33 rd ஸ்லோஹம்..
அப்ஜபாதம் அரவிந்த லோசனம்
பத்ம பாணி தலம் அஞ்சனபிரபம்
ஸுந்தர உரு புஜம் இந்திரா பதிம்
வந்திஷ்ய வரதம் வநாத்ரிகம்
திவ்ய மங்கள விக்ரஹ அனுபவத்தில் தோள் மாற
நினைத்து அடி இடுகிறார்..
அப்ஜம் அரவிந்தம் பத்மம் பத பேதம் அர்த்த பேதம் இல்லை ..
கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும்
அரவிந்தம் -திரு நெடும் தாண்டக பாசுரம் போல
செந்தாமரை தடங்கண் செங்கனி வாய் செங்கமலம்
செந்தாமரை அடிக்கள் போல ஒரே சொல்லை இட்டு சொல்லுவதும் உண்டு
எங்கனே சொல்லிலும் கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை ஒவ்வா ..
இவரே அப்ஜம் நே கதம் நிதர்சனம் என்பார் மேலே..
பத்ம பாணி தலம் என்று கை தலத்தையும் பாணி தலத்தையும் உடையவன் -பத்ம ரேகையை சொல்லி ..பத்மத்தை தரித்தவன் என்னுமாம் ..
செம் பொன் இலங்கு ..ஒண் மலர் பற்றி பெரிய திருமொழி 2-8-3/
அஞ்சனா பிரபம் -அஞ்சனா வண்ணனை /அஞ்சனம் புரியும் திரு உருவனை போல
இந்திரா பதம் -திரு மகளார் கேள்வன்
வநாத்ரி வரதம் வந்திஷ்ய -ஹஸ்த கிரி வரதன் வநாத்ரியில் சேவை சாதித்து அருளுகிறான் ..நாவாய் உள்ளானை நறையூரில் கண்டேனே என்றும் தேன் கொண்ட சாரல் திரு வேங்கடத்தானை நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே என்றும் நின்ற வூர் நித்திலத்தை கண்டது நான் கடல் மலை தல சயனத்தே போல..
பாட்டு வாங்க கதவு பின்பு போய் நின்றார் திரு நின்ற பெருமாள் ..நாச்சியார் தூண்ட ..அவரையும் இவரையும் சேர்ந்து சேவித்தேன் என்கிறார் /வட தள தேவகி ஜடரவேத சிகர சடகோப வாக் ..வரதம் பிரணதார்த்தி -பட்டர்–/மூலம் திரு மங்கை ஆழ்வார் தான் நீண்டு உருண்டு அழகிய தோள்கள் உடைய இந்திரா பதி -அணைத்து கொண்டு இருக்கிற அழகு /தேவ தேவ திவ்ய மகிஷி ..
தாமரை ஒத்த அவயவங்கள்/அஷ்ட பூஜை பெருமாள் திரு கையில் தாமரை புஷ்பம் கொண்டு இருப்பது போல/திரு சேறை அபய ஹச்ததில் தாமரை பிடித்து கொண்டு இருப்பது போல /மூன்று தாமரை வேறு சப்தம் /வெவேறு அவயவங்கள் . அப்ஜ- அப்பு தண்ணீர் அதில் தோன்றிய தாமரை /அடி தளமும் தாமரை ye அங்கயமும் பங்கஜமே- சேற்றில் பிறந்த செந் தாமரை -இது நாலாவது சொல்/அப்ஜம் அரவிந்தம் பத்மம் இங்கே சொல்லி இருக்கிறார் ..ஆஸ்ரிதர் அடியார் கண்டு மலரும் அடி தாமரை /ஆசன தாமரை தோற்று தலையால் வாழ் நாள் முழுவதும் தூக்கி வைத்து இருக்கிறது / தாவி வையம் கொண்ட தடம் தாமரை ஒத்த திருவடிகள் என்று சொல்ல வில்லை ..நெருக்கம் இரண்டுக்கும்..புஷ்ப ஹாசம் இவை/ பட்டு என்ன ஆஹும் என்று பாதுகை பயப்படும் / பரதன் பாதிகை நினைவு வூட்டும் /ரெங்க நாத மணி பிரபாவம் சொல்ல இயலாது.. தாமரை கண் கமல கண் ..அடிக்கடி அருளி செயலில் வரும்..கம்பீராம்புச ..புண்டரீ காஷ….தடிமனமான பச்சை நாளுடன் சூரியனால் மலர்ந்து .கரிய வாகி புடை பறந்து -பெரிய வாய கண்கள் …பங்கய கண்கள் என்கோ-முதல் உறவு செய்த கண்கள்.. ஜிதந்தே புண்டரீகாஷன் பிரமன் ..தோற்று நின்ற உடன் கூப்பிட பவள செவ்வாய் .விழ திரு வடிகள்…அஞ்சன வண்ணன் என்கோ ..திரு மறு மார்பன் என்கோ சங்கு சக்கரத்தான் என்கோ பல்லாண்டு பாட ஆழ்வார்கள் உண்டு ..
மறக்கும் என்று செந்தாமரை கண்ணோடு.. மறக்காமல் இருக்கிறான் ..மறப்பற என் உள்ளே மன்னினான் ..கமல கண்ணன் என் கண்ணில் உள்ளான் ..தாமரை கண்ணோடு கண்ணுக்குள் வந்தான் காண்பான் அவன் கண்களாலே.. நோக்கும்/ தாமரை கண்களால் நோக்காய் -அரையர் ஐதீகம் ….தாமரை பூ போல செங்கண் சிறி சிறிதே ..காண வந்து என் கண் முகப்பே தாமரை கண் பிரள-கடல்அலை போல ..உஊடல் திறத்திலும் தாமரை கண் என்பார் –அழித்தற்கு நோற்றோம் என்பார் ..உன் தாமரை கண்ணாலும் செவ் வாய் முறுவலும் ஆகுலங்கள் செய்யவே நோற்றோம் ..தாமரை கண்கள் சேவித்ததும் தொலை வில்லி அரவிந்த லோசனனை-கொண்டு புக்கு -பலி கொடுப்பது போல .செங்கண் பிரான் இருந்தமை காட்டினீர் .. அன்று தொட்டும் ..கண்ணை மட்டும் விலக்கி பார்ப்பாலாம் /தாமரை கண்ணன் என்றே தளரும்.. கோல செம் தாமரை கண்னருக்கு இழந்தது சங்கே ..கோபத்தாலும் தாமரை கண்ணால் பார்கிறான் ..இணை கூட்ற்றன்களோ அறியேன் ..சூழ தாமரை -அம்புஜா பத்ர நேத்ர-பீஷ்மர் அருளியது..தர்ம பக்கத்தில் இருந்தும் தர்ம சந்தேகம் பஞ்ச பாண்டவர்கள் ..மே ராமக ராஜீவ லோசனஹா-தசரதன் வாக்கு ..அஹம் வேத்மி..உனக்கு தெரியாது உன் ராமன் என்கிறாய் ..
எதற்கும் தாமரை கண்கள்/இடது திரு கை கடி கஸ்தம் முழங்காலை தொட்டு காட்டும்..வலது திரு கை அபய வரத ஹஸ்தம்/மைப்படும் திரு மேனி /மை வழித்து ஈஷிக்கலாம் பக்தி தான் மை /லக்ஷ்மி சம்பந்தத்தால் விரிந்து அகன்ற திரு தோள்கள்
34th ஸ்லோஹம்..
கநக மரதக அஞ்சன த்ரவாணா ம்
மதந சமுத்தித சார மேலநோத்தம்
ஜயதி கிமபி ரூபமஸ்ய தேஜ:
வநகிரி நந்தந ஸுந்தர வுரு பாஹோ:
திவ்ய மங்கள விக்ரகத்தின் லாவண்யத்தில் ஈடு பட்டு பேசுகிறார் கிம் அபி ரூபம் – ஒரே பதமாக கொண்டு அநிர்வச நீயமான ரூபம் என்றும் இரண்டு பதமாக கொண்டு தேஜோ மயமான ஓர் உருவம் திகழ்கின்றது என்றும் கொள்ளலாம் ..அது எப்படி பட்டது என்றால் கனகம் மரகதம் அஞ்சனம் இவற்றை உருக்கி , அந்த த்ரவத்தை தனி தனியே மதனம் பண்ணி -புடம் போட்டு -வெளிறு கழித்து சாரத்தை திரட்டி -வடி கட்டி -ஓன்று சேர்த்தல் போல திவ்ய மங்கள விக்ரக லாவண்யம் உள்ளதாம் ..மூன்று தாழியிலே தயிரை நிறைத்து கடைந்து சாரமான வெண்ணெய் திரளுமா போல ..
லாவண்யம் -மிக உயர்ந்த ரூபத்தின் தேஜஸ் விளங்குகிறது ..ரிக் யஜுஸ் சாமம் மூன்று தயிர் தாழி கடைந்து கலந்து /பிரணவம் வந்தது போல ..மந்திர பிரயோக கீதை பிரதான்யம்-வாச்யம் தான் அழகன் ..அவன் திரு மேனிக்கு மூன்று தயிர் தாழி ..ஸ்வர்ணம் /மரகத பச்சை கல்/ அஞ்சன மை ..சாற்றை எடுத்து கலந்து /மதனம் -கடைந்து ..கோது கழித்து ..சாரங்களை கலந்து கிடைத்தது அவன் திரு மேனி…மயூர கண்டம் மயில் கழுத்தில் தங்கம் பச்சை நீலம் கலந்து இருக்கும்..சாயல்..அஷ்டா பதம்–தங்கத்தில் – எட்டு வகை உண்டு..நாவல் பழ நிறம் உயர்ந்த தங்கம்.. அ காரம் மேன்மை-பரத்வம்-கனகம் /உ காராம் பிராட்டி அழகு-சௌந்தர்யம் -மரகதம் /ம காரம் அழுக்கு படைத்த நாம் – எளிமை-சவ்லப்யம்-அஞ்சன மூன்றும் காட்டும் திரு மேனி -மாலே மணிவண்ணா ஆலின் இலையாய் – உயர்த்தி அழகு ஒளி படைத்தவன் குளிர்ந்தவன் -கனகம் -செய்யாள் /மரகத பாசி தூர்த்து கிடந்த பார் மகள்பூமி பிராட்டி/ நீலா தேவி கரு நீலம் மூவரும் சேவித்து த்ரவமாக ஒட்டி கொண்டு இருப்பார்கள்/
35th ஸ்லோஹம்….
கிம் நு ஸ்வயம் ஸ்வாத்மா விபூஷணம் பவந்
அஸா வழங்கார இதீரிதோ ஜநை,
வர்திஷ்ணுபாலத்ருமஷண்டமண்டிதம்
வநாசலம் வா பரித: பிரசாதயந்:
அழகனுக்கு அலங்காரன் என்ற திரு நாமும் உண்டு
–பல பல நாழாம் சொல்லி பழித்த சிசுபாலன் தன்னை அலை வலிமை தவிர்த்த அலங்காரன் மலை –திரு மால் இரும் சோலை அதே -பெரியாழ்வார் –
-இந்த திரு நாமம் வர ஆராய்ச்சி செய்து அருளுகிறார் இதில்.
.ஆபரணாதிகளால் அழகு பெற வேண்டாதே தனக்கு தானே அலங்காரமாய் இருப்பது பற்றி /
அன்றிக்கே -வளர் இளம் பொழில் சூழ் மால் இரும் சோலையை சுற்றிலும் அலங்கரிப்பது பற்றியோ ..
வராத ராஜ ஸ்தவத்தில் -கர்ணிகா தவ கரீச ! கிமேஷா போல..
ஸ்வயம் ஸ்வாத்ம விபூஷணம் என்றும் வனகிரி விபூஷணம் என்றும்..
வர்திஷ்ணுபாலத்ருமஷண்டமண்டிதம்
வநாசலம்-வளர் இளம் பொழில் சூழ் மால் இரும் சோலை..
அலங்காரன் மொழி பெயர்ப்பு…வளர்-வர்திஷ்த்து / இளம்-பால/ பொழில்-வளர்ந்தும் இளமையாகவும் உள்ள மர கூட்டங்கள் சூழ் மால் இரும் சோலை -ஸ்வயம் அலங்காரன் தனக்கு தானே அலங்காரன் /அல்லது வநா சலத்துக்கு அட்டிகை சாத்தினது போல இருப்பதனால் ..அலம் போரும்/ அலங்கார தளிகை -கலந்த பிரசாதம் ..அன்னம் போட்டு திரும்ப சாப்பிட முடியாது /அலம் புரிந்த நெடும் தட கை /அன்னத்துக்கு அலம் என்ற பெயர்/ தன அனுக்ரகம் தந்த பின்பு மற்ற வற்றில் அலம் புத்தி மற்று ஒன்றை காணா என்று வைப்பான்
36th ஸ்லோஹம்….
சுகச்பர்சைர் நித்யை: குஸு மாஸு குமாராங்க ஸுகத்தை
சுசவ்கந்த்யைர் திவ்ய ஆபரண கணை திவ்ய ஆ யுத கணை:
அலன்கார்யைஸ் சர்வைர் நிகதிதம் அலங்கார இதி ய:
சமாக்யானம் தத்தே ஸ வணகிரி நாதோச்து சரணம்
நிஷ்கர்ஷமாய் அலங்காரன் அவன் என்கிறது இதில் விதர்க்கமாய் முன் அருளினார்..கிரீட மகுட சூடாவதம் சாதி திவ்ய ஆபரணங்களாலும்
சுதர்சன பாஞ்ச சந்நிதி திவ்ய ஆயுதங்களாலும் அலங்காரம் பெற்று இருப்பதனாலே அலங்காரன் ..அவனே நமக்கு தஞ்சம்..
சுகச்பர்சைர்—-மெத்தேன்றும்
குஸு மாஸு குமாராங்க ஸுகத்தை– புஷ்ப ஹாச சுகுமாரங்களான பாதாதி கேசாந்தர
அவயவங்களுக்கு கரு முகை மாலை போல இனிமியை தரும் படியான
சுசவ்கந்த்யைர் — லோக விலக்ஷணமான திவ்ய பரிமளம் பொருந்தியவை
அலங்கார்யைஸ் –திரு மேனிக்கு சோபாவஹங்களாய் இருக்கும்
சகல திவ்ய ஆபரணகணங்களாலும் சகல திவ்ய ஆயுதகணங்களாலும் தெரிவிக்க பட்டதான அலங்காரன் என்னும் திரு நாமத்தை கொண்டு உள்ள அழகர் நமக்கு தஞ்சமாக கடவர் –முந்திய ஸ்லோகத்துக்கு சேஷமாகி அலங்கார நாம நிர்வசனம் செய்தார்.
சீமாலி சரித்தரமும் /கையில் மாலை கட்டி விடுவித்த கதையும் ஆழ்வார்கள் -உன்னுடைய விக்கிரமம் ஓன்று ஒழியாமல் எல்லாம் -மா முனிகள் வியாக்யானம் ஆபரனங்களுக்கும் இயற்கையில் நறு மணம்..ஆயுதங்களுக்கும் மாலைக்கும் கந்தம் திரு மேனியில் வாங்கி கொண்டவை . ..
பிரமன் ஆத்மா ஹிரண்ய கர்ப்பம்/சேவை கோஷ்டி/ ஆயுதங்கள்/ மாலை /-ஸ்ருஷ்ட்டிக்கு பீஜம் பத்மம் ரட்ஷனதுக்கு சக்கரம் சம்ஹரிக்க கதை சங்கத்தினால் முக்தி /அந்யோந்ய ருசி போல – ஆடை வைத்து தைத்தால் போல -மெய் அமர் பல் கலன் நன்கு அணிந்தானுக்கு .. கையோடு கால் செய்ய கண்ண பிரானுக்கு என் தையல் இழந்தது தன உடை சாயல்/பொருந்தி இருக்கும் ஆபரணங்கள்..ராஜ கோபாலன் தானே ஒரு காதில் தோடு ஒரு காதில் குண்டலம் அதுவும் தனி பொருத்தம் அவனுக்கு/அழகை சேவித்து அடியார்கள் மகிழ அதனால் கண்கள் சிவந்தால் -செய்ய கண்/பாமரு மூவுலகும் படைத்த பத்ம நாபாவோ/ அளந்த பத்மா பாதாவோ/சரக்கு= புஷ்பம் வஸ்த்ரம் ஆபரணம் ஆயுதம் அநுரூபம் நிகர் அற்றது திரு ஆழி ஆழ்வான் /தாங்களாக ஒளி விடுபவர்கள் /அங்கத்துக்கு சுகம் கொடுக்கும் மென்மை கொடுப்பவைகள் வாசனை கொடுக்கும் / திரு மேனிக்கு சோபை கூட்டுபவர்கள் /திவ்ய-அபிராக்ருதம் -நித்யம் -இதனால் அலங்காரன் என்ற பெயர் உடன் அழகர் இருக்கிறான் ..உத் கோஷம் நிகதிதம் கோஷிபபார்கள் அலங்காரன் என்று .அவன் நமக்கு சரணமாக இருக்கட்டும்..அனைவரும் நித்ய சூரிகள் /பழ பலவே ஆபரணம்.. சர்வ பிரகரண யூத..
அஸ்த்ர பூஷண அத்யாயம் – விஸ்வ ரூபம் விச்வமே ரூபம் -ஆத்மா -கவ்ஸ்துபம் பிரதிநிதி /ஸ்ரீ வத்ச திரு மரு -மூல பிரகிருதி/புத்தி -கதை /சங்கம் -தாமச அகங்காரம் சார்ங்கம் -சாத்விக அகங்காரம் /சக்கரம் -மனசு/வைஜயந்தி வனமாலை முத்து மாணிக்கம் மர கதம் நீலம் வைரம் -பஞ்ச பூத ஹேது சப்த ரூபம் போன்றவை/இந்தரியங்கள் -அம்புகள்/வாள்-உறை வித்யை அவித்யை/
37th ஸ்லோஹம்….
மகுட மகுடமாலா உத்தம்ச சூடாலலாம
ஸ்வலக திலகமாலா குண்டலைஸ் சோர்த்த்வ புண்டரை:
மணிவர வனமாலா ஹார கேயூர கண்ட்யை:
துலசி கடக்க காஞ்சீ நூபுராத்யைச்ச பூஷை:
துலசி கடக்க காஞ்சீ நூபுராத்யைச்ச பூஷை:
38th ஸ்லோஹம்……
அஸி ஜல சர தாங்கைஸ் சாரங்க கவ்மோதகீப்யாம்
அகணித குண ஜாலைராயுதைரப்ய தான்யை:
ஸ்தத விதத சோபம் பத்ம நாபம் வநாத்ரே :
வுபவந சுகலீலம் சுந்தரம் வந்திஷீய .
இரண்டும் குளகம்..
திரு அபிஷேகம் /அதை சுற்றி அலங்காரமாக சாத்த படுகிற மாலை /அதன் முனையில் ஆபரண விசேஷம் -உத்தம்ச -சூடாலலாம -தொப்பாரம்.. ச்வலக மாலா ,திலக மாலா -திரு குழல் கற்றைக்கும் திரு நெற்றிக்கும் சாத்தும் ஆபரணங்கள் மகர குண்டலம் ,வூர்த்த்வ புண்டராலன்காரம்,குருமா மணி பூண் என்ன பட்ட ஸ்ரீ கௌஸ்துபம் ,ஆபாத சூடம் யா மாலா வனமாலேதி கத்த்யதே எனப் பட்ட வனமாலை, ஹார –முத்து வடங்கள், கேயூர -திரு தோள் வளைகள் , கண்ட்யை –காறை என்னும் கண்ட ஆபரணம், தண் அம் துழாய் மாலை,கடகம்-ஹஸ்த ஆபரணம் ,காஞ்சீ -திரு அரை நாண் நூபுராத்யைச்ச -திரு வாடி சதங்கை ஆக இவை முதலான திவ்ய பூஷணங்கள்..
அஸி ஜலஜா ரதான்கை -நந்தகம் என்றும் பாஞ்ச சன்யம் என்றும் சுதர்சனம் என்றும் சார்ங்கம் என்றும் கவ்மொதகி என்றும் பேர் பெற்ற /எண்ணி தலை கட்ட ஒண்ணாத குண கணங்களை உடைய மற்றும் உள்ள ஹல முசல பரசு பிரப்ருதிகலான ஆயுதங்களாலும் நிரந்தரமாக பரப்பின சவ்ந்தர்யம் உடைய அழகரை வணங்க கடவேன் ..திவ்ய ஆயுதங்களும் திவ்ய ஆபரணங்கள் போல திரு மேனிக்கு சொபாவஹமாய் இருக்கும் வைலஷண்யம் அனுபவித்தார்..
அலக- கேசா பாசம்–சு சப்தம் சேர்த்தார்..
கூரத் ஆழ்வான் திரு வடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்.
Leave a Reply