ஏதமில் தண்ணுமை எக்கமத்தளி
யாழ் குழல் முழவமோடு இசை திசை கெழுமி
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
கந்தருவர் அவர் கங்குலுகள் எல்லாம்
மாதவர் வானவர் சாரணர் இயக்கர்
சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான்
ஆதலில் அவர்க்கு நாள் ஓலக்கம் அருள
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே–9-
பதவுரை
ஏதம் இல்–குற்றமற்ற
தண்ணுமை–சிறுபறையும்
எக்கம்–ஒற்றைத் தந்தியை யுடைய வாத்யமும்
மத்தளி–மத்தளமும்
யாழ்–வீணையும்
குழல்–புல்லாங்குழல்களுமாய்
திசை–திக்குக்களெங்கும்
முழவமோடு–இவற்றின் முழக்கத்தோடு
இசை கெழுமி கீதங்கள் பாடினர்–இசை மாட்டியப் பாட்டு பாடக் கடவரான
கின்னரர்-கின்னார்களும்
கருடர்–கருடர்களும்
கெந்தருவரும்–கந்தர்வர்களும்
இவர்–இதோ மற்றுள்ளவர்களும்
மா தவர்–மஹர்ஷிகளும்
வானவர்–தேவர்களும்
சாரணர்–சாரணர்களும்
இயக்கர்–யக்ஷர்களும்
சித்தரும்–ஸித்தர்களும்
திருவடி தொழுவான்–(தேவரீடைய) திருவடிகளில் வணங்குகைக்காக
கங்குலும் எல்லாம்–இரவெல்லாம்
மயங்கினர்–(நெருக்கத்தில் வருந்தி) மோஹமுற்றனர்;
ஆதலில்–ஆகையாலே
அவர்க்கு–அவர்களுக்கு
நாள் ஒலக்கம் அருள–பகலோலக்க மருளுகைக்காக
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாய்-.
தேவர்களில் அந்தர விபாகம் சொல்லி அனைவருக்கும் சேவை சாதிக்க பாசுரம் அருளிச் செய்கிறார் –
சாம்யம்-திரு அனந்த புரம் நடமினோ நமர்கள் உள்ளீர் -ஆளவந்தார்- துவார த்ரயத்தாலே காட்டும் சாம்யம்-
நித்யர் திரு முடி-சேவித்தாலும் அகங்காரம் தோன்றாது — தேவர்கள் நாபி–சிருஷ்டிக்க பட்டோம் நாம் என்று காட்ட –
நம் போல்வார் திருவடி-பார தந்த்ர்யம் காட்ட அர்த்த மண்டபம்-ஒற்றை பாறை -திரு அலகு இடுதல்-ஆழ்வார்-உபதேசம்
நாள் ஓலக்கம் அருள
பகல் ஓலக்கம்-ராஜ தர்பார்-
தண்ணுமை-சிரு பறை மத்தளி-ஒரு பக்கம் வாசிக்கும் மத்தளி இரண்டு பக்கம் வாசிக்கும் –
தபளா மத்தளம் தோல்கி -யக்கம் ஒரு தந்தி – யாழ்-நிறைய தந்திகள்–இசை முழவமோடு -முழக்கத்தோடு
கின்னரர் கருடர்கள்-கந்தர்வர்கள் அவர் என்று காட்டுகிறார்-
சுந்தரர்-எங்கு கேட்டானாம் ஆழ்வார் அவர் என்று காட்டுகிறார்-
இரவில் தபஸ் பண்ணும் மாதவர் சாரணர்-சஞ்சாரம் செய்து கொண்டே இருப்பவர்
எல்லா கூட்டமும் வந்து ஓட்டத்தால் மயங்கி-
உன் கோவில் -சீரிய சிங்காசனத்தில் இருக்க மங்கள வாத்தியங்கள் –
———————-
நஞ்சீயர்
எழுந்து இருக்கும் அழகு கண்டு திருவடி தொழவும் பகல் ஓலக்கம் காணவும் –
உகளித்து கொண்டு-மேலை தொண்டு உகளித்து -தம் தம்முடைய மங்கள வாத்ய பரிகரங்கள் கொண்டு –
உகளித்து-பெருகி வரும் காதல் உடன் -பகவத் அனுபவ ப்ரீதி கார்ய கைங்கர்யம் பண்ண –வர
கீழே இவர்களுக்காக சொல்லி கார்யகரம் இல்லையே
அடியேனுக்காக எழுந்து அருள வேணும் -நமக்கும் இவனுக்கும் தானே இட்ட சம்பந்தம்
ஏதமில்
நிர்தோஷமாக மங்கள வாத்தியங்கள்-இவனுக்கே என்று–
வாய் நர ஸ்துதி பண்ணும் வாத்தியம் அவனுக்கு என்று இருப்பதால் ஏதம் இல்லாமை–தானே வாசிக்காதே
எக்கம்-ஒரு தந்தரி-ஒவ் ஒன்றிலும் வகை உண்டு-சர்வ ரட்ஷகர்-எழுந்து அருள வேண்டும்-
விசேஷங்கள் ஒவ் ஒன்றிலும் பல வகை உண்டே
அனைவரும் புகுந்து திருவடி சேவிக்க நெருக்கி உள்ளார்கள் –
அழகு ஓலக்கம்/உன்னை அருத்தித்து வந்தோம் பறை தருதி ஆகில்
உட்கார்ந்த அழகை சேவிக்க -மட்டுமே பிரார்த்தனை
தூவிரிய மலர் உழக்கி– தூது விட்டார்-திரு மங்கை ஆழ்வார் மென்மை நாலு பாசுரம் மேல் தூது விட மாட்டார் ஆழ்வார்
மலையாள ஊட்டு போல-ஒ மண் அளந்த தாளாளா வரை எடுத்த தாளாளா தன் குடைந்தை நகராளா–
சேஷ்டிதங்களை காட்ட வேண்டாம் -தாளையும் தோளையும் காட்ட சொல்லி –
அது போல அமர்ந்ததே போதும் இங்கும்
——————–
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை
பகவத் அனுபவ ப்ரீதி கார்ய -பொங்கி வரும் அன்பு-நித்ய தானம் வஸ்து சொல்லி இங்கு நிருத்ய கானம் உண்டு-
கீத வாத்யம் உடன் வந்தார்கள்
யாழ் மீட்டி ஆரம்பம் -இசைக்கு முன் ஒட்டு
முழவம் பறை -போல -பெரும் மத்தளி
விலம்பித்து-துருத்து -ஹிந்துஸ்தான்-முதலில் யாழ் மீட்டு –
இசைக்கு முன்-முழவம்-பெரிய பறை
ஏதமில் -அனைத்துக்கும்
விடிவோரை வருவாராம் விடிந்த பின் வந்தாரும் உண்டு
ஆதாரம் குறைந்தாலும் அனுக்ரகித்து அருள வேண்டும்
மா தவர் பெரும் தபஸ் பண்ணும் ரிஷிகள்
சாரணர்-தேவ ஜாதி உலாவி கொண்டே இருப்பவர்கள்
சாரணர் பேசி கொண்டதை கேட்டு திருவடி மகிழ்ந்தார்-அக்னி பிராட்டி சொல் படி-அன்று தான் நடந்த பிரயோஜனம் கிடைத்தது
இன்று தான் இவர்கள் சஞ்சாரம் பிரயோஜனம் கிட்டிற்று வால்மிகி – பாகவத கைங்கர்யம் பெற்றார்கள் –
திருவடி திரு உள்ளம் கலங்கி பிராட்டி உள்ள அசோகவனம் தீ பிடிக்க வில்லை என்று சொல்லி –
பிரதம கடாஷம் நினைத்து நிற்கிறார்கள் -சிறியார் பெரியார் வாசி இல்லாமல்-
நன் மணி வண்ணனூர் ஆழியும் -கானமும் வானரமும் வேடமும் உடை வேங்கடம் -திரு மழிசை ஆழ்வார்-
திரு மலை அப்பனும் பண்ணுகிறாரே அரங்கனே தேவரீரும் சேவை சாதிக்க வேண்டும் —
அநாலோசித விசேஷ -அசேஷ லோக சரண்யன் –இதில் வாசி உமக்கு–
அவன் வேடன் குரங்கு -நீரோ கிங்கரர் இத்யாதி –
வேடன் வேடுவச்சி பட்ஷி குரங்கு சராசரம் இடைச்சி இடையர் ததி பாண்டன் தயிர் தாழி கூனி மாலா காரர் பிண விருந்து
வேண்டு அடிசில் இட்டவர்-அவர் மகன்-அவன் தம்பி ஆனை அரவம்-சுமுகன்-மறையாளன் -கோவிந்த ஸ்வாமி –
பெற்ற மைந்தன் மார்கண்டேயன் —அவர் 18 நாடன் பெரும் கூட்டம்-
சமம் -ஏழை எதலன் கீழ் மகன் என்னாது -அழகை சேவை சாதித்து அருள வேண்டும்-
—————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ.வே .வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ தொண்டர் அடி பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply