திருப்பள்ளி எழுச்சி -5–புலம்பின புட்களும்–ஸ்ரீ நஞ்சீயர் -ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை -வியாக்யானம் – -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

செய்யும் பசும் துளவ செந் தமிழில் மறை தமிழ் அருளிய -பரன் தாள் அன்றி ஆதரியாத மெய்யன்-
ராமானுஜர் சரணே கதி -அமுதனார் /
மறைத் தமிழ் மாலைகள் திருப்பள்ளி எழுச்சியும் -திருமாலையும் –
உத்திஷ்ட புருஷ கிரி-போல வேதார்தம் திரு பள்ளி எழுச்சி அருளியது போல இவரும் அருளி இருக்கிறார்/
திரு மாலை-வேதாந்த சாரம் -சரணாகதி – -38 பாசுரம்-மேம் பொருள் போக விட்டு -பாசுரத்தால் அருளினார்/

இலங்கையர் கோன் வழி பாடு செய்யும் கோயில் -இப் பாசுரம் தனியாக –
அத்தனை நெருக்கம் ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கும் அரங்கனுக்கும் –
அரங்கத்தம்மான் –
ஸ்வரூப நிரூபகம்-திவ்ய தேசம் பெயர் கிட்டே அவனை அனுபவிப்பர் –
பங்குனி உத்தரம் -திரு மண்டபம் -வானர முதலிகள் எல்லாரும் சிலா ரூபமாக –
சரணாகதி -கைங்கர்ய சாம்ராஜ்ய பட்டாபிஷேகம் நடந்த திரு மண்டபம் ஸ்மர்த்தர்த்தமாக இன்றும் சேவை உண்டே

புலம்பின புட்களும் பூம் பொழில்களின் வாய்
போயிற்று கங்குல் புகுந்தது புலரி
கலந்தது குண திசை கனை கடல் அரவம்
களி வண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த
அலம் கலம் தொடையல் கொண்டு அடி இணை பணிவான்
அமரர்கள் புகுந்தார் ஆதலால் அம்மா
இலங்கையர் கோன் வழிபாடு செய் கோயில்
எம்பெருமான்! பள்ளி எழுந்து அருளாயே—-5

பதவுரை

பூ–பூத்திரா நின்றுள்ள
பொழில்களின் வாய்–சோலைகளிலுள்ள
புட்களும்–பறவைகளும்
புலம்பின–(உணர்ந்து) ஆரவாரஞ் செய்யா நின்றன;
போயிற்று–கழிந்தது;
புலரி–ப்ராத: காலமானது
புகுந்தது–வந்தது;
குண திசை–கீழ்த் திசையிலே
கனை–கோஷஞ்செய்கிற
கடல்–கடலினுடைய
அரவம்–ஒசையானது
கலந்தது–வியாபித்தது;
களி–தேனைப் பருகிப் களிக்கின்ற
வண்டு–வண்டுகளானவை
மிழற்றிய–சப்தியா நிற்கிற
கலம்பகன் புனைந்த–பல வகைப் பூக்களாலே தொடுக்கப் பட்ட
அம்–அழகிய
அலங்கல் தொடையல் கொண்டு–அலங்கல் மாலைகளை ஏந்திக் கொண்டு
அமரர்கள்–தேவர்கள்
அடி இணை பணிவான்–(தேவரீருடைய திருவடி யிணைகளில் பணி மாறுகைக்காக
புகுந்தனர்–வந்து நின்றனர்;
ஆதலில்–ஆகையாலே,
அம்மா–ஸர்வ ஸ்வாமிந்!
இலங்கையர் கோன் வழிபாடு செய் கோயில்–லங்கேச்வரனான விபீஷணாழ்வான் தாஸ வ்ருத்தி பண்ணப் பெற்ற கோயிலிலே
(கண்வளர்ந்தருளுகிற)
எம்பெருமான்!- அஸ்மத் ஸ்வாமியே! பள்ளி எழுந்தருளாயே-.

தேவர்கள் வந்து நிற்க–பட்சி ஓசை கடல் ஓசை-சரித்ரம் சொல்லி -அது போல ரஷித்து அருள வேண்டும்-
கைங்கர்யமே  ரக்ஷணம்-விபீஷணனுக்கு -ஆஸ்ரித சுலபன்–
தர்ம வர்மா திருச் சுற்று-திருவண் ஆழி பிரதக்ஷிணம் என்றும் சொல்வர் -இப்பொழுது சேவிக்க வில்லை –
கம்பி கதவு வழியாக விமானம் சேவிக்கிறோம் –
ஜ்யேஷ்டாபிஷேகம் -நம்பெருமாள் இங்கே எழுந்து அருளி திரு மஞ்சனம் –
சேஷ அசனர் -விஷ்வக் சேனர் -விபீஷணனும் திருவடி-களும் சேர்ந்து சந்நிதி
திரு முளை -மண் எடுக்க-மிருத் ஸங்க்ரஹம் -விஷ்வக் சேனரும் ஹனுமானும் சேர்ந்து எழுந்து அருளுவார்கள்-
ஹனு பூஷா விபீஷணயோகோ ஸ்யாம் மோக்ஷம் உபேஷிய  -ரங்க  தனம் -ஆனந்தப் படுத்து கிறார்கள் பட்டர் –
தாயார் சந்நிதி மரம் கீழ் எடுப்பார்கள்-
திரு பள்ளி ஓடம் -மாசி தெப்ப உத்சவம் தேர் இல்லை-தை பங்குனி சித்திரை தேர் உண்டு –
செல்வ விபீடணனுக்கு வேறாக நல்லான்-

புலம்பின புட்களும் பூம் பொழில்களின் வாய்–கீழே இரண்டு பறவைகள் சப்தம் இது வேறே
போயிற்று கங்குல் புகுந்தது புலரி-பகல் பொழுது புகுந்தது
கலந்தது குண திசை கனை கடல் அரவம்-கிழக்கு சமுத்திர ஓசை எங்கும்
களி வண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த-ஆனந்த ரீங்காரம் -சாம கானம் பூ லோக வைகுண்டம் -கதம்ப மாலை கலம்பகம்
அலம் கலம் தொடையல் கொண்டு அடி இணை பணிவான்
அமரர்கள் புகுந்தார் ஆதலால் -புஷ்பமாலை சமர்ப்பிக்க தேவர்கள் புகுந்தனர்
அம்மா-சர்வ ஸ்வாமி -இவர்களுக்காகவாவது திருப் பள்ளி உணர வேண்டும் -என்று பிரார்த்தனை
இலங்கையர் கோன் வழிபாடு செய் கோயில்-ஸ்ரீ விபீஷண ஆழ்வான் தாச வ்ருத்தி -செய்த –
கொண்டு வந்து எழுந்த அருளிய பண்ணிய பெரிய கைங்கர்யம் –
முதல் முதல் பங்குனி ப்ரஹ்மோத்சவம் பண்ணிய கைங்கர்யமும் உண்டே –
சேஷ பீடம் முன்னமே -காவேரி வாய்ப்பும் இருக்க -சேர்த்தி உத்சவம் 9-நாள் – திரு மஞ்சனம் -அதில் உண்டா –
மூலவர் இருந்தமை அறிவோம்-ஸஹ பத்நயா விசாலாக்ஷி ஸ்லோகம் உண்டே –
அர்ச்சிக்க அன்றோ பெருமாள் இஷுவாகு குலத்தில் திரு அவதாரம் –இங்கு –
ஸ்ரீ ரெங்க விமானம் இருந்தது அறிவோம் –
உத்சவம் நடந்தால் உத்சவம் இருந்து இருக்க வேண்டுமே –
இஷுவாகு மன்னர் வம்சம் சோழர் -தர்ம வர்மா –
எம்பெருமான்! பள்ளி எழுந்து அருளாயே—-

புலம்பின புட்களும் பூம் பொழில்களின் வாய்-
பூத்து இருக்கும் சோலைகளில் பறவைகள்-ஆரவாரம் செய்கின்றன கங்குல்
இரவு புலரி-பகல் பொழுது குண திசை-கிழக்கு திசை –
களி வண்டு மிழற்றிய-
வண்டுகளும் ரீங்கரிக்கிற -கதம்பம்-கலம்பகம்
அலங்கல் தொடையல்
-மாலை –அம்மா -சர்வ  ஸ்வாமி–
ஆதலில்- இதில் தான்- தேவர்களுக்கு ஆக செய்யலாமே -தாச விருத்தி-வழிபாடு
பங்குனி பெரிய உத்சவம் முதலில் ஸ்ரீ ரெங்கத்தில் பண்ணிய கைங்கர்யம்
சேஷ பீடம் வேற கீழே இருக்க காவேரி -மூல மூர்த்தி பிரஸ்தாபம் உண்டு
நம் பெருமாளும் தாயாரும் -சக பத்ன்ய  விசாலாட்ஷி -பெரிய பெருமாளை –
நாராயணன்-ஜகன்னாதன்-அர்ச்சன்யனும் அவனே இங்கு-அவன் பெருமைக்கு தக்க பண்ண –
தர்ம வர்மாவும் இறைஞ்சி கேட்க -உத்சவம் நடந்தது என்பதால்-உத்சவரும் இருந்து இருக்க வேண்டும்

சர்வான் தேவாஸ் நமச்க்ருது அயோத்யா மக்கள் ராமனுக்கு எல்லா கோவிலில் சென்று வழி பட்டார்கள்
விபவத்திலும் அர்ச்சை உண்டு
/புள்ளும் சிலம்பின காண் புள் அரையன் கோவில்-
ஆண்டாளும் கோபியாக அனுகரித்து-அருளி இருக்கிறாள்-துவஜ ஸ்தம்பமும் பண்ணி இருக்கலாம்
பங்குனி உத்சவம் சேர்த்தியும் இருந்து இருக்கும்
கோ செங்கணான் தொழுத கோவில் –மணி மாடம் -ஒரே சரித்ரம்- 1200 வருஷம் -இவனே இல்லை –
பெயர் வழி முறையாக வருமே -விபீஷணன் வழி பட்ட கோவில்-இங்கு ஆழ்வார்

அவதாரிகை-ஸ்ரீ நஞ்சீயர்-
தேவஜாதிகள் கற்பக பூக்கள் கொண்டு வந்து -மந்திர புஷ்பம் -சொல்லி பரிமாறுவதற்கு அவசர ப்ரதீஷை-
அருள பாடு-ஸ்ரீ ரெங்கத்தில்-அருள பாடு விண்ணப்பம் செய்வார்-அரையர்-
திரு கரக கையேல்- திரு கோ மண்டலம்–சந்தனம் புஷ்பம் கொண்டு வருவார் நாயந்தே-
அது போல அருள பாடுவது என்று காத்து இருக்கிறார்-
தொண்டர் அடி பொடி அருள ஸ்வாமி ஏற்பாடு செய்து இன்று வரை நடந்து வருகிறது-
முதலி ஆண்டான் வம்சம் மணிய காரர்/தோளுக்கு  இனியான் 16 பேர் /திரு சிவிகை 32 பேர்-உபய நாச்சியார் கூட
ஓடி ஓடி பழகுவார் வெறும் தோளுக்கு இனியானை -ஆயக்காலே கிடையாது ஸ்ரீ ரெங்கத்தில் –
மின்சார விளக்கே இல்லை நெய் பந்தம் மட்டும் தான் –
அருளப் பாடு- எப்பொழுது என்று காலம் எதிர்பார்த்து -எதிர் பார்த்து நிற்கிறார்கள்-
ஜன்மாத்ரங்களில் தாழ்வு பாராத நீர் கண் விழித்து அடிமை கொள்ள வேண்டும் என்கிறார் –
ஜன்மாந்தரங்களில் வாசி பாராமல் கொள்கிறார்/இவருக்கு அப்புறம் திரு பாண் ஆழ்வாரையும் கொண்டாரே-

வியாக்யானம்-

சர்வரையும் அபிபவிக்க  கடவதான தமஸ் போனது-மயக்கம் கொடுக்கும்-வாசனை உடன் போயிற்று-
அந்த தமஸ் -இருளே தமஸ் –
சாத்விகம் -பகல்-வந்தது- சம்சாரம் கழிந்து பகவத் அனுபவம் பகல் கண்டேன் நாரணனை கண்டேன் –
ப்ரஹ்ம முகூர்த்தம்–ஆராதனை காலம் வந்ததே என்று அன்றோ காலத்தை கொண்டாடுகிறார்கள் -மார்கழி திங்கள் இத்யாதி –
கீழை திக்கில் கோஷிக்கையே ஸ்வபாவம் சமுத்திர சப்தம்- எங்கும் வியாபித்தது–இரவில் சமுத்திர சப்தம் குறைந்து இருக்கும்-
ஊரெல்லாம் துஞ்சி-5-4- ..நீரெல்லாம் தேறி /-

களி வண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த-
மது பானம் உண்ட வண்டுகள்-
களி வண்டு மிழற்றிய மாலை-நானாவித புஷ்பங்கள்-ஏந்திக் கொண்டு-இடுப்பு கீழ் கூடாது-
தேவர்கள் அடைய சர்வ நாதனான உன் திருவடிகளில் -பர அவர ஈசர்-அஸ்மத் ஆதிகளுக்கும் –
இராவண அனுஜன்  என்று பார்க்காமல் ஸ்ரீ விபீஷணனால் -கொண்டாடப்பட்ட கோயிலிலே –
பர அவர ஈசனான தேவரீர்
அஸ்மாதாதி களுக்காக பள்ளி கொண்டு அருளினீர் —
அதவா-
அவனை அடிமை கொண்டால் போலே எங்களையும் கொள்ள வேண்டும் என்றுமாம் –
கைங்கர்யம் கொள்ள-எழுந்து அருள்வாய்

———————————–

ஸ்ரீ பெரிய  வாச்சான் பிள்ளை -அவதாரிகை–
சுரும்பினம் இருந்தின முன்பு -வயலுக்குள் இருந்த வண்டுகள் –
இதிலும் போது கழிந்து உணரும் -பஷிகளும் உணர்ந்தன –
பகவத் பிரவணருக்கும் சம்சாரிகளுக்கும் உள்ள வாசி போல முன் எழுந்த பறவைகளுக்கும் இதற்கும் உள்ள வாசி

வியாக்யானம்-

பகவத் பிரவணருக்கும் சம்சாரிகளுக்கும் உள்ள வாசி போல முன் எழுந்த பறவைகளுக்கும் இதற்கும்-
வயலில் உள்ளவை போல இன்றி நிலத்தில் உள்ளவைகளும் எழுந்தன -புலம்பின புட்களும் என்றாரே –
அந்த புள் இனங்கள் சொல்லும் பாசுரம்-/வண்டினம் முரலும் சோலை..
மேகம் வந்தது என்று பிரமித்து – மயில் இனம்   ஆலும் -கொண்டல் மீது அணவும் சோலை-
நிஜ மேகம் நாமும் வந்துடனுமே -சோலை குயிலனம் கூவும் சோலை -மயக்கம் இல்லாது இது ஓன்று தான் –
சோலை வாய்ப்பு பார்த்து இறங்கினார்-அண்டர் கோன் அமரும் சோலை —
எல்லா சமுத்திர நீரை உண்ட மேகம் போல பெரிய பெருமாள்//
புலம்பின புட்களும்
ப்ரீதி பிரகர்ஷத்தாலே சில பாட-சிலர் பக்க வாத்தியம் கொண்டல் -ஆட சிலர் கொண்டாட –
ஸ்தோத்ரம் பண்ணுகின்றன —ந்ருத்த கீதம்
ப்ரஹ்மாதிகள் போல இன்றி அநந்ய பிரயோஜனர் -பிரகலாதன் போல/
வைகவும் பள்ளி கொள்வதேன் என்கிறதாம்–
வாழ்த்தி அயர்வு எய்ததும் -ஆட்டம் மேவி -ஈட்டம் கண்டிட கூடுமேல்–
போயிற்று கங்குல்-
அகன்றது என்றார் முன்பு -போயிற்று கங்குல் -மொத்தமாக போனது -நிஸ் சேஷம் ஆனது தமஸ் போனால்
புலரி புலர்ந்தது
சத்வம் வருவது போல பகல் கண்டேன் –
கோஷம் மாத்ரம் இன்று எல்லா இடமும் பாவித்தது –

உறவு மக்களை பட்டினி போட்டு விருந்தாளி காலும் கலமும் -வெற்றிலை பாக்கு உடன் ஊட்டுவாரை போலே-
ஆழ்வார்—தேவர்களுக்கு-எழுப்பி-தன்னை அவர் பிள்ளை –
பகவத் கல்யாண குணம் விருந்தோம்பல்-இரண்டையும் சொல்கிறார்-
தேவர்கள் விருந்தாளிகள் –
ஆழ்வார் பெருமாள் அளியல்  நம் பையன் என்று சொல்லப்படுபவர் அன்றோ – குடும்பத்து பிள்ளை –
பெண் போலே அன்றோ —
தம் பதவி பிரம்சம் வாராமைக்கு-பதவி நிற்க-
நன்றாய் செறிந்து வந்து -செறிந்த வண்டுகள் பருகும் தேன் உள்ள புஷ்ப மாலைகள் கொண்டு-
இவர்களுக்காகவாது முகம் கொடுத்து அருள வேண்டும்-
திரு விருத்தம் சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி-நித்யர்கள் இங்கு-பெருமாள் காலை பார்த்து இருப்பார்கள்/
இங்கு தங்கள் நாற்காலி பார்த்து

அநந்ய பிரயோஜனர் நித்யர் மட்டும் இல்லையே
மாலா காரர்-இருக்கிறது கொடுத்து பதறி கைங்கர்யம்/குறும்பு அறுத்த நம்பி
புஷ்ப கைங்கர்யம்-அகம் சிஷ்யச்ய தாசச்ய பிரஸாதம் கர்த்தும் அர்ஹதி -பரதன்-
ஆதலால் அம்மா –
ஆதலில் என் மாலை சாத்தாது போதும் என் ஆயன் அல்ல என்று சொல்லாதவர் -ஸ்வாமி- ஸ்வாமி தான்-
கடியன் கொடியன்–என்றாலும் அவன் என்றே இருப்பவர் அன்றோ -இவர் பாடல் தாலாட்டு போலே இருக்க
இப்படி விண்ணப்பம் செய்த இவர் பேச்சு அருளிய சொல் இனிதாக இருக்க–தாலாட்டு போல-
பள்ளி கொள் என்று சொன்ன-அவன் தானே –
விபீஷணனே எழுப்பினால் தான் திரு பள்ளி உணர்வீரோ –
வழி பாடு செய்தல்-
திரு உள்ளம் அறிந்து கைங்கர்யம் பார தந்த்ர்யம் சித்திக்கும்-
அவர் உள்ளம் படி இங்கேயே எழுந்து அருள பண்ணி -பாரதந்தர்யம் – –
இலைங்கையர் கோன் வழி பாடு செய்யும் கோயில் –
இதுவும் ஒரு ஏற்றம் இறே-
எங்களைப் போன்ற நீசரை கை கொள்ளத் தானே இங்கு வந்தீர்/
இதுவும் -விபீஷணனுக்கு பராதீனரக இருந்தது போல -எழுந்து அருள வேண்டும்-
ஆஸ்ரித பரதந்த்ரன் அன்றோ -எழுந்து இருந்தீர் பள்ளி கொள் என்றால் சொன்ன வண்ணம் செய்பவர் அன்றோ –

——————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ.வே .வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ தொண்டர் அடி பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

 

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading