திருப்பள்ளி எழுச்சி–3-சுடர் ஒளி பரந்தன -ஸ்ரீ நஞ்சீயர் -ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை -வியாக்யானம் – -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

சுடர் ஒளி பரந்தன சூழ் திசை எல்லாம்
துன்னிய தாரகை மின் ஒளி சுருங்கி
படர் ஒளி பசுத்தனன் பனி மதி இவனோ
பாய் இருள் அகன்றது பைம் பொழில் கமுகின்
மடல் இடை கீறி வண் பாளைகள் நாற
வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ
அடல் ஒளி திகழ் தரு திகிரி அம் தடக் கை
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே-—3 –

பதவுரை

சூழ் திசை எல்லாம்–கண்டவிடமெங்கும்
சுடர் ஒளி–ஸூர்ய கிரணங்களானவை
பரந்தன–பரவி விட்டன;
துன்னிய–(ஆகாசத்தில்) நெருங்கிய
தாரகை–நஷத்திரங்களினுடைய
மின் ஒளி–மிக்க தேஜஸ்ஸானது
சுருங்கி–குறைவுபட்டது மன்றி
படர் ஒளி–மிக்க ஒளியையுடைய
பனி மதி இவன்–இக் குளிர்ந்த சந்திரனும்
பசுத்தனன்–ஒளி மழுங்கினான்;
பாய் இருள்–பரந்த இருட்டானது
அகன்றது–நீங்கிற்று;
வைகறை மாருதம் இது–இந்த விடியற் காற்றானது
பை–பசுமை தங்கிய
பொழில்–சோலைகளிலுள்ள
கமுகின்–பாக்கு மரங்களினுடைய
மடலிடை கீறி–மடலைக் கீற
(அத்தாலே)
வண் பாளைகள் நாற–அழகிய பாளைகளானவை பரிமளிக்க
(அப்பரிமளத்தை முகந்து கொண்டு)
கூர்ந்தது–வீசுகின்றது;
அடல்–பெருத்த மிடுக்கை யுடைத்தாய்
ஒளி திகழ் தரு–தேஜஸ்ஸூ விளங்கா நின்றுள்ள
திகிரி–திருவாழி யாழ்வானை
அம் தட கை–அழகிய பெரிய திருக் கையிலே யுடைய
அரங்கத்தம்மா! பள்ளி யெழுந்தருளாய்-.

சங்கு சக்கரம் உண்டோ பெரிய பெருமாளுக்கு-காட்ட கண்டார் கையினார் -திரு பாண் ஆழ்வார்-
லாஞ்சனம் உண்டே திரு கரங்களில் ரேகைகள்-
சுடர் ஒளி பரந்தன சூழ் திசை எல்லாம்-

குண திசை –முதல் பாட்டில் -இங்கு சூழ் திசை எல்லாம் சுடர் ஒளி பரந்தன
எல்லா திக்குகள் எல்லாம்-கதிரவன் குண திசை முதலில்- துன்னிய -அருகில் நெருக்கி –
மதி-சந்தரன்–நட்ஷத்ரங்கள் தலைவன்-பசுத்தனன்-மங்கி-
பாய் இருள்-பாய்
-பரவிய –
வைகறை காற்று இங்கு-வண்  -வண்மை தனம்-மணம் காற்று மூலம் கொடுத்ததால்-
இதோ
என்று காட்டுகிறார்-
அடல்
-மிடுக்கு –திகழ்கிறார்–மற்ற ஒளி இருட்டாக்கி –
தட
-விசாலமான –

ஸ்ரீ நஞ்சீயர் வ்யாக்யானம்

நக்ஷத்ராதிகள் ஒளி மழுங்கும் படி ஆதித்யன் உதித்தான் –
கையும் திரு ஆழி உடன் அழகை சேவிக்க வேண்டும்-

தந்தை காலில் விலங்கு அற வந்து தோன்றிய -அமுது ஒரு பசும் கதிர்-
இரவுக்கு சக்கரவர்த்தி -சூர்யன் வந்ததும்- மஹா  ராஜர் தோன்றவும்  க்ருத்ரிமர் மறைய
இருட்டு விலக மதி ஒளி குறையும் –சந்தரன் ஒளிக்கு ஹேது இருட்டு தானே –
சந்திரனுக்கு ஒளி விகாச ஹேது இருள் தானே -பரவி இருக்க இதுவே காரணம்-
ராஜ்ய நாச -இருட்டு-ஒளி மிகுந்து வந்தான் ராமன்-வால்மீகி/–லோக காந்தஸ்வ காந்தஸ்வாத்

பசுமை உடைத்தான
நந்தன தரு-காவேரி-ஸ்நானம் பானம் -வீதி அலம்பி விட்டு-ஜனங்கள் பாபம் போக்கி மரங்கள் வளர்த்து-
கமுகு மரங்கள்-மடல் விரிந்து கந்தம் வீசுகிறது கலக்கம் தெளிந்தால்-காற்று- போகம்-மணம் கொண்டு–
மணம் கொடுத்த வண்மை பாளைக்கு – காற்றுக்கு கொடுக்கை

பிரதி பட்ஷம் போக்க திரு ஆழி -விரோதி வர வில்லையே-
சகஜ சத்ரு வான இந்த்ரிய பாரவச்யம் போக்க -கையும் திரு ஆழியும் ஆன அழகைக் காட்டி -காற்று -மணம் -விஸ்வ ரூப-
சஹஜ சத்ருவான இந்திரிய பாரவஸ்யம் போக்கி –
பால் நாக்கு -துளசி தொட்டு -ஆழி ஒளி கண் -அழகன் ஊர் அரங்கம் அன்றே –
ஐய்யப்பாடு அறுக்கவும் ஆதாரம் பெருக்கவும் –
விரோதி  போக்கவும் அனுபவிக்கவும் அழகே தான் –

————————————

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம்

ஆதித்ய கிரணங்கள் எங்கும் பரந்தன-
நக்ஷத்ர   அதிபதியான சந்திரன் வைவர்ணம் -இழப்பு எப் பொழுதும் –
பசத்தனன்-
நாயகி பசலை நோய் கண்டால் போலே -சேவிக்க வாய்ப்பு இல்லையே -அதனால் எப்பொழுதும் வெளுத்த ஸ்வபாவம் –
வெளுத்த ஒளி இரவில்-பகலில் குளிர்த்தி போனது –
திகிரி அம் தடக்கையில் இருக்க இரவியும்-தாரகை மின் ஓளி சுருங்கினால் போலே ஆகுமே –

திரு சோலை பாளை மணம் முகர்ந்து விடி காற்று –
கீழ் திக்கில் முதலில்/ இதில் நேராக உதித்து
–
உதய கிரியில் இருந்து புறப்பட்டது முதலில் -இதில் நேராக உதித்தது –

புள்ளும் சிலம்பின காண் 6 பாசுரம்-வெள்ளி எழுந்தது வியாழன் உறங்கிற்று 13 -புள்ளும் சிலம்பின காண்-மறு படியும்-
அதே பறவையா-கூட்டை விட்டு -நாள் முழுவதும் பிரிந்து போவதால் கூட்டில் இருந்து-பேசிக் கொள்வதை
இங்கு பறவைகள் -எங்கு போகலாம்-கீசு கீசு-7 பாசுரம்-பஷி நாதம்-
காலை எழுந்து இருந்து கரிய குருவி கணங்கள் சொல்லும் நாதமே உத்தேசம்-
பஷி நாதம் அல்லது பிரபன்னனுக்கு உத்தேச்யம் இல்லையே
ஜான சுருதி-ரைகுவர் கதை-பஷி பாஷை தெரிந்து -பஷி அனுப்பி வந்தீரோ-
பகல் கண்டேன் நாரணனை கண்டேன்-பறவை கணங்கள் சொல்லும்-
முளைத்து எழுந்த சூர்ய துல்ய யாதாத்மிக ஞானம்
கேட்டு -மனனம் பண்ணி/இடையூறு இன்றி சிந்தித்து

சேவிக்கலாம் ஞானத்தின் நிலைகள் இவை சூர்யன் வளர்வது போல-
முளைத்து குண திசை/ எழுந்த-சூழ் திசை எல்லாம்–
முளைத்து எழுந்த திங்கள் தானே-பாசுரம்-
சூர்யன்-வெப்பம் கஷ்ட பட்டு பெற்ற ஞானம் போல -மயர்வற  மதி நல அருளிய ஞானம் உதாரணம்
திங்கள் -ரிஷிகள் ஞானம் சூர்ய துல்ய-ஆத்மாவால் சிரேஷ்டவ்ய ஸ்ரோதவ்ய மந்தவ்ய நிதித்யாசித்திதவ்ய –
கேட்டு மனனம் பண்ணி தியானத்தில் ஆழ்ந்து சாஷாத்காரம் – –
முளைத்து –முதல் பாசுரம் -எழுந்த -இப்பாசுரம் சுடர் ஓளி சூழ்ந்து–ஞானம் வளர்ந்த தசை

எல்லா திக்குகளிலும் ஆதித்ய தேஜஸ் எங்கும் பரந்தன
ரஸ்மி அநுசாரி அதிகரணம்-
சூர்ய கரணம் மேல் அர்சிராத்ரி மார்க்கம்-சூர்ய கிரணம் அற்றே போகாதே -இரவிலும் -வெப்பம் உண்டு –
பனி மண்டலம் ரஸ்மி மறைக்கும் -இங்கு தெரியாது -வேறு தேசத்தில் தெரியுமே
தேஜஸ் ராசி கூட்டம் சேர்த்து -தேஜஸாம் ராசி மூர்ஜிதம்-ஸ்ரீ விஷ்ணு புராணம் –
இருள் போல-அபூத உவமை தேஜஸ் கூட்டம் கற்றை சேர்த்தாலும் இருள் போலே அன்றோ உன் திருமேனி தேஜஸ் –
பயிலும் சுடர் ஒளி மூர்த்தியை பங்கய கண்ணனை –3-7-1-வளர்ந்து கொண்டு இருக்கும் ஒளி-
நித்யம் -அவிகாராய -வ்ருத்தி கிராசங்கள் இல்லை -மங்காது வளராது -கர்மாதீனமாக இல்லை –
அவன் தேஜஸ் பக்தர் கூட்டம் கண்டு கிருபீதீனமாக  தேஜஸ்  வளரும் என்றவாறு –
விகாசம் மங்குவது இல்லை கர்மாதீனமாக -க்ருபாதீனம் உண்டு-ஆங்கு மலராது குவியாது-
திரு கண் மலர்ந்தால் போதும்- திருக் கண் -சங்கல்பத்துக்கு பிரதி நிதி
சூர்யன் போலே உதய கிரியில் உதித்து எல்லா திக்குகளின் சூழ்ந்து ஒளி பரப்ப உயர்வது போலே வேண்டாமே இங்கே
மத்ஸ்ய கமல லோசன– கண்ணாலே பார்த்து வளர்க்கும் சாமர்த்தியம் —
உணர்ந்து அருள ஆகாதோ–எழுந்து அருள வேண்டாம் உணர்ந்தாலே போதுமே –

நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனி ஓடும் நிறைந்து என் உள்ளே நின்று ஒழிந்தான்  –
திகிரி அம் தடக் கை -நேமி அம் கை உளது-அங்கு திருக்குறுங்குடி பாசுரம்
இவர் எழுந்து நின்றால் போலே வர்ண கலாப திவ்ய மங்கள விக்ரஹம்
நிம்பார்க்கர் வல்லாபாச்சார்யர் சைத்தன்யர் ஸ்வாமி நாராயணன் –
ஸ்ரீ ராமானுஜர் அருளிச் செய்த ஒரு கருத்தை எடுத்துக் கொண்டு மதங்கள்
ஜோதி சம்ப்ரதாயம் -உருவை ஒத்துக்க கொள்ளாமல்

நாராயண பரம் ஜோதி-பரம் ஜோதிர் உபஸம்பத்ய-அங்கு சென்றதும் சாம்யா  பத்தி –
ஆகாசத்துக்கு பரி பாகம் நக்ஷத்ரம் ஒளி-
அந்தி காவலன் -ரஜநீசரன்-சந்தரன்–இரவில் சஞ்சாரம்–கருகினான் என்ற கருத்து- மறைந்தான்-
அமுத கலைகள் வளர்ந்து தேய்ந்து -இலைகள் பறிக்க கூடாது அமா வாசை அன்று- விஷ்ணு புராணம்-
16 கல்யாண குணங்கள் -ராம சந்திரன்-என்றும் நிறைந்த -தினகரன் குல திவாகரன்-சூர்யன் இருட்டை போக்கும் திவாகரன்-
சூர்யனுக்கு இருந்த சந்திர கலைகள் 16 கல்யாண குணங்கள்-

தாரகையின் புறம் தடவி அப்பால் மிக்கு–காமரு சீர் அவுணன் உள்ளத்து  -அவனையும் தாண்டி –
துர் அபிமானம்-சீர் -சேவை பெற்றதால் வந்த சீர்மை-எண் மதியும் கடந்து -சப்த ஆவரணம்-தாண்டி
பிரதிவி பஞ்ச பூதம் அகங்காரம் மகான்-வேதம்-சந்தரன் மேல் கீழ் சூர்யன்-
மேலே தண்  மதியும் கதிரவனும் தவிர ஓடி -தாப த்ரயம்-பாத பங்கயமே தலைக்கு அணியாய்-
கொதித்த தலையில் வைத்த திருவடி சருகி-குளிர -சிசிரோபசாரம் பண்ணுகிறார்/பாசுரத்தால்.
மேலை தண் மதியம் -என்றதால் கீழை கதிரவன் என்று அர்த்தம்
சர்வ பதார்த்தங்களையும் தரிக்க பண்ணும் திருவடிகளாய்-சத்தை ஏற்படுத்த -லோகத்தை தரிக்க பண்ண உணர வேண்டும்
சந்திர காந்தன் அதீத பிரிய தர்சனம் ராமன் -அமலன் ஆதி -16 சீமா பூமிகள் காட்டினார்-
சகல கலா பரிபூர்ணராய் -பெரிய பெருமாள் இடம் உள்ள குணங்கள் தான் ஆராதனன் ராமன் பெற்றான்
நிஷ் களங்கம் இல்லாத சந்திரன்-சதி ஆஹ்லாத கரம் சந்திரன் -தாபா த்ரயங்கள் தீர்ந்து குளிர்ந்து –
சம்சார பயம் போக்கும் -துண்ட வெண் பிறையன் துயர் பிறையின் துயர் தீர்த்தவன்-இரண்டும்-
சந்திரனின் துயர்-ருத்ரனின் துயர் தீர்த்தவன் -சந்திர புஷ்கரணி-தீர்த்தவாரி கண்டு அருளுகிறார்-
தாரகையின் புறம் தடவி அப்பால் -மிக்கு -திரு நெடும் தாண்டகம் –
சந்த்ரகாந்தானாம்
திருவடித்தாமரை
திரு முக மண்டலம்
இரண்டுக்கும் இரண்டு பிரமாணங்கள் –

இந்த சந்திரனே -உணர்ந்து அருள வேண்டும்-
ஆகாசப் பராப்பு எல்லாம் முத்து பந்தல் -முப்பல் விரித்தால் போல முத்து பந்தல்- நஷத்ரங்கள்-
அமலங்களாக விளிக்கும் -குற்றம் நீங்கும் படி-
கடாக்ஷம் இல்லாமல் -சந்திரனும் பரிக்ரகங்களும்-நஷத்ரங்கள்- வேற்று உரு கொண்டன-
வியாபித்த இருள் நிரஸ்தமாயிற்று

பசுமை உடைத்தான
நந்தன தரு-காவேரி-ஸ்நானம் பானம் -வீதி அலம்பி விட்டு-ஜனங்கள் பாபம் போக்கி மரங்கள் வளர்த்து-
கமுகு மரங்கள்-மடல் விரிந்து கந்தம் வீசுகிறது கலக்கம் தெளிந்தால்-காற்று- போகம்-மணம் கொண்டு–
மணம் கொடுத்த வண்மை பாளைக்கு – காற்றுக்கு கொடுக்கை
விடி காற்று வருகையும் – விடிவோரை காற்று எங்கும் வீச –
கூர்தல் -மிகுகை-
மன்றூடு  தென்றல் உலாம் மதிள் அரங்கம்—4-8-.பெரியாழ்வார் -இது அந்த தென்றல் இல்லை -தூங்க காற்று அது –
வைகறை மாருதம் –
விடிந்தமைக்கு அடையாளம் காட்டும் காற்று–

ஆதித்ய கிரணங்கள் மின் மினி போலே அன்றோ
ஆழி கொண்டு இரவி மறைத்தது -ஒளி மிக்க -கோடி சூர்யன் எரித்தால் போல ஆதித்ய கரணங்கள் மின் மினி போல
அடல் -மிடுக்கு தேஜஸ் உள்ள திகிரி-வெறும் புலத்தில் ஆலத்தி கழிக்கும் படி அழகு
அம் தடக் கை -கால சக்கரத்தை-நிர்வஹிக்கும் திரு ஆழி அடங்கும் படி விசாலம்
திருவாழி ஆழ்வானுக்கு இடம் பெறும்படி தடக்கை –
தரிசனம் கேட்டு துடிக்கும் ஆர்த்தர் உள்ள இடம்-அனுக்ரகிக்க வந்த –இந்த ஸ்ரீ ரங்கத்தில் –
முகம் கொடுக்க வந்த இடத்தில் கிடந்தது உறங்கலாமோ-
அத்திகிரி- அத் திகிரி– ஹஸ்திகிரி–

——————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ.வே .வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ தொண்டர் அடி பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply