ஸ்ரீ பால கிருஷ்ண வைபவம்– ஸ்ரீ வேளுக்குடி ஸ்வமிகள் ..

ஸ்ரீ கிருஷ்ண அனுபவம்-பிறப்பில் பல் பிறவி பெருமான்-ஒரு அவதாரம் தான் உபதேசம் அருளிய அவதாரம் ..வராக பெருமாள் பூமா தேவிக்கு சின்ன உபதேசம் அருளி இருக்கிறார்.-ஆவணி ரோகிணி-கண்ணா பிரானும்பெரிய வாச்சான்பிள்ளையும் அவதாரம்–கண்ணன் பற்றி நிறைய  பாசுரங்கள் அருளி செயலில் —விஷ்ணு புராணம் 5 ஸ்கந்தம் முழுவதும் -ஸ்ரீ பாகவதம் 10 ஸ்கந்தம் 90 அத்யாயம் -நிறைய அனுபவித்தாலும் சொல்லி முடிக்க முடியாத அவதாரம் –பரிவார்கள் கண்ணன் மேல் -தந்தை இடையன் எல்லா ரூபத்திலும் அசுரர்கள்-பாலா ராமன் யுத்தம் பொழுது தீர்தயாத்ரை சென்றால்-ராமனுக்குதம்பி மார்கள் எல்லாம்பெரும் சைன்யம் போல்-அயோதியை மக்கள் ராமோ ராமோ சொல்லி கொண்டே–மரம் செடி கொடிகளும் இவனுக்கு வருந்தும்-

பொறுமை தயை கொடை வள்ளல் தன்மை காட்ட -இங்கு அவதாரம்-ஸ்ரீ வைகுண்டத்தில் இவை பகல் விளக்கு போல் இருக்குமே–அவதரித்து சேஷ்டிதம்-விளையாடலை-காட்டி -நாம் இதை நினைந்தாலே இதே பிறவியிலே மோட்ஷம் பெற -ஒரே காரணம்–அவதரித்து நமக்கு முன்னோடியாக -வேதம் அருளியதை நடத்தி காட்ட-ராமன் நடந்தது போலவும் கண்ணன் உபதேசித்தது போலவும்–ஆசார பிரதான அவதாரம் ஸ்ரீ ராம அவதாரம்-அனுபவ பிரதானம் ஸ்ரீக்ருஷ்ண அவதாரம்..-ஸ்ரீ வைகுண்ட விரக்தாயா –

வேதம் இதிகாச புராணம் விஷயம் ஆவதற்கு அவதரிக்கிறான் -ஜன்ம கர்ம ச மே திவ்யம் -பிறந்த வாற்றையும்வளர்ந்த வாற்றையும் நினைக்க நினைக்க -நம் பிறவி  சங்கிலி அறுந்து மோஷம் பெறுகிறோம்–கண்ணன் நடந்த வழி தர்மம்-ராமன் தர்மம் வழி நடப்பான்–திருடினான் பொய் சொன்னான் என்பதை நினைந்தால் மோஷம்–குணம் அவன் இடத்தில் இருந்து பெருமை பெரும்..பகவத் சம்பந்தத்தால் பெருமை- -தன் உடைய சொத்தை எடுப்பவன் திருடன் இல்லை-சத்ய சங்கல்பன்–
நாஸ்திகர்- தோஷம்-உண்டு என்று  அவன் இருப்பதை ஒத்து கொண்டு- பிரமாணம் மூலம் அறிந்தவன்-அது கொண்டு -குணவான் என்று ஒத்து கொண்டே ஆக வேண்டும்-திவ்யமான கர்மம் திவ்ய செஷ்டிதன்கள்- அவனே நினைந்து அவனுக்கும் திவ்யமாக இருக்கிறது என்கிறானாம் மகிழ்கிரானாம்–போத எந்த பரஸ்பரம்–குலசேகரர் –ஏற இடர்ந்ததும்-சொல்லி பாடி-கண்ண நீர் கொண்டு -சேறு என் சென்னிக்கு அணிவனே — நினைத்து நினைத்து உள்ளம் உருகி –ஆவியை நின்று நின்று உக்கும்-அது இத் உது -நைவிக்கும் உன் செயல்கள் எது வாகிலும்–வழியும் பொய் சேரும் இடமும் இனிப்பு தானே ஆறும பேரும்-ஒருத்தி மகனாய்–ஓர் இரவில் ஒருத்தி மகனாய் வளர்ந்தான்- இருவரும் ஒருத்தி -அத்வதீயம்-
இருவருக்கும் ஒருத்தி மகன் –பட்டர் -நஞ்சீயர் சம்வாதம் -யசோதைக்கு சொல்லலாம் தேவகிக்கு சொல்லலாமோ எனபது வேண்டுமானால் கேள்வி -பெற்ற இன்பம் இவள்/வளர்த்த இன்பம் அவள்/மகனையும் -உம்மை திகை இல்லை–முக்கியம் அமுகியம் இன்றி இரண்டுக்கும் முக்கியம் என்று காட்ட -வேண்டி தேவர் இரக்க வந்து பிறந்ததும்–தன்னை தானே வேண்டி கொள்கிறானாம் தாய் தந்தை தனக்கு வேண்டும் என்று -தெய்வ தேவகி-வசுதேவ-வாசி பிரதா -இரண்டு தடவை ஒரே இடத்தில் செல்வத்தை கொடுத்தவர்-பகவானை பெற்றவர் -அடுத்து தனக்கு செல்வம் கொடுத்து கொண்டு அவதரித்தான்-வெள்ளை முடி பல ராமன்கருப்பு முடி கண்ணன்—தேவர்கள் வேண்டி கொண்டதும் சங்கல்பித்து கொண்டு  ஜெயந்தி சம்பவம் வைஜயந்தி விபூஷணம் ஸ்ரீ ஜெயந்தி-என்றாலே ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி தானே –சத்ய விரதம் சத்ய பலம் சத்ய யோனிம் -பாகவதம்-உண்டு அறியாதவன் உண்ணும் குலத்தில் பிறக்கிறான் –யது குலம் உயர்த்த -சம்சாரத்தில் விழுந்த நம்மை தூக்கி விட-ஆயர் குளத்து அணி விளக்கு ஸ்ரீ ராமன் வெம் கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்கு–வட மதுரை-வாமனன் ராமன் கிருஷ்ண சம்பந்தம் உள்ள தேசம்–
மக்கள் அருவரை கல்லிடை மோத சிக்கனே பிறந்த -யோக மாயைக்கு இரண்டு ஆணை–சங்கர்ஷனம் இழுத்து போய் ரோகிணி கற்பம் வைத்ததால் சம்கர்ஷணன்-திரு கோவலூரில் கற்புடை மட கன்னி காவல் பூண்ட பூம் கோவலூர் –தங்கை இவள்-நவமியில் பிறக்க –இருள் அன்ன மா மேனி –அவதரிக்கும் பொழுதே –சங்கு சக்கரம்-பிறப்பு கிடைத்த மகிழ்ச்சியில் வாய் விட்டு சிரிக்க 32 வெளிச்சம் -வசு தேவர் மறைக்க சொன்னதும் வாயை மூடி கொண்டார்-கண்ணன் என்னும் கரும் தெய்வம்–கரியான் ஒரு காளை வந்து–வெள்ளி தான் பிடிக்கும் கண்ணனுக்கு –அதிதி காச்யபர் முன்பு -அவதார ரகஸ்யம் வெளி இட்டு-பின்பு மறக்கடித்தார் -தந்தை காலில் விலங்கு அற வந்து தோன்றிய தோன்றல் –தமியேன் பின் சிந்தை போயிற்று–அவதாரம் நினைத்தால் சம்சார விளங்கும் வெடித்து போகும்–நான்கு பேர் தவம் இருந்து கோபால ரத்னம் பெற்றார்கள்-ராம ரத்னம் லஷ்மண ரத்னம் பரத சத்ருனன் ரத்னங்கள்  ஒருவர் தபசால்-சென்றால் குடையாம்-ஆதி சேஷன் குடையாக பிடித்து- திரு அடி தொங்கி இருக்க -யமுனை ஆறு கரை புரண்டு ஓட -திரு அடி தொட்டதும் வற்றி கொடுத்ததாம் தூய பெரு நீர் யமுனை–கோதாவரி கைங்கர்யம் இழந்ததே –திரு அடி பட்டதும் அகங்காரம் குறைந்து அடியவர் ஆவோம்–எட்டாவது குழந்தை பெண்–யோக மாயை -பூதனை முதல் கேசி வரை-அழித்து-ஒரு வழி பாதை -பக்தர் அவன் இடம் மூழ்கி/வண்ண மாடங்கள் சூழ் –கண்ணன் கேசவன் -திரு கோஷ்டியூர்-பிறந்த இடமாம் பெரி ஆழ்வார்..-கோபிகள் முறை முறை சேவை-துவாரகை இன்றும் -20 நிமிஷ சேவை அப் பொழுது  அப் பொழுது -பேணி பாதுகாப்பார்கள் -மாணிக்கம் கட்டி வைரம் இடை கட்டி வண்ண சிறு தொட்டில் பிரமன் விடு தந்தான் ..
ஓடுவார் விழுவார்  உகந்து ஆலிப்பார் — முற்றம் கலந்து அழல் ஆயிற்று –எம்பிரான் எங்குற்றான் என்பர்-செவித்தாலும் அறிந்து கொள்ள முடியாதே -ஒரு அர்த்தம்/ சேவித்தால் முறை முடிந்தது -கண்ணன் எங்கே எங்கே கேட்பது போல்–அங்கே இன்னும் அதிக நேரம் இருக்க –ஆடுவார்களும் பாடுவார்களும்–அதனால் தான் இங்கு மகன்-ஒருத்தி மகனாய் வளர்ந்து —புத்திரன் மூன்று கடமை-புது நரகம் கிடைக்காமல் காப்பதால் புத்திரன்-சரணகதர்கள் இந்த கவலை வேண்டாம் இது சாமான்ய தர்மம்-ஆண்டு தோறும் ஸ்ரார்தம்–மறுநாள் தாதி ஆராதனம் பண்ண வேண்டும்–கயா ஷேத்ரம் ஒரு தடவை பிண்ட பிரதானம் –இருக்கும் பொழுது தந்தை சொல் மிக்க மந்த்ரம் இல்லை என்று இருப்பவனே மகன்–சங்கு சக்கரம் மறைத்து கொள் என்றதும் கேட்டானே அவன் தான் மகன்-ராம பிரான் 24 வயசில் கேட்டான்-
அத்தத்தின் பத்தா நாள் வந்து தோன்றிய அச்சுதன்-பொங்கும் பரிவால்-ரோஹிணி ஹஸ்தம் தொடங்கி–பத்து-கம்சன் முன்னா பின்ன சேர்த்தா குழம்பி இருக்க –கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்-ஒடுக்கி புல்கில் உதரத்தே பாய்ந்திடும்–மிடுக்கு இல்லாமையால் மெலிந்தேன் நங்காய்–தெய்வ தேவகி புலம்பல்-உந்தை யாவன் என்று உரைப்ப -நந்தன் பெற்றான் –முறை முறை தம் தம் குரங்கிடை இருத்தி-பிதா யஸ்ய லோகஸ்ய -எனக்கு உந்தை-யாவன்-தாமரை விரலாலும் தாமரை கண்ணாலும் காட்ட -நாங்கள் கோன் வசு தேவன் இழந்தானே –

பூதனை வர-பால் உடன் பிராணன் வர-12 மைல் நீளம் சரீரம்-யசோதை பயந்து -அச்சு தாலி ஆமை தாலி -ஐம் படை தாலி கட்டி -பசு மாட்டு வாழை சுற்றி-கொழு மோர் காய்ச்சி-நாள்கலோர் நாலு ஐந்து திங்கள் அளவில் -ஏழு மாசம் திரு மங்கை- தொட்டிலில் விட -சகடாசுரன்–கால் உதைக்க -விழுந்தான்-சகடைத்தை சாகடி போய் -கள்ள சகடம் -கால் ஓச்சி -வெள்ளத்து அரவில் துயில் அமர்ந்த -விஷ முறிப்பு-மண் உண்டதும் வெண்ணெய் உண்பானாம் -சகடத்தை சாடி போய்-உன் திரு அடி உன்னையும் ரட்ஷிகிறதே –தவள ஆரம்பித்ததும் வெண்ணெய்க்கும் பெண்களுக்கும் ஆபத்து —
 தன முகத்து சுட்டி தூங்க தூங்க தவழ்ந்து போய்–மன்னார் குடி பெருமாள் இன்றும் வெண்ணெய் உண்ட திரு மேனி சேவை–பாலகன் என்று பரி பாவம் செய்யேல்- சிறுமையின் பெருமை மா பலி இடம் கேட்டு தெரிந்து கொள்–விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் வெள்ளி மலை ஒத்து இருந்த வெண்ணெய் வாரி விழுங்கி -பல நாள் திருட்டு–இரவில் திருட போய் கௌஸ்துபம் -நீல மாணிக்க கல் ஜீவாத்மா பிரதி நிதி பளிச் என்று இருக்கும் -ஒழி வெள்ளம் கண்டு வெண்ணெய் உண்டு -இருள் அன்ன மா மேனி– ஒருத்தி கையும் களவுமாக பிடிக்க –கச்வம் பால -பலானுஜா -மன மந்திரா சங்கை -கன்று குட்டி- இல்லை சொல்லி போக -காற்றில் கடியாக ஓடி அஹம் புக்கு –பொத்தை விரலை கவிழ்த்து -எல்லா வீட்டிலும் நல்ல உரலும் பொத்தை விரலும் இருக்குமாம்-வைகலும் வெண்ணெய் கை கலந்து உண்பான் -மெத்த திரு வயிறு ஆற உண்டான்–திருட்டு வெளிப் படும் படி உடம்பில் தடவி கொண்டே போவானாம் –ஏரார் இடை நோவ -கடைய விட மாட்டான்-இடுப்பை பிடித்து கண்ணன் ஸ்பர்சத்தால் ஏரார் இடை–சாரம் கட்டி கலசம் ஏற்றுவது போல் ஏரார் உறி ஏற்றி-ஒராதவன் போல் உறங்கி அறி வுற்று –உள் அளவும் கை நீட்டி -அருகு இருந்த மோர்குடத்தை உருட்டி–விருத்த ஸ்திரீகள் வயசானவர்-அனந்யார்க்க சேஷத்வம்–முன் கிடந்த தானத்தே –ஆய்ச்சி  வெண்ணெய் -வார்த்தையுள் சீற்றம் கொண்டு-களவு தெரிய வேண்டும் என்பதற்கு தானே –துன்னு படல் திறந்து  போகாமல் குனிந்து போக -தெய்வாதீனமாக கதவு திறந்து இருக்க பூட்டி குனிந்து போனானாம்–நெடும் கயிற்றால்–பொத்தை விரல் பக்கம் கண்ணனை கூட்டி போக -திருட்டுக்கு -பிறேமத்தால் கட்டி வைத்தால் கண் நுண் சிறு தாம்பினால்-பத்துடை அடியவர்க்கு எளியவன் –அழுகை ஒன்றே வாசி உரலுக்கும் இவனுக்கும் —
பத்னிக்கு தோற்ப்பான் பரம ரசிகன்–சுருக்கி கொண்டான் தன்னை- அழுத கையும் அஞ்சு நோக்கும் அந் நோக்கும் வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளை–நாட்டியம்–நாக பழம்–ஒரு காலில் சங்கு ஒரு காலில் சக்கரம் இலச்சினை கண்டு-பரம பதம் கேட்டு பெற்று போனாள்–பிரஹ்மாதிகள் அறியாத வற்றை இவள் கண்டு உய்ந்து போனாள்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading