திவ்ய பிரபந்தத்தில் திவ்ய திரு அடிகள்-பொய்கை ஆழ்வார் ..

செய்ய சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல் மாலை இடர் ஆழி நீங்குகவே என்று

பார் அளவும் ஓர்  அடி வைத்து ஓர் அடியும் பார் உடுத்த நீர் அளவும் செல்ல நிமிர்ந்ததே

சேவடியை நீட்டி திசை நடுங்க விண் துளங்க மா வடிவில் நீ அளந்த மண்

இயல்வாக ஈன துழாயான் அடிக்கே செல்ல முயல்வார்

தொழுதேன் கடல் ஓதம் கால் அலைப்ப கண் வளரும் செம் கண் அடல் ஓத வண்ணர் அடி

அடியும் படி கடப்ப தோள் திசை மேல் செல்ல முடியும் விசும்பு அளந்தது என்பர்

தழும்பு இருந்த தாள் சகடம் சாடி

நன்கு உணர்வார்  சிந்தை தாய் நாடு கன்றே போல் தண் துழாயான் அடிக்கி போய் நாடி கொள்ளும் புரிந்து

அடி அடைவதற்கு அன்றே ஈர் ஐந்து முடியான் படைத்த முரண்

பூம் துழாயான் அடிக்கே போதொடு நீர் ஏந்தி தாம் தொழா நிற்பார் தமர்

பூ மேய மாதவத்தோன் தாள் பணிந்த வாழ் அரக்கன் நீள் முடியை பாதமத்தால் எண்ணினான் பண்பு

புண் புரிந்த ஆகத்தான் தாள் பணிவார் கண்டீர் அமரர் தம் போகத்தால் பூமி ஆள்வார்

கூரிய மெய் ஜானத்தால் உணர்வார் காண்பரே மேல் ஒரு நாள் கை நாகம் காத்தான் கழல்

அழலும் செரு ஆழி ஏந்தினான் சேவடிக்கே செல்ல மருவாழி நெஞ்சே மகிழ்

நேரே கடி கமலத்துள் இருந்தும் காண்கிலான் கண்ணன் அடி கமலம் தன்னை அயன்

அஞ்சி உய நின் திரு அடியே சேர்வான் நயம் நின்ற நன் மாலை கொண்டு நமோ நாரணா என்னும் சொல் மாலை கற்றேன் தொழுது

பழுதின்றி மந்திரங்கள் கற்பனவும் மால் அடியே கை தொழுவான் அந்தரம் ஒன்றில்லை அடை

நா நாளும் கோநாகணையான் குரை கழலே கூறுவதே நாணாமை நள்ளேன் நயம்

காலை எழுந்து உலகம் கற்பனவும் …ஓர் ஆழியான் அடியே ஓதுவதும் ஒர்ப்பனவும் பேர் ஆழி கொண்டான் பெயர்

மூப்பு உன்னை சிந்திப்பார்க்கு இல்லை திரு மாலே நின் அடியை வந்திப்பார் காண்பார் வழி

வேழம் ..படம் உடைய பை நாக பள்ளியான் பாதமே கை தொழுதும் கொய் நாக பூம் போது கொண்டு

பிரான் உன் பெருமை பிறர் யார் அறிவார் உராய் உலகு அளந்த ஜான்று  வராகத்து எயிற்று அளவு போதாவாறு என்கொலோ எந்தை அடிக்கு அளவு போந்த படி

கனி சாய கன்று எறிந்த தோளான் கணை கழலே காண்பதற்கு

நாடிலும் நின் அடியே நாடுவன் …பொன் அடியே சூடுவேற்க்கு என் ஆகில் என்னே எனக்கு

வரத்தால் வலி நினைந்து மாதவ நின் பாதம் சிரத்தால் வணங்கானாம் என்றே உரத்தினால் ஈர் அறியாய் நேர் வலியோனாய இரணியனை ஓர் அரியாய் நீ இடந்தது ஊன்

ஏனத்து உருவாய் உலகு இடந்த ஊழியான் பாதம் மருவாதார்க்கு உண்டாமோ வான்

பொறி உகிரால் பூ வடிவை ஈடழித்த பொன் ஆழி கையா நின் சேவடி மேல் ஈடழிய செற்று

களிறு அளித்த பேராளா  உன் தன அடி சேர்ந்து அருள் பெற்றாள் அன்றே பொடி சேர் அனல்  கங்கை ஏற்றான் அவிர் சடை மேல் பாய்ந்த புனல் கங்கை என்னும் பேர்பொன்

ஓர் அடியும் சாடு உதைத்த ஒண் மலர் சேவடியும் ஈர் அடியும் காணலாம் என் நெஞ்சே ஓர் அடியின் தாயவனை கேசவனை தண் துழாய் மாலை சேர் மாயவனையே மனத்துவை..

வையம் தகளியா வார் கடலே நெய் ஆக வெய்ய கதிரோன் விளக்காக செய்ய சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல் மாலை இடர் ஆழி நீங்குகவே என்று..

பொய்கை ஆழ்வார் திரு அடிகளே சரணம்

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading