ஸ்ரீ சிங்க பெருமானின் சீர்மை ..

சுரர் அசுரர்  நரர் கையில் பாரில்

சுடர் வானில் பகல் இரவில் உள் புறம்பில்

பொறு படையில் தான் சாகா இரணியன் தன்னை

பிரகலாதன் தர்க்கித்து உண்டு என்ற தூணில்

நர ஹரயாய் பொழுது புகு நேரம் தன்னில்

நாடி உதித்து உயர் வாச படி மீது ஏறி

இரணியனை தொடை மிசை வைத்து உகிரினாலே

இரு பிள வாக்கினையே எம்பிரானே ..

எங்கும் உளன் கண்ணன் என்ற மகனை காய்ந்து

இங்கு இல்லையா என்று  இரணியன் தூண் புடைப்ப

அங்கு அப் பொழுதே அவன் வீய தோன்றிய

சிங்க பிரான்  பெருமை ஆராயும்சீர்மைத்தே–திரு வாய் மொழி 2-8-9

பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன்

வாயில் ஓர் ஆயிர நாமம்

ஒள்ளிய கிப்போதே ஆங்கு அதனுக்கு

ஒன்றும் ஓர் பொருப்பிலன் ஆகி

பிள்ளையை சீறி வெகுண்டு தூண் புடைப்ப

பிறை எயிற்று  அனல் விழி பெழ் வாய்

தெள்ளிய சிங்கம் ஆகிய தேவை

திரு அல்லி கேணிகண்டேனே..பெரிய திரு மொழி 2-3-8..

அதிர்த்து கொண்டு புறப்பட்ட  போதை அட்ட ஹாசமும்
நா மடி கொண்ட உதடும்–நெற்றி அது கண்ணும்- உச்சி அது புருவமுமாய்-
கொண்டு தோன்றின போது பொசிககின பன்றி போலே உருகினான் ஆயிற்று பொன் ஆனகையாலே-ஈடு

உளம் தொட்டு இரணியன் ஒண் மார்வகலம் பிளந்திட்டான்

அன்று  திரு செய்ய நேமியான் தீ அரக்கி மூக்கும் பரு செவியும் ஈர்ந்த பரன்-பெரிய திரு அந்தாதி -63..

சுக்கிரன் கண்ணை துரும்பால் கிளறிய சகர கையன்-பெரியாழ்வார்திரு மொழி-1-8-7

அனைத்தும் சக்கர அம்சம்

வரத்தால் வலி நினைந்து மாதவ நின் பாதம்

சிரத்தால் வணங்கானாம்  என்றே

உரத்தினால் ஈர் அறியாய் நேர் வலியோனாய இரணியனை

ஓர்  அரியாய்  நீ இடந்த தூண் -முதல் திருஅந்தாதி -90

ஸ்ரீ ஈஸ்வரன் அவதரித்து பண்ணின ஆனை தொழில்கள் எல்லாம்  பாகவத அபசாரம்  பொறாமை என்று
ஸ்ரீ ஜீயர்  அருள்ளி செய்வர்- ஸ்ரீ வசன பூஷணம்..

சிங்கம் ஆனது யானை  மீது  சீறினாலும் தன குட்டிக்கு முலை உண்ணலாம் படி இருக்கும் அன்றோ ..
அடியவர்கள் அவனை அணுக ஒண்ணாத படி இருப்பானா ?– ஸ்ரீ எம்பெருமானார்

இவையாம் இல வாய் திறந்து எரி கான்ற

இவையா எரி வட்ட கண்கள் இவையா

எரி  பொங்க காட்டும் இமையோர் பெருமாள்

அரி பொங்கி காட்டும் அழகு-நான்முகன்  திருவந்தாதி-21

பயங்கர வடிவை அனுபவித்து அடுத்த பாசுரத்தில்

அழகியான் தானே அரி உருவம் தானே பழகியான் தானே பணிமின்..

செல்ல உணர்ந்தவர் செல்வன் தன் சீர் அன்றி கற்பரோ

எல்லை இல்லாத  பெரும் தவத்தால் பல செய் மறை

அல்லல் அமரரை செய்யும்  இரணியன் ஆகத்தை

மல்லல் அரி உருவாய் செய்த மாயம் அறிந்துமே-திரு வாய் மொழி 7-5-8..

செல்வன்/மல்லல் அரி உரு ==ஸ்ரீ நரசிம்ஹவபு : ஸ்ரீமான்

அந்தி அம போதில் அரி உருவாய் அரியை அழித்தவனை

பந்தனை தீர  பல்லாண்டு பல்லாண்டு என்று பாடுதுமே -வேறு பயன்  கருதாத அடியவர்கள் மங்களாசாசனம் செய்வர்

மாறாய தான் அவனை வள்உகிரால் மார்வு இரண்டு

கூறாக கீறிய கோள் அரியை  — வேறாக

ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்று அவரை

சாத்தி இருப்பார் தவம்-நான்முகன்  திருவந்தாதி-18..

ஸ்ரீ நரசிம்ஹனை பற்றிய அடியவர் முன் இட்டு நாமும் பற்ற வேண்டும்

ஸ்ரீ ஆழ்வார் , ஸ்ரீ எம்பெருமானார் , ஸ்ரீ ஜீயர் , திரு அடிகளே சரணம்..

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading