வாய் அவனை அல்லால் வாழ்த்தாது கை வுலகம்
தாய் அவனை அல்லது தான் தொழா பேய் முலை நஞ்சு
ஊனாக வுண்டான் வுருவொடு பேர் அல்லால்
காணா கண் கேளா செவி–11
உலகு அளந்த பெருமாளை பார்க்க முடியாது என்பதால் தோழா சொல்கிறார் இந்த்ரியங்கள் கொடுத்தது அவனை பார்க்கவும் வாழ்த்தவும் தானே நஞ்சை உணவாக உண்டான் ..
செவி வாய் கண் மூக்கு உடல் என்று ஐம் புலனும் செந்தீ
புவி கால் நீர் விண் பூதம் ஐந்தும் அவியாத
ஞானமும் வேள்வியும் நல் அறமும் என்பரே
ஏனமாய் நின்றார்க்கு இயல்வு–12
வராகன் தானே யக்ஜா தர்ம சொரூபி…ஞானம் அவியாதது அவியாத ஞானமும் — பக்தி ரூபமான ஞானமும் -இடை விடாத ஞானம் கோபிகள் போல் பழுத்த ஞானம் ..யக்ஜா வராகன் –தர்மத்தால் தான் உலகம் இருக்கிறது ..சத்யம் தர்மத்தால் உலகம் தூக்க பட்டு இருக்கிறது வராகர் தூக்கி இருபது போல் ..யாரால் கூட புரிந்து கொள்ள முடியாத வராக ரூபம் ..ஞான பிரான் ..அக ச்மர்மி ..பரம கதி.. ஞான பிரானை அல்லால் இல்லை நான்கண்ட நல்லதுவே
இயல்வாக ஈன துழாயான் அடிக்கே செல்ல
முயல்வார் இயல் அமரர் முன்னம் -இயல்வாக
நீதியால் ஓதி நியமங்களால் பரவ
ஆதியாய் நின்றார் அவர் -13
இயல்பாகவே பகவத் கைங்கர்ய பரர்கள் நித்ய சூரிகள் ..வழி காட்தேவை இன்றி நித்ய கைங்கர்யமே வாழ்வு….இயல் அமரர்–
யக்சம் பண்ணி அமரர் ஆனவர் போல் இல்லை..காச்யபர் அதிதி புத்ரர் போல்..இயல்வாக ஓதி நியமங்களால் பரவ–சாதனமாக இல்லை அதுவே பலன் என்று பண்ணுவார்கள்..திரு கச்சி நம்பி இந்த கைங்கர்யம் பரம பதத்திலும் கிட்டுமா கேட்டார்..அன்யோன்யம் கொண்டவர்
அவர் அவர் தாம் தாம் அறிந்தவாறு ஏத்தி
இவர் இவர் எம்பெருமான் என்று கவர்மிசை
சார்த்தியும் வைத்தும் தொழுவர் உலகு அளந்த
மூர்த்தி உருவே முதல்–14
அவன் தன்மை கற்பனைக்கு அப்பால் பட்டது ..ரஜோ தமோ குணம் படி அகரூர் ஸ்துதி-சாந்க்யர் பிரகிருதி என்பர் .பலன் கொடுப்பவன் நீ தான் பாகவத உத்தமர்கள் உன்னை சுயம் பிரயோஜனமாக கொள்வார்கள்
முதலாவார் மூவரே அம மூவர் உள்ளும்
முதலாவான் மூரிநீர் வண்ணன் முதலாய்
நல்லான் அருளால் நாம நீர் வையகத்து
பல்லார் அருளும் பழுது –15
அஷ்ட வஸு -பிரதிநிதி பிரம்மாஏகாதச ருத்ரர் சிவன் -துவாதச ஆதித்ய -விஷ்ணு .33 கோடி/33/3/ என்பர்..நாராயண பரப்ரஹ்மம்..மற்றவர் அங்கங்கள் அங்கி ஆத்மா அவன் ஒருவனே நாராயணன் நான் முகனை படைத்தான்..அல்ப தெய்வங்கள் அல்ப பலன் தான் தர முடியும் மோட்ஷ பிரதன் அவன் ஒருவனே –
பிரம்மா மறு பிறவி எடுத்து உழல வேண்டும்..
பழுதே பல காலும் போயின வென்று அஞ்சி
அழுதேன் அரவணை மேல் கண்டு தொழுதேன்
கடலோதம் கால் அலைப்ப கண் வளரும் செம்கண்
அடலோத வண்ணர் அடி –16
பிறக்கும் பொழுதே பகவத் பக்தர் தான் நமக்காக சொல்கிறார் ..அழுதேன் ஒரே சாதனம் செய்தது..அழ தன்னை காண்பித்து அருளினான்ஞான சாஷாத் காரமாக கண்டு அனுபவித்து –நீல வண்ணர் -அடல்-நெருக்கம் -கடல் நீர் சாஷாத்காரம் -தொட்டு போகிறதாம்
அடியும் படி கடப்ப தோள் திசை மேல் செல்ல
முடியும் விசும்பும் அளந்தது என்பர் வடி உகிரால்
ஈர்த்தான் இரணியன தாகம் இரும் சிறை புள்
ஊர்ந்தான் உலகு அளந்த நான்று–17
வாகனமும் பரத்வம் இவனுக்கு..நான்று-அன்று
தாரா கணம் முத்து பந்தல் போல் வளர்ந்தான்மேல் போனதும் ஹாரம் போன்று .அடுத்து இடுப்பில் மணி மேகலை மேலும் நூபுரம் போல ஆனதாம் ..தேசிகன் ..ஆயனையும் திரு விக்ரமனையும் மாற்றி பாடுகிறார்
நான்ற முலைத் தலை நஞ்சு உண்டு உறி வெண்ணெய்
தோன்ற வுண்டான் வென்றி சூழ் களிற்றை ஊன்றி
பொருதுடைவு கண்டானும் புள்ளின் வாய் கீண்டானும்
மருதிடை போய் மண் அளந்த மால்–18
நான்ற=தொங்குகிரதாம்….அனைத்து செஷ்டிதங்களும் சொல்லி ஆயனின் மாயம் அருளுகிறார்.
மாலும் கரும் கடலே என்நோற்றாய் வையகம் உண்டு
ஆலின் இலை துயின்ற வாழியான் கோல
கரு மேனி செம்கண் மால் கண் படையுள் என்றும்
திரு மேனி நீ தீண்ட பெற்று–19
கடலின் நோன்பை-திரு அடி தீண்ட பெற்று -தாய் போல் மயங்கி -குழந்தை கண்டதும் தொட்டில் போட்டு ஆட்டுவது போல கடல் அரசன் செய்தான்அடியில் விழுவாருக்கு குழந்தை போல ஆவான்-கடலுக்கு கிடைத்த பாக்கியம்..மாலும் மயங்கி இருக்கும் படி என்ன பாக்கியம்..ஆள் இல்லை குழந்தைக்கு தாய் இல்லையே என்ற ஏக்கம் ஆழ்வாருக்கு பிரளய சமுத்ரம் தீர்த்தத் வைத்ததாம்
பெற்றார் தளை கழல பேர்ந்தோர் குறள் உருவாய்
செற்றார் படி கடந்த செம் கண் மால் நற்றா
மரை மலர் சேவடியை வானவர் கை கூப்பி
நிரை மலர் கொண்டு எத்துவரால் நின்று –20தந்தை தளை கழல் தோன்றி போய் ஆய் பாடி நந்தன் குல மதலையாய் வந்தான் காணேடி-திரு மங்கை வெண்ணெய் சாப்பிட தானே அவதரித்தான் அதை முடித்து பின்பு காஞ்சனை முடித்து மண் பாரம் தீர்க்க ..
நின்று நில மங்கை நீர் ஏற்று மூவடியால்
சென்று திசை அளந்த செம் கண் மாற்கு என்றும்
படை ஆழி புள்ளூர்த்தி பாம்பணையான் பாதம்
ஆடை ஆழி நெஞ்சே அறி-21
சென்று உடனே தோன்ற வில்லை நரசிம்கன் போல் யாக சாலைக்கு சென்று-அதிதி காச்யபருக்கு பிறந்து சென்று கார்யம் ஆனா பின்பு திசை அளந்து-அப்புறம் பரத்வம் வெளி இட்டான் ..பரதேசி கோலம்–நில மங்கை பெண்ணை கொடுத்தான் மகா பாலி..ருக்மிணி சீதா கல்யாணம் போல் மகா பலி மாமனார் ஸ்தானம் பெற்றானே ..நின்று-நில மங்கை அடைய நிற்கிறான்–சுக்றாச்சர்யர் வேண்டாம் என்றாலும் கொடுத்தான்–மடி எல்லாம் திருவடி வைக்கவளர்ந்தான்–
அறியும் உலகு எல்லாம் யானேயும் அல்லேன்
பொறி கொள் சிறை யுவன மூர்ந்தாய் வெறி கமழும்
காம்பேய் மென் தோளி கடை வெண்ணெய் வுண்டாயை
தாம்பே கொண்டார்த்த தழும்பு -22யசோதைக்கு .விசெஷணம் வெறி கமழும் மூங்கில் போன்ற தோள்கள் மென்மை தோள்.. கண்ணன் சாய ஏற்ற தோள்கள் -கடையும் பொழுதே வரும் வெண்ணெய் உண்பான் ..தாமோதரன்-ஆயன்-தலை குனிந்து கொள்கிறானாம்-உலகு எல்லாம் அறியும்..யானேயும் அல்லன் திரு மஞ்சனம் பொழுது வஸ்த்ரம் மாற்றும் பொழுது தழும்பு பார்க்க ஆசை ..கோபிகள் தழும்பு பார்த்து கொள் என்று சிரிக்க -காட்டாமல் வஸ்த்ரம் மாற்றுவார்களாம்
தழும்பு இருந்த சாரங்க நாண் தோய்ந்த வா மங்கை
தழும்பு இருந்த தாள் சகடம் சாடி தழும்பு இருந்த
பூம் கோதையாள் வெருவ பொன் பெயரோன் மார்பு இடந்த
வீம் கோத வண்ணர் விரல்–23
தழும்பு இருந்த இடங்கள் அனைத்தையும் சேர வைத்து பாசுரம்..விரலிலும் தழும்பு பிருகு மகரிஷி பாதம் பட்ட தழும்பு -பக்த அபிமானம் காட்டும் ஆத்ம குணம் காட்டும் தழும்பு பூஷணம் ..அத்யந்த சுலபன்..
விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் கண்டு ஆய்ச்சி
உரலோடு உறப் பிணித்த நான்று -குரலோவாது
ஏங்கி நினைந்து அயலார் காண விருந்திலையே
ஒம்கோத வண்ணா உரை -24
பொங்கி வரும் கடல் நீல வண்ணா–மண்ணை தின்னால் மறைக்கலாம் விரலிலும் வாயிலும் வெண்ணெய் தோய்ந்து இருகிறதே ..உலகம் உண்ட பெரு வாயன் தெரியாமல் மந்தம் ஆகுமே -உரலோடு ஏங்கி இருந்த எளிவே ..ஓவாது-ஓயாமல் அழும் சப்தம்–கள்ளனுக்கு இத்தனையும் வேண்டும் என்று சொல்லி போகும் அயலார்..க்ருதார்தனாய் கொண்டு..உரைமேல் கொண்டு என் உள்ளம் ஓவாது எப்போதும்
வரைமேல் மரகதமே போல் திரை மேல்
கிடந்தானை கீண்டானை கேழலாய் பூமி
இடந்தானை ஏத்தி எழும் -25
உரை -பிரமாணம் கொண்டு ..எவ்வளவு சொன்னாலும் முடியாத -மேற்கோள் கொண்டு-தன் புத்தியில் தோன்றியதை சொல்லாமல் முனோர் மொழிந்த முறை தப்பாமே..சொல்லி ..கடல் மேல் நீல மேக வண்ணன்-வரை மேல் மரகதம் போல் ..ஏத்தி எழும்
எழுவார் விடை கொள்வார் ஈன துழாயானை
வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார்
வினை சுடரை நந்து விக்கும் வேம்கடமே வானோர்
மன சுடரை தூண்டும் மலை -26
ஆர்தன் அர்த்தார்த்தி எழுவார் –கைவல்ய காமர் விடை கொள்வார்..நாம ரூபம் வேண்டாம் ஆத்மா சொரூபம் ..பகவத் அனுபவம் இல்லாதவர்கள் .முகத்தில் விழியாமல் இருக்க அனுக்ரகம் கேட்பவர்கள்..பகவத் அனுபவமும் ஆத்மா அனுபவமும் ஸ்ரீ வைகுண்டத்தில் தான் இருக்கும்..ஸ்நான பிராப்தி இல்லை என்று விடை கொள்பவர்கள் –போகாமல் தனக்கு வேற ஆசை இன்றி அவனையே சதா பச்யந்தி-அந்தமில் பேர் இன்பத்து அடியாரோடு–தோள் கண்டார் தோளே கண்டார் அவதாரத்தில் இருப்பது போல்/..ஞானி நித்ய யுகதர்–பக்தி பிரபந்தம் வினை- தடைகளை நந்தி போக வைக்கும் வேம்கடம்–நித்யர்களும் வரும் மலை–மன சுடரை தூண்டும் அவர்களையும்..
மலையால் குடை கவித்து மா வாய் பிளந்து
சிலையால் மரா மரம் எழ செற்று கொலையானை
போர் கோடு ஒசித்தனவும் பூம் குருந்தம் சாய்த்தனவும்
கார் கோடு பற்றியான் கை -27
அனாயசமாக கோவர்த்தனம் -கேசி வாயை கொன்று–சங்கு பால் குடிக்கவும் குழந்தையாக — சங்கு ஊதவும் மேகம் போன்ற இடி முழக்கம் செய்யும் சங்கம்..கைய வலம் புரியும் நேமியும் கார் வண்ணத்து
ஐய மலர் மகள் நின் ஆகத்தாள் செய்ய
மறையான் நின் உந்தியான் மா மதிள் மூன்று எய்த
இறையான் நின் ஆகத்து இறை -28
சங்கும் சக்கரமும்..கொண்ட ஸ்வாமி–திரு மேனியை பங்கு போட்டு கொடுத்தவர்..முப்புரம் எரித்தவன் சங்கர நாராயணன் –திரு மேனியை பற்றி இருப்பார்களோ–ஓர் ஓர் ஆபத்தில் திரு மேனியில் இடம் கொடுக்க ஆழ்வார் இதை சொல்லி போவார்கள்/தாயார் தான் இறையும் அகலகில்லேன் என்று இருப்பாள்
இறையும் நிலனும் இரு விசும்பும் காற்றும்
அறை புனலும் செம் தீயும் ஆவான் -பிறை மருப்பின்
பைம் கண் மால் யானை படு துயரம் காத்து அளித்த
செம் கண் மால் கண்டாய் தெளி -29
ஆதி காரண வஸ்து கார்யத்தில் இருக்கும் ஆதி மூலமே அந்தர்யாமி-அகில காரணாய நிஷ்காரனமாய அத்புத காரணாய -கஜேந்திர ஆழ்வான்–துயரம் புஷ்பம் சமர்பிக்க அறை கூவினான் விஷ்ணு தர்மம்-ஜன்ம ஜன்ம பகவத் பக்தன் அகஸ்தியர் சாபத்தால் சரீரம் மாறினாலும் பக்தி வாசனை மாறவில்லை –தாமரை குளம் கண்டதும் பூ பறித்து சமர்ப்பிக்க கத்தினான்-சரீரம் துச்சம்–இதற்க்கு கூப்பிட வில்லை பாதத்தில் சமர்பித்து விட்டு சாகிறேன் என்கிறான்..அரை குலைய தலை குலைய ஓடி வந்தான் இந்த படு துயரம் போக்க..-ஜகன் நிவாசன் எங்கும் நிறைந்தவன் நம்மை பார்க்கும் சக்தி கொடுப்பதே அவன் வந்து அருளுவது
தெளிதாக உள்ளத்தை சென்னிறீ இ ஞானத்
தெளிதாக நன்கு உணர்வார் சிந்தை எளிதாக
தாய் நாடு கன்றே போல் தன் துழாயான் அடிக்கே
போய் நாடி கொள்ளும் புரிந்து –30
சித்தத்தை தெளிவாக வைத்து –ஆர்வம் -கன்று பசு நாடுவது போல்–எங்கும் போகாமல் தன் தாய் இடம் போகும் கன்று போல அல்ப விஷயம் போகாமல் அவன் அருளையே நாடி இருப்பார்கள்–எங்கு வாய் வைக்குமோ அது போல திரு அடியே கதி-அடிக்கே-நாடி கொள்வார்கள்.
.பெரியவாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம் .
பொய்கை ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .
Leave a Reply