திருப்பள்ளி எழுச்சி–2-கொழும் குடி முல்லையின்–ஸ்ரீ நஞ்சீயர் -ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை -வியாக்யானம் – -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

 

கொழும் குடி முல்லையின் கொழு மலர் அணவி
கூர்ந்தது குண திசை மாருதம் இதுவோ
எழுந்தன மலர் அணை பள்ளி கொள் அன்னம்
ஈன் பனி நனைந்த தம் இரும் சிறகு உதறி
விழுங்கிய முதலையின் பிலம் புரை பேழ் வாய்
வெள் ளெயிறு உற அதன் விடத்தினுக்கு அனுங்கி
அழுங்கிய வானையின் அரும் துயர் கெடுத்த
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே—–2-

பதவுரை

குண திசை மாருதம்–கீழ் காற்றானது
கொழு கொடி-செழுமை தங்கிய கொடியை யுடைத்தான
முல்லையின்-முல்லைச் செடியிலுண்டான
கொழு மலர்–அழகிய மலர்களை
அணலி–அளைந்து கொண்டு
இதுவோ–இதோ
கூர்ந்தது–வீசா நின்றது;
மலர் அணை–புஷ்ப சயநத்திலே
பள்ளி கொள்–உறங்குகின்ற
அன்னம்–ஹம்ஸங்களானவை
ஈன் பணி நனைந்த–(மழை போல்) சொரிகிற பனியாலே நனைந்த
தம்–தங்களுடைய
இரு சிறகு–அழகிய இறகுகளை
உதறி–உதறிக் கொண்டு
எழுந்தன–உறக்கம் விட்டெழுந்தன;
விழுங்கிய-(தன் காலை) விழுங்கின
முதலையின்–முதலையினுடைய
பிலம்புரை–பாழி போன்ற
பேழ் வாய்–பெரிய வாயிலுள்ள
வெள் எயிறு உற–வெளுத்த கோரப் பற்கள் ஊன்ற
அதன்–அம் முதலையினுடைய
விடத்தினுக்கு–பல விஷத்திற்கு
அனுங்கி அழுங்கிய–மிகவும் நோவுபட்ட
ஆனையின்–கஜேந்திராழ்வரனுடைய
அரு துயர்–பெரிய துக்கத்தை
கெடுத்த–போக்கி யருளின
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாய்-.

அடையாளம் சொல்லி-ஆண்டாள் பாகவதர்களை எழுப்புவது போல்-
செழிப்பான கொடி மாருதம் வருவதை கை காட்டுகிறார்-இதுவோ-
சொரியும் பனியால் நனைந்து -சிறகுகளை உதறி-அன்ன பறவை எழுந்தன –
தாமரை படுக்கையில் சயனித்து இருக்கும் அன்னம் ஆகாசப் பனியால் நனைந்து -வண்ண பரிபாகம் சேர்க்கை
ஹம்சா அவதாரம் செய்து அருளிய நீர் திருப் பள்ளி உணர வேண்டாவோ இரண்டு அடையாளங்களை சொல்லி –
துணுக் என்று எழுந்து இருக்க அடுத்த சரித்திரம் –
அடியார் துன்பம் -நோவு பட்ட யானை-போது புலர –  கீழ் காற்றும் வீச ,
புஷ்ப சாயிகள் அன்னம் பிரபோதனம் -ஆஸ்ரித வத்சலன் தேவரீர் திரு பள்ளி உணர வேண்டும்  –
அம் கண் -இரட்டை-காலத்தின் இளமை மொட்டிக்கப் பண்ணும் –ஆஸ்ரித  கூக்குரல் திறக்க பண்ணும்
பாபங்கள் மூட- பிராட்டி புருஷ காரத்வம் திறக்க வைக்கும்- செம் கண் சிறு சிறிதே எங்கள் மேல் விழியாவோ-
அது போல இங்கு- வாத்சல்யம் காட்டிய கஜேந்திர மோட்ஷம்-
பிறை எயிற்று பேழ் வாய் நரஸிம்ஹர் திருவாய் போலே அன்றோ இங்கும்
ஆயிரம் காலம் தன்னை தானே ரஷித்த குற்றம் கணியாதே ஓடினாயே –
ஆயிரம் ஜென்மங்களாக நானும் உன்னைக் கூப்பிட வில்லை-

ஸ்ரீ நஞ்சீயர் வியாக்யானம்

கீழ்க்காற்றும்
புஷ்ப்ப சாயி அன்னங்கள் உடைய ப்ரபோதனம் -இரண்டு அடையாளங்கள் –
ஆச்ரித வஸ்தலரானா தேவரீர் -வாரணம் துன்பம் ஒழித்த நாரணன் காரணன் -சுருக்கமாக சொல்லி
நம் குற்றங்கள் அவனை கண் வளர செய்கிறதே
கூக்குரல் திறக்கப் பண்ணும் -சிறு சிறிதே
பிராட்டி திறக்க வைக்க பாபங்கள் மூட வைக்க
இரட்டைகள் -செங்கண் சிறு சிறிதே / வாத்சல்யம் காட்டிய இடம் காட்டி -கஜேந்திரன் -1000-தன்னை ரஷித்த அஹங்காரம்
கொழுமை-முளைக்கும் காற்றுக்கும் பரிமளத்துக்கும்-
விடி காற்று -கிழக்கு திசை -சூழ்ந்து கொண்டு -உணர்த்துவாரை போலே முகங்களில் அலை ஏரியா நின்றது
குடத்தோடே நீர் கொட்டுவாராய் போலே பரிமளம்
காலைப் பிடித்து உணர்த்துவாரைப் போலே -சேஷத்வம் அறிந்த காற்று அன்றோ -வருடி கொடுத்தாலே எழுந்து
காற்று போலே கூசி பிடிக்க வேண்டிய மெல்லடி -பொய்யான வியாஜ்யம் தானே -எழுந்து இருக்க
அறிவிப்பே அமையும்
கொடியில் மலரும் முல்லைகள்-செவ்வி மலரின் பரிமளத்தை -கொழுமை
கொடிக்கும் முல்லைக்கும் —முகங்களில் அலை எரியா நின்றது –
பனி வாடை காற்றாக காலை பிடித்து உணர்த்தும் படி—
கிழக்கு திசை காற்று திருவடியில் விழுந்து -சேஷத்வ அனுரூபமாக -திருவடி கொள்ள தானே யோக்யதை/

தாமரை பூ  படுக்கை-பனியை மதியாமல்-படுக்கை  வாய்ப்பாலே உறங்கும் ஹம்ச மிதுனங்கள்-காலம் உணர்த்த உணர்ந்தன
பனி உருக — ஈன் பனி/அரு மறை பயந்த சஜாதீயர் –நீயும் எழுந்திராய் –
பனியால் நனைந்த சிறகுகளை உதறி—

விழுங்கிய-
பரம் ஆபத்து ஆபன்ன- நாகவர ஸ்ரீ மான் –
இலையார் மலர் பூம் பொய்கை –கொலையார் வேழம் நடுக்கு உற்று குலைய அதனுக்கு அருள் புரிந்து/
ஆனையின் துயரம் தீர புள்ளூர்ந்து -சென்று நின்று ஆழி தொட்டானை /
பிள துவாரம் போன்ற பெரிய பரப்பை உடைய -எயிற்றால் நெருக்கு உண்டு -மிகவும் நோவு பட்டு –
நாராயணா மணிவண்ணா -துதிக்கை முழுகும் படியான திசையால் கைமா துன்பம் கடிந்த பிரானே
ஆனைக்கு  அன்று அருளை ஈந்த -உபகார ஸ்ம்ருதியால் ஆழ்வார் — க்ருதஞ்ஞர்கள்-ஈடு படும் படி /
பூவின் செம்மை அழியாமல்-திருவடிகளில் இட்டு கொண்டு அடிமை கொண்ட மகோ உபாகரர்-
பொற்றாமரை அன்றோ துதிக்கையில் வைத்து இருந்தது —
கைங்கர்யம் செய்த உபகாரத்வம் நம்மது பெற்றுக் கொள்ளும் மஹா உபகாரம் அவனது –

முடித்து கொள்பவன் அவன் முதல் அடி வைத்தால் போதும் இடையூறுகள் கட்டாயம் –
வெறும் உடையவருக்கே விஷம் கொடுத்து ஆற்றில் அழுத்த இருக்கும் இடம்
கைங்கர்யம் பண்ண ஆசை கொள்ளுவதே வேண்டுவது
பிரதிபந்தகங்களை முடித்து கைங்கர்யம் கொண்டு அருளுவான்  –
ஆனையின் ஆயிரம் வருஷம் அஹங்காரம் நினைக்க முடியாத படி அன்றோ உபகாரகன் –
யானையின் அகங்காரம் தெரியாமல் குற்றமே குணமாக கொள்பவன்-
கொடுத்து கொள்ளாதே கொண்டதற்கு கை கூலி கொடுக்க வேண்டும்
அமுது செய்திட பெறில்  ஒன்றுக்கு நூறு ஆயிரமாக கொடுத்து பின்னும் ஆளும் செய்வேன் –
பிற்பாடரை ரட்ஷிக்க  கோவிலிலே இன்று-உணர்ந்து அருள வேண்டும்-அழகை சேவிக்க –
அன்று காட்டிய அழகை ஆர்த்தி தீரும் படி/முதலை கண்டு கால் கொடுத்தால் தான் எழுந்து இருப்பீரோ/

—————————

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்

கீழ் காற்று முல்லையின் பரிமளத்தை முகந்து கொண்டு தாமரை பூவில் ஹம்ச மிதுனத்தை கிளப்பி விட்டன /
அன்னங்களை புருஷாகாரமாக காலைப் பிடித்து திருவடிகளில் சமாஸ்ரயணம் என்றபடி –
ஆகவே இரண்டையும் சேர்த்தே அருளிச் செய்கிறார் –
அரை குலைய தலை குலைய ஓடி வந்த தேவரீர் கண் வளர்ந்து அருளுகிறது என்-வெள்கி நிற்ப-

கொழும் குடி முல்லையின் கொழு மலர் அணவி
ச ஸ்ராத்தமான –வளப்பமானகொடியில் வளப்பமான புஷ்பம் அளைந்து -கொழு இரட்டை-
அவனுக்கு என்று இருப்பதாலே வந்த வளப்பம் —
சீரார் செந்நெல் கவிரி வீசும்-செழு நீர் திரு குடந்தை-சீர்மை ஆரா அமுதனுக்கு வீசுவதால்/
தாது  அல்லியும் அரும்பும்-கந்தல் இன்றி -கூசி பிடிக்கும் மெல் அடி- அரிய பரிமளம் மட்டுமே -வாங்கி கொண்டு-
தாது  அல்லியும் அரும்பும்-கந்தல் இன்றி-மூன்று அல் வழக்குகள் இல்லாமல் ஸமாச்ரயணம் –
புது மாதவி மீது அணவி -திரு வாய் மொழி 5-9-2-நாயகி பாவத்தில் சரணா கதி இதில் மட்டும் -திரு வல்ல வாழ் –
என்று கொள்  தோழி மீர் காள் எம்மை நீர் நலிந்தது என் செய்தீரோ-
பொன் திகள் புன்னை மகிழ் புது மாதவி மீது அணவி தென்றல் மணம் கமழும் திரு வல்ல வாழ் நகருள் நின்ற பிரான்
அடி நீறு அடியோம் கொண்டு சூடுவதே –
தென்றல் மாதவியை அணைந்து வீச -திருவடித் தாமரை பரிமளம் கொண்டு வந்து வீச பிரார்த்தனை அங்கு –
ரஜஸ் கொண்டு வர கூடாதோ -வாட்டம் தணிய வீசீரோ தாராயினும்-ஆண்டாள் -அது போல ஆழ்வார்//

கூருதல்– விஞ்சிற்று –

ஆதித்யனுக்கு நேரான உறவான தாமரை பூவின் விகாசம் அன்றே-
நில பூவும் முல்லை பூவும் விகாசித்தது
 // –
ஆதி சேஷன்-மனத்துள்ளான் மா கடல் நீர் உள்ளான் – –
நீர்ப்பூ -நிலப்பூ இவனே அரங்கன் -இரண்டையும் சொல்லுகிறார் –-நீயும்- நில பூவும் நீர் பூவும்/
தாமரை கண்ணனை /கமல கண்ணன் என்  கண்ணில் உள்ளான்//ராம கமல பதராஸா –ராஜீவ லோசன
பிர்த்வி-கந்தம் வாயு-தொடு உணர்ச்சி தானே இதுவோ-
அந்தரங்கர் ராஜா இடம் பார்த்து அருளுவீர் என்பார் அது போல-காற்றை அறிமுகம் -ஸ்பர்ச இந்த்ர்ய க்ராக்யம்-

இதுவோ-
என்கையால்-சதத கதித்வம்-தவிர்த்து வீசி கொண்டு இருக்கும் தன்மை தவிர்த்து –
கைங்கர்யம் செய்ய உருவம் வேண்டுமே –உருவத்தோடு வந்தது போலும்-

/விரக தாபத்தால் ராமன்-காற்று வீசி-பத்ம கேசர=தாது  -தாமரை தொட்டு கொண்டு வீசுகிறது-
கூடி இருக்கும் பொழுது சுகம்–பிரிந்த பொழுது சந்தரன் காற்று எல்லாம் நலியும்–
பட்டு உடுக்கும் -தாமரை மலர்-அவள் வஸ்து கொண்டு என்னை நலிய வைக்கிறது/
உருவம் தாதுகள் கொண்டு நலிய வந்தது அங்கு -கேசரிக்கு கேசரத்தை கொண்டு வந்தது -தாதுக்கள் கேசரம் –
கேசரி யை -ராகவ சிம்மம் – எதிர்க்க கேசரம் -சீதா குழலை ஸ்பரிசித்து
சண்டை போட தாதுக்களை எடுத்துக் கொண்டு கஷ்டம் படுத்த அங்கு /
விலகி கொள்- மறைந்து வந்தது மரங்களின் இடைப் பட்டு -ஒய்வு எடுத்துகொண்டு சக்தி கொண்டு நலிகிறது /
சீதை மூச்சு காற்று  என்ற வேஷம் போட்டு கொண்டு வந்தது /
மனசை பரித்து கொண்டு போக்க-வந்தது -பொடி தூவி  மயக்கி-வாயு மநோ ஹரம் –
ஏற்கனவே மற்றவற்றைக் கொண்டு போனது இப்பொழுது மனத்தையும் பறிக்க –

பள்ளி கொள்-
அன்னம்-துயிலும் அன்னம் இல்லை –
உகந்து அருளின நிலங்களில் உள்ளவை எல்லாம் உத்தேசம்
நீராட போதுவீர்-கண புரம் கை தொழும் பிள்ளையை பிள்ளை என்று பாராமல்/
சிஷ்யரோ பிள்ளையோ கெளரவம்/மட கிளியை கை தொழுதாள்/நித்யர் பல உருவில் கைங்கர்யம்
அனந்தாழ்வான் கட்டு சாதம் எறும்பு /ஏதேனும் ஆவேனே /
நம்மில் சிறியார் இல்லை இங்கு என்று இருப்பார்களே/பெரிய திரு மலை நம்பி ஸ்வாமி இடம் அருளிய வார்த்தை/
இங்கு எல்லாரும் எல்லாம் நித்யர் முக்தர் -நான் மட்டுமே முமுஷு பக்தன் என்றபடி –

மலர் கொள் அன்னம் -ஒருமை -எழுந்தன -பன்மை
அன்னங்கள் ..எழுந்தன இல்லை அன்னம் எழுந்தன
அந்யோன்யம் ஒற்றுமை கண்டு அன்னம் –
பூம் படுக்கை தனி படுக்கை தனலோடு  ஒக்கும்-
மிதுனத்தில் -வெம் பள்ளி .மென் மலர் பள்ளி வெம் பள்ளியாலோ-ஆழ்வார் /
கயம் கொள் புன் தலை  களிறு  உந்து வெண் திறல் -கழல் மன்னர் பெரும் போரில்  -மயங்க
வெண் சங்கம் வாய் வைத்த மைந்தனும் -வந்திலன்-
இயங்கு மாருதம் நுண் பனி என்னும் தழல் முகந்து இள முலை மெல் –விலங்கில் என் ஆவியை-பரகால நாயகி /
சிறகுக்குள் பேடையை அணைத்து கொண்டு பெரிய திரு மொழி -8-5-8 முது இவ் வையகம் -பரசுராமனும் இங்கே வரவில்லை என்கிறார்-//
மைந்தனும் வாரானால் -ஒழுகு நுண் பனி ஒடுங்கிய பேடையை அடங்க அஞ்சிறை –கொள் தழுவி –இருள் -என்னை படுத்த  –
ஆண் பறவை சிறகு கொடுத்தது எனக்கு ஸவ்ரி பெருமாள் கொடுக்க வில்லையே –

நாடோடியான அன்னம் எழுந்தன -அன்னமாய் அன்று அரு மறை பயந்த நீர் அன்னம்-நீர் -விவேக முகராய் நூல் உரைத்து ,
தீர்த்தம் பால்/அளலில் ரதி இன்றி -சேற்றில்  கால் வைக்காமல்-நாத யாமுனா போல்வாரை –
அணங்கின் நடையை பின் சென்று-பெரிய பிராட்டி/புருஷ காரம் பண்ணுவார்கள்/
மானச பத்மத்தில் -அடியார்களின் மனசில் ஆச்சார்யர்கள் /

விழுங்கிய இத்யாதி
முதலையின் கையிலே யானை ஏற்பட்டாலோ நீர் ரஷிக்கலாவது
பசல்கள் கிணற்றின் அருகில் போயிற்று என்றால் விழுந்தது போலே -ஆதாரம்
வாயில் அகப்பட்டாலும் விழுங்கிய பீடித்த என்னால்
வெள் எயிறு –
சாணையில் இட்ட சஸ்திரம் -ஆமிஷம் இல்லாமையால் -மணலையே பஷித்து -சாணை தீட்டி கூர்மையான எயிறு
விடத்தினுக்கு அனுங்கிய
அழுந்திய பல்லில் இருந்து விஷம் –
ஐந்து முதலை ஜன்மன்களோ பல /கடித்த முதலை இல்லை —
விழுங்கிய –
பசல்கள் கிணற்றின் அருகு போனதால் கிணற்றில் விழுந்தன அகப் பட்டதும் விழுங்கிய ஆதரவு தோற்ற
சாணையில் இட்ட சஸ்த்ரம் போல பல்கள்/ — வெள் ளெயிறு உற-
அங்கு ஆமிஷம்-மாமிசம் – இல்லாததால் மண் தின்று சாணையில் இட்ட சஸ்த்ரம் போல/-
அதன் விடத்தினுக்கு அனுங்கி-அழுங்கிய வானையின் அரும் துயர் கெடுத்த-
பெரும் துயர் போக்கினான் வேகத்துக்கு நமஸ்காரம்-பட்டர் //
சர்வேஸ்வரனை வந்து விழ பண்ணிய துயர்-உணர்ந்து ரட்ஷிக்க வேண்டும்-

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ.வே .வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ தொண்டர் அடி பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading