..Mudali aanndaan kettu acharyarkallukkum baagavatharkallukkum-Pillai Vurangaa Valli Daasar polvaar- vulla pathu vithyasangallai Raamanujar arulinaar.
1.Nam polvaar voor vooraha sentru vubadesam pannuvom..evarkallo, mattraiya vishayangallil patru entri naarayannaney radshahan yentru erupparkall-nAttArOdu iyalvozhindhu nAraNanai naNNinamE” – Thiruvaymozhi 10-6-2) pola.
2.oru kaiyaal neenthiyum, mattru oru kaiyaal floatai pidithu konndu eruppathu pola, nam polvaar divya desam thorum sancharam seyhirom.evarkallo Kovil, Thirumalai, Perumal Kovil yentrey mukya divya desangallil erupparkall..
3.Nam polvaar avanudan vilahi,kobam konndu,msila samayam pallaanndu paadiyum-mattrai aazlvaarkallai pola .(“kalakkangalum thERRamumAy” – Thiruvaymozhi 6-3-2). .avarkall Periaazlvaarai pola sadaa pallaanndu aruli konndu pongum parivudan eruppaarkall..(“kalakkamillA naRRavamunivar” – Thiruvaymozhi 8-3-10)
.4…ocean and the beach-we get caught in samsaric ocean..they are like the ship anchored -holding on Him staedily.-thaLardhal athanarugum sArAr” – Irandam Thiruvanthathi 45, “tharu thuyaram thadAyEl” – Perumal Thirumozhi 5-1..
5..atom and mountain..acharyas hold on to their birth class,gothram sootram etc..they have only the knowledge of the soul and Him and hold on to only this.
6..sugar cane and sugar–acharyas keep on chanting vedas ..they enjoy divya mandras
8..The difference between night and day. .acharays dwell in vedas..they are contended wyth sahasranamas, geethaa saaram..like (“pErAyiramOdhina” – Periya Thirumozhi 1-5-10), walk steady with His guidance (“mAdhavan than thuNaiyA nadandhu” – Periya Thirumozhi 3-7-4) in the path shown by Him in Bhagavad Gita (Carama Shloka) (“mAyan anRu aivar dheivath thErinil seppiya gIthaiyin semmaip poruL” – Ramanuja Nootrandadhi 68).
10..The difference between an ordinary woman and a virtuous woman. We are attached to the vaidika rituals and worship the Lord through the devatas such as Agni and Indra. Therefore, we appear to be like a woman who is not faihtful to her husband. They are attached only to Him and do not care about anyone else. Therefore, they are like pativratas
Rama is attached more to guhan,vanaras and vibeeshannan than to rishies..
..Nam perumal to Thiru paann Azlvaar than to loha saranga munivar
..Srinivasan to Kurumbarutha nambi rather than thonndai maan..
..Periya nambi who didlast rites to Mareneri nambi..
So do not belittle bagavathas who do not wear sacred threads and chant vedas..
ஸ்ரீ முதலி ஆண்டான் கேட்டு -ஆச்சார்யர்களுக்கும் பாகவதர்களுக்கும்-ஸ்ரீ -பிள்ளை உறங்கா வல்லி தாசர் -போல்வாருக்கும்
உள்ள பத்து விஷயங்களை ஸ்ரீ ராமானுஜர் அருளிச் செய்தார்
1-நம் போல்வார் ஊர் ஊராக சென்று உபதேசம் பண்ணுவோம் -இவர்களோ விஷயாந்தரங்களில் பற்று அற்று
ஸ்ரீ மன் நாராயணனே சர்வ ரக்ஷகன் என்று இருப்பார்கள் -நாட்டாரோடு இயல் ஒழிந்து நாரணனை நண்ணினமே -திருவாய் -10-6–2-போலே-
2-ஒரு கையால் நீந்தியும் மாற்று ஒரு கையால் தெப்பத்தையும் பிடித்துக் கொண்டு இருப்பது போலே
நம் போல்வார் திவ்ய தேசங்கள் தோறும் சஞ்சாரம் செய்கிறோம் –
இவர்களோ கோயில் திருமலை பெருமாள் கோயில் என்று முக்கிய பிரதான திவ்ய தேசங்களில் மண்டி இருப்பார்கள்-
3-நம் போல்வார் அவன் உடன் விலகி -கோபம் கொண்டு -சில சமயம் காதாசித்க்கமாக பல்லாண்டு பாடி -மங்களா சாசனம் செய்தும் –
கண்ட இன்பம் துன்பம் கலக்கங்களும் தேற்றமுமாய் –திருவாய் -6-3-2–என்ற மற்ற ஆழ்வார்களை போலே
அவர்களோ -பெரியாழ்வாரை போலே சதா பல்லாண்டு அருளிச் செய்து கொண்டு பொங்கும் பரிவுடன் இருப்பார்கள் -கலக்கமில்லா நாள் தவ முனிவர் –திருவாய் -8-3-10-
4-கடலும் தெப்பமும் போலே -நாம் சம்சாரிக ஆர்ணவத்தில் அழுந்தி உள்ளோம் –
இவர்களோ பரமபத நாதன் என்கிற தெப்பத்தை இருக்க பற்றிக் கொண்டு -தளர்தல் அதன் அருகும் சாரார் -பூதத்தாழ்வார் -45-என்றும் -தரு துயரம் தடாயேல் –பெருமாள் திருமொழி -5-1-
5-பரம அணுவும் பர்வதமும் போலே -நம் போல்வார் பிறந்த குலம் கோத்ரம் ஸூ த்ரம்-பிடித்து இருக்க
அவர்கள் -மர்ம ஸ்பர்சி ஆத்மாவையும் பரமாத்மாவையுமே நிரந்தரமாக பிடித்து கொண்டு இருப்பார்கள் –
6-கரும்பும் சக்கரையும் போலே -நம் போல்வார் வேதங்களையே ஓதிக் கொண்டு இருக்க -இவர்கள் ரகஸ்ய த்ரயங்களிலே ஆழ்ந்து இருப்பார்கள்
7-நிலமும் ஆகாசமும் போலே -நம் போல்வார் பயந்து குழம்பி லீலா விபூதியில் -ஐம்புலன் இவை -மண்ணுள் என்னைப் பெற்றாய் —திருவாய் -7-1-6-என்றும்
உடன் நின்று ஐவர் என்னுள் புகுந்து ஒழியாது அறிவித்த தின்றதா அஞ்சி நின் அடைந்தேன் –பெரிய திரு மொழி -7-7-1-என்றும் பல நீ காட்டிப் படுப்பாயோ –திருவாய் -6-9-9-
திருமாலே இனி செய்வது ஓன்று அறியேன் –பெரிய திருமொழி -7-7-9-
அவர்களோ பயம் இல்லாமல் நித்ய ஸூ ரிகளைப் போலே -இங்கு திரிந்தேற்கு இழுக்கு உற்று என் –திருவாய் -8-10-4-என்றும்
வான் உயர் இன்பம் எய்தில் என் –திருவாய் -8-1-9-என்றும்
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே –கண்ணி நுண் -11-என்றும் செய்த்தலை எழு நாற்றுப் போலே அவன் செய்வன செய்து கொள் –பெரியாழ்வார் -3-7-9-என்று இருப்பர் –
8-இரவுக்கும் பகலுக்கும் உண்டான வாஸி -நம் போல்வார் வேத வேதாந்தங்களில் மண்டி இருக்க –
அவர்கள் திரு நாம சங்கீர்த்தனங்கள் -பேர் ஆயிரம் ஓதின –பெரிய திரு -1-5-10-என்றும் -அவன் அருளாலே நிதானமாக நடந்து -மாதவன் தன் துணையா நடந்து –பெரிய திரு -3–7-4-
பண்டே பரமன் பணித்த பணி வகையே -மாயன் அன்று ஐவர் தெய்வ தேரினில் செப்பிய கீதையின் செம்மைப் பொருளிலே –ராமா நூற்றந்தாதி -68-ஸ்ரீ கீதா சாரம் இவற்றில் மண்டி இருப்பார்கள்-
9-சாதாரண கல்லுக்கும் மாணிக்கத்துக்கும் உள்ள வாஸி -நம் போல்வார் காயத்ரி மந்த்ரம் -சந்த்யா வந்தனாதிகள் –
மந்த்ரத்தை மந்திரத்தால் மறவாது என்றும் வாழுதியில் வாழலாம் மட நெஞ்சமே –திரு நெடும் தாண்டகம் -4-
பெயரினையே புத்தியால் சிந்தியது ஒத்து உரு என்னும் அந்தியால் ஆம் பயன் அங்கு என் –பொய்கையார் -33-
அவர்களோ மந்த்ர ரத்னத்தையே -த்வயம் நித்யம் அனுசந்தானம் -அரங்கன் பணித்த படியே இருப்பர்-
10-சாதாரண பெண்களுக்கும் கற்புக்கு அரசிக்கும் உள்ள வாஸி -நம் போல்வார் வைதிக ஸ்ரத்தையில் -இந்திராதி அக்னி தேவதைகள் மூலம்
அவனை ஆஸ்ரயிக்க-அவர்களோ நேராகவே அவனை ஆஸ்ரயித்து-பதி வ்ரதை பெண்களை போலே இருப்பர்-
சக்கரவர்த்தி திருமகன் குகன் வானர முதலிகள் ஸ்ரீ விபீஷண ஆழ்வான் இடம் ரிஷிகளை விட அந்தரங்கமாக இருந்தால் போலேயும்
நம் பெருமாள் திருப் பாண் ஆழ்வார் இடம் லோக சாரங்க முனிவர் விட இருந்தால் போலேயும்
திரு வேங்கடமுடையான் குறும்பு அறுத்த நம்பி இடம் தொண்டைமான் சக்கரவர்த்தியை விட இருந்தால் போலேயும்
பெரிய நம்பி மாறனேர் நம்பிக்கு சரம கைங்கர்யம் செய்து அருளினால் போலேயும் பாகவதர்கள் பெருமை வாசா மகோசரம் என்றவாறு –
—————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ முதலி ஆண்டான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply