விசுவாசம் பூர்வகம் –கிருஷ்ணன் தர்மம் சனாதனம் ராமோ விக்ரவான் தர்ம -உன் தன்னை பிறவி பெரும் தனை புண்யம் யாம் உடையோம் ..
சாம்யா பத்தி மோஷம்–பிரித்து அறிய முடியாமல் ஒன்றாக ஆகும்-எட்டு கல்யாண குணங்களில் சாம்யம்–அபக்த பாபமா–பாபம் தொலைய பெற்றவன்/  விஜரக -மூப்பு இல்லை-அவனை அனுபவித்து கொண்டே இருக்க //விசோக விஜிகத்ச அபிபாசக  சோகம் /பசி தாகம் இல்லை சத்ய காம -சத்ய சங்கல்பம் போகம் மட்டும் சாம்யா பத்தி அனுபவம் —
யார் இடத்தில் நிலை நிற்கிறான்-சத்தியத்தில் நிலை நிற்கிறான்-சூர்யன் நிலை இருப்பது சத்யம் இருப்பதால் –அடுத்த கேள்வி பதில்
தர்மம் தலை குனிந்தால் அவதரிக்கிறான்–சத்ய சப்தம் பிரமம்-முக்தி அடைந்த பின் ஜீவாத்மா பிரமம் இட நிலை பெறுகிறான் –கல்யாண குணம் அனுபவித்து கொண்டே இருப்பான்..சாரூப்யம் -அவன் போன்ற மேனி/ சாலோக்யம் -அதே லோகம்–கிடைக்கும்/ சாமீப்யம் அவன் அருகில்-சாயுஜ்யம் பரிசு கிடைக்க பெற்று அவனை அனுபவிக்கிறோம்..சத்யம் ஞானம் அனந்தம் பிரம –நிர்விகாரம் சத்யம்–அவிகாராய நித்யாயா பிரமம்–நித்ய நிர்விகார தத்வம்–சொரூப விகாரம் அசித் ஸ்வாப விகாரம் ஆத்மா /ஞானம் அதீத /அனந்தம் திரி வித தேச கால வஸ்து பரிச்சேதம்
சத் தி அம் -இரண்டையும் நியமிகிறவர் சத்தியம்–சத்யான பிரமதி தர்மம்–குரு உபதேசிக்கிறார்
வேதம் ஆத்மா ஞானம் மலர்விகிறது/சம தம நடந்து போகும் /உபாசனமோ பிர பத்தியோ முக்தி அடைவிக்கும் /அவன் இடம் நிலை பெற்று இருக்கும்

ஆக நான்கும் சொன்னார்
யாரால் எதனால் இவன் ச்ரோத்ரியன் ஆகிறான்  அடுத்த கேள்வி  -சுருதி அத்யயனம் பண்ணி ஆகிறான்-சுருதி காதால் கேட்டு உச்சாரண அனு உச்சாரண வழியில்–கற்று  அதன் படி அனுஷ்டித்து –அடுத்த கேள்வி-
எத்தால் மகத்– மிக பெரியவன் ஆகிறான்-தபசினால் பிரமத்தை அடைகிறான் –படி கட்டு பரகுதாரண்யா உபநிஷத் -கேட்டு தருஷ்டவ்யா -மனனம் -கேட்டதை நினைந்து — உன் உடைய விக்கிரமம் எல்லாம் நெஞ்சகம் பால் சுவர் வழி எழுதி கொண்டேன்–விலங்கு மனனம் பண்ணாது -மனிதன் இத்தால் வாசி- தியானம் இடை விடாமல் -தபஸ் ஆலோசனை-ஆவல் –
ஏழாவது கேள்வி-நித்தியாசனம்-பற்றி-நிலை நிறுத்துதல் மனசில்–நம் இடமே பிரமம் இருத்தி வைத்து -மூன்றாவது நிலை கேள்வி மனனம் அப்புறம்–அவனை தவிர வேறு யாருக்கும் இடம் இன்றி —தைல தாரை போல ஸ்ருதி சந்தானம் –அவிச்சினம் இடை வீடு இன்றி–மறப்பற என் உள்ளே மன்னினான் தன்னை மறப்பனோ இனி நான் என் மணியை மணியை வானவர் அணியை –உருவ வெளிப்பாடு-
அடுத்து -யார் துணை செல்கிறார் இவனுக்கு -திருதி- தைர்யம் முதல் அர்த்தம் – பிராட்டி கடாஷம் திருஷ்டி நோக்கி சம்பத் ஓடி–ரதி மதி ..திருதி -போல் பாதேயம் புண்டரீகாஷா நாம சங்கீர்த்தனம் கட்டு சாதம்-மனசு தெளிவாக இருந்தால் தான் நிலை பெற்று பிரமம் இருக்கிறான் —

நித்ய அனுஷ்டானம் பண்ண பண்ண அழுக்கு போகும் அவன் வந்து இருப்பான்–
அடுத்து எதால் புத்தி படைத்தவன் ஆகிறான் அறிந்தோருக்கு கைங்கர்யம் பண்ணி புத்தி மான் ஆகிறான்
சேவை பண்ணி –அடைகிறோம்..விநயம் பணிவு வர கைங்கர்யம் பாகவதர்க்கு பண்ண வேண்டும் –அகங்காரம் மம காரம் நீங்கும்
அடியார் அடியார்-மணி வண்ணற்கு ஆள் என்று உள் கலந்தார் எம் கோக்கள்–ஞானி தத்வ தர்சனி–பீஷ்மர் தர்மர்–மாதவனே கண்ணுற நிற்கிலும் –காணகில்லா ..மாயன் ராமானுசன் தோன்றிய அப் பொழுதே நாரணர்க்கு ஆள் ஆயினரே —பெருமாள் மக ரிஷி காலில் இருந்து சத் விஷயம்
அடுத்து பிராமணர்க்கு தேவத்வம் எது உயர்ந்த தர்மம் வேதம் அத்யாயனமே பதில்–

ஒன்பதாவது கேள்வி-பிராமணர்க்கு தேவத்வம் எது-சொர்க்க பதவி இல்லை சத்வ குணம் இருக்கும் உயர்ந்த தன்மை-ஸ்ரத்தை உடன் சாஸ்திரம் படி நடப்பது -தேவ அசுர விபாகம் கீதையில்-வேதம் அத்யயனம் செய்து ஆகிறான்–பதில்-சத்ய வாக்கியம் பிரதானம் தபஸ் தான் பிரதானம் -இரண்டும் ஸ்வாத் யாயம்-அத்யயனம் பண்ணி பண்ணி வைப்பதே பிரதானம் -உபநிஷத் வாக்கியம்-பிரம ஞானம் பெற இது ஒன்றே வழி என்பதால்..ஸ்வாத்யாயம் காலம்-பிரித்து பஞ்ச கால பராயணர்கள் -அபிகமனம்/-உபாதானம்/இச்சா /ஸ்வாத்யாயம் /யோகம்/–நாகை சௌந்தர ராஜா பெருமாள்-இவர் வாயில்  வேதம் ஓதும் நல் வேதியர் வானவர் ஆவர் தோழி-வேதோ -வேத வித் -கவி—-வேதமே அவர் ..வேதம் அங்கமாக கொண்டவர்–கொடுத்தவர் –அச்சோ அழகிய வா – வேதத்தை வேதத்தின் சுவை பயனை ..என்னை ஆள் உடை அப்பன்–சந்தோகா ..சாமவேதி–பால் என்கோ நான்கு வேத பயன் என்கோ–கண்ணனை கூவுமாறு அறிய மாட்டேன்-வேத நான்காய்–அந்தணர் மாடு-தனம்-வேதம்
பத்தாம் கேள்வி- பிராமணர்களுக்கு எது தர்மம் எதை ஆஸ்ரயிக்க வேண்டும் தபஸ் பதில்– வேதார்தம் நினைப்பது -இது–ஞான யக்ஜம் ஸ்வாத் யாயம் அப்புறம் -செய்ய வேண்டியது–சப்தமே போதும்-அர்த்தம் அறிந்தால் இனிக்கும் –அர்தானு சந்தானம் –பைலர் ரிக்/ஜைமினி சாம வேதம் பிரசாரம்
அடுத்து மனுஷ்ய தன்மை பிராமணர்களுக்கு எது–மரணம் தான் –பதில்–உயிர் பிரிதல் இல்லை சொரூப நாசம் தான்-தேக ஆத்மா அபிமானம் தான் இதில் சொல்கிறார்

ஆத்மா என்றாலே சூஷ்மம் ஞான மயம் ஆனந்த மயம் சேஷத்வம் -நித்யம் –சரீரம் கொண்டதால் சுக துன்பம் அனுபவிக்கும் –பிராந்தி போல் சரீரம் தான் ஆத்மா விபரீத ஞானம்–வேத நூல் பிராயம் நூறு–பேதை பாலகன் ..மூப்பு
அடுத்து அசத் போல்  பிராமணர் செய்ய கூடாத ஆசாரம் எது-பர வாதம்-பிறர் நிந்தனை-கூடாது—தீக் குறளை சென்று ஓதோம்–நம் தோஷம் அறிந்து பிறர் தோஷம் அறியாமல் இருக்க வேண்டும் பெருமாள் பிராட்டி எம தர்ம ராஜன் மூவர் தான் பிறர் தோஷம் பார்க்கும் அதிகாரம்-துல்ய நிந்தா -நம் தோஷம் பிறர் சொன்னால் பரிசு கொடுக்க வேண்டும்- பட்டர் பரிசு கொடுத்த ஐதீகம் –மனத்திலோர் தூய்மை இல்லை வாயில் ஓர் இன் சொல் இல்லை–பாரில் ஓர் –பச்சை பசும் பொய் –

இனி ஷத்ரியர் பற்றி அடுத்த நான்கு கேள்விகள்-தேவத்வம்–இஷு அஸ்தரம் அம்பு வில் அஸ்தரம் சாஸ்த்ரம் போல்வன-காண்டீபம் அர்ஜுனன்-தர்மர் வைய -தீக்கு இரை-கண்ணன் இதையும் தீர்த்துவைக்க -துவம் துவம் நீச பாஷை சொல்லி கொன்றது போல்-பிராணன் போகாமல் காத்தான்–வில் அம்பு போல்வனே தேவத்வம்-ராமன் வில் பிடிக்க -சீதை சொன்ன கதை-ரிஷி-கத்தி கொடுத்த கதை-மடியில் வைத்து குரு குரு என்ன வெட்டினான்-உன்னை கை விட மாட்டேன் லஷ்மணனை விட மாட்டேன் விட்டாலும் பிரதிக்ஜை விட மாட்டேன்-சிலை அன்றோ கை தலத்தே என்கின்றாள் கண்ண புரம் — சன்மம் -சங்கோடு சக்கரம் ..வில் வாள் தண்டு–ரஷகத்துக்கு கால விளம்பம் இன்றி பஞ்ச ஆயுதம் கொண்டு
எது தர்மம் சத்துகள் போல்- யக்ஜம் பண்ணுவது ராஜ சூய யாகம் அஸ்வமேத யாகம் –ஷத்ரியர்–யுத்தம் பண்ணுவதே யக்ஜம் –வர்ண ஆஸ்ரம தர்மம் –யுத்தம் பொருட்டு யுத்தம் பண்ணி -பலன் எதிர் பார்க்காமல்-எது மானுஷ்யோ பாவம்-பயம் வந்தால் மனுஷ்யன் ஆகிறான்–அன்பால் யுத்தம் விட்டு ஓடினாலும் பயம் என்பர் -கீதை -அன்பு யுத்தம் வரும் முன் எங்கு போனது -பெருமான் அருகில் போக அபயம் -விலகி போக பயம் பய கிருத்  பய நாசன் இரண்டும் –அவனே செந்தீ யை தழுவி அச்சுதன் உருவம் என்பர் ஆழ்வார் பிரகலாதன்–

புறப்பாடு-கண்டு அருளுவதே பயம் போக்க தான்-அபாய முத்ரா ஹஸ்தம்-அஞ்சேல் மாசுச வைத்த அஞ்சேல் என்ற திரு கைகள்-
அசத் போல் அதர்மம் எது ஷத்ரியனுக்கு -பரித்யாகம்-சரண் அடைந்தவரை விட மாட்டான்-விபீஷணன் சரண் கதை அறிவோம்-
கபோதா உயாக்யானம்-மனிதன் புலி குரங்கு-கதை–பெருமாள் சுக்ரீவன் இடம் சொன்ன குரங்கு கதை-காலில் விழுந்தவரை காத்ததே–நின்றவா நில்லா நெஞ்சு மனிதனுக்கு -பிராணனை விட்டாவது காலில் விழுந்தவனை காக்க வேண்டும் -மித்திரன் போல் வந்தாலும் தோஷம் பல இருந்தாலும் -சத்துக்கள் இதையே கொண்டாடுவார்கள்–ஷத்ரியன்-கை விட மாட்டான்-வாலி தவறினான் இந்த கடமை-சுக்ரீவனை துரத்தி அடித்தான்-தண்டனை பெற்றான் —

சீதை பிராட்டி உபதேசம்-சரணாகத வத்சலன் கை பிடி –
அடுத்த நான்கு கேள்விகள் -யக்ஜதுக்கு சாமம் ரிக் யஜுஸ் என்ன -ஸ்தோத்ரம் ரிக்/ அர்த்த அனுசரித்து பாதம் முடிந்தால் ரிக்/யஜுஸ் -சங்கீதம் கூய்ட்டி சாமம்-கலவை அதர்வணம்–முக்ய சாமம் எது-ஆத்மா ஞானம் வளர்ப்பது தான் யக்ஜம் இதற்க்கு -பிராணன் தான்முக்கியம் பதில் –பிராண தேவதை- இந்தரிய தேவதை-சண்டை-உபநிஷத் கதை-யார் வெளி ஏறினால் கஷ்டம்-பஞ்ச பிராணன்-இது தான் சாமம்
அடுத்த கேள்வி-யக்ஜதுக்கு முக்ய யஜுஸ் எது-மனோ -மனஸ் தான் பதில்–பண்ண மனம் வேண்டுமே-
அடுத்த யக்ஜம் எது வருகிறது -யார் தரிகிரார்கள்-ரிக் தரிக்கும் -மூன்றையும் கற்றவர் திரு அடி- பெருமாள் லஷ்மணன் இடம் சொல்லி நிதானமாக பதில்- ரிக் யஜுர் சாம வேதம் கற்காமல் இப்படி இருக்க மாட்டான் -ரிக் வேதம் விநயம் –வித்தை வந்த பின்  விநயம் வந்த பின் -உபதேசம் வந்த பின் தனம்  வந்த பின் தர்மம்வந்த பின் சுகம் –யஜுர் வேதம் கற்றால் தரிக்க நினைவு கொள்ள—தூயோமாய் வந்து ௫/௧௬ பாசுரம்-கவலை பாயாமல் இருக்க யஜுர் வேதம்/சாம வேதம் ஞானம் வர
எதை யக்ஜம் தாண்டி நடக்காது -எதற்கு அடங்கி இருக்கும் –ரிக்கை தாண்டி போகாது–பர பிரமத்தை பக்தன் அங்குசம் போல்

தேவர்களை பூஜித்து யக்ஜம் -நம்மையும் படைத்து அவர்களையும் படைத்து யார் என்ன செய்ய வேண்டும் சொன்னான் கீதையில்-
தேவர்களை குறித்து யக்ஜம் பணுவனுக்கு எது ஸ்ரேஷ்டம்—உழவனுக்கு எது ஸ்ரேஷ்டம் –மழை தான்-உசந்தது –அனைவரும் உழவன்- இதம் சரீரம்    ஷேத்ரம் ஷேத்ரக்ஜம் ஆத்மா -நல்ல குணம் வளர்க்க வேண்டும் –உபகரணம்-சரீரம்–அகிம்சை சாந்தி போன்றகுனம்- கருணை மழை கொண்டே–தீங்கின்றி –திங்கள் மும்மாரி–

வாழ அன்னம்-மழை தேவை-யக்ஜம் தேவை-சக்கரம்–சரணாகதி உழவன்–மாரி மாறாத தன் அம் மலை— திரு வேம்கடத்தானின் அனுக்ரகம் பொழிய -ஆழ்வார் பாசுரம் தாமிர பரணி ஓடும்–என்னை தீ மனம் கெடுத்தாய் –மருவி தொழும் மனமே தந்தாய் -வந்து என் உள் புகுந்தாய்
விதை விதைப்பவனுக்கு எது சிறந்தது -பீஜம் விதை தான்-பதில்–பக்தர் விருந்து விதை கோட்டை நெல்லை கொண்டு -கதை-விதைத்து விட்டேன்-அங்கு வளர -அதிதி  விருந்து பலன் மோஷ பிராப்தி–பீஜம்- விதை என்றது பிரமம்-காரணம் இவன் தானே -திரி வித காரணம் -ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்காரம்-வேர் முதல் வித்தாய் – உபாதான நிமித்த சக காரண -மூன்றும் -அகில  காரணாய அத்புத  காரணாய நிஷ் காரணாய —
பித்ரு தர்பணம் பண்ணுபவனுக்கு பீஜம்-புத்திரன் –சந்தான பீஜம்-பரிஷித்-அப பாண்டவ அஸ்தரம்-உத்தரை கற்பம் –ரஷித்து–பிரமச்சாரி சத்யம் உண்மையாக இருந்தால் பிள்ளை எழட்டும் –கண்ணன் சொன்னதும் பரிஷித் எழுந்தான் -திரு அடி பலத்தால் தானே –ஏலா பொய்கள் உரைப்பானே– அசுத்தம் ஹரி கதையே தண்ணீரும் சோறும் -பரிஷித்-குரு குல சந்தான பீஜம்–
23rd கேள்வி–நிலை பெற்று இருப்பவர்களுக்கு எது உயர்ந்தது -பசு -கோ பூஜை–

வள்ளல் பெரும் பசுக்கள்/கற்று கறவை கணங்கள்/கர ஸ்பர்சத்தால் மோஷம்-நாதன் செடி கோடி மரம் வம்சம் தான் கூரத் ஆழ்வான்
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி..–கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் என்னும்

ஆ மருவி அப்பன் –கோசகன்–பசுக்கு சகா –இட்டமான பசுக்களை நீர் ஊட்ட கற்று கொடுப்பான் —
24th -சந்ததி விருத்தி அடைய ஆசை படுபவருக்கு -புத்திரன் -கர்மா செய்ய வேண்டுமே–பெற்ற தாய் போல் எம்பெருமான்-திரு அடியில் சேர்த்து கொள்ள தான் முயல்வான்-புது நரகம் மீட்க புத்திரன்-ஸ்ரார்தம்  ஆண்டு தோறும் -பண்ணி மேலும் -கயா ஸ்ரார்தம் ஒரு தடவையாவது -தந்தை சொல்  மிக்க மந்திரம் இல்லை –உன்னையே மகனாய் பெற வேண்டும் தசரதன்-
ஸ்ரீ வேத வியாசர் திரு அடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading