51st ஸ்லோஹம்..
மந்தர பிரமண விப்ரமோத்படாஸ்
சுந்தரச்ய விலசந்தி பாஹவ:
இந்திரா சமபி நந்த பந்தநாச
சாந்தநா கருவிலேப பூஷிதா:
சுந்தர பாஹு/ சுந்தர தோள் உடையான் -இது முதல் அடுத்த நான்கு ச்லோஹங்களும் நான்கு திரு தோள் களுக்கு..
பிர பன்னன் படி சீதை யானை புலி சிங்கம் கண்டு தோள்களில் அணைந்த பலத்தால் பயப்பட வில்லை .அஷ்ட புஜ பெருமாளுக்கு எட்டு ஸ்லோகங்கள் பாடி இருப்பார் /புருஷ சுகத பெருமாளுக்கு ஆயிரம் சொல்லி இருப்பார் /பத்து மாதம் இருந்தாள் பத்து தலை ராவணனுக்கு /சதுர வித புரு ஸார்த்தம் அருள நான்கு தோள்கள்.அலம் புரிந்த நெடும் தடம் கை
சுந்தரச்ய பாஹவ:விலசந்தி–அழகர் உடைய பாஹுக்கள் அழகு பொலிந்து விளங்கு கின்றன
மந்தர பிரமண விப்ரமோத்படாஸ்—மந்த்ரம் நாட்டி அன்று மதுரக் கொழும் சாறு கொண்ட சுந்தரத் தோள் உடையான் –கடல் கடைந்த காலத்தில் மந்தர மலையை மத்தாக நாட்டி அதனை சுழற்றுவதாகிற விலாஸ காரியத்தில் உத்சாஹம் பொருந்தியவை /அநாயாசமாக சுழற்றியவை..வில் இருத்து மெல் இயல் தோய்த்தான்/இருவரும் அணைந்து இருப்பார்கள் /தன காரியம் செய்து அமுதில் வரும் பெண் அமுது கொண்டு அனைவரையும் கடல் கடைந்த விருத்தாந்தம் அருள வைத்தான் /பெரிய வேலைக்கு கூலி அவளின் அணைப்பு..
இந்திரா சமபி நந்த பந்தநா–ஸ்ரீ மகா லஷ்மியை சந்தோஷப் படுத்தி அதனாலே உகப்பு பெற்றவை /விண்ணவர் அமுது உண்ண அமுதில் வரும் பெண் அமுது உண்ட எம்பெருமான் /சீத கடலுள் அமுதாக அவதரித்த ஸ்ரீ மகா லஷ்மியை ஆரத் தழுவி அவளையும் மகிழ்வித்து தாமும் மகிழ்ந்தவை..
சாந்தநா கருவிலேப பூஷிதா–ஏவிற்றுச் செய்வான் என்று எதிர்ந்து வந்த மல்லரை சாவைத் தகர்த்த சாந்தணி தோள் சதுரன் -பெரியாழ்வார் திரு மொழி போல வட மதுரையில் கூனி பூசின சாந்து குறி அழியாமே மல்லரோடே பொருது வெற்றி பெற்ற திரு தோள்கள் இவை /ஸுகந்தி சந்தனம் அணிந்து விளங்குபவை..பெரிய வேலைக்கு கூலி அவளின் அணைப்பு /அவளின் சந்தனம் இவனுக்கு பக்தர்களுக்கு தான் எல்லாம்..பூசின சந்தனம் பானை விளிம்பில் பார்த்து யசோதை -சாந்தணி தோள் சதுரன் மலை/குறி அழியாமல் சாதுர்யம்-சதுரன்/கோவில் சாந்து கரைசல்.. அபய ஹஸ்தம் பிரசாதம் ஸ்தலத்தார்கள் பெறுவார்கள்..
மடி தடவாத சோறு விதுரன் /சுருள் நாறாத பூ -மாலா காரர் /சுண்ணாம்பு கலாவாத சந்தனம் கூனி..நால் தோள் அமுதே என் உய்ரே-திரு வேங்கடத்தான் பாசுரம் -வந்தாய் போல வாராதாய்.வாராதாய் போல வருவானே /தெப்ப கட்டை போல தோள் கள் சம்சார சாகரத்தில் இருந்து காக்க / பராங்குச நாயகியை ஆரத் தழுவி அதனால் ஆயிரம் தோள்கள் தோள்கள் ஆயிரத்தாய் /பெரிய பிராட்டியார் வைபவம் அருளியதும்/ஈர் இரண்டு மால் வரை தோள் -பெருக்கி பார்க்கிறாள் ஆண்டாள்/ தாள்களை எனேக்கே தந்த /பலர் அடியார் முன்பு அருளிய – இருக்க தமக்கு தந்ததை அருளுகிறார் -அளியள் நம் பையல் ….
52nd ஸ்லோஹம்..
ஜ்யாகினாங்க பரிகர்ம தர்மிணோ
பாந்தி சுந்தர புஜச்ய பாஹவ; ,
பாரிஜாத விடபாயிதர்த்தய:
பிரார்த்தி தாரத்த பரிதான தீஷிதா:
சுந்தர புஜச்ய பாஹவ; பாந்தி–பாஹுக்கள் விளங்குகின்றன அவை எப் படி பட்டவை என்னில்
ஜ்யா கினாங்க பரிகர்ம தர்மிணோ–ஜியா கின அங்க-மஹா வீரன் உடைய பாஹோக்கள் என்று கண்டவாற்றால் தெரிகிறபடி –தழும்பு இருந்த சாரங்க நாண் தோய்ந்த வா மங்கை -பொய்கை ஆழ்வார் ஸ்ரீ சாரங்க வில்லின் நாணித் தாழும்பால் அலங்கரிக்க பட்டவை ..விபவ அவதாரங்களில் ஆஸ்ரித விரோதிகளை நேர்ந்த வில் நாணியின் வடுக்கள் ..அவையே அர்ச்சையிலும் இவர்கள் உடைய பிரத்யக் த்ருஷ்ட்டிக்கு கோசரமாகிற படி..ஆளவந்தார் சகாசாதம் ஜ்யாகின கரிக்கைஸ் சுபைஸ் சதுர்ப்பிராஜானு விலம்பிபிர் புஜை:என்று பர தசையில் அனுசந்தித்தால் அர்ச்சையில் அனுசந்திக்க கேட்க்க வேணுமோ?
பாரிஜாத விடபாயிதர்த்தய–கற்பக தருவின் கிளைகளோ ! என்னலாம் படி அமைந்த சம்ருத்தியை உடையன..
பிரார்த்தி தாரத்த பரிதான தீஷிதா:கேட்டார் கேட்டது எல்லாம் வழங்குவதில் தீஷை கொண்டவை அலம் புரிந்த நெடும் தடக்கை அமரர் வேந்தன் இறே..
தீஷை =சங்கல்பம்
53rd ஸ்லோஹம்..
சாகர அம்பர தமாலகானன
ச்யாமல ருத்தய உதார பீவரா;
சேஷ போக பரி போக பாகினஸ்
தன்னிபா வனகிரீ சிதுர் புஜா:
சாகர அம்பர தமாலகானன ச்யாமல ருத்தய –கடல் ஆகாசம் பச்சிலை பொழில் போலவும் பேசலாம் படி பசுமை வாய்ந்தவை /நிறத்துக்கும் வைசால்யத்துக்கும் வுவமை/இவற்றின் சாம நிறத்தின் ச்ம்ருத்தியை உடையவை..
உதார பீவரா;–உதார பதத்தினால் தாத்ருத்வமும் மகத்வமும் விவஷிதம் நீண்டு பருத்தவை
சேஷ போக பரி போக பாகின..
திரு அனந்தாழ்வான் உடைய திரு மேனியின் மீது கிடந்தது ஆனந்த அனுபவம் செய்யும் அவை ..வெள்ளை வெள்ளத்தின் மேல் ஒரு பாம்பை மெத்தையாக விரித்து அதன் மேலே கள்ள நித்திரை செய்யும் போது என்றும் தன தாளும் தோளும் முடிகளும் சமனிலாத பல பரப்பித் திரு கண் வளர்ந்து அருளுகிற படியை நினைத்து அருளி செய்ததாம் இது /..ஆயிரம் தோள் பரப்பி முடி ஆயிரம் மின்னிலக ஆயிரம் பைந்தலைய அனந்த சாநாளும் மலை- மால் இரும் சோலை அதே என்றும் பெரியாழ்வார் அருளியது போல..
தன்னிபா–போகி போக சயநீய சாயிகள் என்றார் ..அந்த திரு மேனியோடே சாம்யம் உடையவை .
வனகிரீ சிதுர் புஜா:–ஆக இப் படி பட்டவை..
தமாலகம் பச்சை மரம் /ஆகாசம் நைல்யம்/ சாகாரம் நீலம்.மூன்றையும் சேர்த்து /நிறம் பருத்து என்பதற்கும்/ உதாரதுக்கும் /கொடுத்து கொண்டே இருக்கும் திரு தோள்கள் சேஷ போக -ஆதி சேஷ பர்யங்கம் /நான்கு திரு தோள்களுடன் சயனம் வீர சயனம் -திரு அழுந்தூர் வாழ்ந்தே போம் ஆண் பாவனையில் வூடல் ..ஈதே அறியீர் வாசி வல்லீர் ..பரிமள ரெங்கன் .இந்து சந்திரன் சாபம் தீர்க்க ..கள்ள நித்திரை கொள்வான் /ஆயிரம் தோள் பரப்பி .அனந்த சயனன் ஆளும் மலை மால் இரும் சோலை /திரு மேனியுடன் சாம்யம் .மேன்மை குளிர்த்தி நாற்றம் விசாலம் வெண்மை இத்தால் சாம்யம் /வெளுப்பாக முன்னம் இருந்தார் -சாயல் பட்டு /ஆதி சேஷனும் விமானம் -மரகத சுகுமாரன் உள்ளே சயனம் -கரு நீல வண்ணன் காருண்ய வடிவன் /பால் கடல் நீலம் ஆனது போல ஆதி சேஷனும் ஆனான் ..சியாமள பச்சை நீலம் கருப்பு சேர்ந்த கலவை
54th ஸ்லோஹம்..
அஹமஹா மிகா பாஜோ கோவர்த்த நோத்த்ருதி நர்மணி
பிரமத நவிதவ் அப்தே: லப்த பிரபன்ன சமக்ரியா:
அபிமத பஹூ பாவா: காந்தா அபிரம்பன சம்ப்ரமே
வனகிரி பதேர் பாஹாச் சும்பந்தி சுந்தர தோர் ஹரே:
இந்த ஸ்லோஹதொடு பஹு வர்ணணம் தலை கட்டுகிறார்
வனகிரி பதேர: பாஹாச் சும்பந்தி சுந்தர தோர் ஹரே:பாஹா: சும்பந்தி –திரு தோள்கள் சால விளங்குகின்றன
கோவர்த்தந உத்த்ருதி நர்மணி அஹமஹா மிகா பாஜ: –கோவர்த்தனம் என்னும் மலையை கொற்ற குடையாக ஏந்தி நிற்கும் லீலா விசேஷத்திலே நான் முன்னே நான் முன்னே-அஹம் அஹம் மிஹா பாஜ என்று முற்கோலி நிற்கும் அவை -இதனால் உத்சாஹ அதிசயம் சொன்ன படி..உத்சாஹத்தொடு ஏந்தி நின்றவை..
அப்தே:பிரமதந விதவ் லப்த பிரபன்ன சமக்ரியா:—கடல் கடைவதாகிற வியாபாரத்தில் முயன்று நின்ற தேவ அசுரர்களோடு ஒக்க- பிரபன்ன-தொழில் செய்தவை ..பிரபந்தம் -முயற்சி /லப்த பிரபன்னா:-முயன்று நின்றவர்கள் ,சுரர்களும் அசுரர்களும் ..அவர்கள் இளைத்து நின்ற காலத்திலே அந்த கிரியையை இவை தாம் செய்தன ..அரங்கனே! தரங்க நீர் கலங்க வன்று குன்று சூழ் மரங்கள் தேய மா நிலம் குலுங்க மாசுணம் சுலாய் நெருங்க நீ கடைந்த பொது நின்ற சூரர் ஏன் செய்தார்?-திரு சாந்த விருத்தம்/மாசுணம் வாசுகி/வங்க கடல் கடைந்த மாதவன் /ஆழ கடலை பேணான் -தன படுக்கையை பேணாமல்/அனைத்தையும் பலருக்கும் கொடுக்க /தன்னை அழித்தாவது நல்லது செய்வான்..
காந்தா அபிரம்பன சம்ப்ரமே அபிமத பஹூ பாவா:–கடைந்து கடலின் நின்று பிராட்டி தோன்ற அவளை ஆரத் தளுவிகிற சம்ப்ரமத்தில் விஸ்வரூபம் எடுக்க கோலினவை..இரண்டாயும் நான்காயும் இருந்து தழுவு கையில் பர்யாப்தி பிறவாமையாலே பஹு பவன சங்கல்பம் கொண்ட படி..
சம்ப்ரமே -பதட்டம் பஹு பாவம் பலவாகும் தன்மை..
குன்று எடுத்த தோளினான்/அலை கடலை கடைந்து எடுத்த அம்மான் /ஆயர் குல மகளுக்கு அரையன் தன்னை /தன் குடந்தை கிடந்த மாலை அடி நாயேன் நினைந்து நினைந்திட்டேனே- கடைசி பாசுரத்துக்கு முன் பாசுரம் ..மூன்று சரித்தரமும் கலியனும் அருளினார் /குன்று எடுத்த தோள் ஆளா /கடல் =பால்/ கடல் கல் =கோவர்த்தனம்/கல் எடுத்து கல் மாரி காத்தான் /குழந்தைகள் நம்பிய கோவர்த்தனம் காக்கட்டும் என்பதால் /நான்கு தோள்களுடன் கோவர்த்தனம் எடுத்தானா ? சேவை சாத்தித்து இருக்கலாம் கையினார் சுரி சங்கு ஆழி பாசுரம் போல/யானை -கஜேந்திரன் குரங்கு -ஹனுமான் /பறவை -தூது போனவை /பாதுகை பட்டாபிஷேகம் போல கோவிந்தா பட்டாபிஷேகம்/..
அநேக பாஹு -நிறைய தோள்களை அர்ஜுனனும் கண்டான் ..அணைக்க நிறைய ஆசை கொண்டு வளர்ந்தனவாம் ..திரு குழல் /திரு மார்பு/ முக வாயை தூக்க /ஒன்றும் இல்லை அடைவதற்கு ஒன்றும் இல்லை /திருவடி =ஸ்வர்ணம் அடைந்த பின்பு மற்று எல்லாம் புல்/சதுர அதிக =ஆசையே ரட்சித்து கொடுக்கட்டும் / அணைக்கும் பொழுதா ?கோபி ராசா கிரீடை போதா ?யசோதை கட்டி வைத்து அடிக்கும் பொழுதா ? ஆசை எப்போ அதிகம்/ நல்லை நெஞ்சே நாம் தொழுதும் நம் உடை நம் பெருமான் -லக்ஷ்மி நரசிம்கன் -அணைக்க பட்ட அணைத்து இருக்கிற /அல்லி மாதர் புல்க நின்ற -ஆயிரம் தோள் உடன் நின்றானாம் ..பாழி அம தோள் உடை பத்ம நாபன் கை /தோள் ரட்சிக்க இருக்கிறது /நாபியில் குழந்தை இருக்கிறதை அடுத்து சொல்கிறார் பருத்து அழகிய தோள் கள்/தோள் மாலை சேவை தொங்குகின்ற மாலை தோ மாலை சேவை/ மூன்று தேவிமாரையும் சொன்னார்..
55th ஸ்லோஹம்..
ஸ்ரீமத் வநாத்ரி பதி பாணி தலாப்ஜ யுக்மம்
ஆரூடயோர் விமலா சங்கரதாங்க யோஸ்து
எகொப்ஜ மாஸ்ரித இவோத் தமராஜ ஹம்ஸ:
பத்ம ப்ரியோர்க்க இவ தத் ஸ்மித்தோ த்விதீய:
திரு கைத் தலங்களில் இருக்கும் திரு வாழி திரு சங்குகளை அநுபவிகிறார்..
ஸ்ரீமத் வநாத்ரி பதி பாணி தலாப்ஜ யுக்மம் ஆரூடயோர்–அழகர் உடைய இரண்டு திரு கைகளிலும் ஏறி இருக்கிற ஊழியான் கை தலதிடரில் குடி ஏறி என்றும் வட மதுரையார் மன்னன் வாசு தேவன் கையில் குடி ஏறி வீற்று இருந்தாய் கோலப் பெரும் சங்கே -போல ஆரூட -பத பிரயோகம் செய்து அருளினார்..
விமல சங்கர தாங்க யோ:–வெள்ளை விளி சங்கும் திரு வாழி ஆழ்வானும் ஆகிற இருவர்க்குள்
ஏக: அப்ஜமாஸ்ரித: உத்தம ராஜ ஹம்ஸ இவ–ஒருவரான ஸ்ரீ பாஞ்ச சன்ய ஆழ்வான் தாமரை மலரிலே துயில் கொள்ளும் ராஜ ஹம்சம் போல விளங்கா நின்றார் ..செங்கமல நாண் மலர் மேல் தேன் உகரும் அன்னம் போல் செங்கட் கருமேனி வாசு தேவன் உடைய அங்கைத் தலம் ஏறி அன்ன வசம் செய்யும் சங்கரையா! உன் செல்வம் சால அழகியதே..
த்விதீயஸ்து தத்ஸ்மித: பத்மப்ரிய: அர்க்க இவ –மற்று ஒருவர் ஆன திரு வாழி ஆழ்வானோ என்னில்,தாமரை மலரிலே வந்து வீற்று இருக்கின்ற சூர்யன் போலே விளங்கா நின்றார்….ஹேது கர்ப்ப விசேஷணம் கமல பாந்தவன் ஆகையாலே கமலத்திலே வந்து கிடக்கலாம் இறே..
இரண்டு திரு கைகளும் இரண்டு தாமரை/ ஒன்றில் அன்னம் வந்து படிந்து சந்காகவும் மற்று ஒன்றில் சூரியன் படிந்து சுதர்சனமாகவும் விளங்குகின்றது ..
ஒருத்தி ஒருத்தி /ஏக -சம பிரதான்யம் இரண்டுக்கும் சங்கத்தை முதலில் சொல்லி .அடுத்து சக்கரம் சொன்னார்/ கற்பூரம் நாறுமோ பதிகம் போல..செல்வம் சால அழகியது /சங்கோடு சக்கரம் ஏந்தி /பார்த்த சாரதி சங்கு மட்டும் வைத்து அருளுகிறார்..நகர வேண்டாம் சக்கரத் ஆழ்வான் கருதும் இடம் பொருது -பரதன் பிரிந்ததால் தானே வம்பு…மீண்டும் .தப்பு பண்ணாமல் இருக்கத்தான் பிரியாமல் இருக்கிறான்..ஸ்நானம் கைகேயி பிள்ளை பரதன் விட்டு பிரிந்து இல்லை என்றான் விபீஷணன் இடம்-அவளால் பட்ட பாடு தெரியும் நானும் போகாமல் படுத்தணுமா இப்பொழுதே போகணும் புஷ்பக விமானம் கொடுத்தான் /சங்கம் இருந்த்தால் தான் திரு மஞ்சனம்..அதர ரசம் பருகும் செல்வம்..சீதை கேட்டாள் ராமன் இடம் /ஆண்டாள் கேட்டாள்/ தோற்பிது ஒரு குரங்கை பார்த்து கேட்டாள் அவள் ..பூமா தேவி ஏற்றம் ..விராதன் -தலையால் சுமந்து / ஈர் அடியால் ஒளித்தியால்/ ஸ்ரீ தேவியை மார்பில் மட்டும் வைத்தாயே ..சாரங்க வில் நாண் ஒலி போதும் சீதைக்கு மடுத்து வூதிய சங்கொலி ருக்மிணிக்கு போதும் ஆண்டாளுக்கு இரண்டும் வேணும்..
விமல-வெளுப்பு குற்றம் இல்லாத சங்கு /ராதாங்க சக்கரம் விசேஷனம் இல்லை ..ஏக ஒன்றாக முதலாக சங்கை சொல்லி உத்தம ராஜ ஹம்சம் போல /விவேக முகமாய் நூல் உரைக்கும் ஆச்சார்யர்கள் போல /மனம ஆகிய மான சரோவரில் இருப்பார் /சேற்றில் காலை வைத்தால் அழுந்த மாட்டார்கள்/சென் கமலா நான் மலரில் மது நுகரும் அன்னம் போல் –அம் கைத்தலம் ஏறி அன்ன வசம் செய்யும் சங்கரையா / துவிதியம் திரு ஆழி -தாமரையில் சூரியன் போல -கேள்வி பட்டது இல்லையே அபூத வுவமை..பத்ம பிரியன் =சூரியன்
56th ஸ்லோஹம்….
லஷ்ம்யா: பதம் குச்துப சம்ச்க்ருதஞ்ச
ஸ்ரீவத்ச பூமிர் விமலம் விசாலம்
விபாதி வஷோ வனமால யாட்யம்
வநாத்ரி நாதச்ய சு சுந்தரச்ய..
திரு மார்பை அநுபவிகிறார் இதில்
வநாத்ரி நாதச்ய சு சுந்தரச்ய வஷோ விபாதி–அழகரின் திரு மார்பு எங்கனே இரா நின்றது என்னில்
லஷ்ம்யா:பதம—அகல கில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை
உறை மார்பா என்றும் பூவார் திரு மா மகள் புல்கிய மார்பா என்றும்
சொல்வது போல பெரிய பிராட்டியாருக்கு நித்ய நிகேதனம்
குச்துப சம்ச்க்ருதஞ்ச— குரு மா மணி பூண் குலாவி திகழும் திரு மார்வு.
. ஸ்ரீவத்ச பூமிர்–திரு மரு மார்பன் – ஸ்ரீ வத்சம் என்னும் மயிர் சுழிக்கு இருப்பிடம் ..
விமலம் விசாலம் — பள பள என்று அகன்று
வனமால யாட்யம்– ஆபாத சூடம் யா மாலா வனமாலேதி கத்த்யாதே என்கிற படியே திரு முடி முதல் திரு வடி அளவும் விளங்கா நின்ற வன மாலை சோபிதமானது ..
பதம் =இருப்பிடம் /லஷ்ம்யா பதம்..நீல நாயக கல/அனர்கமாய் இருப்பதை அருகதையே ஆக்குவது சம்ஸ்காரம்/ கௌஸ்துபம் இதை பண்ணித்தாம்/ ஸ்ரீ வட்சம் திரு மரு/பீடம் அவளுக்கு /விமலம் குற்றம் அற்றது விசாலம் /பெண்கள் கோஷ்ட்டியில் லஜ்ஜை இருக்காது என்று காலை வைத்து ஏறி அமர்ந்தாள்/தண்ணீர் தண்ணீர் -தாரகமே இது தான் என்று இறையும் அகல கில்லேன் என்பாள் பூவார் திரு மா மகள் புல்கிய மார்பா / திகழ கின்ற திரு மார்பில் திரு மங்கை தன்னோடும் -விளங்குவதே அவளாலே தான் ..திகழ்கின்ற திரு மாலால் ..திருவே மாலா? மாலே திருவா? கட்டுரையே ..நாச்சியார் திரு கோலமும் கோமள வள்ளி தாயாரும் ஆரா அமுதானாய் திரு கோலம்/.. இவளின் பாத சின்னம் பார்த்து தான் வேதாந்தம் தத்வ சிந்தனை விசாரம் நிருதித்து /லஷ்மி லலிதா க்ருஹம் -பட்டர்/அந்த புரம் சந்தனம் கொடி விதானம் விளக்கு திரை/ சாந்து -சந்தனம் சரமான மாலை தான் விதானம்/ வன மாலை துளசி மாலை/ கவ்ச்துபம் விளக்கு கோலம் -ஏழு ரிஷபங்கள் கீறி கோலம் போட்டதாம் ..திரு கோவலூர் ஆயன் சேவித்து திரை -தேசிகன் வாமன மூர்த்தி திரை போட்டார்/கிருஷ்ண -மான் தோலை போட்டு மூடினார் ஆளவந்தார் /யவனிகா மாயாஜகன் மோகினி – மாயா =பிரகிருதி -ஆச்சர்யம் பொய் தோற்றம் இல்லை/குரு மா மணி பூண் குலவி திகழும் திரு மார்பு..
கூரத் ஆழ்வான் திரு வடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்.
Leave a Reply