திவ்ய பிரபந்தங்களில் பிராட்டி சம்பந்தம்-பெரியாழ்வார் ..

வடிவாய் நின் வள மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு–2

நானும் உனக்கு பழவடியேன் 11

என் தம்பிரானார் எழில் திருமார்வர்க்கு 1-1-3

எழிலார் திருமார்வர்க்கு ஏற்கும் இவை என்று 1-1-5

தேனார் மலர் மேல் திரு மங்கை போத்த்ந்தாள் கோனே 1-3-7

செய்யவள் நின் அகலம் சேமம் என கருதி 1-5-1

நப்பின்னை தன திறமா நல்விடை ஏழ அவிய நல்ல திறல் உடைய நாதனும் அவனே 1-5-7

என் முகில் வண்ணன் திரு மார்வன் 1-7-4

சீரால் யசோதை திரு மாலை சொன்ன சொல் சிந்தையுள் நின்று திகழ 2-3-13

பின்னை மணாளனை பேரில் கிடந்தானை 2-5-1

மின் இடை சீதை பொருட்டா இலங்கையர் மன்னன் மணி முடி பத்தும் உடன் வீழ 2-6-8

திரு உடையாள் மணவாளா ! திரு வரண்கத்தே கிடந்தாய் ! 2-7-2

மடம் கொள் மதி முகத்தாரை மால் செய்ய வல்ல என் மைந்தா ! 2-7-7

தொண்டர்கள் நெஞ்சில் உறைவாய் !தூ மலராள் மணவாளா 2-7-9

மின்னேர் நுண் இடை வஞ்ச மகள் கொங்கை துஞ்ச வாய் வைத்த பிரானே ! 3-1-1

அஞ்சன வண்ணனை ஆயர் கோல கொழுந்தினை 3-2-1

பேடை மயில் சாயல் பின்னை மணாளா !நீராட்ட அமைத்து வைத்தேன் 3-3-3

என் சிற்றாயர் சிங்கமே ! சீதை மணாளா !சிறு குட்ட செம் கண் மாலே ! 3-3-5

செப்பாடுடைய திருமாலவன் தன செம் தாமரை கை விரல் ஐந்தினையும் 3-5-6

தூ வலம் புரி உடைய திரு மால் தூய வாயில் குழல் ஓசை 3-6-1

இரங்கும் கூப்பும் திருமால் நின்ற நின்ற பக்கம் நோக்கி 3-6-10

திரு மகள் போல வளர்த்தேன் செம் கண் மால் தான் கொண்டு போனான் பெரு மகளாய் குடி வாழ்ந்து பெரும் பிள்ளை பெற்ற யசோதை மரு மகளை கண்டு உகந்து மணாட்டு புறம் செய்யும் கொலோ ? 3-8-4

உருப்பிணி நங்கையை தேர் ஏற்றி கொண்டு விருப்பு உற்று அங்கு ஏக விரைந்து 3-9-3

சீதை மணாளனை பாடி பற 3-9-4

செறிந்த கரும் குழல் மடவாய் ! 3-10-1

அள்ளி அம பூ மலர் கோதாய் !…. துணை மலர் கண் மட மானே ! 3-10-2

வார் அணிந்த  முலை மடவாய் !வைதேவீ ! விண்ணப்பம்  தேர் அணிந்த அயோத்தியர் கொண் பெரும் தேவி ! கேட்டுஅருளாய் 3-10-4

மரு மென் நோக்கி !வைதேவீ ! விண்ணப்பம் 3-10-5

மின் ஒத்த நுண் இடையாய் ! 3-10-7

மைதகுமா மலர் குழலாய் !வைதேவி விண்ணப்பம்3-10-8

உகந்தனளால் மலர் குழலால் சீதையுமே 3-10-9

வார் ஆரும்  முலை மடவாள் !வைதேவீ  தனை கண்டு சீராரும் திறல் அனுமன் தெரிந்து உரைத்த அடையாளம் 3-10-10

காந்தள் முகிழ் விரல் சீதைக்காகி  கடும் சிலை சென்று இறுக்க 4-1-2

ஆயர் மடமகள் பின்னைகாகி அடல் விடை ஏழினையும் 4-1-4

முறையால் சீர் ஏறு வாசகம் செய்ய நின்ற திருமாலை நாடுதிரேல் வார் ஏறு கொங்கை உருப்பிணியை வழிய பிடித்து கொண்டு தேர் ஏற்றி 4-1-5

பல் ஆயிரம் பெரும் தேவிமாரோடு பௌவம் எறிது வரை 4-1-5

வண்ணம் கரும் குழல் மாதரோடு மணந்தானை கண்டார் உளர் 4-1-9

எட்டு திசையும் எண்ணிருந்த பெரும் தேவிமார் விட்டு விளங்க வீற்று இருந்த விமலன் மலை 4-2-10

உருப்பிணி நங்கை தன்னை மீட்பான் தொடர்ந்து ஓடி சென்ற உருப்பனை ஒட்டி கொண்டிட்டு உறைந்திட்ட உறைப்பன் மலை 4-3-1

மன்னு நரகன் தன்னை சூழ் போகிவளைதெறிந்து கன்னி மகளிர் தம்மை கவர்ந்த கடல் வண்ணன் மலை 4-3-3

ஆர்வம் என்பதோர் கோயில் அமைத்து மாதவன் என்பதோர் தெய்வத்தை நாட்டி 4-5-3

சித்தம் நன்கு ஒருங்கி திருமாலை செய்த மாலை இவை பத்தும் வல்லார் சித்தம் நன்கு ஒருங்கி திரு மால் மேல் சென்ற சிந்தை பெறுவார்கள் தாமே 4-5-10

அன்பால் செய்த தமிழ் மாலை தங்கிய நா உடை யார்க்கு  கங்கையில் திருமால் கழல் இணை கீழே குளித்து இருந்த கணக்காமே 4-7-11

திருவாளன் திருப்பதி மேல் திருவரங்க தமிழ் மாலை விட்டு சித்தன் விரித்தன  கொண்டு 4-8-10

உலகாண்ட திருமால் கோயில் திருவடி தன திரு உருவும் திரு மங்கை மலர் கண்ணும் காட்டி நின்று 4-9-1

பதினாறாம் ஆயிரவர்  தேவிமார் பணி செய்ய துவரை என்னும் அதில் நாயகராகி வீற்று இருந்த மணவாளர் மன்னு கோயில் 4-9-4

திருவாளன் இனிதாக திரு கண்கள் வளர்கின்ற திருவரங்கமே 4-9-10

மாயவனை மதுசூதனனை மாதவனை மறையோர்கள் ஏத்தும் ஆயர்கள் ஏற்றினை அச்சுதனை அரங்கத்து அரவு அணை பள்ளியானை 4-10-10

வாக்கு தூய்மை இலாமையினாலே மாதவா ! உன்னை வாய் கொள்ள மாட்டேன் 5-1-1

வாமனன் என் மரகத வண்ணன் மாதவன் மது சூதனன் தன்னை 5-1-10

அரவதமளியினோடும் அழகிய பாற்கடலோடும் அரவிந்த பாவையும் தானும் அகம் படி வந்து புகுந்து 5-2-10

திரு மால் இரும் சோலை எந்தாய் ! 5-3

நின் திரு ஆணை கண்டாய் நீ ஒருவருக்கும் மெய்யன் அல்லை 5-3-2

திரு  பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறித்தாய் 5-4-7

பெரியாழ்வார் திரு அடிகளே சரணம்.

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading