ஸ்ரீ ராமானுஜ நூற்று அந்தாதி -பூ மன்னு -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்..

பூ மன்னு மாது/ மாது  பொருந்திய மார்பன்/மார்பன் புகழ் மலிந்த பா /பா மன்னும் மாறன் /மாறன் அடி பணிந்து உய்ந்தவன்  /நாம் மன்னி வாழ -நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே –பல் கலையோர் தாம் மன்ன வந்த இராமனுசன் சரணார  விந்தம் நாம் மன்னி-பொருந்தி இருத்தலே வாழ்தல்- வாழ-சுடர் அடி தொழுது எழு தொழுகையே எழுகை  //மாறன் அடி பணிந்து உய்ந்தவர் ..பவிஷ்ய ஆச்சர்ய விக்ரகம் காட்டி கொடுத்தாரே ..ஆழ்வார் பாவில் மன்னி கிடைக்கிறார் .இயைந்து கிடக்கிறார் இன்றும் சேவிக்க ..//திருவாய் மொழி  ஸ்ரீ ராமாயணம் இருக்கும் வரை .ஸ்ரீ வைஷ்ணவம் வாழும்..மார்பன் புகழை வைத்து கொண்டு இருக்கும் பா /யார் அந்த மார்பன் ? மாது பொருந்திய மார்பன் –பெயரை சொல்லாமலே இவளாலே ஏற்றம் ..எங்கு இருந்து வந்தால் ? பூ மன்னு மாது ..ஸ்ரீ தேவி பெரும் இல்லை ..மாறன் இடத்தில் தான் பெயர் -பா என்றாலே திரு வாய் மொழி சுவாமி ஜெயந்தி கோவில் என்றால் ராமானுஜர் கிருஷ்ண ஜெயந்தி ஸ்ரீ ரெங்கம் போல -ஜகத் பிரசித்தம் பூ=கமலம் தானே ..

 மாது- ஸ்ரீ தேவி தான். மார்பன் ஸ்ரீமன் நாராயணன் தானே பா வேதமோ பாட முடியாது ஏற்கும் பெரும் புகழ் மலக்கு நா உடை ஏற்க்கு–மாறன் =   மால்+ தன அடி –பணிந்து  உய்ந்தவன்  ../ஆழ்வார் பாதிகை மதுர கவி எங்கும் ஆழ்வார் திருநகரில் மட்டும்  ஸ்ரீ ராமானுஜன் -அவர் பாதுகை தாசரதி முதலி ஆண்டான் எங்கும்  திரு மலையில் அனந்தாழ்வான் ..//மாறனில் மிக்குமோர் தேவு   உளதே –மால் தனில் என்கிறார்  ஆழ்வாரே .//.பூவிலே பிராட்டி மன்னி கிடக்க / அவள் மன்னியது மார்பில் அதை பா பாட /பாவில் ஆழ்வார் மன்னி இருக்க / அவர் திருவடியில் மன்னி  ராமனுஜன்..
..நெஞ்சை வா /  தொழுது எழு மனனேபோல -நெஞ்சே சொல்லுவோம் நாமங்களே…ஆழ்வான் மூலம் திருந்த –தமக்கு ஆச்சர்ய பிரசாததாலே பெற்ற மந்திர ரத்னம்-துவயம்  -பூர்வ கண்டம் உத்தர கண்டம் -யாதாத்ம ஞான ரூபமாய் –உள் உரை பொருள் -ஸ்ரீமத் ராமனுஜய சரணவ் சரணம் பிற பதயே ஸ்ரீமதே ராமானுஜாய நாம -ஆர்த்தி பிர பந்தம் உத்தர கண்டம்-வாழி எதிராஜா – யதிராஜ விம்சதி.-பூர்வ கண்டம்.. பிராப்ய பிரபககங்கள் ராமானுஜர் திருவடிகளே ..சப்தத்தையே மறைக்கும் படியான ரகசியம்..அதற்குள் ரகசியம்..குக்ய தமம் இனியது தனி அருந்தேல்-அவருக்கு போன வியாதி நமக்கும் போக வாரி கொடுக்க வந்தார் ..கை கரவேல் -கை திருப்பி விடாமல் சமுத்திர நீரை வாரி வழங்க பிரார்த்திக்கிறாள்  ஆண்டாள் –கிண்ணகத்தில்-வெள்ளம்-இழிதல் – துணை தேட்டத்தில்- எம்பெருமானாரின் கல்யாண குண சாகரத்தில் -செஞ்சொல் கவிகாள் உயிர்  கத்து ஆட செய்மின் போல..நீர் ஆட போதுவீர் போதுமினோ போல-

கல்யாண குண கடல் -ஏரி-இவரை காத்த ராமன்-முத்து மாணிக்கம் இழிய-அமுதனார் உபய விபூதி இலும் ஆராய்ந்து/நித்யர்முக்தர்கள்  பரத்வத்தை சாம கானம் பண்ணி கிடக்க , லீலா விபூதியில் கண் வைக்காமல் கிடக்க ..சம்சாரி ஜனங்கள் பிரகிருதி  மறைக்க -ஸ்தோத்ர பங்கபிரகிருதி நியாயம்- -அனை திறந்தால் ஓடும் அருவி போல ..-உண்டியே உடையே உகந்து ஓடி–சூர்யன் உதிக்கும் பொழுதும் அஸ்தமிக்கும் பொழுதும் ஆனந்தம் அடைந்து ..கூவி கோலும் காலம் இன்னும் குறுகாதோ- தஷினாயணம் போய் -உடையவர் ஆனந்தம்-குருகும் காலம் குறைந்தது என்று – /சௌரி சிந்தையராய் விஷயாந்த்ரங்களை பற்றி–எம்பெருமானார் அடியவர்களை ஞானாதிகர் -எல்லோரும் பரம போக்கியம் பாலே போல் சீர்-கல்யாண குணங்களில் —கால் ஆளும் நெஞ்சு அழியும் கண் சுழன்று-குமிழ் நீர் உண்டு-ஆழ்ந்து அனுபவிக்க –கூவும் குரல் விழவில்லை..துணை யாரும் இன்றி  தன சுகம் துக்கத்துக்கும் பொதுவாக இருக்கும் மனசை விளித்து–பூ -பத்மேச்திதாம் தாமரை இருப்பிடம் ஆக கொண்ட தாயார் உபேஷித்து   -பிறந்தகம் விட்டு-இரையும் அகலகில்லேன் என்று -பொருந்தி வாசம் பண்ணிகிறாள். பூ மன்னு பொருந்திய -மன்னு என்று சொல்ல வில்லை..பூ மன்னு-உபேஷித்ததால் -சங்கை வரும் என்று பொருந்திய -என்கிறார்..புகழ் -மலிந்த -நலம் உடையவன் என்று ஆரம்பித்து 1000 கல்யாண குணங்கள் காட்டி பா- திரு வாய் மொழி-

கவி அமுதும் நுகர்ச்சி -மன்னினார்-ஆழ்வார் உடை- பா பொருந்து-சொல்ல வில்லை-இனிமேல் மன்னு சொல்லலாம் கிளம்ப மாட்டார் -நந்த கோபன் குமரன் பெயரை /நந்த கோபாலன் பெயரை சொல்லி ஆற்ற படைத்தான் மகனே- மாமனார் பெயரை மூன்று தரம் சொல்லிய  பின்பு..இங்கு சொல்லாமல் விட்டது..-ஆழ்வார் அடியை பணிந்து உஜ்ஜீவிதவர் -பார்த்தே வளர்க்கும் மீன்-தாய் ஆழ்வார் -செய் சுவாமி..பல் கலையார்-சாஸ்திரங்கள் கற்று -அர்த்தம் புரியாமல்- தம் மன்ன வந்த ராமானுஜர்- நாட்டிய நீச சமயங்கள் மாண்டன -/மன்ன வந்த -சுபிரதிஷ்டை போல..நாம்-இனிமேல் பிராப்யமாக   அறிந்து கொண்டு//முன்பு பல் கலையோர் தாம்- தாமே வந்தார்கள்..//பொருந்தி வாழும்படி நெஞ்சே ..நிலையாக -இளையவர்க்கு அளித்த மௌலியை விபீஷணனும் பிரார்த்தித்தால் போல கொக்குவாயும் படு கண்ணியம் போல பொருந்தி இருக்க ..

மலர் மேல் மங்கை -ஸ்வயம் பத்மினி பத்ம நிவாசினி-பூ-கமல-பொதுவாக சொன்னாலும் கமலத்தையே குறிக்கும் அரவிந்த நிவாசினி..பத்மே ஸ்திதாம்-அசையாமல் ஸ்திரமாக இருகிறவள். ஸ்ரீ சுக்தம்.பாஞ்சராத்மம் லஷ்மி தத்ரம் பிராட்டி இந்தரனுக்கு -அருளியது… பத்மே ஸ்திதாம் பத்ம வரணாம் ஒளி/வேத ஒலி யுடையவள்..ஹிரண்ய பிரகாராம் -பெருமை தோற்றம் –ஆர்த்ராம்-கருணையால் நனைந்து இருக்கிறாள் ..அசித் சித் ஈஸ்வரன் மூவருக்கும் ஒளி கொடுப்பவள்.. வேரி மாறாத பூவில் இருப்பாள்…பரிமளம் தானே வடிவு கொண்டவள்../அவ் வீட்டின் போக்யத்தையால் அதை சொரூப நிரூபக மாக அரவிந்த நிவாசினி என்று சோழ பட்ட பின்பு— ரெங்க நாதன் அரங்க நகர் அப்பன்  என்றே சொல்லுமா போல-அழகிய மணவாளன் என்று சொல்லாமல் //பகவான் திரு மார்பை அனுபவித்து போக்யதையில் ஈடு பட்டு நின்ற பின்பு…இதை .அருவருத்து ஒரு காலும் நினையாமல்../இறையும் அகலகில்லேன் -என்று பொருந்தி -அலர் மேல் மங்கை உறை மார்ப -பெருமானுக்கும்மாது நிரூபக -விசேஷ பூதன்-நாமம் -அகஸ்ய பிராதா போலும் மாமான் மகளே  போலும் என்னுள் கலந்தான் பெயர் போல கலந்ததே தனக்கு தர்மமாக கொண்டவன் //ஸ்ரதையா அ- தேவக தேவச்தும் அச்துதே -தேவன் தன்மை அவளால் பெறுகிறான் –அநு  ரூபம் விஷ்ணுவுக்கு இவள்- அப்ரமேயம் சீதா ராமன்–தாயில் சிறந்த கோவில் இல்லை தந்தை சொல் மிக மந்த்ரம் இல்லை -மாதா முதலில் சொன்னது போல..மாதாவால் தன அவனுக்கு பெருமை ..மார்பன் புகழ் மலிந்த பா –பட்டியல்- உயர்வற உயர்நலம் உடையவன்-குண விசிஷ்டன்  /அயர்வறும் அமரர்கள் அதிபதி-வுபய விபூதிநாதன்  / உடன் மிசை உயிர் என கரந்து எங்கும் பரந்துளன்-அந்தர்யமித்வமும் வ்யாபகத்வம்  உளன் சுடர் மிகு சுருதியுள் -வேதத்தால் அறிய கூடியவன் ../நீர் தொறும் பரந்துளன்  பரந்த  அண்டம் இது என -உத்தரம்-மண்டபம் போல இல்லை-சொரூப வ்யாகத்வமும் உண்டு -ஆத்மா ச்வாபத்தாலே தான் வ்யாப்தி ../நியமன சக்தி யும் உண்டு ஒன்றும் தேவும் … யாதும் இல்லா அன்று –உயிர் படைத்தான் /கரந்து உமிழ்ந்து அளந்து  இடந்து  கண்டும் தெளிக்க இலீர்  //உலகம் உண்ட பெருவாயா-அத்தா  சராசரம் -விழுங்கி -உலப்பிலா கீர்த்தி -சொற் பனி செய் ஆயிரம் வேதம் இதிகாசம் அர்த்தம் சொல்ல  பணி செய்யும் ஆழ்வார் திரு வாக்கில் புறப்பட/புணரா நின்ற மரம்.–நடுவே போன முதலாவோ . வீர சௌர்ய பராக்ரமங்கள் /நோலாது  ஆற்றேன் நிறை நான்முகனும் இந்த்ரனும் -ந்யாமகன் / செந்தாமரை கண்ணா -சௌந்தர்யம்  /முனியே நான் முகனே -சர்வ சரீரி/பாழ்-பிரக்ருதியே சரீரம் ஜோதி நீ -ஆத்மாவும் விட்டு பிரியாது இல்லதும் உள்ளத்து அல்லது அவன் உரு  -/உயர்ந்தே என்னும் அளவும் ஆதி மத்திய அவதானம் வரை  ஒருவடி பட்ட -புகழை-கல்யாண குணங்களை – விடாமல் அருளிய திரு வாய் மொழி.//ஸ்ரீ பாஷ்யம் இதையே கொண்டு சூத்தர வாக்யங்களை ஒருங்க விட்டார் -சுடர் மிகு சுருதியுள் உளன்..இருப்பதாலே சுடர் மிக்கதா ..வெதைக்க சமதகம்-வேததாலேயே அறிய படுகிறேன்./அனுபவிக்க உள் அடங்காமல் வந்தும் பகவத் கிருபையால் சகல லஷனன்களை கொண்டு…/பக்தி பலாத்காரத்தாலே வந்தவை ..

புகழ்  மலிந்த பா -கவி அமுதம் ..தொண்டர்க்கு அமுது போல தானே புகழும் படி..  பா மன்னு மாறன்- – தாயான ஆழ்வார் அநுக்ரக லேசத்தாலே செயன எம்பெருமானாரை  வளர்த்தார்-மீன் தன கண்ணாலே  குட்டிகளை வளர்ப்பது போல..அடி பணிந்து உயந்தவன்-உஜ்ஜீவித்தவர் பல் கலையோர் -ஞானம் பெற மன்னினார்கள் ..-தாம் இவர்கள்-தாமாகவே வந்தனர்../சரனாரவந்தம் நாம் மன்னி வாழ இதுவே பிராப்யம் என்று அறிந்த நாம்-அநாதி காலம் எங்கோ இருந்த நாம் – பொருந்தி வாழும் படியாக நெஞ்சே அவர் திரு நாமம் சொல்ல வேணும்..சுவாமி-ஆழ்வார்- மார்பு- தாயார்-பெருமாள் சேரயதிராஜ  விம்சதி முதல் ஸ்லோகம் ஸ்ரீ மாதவான்க்ரி-பெரிய பிராட்டியார் சம்பந்தத்துடன் மிதுன – திருவடிகள்   ஜல துவைய நித்ய சேவா பிரேமா ஆவிலேசைய பராங்குசர் -பாத பக்த்யம் ராமனுஜம் –மாறன் அடி பணிந்து உய்ந்தவர்-காமாதி தோஷ விலகும் //உஜ்ஜீவனம் அபிப்ராயம் மாறும்-சம்சாரிகளுக்கு அன்ன பானம் /முக்தர்களுக்கு மோஷசாம்ராஜ்யம் /ராமானுஜருக்கு ஆழ்வார் தம் திருவடிகளை இவருக்கு என்றே விட்டு போனாராம் ..தொடர்பு-அவை தன்னையே  அனுபவித்து போனார்..-கால விளம்பம் உண்டு .பிடிக்கும் படி ஆழ்வார் பிரமாணத்துடன் இவரை த்யானம் பண்ணி பவிஷ்யத் ஆச்சர்ய விக்ரகம் கொடுத்தார் -பரகத ச்வீகாரம்- வாரி கொண்டு என்னில் முன்னம் பாரித்து என்னை முற்றும் பருகினான் போல .. ராமானுஜர் பெரிய நம்பி —மூலம் தானே பற்றனும்–ஆழ்வாராகவே ச்வீகாரம் பண்ணி கொண்டார்..பகவத் பிரபாவத்தை ஸ்ரீ பாஷ்யம் முகம் பிரகாசித்து –திவ்ய தேசங்கள் தோரும் தானும் கைங்கர்யம் பண்ணினார்–ஆழ்வார் நினைத்ததை மனோ  ரதம் ஈடு ஏற்றி கொடுத்தார் -இதுவே உஜ்ஜீவனம் ..பல் கலையோர் -சாஸ்திரம் கற்றவர் சங்கை தீர்க்க தாம் மன்ன வந்த ராமானுஜர்..–.நன்மையால் மிக நான் மறையாளர்கள்  கூரேச குருகேசர்-திரு குருகை பிரான் பிள்ளான்-அபிமான புத்திரன் -ஆராயிர  படி முதலில் அருளிய பெருமை – , கோவிந்தன், தாசரதி-முதலி ஆண்டான்  போன்ற முதலிகளும் -சங்கை இல்லை இவர்களுக்கு -மற்றும் யாதவ பிரகாசர்-யதிகள் இருக்கும் படி நூல் அருளி இருக்கிறார்  ,யக்ஜா மூர்த்தி  ஆதி -அருளாள பெருமாள் எம்பெருமானார்–திரு ஆராதனா கர்ம கொடுத்து அருளினார் காரேய் கருணை ராமானுஜா! ..போல்வார்/திரு மழிசை ஆழ்வாரை பேய் ஆழ்வார் /எம்பார்-உள்ளம்கை கொணர்ந்த  நாயனார் -திரு மலை நம்பி திருத்தி – –இங்கு வந்தவர்கள் சாஸ்திர வாக்கியம் காட்டி மீண்ட சரித்ரம் இல்லை /இனி திருவடி நிலை விட்டு அகலாமல் சு பிரத்கிஷ்டராக  மன்னி  இருந்தார்கள் ..அசைக்க முடியாத ஞானம் ..சமுத்ரம்  போல பகவத் பக்தி சிந்தவே- ஆளவந்தார் -தாண்ட முடியாது ஆழம் காண முடியாது கலக்க முடியாது /பொருந்தி நிலைத்து ../வந்த -பகவத் சங்கல்பத்தால் வந்த -ராமன் தம்பி போல -பெரியோர் சொல் படி கேட்டு தர்மம் நிலை நிறுத்த ..அபயம் சர்வ பூபேப்யோ போல ஆசை உடையோர்க்கு எல்லாம் ஆரியர்காள்–மோஷ தானம் வாரி கொடுத்தார்..சரணார விந்தம் -அரவிந்தம் -மன்மத பானம் போல தன்னை  மோகிததால்- பாவனத்வம் போக்கியம்  ஏக ரூபமாய் இருக்கையாலே சரணார விந்தம் -ஒருமையில்-/மாதவான்க்ரி -இரண்டு பராங்குச  பாத பக்தம் -ஓன்று-போல..மருந்தே நாங்கள் போக மகிழ்ச்சிக்கு ..மருந்தும் விருந்தும் ஒன்றே ..ஆசார்யன் திருவடிகளில் சங்கை இல்லை.. மன்னி -ஆச்ரயித்து -திட அத்யாவசயம் பண்ணி -வாழ நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே –சொல்லுவாய் சொல்லுவேன் நான் மன்னி வாழ – இல்லை-பகு வசன பிரயோஜனம்-ஜகத் அடங்கிலும் சேரனும் ஜகதாசார்யர் என்பதால்.கூப்பிட்டாலும் நாம் போக விலை என்றாலும் நம்மை விட மனம் இன்று கூப்பிடுகிறார்– இனியது தனி அருந்தேல் -காருண்யத்தால்  –நெஞ்சே- அந்தரங்கமாக சொல்லுகிறார் மகா நிதி லாபத்தால் -தங்க புதையல் உள்ளதை சொல்வது போல -பெற்ற பேற்றை -மறவாமல் சொல்லுவோம் -அவன்-நாமங்களே–வாயால் சொன்னால் போதும்/ நிறைய நாமங்கள் உண்டு../நாராயணன் நாமம் இல்லை அவன் நாமங்கள் என்கிறார்..ஏவ காரத்தால் மற்றவற்றை விலக்குகிறார்..பிரபத்யே -பற்றுதல் மனசா வாசா காயிக-ஞானான் மோஷம் -கத்யர்தா புத்யர்தா-நினைவு தான் முக்கியம் -மற்றவை அங்கம். ஆச்சர்யரை பற்ற சொல்வதே போதும்–.யுக்தி மாத்ரத்தாலே -நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன் போல –மனஸ் சேராமல் நாவினால் மட்டுமே சொன்னால் போதும்…நெஞ்சே சொல்லுவோம்-நித்யர் முக்தர் சம்சாரி ஆழ்ந்த பக்தர் இல்லை -அன்யோன்ய ரசனை -போயதயந்த பரஸ்பரம் -தேவு மற்றும் அறியேன் -ஏவ காரம்  ராமானுஜருக்கு -11 திருநாமங்கள் இளைய ஆழ்வார் முதலில்/ ஸ்ரீ பெரும் புதூர் ஆதி கேசவ பெருமாள் -பூத புரீசர் //நம் பெருமாள் -உடையவர் / தேவ பெருமாள் -எதி ராஜர் /திருவேங்கடம் உடையான்–தேசிகேந்த்ரன்  ஐந்து ஆச்சார்யர்கள்  ஐந்து நாமங்கள் சாரதா தேவி ஸ்ரீ பாஷ்ய காரர் பெரிய நம்பி -ராமானுஜர்/ திரு கோஷ்ட்டி   நம்பி எம்பெருமானார் பெரிய திருமலை நம்பி -கோவில் அண்ணன் / திரு மாலை ஆண்டான் சட  கோபன் பொன் அடி  / ஆழ்வார்  திரு அரங்க பெருமாள் அரையர் -லஷ்மண முனி

ஆக 11 திரு நாமங்கள் –யதீன்தரர் மற்றும் பல ..நாம சங்கீர்த்தனமே அமையும்..நெஞ்சு-அசித் .சேர்த்து சொல்லுவோம் -சேதன சமாதியாலே ஒப்பு-உபகரித்த உபகாரத்தை அனுசந்தித்து -ஆழ்வாரும் நெஞ்சை கூட்டி கொள்வார்..ஆழ்வானும்-ஜந்து  தன்னை சொல்லி  கொண்டு சுவாமியை அசத்- சத் ஆக காமம் கொண்டு-யோக்யதை இல்லை ஹா ஹந்த !..அருளாள பெருமாள் எம்பெருமானார் வேதம் ஒரு நான்கின் உள் பொதிந்த மெய் பொருள் தீதில் சரணாகதி தந்த  இறைவன் தாள்–மா முனியும் ஆர்த்தி பிர பந்தம்-பூ மகள் கோன்  தென் அரங்கன் பாதுகமாய் தாம் மகிழும் செல்வ சடகோபர் ஏய்ந்து–  வாய்ந்து என் நெஞ்சமே வாழ–சொல்வது போல.. 

பூ மன்னு- ஸ்ரீ மன்/பொருந்திய -மன்னு// நாராயண -புகழ் மலிந்த /சரணவ் -மார்பன்-திருமேனிக்கு உபலஷணம்  பணிந்து உய்ந்தவன் சரணம் பிரபத்யே ..

———————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading