ஆறாவது ஸ்லோகம் ..
ஸ்தோதாரம் உசந்தி தேவி கவய யோவிஸ்த்றுணீதே குணான்
ஸ்தோதவ்யஸ்ய ததச்ச தே ஸ்துதிதுரா மய்யேவ விஸ்ராம்யாதி
யஸ்மாத் அஸ்மத் அமர்ஷணீய பணிதி ஸ்வீகாரத: தே குணா:
ஷாந்தி ஒவ்தார்ய தயா ஆதய: பகவதி ஸ்வாம் ப்ரஸ்துவீரன் ப்ரதாம்..
..குணத்தை விளக்கி சொல்பவன் ச்தோதாக்கள்/இல்லாத குணத்தை இருக்கு என்பவன்/ இருக்கும் குணத்தை இருக்கு என்று சொல்ல நாக்கும் காலமும் போறாது ச்தோதரமே பண்ண முடியாது….வஞ்ச புகழ்ச்சி அணி போல..கம்பன்-கள்வர் இல்லாமை யால் பொருள் காவல் இல்லை.. கொள்வார் இல்லாமையால் கொடுப்பார் இல்லை..-போல-என்னால் தான் உன்னை பாடி உன் குணத்தை வெளி படுத்த முடியும்..உன்னை பாடும் கடமை என் தலையில் ஒய்வு எடுத்து கொண்டது.. என் புன் சொற்கள் கொண்டு பாடுவதால் -ஷாந்தி ஒவ்தார்யம் தயை எல்லாம் உன் இடம் உள்ளது என்னால் தான் வெளி படுத்த முடியும்.. அவன் கல்யாண குணங்கள் பரம பதத்தில் பகல் விளக்கு பட்டு இருக்கும்.. கல்யாண குணங்களை காட்ட முடியாது தயை , வாத்சல்யம் காட்ட முடியாதே.. குற்றம் பண்ணுவார் இல்லை ..ஸ்வென ரூபேண-ஆத்மா ஸ்வரூபம் பெற்று -எட்டு கல்யாண குணங்கள் இவனை அடையுமே அங்கு..இரங்கி வந்து காட்டுகிறான்..அது போல நான் பாடி தான் உன் ஷாந்தி -பொறுத்தல் ஒவ்தார்யம்-வாரி வழங்குதல்/ தயை ஆதி- வாத்சல்யமும் வைத்து கொள்ளனும் .. அன்று அதனை ஈன்று உகந்த ஆ போல..–சொல் கிடைக்காது கஷ்ட படுவேன்- சொல் பணி செய் ஆயிரம் வாசிக்க கைங்கர்யம்செய்தார் ஆழ்வார் –வண்மை இந்த வாசிக பணி தானே..கண்ண நீர் கைகளால் இறைக்கும் இது தான் காகிக கைங்கர்யம் பூ கட்ட வில்லை மதில் கட்ட வில்லை.. வந்த சொல் ஈர சொல்லாக ஆனது..தேட போகிறேன் என்கிறார் பட்டர் குற்றத்தை பொறுத்து கொள்ள போகிறாய் உன் பொறுமைக்கு அப்பொழுதான் பெருமை வரும்..குணங்களை விளங்க வைப்பவன் பாடகன்– செயளிளால் விளக்க போகிறேன் பாடலால் இல்லை.. உன் உடைய பெருமை பாடும் பொறுப்பு என் தலையில்.. ரெங்கன் பெருமை இல்லை.. தே-உன் -என்று பிரித்து சொல்கிறார் கண்ணனை கூவுமாறு அறிய மாட்டேன் -ஆழ்வார் ஏ பாவம் பரமே ! தலையில் கை வைத்து கொண்டார்..அது போல பிராட்டி உன்குணம் பேச என்னால் முடியாது.. மை ஏவ- என் இடத்திலேயே- ஏகாரம்- விதி வாய்கின்ற்றது காப்பார் யார் -ஆழ்வார் பாசுரம் போல..விளக்க யாரால் முடியும் என்னால் இல்லை ஈஸ்வரன் பிராட்டி கிளப்பி விட்டவள் விலக முடியாது.. பாடாமல் இருக்க முடியாது விஸ்ராமயதி.. தலையில் உட்கார்ந்து உம்மை தவிர வேறு யாராலும் பாடி என் குணங்களை வெளி படுத்த முடியாது..ச்வீகாரம் குணங்கள் என் வாக்கை கொண்டன..ஆம் என்று ஆமோதிக்கும்..பகவதி- ஆறு கல்யாண குணங்களை கொண்டவள்.. ஞான பல ஐஸ்வர்ய வீர சக்தி தேஜஸ்- குற்றங்கள் இன்றி- அகில ஹேய பிரத்நீயாக கல்யாண குணங்களையே கொண்டவள்..குணம் இல்லை தீய குணங்கள் இல்லை..நிர் குணவான் ..நாற்றம் =மணம் …. பிராட்டியை கூட எதிர் பார்க்காத ஆறு குணங்கள்.. வாத்சல்யம் போன்றவை தலை எடுக்கும் இவளால்..அந்த ஆறையும் என் தலையில் போட்டு அருள் என்கிறார்..அந்த குணங்கள் தங்களை பற்றி சொல்லி கொள்ள ஆரம்பிக்கும்-குற்றங்கள் உடன் அடியேன் பாட முயலும் பொழுது…நான் ஒருத்தன் தான் ஸ்தோதா–நம் ஆழ்வாரை பாட நான்-கம்பர்…திரு மார்க்கு தக்க தெய்வ கவிஞ்சன் ..அவனை நானே பாட வல்லேன் /பெருமாளை பாட நானே-ஆழ்வார்..ஏற்கும் பெரும் புகழ் கண்ணனை பாட வல்லவன் –அது போல பட்டர் இங்கே அருளிகிறார்.. யானாய் தன்னை தான் பாடி-ஆழ்வார்.. வட தளம்/ தேவகி உதரம்/ வேத சிரஸ்/ சடகோப வாக்கிலும் திரு மேனியிலும் காணலாம்..அது போல நீயே உன்னை பாடி கொள்ள வேணும் என்கிறார்..
ஏழாம் ஸ்லோகத்தில்..
பத்தாவது ஸ்லோகம் ..
வேத பாக்யர் உன் கடாஷததுக்கு -தரிதரர் -ஆனதால் -ஜடம் போல இவர்கள்..அர்த்தம் புரியாதவர்கள்..அடித்து கொண்டு அழிவார்கள்..தூண் உடன் வாதம் புரிந்தால் நான் தானே அறிவிலி..மல்லரை மாட்டிய தேவாதி தேவன்-அலங்காரம் அழியாமல் விலகி மோதி கொண்டு விழுவதை பார்த்து-கேசித்-சிலர்-அமாணன் -பிரமாணம் இல்லை வேத பாக்யர் புதர் ஜைனர் போல்வார்/அராஜகம் -ராஜா இல்லை என்பர்.. ஒத்து கொண்டு ஈஸ்வரன் இல்லை .மூல பிரக்ருதியே காரணம் என்பர்-ஈச்வர தத்வம் இல்லை/பெருமை இல்லை- ராஜா உண்டு- குணங்கள் இல்லை ..குணத்தில் தரித்ரம்..பஜ கோவிந்தம் அருளி- குணம் உள்ளவர்..ச குண பிரமம் ஒத்து கொண்டு நிர் குணம் அடையானம் இதை படி கட்டாக கொண்டு மாயாவாதி பாஷம்.. அனுமானத்தால் உணரனும் வேதவத்தால் இல்லை ஆகமத்தால் அடையணும்.. பல மதங்கள்..பிச்சை காரனுக்கு ராஜ உடைய தன்மை உண்டு.. பூவும் பூசனையும் தகுமோ ?..ஞானம் இல்லாத ஜடங்கள்..ஹர்ம்ய தளம் -பொற் கொடியாக -உயர்வும் பிரபாவமும் உண்டு –திவ்ய கடாஷத்துக்கு இலக்கு ஆகாமல் பேசுகிறார்கள் நாத முனிகள் தொடக்கமாக-அருள் பெற்றோம் ..அசேஷ கல்மஷம் ஆள வந்தார் சம்பந்தத்தால் போக்கினேன்- ராமானுஜர்..பெரிய நம்பி/ எம்பார் இடை பட்டவர்கள்..
அடுத்த ஸ்லோகம்..
அவள் கடாஷத்துக்கு ஆள் பட்டவன் சிறப்பு-மொய்மாம் பதிகம் போல -வேத வேதாங்களில் இருக்கும் அவள் பெருமையை உணருகிறான்.
.பன்னி இரண்டாம் ஸ்லோகம்-
-தி அபிஜாதாகா தேவி சம்பத்து-ஆசூரி சம்பத்துக்கு எதிர் தட்டு..மூன்று இடங்களில் சோகம் அர்ஜுனனுக்கு தேக – ஆத்மா விவேகம் சொல்லி நீக்கினான் / தேவ அசுர பேதம் சொல்லி நீக்கினான்/அடுத்து சரம ஸ்லோகத்தால் நீக்கினான் மூடர்கள்/ மாயையால் தொலைத்தவர்கள் அசுரர்கள் நரகில் விழுவார்கள்.. சாஸ்திர விதிக்கு புறம்பாக நடப்பவர் சித்தி அடைய மாட்டார்கள்- அசுரர் இவர்கள்..பிறப்பினால் இல்லை நடத்தையால் தான்..வேதம் சொன்ன படி நடப்பவன் தேவன்..அபி ஜாதக- சொல் கீதையில். அதையே பட்டர் .அருளுகிறார்..முதல் காண்டங்களால் உத்தர வாக்யமும்/ பிராட்டி பிரித்த பின் பூர்வ வாக்ய அர்த்தம் வால்மீகி – முதல் மூன்று பத்துகளால் திரு வாய் மொழியால் இது போல உத்தர வாக்யமும் அடுத்து பூர்வ -வாக்கியம்/ மேம் பொருள் பாசுரத்திலும் அப்படி தான் –பேசிததே பேசும் ஏக கண்டர்கள்– பிறக்கும் பொழுதே மது சூதனன் கடாஷம் வேண்டும் -வேதம் இவரோ பிராட்டி தான்.. கருணை கிளப்பி விடுபவள் இவள் தானே..தத் அந்தர்யாமி பரமாத்மா -பிரம்மா சொன்னால் அவனை/ இவன் கடாஷம் =இவன் கடாஷம் எதனாலோ அது ..உருவகம் இதில் சுருதி சிரசின் நிதி மர்மமாக மறைத்து வைக்கும் நிதி..வைத்த மா நிதி..-சித்தாஞ்சனம் – மை போட்டு பார்த்து-பிராட்டி பிரபாவம்..பக்தி சிந்தானம் -மை கண் ஞானமாக பிரகாசித்தால் இந்த தனத்தை உபநிஷத்தில் கண்டு கொள்ளலாம்//மனசில் பிரகாசிக்கும் கண்கள் உடன் கூடியவர்கள்- ஞான கண்..பக்தி ரூபான் அன்ன ஞானம்.. மதி நலம்-இரண்டையும் நலம் =பக்தி /மதி =பக்தி..ஞானம் கீழ் படி பக்தி மேல படி… ஞானம் முதிர்ந்த நிலை பக்தி..சுருதி சிரஸ் -விளங்கும் பக்தி பூமா வேணும்..கலந்தார்கள் /மனசு -பக்தி கண் -ஞானம் என்பதால் சேர்த்து அருளுகிறார்../சுரிதி சிரசி -நிபுடம்-காதில் ஓதும் மந்த்ரத்தில்-த்வயத்தில் சப்தத்தையே மறைத்து போவார்கள்..சப்தத்தை மறைக்க முடியாது திரு மந்த்ரத்திலும் சரம ஸ்லோகத்திலும்..கடை சரக்கு அன்று இது.. நிபுடம்-ரகசியம்- பிராட்டியை உள் வைத்து இருப்பதால்..நிதி மிவ–மறைத்து வைத்து உள்ள உன் உடைய மகிமானம்– புஞ்சயதே உண்டு அனுபவிகிரார்கள்.
.அடுத்த ஸ்லோகம்..
உஹ்தர சானுவாகம்-தி அதிமேகே -உன்னை பற்றி சொல்லும்.. ஸ்ரீ சுக்தம் அசய ஈசானம் ஜகத்-.நீ தான் ஈஸ்வரை என்னும் ஐஸ்வர்யத்தை ஸ்ரீ சுக்தம் பல முகங்களால் சொல்லும்..ஒரு சாகையிலும் உன் பெருமையே சொல்லும்..ஆயிரம் சாகைகள் சாம வேதத்துக்கு. இருப்பதை போஷித்து கற்று கொள்ளனும்..சாகானு சாகம் ஸ்ரீ சுக்தம்.. ஒவ் ஒரு வேதங்களிலும் ஸ்ரீ சுக்தம் உண்டு புருஷ சூக்தமும் உன் பெருமை சொல்கிறது..அவன் ஒருவனே ஈஸ்வரன் என்னும் சொல்லும். எச்சில் வாய் இல்லை. கங்கை காங்கேந்த்ரன் பிர பாவம் சொல்லி பின் அவனை சொல்லும்….புருஷ சுத்தம் அது போல இல்லை..இதுவே பிராட்டி வைபவம் சொல்கிறது..உனக்கு பதி என்று தலை கட்டும் இவை..அவளுக்கு தான் ஸ்ருஷ்ட்டி வியாபாரங்கள் பண்ணுகிறான்..உத்தர அனுவாகத்தில் இவளை சொலிற்று ..சகஸ்ர ச்ரீஷா புருஷ -ஆரம்பித்து திரு விக்ரமனை சொல்லி ..புருஷ யாருக்கு ?கிரீஷ லஷ்மி பதி..என்று சொல்லி .. வேதாதிகளில்- தர்ம புராணம் மகா பாரதம்- அருளி செயலில் இது..-திரு வாய் மொழி ஏற்றம்.. புருஷ மான கீதை போல -நாயனார்..கூட்டங்களில் தலைவன் ஆதியர் களில் விஷ்ணு –வாசுகி– தலைமை பெற்ற புருஷ சுக்தமே பிராட்டியை சொல்ல- அனைத்தும் அவள் பெருமையே பேசும்..தம் ச -நீயோ என்னில்-
அடுத்த ஸ்லோகம் .
.ஸ்மிர்த்தி இதிகாசம் புராணங்களும் அவளையே சொல்லும்..
கை தூக்கி சொல்லும்-சத்யம் சத்யம்-உத் பாகு-அசவ் ஆக -இப்படி சொல்லின ..ராமானுஜரே ஜகத் குறு சந்தேகம் இல்லை சத்யம் என்றாரே கூரத் ஆழ்வான் அது போல. ந ஆக நியன்தரம்.. தனியாக அவனை மட்டும் நியமனம் என்று சொல்லாது ராமாயணமும் மூச்சு விட்டதும் உன் பெருமை சொல்லி தாம் அபி-கூட..விரோதத்தில் வந்த சப்தம்- சிறை ஏற்றவள் ஏற்றம் சொல்ல வந்த இதன் பெயர் ராமாயணம்.. நங்காய் நாணாதாய் நா உடையாய்–குண பூர்த்தி என்று இல்லாதவளை சொன்னது போல..உன் சரித்ரம் சொல்லி மூச்சு விடுகிறது.பரம் பிராணிது.. அறுதி இடுவது இதிகாச புராணங்களிலே இதிகாச ஸ்ரேஷ்டம்-ராமாயணம்..சீதா பிரபாவம் சொல்ல ..மனு பராசர் சமர்த்தாக- கர்த்தா- இவர்களும் என் தாயை நினைப்பார்கள் அசமத் ஜனனி…உன் பெருமையை சொல்லும் பிரமாணம்..வேதமே.கர்த்தாக்களும் பிரமாணம் சப்தமும் பிரமாதாக்களும் உன்னை தான் பேசும் பிரமேதா நீ தானே. இவை உணர ..உன் கடாஷம் வேணும்..
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்..
Leave a Reply