ஸ்ரீ திரு விருத்தம் -19-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் -வியாக்யானம் –

(தமிழர் வியாக்யானத்தில் உள்ள சங்கதி
நல் தாய்
செவிலித்தாய்
உடைய நங்கையார் நல் தாய் என்றும்
செவிலித்தாய் பாகவதர் போல் என்றும் கொள்ளலாமோ என்னில்
அது போல் இல்லை
உமக்கும் நமக்கும் இடையே இல்லை –
கோயில் ஆழ்வார் இரண்டையும் பாதுகாக்கும் நல் தாய்
அவரையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருக்கும் மதுரகவி -வேறு ஒன்றும் அறியாதவர் -செவிலித்தாய் –
தோழி பாசுரமாகவும் இருக்கலாம்
என் சின் மொழி -தாய் பாசுரமாகவே இருக்க வேண்டும்
காலம் குறித்துச் சென்ற தலைமகன் வந்து அருளாமையால்
ஆற்றாமை மிக்கு இருக்கும் தலைவி
ஊரார் பழிக்கு ஆளாக
பழிக்கு செவிலி அஞ்சிய துறை

என்னுடைய சின் மொழி -தனக்கு உடைமை யாதல்
தோழி இருக்க முடியாதே
தாய் வார்த்தையாகவே இருக்கும்
என் மகள் -வாய்ப்பாடு -இருக்கும் –
அவ்வாய்ப்பாடு தோன்றாமல் தோழி பாசுரம் இருக்குமே
இந்த அடையாளம் கொண்டே அறியலாம்
இது பிறளுவதும் உண்டு
அழகிய மணவாள ஜீயர் ஒருவர் மட்டும் தோழி பாங்கி இரங்கிய பாசுரம் என்கிறார்

மேகம் முழக்கத்தைக் கேட்டு தலைவி வருந்த
தோழியும் கலங்க
தாயார் இவற்றை அறிந்து -உற்ற தோழி -இருவருக்குமாக வாழ்த்து பாடுகிறாள்

நல் தாய் என்பது மரபு இல்லை
செவிலித் தாய் ஆகவே இருக்கும்
வேறு உடைமையும் இல்லற பணியும் இருக்குமே
முகக் குறிப்பை அறிந்து உற்று நோக்க செவிலித்தாய் ஆகவே இருக்க வேண்டும்
செவிலித் தாய் சிறப்பு நக்கினாருக்கு இனியான் சொல்லுமே
ஆழ்வார் திருமேனி ஒன்றையே நோக்கி இருக்கும் மதுரகவி ஆழ்வார் போல்வார் என்றபடி
மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர் அகத்துறை பாடல்களையும் இவர் நாவில் நின்று தானே அருளிச் செய்கிறான் -)

(பாலனாய் ஏழு உலகு -4-2-இதன் விவரணம் -பாசுரம் தோறும் திருத்துழாய் பிரஸ்தாபம் உண்டே

பாலன் ஆய், ஏழ் உலகு உண்டு, பரிவு இன்றி
ஆலிலை அன்ன வசம் செயும் அண்ணலார்
தாளிணை மேல் அணி தண் அம் துழாய் என்றே
மாலுமால் வல் வினையேன் மட வல்லியே.–4-2-1-

நல்லடி மேல் அணி நாறு துழாய் என்றே சொல்லுமால் சூழ்வினை யாட்டியேன் பாவையே.–4-2-2-

சேவடி மேல் அணி செம் பொன் துழாய் என்றே கூவுமால் கோள்வினை யாட்டியேன் கோதையே.–4-2-3-

பாதங்கள் மேல் அணி பைம் பொன் துழாய் என்றே ஓதுமால்; ஊழ் வினையேன் தடந் தோளியே.–4-2-4-

தாள் இணை மேல் அணி தண் அம் துழாய் என்றே நாளும் நாள் நைகின்றதால் என்றன் மாதரே.–4-2-5—

பாதங்கள் மேல் அணி பைம்பொன் துழாய் என்றே ஓதுமால் எய்தினள் என்றன் மடந்தையே.–4-2-6-

வடங்கொள் பூந் தண் அம் துழாய் மலர்க்கே இவள் மடங்குமால்; வாணுதலீர்!என் மடக்கொம்பே.–4-2-7-

வம்பு அவிழ் தண் அம் துழாய் மலர்க்கே இவள் நம்புமால்; நான் இதற்கு என் செய்கேன் நங்கைமீர்?–4-2-8-

சங்கு என்னும்; சக்கரம் என்னும்; துழாய் என்னும்; இங்ஙனே சொல்லும் இராப்பகல் என் செய்கேன்?–4-2-9-

என் செய்கேன்? என்னுடைப் பேதை,என் கோமளம்,
என் சொல்லும் என் வசமும் அல்லள்; நங்கைமீர்!
மின்செய் பூண் மார்பினன் கண்ணன் கழல் துழாய்
பொன்செய் பூண் மென்முலைக்கு என்று மெலியுமே.–4-2-10-இங்கு சின்மொழி)

அவதாரிகை-

இவள் இருந்து பொய் என்னும் காட்டில் பொய் ஆகாது இறே
ரனோத் யததாம் இவ வாரணானாம்-கிஷ்கிந்தா காண்டம் -28-32-என்று
ஆணை அணி வகுத்தால் போல-
மேகம் நாலு மூலையும் கையும் அணியும் வகுத்து வர்ஷிகிற படியை கண்டு இவள் மோஹிக்க-

(மின்னல் முகப்படாம் போல்
ஆனை பிளிறுவது போல் மேகம் கர்ஜிக்கும்
சீதாபிராட்டி உடன் என்று இவற்றை நாம் அனுபவிப்போம் –
பெருமாள் இளையபெருமாள் இடம் ஆற்றாமையைச் சொன்ன ஸ்லோகம் )

“எம்மின் முன்னவருக்கு மாய்வர் “-திருவாய் மொழி -1-1-5 என்னும் படி
இவள் உடைய மோகத்தை கண்டு    தோழியும் மோகிக்க
இவ் அளவிலே உணர்ந்து இருந்த தாயார் இவ் அவசாதம் நீங்கிடுக என்று
ரஷா விதாநம் பண்ணுகிறாள்-

காரிகையார் நிறை காப்பவர் யார் என்று கார் கொண்டு இன்னே
மாரிகை ஏறி  அறை இடும் காலத்தும் வாழியரோ
சாரிகை புள்  ஆர்ந்து அம் தண் துழாய் இறை கூய் அருளார்
சேரிகை ஏறும் பழியாய் விளைந்தது என் சின் மொழிக்கே –19-

பாசுரம் -19-காரிகையார் நிறை காப்பவர் யார் என்று -செவிலி பழிக்கு இரங்குதல் –
பாலனாய் ஏழு உலகு -4-2-

பதவுரை

காரிகையார் நிறைகாப்பவர் யார் என்று–‘ஸ்திரீகளுள் (எம் முன், அடக்கத்தை அழியாமற் பாதுகாத்துக்
கொள்ள வல்லவர் யாவருள்ளார்?” என்று கருதிச் செருக்கி
மாரி–மேகங்கள்
கார் கொண்டு–கருமை நிறங்கொண்டு-கோபத்துக்கு வர்ணம்
இன்னே–இவ்வாறு
கை ஏறி–ஒழுங்காக (வானத்தின் மீது) ஏறி நின்று
அறையிடும் காலத்தும்–அறை கூவுகிற காலத்திலும்
சாரிகை புள்ளர்–விரைந்த நடையை யுடைய கருடப் பறவையை வாஹநமாக வுடையரான இத்தலைவர்
அம் தண்ணம் துழாய்–அழகிய குளிர்ந்த (தமது) திருத்துழாயை
கூய் இறை அருளார்–(இவளை) அழைத்து (இவளக்கு)ச் சிறிதும் கொடுத்தருளுகிறாரில்லை;
(ஆகவே)
என் சில் மொழிக்கு–சில பேச்சுக்களையுடை என் மகளான இவளுக்கு
மழலை வார்த்தை என்றும் இளைத்த வார்த்தை என்றுமாம்
சேரி கை ஏறும் பழி ஆய் விளைந்தது–(அவர் பக்கல் கொண்ட காதல் தான்) இவ்வூர் முழுவதும் பரவும் பழியாய்ப் பலித்தது.
அதிமாத்ர ப்ராவண்யத்தைப் பழி என்கிறார்கள்
வாழியரோ–இவள் இத் துன்பம் நீங்கி வாழ்ந்திடுக.

காரிகையார் நிறை காப்பவர் யார் என்று-
1-நாங்கள் சஞ்சரியா நிற்க
ஸ்திரிகளின் அடக்கத்தை நோக்குவன் என்பார் யார் ?–

2-பெண் பிறந்தாராய்  இருந்து வைத்து எங்கள் சந்நிதியில் தம் தாமுடைய
ஸ்த்ரீத்வத்தை நோக்கி கொடு இருப்பார் யார் ? என்றும்-

கார் கொண்டு-
கறுத்து கொடு

இன்னே மாரி கை ஏறி அறை இடும் காலத்தும் —
அதி வ்ருஷ்ட்டியான  வர்ஷம் ஆனது அணிக்கு அணியும் தூசியும் ஆக தோற்றின படி-

அறை இடும் காலத்து —
அறை கூவுகிற படி–
மகா ராஜர் பெருமாளை அண்டை கொண்டு வாலியை அறை கூவினார் போல் —
இது அங்கனும் அன்றியே , தனி நின்று வென்ற படி-

அங்கு ஓர் ஏக வீரனான வாலியை–
இங்கு ஓர் அபலையை —

அங்கு சொல்லிற்று ஒரு அறிவானனான சேதனன் —
இங்கு அசேதனம்

வாழியரோ–
இவ் அவசாதம் நீங்கி ஜீவித்திடுக

சாரிகை புள்ளர்–
அபரிகரனாய் வாராது இருந்தான் அல்லன் கிடீர் —
பதினாலாண்டு கூட வந்த வழியை இன்றும் போகலாமோ என்று இருக்க வேண்டாத படி
சகசாரியான பரிகரத்தை உடையவன் ..
ஆசீதரை இட்டு தன்னை நிரூபிக்கும் படி அவர்களுக்கு வைத்து கொடுத்த தரம்-

1-பெரிய திரு அடி மேலே போரா இருத்தல்–
2-திரு ஆழியை கையிலே உடையன் ஆதல்–
3-பெரிய பிராட்டியாரை எனக்கு என்ன பெறுதல்–
4-திரு துழாயை தனக்கு தாராக உடையன் ஆதல் –இவை இறே சர்வாதிகார லஷணம்

அம் தண் துழாய் –
போன உயிரை மீட்க வற்றாய் இருக்கை —
சந்தாந கரணி -விசல்ய கரணி-என்னுமா போலே —

(சந்தான கரணி -வெட்டுண்ட காயம் சேர்க்க -புள் -சேர்த்து வைக்கும்
விசல்ய கரணி -அம்பு பட்ட காயம் தீர்க்க -உள்ளத்தில் வலி நீங்க திருத்துழாய் )

இறை கூய் அருளார்–
பிரணயித்வம் தவிர்ந்தால் ஸ்வாமித்வமும் தவிர வேணுமோ ?
தாம் வந்து அணைத்து தம் தோளில் மாலை என் மார்பில் கிடக்க பேரா விட்டால்
சத்தா தாரமாக அது  தனையும் தந்தால் ஆகாதோ ?

தாமே வரவுமாம் (புள்ளார் )
அழைக்க்கவுமாம் (கூய்)
பேறு அத் தலையாகவே என்று இருந்த படி

சேரி கை ஏறும்  பழியாய் விளைந்தது —
சந்நிவேசத்தில் உள்ளார் எல்லாரும் ஒரு விஷயத்துக்காக இப்படி துடிப்பதே-
என் தலையாலே பேறு-என்று இருப்பதே என்று-
கை எடுத்து கூப்பிடும் படி ஆயிற்று

சின் மொழிக்கே –
இதுக்கு எல்லாம் பருவம் இல்லை கிடீர் —
சொல் என சொல்ல மாட்டாத பருவம் கிடீர்–
இவ்வளவென்று  கிடீர் பழியின் கனம்-

இத்தால்
ஆழ்வாருக்கு பக்த வியதிரேகத்தில்   அங்கே  சம்பந்தம் உள்ளதால்
ஒன்றாலே ஆகிலும் தரிக்க வேண்டும் படி ஆற்றாமை மிக்க படி சொல்லிற்று-

தாத்பர்யம்
வர்ஷாகாலத்தில் வராமல் நாயகியும் தோழியும் மோஹித்துக் கிடக்க
தன்னைப்போல் ஆக்கி
தாயானவள் காலத்தினுடைய -நாயகனுடைய -இரண்டாலும் நலியும் இவளுடைய விரஹ வேதனை
ஸ்த்ரீகள் லஜ்ஜையால் அடக்கிக் கொண்டு -கீழ் மேகம்
நாம் இப்பொழுது புறப்படுவோம் -கண்ணனை நினைவு படுத்த
விஜும்ப்ரணம் -கர்ஜித்து -வர்ஷித்திக் கொண்டு -அழிக்க சஞ்சரிக்க
இப்பொழுதாவது வந்து அணைத்தால் ஆகாதோ
அன்றிக்கே முகப்பே கூவிப் பணி கொண்டால் ஆகாதோ
கூவுதல் வருதல் செய்யாமல்
கர்த்ருத்வம் அவனத்துவே
போக்தாவும் அவனே
அது இல்லாமல் போனால் -திருத்துழாய் பிரஸாதம் கொடுத்து அருளக்கூடாதோ
இவளது துன்பத்தை க்ஷமிக்க ஒன்றுமே செய்யாமல்
அதி ப்ராவண்யம் கண்டு பழி சொல்ல
இவளுக்கு இவ்வேதனை சீக்கிரம் நீங்க வேண்டும் என்று மங்களா ஸாஸனம் பண்ணுகிறார் –

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading