39th ஸ்லோஹம்..
ஆஜான்ஜ ச்வகந்த பாதுர கந்தலுப்த
ப்ராம்யத் வித்தகத மதுபாலி சதேச கேசம்
விச்வாதி ராஜ்ய பரிபர்ஹா கிரீட ராஜம்
ஹை சுந்தரச்ய பத: சுந்தரம் உத்த மாங்கம்
சுந்தரச்ய உத்த மாங்கம் சுந்தரம்-அழகர் உடைய திரு முடியானது மிக அழகியது
ஹை! பத! –வர்ணிக்க முடியாத அழகு –இரண்டு விசெஷணங்கள் சிறந்த கூந்தலையும் மகுடத்தையும் உடையது.
ஆஜான்ஜ-ஜன்ம சித்தமான
சவ கந்த -இயற்கையாக நறுமணம் பெற்ற –
சர்வ கந்த: என்பதால்
பந்துர-ஸ்மிர்த்தம்
சதேச-மதுபா வளிகலோடே சாமானாதி காரணமாய் இருக்கிற என்றும் சாமானமாய் இருக்கிறது என்றும் இரண்டு வகை பொருள்..முந்தின பொருளில் வண்டுகளும் கேசங்களும் உதமாங்கத்தில் உள்ளதாக /பிந்தின களி வண்டு எங்கும் கலந்தால் போல் கமழ பூங்குழல்கள் தடம் தோள் மேல் மிளிர நின்று போல..
விச்வாதி ராஜ்ய பரிபர்ஹா கிரீட ராஜம்–சர்வேச்வரத்வ சூசுகுமாய் இருக்கிற திரு அபிஷேஹம் பொங்கோதம் சூழ்ந்த புவனியும் வின் விளக்கும் அன்காதும் சோராமே ஆள்கின்ற வுபய விபூதி நிர்வாஹன் இவனே என்று கோள் சொல்லி தருகின்றதாம்
40th ஸ்லோஹம்..
அந்தம் தமஸ் திமிர நிர்மித மேவ யத் ஸ்யாத்
தத் ஸார சாதித சுதந்த்வ அதி வ்ருத்த வார்த்தம்
ஈசச்ய கேசவ கிரே ரலகாளி ஜாலம்
தத் துல்ய குல்யா மது பாத்யா மகாவனச்ய
அபூத வுவமை
-வூரேல்லாம் துஞ்சி ..நள் இரவு -மூல பிரகிருதி இருட்டு/எல்லாம்
ஒன்றி கொள்ளும் – பிதா மகி-பாட்டி இருட்டு/அசாரம் தள்ளி /நூல் ஆக்கி /இருட்டில் தோய்த்து —
கொள்கின்ற கோள் இருளின் சுகிர்ந்த இட்ட கொழும் சுருளின் உட கொண்ட நீல நல் நூல் தழை கொல் அன்று மாயன் குழல்-உபமேயம் தன்னையே சொல்ல வேணும்
-குழல் -சு தந்து –நித்தியமான மை வண்ண நறும் குஞ்சி/.முகம் திரு குழல் இரண்டும் இருட்டு முகம் தெரிய குண்டலங்கள் வில் வீசும் ஒளியில் சேவிக்கலாம்../பத்தி பேதம் பிரிக்க. இருட்டு வெளிச்சம் இரண்டுக்கும் எல்லை காட்ட/ திமிர நிர்மிதம் அந்தம் -செறிந்த இருட்டு/திரு மேனி ஒளி ஒவ்வாது..நித்ய உயர்த்தி சொன்னார்/
கம்பன் படி சொல்லும் படியோ அவன் படி என்று குழலை நீண்டு செறிந்து நெய்த்து சுருண்டு..நெடு நீலம் கடை சுருண்டு –இன்று சடையாய் இருந்தது உன்னை பிரிந்ததும் என்று திரு வடி சீதை பிராட்டி இடம் சொன்னான் .
/.சுமுகம் துர் முகி சு கேசம் தாமர மூர்தஜா செம் பட்டை ராமன் சூர்பணகை குழல் பற்றி/
கோள் இலை தாமரை -அதுவே ஆபரணம் -திரு முகம் கொடியும் பவளமும் வில்லும் மூக்கு வாய் புருவமும்/ தண் முத்தமும் தளிரும் வாயும் குளிர் வான் புரையும் சோதி வட்டங்கள் ..கொடியேன் உயிர் கொள்ள வந்தது /குழல் பின் தாள குஞ்சி .வண்டுகள் தாமரை முகத்து தேனை சாப்பிட வருகின்றனவாம் ..வண்டு ஒத்து இருக்கும் குழல் கற்றைகள் முன்னிலும் பின் அழகிய பெருமாள்–முரட்டு சமஸ்க்ரிதம் நட மாடும் வடக்கு திக்கு நிறைய அழகு காட்ட..
பராங்குச நாயகி அழகை பார்க்க முடியாமல் பின் திரும்பினாராம் ..கேசர கிரி- சிம்ஹா கிரி- கேசவன் ஹரியான ஈசனின் குழல் கற்றை – தேசம் எல்லாம் வணங்கும் திரு மால் இரும் சோலை நின்ற கேசவ நம்பி -பிரசாத்த கேச பாசம் உடையவன் தான் அழகன்..அதி விருத்த வாசம் -வுபமானத்தை விட இருட்டு
அலகாளி ஜாலம் -வண்டு ஒத்து இருண்ட குழல் கற்றை /அலக அளி அடர்த்தியை காட்டும்..
41st ஸ்லோஹம்..
ஜுஷ்ட அஷ்ட மீக ஜ்வலதிந்து சந்நிபம்
திரு தோர்த்த புண்டரம் விலசத் விசெஷகம்
பூம்நா லலாடம் விமலம் விராஜதே
வநாத்ரி நாதச்ய சமுச்ச்ரிதஸ்ரிய..
லலாடம் விமலம் குற்றம் அற்று இருக்கும் நெற்றி ..ஏறு திரு உடையானின் இந்து சநிபம் சந்திரனை ஒத்து அஷ்டமி சந்திரன் சமோகம் முக்கியம் ஆஸ்ரிதர்களுக்குள் வேறு பாடு இல்லை ..ஜுஷ்ட -செறிந்து இருக்கிற ஒளி ..சூரியன் அக்னி போல தாபம் இல்லாத ஒளி/மேல தண் மதியும் கதிரவனும் தவிர ஓடி -கொதிச்ச போன thiruvadiyai குளிர வைக்க -நம் மேல் சம்பந்தம் பட்ட அதை நம் போல் கொதிக்க வைத்தோம் .-சிசிரோத்வம் பண்ணுகிறார் தண் மதி என்று ..மேலை என்று சொல்லி கீழை கதிரவன் என்று தெரியும்…முளைத்து எழுந்த திங்கள் போல க்ஜானம் என்றார் ஆழ்வார்/படி படியாக கைங்கர்யம் பெற ..ஆர்த்தி அதிகார பூர்த்தி ..சூர்ய துல்ய யாதாத்மா க்ஜானம்.-நாயனார் நமக்கு …மயர்வற மதி நலம் அருளிய அவர்களுக்கு அப்படி/உபய பட்ஷ அஷ்டமி சந்திரன் போல /திரு குழல் சோதியாலே ஒரு பாகம் இருளோடு சேர்ந்த அஷ்டமி சந்திரன்..
திரு தோர்த்த புண்டரம் விலசத் விசெஷகம் பூம்நா லலாடம் விமலம் விராஜதே வநாத்ரி நாதச்ய சமுச்ச்ரிதஸ்ரிய: சோ திருத வோர்த்வ புண்டரம் -திரு கால் ஆண்ட பெருமான் -தனக்கும் ரட்ஷகம் சகடாசுரனை அத்தால் கொன்றானே ..தன திரு நாமம் தானே தரித்தான் ..ரசமான திரு நாமத்தை தானே சாத்தி கொண்டான் ..கஸ்துரி நாமம் அழிகிய பெருமாள் ..சந்திரனில் கருப்பு இருக்குமே அது இல்லாமல் விமலன் .காண்மின்கள் அன்னையர்காள்-என்று காட்டும் வகை அறியேன்–அவர் காட்டிதான் காணனும்..வெண் திங்கள் கொல் நயன்தார்கள்க்கு நச்சு நுதல்..
42nd ஸ்லோஹம்..
சுசாறு சாபத்வய விப்ரமம் பருவோ:
யுகம் சுநேத்ராஹ்வா சஹச்ரபத்ரயோ:
உபான்தகம் வா மதுபாவலீயுகம்
விராஜதே சுந்தரபாஹு சம்ச்ரயம்
திரு புருவ வட்டங்களை வருணிக்கிறார்..
சுசாறு சாபத்வய விப்ரமம்–தன கை சார்ங்கம் அதுவே போல் புருவ
வட்டம் அழகிய பொருத்தமிலி.
சுநேத்ராஹ்வா சஹச்ரபத்ரயோ–.இவை திரு கண்கள் ஆகிற இரண்டு
தாமரை மலர்களின் சமீ பத்திலே வந்து படிந்த வண்டு திரளோ -மதுபா வலி யுக மிவ விராஜதே-போல..
வில் புருவம் -சாபம் =வில் வேணு மூங்கில் -புருவோகு த்வயம்-மது குடிக்கும் தேன் வண்டுகள் இரண்டு வரிசைகள் போல மது சாப்பிட வந்து உள்ளன ..உபான்தகம் =அருகில்..இன் உயற்கு ஏழையர் மேல் – இணை நீல் வில் கொல் -ஆத்மாவை கொல்ல-சாரங்கதால் உடம்பை கொள்ளலாம் -வளையும் வில்-வளைக்கு ஆள் இல்லை விஷயமும் இல்லை..யாரை கல்யாணம் பண்ணிக்க -பராங்குச நாயகியை கொல்ல –மன்னிய சீர் மதனன் கொல்-கரும்பு வில் போல ..மலர் அம்பால் காம தகனம் ஏற இடும் விரக தாபத்தை புருவம் எற்படுதித்து..தன கை சார்ங்கம் அதுவே போல் -புருவம் சேவிக்கும் பொழுது கையில் இருந்தது எப்பொழுது வந்தது /கையை சேவிக்கும் பொழுது புருவம் எப் பொழுது வந்தது தாமரை கண் விகசித்து போகும் எல்லை கட்ட புருவம்..கேசத்தை வரைய கருப்பு மை கொண்டு வர அதால் புருவம்
43 rd ஸ்லோஹம்..
அதீர்க்கம் அப்ரேமதுகம் ஷணோஜ்ஜ்வலம்
நசோரம் அந்த கரணச்ய பச்யதாம்
அனுப்ஜமப்ஜம் நு கதம் நிதர்சனம்
வநாத்ரி நாதச்ய விசாலயோர் த்ருசோ:
செந்தாமரை மலர் போன்ற திரு கண்கள் என்று சொல்லலாமோ என்று பார்த்து அழகர் உடைய திரு கண்களுக்கு ஒரு படியாலும் ஒற்றுமை இல்லாத வுவமை என்கிறார்
அதீர்க்கம்-நீண்ட அப் பெரிய வாய கண்கள் /இலங்கொளி சேர் அரவிந்தம் போன்ற நீண்ட கண்ணானை /நீட்சிக்கு ஒப்பு இல்லை..கண்ணை வளர்த்ததும் அனைவரையும் ஒரு மூலையில் வைத்து பிராட்டியை பார்க்க, அவள் மகிழ ,இவன் மீண்டும் விகசித்து விரிந்து மலர்ந்த திரு கண்கள்..அரவிந்தம் போன்ற நீண்ட கண்ணான் -நீட்சி அதுக்கு இல்லை
அப்ரேமதுகம் -நீண்ட அப் பெரிய வாய கண்கள் என்னை பேதைமை செய்தனவே என்னும் படி பிச்சேற்றும் திறத்துக்கு ஒப்பு இல்லை -பிரேம பிரகர்ஷம் விளைவிப்பது இவையே..
ஷணோஜ்ஜ்வலம் –எப் பொழுதும் நாள் திங்கள் ஆண்டு வூழி வூழி தொறும் அப் போழுதைக்கு அப் பொழுது என் ஆரா அமுதமே என்னும் படி நவம் நவமாய் இருக்கும் திரு கண்களுக்கு அதி ஸ்வல்ப காலமே விகாசதொடு கூடி இருக்கும் தாமரை ஒப்பு இல்லை
பச்யதாம் அந்த கரணச்ய ந சோரம்–கண்டவர் தம் மனம் வழங்கும் என்னும் படி மனத்தை கொள்ளை கொள்ளும் திரு கண்களுக்கு ஒப்பு இல்லை..பச்யதாம் வாமனன்-திரு மேனி அழகால் பறிக்கிறான் சுகம் நோக்கி அழைத்து போவான்..
அனுப்ஜமப்ஜம்-குடிலமாய் இருக்கும் தாமரை ஆர்ஜவமே வடிவெடுத்த திரு கண்களுக்கு ஒப்பு இல்லை..
அனுப்ஜம் நேர்மை இல்லை தண்டு வளைந்து பல நிறங்களுடன் இருக்கும்
வநாத்ரி நாதச்ய விசாலயோர் த்ருசோ:கதம் நிதர்சனம்–அழகர் உடைய புடை பரந்து நீண்ட அப் பெரிய வாய கண்களுக்கு ஒரு காலும் இது திருஷ்டாந்தம் ஆகாது ..ஏதேனும் ஒன்றை கூறியே போதை போக்க அப்ஜ பாதம் அரவிந்த லோசனம் பத்ம பாணி தலம் என்று கூறினார் ..ஆழ்வாரும் ஒட்டு உரைத்து இவ் வுலகு தன்னை புகழ் வெல்லாம்
பெரும் பாலும் பட்டுரையாய் புற்கென்றே காட்டுமால் என்று சொல்லியும் ஒட்டு உரைத்து புகழ்ந்தாரே போல..
அமிர்த சாகரம் போன்ற கண் பார்வையால் அழுத்துவான் முக்தர்களை..விபீஷணனை – வாக்கால் உருக்கி .பின்பு -கண்ணால் குடித்தான் ..இருக்கும் வ்யந்து-கண்டு கொண்டே இருந்தான் -பெரும் கேளலார் ஒருங்கே/ பக்க நோக்கு அறியான்..
44th ஸ்லோஹம்….
பிரச் சோத்தத் பிரேமசாரம் ருதரசசுளக பிரக்கிரம பிரக்ரியாப்யாம் விஷிப்தாலோகி தோர்மி பிரசரண முஷித ஸ்வாந்த காந்தா ஜநாபயாம் விச்வோத் பத்தி பிரவ்ருத்தி ஸ்திதி லய கரணை சாந்த க்ரியாப்யாம்
தேவோ லங்கார நாமா வனகிரி நிலையோ வீஷதாமீ ஷணப்யாம்
அம கண் இரண்டும் கொண்டு –எம் மேல் விழியாவோ என்றும் உன் தாமரை கண்களால் நோக்காய் என்றும் பிரார்த்திப்பது போல அருளுகிறார்..
தேவோ லங்கார நாமா வனகிரி நிலையோ வீஷதாமீ ஷணப்யாம்-திரு மால் இரும் சோலை மலை உறையும் அழகன் அலங்காரன் தன உடைய திரு கண்களால் குளிர நோக்கி அருள வேணும்
பிரச் சோத்தத் பிரேமசாரம்ருத ரச சுளக பிரக்கிரம பிரக்ரியாப்யாம் -சுலகம் ஆவது சிராங்கை ஒரோ குடம் கை பெரியன கெண்டை குளம் -திரு விருத்தம் பாசுரம் போல இந்த சிராங்கையில் பிரேம சாரம் ஆகிற அமுத வெள்ளம் பெருகுகிறது –பிரக்ரமம் பிரக்ரியை என்றாலும் பிரகாரம்
மோட்ஷ பிராதன்/ போகம் /ஜகத் காரணன் / மூன்றையும் மூன்று பதத்தால் அருளுகிறார்..சாரமான அன்பு பெருகி வருகிற அமிர்த ரச சுவையுடன் -கருடன் எடுத்து வந்தது அமிர்த கலசம்- எங்கோ உள்ளது இல்லை -சுலகம் -உள்ளம் கை சிராம் கை ..அதை போல இருக்கு .நாம் அனுபவிக்க உள்ளம் கையில் -அதன் அளவுக்கு தேங்கி உள்ளது திரு கண்கள் ..போட்டி இட்டு கொண்டு வளர்ந்தன வைகுண்டத்தில் இரண்டு கண்கள் போதும்..திரு பாற் கடல் கூப்பிடு இடம் குறையாளர்கள் நிறைய இரண்டு கண் போதாது மூன்று ஆனால் பெயர் மாறும் ..அதனால் வளரனும் – எவ்வளவு வளரனும்.. ப்ரஹ்மாதிகள்/ விபவதில் நிறைய / ஹார்த ரூபத்தில் யோகியர் நம் உள்ளே-உடம்பு உள்ளே இருக்கும் அழுக்கை போக்க /அர்ச்சையில் நேர் விரோதி எல்லாரும் வருவார்கள் நாடு பிடிக்க தொடங்கி காத்து அளவு நீண்டன /அடுத்து திவ்ய ஆயுத ஆழ்வார்கள் -இத்தால் தான் சங்கோடு ..தாமரை கண்ணான் சேர்த்து அருளுவார்கள் /
விஷிப்தாலோகி தோர்மி பிரசரண முஷித ஸ்வாந்த காந்தா ஜநாபயாம்–அலை எறிகின்ற கடாஷ தாரைகளால் கோபி ஜனங்களின் உள்ளத்தை கொள்ளை கொண்டவை ..தூது செய் கண்கள் கொண்டு ஓன்று பேசி என்னும் படி
..முஷித -திருடி கொண்டு போனது ..கோபிமார்கள் திரு உள்ளத்தை ..அவற்றையும் திரு கண்களில் வைத்து இருகிறானாம்..போக மாத்ரத்தில் சாம்யம் தருவான்..சம பிரதான்யம்-எட்டு குணங்களையும் கொடுத்து ..அனுபவத்தில் சாம்யம்..சரிய பதித்வதில் சாம்யா பத்தி இல்லை..
கோபிகள் கண் பார்வையால் அடி பட்டு ஓடுகிறானாம்..அவர்கள் திருவடி மண் துகளாக பிறக்க ஆசை படுவார்கள்..கோபி/கண்ணன் சேர்ந்து போக சாம்யா பத்தி தோள் உடன் கன்னத்துடன் வாய் எச்சில் பங்கு கொண்டு/ சங்கங்கள் பரையே ..கோல விளக்கு பிரார்த்தித்தாள்/ கோபிகள் பெற்று போந்தார்கள்..
விச்வோத் பத்தி பிரவ்ருத்தி ஸ்திதி லய கரணை சாந்த க்ரியாப்யாம்-சகல சரா சரங்களின் உத்பத்தி பிரவ்ருத்தி சம்ரட்ஷன சம்ஹாரங்களை செய்வதில் மிகவும் வூக்கம் உடையவை இவை…ந வேஷசே யதி ததோ புவனான்யமூனி நாலம் பிரபோ !பவிதுமேவ குத:பிரவ்ருத்தி:-ஸ்தோத்ர ரத்னம் -அவேஷன மாத்ரத்தாலே விஸ்வ உத்பத்தி பிரவ்ருத்தி சத்தி லயங்கள் நடை பெறுகின்றன ..ஆக இப் படிப் பட்ட திரு கண்களாலே அழகர் கடாஷித்து அருள வேணும் என்கிறார் ..கோபிகள் கண் பார்வையால் அடி பட்டு ஓடுகிறானாம்..அவர்கள் திருவடி மண் துகளாக பிறக்க ஆசை படுவார்கள்..கோபி/கண்ணன் சேர்ந்து போக சாம்யா பத்தி தோள் உடன் கன்னத்துடன் வாய் எச்சில் பங்கு கொண்டு/ சங்கங்கள் பரையே ..கோல விளக்கு பிரார்த்தித்தாள்/ கோபிகள் பெற்று போந்தார்கள்..அடுத்து ஜகத் காரணத்வம்-ஏகாந்த சாந்த =தடை அற்ற முயற்சி சோம்பாமல் படைத்தது அளித்து லயம் அடைவித்து /விஸ்வ -அனைத்து /உத்பத்தி பிரவர்த்தி ஸ்திதி லய /கரண = செய்வதில்..பொருள் என்று இவ் உலகம் படைத்தவன்
சாத்விகன் மது சூதனன் கடாஷதால் -அசித் /அயன -ஈஸ்வர சம்பந்தம் எப்பொழுதும் உண்டு /அநாதி காலம் அனந்தம் சாந்தம் / விலகாத சம்பந்தம் அவன் உடன்..அவித்யா சம்ஹார்தங்கள்-ஏழு படிக்கட்டுகள் நாயனார் அருளுகிறார்..ஷேத்ரம் என்று புரிந்தவன் ஷேட்ரக்ஜன்/உழப்படும் நிலமே நான் என்ற நினைவு போல உடம்பே நான்/தாமரை இல்லை தண்ணீர் போல அசித் சம்பந்தம் கஜான வான்களுக்கு/ அசித் சம்பந்தம் -அவித்யை -கர்ம -வாசனை- ஜன்ம -ரஜோ தமஸ்- அர்த்த பஞ்சச்க க்ஜானம் இன்மை -கிலேச பாஜனம்/ அயன சம்பந்தம் -சவ்ஹார்தம் -கிருபை- கடாஷம்-சத்வ குணம் -அர்த்த பஞ்சகம் -நிரதிசய வை குண்ட பிராப்தி..செங்கன் சிறு சிறிதே எங்கண் மேல் விழியாவோ -குச ஸ்தலம் -தங்கும் இடம் -அடுத்த நாள் வந்துடுவான் ..தண்டோரா போட்டார்கள் ..நாளை வதுவை என்று –நாள் இட்டு /வேட்டு போட்டு தயார் படுத்து வது போல..
ந வேஷசே-கடாஷிக்கா விடில் -பிர பஞ்சம் படைக்க படாததே -ஆளவந்தார் ..சங்கல்பம் சொல்லும் பொது ஈஷத சப்தம் சுருதி சொல்லும் -பார்த்தது -தத் யஷதே-அது பார்த்தது..யீஷனதோடு சேர்த்து -மத்ஸ்யம் போல பார்த்து பார்த்து வளர்க்கும்.சம்சாரிகளில் பக்கலில் திரு வுள்ளம் கொண்டு /கடைத்தேற ஸ்ருஷ்ட்டி/ஆசை சங்கல்ப்பம் ஆணை இடுதல் /ஆதேசம் -கட்டளை -வஸ்த்து /காரண சப்தம் சொல்லும் பொழுது ஆதேச சப்தம் .ச்வேதகேது /காரண வஸ்து தெரிந்து காரிய வஸ்து அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம் ..எது கொண்டு சங்கல்பம் வெளி படுத்துகிறான் கடாஷித்து தான் ..அதனால் ஈஷன சப்தம் இங்கும் உண்டு ..ஈஷத் அதிகரணம் 1-5..ஈஷதேகே ந அசப்தம் .. பிரம்மா விசாரம் சாஸ்திரம் வைத்து பண்ணனும் ஜிக்ஜாசு பிரச்னம் /தெரிந்து கொள்ள ஆசை கர்ம பாகம் முடிந்து /அதனால் மோட்ஷம் போக பிரமத்தை விசாரிக்க வந்தான் /.வேதாந்த விசாரம்/.சித்த வஸ்துவை சாஸ்திரம் சொல்லாது சாத்திய வஸ்துவை தான் சொல்லும் பூர்வ பாட்ஷா பசு மாடு கொண்டா புல் கொடு கட்டு போல/உந்தை யாவன் ..சொன்ன உடன் தெரிந்து கொண்டான்..வினைகளை கொண்டு சொல்ல வில்லை சித்த வஸ்துவையும் சொல்லும்/ அடையாளம் சொல்லணுமே அடுத்த அதிகரணம்..படைக்கிறான் அளிக்கிறான் காக்கிறான் முழு கொம்பு அரை கொம்பு மொட்டை கொம்பு போல விருத்தம் -பூர்வ பட்ஷம்..நடந்துண்டே பார்த்துண்டே சிரிதிண்டே போகலாம் ..அது போல ..காலம் வேற என்று சமாதானம்..சாஸ்திரம் கொண்டு அறிய முடியாது..குளிச்சு விட்டு சாப்பிடு/ குளி சாப்பிடு என்று சொல்லாது சாஸ்திரம்/ மற்றவற்றால் அறியாததை தான் சொல்லும் அனுமானத்தால் தெரிந்து கொள்வதை சொல்லாது/ பிர பஞ்சம் இருந்தால் கர்த்தா இருக்கணுமே/சாஸ்திரம் ஒன்றாலே தான் தெரிந்து கொள்ளனும்/ வுஊற்றம் உடையாய் என்று அருளினால் ஆண்டாள்/சாஸ்திரம் கொண்டே தெரிந்து கொள்ள முடியும்/ சமன்வய அதிகரணம் அடுத்து நான்காவது.. புருஷார்த்தம் இருந்தால் தான் சாஸ்திரம் சொல்லும் எந்த யாகத்தால் அவனை அடையலாம்..தத் து சமன் வாத் புருஷார்த்தம் தான் ..ஜீவாதி லிங்கம் அடையாளம் கொண்ட வேத வாக்கியம்.. அஸ்பஷ்ட அஸ்பஷ்ட தர ஸ்பஷ்ட ச்பஷ்ட்ட தர– வேதம் அல்லாதது -அசப்தம் =அனுமானம் /ந அசப்தம் பிரகிருதி ஈஸ்வரன் இல்லை ஜகத் காரணம் அல்ல ..ஈசாதே சங்கல்பம் சொல்ல படுவதால்/ காரியத்தில் காரணம் தன்மை இருக்கும் சத்வம் ரஜஸ் தமஸ் இருப்பதால் பிரமம் ஜகத் காரணம் இருக்காது சத்வம் மட்டும் இருப்பதால் பிர பஞ்சமோ பிரகிருதி தான் காரணம் -பூர்வ பட்ஷி வாதம்..பிரதான அர்த்தம் வராத போது வைக்கலாம் ..சங்கல்பம் ஈஷன சப்தம் அமுக்கியம்.. பிரகிருதி இடம் குணம் இல்லை பிர பஞ்சம் சித் அசித் சக்தி இரண்டும் உண்டு அறிவும் அறிவைய்ற்ற – பிர பஞ்சத்தில் ஜடம் தானே அதனால் அது காரணம் ஆகாது.. பிரமம் காரணம் விசிஷ்ட பிரமம் சேதன அசேதனம் ..ஆகாசத்தை சரீரமாக கொண்ட பிரமம் வாயுவை சரீரமாக கொண்ட பிரம்மா மாக பரிணமிக்கும்.. பிரமம் சங்கல்பித்தது ..பகுச்யாம் இதனால் தான் -சங்கல்பமே கடாஷமே தான் அனைத்துக்கும் காரணம் -கிருபா கடாஷம் தான் அனுக்ரகம்..அதனால் ஈஷன சப்தம்..
..கூரத் ஆழ்வான் திரு வடிகளே சரணம்..
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்..
Leave a Reply