ஸ்ரீ மகாலக்ஷ்மி அஷ்டோத்தரம் -1-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

அஷ்ட உத்தர சதா ..எட்டுடன் கூடிய நூறு திரு நாமங்கள்..நாமா வளி அர்ச்சனை. பிரணவதுடனும் நம சேர்த்து..வேதங்களில் ஸ்ரீ பூ நீளா  மேதா ஸ்ரத்தா ஸூக்தங்கள் உண்டு ..குண ரத்ன கோசம் ஸ்ரீ ஸ்துதி உண்டு.. சில ஸ்தோத்ரங்கள் தான்..அவன் பெருமை உடையவன் ஆவதற்கும் இவள் தான் காரணம்..வாக்குக்கு சொல்ல முடியாத வைபவம் விரிவுக்கு அஞ்சி நிற்கிறோம் ..

ப்ரஹ்மம் -திரு மால் ஸ்ரீமன் நாராயணன் பார்வதி தேவி கேட்டு பரம சிவன் பதில் இதிலும் உண்டு.. மைத்ரேயர் -பராசரர்– மதுர கவி-நம் ஆழ்வார்–தர்ம புத்ரர் பீஷ்மர்–அர்ஜுனன்-கீதை கொடுத்தது போல..பெருமை சொல்ல விவரணம்.. திரு நாமம் சொல்லி–தாமோதரனே – யசோதை யால் கட்டு பட்டவனே/ கேசவனே ஸ்ரிதரனே என்று கூப்பிடலாம் -குழல் அழகர்..கூடும் வாய்ப்பு நமக்கு கிட்டியது ..புராணத்தில் இருக்கிறது ரிஷிகள் அருளியது..

ராமாயண கதை-இமாம்- கட்டு கதை இல்லை கட்டு கட்டாக எழுதி வைத்த கதை நடந்த இடங்கள் இன்றும் உண்டு..வால்மீகி வேத வியாசர் கிருபையால் அருளியவை..ஸ்ரீ பூ நீள ஸ்ரீ ரெங்க நாச்சியார் அலர்மேல் மங்கை தாயார் பெரும் தேவி தாயார்  அனுக்ரகம் வேணும்.. திரு நாம ஸ்லோகங்கள் 14 ஸ்லோகங்கள் தான் முன் உரை முடிவில் பல சுருதி உண்டு..

லஷ்மி திருநாமம் லஷயதே ஆனா –லஷ்யம்-தெரியும் உலகோர் லஷயமாக பார்க்க படுகிறாள்.. அடியார்களின் பாப ரூப கர்மங்களை தொலைத்து அவன் உடன் சேர்த்து வைப்பதே லஷ்யம் இவளுக்கு .புருஷ கார பூதை..மாரி மாறாத தண் அம்மலை ..வேரி மாறாத பூ மேல் இருப்பாள் வினை தீர்க்குமே ..சகல பாபங்களையும் போக்குவதே இவளுக்கு லஷ்யம்..கொண்டாட்டம் நவராத்திரி உத்சவம்..பத்தாவது நாள் விஜயன் இவளுக்கு ஒன்பது நாள்  கொண்டாடினால் தான்.. விஜய தசமி வெற்றி செல்வம்..குதிரை வாகனத்தில் ..

பர ப்ரஹ்மம்-பெரியவன் தன்னை அண்டியவரையும் பெரியவன் ஆக்குகிறான்..சீதா கல்யாணம் ஆண்டாள் கல்யாணம் ருக்மிணி கல்யாணம் போல்வன  நமக்கு தான்.. அகலகில்லேன்  இறையும்  என்று இருக்கிறாள்..விட்டு பிரியாத தன்மை- புஷ்பத்துக்கு புஷ்ப தன்மை போல..ஆத்மா-தன்மை பிரியாதது போல -ஸ்வரூப நிரூபக தர்மம்-இயற்கை தன்மை காட்டும் நிரூபிக்கும் ..நாலு காலில் இருக்கும் அடையாளம் பசுவுக்கு இல்லை..விட்டே பிரியாத தர்மம்..சங்கு சக்கர கதா தரன்-ராமன் வில் பிடித்தால் கிரீட தாரி-வன வாசம்- கண்ணன்-குழந்தை-மனிச ரூபம் என்றால் நரசிம்கர்..லஷ்மி தந்த்ரம்-விஷ்ணு புராணத்தில் உண்டு..

திரு மகளுக்கு கேள்வன்- ஸ்ரீய பதித்வம் – முதல் ஆவார் மூவரே-திரு கண்டேன் பொன் மேனி கண்டேன்..மிருகண்டு மகரிஷி இடை கழி யில் ..கண்டவர் விண்டவர் ஆக அடையாளம் காட்ட முக்ய பண்பு வைத்து ..நீல  மேக சியாமளன் ..போல்வன சொல்லாமல் முதலில் திருக் கண்டேன் ..ஸ்ரீ மகா லஷ்மி தாயாரைக் கண்டேன்.. திருவா? மாலா? புரியாத தொடர்பைக் கண்டேன்.. நெருங்கிய தொடர்பு….திருவை மாலின் திரு மார்பில் கண்டேன்.. திகழ்கின்ற  திரு மார்பில் திரு மங்கை தன்னோடும்  திகழ்கின்ற திருமாலால் ..அமர்ந்தது திருவா ?..சேர்விடம் திரு வாட்டாறு ….ஆதி கேசவ பெருமாள்..நாராயணன் மார்பில் திரு இருந்தால் என்று சொல்ல வில்லை அவள் இருந்ததால் தான் இவன் நாராயணன் ஆகிறான்..வேதாந்த ..சத்வ சிந்தனம் பண்ண போக..குண ரத்ன கோசத்தில் ஸ்ரீ பட்டர் அருளுவார்.. திரு மார்பில் சிகப்பு அடையாளம் இவள் திரு வடி கொத்தி கொத்தி .. அகம் =நான் .அகம் தன்மை பிரியாது போல ப்ரஹ்மத்துக்குத் தான் ஆகிற தன்மை அவள் அகந்தா..

தேவி உவாச -ஸ்லோகம்..அஷ்டோத்திர திரு நாமம் கேட்க ஆசை என்கிறாள்..தேவ தேவ -தேவ தேவ மகா தேவ-பேசப் போகிற விஷயத்தால் ஒளி மிஞ்சி உள்ளதாம் ..அழுது ஓடின படியால் எட்டு பெயர் சம்பு ருத்ரன் போல..அழ பண்ணுகிறவர்–கருணாகரர்–இந்த லோக வாழ்க்கை முடித்து தருவதால்..ஆழ்வார் ..தேவேச பக்த அனுக்ரக தாரக -கேட்டதை வழங்குபவர் ..

அஷ்டோத  சதம் ஸ்ரோதி இச்சாமி. ஈஸ்வர உபாச-சாது ப்ரிஷ்டம் உலகத்தோர் பயன் பெறுவார்கள் இந்த கேள்வியால்..மகா பாக்ய பிரதாயகம் பெருத்த புண்யம்  தரும் சர்வ ஐஸ்வர்யம்  கரம் புண்யம் தரும்..புலன்கள் அனுபவிக்க -மனசு ஒருங்கி ..சர்வ பாப பிரசானனம்.. அஜீர்ணம் தொலைத்து சக்கரை பொங்கல் தருவது போல..அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி ..சர்வ தாரித்ய சமனம் ..மனசு விசாலம் ஆவது தாரித்யம் போக்குவதால்..ஸ்ரவணாதிகள் மூலம் பக்தி-

பக்தி முக்தி தரும்..புக்தி முக்தி தரும்.. இவ் உலக வாழ்வும் அவ் உலக வாழ்வும் அளிக்கிறாள்..கேட்டாலே போதும்

யாம் பெற்ற பேறு பெருக இவ் வையகம்.. நாமும் சொல்லணும்..பக்தியை வளர்க்கணும். நிலை நிற்கும் சொத்து இது தான்..ராஜா வசய கரம்-ராஜாவையும் வசப் படுத்தும்..திவ்யம்-பிராக்ருதம் இல்லை..அப் பிராக்ருதம் குஹ்யாத் குஹ்ய தமம் – நுண் பொருள்களில் நுண்ணியது

பரம்-மிக சிறந்தது நித்ய தாயகம்-நித்ய படி கொடுக்கும்.. தேவர்களுக்கும் துற லாபம் ௬௪கலைகல் உண்டு ஆய கலைகளும் சொன்னவர் பெறுவார் பத்மம் தொடக்கமாக .நவ நிதிகள்..குபேரன்/மகா பத்மம் சங்கம்.. நீளம் கர்வம் போன்றவை..வராந்தானம் வரம் -கர்வம்-சமஸ்த தேவ-எல்லா தேவர்களால் நித்ய படி உச்சரிப்பார்கள் அணிமா முதலிய எட்டு சித்திகளையும் கொடுக்கும்..அணுவாட்டும் /மகிமா/பெரிய உரு/லகிமா லேசாக கரிமா பாரமாய் ஆகி கொள்வது….பிராப்தி-அடைதல் பிராகாம்யம் -எடுத்த செயலை நிறை வேற்றுதல்..ஐந்து வினாடிக்குள் போக ஆசை .வஸ்து கிடைத்தல் வேற ஆசை நிறை வேறுதல்/ வசித்தல்-புலன்கள் வசப் பட்டு இருத்தல்..வசித்வம்..ஈசித்வம்-அனைவரையும் ந்யமித்தல்–அஷ்ட மகா சித்திகள் கிடைக்கும்..

வினயம் வளர்த்து கொள்வது அணிமா/ குணத்தாலே வளர்வது மகிமா/ ஆனந்தமால் மனசு லேசு பக்தி மிக்கு ஆகி பெருத்து../கிருஷ்ண பக்தி அனுபவிக்க கோவர்த்தனம் பெரிசாகி பிருந்தாவனத்தில் இருந்தது கரிமா/கிம் அர்த்த ..எத்தனை சொல்லி என் /..தேவி பிரத் யட்ஷமாக நிருத்தும்… தவ பரித்ய ஆசை உடன் கேட்டதால் சொல்கிறேன்..நன்றாக மனசில் ஒரு நிலை படுத்தி கேள் ..நின்றவா நில்லாத நெஞ்சு..தேவதை -மகா லஷ்மி..பீஜம்-கிலீம் விதை என்கிற பதம் சக்தி-புவனேஸ்வரி-பெரிய பிராட்டியார்.. அங்கங்களால் கரங்களால் வைத்தல்-இதிகாச புராணங்களில் விளக்க பட்டு உள்ளன ..த்யானம்..பண்ண வேண்டிய முறை..எந்த உருவத்தோடு என்று.. வந்தே வணகுகிறேன் பதம கராம் திரு கைகள் பத்மம் போலபத்மமும் தாங்கி இருப்பாள் .. மென்மை நறுமணம் விசாலம் குளிர்ந்து இருக்கும்/ பிரசன்ன வதனாம் புன் சிரிப்பு உடன் சேவை..மூக் குத்தி மறைக்கும் குனிந்து செவிக்கணும் வினயத்துடன்..மந்த காசம்..வதனம் இதழ்களை மட்டும் இல்லை திரு முகமே காட்டும்.. வந்தானே என்ற ஆனந்தம் இவளுக்கு காந்த ஸ்மிதா..ராமன்-ஹனுமான் இடம் சொன்னான் வாய் விட்டு சிரித்தாள் கோதாவரி நீச்சல் போட்டி..

கொவ்வை பழம் போல சிரிப்பு…சொவ்பாக்யதாம் எல்லா மங்களங்களையும் தருபவள்.. அவனையே தருவதால்.. பாக்யதாம்.. லோக பாக்யமும் அளிக்கிறாள்..இரண்டு திரு கைகளால் அபயம் அளிக்கிறாள்..திருவடியில் சரணா கதி பண்ணு/ இடது திரு கை முதலில் சரண் பண்ண சொல்லும்.. அபாய பிரதாம்..மணி கணிர்-மணி கூட்டங்கள் -நானாவித-பல தரப் பட்ட..கற்று கறவை கணங்கள் பல.. எண்ணியே முடிக்க முடியாது. பூஷிதாம்-அணிகலன்கள் கடாஷத்தாலே சுக்ரீவதாதிகள் சேர்ந்தார்கள் பெருமாள் இடம்…நூபுரம் கண்டு இளைய பெருமாள் நித்யம் பாதாரவிந்தம் சேவித்து கண்டது..பக்தாபீஷ்டாம் பல பிரதாம்..சதா சக்தி.. பக்தர்கள் ஆசை பட்டு கேட்டவை அளிகிறவள் ..ஹரி ஹர ப்ரஹ்மாதிகளால் சேவிதாம்–சிவன் பிரம தாசர்கள் விஷ்ணு பத்னி ஜகத் ஈஸ்வரி என்பதால்….பகவான்-பிரணயித்வத்தால் காந்தன் போக ரசத்தால்..தாஸ்யம் இல்லை..இயம் சீதா -ஸ்லோகம் போல இவள் கையை கையால் பிடி காளை கையால் அப்புறம் பிடிக்கலாம் அந்தரங்கத்தில்..பார்ச்வே அருகில்  பங்கஜம் .சங்க பத்மம் பத்ம நிதிகள் சக்தி உடன் இருக்கிறாள்..

நெஞ்சில் நிறைந்து இருக்கிறாள். இந்த உருவத்துடன்..சரிஜித நிலைய-கொண்டாடுகிறோம். பிரசீத அருள் புரியணும்.. சரசிஜா நிலைய- பொய்கை தாமரை வாசஸ் ஸ்தலம். தாமரை போல் அழகிய கை தவள வெண்மை ..சோபை .கந்தத்துடன் கூடிய மாலை அணிந்து பகவதி ஆறு குணங்கள் கொண்டவள்..ஹரி வல்லபே-மனோக்ய-மனத்தை அறிந்தவள்..அடியவர் கேட்பதை அறிந்து கொண்டு கேட்பதற்கு முன்..திரு புவன பூதி மூ உலகத்தையும் செல்வ செழிப்புடன் செய்பவள்…பிரசீதி =வணங்குகிறோம்..

தருமவரும் பயனாக திரு மகளார் தனி கேள்வன் பெருமை உடைய பிரானார் இருமை வினை கடிவாறே…அவள் அருகில் இருந்தால் அருள் புரிவான்..

வித்தகனே நின் அபயம் என்று காகாசுரன் விழ இவள் சன்னதியாலே பிழைத்தான் ..பிள்ளை அபசார பட்டான் என்று ..
கிருபையால் ஷமித்தான்,,அவள் சந்நிதியும் அசந்னதியும்  முக்ய காரணம்.. ஓவியத்து எழுத ஒண்ணா வுருவத்தாய் – வாலி கொண்டாடுகிறான் பிராணன் போகும் பொழுது உண்மை சொல்லி ..இருப்பதை இருக்கு என்று சொல்ல நாக்கு போதாது ..ஸ்தோத்ரம் பண்ணவே முடியாது..ஆவியை  சனகன் பெற்ற அன்னத்தை .. அமுதில் வந்த …தேவியை பிரிந்தனை ..நீ திகைத்து  செய்த செய்கை..ஆறு சமாதானங்கள் உண்டு.. நீர் பூத்த நெருப்பு போல கல்யாண குணங்கள் மறைந்து கர்ம பலன் அளிப்பான் ..முதல் மூன்று ஸ்லோகங்களால் ..  8  /12/ 9 திரு நாமங்கள்..

பிரக்ருதிம்   நமாமி-வினை சொல் வணங்குகிறேன்.. இவளை ..இரண்டாவது வேற்றுமை உருபில் அமைந்து உள்ளது..விஷ்ணு .சகஸ்ர நாமங்களில் பிரதம விபக்தி முதல் வேற்றுமை உருபில் நமாமி வராது.. பிரக்ருதியாகவும்  விக்ருதியாகவும் இருக்கிறாள்….இயற்க்கை என்ற அர்த்தமும் உண்டு..மூல பொருள்களுக்கு இரண்டும்.. உபாதான காரணம்.. மண் பானைக்கு மண் போல சங்கிலிக்கு தங்கம் போல..அது பிரமம்..தபஸ் பண்ணி அடையாளம் சொல்ல போனால் உருவாகுவது எதில் இருந்தோ/இமானி பூதானி….ஜகத் காரணம்..மூல பிரகிருதி வைத்து பண்டம் பண்ணுகிறார்..அடி படை பொருள்களுக்கு மூல பொருள்..பிரகிருதி மாறுதல் அடைந்து பிராக்ருதம் ஆகும்.. பிரஜைகளை பஹுச்யாம் ஸ்ருஷ்ட்டிக்க சங்கல்பம் பண்ணி கொண்ட பின்பு ..அசித் தத்வம் ஞானம் இல்லாதவை..அந்த பிரக்ருதிக்கு அபிமானி தேவதை இவள் ஆனந்தத்துக்கு செய்கிறான்..காரணம் காரியமு உண்டு அப்புறம்.. பிரகிருதி தாய் இல்லை விக்ருதிமாறுதல் அடையாது.. மூன்றும்/ மூல பிரகிருதி/மகான்/அகங்காரம்/ சாத்விக – ஞான கர்ம இந்திரியங்கள் /மனசு பிறக்கும்..ராஜச /தாமஸ்-பூதாதி தன்மாத்ரிகள்..விக்ருதி ௨௧மொத்தம் 24 தத்வங்கள்..சித் 25th தத்வம் ஈஸ்வரன் 26 th  எண்ணிலும் வரும்..சுலபன்..21 விக்ருதிகள்  -மனசு நியமனம் பண்ண பிரித்வி-கந்தம்-மூக்கு – தண்ணீர்-ரசம்-வாய்  தேஜஸ்-ரூபம்-கண் / வாயு /தோல் ஸ்பரிசம் ஆகாசம் -சப்தம்-காத்து ..தன மாத்ரிகளும் பூதங்களும்..ராஜச அகங்காரம் என்ன பண்ணித்து ?மேற் பார்வையாளர் போல..இரண்டும் சரி வர செய்கின்றனவா என்று கோர்த்து விடும்..

வித்யாம் -பிராட்டி உபாதான காரணமா ? தாயாரை பிரகிருதி விக்ரதம். புருஷ பிரசவம் வைதிகத்தில். எனக்கு தாயாய் தந்தையாய் ஆழ்வார் பாசுரம்..ஜகத்துக்கு அவனே காரணம்..அவன் அவளுக்கு தான் செய்கிறான்..நம் வசம் இல்லை..அவள் ஆனந்தத்துக்கு செய்கிறான்.. அவளின் புருவ நெரிப்பு பார்த்து செய்கிறான்..சங்கல்ப்பித்து ஸ்ருஷ்டிகிறான்..நிரந்குச ச்வாதந்த்ரம்..அங்கீகாரம் பண்ண இவள்..புருவ கொடியால் புன் சிரிப்பு காட்டி அங்கீ காரம் பண்ணுவாள்..கால சக்கரத்தாய் தமியேற்கு அருளாய் -பிரமம்-அவாக்யி அனாதரகன் -அவனையும் கரைந்து உருக வைப்பாள். அம் கண் மா ஞாலம் படைத்ததும் புது உணர்ச்சி பெறுகிறான்..நம் நன்மைக்கு செயல் படுகிறாள் என்ற நினைவால் உருகி இருக்கிறான்..பிராட்டி பிரஜைகளுக்கு தான் இருக்கிறாள்..அவாப்த சமஸ்த காமன் இருவரும்..புரு பங்கமே பிரமாணம் ..தார தம்யதுக்கு அவள் புருவ நெருப்பே பிரமாணம்

ஹரி ஹர  பிரம்மாதி சேவிதாம்– காதலுக்கு தக்க படி சேவிகிறான்..ஆண் மயில் பெண் மயிலை பார்த்து தோகை விரித்து ஆடுவது போல..

புருஷ பிரசவம்..திரு புவன சம்பத்துக்களும் -நஷ்டம் அவள் பார்வை-கடாஷம்- படா விடில் ஆளவந்தார் சதுச்லோகியில் அருளியது போல

கருணை அமுத வெள்ளம் ஈஷத் ஒரு துளி தெளிக்க ..புத் உணர்ச்சி பெற்றதாம் ..தண்ணீர் தெளித்து பூ காரி -உலர்ந்த புஷ்பம் பளிச்சு என்று ஆவது போல..தத் இங்கீத பராதீனகன் ..நினைகிரதை புரிந்து நடக்கிறான்..வித்யாம்- மாதவ -மூன்று இடத்தில் மா=விதியை பரப்புபவன்..மகா நவமி வித்யையுக்கு அபிமானி தேவதை கற்கின்ற நூல் வலையில் பட்டு இருந்த நூலாட்டி கேள்வனார் கால் வலையில்  பட்டு இருந்தேன்..வித்யா=உபாசனம் ..பக்தி யோக நிஷ்ட்டைகள்.. 32விதைகள் உண்டு..செல்வத்துக்கும் படிப்புக்கும் ஆரோக்கியம் ஆயுசுக்கும்  அவள் தான் தேவதை ..சர்வ பூத ஹிதம்  பிரதாம் -நல்லது அனைவருக்கும் அளிப்பவள். பிரியம் பிடித்தது..பகவான் மட்டும் பிரியம் ஹிதம்..

ஹிதம் தந்தை தானே தருவாள். தாய் பிரியம்…பிரியம் பேசுபவள் ஹிதம் சொன்னால் ஏற்று கொள்வோம்.. முத்தரை குத்தி வைக்க வில்லை.. கார்ய கரம் இது..ஐஸ்வர்யம் அஷர கதிம்-கைவக்யம்- பரம பதம்-குண அனுபவம் பொழுது போக்காய் இருக்கை…. வெறும் அஞ்சலி பண்ணினவர்களுக்கு கொடுத்தாலும்  லஜ்ஜை உடன் குனிந்து இருகிராளாம்..

தரும் அவ அரும் பயனாக ..தர வேற   இல்லை என்று..

பத்துடை அடியவர்க்கு எளியவன்.. பிறர்க்கு அறிய வித்தகன் மலர் மகள் விரும்பும் அரும் பெறல் அடிகள்..சர்வ பூதங்களுக்கும் அவன் திருவடிதானே ஹிதம்.. திரு புளிங்குடி. காய்சின வேந்தன் தேவிமார்கள் திருவடி வருடி சேவை..நில மகள் பிடிக்கும் மெல்லடியை கொடு வினையேனும் பிடிக்க கூவுதல் வருதல் செய்யாயே ..அவர்கள் வருடியது நான் வருட தானே சம்சார மோஷ பலனுக்கு தானே பெற்று  கொடுக்கிறாள். ஸ்ரத்தாம்-சரத்தை தூண்டி விடுகிறாள்..

திருத்தி நல வழி படுத்துகிறாள்..சரத்தை தூண்டி விடுகிறாள்..மங்கள காரியம் செய்ய செட்கின்ற கிரிகளும் நானே என்னும்..அகம் கி சர்வ யக்ஜானாம்..ஹவுஸ் அக்னி ஹோமம் எல்லாம் அவன் தானே தூண்டுபவள் அவள் அனுக்ரகதொடு தான் நடக்கும் சீதை பிராட்டி அனுக்ரகதுடன் தான் திருவடி பிராட்டியை அசோகா வனத்தில் கண்டார்..

நான் தேடுகிறேன் அகங்காரம் திரை விலகியதும்.விபூதிம்-அத்தனை ஐஸ்வர்யமும் அவள் தான் விபிதி  அத்யாயம் 10th அத்யாயம்..சொத்து பட்டியல் சொல்லி..சொத்து அல்லாதது ஜகத்தில் இல்லை.. அதனை உடன் சேர்த்து சேவிக்க ஆசை பட்டான் விஸ்வ ரூப தர்சனம் -விபூதிமான். சுரபி-நல்லமனம் பொருந்தியவள் காம தேனு போல பிரார்த்திப்பதை அளிப்பவள் சர்வ கந்த- பகவானுக்கு நறுமணம் வுஊட்டுபவளே இவள். கந்தம் கமழும் குழலி..பரமாதிபிகாம் பரமாத்மாவின் பிரீத்திக்கு பாத்ரம் ஆனவள்.. ஏகோண சேஷித்வம்..விஷ்ணு பத்னி ஜகத் ஈஸ்வரி.. திரு வுக்கும்  திருவாகிய  செல்வா -தெய்வத்துக்கு அரசே..ஸ்ரீ சரியாக ககா-ஆளவந்தார்.. சொரூபம் அவனுக்கு..இதம்  இத்தம் ….அடையாளம்.. இன்னது இனையது என்று தெரிந்து கொள்ள.. புஷ்பம்-இன்னது வெள்ளை மனம்-இனையது..

பொருளை தெரிந்து கொண்டு பண்பு தெரிந்து கொள்வது போல தத்  பிரமம் எப் படி பட்டது.. இவையும்….மெது மெதுவாக இடுப்பில். தலையில் ஏறி உட்கார்ந்தான்..ஆகியும் ஆக்கியும்  காக்கும்/படைத்து காத்து சம்கரித்து//அவையுள் தனி முதல் /எம்மான்/கண்ணா பிரான்/ஏன் அமுதன்/சுவையன்-எட்டு குணங்களை அருளி- எங்கு தெரிந்து  கொண்டார்- திருவின் மணாளன்-அவள் இடம் கற்று கொண்டு பெற்ற குணங்கள் ..அதனால் தான் பரமாத்மிகாம்..அவனை பரமாத்மாவாக ஆக்குபவள்..சிருஷ்டிக்க வில்லை பாபத்தாலே நீர் பூத நெருப்பு போல மறையும்.. கிளறி அவன் கல்யாண குணங்களை காட்ட அவள் வேணுமே….திருவின் மணாளன் என் உடை சூழல் உளானே ..

தலை சாயுமாம் ச்வாதந்த்ரம் தலை எடுக்குமாம்கல்யான குணங்கள்..ஜொலிக்கும் ஹவிசில் ஹோமம் பண்ணனும்..வூது குழலால் வூதணும். கோபம் மூட்டவும் தெரியும் குறைக்கவும் தெரியும்.. குனச்டாளி இருந்தால் தானே பர மாதமா..அடுத்த ஸ்லோகம்..வாசம் -வாக்குக்கு அபிமாநினி தேவதை..ஓம்காரத்தில் உ காரம் இவளே தான்..அ காரத்தால் விஷ்ணு..அனந்யார்கம்-சொல்லும்..உதாரணம் பண்ண பட்டதால் திரு மார்பிலும் வராக பெருமாள் பூமி பிரதியை உதாரணம் பண்ணினது போல வாக்கு =வேதம் தானே.. வேத சொற்களே அவள் தான்..

நேர இழையும் -ஓம் பிரணவம் கால் வைத்து நடந்தது போல .ஸ்ரீ வில்லி புத்தூரில் மூவரும் ஒரே சிம்காசனம் ரெங்க மன்னார் பிராட்டி கருடன் ஓம் கார பீடம்..மாதவன் என்று ஓத வல்லீரேல்..  மாதவன் பேர்   சொல்வதே ஒத்தின் சுருக்கு .ம =பெரிய பிராட்டி அவளுக்கு சுவாமி.  எனபது தான் வேதத்தின் சாரமே சரிய பத்திதவம்..பத்மாலயாம்-இருப்பிடம் தாமரை..லஷ்மி லலித கிருகம்-பட்டர் வாய்த்த பெயர் அவனின் திரு மார்புக்கு ..பத்மத்தில் ஆசை குறைந்து அவர் திரு மார்பே பத்மம் தானே..

மானே நோக்கி மடவாளை  மார்பில் கொண்டாய்/பதமாம் தாமரை போன்ற அழகு மென்மை குளிர்ச்சி கொண்டவள்..சுசிம் -பாவனத்வம் புனித தன்மை சுசி ருசி /சேர்த்து சொல்வார்கள்..

பாரதந்த்ர்யம் ஆகிய சுசி/ கடி மா மலர் பாவை போல பராங்குச நாயகி .சேஷ பூதை… இரண்டாவது தடவை பிரிந்து சீதை பிராட்டி காட்டி கொடுத்தாள்..சவாக சுதா அக்னி-இரண்டு மனைவிகள் தேவதைகள் பித்ருகளுக்கு போகும்-அபிமாநினி தேவதை/ சுதாம்- அமிர்தமாகவும்..இருக்கிறாள்..வராத எல்லாம் வந்ததே-கூரத் ஆழ்வான்-பார் கடலில் இருந்து அப்ஸ..குதிரை யானை விஷம் வைத்தியர் தன்வந்தரி வஸ்துகள் வந்தனவே..தந்யாம் -செல்வம் கொடுப்பவள் செடியார் ஆக்கை தீர்க்கும் ..ஹிரண்மயீம்-பொன் நிறம் படைத்தவள் மின்னல் வெட்டினது போல மேகம் அவன் நடுவில் மின்னல் அவள்..

அழகன் அலங்காரன் அவன்..பிராட்டியும்  ஆபரணம் தான் -திரு ஹார மார்பன் திருவே ஹாரம் தான் -செய்யாள்–திரு கண்கள் சிகப்பு பார்த்து இவள் சிகப்பு..கண்ணும் திரு மேனியும் ஒவ் ஒன்றாலும் வர்ணம்-நெருக்கும்..விட்டு பிரியாமல் பார்வையால் பருகி இருக்கிறார்கள்/ லஷ்மீம்/நித்ய புஷ்டாம்-தான் நிறைய செல்வம் உடையவள்/இரவு பொழுதுக்கு அபிமானி தேவதை சப்தாதி விஷயங்களில் புத்தி போகாத படி இருட்டு அடிப்பவள் ..அதிதிக்கும் திதிக்கும் நிர்வாகம் இவள்..பேத புத்தி இருப்பவள் திதி அசுரர்/காச்யபர் மனைவிகள்..49 மருத்துகள் பிறந்த கதை..பும்சவன விரதம்..

வெந்நீருக்கு தண்ணீர் வேணும் ..கோபம் ஆற்ற இவள் வேணும்..கோபம் அற்றவள்..இருந்தால் தான் காரியம் செய்கிறான்..தீப்தாம் தன்னை தானே வெளிபடுதுகிறாள் பூமி பிராட்டியாக இருக்கிறாள்..கருணை வசுதா..நிழல் போல மண் மகளும் ஆயர் நப்பின்னையும் ..நிஜம் முக்யமா நிலம் முக்யமா ? வெய்யிலுக்கு நிழல் வேணும்..திரு தோள் கீழ் இருந்தால் நிழல் வாசு தாரிணி செல்வம் அடைந்து இருக்கிறாள் சூர்யன் போல ஒழி படைத்தவள் கமலாம்- க/ம/லாதி கொடுத்து வாங்குகிறாள் வியாபாரம் ..நம்மை அவன் இடம் கொடுத்து வாங்குகிறாள்..பெருமானை சொத்தாக தேருகிறாள் காந்தா-காந்தச்ய புருஷோத்தமா.. பர பிரியம் ஷாமாம் -காமாம் ஆசையாய் இருகிறவள் ஆசை நிறை வேற்றுபவள் .. பகவான் இடம் ஆசை  மூட்டுபவள் ..ஸ்ரீஓத  -பாற்கடலில் தோன்றியவள்..

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading