திரு விருத்தம் -12..

பேர்கின்றது மணிமாமை பிரங்கி அல்லர் பயலே

வூர்கின்றது கங்குல் வூழிகளே இதெல்லாம் இனவே

ஈர்க்கின்ற சக்கரத்து எம்பெருமான் கண்ணன் தண் அம் துழாய்
சார்கின்ற நன் நெஞ்சினார் தந்து போன தனி வளமே
 அவதாரிகை.
.கீழே  உள்ள பாசுரங்களில் ,வைஷ்ணவர்களை தலை மகனாக பேசிற்று..இங்கே எம்பெருமானை தலை மகனாக பேசுகிறது.. பகவத் சம்ச்லேஷம் பாகவத சம்ச்லேஷ பர்யந்தமாக நிற்க கடவது ஆகையாலும் ,பாகவத சம்ச்லேஷம் பகவத் சம்ச்லேஷ பர்யந்தமாக நிற்க கடவது ஆகையாலும் ,இவர்க்கு கீழ் உண்டான பாகவத சம்ச்லேஷம் பகவத் சம்ச்லேஷம் பர்யந்தம் ஆக்கின படி..
 தடாவிய அம்பிலே -என்ற ஆறாம் பாசுரத்தின் கீழ் உள்ளே பாசுரங்களில் எம்பெருமான் பிரிவாற்றாமையும் சொல்லி கீழ் உள்ள பாசுரம் வரை தன உடன் கூடி இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் பிரிவார்களோ என்கிற சங்கை கொண்டு அருளி, இதில் மீண்டும் அவன் பிரிவாற்றாமை யின் படி அருளுகிறார்

பேர்கின்றது மணி மாமை -விலக்ஷ்ணமான நிறம் போகிற படி

மாமை திறத்துக்கு எல்லாம் -என்று  ஆசை பட்டு நிறம் போகிற படி..காண காண சரக்கு வாங்குகிற படி…இவ் வளவிலே வரினும் மீட்கலாம் இருக்கிற படி..மணி மாமை என்று தன் நிறத்தை தானே கொண்டாடுவான் என் என்னில் ..ஒரு நிறமே எழிலே என்று அவன் கொண்டாடாடும் படிகளை கேட்டு இருந்த படியாலே.., தனக்கு தான் அன்றி இலே அவனுக்கு  ஆக தானாய்  இருக்கை யாலும்..

 பிரங்கி அல்லர் பயலை -நிறம் போன இடம் பாழ் கிடவாமை பயலை பரக்கிற படி –பிரங்கி- கிண்ணகம் போலே பெருகி

அல்லல் -இட்ட இடத்திலே கால் செருகும் படி ..வண்டல் இட்ட படி..தானே வந்தாலும் தூர்வை எடுக்க ஒண்ணாது வூர்கின்ற்றது -விஷம் பரந்தார் போலே –சார்வ பவ்மரான ராஜாக்கள் போக பள்ளிகள் வந்து புகுருமா போலேயும்….ஸ்ரீ பர்ன சாலையில் நின்று இளைய பெருமாள் போக ராவணன் புகுந்தார் போலேயும்.

.கங்குல் வூழிகளே -கலப்பதுக்கு முன்பு முப்பது நாளிகை இரா நின்றால், கலந்த வாறே ஒரு ஷணமாய் இரா நின்றது ..பிரிந்தவாறே கல்பங்கலாய் இரா நின்றது

..இது எல்லாம் இனவே நெஞ்சில் பட்டவற்றை கொண்டு அல்லாதவற்றையும் சொல்லுகிறது..மற்றும் உண்டான அன்றில் தென்றல் இவை எல்லாம் இப்படியே..பிராட்டியும் பெருமாளும் கலந்த பொழுது எடுத்து கை  நீட்டும் பதார்த்தங்கள், அவள் போய் நிற்கும் காட்டில் நின்றால்  போல பகை ஆனால் போல்  ..

ஈர்க்கின்ற சக்கரம்-அநுகூல பிரதி கூல விபாகம் இன்றிக்கே ,ஈர்க்கின்ற படி..சேதன சமாதியாலே பிரதி கூலரை போய் ஈரும்..அநுகூலரை கையில் சேர்தியாலே சேரும்..பிரதி கூலரை ஆண்மையாலே கொல்லும்.. அநுகூலரை அழகாலே கொல்லும்..

சக்கரத்து எம்பெருமான் -கையும் திரு வாழியுமான சேர்தியை காட்டி, இவரை எழுதி கொண்ட படி..ராஜ புத்ரர்கள் கையில் கடை செறிக்கு தோர்ப்பாரை போல..

கண்ணன் -கிருஷ்ணன் -அவன் தவி புஜனாய் அன்றோ இருப்பது ..வுபசம்ஹர சர்வாத்மான் ரூபம் ஏதஸ் சதுர் புஜம் .

.தண் அம் துழாய் ஈர்க்கின்ற கிருஷ்ணன் பக்கல் உண்டான அழகிய குளிர்ந்த திரு துழாய் இலே விழுகிற நெஞ்சு ..முதல் அடியில் அன்று கிடீர் தோற்றது எல்லை நிலத்தை கண்டு….உன் பழமையை நாய்க்கு  இடும் என்று போன படி.

.நல நெஞ்சினார்-தம் உடைய நெஞ்சை நல நெஞ்சினார் என்பான் என் என்னில் ..பிரஜைகளே ஆகிலும் ,பகவத் விஷயத்தில் முற்பாடார் ஆனவரை இங்கன் அல்லலது சொல்லல் ஆகாது ..அலைந்த பரியட்டமும் தாமுமாய் திரிகிறார் இறே பூசும் சாந்து என் நெஞ்சம் என்கிறபடியே அத தலைக்கு எல்லா போக்யமும்தாம் ஆகையாலே பலகால் அருள பாடிட அருகே நிற்க வேண்டுகை ஆகையாலே .

.தந்து போன தனி வளமே -இவர் தந்து போன சம்பத்து..

நம் பிள்ளை  திரு வடிகளே சரணம்.

பெரிய வாச்சான் பிள்ளை  திரு வடிகளே சரணம்.

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading