திருப்பள்ளி எழுச்சி- -8-வம்பவிழ் வானவர்–ஸ்ரீ நஞ்சீயர் -ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை -வியாக்யானம் – -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க
மா நிதி கபிலை ஒண் கண்ணாடி முதலா
எம்பெருமான் படிமைய்க்கலம் காண்டற்கு
ஏற்ப்பன வாயின கொண்டு நன் முனிவர்
தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ
தோன்றினான் இரவியும் துலங்கு ஒளி பரப்பி
அம்பர தலத்தில் நின்று அகல்கின்றது இருள் போய்
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே--8 –

பதவுரை

வழங்க-(தேவரீருக்கு ஸமர்ப்பிப்பதற்காக)
வம்பு அவிழ்–பரிமளம் மிகுந்த
வாயுறை–அறுகம் புல்லும்
மா–சிறந்த
நிதி–சங்க நிதி பத்ம நிதிகளும் (கையிலே யுடையாயக் கொண்டு)
வானவர்-தேவர்களும்
கபிலை–காமதேநுவும்
ஓண்–ஓளி பொருந்திய
கண்ணாடி முதலா–கண்ணாடி முதலாக,
எம்பெருமான்–ஸ்வாமியான தேவரீர்
காண்டற்கு–கண்டருளுகைக்கு
ஏற்பன ஆயின–தகுதியாயுள்ளவையான
படிமைக்கலம்–உபகரணங்களெல்லா வற்றையுங் கொண்டு
நல் முனிவர்–மஹர்ஷிகளும்
தும்புரு நாரதர்–தும்புரு நாதர்களும்
புகுந்தனர்–வந்து நின்றார்கள்
(இதுவுமின்றி,)
இரவியும்–சூரியனும்
துலங்கு ஒளி–(தனது) மிக்க தேஜஸ்ஸை
பரப்பி–எங்கும் பரவச் செய்து கொண்டு
தோன்றினன்–உதயமானான்;
இருள்–இருளானது
அம்பரதலத்தில் நின்று–ஆகாசத்தினின்றும்
போய் அகல்கின்றது–நீங்கிப் போயிற்று;
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாய்-.

வைமுக்யம் தொலைந்து –ஆபிமுக்யம்பிறந்து -அவனை  -நோக்கி செல்வது
வாயுறை= அருகம் புல்- மா நிதி- சங்க பத்ம நிதி வந்து விஸ்வரூபம் -உபகரணங்கள் வந்து சேர்ந்தன –
வம்பு=-மணம் கபிலை=-காம தேனு -படி மெய்க்கலம்-சொல்லாத எல்லா உப கரணங்கள் எல்லாம் –
ஏற்ப்பன–தகுதியானவை –  ஆகவே திருப் பள்ளி உணரலாம் என்றுமாம்
தோன்றினான் இரவியும்–நாலாவது தடவை இரவியொளி சொல்கிறார்-
அம்பர தலம்-ஆகாச பரப்பு–பிராத காலம் சந்நிகிதம் ஆனது –
தகுதி படைத்தன காண்டற்கு -ஏற்ப்பன வாயின -திருப் பள்ளி உணர்ந்து  அருள -என்றுமாம்

————————–

நஞ்சீயர்

தேவரீர் திருவாராதன பிராத காலம் -சந்நிஹிதம் ஆயிற்று
பஞ்ச கால பராயனர்-கங்குலும் பகலும் -30 நாழிகை/-ப்ரஹ்ம முகூர்த்தம் 4-6 மணி ஹரி 7 தடவை –
பிராத சந்த்யா 5.5 மணிக்கு-
காணாமல் கோணாமல் கண்டு -ஸூ ர்ய உதயம் முன்னிட்டே சந்த்யா வந்தனம் –
காயத்ரி ஜபம் பண்ணி -சூர்ய உதயம் உபஸ்தானம் பண்ணும் பொழுது–
ப்ராத காலம் — சங்கவ காலம் –மத்யான காலம்– அபரான காலம்  சாயம்  காலம் –6-8…2.5 நாழிகை – –.சாயங்காலம்-
திரியாம இரவு-10 நாழிகை -அபிகமனம் -பகவானை நோக்கி செல்தல் ஆசை உடன்-
உபாதானம் -உபகரணங்களை சேகரித்தல்- இச்சா திரு ஆராதனம்–ஸ்வாத்யாயம்– வேத அத்யாயம் வேதம் போதித்தல்–
யோகம்-கல்யாண குணங்களை த்யானித்து கூடி இருத்தல்-எம்பெருமானே த்யான நிலையில் இருந்து தூங்க பண்ணுவார்-
இத் பிரிவின் படி ஐந்தும் –
அர்ச்சகர் முறை மாறுவதும் காலை திருவாராதனம் முடிந்த பின்பு இன்றும் திருவரங்கத்தில்

தினசரி-பூர்வ உத்தர தினசர்யா- எறும்பி அப்பா அருளி இருக்கிறார்-
ஆராதன அங்கமாக  நிதானமாக அர்க்யம் பாத்யம் ஆசமன்யம்–திரு ஒத்து ஆடை சமர்ப்பிக்க வேண்டும்-

ஸ்ரீ ரெங்கத்தில் குதிரை பசு மாடு ஒட்டகம் யானை-நான்கும் உண்டு விஸ்வரூபம் பொழுது
புஷ்பம் சந்தனம் அருகம் புல்/பூண் சட்டி திரு மஞ்சனம் நடக்கும் இடத்திலே வெந்நீர் போட்டு சமர்ப்பிகிரார்கள்
போக மண்டபம்-தண்  அம் தாமரை -வண்ண செஞ்சிறு–அளைந்து-பட்டர்-
இன்றும் மணிய காரர் தொட்டு பார்த்து தான்- அன்னம் – அமுது செய்வார்
ரிஷிகள்-அநந்ய பிரயோஜனர் மடி தடவாத சோறு சுருள் நாறாத பூ தூய மாலை
அவனை அவனுக்காக -தன்னது என்று சமர்ப்பித்தால் கொள்ள மாட்டார்
பிரயோஜனர் -அந்நிய பிரயோஜனர் -அநந்ய பிரயோஜனர் -மூன்று வகை உண்டே –
உபய பிரயோஜனர் -அவனைத் தவிர -அவனுக்கே என்று –ஆச்சார்யர்-என்னது என்று கொடுத்தால் கொள்ள மாட்டார்-
கொடுக்கில் கள்ளனாம்-திருடன்-அவரும் தன்னது என்று கொள்ள கூடாது —
கொள்ளில் மிடியனாம்-தரித்திரன் –கொள் கொடை ஏற்பதில் இருவருக்கும்  சொரூபம் நிற்காது

பொன் உலகம் ஆளீரோ புவனமும் ஆளீரோ-பழன  மீன் கவர்ந்து உண்ண தருவேன்-
ஆச்சார்யர் உகந்த வற்றை கொடுக்க வேண்டும்-சேர்ப்பார்களை பட்சிகள் ஆக்கி -மங்கள அர்த்தமாக பொருள்கள் நீட்ட

திருப் பள்ளி உணர்ந்து கைங்கர்யம் கொண்டு அருள வேணும்

வம்பு-பரிமளம்-தீக் குறளை சென்று ஓதுவது இல்லை/வம்பு-சிறந்து இருக்கிற –
அருகம் புல்லை -வாயுறை-தேவர்கள்-ராஜ பார்க்க எலுமிச்சை பழம் போல-மங்கள அர்த்தம்
பொருள்கள் ரிஷிகள் கொண்டு வர-வானவர்- தேவ ஜாதி வம்பு -நித்ய யவ்வனம்-
வம்பவிழ் வானவர்-பரிமளம்-சுவர்க்கத்தில் வசிக்கும் –
ராஜா பார்க்க எலுமிச்சம் பழம் கொண்டு போவது போலே தேவர்கள் அருகம் புல்லை  கொண்டு தேவர்கள் -உத்தேச்ய வஸ்துவை வணங்க  –
தேவருக்கு அர்ஹமான சத்ருசமான உபகரணங்கள் –
மங்களார்த்தமாக ரிஷிகள் -அநந்ய  பிரயோஜனர் -அவசர பிரதீஷானராய் நிற்கிறார்கள் –

தும்புரு நாரதர்
மங்களார்த்தமாக பள்ளி கொள்ளும் பொழுதும்
சகஸ்ர கிரணங்களை கொண்டு -பந்தம்-ஆதித்யனும் வந்தான்-இருள் எல்லாம் அகல்கின்றது-
அகல போயிற்று-ஆகாசத்திலும் சஞ்சரிக்காமல் போனது /பாக்ய இருள் போனது உள் அஞ்ஞானம் போக்க –

————————

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை

நித்ய யவ்வனர் -வம்பு தேவர்களுக்கு விசேஷணம்
பூ மலர் பதவிக்கு தக்க /மெலித்து -வழக்க -வழங்க -வல்லினம் மெல்லினம் –
நியமன பிரகாரம் நினைக்கிறது -பாரி ஜாதம் போன்ற புஷ்பம்

புஷ்ப சமர்ப்பணம் திருமாலுக்கு உகந்த கைங்கர்யம் -காலை மாலை கமல மலர் இட்டு நீர்
போதரிந்து வானரங்கள் பூம் சுனை புக்கு ஆங்கு அலர்ந்த போது அறிந்து கொண்டு வேங்கடவன் அடி இணைக்கே-
போது எல்லாம் போது கொண்டு உன் பொன் அடி புனைய மாட்டேன்–
எல்லா போதும் மட்டும் இல்லை ஒரு போதும் சமர்ப்பித்து இல்லை
பெரிய திரு மலை நம்பி எம்பாரை பூவும் பூசனையும் தகுமோ பிச்சை உண்ணிக்கும் சிக்கு தலையனுக்கும் –
தகாது தகாது என்று சொல்லி எம்பார் திருந்தினாரே-

அலங்கார பிரியன் விஷ்ணு அபிஷேக பிரியன் தன் கையிலே கங்கை வைத்து கொண்டே
நீராட வா என்று ஆழ்வார் கூப்பிட வேண்டும்-ப்ருகு மக ரிஷி சாபத்தால் புஷ்பம் பிரசாதம் இல்லை ருத்ரனுக்கு
நேத்ர சேவை – வெள்ளி கிழமை மட்டுமே திரு மஞ்சனம்- பக்தர்களுக்கு சேவை-தோ மாலை சேவை தோள் களில் தொங்கும்-
பெரிய கேள்வி அப்பன்  சிறிய கேள்வி அப்பன் ஸ்வாமிகள் -ஜீயர் ஸ்வாமி -பூ குடலை -பொட்டு சுமக்கும் அதிகாரம் உண்டே –
இவர் கொடுக்க அர்ச்சகர் வாங்கி சமர்ப்பிப்பார் –பொட்டு சுமந்து -ஹனுமான் முத்தரை-பெரிய ஜீயர்- ராமானுஜர் முத்தரை-சின்ன ஜீயர்
சுமந்து மா மலர் வானவர் வானவர் கோன் உடன் ..சமன் கொள்வீடு தரும் தடம் குன்றமே
புஷ்ப மண்டபம்-
நிதி-
சங்க பத்ம நிதி நவரத்னம்
மா நிதி-
பெரு மதிப்பு-தானம் பண்ண -அலம் புரிந்த நெடும் தட கை -அமரர் வேந்தன்-நித்ய தானத்துக்கு தன ராசிகள்
கபிலை
பார்க்கவும்– கோ தானத்துக்கும் பசு-ராமன்-கோ தானம் பண்ணின கதை—14- வருஷம் யாத்ரா தானம் பண்ண வேண்டுமே
வைதரணி நதி கடக்க -பிரபன்னர்கள் இல்லாதவர்கள் -வால் பிடித்து ஆத்மா தாண்டும்
அமானவனவன் கர ச்பர்சத்தால் விரஜை தாண்டுவான் பிர பன்னன்
சொல்லி சொல்லாத உபகரணங்களும் கொண்டு வந்தார்கள்
கண்டு அருள திரு கண்ணாடி-வேதாத்மா -கருடன்-உக்கமும் தட்டொளியும் தந்து
ஏற்பன
ஏற்புடையதாய் கொண்டு- அநந்ய பிரயோஜனராய் கொண்டு-பக்தி மட்டும் எதிர் பார்கிறார் —
நல் முனிவர்
அவனையே மனனம் பண்ணி கொண்டு-அத் தலைக்கு நன்மையே நினைத்து கொண்டு-
நல் முனிவர் -முனிவர்களில் வியாவிருத்தி

தும்புரு நாரதர்
மங்களார்த்தமாக பள்ளி கொள்ளும் பொழுதும் -இசை கேட்டு அருளுவது போல -வீணை ஏகாந்தம்
தாலேலோ-போல வீணை இசை-நாச்சியார் உத்சவம் போதும் வீணை  ஏகாந்தம் உண்டு
காஸ் துணி திரு முக மண்டலம் அபய ஹஸ்தம் மட்டும் சேவை -வீணை ஏகாந்தம் பொழுது-தாஸ்ய ரசம்  ததும்பும்
திருக் கண்ணை மலர்த்தி கடாக்ஷம் ஒன்றே போதுமே -சிபாரிசு பண்ணுகிறார் இவர்களுக்காக
கடாஷம் மட்டுமே கேட்டு -அது கிடைத்தால் எல்லாமே கிட்டுமே -அவற்றை கண்டு அருள காட்டுவாரை போல அருளுகிறார்
சகஸ்ர கிரணங்களை கொண்டு -பந்தம்-ஆதித்யனும் வந்தான்-இருள் எல்லாம் அகல்கின்றது-
அகல போயிற்று-ஆகாசத்திலும் சஞ்சரிக்காமல் போனது
இருள் பயணம் எழ -விளங்கிற்று -பாய் இருள் அகல -போயிற்று -முன்பு —
ஆகாசத்தில் சஞ்சரிக்காமல் நிஸ்சேஷமாக போனதே
பாக்ய இருள் போனது உள் அஞ்ஞானம் போக்க –
இருள் தரும் மா ஞாலத்தில் இருக்கிறோம் அமலங்களாக விளிக்கும் .- நிஸ் சேஷமாக போக்கி அருளுவான் –

———————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ.வே .வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ தொண்டர் அடி பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

 

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading